Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. -

Featured Replies

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. -

[தமிழ்நாதம்]

டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை.

இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள் தரப்பில் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்க வாய்ப்பில்லை.

புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் தருவதாகச் சொல்லி வன்னி மீது படையெடுத்த கடந்த 11 மாதங்களில் கிழக்கை மீட்டது போல எளிதாக வடக்கையும் மீட்டு விடலாம் என்றே படை திரட்டி போரில் குதித்தது. 2008 டிசம்பர் நத்தார் பண்டிகைக்கு முன்பு கிளிநொச்சியை மீட்டு இலங்கை மக்களுக்கும் இராணுவ துருப்புகளுக்கும் நல்ல செய்தி சொல்லலாம் என நினைத்தார் ராஜபக்ச ஆனால் அவரும் அவரது சகாக்களும் கனவு கண்டதைப் போலல்ல புலிகளின் இதயப்பகுதியும் புலிகள் கொடுத்த பரிசும்.

வன்னி அடங்க மறுத்தது. இராணுவம் குறித்த காலக்கெடு கசந்து படையினர் பேரிழப்புகளை சந்தித்தார்கள். வன்னி மீதான படையெடுப்புக்கு இலங்கை பலி கொடுத்தது பல்லாயிரம் இராணுவச் சிப்பாய்களின் உயிர்களை. புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும் போது இராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது இராணுவம்.

மேலோட்டமாக பார்க்கும் இராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.

சரி, போராளிகள் தரப்பிற்கு என்ன இழப்பு எனப் பாத்தால். ஆனையிறவை வென்று இராணுவ ரீதியில் புலிகள் பலம் பெற்று அதனூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலம் என்பது ஈழத்தில் அமைதி நிலவிய மிக நீண்ட காலமாக அது இருந்தது. அந்தக் காலத்தில் புலிகளும் சரி இராணுவமும் சரி தங்களின் இராணுவ பலத்தை சரி செய்யவதற்கான ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டனர். புலிகள் தங்களை மரபு வழிப்பட்ட போர் முறைக்கு தயார்படுத்தினர். விமான படையை வடிவமைத்த புலிகள் தென்கிழக்கின் கவனத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார்கள்.

அதே சமயம் ரணிலுக்குப் பிறகு வெளிப்படையான இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தா ஆட்சிக்கு வந்த பிறகு புலிகளுக்கு ஏற்படுத்திய முதல் நெருக்கடி சர்வதேச அளவில் புலிகளை ஏராளமான நாடுகளில் தடை செய்ய வைத்ததுதான். உண்மையில் நோர்வே முன்னெடுத்த பேச்சுக்களில் தந்திரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டது இலங்கை அரசுதான். பேச்சுவார்த்தை மேசைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களைக் கூட நடை முறைப்படுத்தாமல் இராணுவ ரீதியாக பலம் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. (ரணில் அதற்குள் புலிகளை பிளவு படுத்தி கருணாவை புதிய மீட்பராக உருவாக்கினார்கள்)

பேச்சுவார்த்தைக் காலத்திலேயே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் இராணுவத்துக்குமான மோதல் வெடித்தாலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை கொன்றது இராணுவ ஆய்வாளரும் பத்திரிகையாளருமான தராக்கியை கொன்றது என இராணுவம் வெளிப்படையான போருக்கு தயாரானது.

இந்நிலையில் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கிழக்கை மீட்போம் என்று அறிவித்தது. புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கருணா குழுவின் துணையோடு கிழக்கு மீட்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் ஒரு அரசு ஆதரவு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கில் வசந்தம் வந்ததாக இராணுவமும் ராஜபக்சவும் சொல்லிக் கொண்டாலும். அன்றாடம் ஆள்கடத்தல், கொலைகள், இஸ்லாமிய, தமிழர் மோதல் என கிழக்கு வன்முறைக் காடாகவே இருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திறந்த வெளிச் சிறையான யாழ்ப்பாணத்தைப் போல இப்போது கிழக்கும் மாறியிருக்கிறது, நாளை வடக்கும் மாறலாம். கிழக்கின் ஆட்சி கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கிழக்கில் கொடுத்த வசந்தத்தை வடக்கில் கொடுப்பதாக கடந்த செப்டம்பரில் வன்னிப் பிரதேசம் மீது படையெடுத்தது இலங்கை இராணுவம்.

முதலில் 74 மணி நேரத்திற்குள் வன்னியை மீட்பதாகச் சொன்ன இராணுவம் பல மாதம் போராடி கிளிநொச்சியை மீட்டிருக்கிறது. நடந்த போர் முறையைப் பார்க்கும் போது புலிகள் அதிக இழப்புகளுக்கு முகம் கொடுக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவின் எதிர்காலம் கூட இராணுவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மரபார்ந்த இராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமாக படையினரோடு ஓடிப்போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்கு காப்பாற்றப் போகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது. தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான்.

ஒரு மாதத்திற்கு முன்பே புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா.நடேசன் அறிவிக்கும் போது கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும் என்றார். ஆனால் இலங்கை அரசின் அதிகபட்ச ஆசையால் அவர்கள் பிரபாகரனை சரணடையக் கோருகிறார்கள். போரின் வெற்றியை தேர்தலில் அறுவடை செய்வது. புலிகள் மீதான பிம்பங்களை உடைப்பது என்பதன் பிரச்சாரமாக மகிந்த இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சில ஆயிரம் சதுரகிலோ மீட்டரை பிடிக்க இலங்கை இராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்;தான், சீனா என ஏழு நாட்டு இராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை இராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி விட்டுக் கொடுக்கப்பட்டது. இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான் ஏனென்றால் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பலவிதமான கவிதைகள் உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எரிந்து விட்டு இலங்கைக்கு இராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.

ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட பல்லிளித்தார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழ்ர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம் போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள்.

ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித் திரிவதைத் தவிர இன்று இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை. இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக் காரர்தான் டாக்டர் ராமதாசும்.

மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி இராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும். அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை இராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.

2002 இல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்ட போது இந்தியா தலையிட்டுதான் இலங்கை இராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்று அதே சமயம் தனது இராணுவத் தளபதிகளை இலங்கை களமுனைக்கு அனுப்பிய கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது இந்தியா.

மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?

ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்கிற கருணாநிதி. இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.

ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதேவேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வேட்கை கொள்கிற வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறிகொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாக பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை இழப்புகளை துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.

கடைசியாய் ஒரு சிறு குறிப்பு

கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விஷயத்தில் துரோக நாடகங்களை தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு போகச் சொல்லிக் கேட்டது அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.

http://www.infotamil.ch/

  • Replies 54
  • Views 8k
  • Created
  • Last Reply

தலைவா சண்டையை ஆரம்பி என்று ஊர்வலமே போனவர்கள் நாம், சண்டைக்குரிய அரசு தலைவரை தெற்கில் தேர்ந்து எடுக்க வைத்தது நாம், இப்போது கலைஞர் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர பாடுபடவில்லை என்று அவரை போட்டு தாக்குகின்றோம்

மகிந்த + சரத் + கோத்தபாய எனும் காட்டாறு, எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

எமக்கு செய்ய வேண்டிய எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம் என அழுவதற்குரிய நேரம் இதுவல்ல. நாம் மகிந்த்தவை வரச்செய்யும் போதும் இந்தியாவில் காங்கிரஸ் தான் இருந்தது. எமது ராஜ தந்திர தவறுகளை திருத்தாமல் மற்றவரை குறை சொல்லி பயன் இல்லை

Edited by நிழலி

சரியாகச்சொன்னீர்கள் நிழலி...

யாரை குறைசொல்லி என்ன.

நாங்கள் தான் முழுதான காரணம்.

கவனமாக உண்மைகளை பேசுங்கள் நிழலி. நமது தலையில் நாமே வாரி இறைத்துக் கொண்டோம். மகிந்தவை வரவிட்டது தமிழன் விட்ட மாபெரும் தவறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்மட்டியால் அடித்தது போல சொன்னீர்கள் நிழலி. ரணிலை பழிவாங்குகிறோம் பேர்வழி என்று எமக்கு நாமே வைத்து கொண்ட ஆப்பு இருக்கே, காலத்துக்கும் மறக்காது. ரணிலோ மகிந்தாவோ கருணாவை போசித்துதான் பாதுகாப்பார்கள் என்பது எமக்கு விளங்கவில்லையா?

ரணிலை பழிவாங்க வா நாம் போராடினோம்? ரணில் கருணாவை பிரித்தான் என்றால் அது அவனின் கெட்டித்தனம், அதுக்காக தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை என்று நடப்பதா?

அல்லது ரணிலை பழிவாங்கும் நோக்கத்தில் எமக்கு கண் மண் தெரியவில்லையா? இது போலதான் ராஜீவை பழிவாங்குகிறேன் பேர்வழி என்று இழுத்த ஆப்பால் இன்னமும் பின்பக்கத்தில் தொடர் வலியாக இருக்கிறது.

மக்கள் இல்லாமல்தான் 1995இல் யாழையும் பிடித்தனர் இன்று யாரை வைத்து அதை தக்க வைக்கிறனர்? அது போல கிளினொச்சிக்கு மக்கள் திரும்பி போக எத்தனை நாளாகும்?

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது?

புலிகளைத் தவிர வேறு எவரையும் கொண்டு தக்கவைக்க முடியாது!

ரணிலை வர விடாமல் விட்டதும் அமெரிக்காவில் எம்மை அழைக்காது நடந்த கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் விட்டதும் எம் மிக சிறந்த இராஜ தந்திரம்...ஆனால் அதன் பின்னாலான நிகழ்வுகளினை நாம் சரியாக எடை போட்டோமா என்பதே கேள்விக் குறி....

ரணிலின் பின் முழு ஐரோப்பிய் யூனியனும் நிற்குது என்பதை நாம் உணர்ந்த்தும் சரியாக நடக்கவில்லை என்பது உண்மை

நடந்தவை பற்றி கதைப்பதில் பயன் இல்லை.... எமக்கு (புலம் பெயர் தமிழ் சமூகம்) முன் இருப்பது மிக பெரும் கடமை. தமிழராய் ஒன்று படுவோம்... பேரினவாததின் அனைத்து கண்ணிகளையும் நாம் உடைப்போம்

புலிகளைத் தவிர வேறு எவரையும் கொண்டு தக்கவைக்க முடியாது!

100 படையணிகள் 50 000 பேர் எண்டு புதிய படைக்கட்டுமானத்தின் சூட்சுமத்தை சோல்லி இருக்கிறார் அண்ணாத்தை பொன்ஸ்...

ஒரு படையணியில் 500 பேர்... எண்டது சரியா...??

  • கருத்துக்கள உறவுகள்

100 படையணிகள் 50 000 பேர் எண்டு புதிய படைக்கட்டுமானத்தின் சூட்சுமத்தை சோல்லி இருக்கிறார் அண்ணாத்தை பொன்ஸ்...

ஒரு படையணியில் 500 பேர்... எண்டது சரியா...??

யாருக்குத் தெரியும்? தெரிந்தும் என்ன பிரயோசனம்? எத்தனை பேரைப் பலிகொடுத்தாவது எல்லா இடங்களையும் பிடித்து தமிழரை வென்றதாக நவீன சரித்திரம் சொல்ல முயல்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா சண்டையை ஆரம்பி என்று ஊர்வலமே போனவர்கள் நாம், சண்டைக்குரிய அரசு தலைவரை தெற்கில் தேர்ந்து எடுக்க வைத்தது நாம், இப்போது கலைஞர் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர பாடுபடவில்லை என்று அவரை போட்டு தாக்குகின்றோம்

மகிந்த + சரத் + கோத்தபாய எனும் காட்டாறு, எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

எமக்கு செய்ய வேண்டிய எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம் என அழுவதற்குரிய நேரம் இதுவல்ல. நாம் மகிந்த்தவை வரச்செய்யும் போதும் இந்தியாவில் காங்கிரஸ் தான் இருந்தது. எமது ராஜ தந்திர தவறுகளை திருத்தாமல் மற்றவரை குறை சொல்லி பயன் இல்லை

சரியாகச்சொன்னீர்கள் நிழலி...

யாரை குறைசொல்லி என்ன.

நாங்கள் தான் முழுதான காரணம்.

சம்மட்டியால் அடித்தது போல சொன்னீர்கள் நிழலி. ரணிலை பழிவாங்குகிறோம் பேர்வழி என்று எமக்கு நாமே வைத்து கொண்ட ஆப்பு இருக்கே, காலத்துக்கும் மறக்காது. ரணிலோ மகிந்தாவோ கருணாவை போசித்துதான் பாதுகாப்பார்கள் என்பது எமக்கு விளங்கவில்லையா?

ரணிலை பழிவாங்க வா நாம் போராடினோம்? ரணில் கருணாவை பிரித்தான் என்றால் அது அவனின் கெட்டித்தனம், அதுக்காக தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை என்று நடப்பதா?

அல்லது ரணிலை பழிவாங்கும் நோக்கத்தில் எமக்கு கண் மண் தெரியவில்லையா? இது போலதான் ராஜீவை பழிவாங்குகிறேன் பேர்வழி என்று இழுத்த ஆப்பால் இன்னமும் பின்பக்கத்தில் தொடர் வலியாக இருக்கிறது.

மக்கள் இல்லாமல்தான் 1995இல் யாழையும் பிடித்தனர் இன்று யாரை வைத்து அதை தக்க வைக்கிறனர்? அது போல கிளினொச்சிக்கு மக்கள் திரும்பி போக எத்தனை நாளாகும்?

சுயநினைவுடன்தான் எழுதுகின்றீர்களா???

யார் சொன்னது ரணிலை பழிவாங்கவே மகிந்தவை கொண்டுவந்ததாக???

வேண்டுமென்றால் ரணிலின் பொறியில் இருந்து தப்பிக்க என்று சொல்லலாம்.......

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்?

என்னாச்சு உங்களுக்கு?

தோல்வியின் விரக்தியா?

அல்லது

பிரமையா???

100 படையணிகள் 50 000 பேர் எண்டு புதிய படைக்கட்டுமானத்தின் சூட்சுமத்தை சோல்லி இருக்கிறார் அண்ணாத்தை பொன்ஸ்...

ஒரு படையணியில் 500 பேர்... எண்டது சரியா...??

வெருட்டி பாக்கிறார் போல?

வெருட்டி பாக்கிறார் போல?

2000 சாறம் கட்டின போராளிகளை அடக்க இந்திய படை இராணுவமாக மட்டும் வடக்கு கிழக்கில் வைத்து இருந்தது 300 000 இராணுவமாம்...

ஒப்பிரேசன் செக் மேட் நடத்த கேணல் பக்க்ஷிதலைமையில் 30 000 இராணுவம் மணலாற்றில் நடவடிக்கையில் ஈடு பட்டது...

இலங்கைபூராவும் 180 000 படையை வைத்து இருக்கும் பொன்ஸ் 50 000 பேரை முன்னணியில் இறக்குவதாக இருந்தால் பின்னணியில் யாரும் இருக்க மாட்டார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயநினைவுடன்தான் எழுதுகின்றீர்களா???

யார் சொன்னது ரணிலை பழிவாங்கவே மகிந்தவை கொண்டுவந்ததாக???

வேண்டுமென்றால் ரணிலின் பொறியில் இருந்து தப்பிக்க என்று சொல்லலாம்.......

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்?

என்னாச்சு உங்களுக்கு?

தோல்வியின் விரக்தியா?

அல்லது

பிரமையா???

விரக்தியுமில்லை பிரமையுமில்லை, உண்மை. அன்றிலிருந்தே இதை தான் நான் சொல்லி வந்திருக்கிறேன்.

ரணிலை வர விட்டிருந்தால், இவ்வ்வளவு நிலத்த இழந்திருப்போமா? அல்லது இத்தனை தூரம் தனிமை பட்டு போய், தமிழகத்தலவர்களிடம் "போர் நிறுத்தம்" யாசிக்கும் நிலைக்குத்தான் போயிருப்போமா? -

ரணில் குள்ள நரிதான். ஆனாலும் சமஸ்டி என்றாவது சொன்னானே? வடக்கையும் கிழக்கையும் பிரித்து ஒற்றையாட்ச்சியை அமல் படுத்தியே தீருவேன் என்று சொன்ன மகிந்தாவை வெல்ல விட்டது நாமல்லவா?

எல்லாவற்றயும் விடுங்கள், மகிந்தவை வெல்ல விட்ட போது நாம் போரை விரும்பித்தானே இருந்தோம்? அப்போது எமக்கு எம் பலம் என்ன அல்லது எதிரியின் பலம் என்ன என்று தெரியாமல் போய் விட்டதா? ரணிலை வெல்ல விட்டு நமது பலத்தை பெருக்க ஒரு அவகாசம் எடுத்திருக்கலாமே?

ரணிலை மிரட்டியே கருணாவை எம்மிடம் மீள ஒப்படைக்க செய்ட்திருக்க முடியாதா?

ரணிலிடம் ராஜதந்திரத்தில் உண்மையில் நாம் தோற்றுப் போனதால் தானே மகிந்தவை வரவழைத்தோம்?

விட்டு விடுங்கள் இனியாவது அரசியல், ராஜதந்திர (ராணுவ முடிவுகள் எப்போதும் சரியானவையே) முடிவுகள் நன்றாயிருந்தால் சரிதான்

இப்போது குற்றம் சொல்லி ஒன்றும் ஆக போவதில்லை. இத்துடன் இந்த போஸ்மோர்ட்டத்தை முடித்து கொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் யாரை நம்பி போராட்டத்தை ஆரம்பித்தோம்? எமது விடுதலை இயக்கத்தை உருவாக்கியது யார்? வளர்ப்பது யார்? போராடுவது யார்? எல்லாமே எமது மக்கள்.

உங்களால் விமர்சிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் கௌரவ வேடமாக உட்புகுந்தவர்கள். இவர்களை விமர்சிப்பதைவிட, அவர்கள் செய்யும் நல்லவிடயங்களிற்கு நன்றியை மட்டும் தெரிவித்துக்கொள்வோம்.

எங்களிற்கென்று ஒரு தலைவர் இருக்கின்றார் அவரின்பின் நாம் நிற்கின்றோம், தேவவையென்றால் அவரை தாராளமாக விமர்சிப்போம், அதுக்குமட்டும்தான் எங்களிற்கு உரிமை இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் இந்த புலம்பல் எல்லாம் கிளிநோச்சியின் மாற்றம்தான் என்று.

ஜயா மீண்டும் அன்று கேட்ட கேள்வியைத்தான் இன்றும் கேட்கின்றேன் அதாவது தாயகத்தில் என்ன மாஜாசால வித்தையா நடக்குது? போராட்டம் ஜயா போராட்டம் நடக்குது.

நாம் ஒரு சிறு இனம் உலகநாடுகளோடை தான் போராடுகின்றோமே ஒழிய சிங்களவனுடன் இல்லை அதை மனதில் நிறுத்திக்கொண்டு எங்களது விமர்சனங்களை வைப்பது சிறந்தது.

இன்று இந்த வன்னியை மையமாகக்கொண்டு இடம்பெறும் யுத்தத்தை சற்று ஆழமாக நோக்கினோமானால், உலகநாடுகளுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும்.

ஸ்ரீலங்கா அரசைப்பொறுத்தவரை கிளிநோச்சியின் வீழ்ச்சியை தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக ஒரு மாயையை உருவாக்கி சில ஆதாயங்களை தேடமுயற்சிக்கலாம்.

ஆனால் தங்களை ஜனநாயக நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் சில நாடுகளைப் பொறுத்தவரை ஒரு இனம் தங்களைவிட வளர்சியடையக்கூடாது என்ற கொள்கையில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

ஆகவேதான் விடுதலைப்புலிகள் மன்னிக்கவும் தமிழ்மக்கள் விடயத்தில் அதிகமாக முரண்டு பிடிக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒரு சிறுபாண்மை இனம் தங்களிற்கென்று ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை எந்த ஒரு நாட்டினதும் உதவியுமின்றி உருவாக்கியது மாத்திரமன்றி, ஒரு தனிநாட்டுக்கே உரிய கட்டுமானங்களை உருவாக்கி, தரை, கடல், ஆகாயம் என்ற முப்படைகளையும் உருவாக்கி தலைநிமிர்ந்து நிற்பதுதான் நாங்கள் அவர்களுக்கு செய்த தப்பு.

ஆகவேதான் எங்களை அழிப்பதிற்கு தங்களால் இயன்ற ஆகக்கூடிய உதவிகளை ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளுக்கு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களில் அவர்களுக்கு வன்னியில் இப்போது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்.கிளிநோச்சியைப் பிடித்தது ஸ்ரீலங்காவுக்கு ஏதோ சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் புலிகள் பின்வாங்கியது உலக நாடுகளுக்கு மிகவும் ஏமாற்றம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எது எப்படியிருப்பினும் எமது மைந்தர்களின் வீரத்திற்கும், மதிநுட்பத்திற்கும் மாபெரும் வெற்றி கிடைத்திருக்கின்றது என்பதை புரிந்துகொண்டு, அடுத்தகட்ட நகர்வுக்கு எங்களை தயார்படுத்துவோமாக.

பிற்குறிப்பு.

முல்லைத்தீவையும் பிடித்தபின்பு தமிழர்களுக்கு தான் ஒரு தீர்வை முன்வைக்கப் போவதாகவும் அதுவரை தனது நடவடிக்கைகளை கண்டும்காணாததுமாக இருக்கும்படி

உந்த சில நாடுகளுக்கு ராஜபக்ச ஜயா உத்தரவாதம் கொடுத்துள்ளதாக ஒரு வதந்தி.

2000 சாறம் கட்டின போராளிகளை அடக்க இந்திய படை இராணுவமாக மட்டும் வடக்கு கிழக்கில் வைத்து இருந்தது 300 000 இராணுவமாம்...

ஒப்பிரேசன் செக் மேட் நடத்த கேணல் பக்க்ஷிதலைமையில் 30 000 இராணுவம் மணலாற்றில் நடவடிக்கையில் ஈடு பட்டது...

இலங்கைபூராவும் 180 000 படையை வைத்து இருக்கும் பொன்ஸ் 50 000 பேரை முன்னணியில் இறக்குவதாக இருந்தால் பின்னணியில் யாரும் இருக்க மாட்டார்கள்....

இந்திய இராணுவத்தி நடவடிக்கையையும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கையயும் ஒப்பிட முடியாது ஆனால் முல்லைத்தீவு நோக்கிய 50.00 நகர்வை தான் புலிகள் காத்து இருந்தார்களோ தெரியவில்லை அபப்டி ஏதும் என்றால் வேவு நடவ்டிக்கைகள் சரியாக முனேடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அடிவிழும்...

புலிகள் மிகவும் நல்லவர்கள். குரங்குகளுக்காகவும் போராடுகிறார்கள்.

சுயநினைவுடன்தான் எழுதுகின்றீர்களா???

யார் சொன்னது ரணிலை பழிவாங்கவே மகிந்தவை கொண்டுவந்ததாக???

வேண்டுமென்றால் ரணிலின் பொறியில் இருந்து தப்பிக்க என்று சொல்லலாம்.......

ஏன் இப்படி எழுதுகின்றீர்கள்?

என்னாச்சு உங்களுக்கு?

தோல்வியின் விரக்தியா?

அல்லது

பிரமையா???

இல்லை... இல்லை. இராணுவ சமநிலை பற்றி அண்மையில் உளறிய உங்களிடம் இருந்து வேறு எதனையும் நாம் எதிர்பார்க்க முடியாது

ஆனால் காலமும் எம் விடுதலை போராட்டமும் நிறைய எதிர்பார்க்கின்றது

நாம் ரணில் என்னும் நச்சு பாம்பின் சதிகளில் இருந்து தப்பித்தோம்...ஆனால் சர்வதேசத்தின் சதிப் பின்னலில் இருந்து வெளியேறினோமா?

உலகம் முழுதும் தடை செய்ய எண்ணும் கிளஸ்ர குண்டிறு எதிராக கூட எம்மால் உருப்படியாக பிரச்சாரமும் சர்வதேச கவனமும் கவரும் விதமாக ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியவில்லை

தமிழகத்தின் ஆதரவு கோரும் எமக்கு...எம் நாட்டிலேயே இன்னொரு பகுதியில் இருக்கும் மலையக தமிழகர்களிடம் இருந்து ஒரு சிறு ஆதரவு சொல்லையும் பெற முடியவில்லை

ஏன்...கிழக்கில் இருந்தாயினும் ஒரு காத்திரமான சொல் வந்த்தா?

ஆனால் நாம் தமிழக தலைவர்களை மட்டும் மட்டம் தட்டுவதேன்..... புலிகள் சொன்னார்களா யுத்த நிறுத்தம் தான் வேண்டும் என்று? நாம் தான் தலைவா சண்டை தொடங்கு என்று சுனாமியின் பின் கூட முழங்கியவர்கள் ஆயிற்றே

புரிந்து கொள்ளுங்கள்..இன்றைய அவலத்தின் முழு காரணமும் நாம் சமாதான பேச்சுவார்த்தை எனும் சர்வதேசத்தின் கபட நாடகத்தில் அமிழ்ந்தி கொண்டது தான்... 5 வருட இடைவெளியில் நாம் இழந்த்தவை ஏராளம்.. அத்துடன் இராணுவ பலத்தில் நாம் சமபலன் என்று கனவு கண்டது (டி.சிவராம் இது பற்றி இந்திய சதியினால் கொல்லப்பட 2 மாதங்களின் முன் என்ன எழுதினார் என்று தேடி வாசியுங்கள்)

புலம் பெயர் சமூகத்தின் முன் இருக்கும் பொறுப்பு அனைத்து வழிகளிலும் இழந்தவையை பெற தமிழ் தேசியத்தித்கு உதவுவதே... எமக்கு இருக்கும் ஒரே ஒரு விடயம்... போராடும் மக்களின் தாங்கு சக்தியையும், போராளிகளின் போராடும் சக்தியையும் தொடர்ந்து பேணல். எனேனில் எம்மால் டிக்கெட் எடுத்து வன்னி போக முடியாது...எம் செல்ல பிள்ளைகளை போராடும் களத்திற்கு அனுப்ப முடியாது

இங்கே எழுதி குத்தி முறியும் நீங்கள் இதற்கு எவ்வளவு உதவி செய்துள்ளீர்கள்? நிதி செய்ய மறுக்கும் எம்மவர்களின் எத்தனை பேரின் மனதை மாற்றினீர்கள்?

எம்மிடம்...புலம் பெயர் சமூகத்திடம் மிக பெரும் பங்கு உள்ளது.,... அது... இறந்த எம் தமிழ் சகோதரிகளிடம் கூட புணர விரும்பும், வல்லுறவு செய்ய விரும்பும் இனத்திடம் எம் மக்களை விட்டு விடுவதா அல்லது அப்படி ஒரு நிலையை கொண்டு வந்த இந்திய + சர்வதேச அரசுகளை குற்றம் சொல்லி எம் கடமையை செய்யாது விடுவதா?

Edited by நிழலி

புலிகள் மிகவும் நல்லவர்கள். குரங்குகளுக்காகவும் போராடுகிறார்கள்.

உண்மைதான்.

...புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும் போது இராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது இராணுவம்.

மேலோட்டமாக பார்க்கும் இராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.

...முல்லைத்தீவின் எதிர்காலம் கூட இராணுவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மரபார்ந்த இராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

...ஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமாக படையினரோடு ஓடிப்போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்கு காப்பாற்றப் போகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது. தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான்.

...ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான் ஏனென்றால் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள்

...மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை இழப்புகளை துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் எல்லாமே ஏற்கனவே எதிர்பார்த்தபடி நமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே கச்சிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

Edited by Alternative

1983-87ல் இருந்த இந்தியா உதவும் என்ற ‘கனவு’ எமக்குத் தந்த கசப்பான பாடத்தில் இருந்து நாம் கற்றுக்கொண்டது மிக சொற்பம். ஆதனால்தான் தமிழகம் உதவும் என்ற ‘கனவு’ மீண்டும் எம்மையெல்லாம் ஆட்கொள்ள அனுமதிக்கிறோம்.

தெற்கின் சிங்கள அரசியல் தலைமைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க தமிழக அரசியல் உதவுமே தவிர அதை மீறி எதுவும் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை.

ஒர் அரசியல் தீர்வு குறித்து தமிழர் தலைமை பிரகாசமான உரையாடல் ஒன்றைத் தொடங்கி வைத்தல் தற்போதை நிலையை ஓரளவு மாற்ற உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மிகவும் நல்லவர்கள். குரங்குகளுக்காகவும் போராடுகிறார்கள்.

:D:lol::(

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவின் எதிர்காலம் கூட இராணுவத்தால் கேள்விக்குள்ளாகும் போது மரபார்ந்த இராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஆனால் வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களின் நிலை என்னவாகும்?. எனென்றால் அங்கு ஒவ்வொரு குடும்பமும் மாவீரர் குடும்பமாகும். சிறிலங்காப்படைகள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் வசித்த பெரும்பாலான மாவீரர்குடும்பங்களை ஒட்டுப்படைகளின் துணையுடன் கொண்டு அளித்ததைப் போல இங்கும் அளிக்கமாட்டார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களை புலிகள் தான் காப்பாற்ற வேண்டும். அரச கூலிப்படைகளினால் சொல்லெணா துயரங்களை இம்மக்கள் அனுபவித்தவர்கள். மீண்டும் இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் போனால் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

100 படையணிகள் 50 000 பேர் எண்டு புதிய படைக்கட்டுமானத்தின் சூட்சுமத்தை சோல்லி இருக்கிறார் அண்ணாத்தை பொன்ஸ்...

ஒரு படையணியில் 500 பேர்... எண்டது சரியா...??

கொமன் வெல்த் நாடுகளில் ஒரு பற்றாலியன் அல்லது றெஜிமென்ற் 300 தொடக்கம் 1000 பேர் வரை கொண்டிருக்கும் என்று விக்கிபீடியாவில் உள்ளது.

  • தொடங்கியவர்

தலைவா சண்டையை ஆரம்பி என்று ஊர்வலமே போனவர்கள் நாம், சண்டைக்குரிய அரசு தலைவரை தெற்கில் தேர்ந்து எடுக்க வைத்தது நாம், இப்போது கலைஞர் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர பாடுபடவில்லை என்று அவரை போட்டு தாக்குகின்றோம்

மகிந்த + சரத் + கோத்தபாய எனும் காட்டாறு, எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

எமக்கு செய்ய வேண்டிய எத்தனையோ வழிகள் உண்டு. அதனை விட்டு விட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம் என அழுவதற்குரிய நேரம் இதுவல்ல. நாம் மகிந்த்தவை வரச்செய்யும் போதும் இந்தியாவில் காங்கிரஸ் தான் இருந்தது. எமது ராஜ தந்திர தவறுகளை திருத்தாமல் மற்றவரை குறை சொல்லி பயன் இல்லை

சரியாகச்சொன்னீர்கள் நிழலி...

யாரை குறைசொல்லி என்ன.

நாங்கள் தான் முழுதான காரணம்.

கவனமாக உண்மைகளை பேசுங்கள் நிழலி. நமது தலையில் நாமே வாரி இறைத்துக் கொண்டோம். மகிந்தவை வரவிட்டது தமிழன் விட்ட மாபெரும் தவறு

சம்மட்டியால் அடித்தது போல சொன்னீர்கள் நிழலி. ரணிலை பழிவாங்குகிறோம் பேர்வழி என்று எமக்கு நாமே வைத்து கொண்ட ஆப்பு இருக்கே, காலத்துக்கும் மறக்காது. ரணிலோ மகிந்தாவோ கருணாவை போசித்துதான் பாதுகாப்பார்கள் என்பது எமக்கு விளங்கவில்லையா?

ரணிலை பழிவாங்க வா நாம் போராடினோம்? ரணில் கருணாவை பிரித்தான் என்றால் அது அவனின் கெட்டித்தனம், அதுக்காக தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை என்று நடப்பதா?

அல்லது ரணிலை பழிவாங்கும் நோக்கத்தில் எமக்கு கண் மண் தெரியவில்லையா? இது போலதான் ராஜீவை பழிவாங்குகிறேன் பேர்வழி என்று இழுத்த ஆப்பால் இன்னமும் பின்பக்கத்தில் தொடர் வலியாக இருக்கிறது.

மக்கள் இல்லாமல்தான் 1995இல் யாழையும் பிடித்தனர் இன்று யாரை வைத்து அதை தக்க வைக்கிறனர்? அது போல கிளினொச்சிக்கு மக்கள் திரும்பி போக எத்தனை நாளாகும்?

விடுதலைப்புலிகளின் முடிவுகள் பிழையென்று தற்போதைய நிலையைக் கண்டு நீங்கள் விவாதிக்கின்றீர்கள். ரணில் வந்திருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது என்றும் எதிர்வு கூறுகின்றீர்கள்.

முதல் நிகழ்வு தற்போதைய சூழ்நியின்பாற்பட்டது என ஏற்றுக் கொள்ளலாம். இரண்டாவது நிகழ்வு அதாவது ரணில் வந்திருந்தால் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கமாட்டாது என்ற நிலைப்பாட்டிற்கு என்ன அடிப்படை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.