Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடியுங்கோடா... விடாமல் அடியுங்கோடா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்.. ரிங்.. என்று ரெலிபோன் மணியடிக்க எதிர்பார்ப்போடு ஓடிச் சென்று ரிசீவரை தூக்கி காதில் வைத்தார் பார்வதியம்மா.

மறுமுனையில்.. யார் மாமியே.. இது நான் சிவானி கனடாவில் இருந்து பேசுறன். உங்கட மிஸ் கோல் வந்திருந்திச்சு அதுதான் அடிக்கிறன் மாமி. ஏதும் அவசரமே..??!

அதற்கு பார்வதியம்மா..

இல்லைப் பிள்ளை.. உவன் சங்கரின்ர அலுவலா தம்பியோட கதைப்பம் என்றுதான் எடுத்தனான். தம்பி நிற்கிறானே பிள்ள ?

அவர் இப்பதான் உந்தக் குளிருக்க.. இரவு வேலை முடிச்சிட்டு வந்து குளிக்கிறார். ஊரில பிரச்சனை கூடிப்போச்சுது என்றும்.. சங்கரை இஞ்சால கனடாப் பக்கம் எடுக்கிறது பற்றியும் நேற்றுக் கதைச்சவர் மாமி. இப்ப அவருக்கும் கஸ்டம் மாமி. வேலையெல்லாம் திடீர் திடீர் என்று பறிக்கிறாங்கள். எனி நாங்களும் பிள்ளை குட்டி குடும்பம் என்று ஆகிட்டம் தானே செலவுகளும் அதிகம்.

ஓம் பிள்ளை.. உங்கட கஸ்டங்களும் விளங்குது. இருந்தாலும் அவன் சங்கரை ஊருக்க வைச்சிருக்கிறது சரியான பயம். அதுதான் வெளில அனுப்பிட்டால் எனக்கு நிம்மதி பிள்ளை.

மாமி எங்களுக்கும் விளங்குது உங்கட பயமும் கஸ்டமும். இருந்தாலும் அவரால தனிய இப்ப சங்கரை இங்கால எடுக்கிறது என்றது கஸ்டம் தான் மாமி.

அப்படியே பிள்ளை. சரி அது இருக்கட்டும். நான் பிறகு தம்பியோட கதைக்கிறன் உதைப்பற்றி. நீங்கள் எப்படி சுகமா இருக்கிறியளே?

இருக்கிறம் மாமி. உங்கட தங்கச்சிட கடைசி மகனும் பரந்தன் சண்டையில இறந்திட்டதா கேள்விப்பட்டம். சரியான கவலை தான்.

ஓம் பிள்ளை.. தங்கச்சி தான் பெற்ற தன்ர 3 பிள்ளைகளையும் போராட்டத்துக்கு அனுப்பி சாகக் கொடுத்திட்டு இருக்கிறாள். அதுகளை நினைச்சா கவலைதான். எப்பவோ சொன்னனான் உந்தக் காணி பூமியை உள்ள நகை நட்டுகளை அடகு வைச்சிட்டு அல்லது வித்துப்போட்டு அவங்களை கனடா.. லண்டன்.. ஜேர்மனி.. அவுஸ்திரேலியா பக்கம் அனுப்பென்று. கேட்டாளே. இப்ப கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கும் உவன் சங்கரால தான் பயம். மற்றதுகளை தானே நான் எப்பவோ வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டன்.

என்ன செய்யுறது மாமி. எல்லாம் அதுகளின்ர தலைவிதி.

சரி மாமி.. அவர் பிறகு உங்களோடு எடுத்துக் கதைப்பார். இப்ப வைக்கிறன் என்ன..!

ஓம் பிள்ள.. உங்களுக்கும் கனக்க ரெலிபோன் காசு வரப்போகுது. எதுக்கும் பிறகு உவன் தம்பியை மறக்காமல் ஒருக்கா கதைக்கச் சொல்லுபுள்ள.

ஓம் சொல்லுறன் மாமி. பாய்.

சரி பிள்ளை. என்று சொல்லி ரிசீவரை வைத்த பார்வதியம்மா.. மனசுக்குள்ள.. உவ்வளவை தங்கட புருசமாரை விட்டுக் கொடாளவை. நான் அவனோட கதைப்பம் என்றால்.. அவா எனக்கு கதை சொல்லிட்டுப் போறா என்று எண்ணியபடியே..

மீண்டும் ரிசீவரைக் கையில் எடுத்தார்.. லண்டனில் உள்ள தன்னுடைய அடுத்த மகனுக்கு டயல் செய்து..

ஹலோ.. ஹலோ.. தங்கச்சி இவன் புவி இருக்கிறானே..

யார் மாமியே கதைக்கிறது.

ஓம் பிள்ளை.. மாமி தான் கதைக்கிறன்.

அவர் இப்பதான் மாமி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஸ்கூலுக்குப் போயிருக்கிறார். ஏதும் அவசரமே சொல்லுங்கோ சொல்லிவிடுறன்.

உவன் சங்கர் விசயமா கதைப்பம் என்று தான் பிள்ளை எடுத்தனான். நீங்கள் எப்படி சுகமா இருக்கிறியளே?

நாங்கள் எல்லாரும் சுகமா இருக்கிறம் மாமி. ஊர்ப் புதினத்தைக் கேட்டால் தான் கவலையா இருக்குது. எல்லாப் பக்கத்தாலும் வரவிட்டிட்டாங்கள் போலக்கிடக்கு.

ஓம் பிள்ளை. ஊரில எல்லார் பாடும் கஸ்டம் தான். ஊரோடு ஒத்ததுதானே.

கவலைப்படாதேங்கோ மாமி. அவங்கள் திருப்பி அடிப்பாங்கள். நாங்க இங்க மாதா மாதம் காசு கொடுக்கிறனாங்கள் தானே. அவை சொல்லிச்சினம் திருப்பி அடிப்பினம் என்று.

எப்படிப் பிள்ளை அடிக்கிறது. எல்லாரும் ஊரோட வெளிநாட்டுக்கு ஓடினா யார் பிள்ளை அடிக்கிறது. இதென்ன கெற்றப்போலால (கவன்) அணில் அடிக்கிற போல விசயமே. கிபீர், மல்ரி பரல் என்று எத்தினைக்க நின்று சமாளிக்க வேணும். எனக்கு உவன் சங்கரால தான் பயம்.

ஓம் மாமி. அவரும் கதைச்சவர் சங்கர் போல இளம் பிள்ளைகளுக்குத்தான் பயம் என்று. சங்கரை இங்கால எங்கையின் எடுத்துவிட்டுட்டா அங்கால அவங்கள் அடிச்சால் என்ன விட்டால் என்ன.. எங்களுக்கென்ன. உங்களையும் லேசா இஞ்சால எடுத்திடலாம்.. இஞ்ச வயசு போன ஆக்களுக்கு வீடும் தந்து பென்சனும் தருவாங்கள்.

அப்படியே பிள்ளை.. கேட்கவே சந்தோசமா இருக்குது. எதுக்கும் புவி வரவிட்டு என்னோட கதைக்கச் சொல்லு பிள்ளை. எனக்கு ஒரு கிழமை பாஸ் தான் ஆமிக்காரன் தந்தவன். வாற புதன்கிழமை நான் ஊருக்கு திரும்பிப் போகப் போறன். இங்க வவுனியாவிலும் ஆக்களை கடத்திறாங்கள்.. வெள்ளை வான் பயம். செலவுகளும் கூடிப்போச்சுது.

சரி மாமி. இப்ப நான் வைக்கிறன். பிறகு அவர் வந்த உடன எடுக்கச் சொல்லுறேனே.

ஓம் பிள்ளை... என்று சொல்லி ரிசீவரை வைத்தவர்..

நீங்கள் தூர இடத்தில பத்திரமா இருந்து கொண்டு அடியுங்கோடா அடியுங்கோடா எண்டுவியள். இங்க போராடுற பிள்ளையளும்.. சனங்களும் படுற கஸ்ரம் விளங்கினாத்தானே... என்று எண்ணிய படியே மீண்டும் தான் மேற்கொண்ட முயற்சி தோற்ற விரக்தியில் யோசனையில் மூழ்கினார் பார்வதியம்மா.

ஆக்கம் - ஊரான்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தூர இடத்தில பத்திரமா இருந்து கொண்டு அடியுங்கோடா அடியுங்கோடா எண்டுவியள். இங்க போராடுற பிள்ளையளும்.. சனங்களும் படுற கஸ்ரம் விளங்கினாத்தானே... என்று எண்ணிய படியே மீண்டும் தான் மேற்கொண்ட முயற்சி தோற்ற விரக்தியில் யோசனையில் மூழ்கினார் பார்வதியம்மா.

.........................................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை மாதிரியே பல கோணங்களில் நிஜக் கதை கேட்டிருக்கிறேனே

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை மாதிரியே பல கோணங்களில் நிஜக் கதை கேட்டிருக்கிறேனே

இதுவும் நிஜக்கதைதான் ஆனால் நெடுக்ஸ் ஆட்களை சொல்லமாட்டார் அப்படித்தானே நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் விரக்தி கொண்டாலும் மீண்டும் அந்த தாய்மனம் அனைத்தையும் மறந்து கொஞ்சிக்கூலாவ எத்தனிக்கும். உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்...

தற்காலத்தினை சித்தரிக்கும் நிகழ்வினை தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நிஜக்கதைதான் ஆனால் நெடுக்ஸ் ஆட்களை சொல்லமாட்டார் அப்படித்தானே நெடுக்ஸ்

கூட்டமா வந்தவையைவிட்டு (அவைக்கு இருக்கிற பிரச்சனை அது தனிப்பட அலச வேண்டிய பிரச்சனை).. தனியத் தனிய வந்து கொண்டிருக்கும்.. எம்மவர் வீடுகளின் உண்மை நிலையிது..! :rolleyes::mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுதல் யார்க்கும் எளிய - அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுதல் யார்க்கும் எளிய - அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்"

நல்ல குறள்.. குறள் வழி எத்தனை பேர் நடக்கினம். 1330 குறள்களுக்குள் தாய் நாட்டை பாதுகாக்க வேணும் என்றதைப் பற்றி வள்ளுவர் சொன்னதையும் சொல்லிவிடுங்கோ..! :rolleyes:

***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

கதை நல்லாய் இருக்கிது. பாராட்டுக்கள். நெடுக்காலபோவானுக்கு லண்டன் கதைகளைவிட கனடாச்சனத்திண்ட கதை எண்டால் கொஞ்சம் அதுகள்பற்றி கேட்கிறதில கூட விருப்பம் போல. சரி நானும் இஞ்சதானே இருக்கிறன். மிச்ச கதைகளை உங்களுக்கு நான் சொல்லிறன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் இருக்கிது. பாராட்டுக்கள். நெடுக்காலபோவானுக்கு லண்டன் கதைகளைவிட கனடாச்சனத்திண்ட கதை எண்டால் கொஞ்சம் அதுகள்பற்றி கேட்கிறதில கூட விருப்பம் போல. சரி நானும் இஞ்சதானே இருக்கிறன். மிச்ச கதைகளை உங்களுக்கு நான் சொல்லிறன். :mellow:

கனடாவுக்க தான் யாழ்ப்பாணக் குடித்தொகையில் பாதி இருக்குது. அங்க தானே புதினம் அதிகமா இருக்கும். அதுக்காக மற்ற இடங்களில குறைவென்றில்ல..! கனடா அளவுக்கு பார்க்கேக்க.. கொஞ்சம் குறைவு..!

எதுஎப்படியோ.. நீங்க கண்ட கேட்ட கதைகளையும் சொல்லுங்கோ.. கேட்பம்..! நிச்சயம் இவ்வாறான கதைகள் ஆக்களை மாத்துதோ இல்லையோ.. அவைட மனச்சாட்சியை தட்டிக் கேட்க வைக்கும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிஜகதை நன்றாக உள்ளது.......நீங்கள் என்ன சொன்னாலும் பெடியள் அடிப்பாங்கள்....நாங்கள்(நான்) பியர் அடிப்போம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜகதை நன்றாக உள்ளது.......நீங்கள் என்ன சொன்னாலும் பெடியள் அடிப்பாங்கள்....நாங்கள்(நான்) பியர் அடிப்போம்....

இப்படி.. உண்மையை வெளிப்படையாச் சொல்ல எல்லாருக்கும் துணிவு வராது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிச கதைக்கு நன்றி நெடுக்ஸ். :icon_idea:

நிஜத்தை நிஜமாக வரைந்துள்ளீர்கள் நெடுக்ஸ்

இதைவிட வித்தியாசமான கதைகள் கனடாவில் நிறைய உண்டு

எழுதவிருப்பம் எழுதினான் தூக்கிறதுக்கும் ஆட்கள் உண்டு

தூக்கச்சொல்லுறதுக்கும் ஆட்கள் உண்டு

ஆதலால் நேர மினக்கேடு என்பதால் விட்டுவிட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை நிஜமாக வரைந்துள்ளீர்கள் நெடுக்ஸ்

இதைவிட வித்தியாசமான கதைகள் கனடாவில் நிறைய உண்டு

எழுதவிருப்பம் எழுதினான் தூக்கிறதுக்கும் ஆட்கள் உண்டு

தூக்கச்சொல்லுறதுக்கும் ஆட்கள் உண்டு

ஆதலால் நேர மினக்கேடு என்பதால் விட்டுவிட்டேன்

நான் ஊரில இருக்கேக்க ஒரு குடும்பம்.. தாங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ என்று சொல்லி போராட்டத்துக்கு நகை பங்களிக்க மாட்டம் என்று சொல்ல போராளிகளும் ஏற்றுக் கொண்டு அவர்கள் அவ்வாறு பங்களிக்கத் தேவையில்லை என்று கூறி விட்டுவிட்டார்கள். ஆனால் அதே குடும்பம்.. பின்னர் கனடாவுக்கு போக குடும்பமா பாஸ் எடுக்க போயிருக்கினம். அவைட ஒரு மகன் கனடாவில் இருந்தவர். அவர் கூப்பிட இவர்கள் பாஸ் எடுக்கப் போயிருக்கினம்.

அப்ப போராளிகள் கேட்டிருக்கினம்.. அம்மா நீங்கள் வறுமைக் கோட்டில வாழ்றதாச் சொன்னீங்க. இப்ப எப்படியம்மா எல்லாரும் கொழும்பு போய் சீவிக்கப் போறீங்கள் என்று. அப்பதான் அவை சொல்லிச்சினமாம்.. நாங்க நகை தந்திட்டுப் போறம் விடுங்கோ என்று.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்.

நான் சொன்னது உடனேயே நடந்திற்றுது

பார்த்தீர்களா நெடுக்ஸ்

நீங்கள் எழுதியதில கொஞ்சத்த எலி வந்து அரிச்சுப் போட்டுது சொறி இணையவன் வந்து தூக்கிப் போட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் நெடுக்ஸ் இப்படி பல நிஜத்தில நடந்திருக்கு இதுவும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது உடனேயே நடந்திற்றுது

பார்த்தீர்களா நெடுக்ஸ்

நீங்கள் எழுதியதில கொஞ்சத்த எலி வந்து அரிச்சுப் போட்டுது சொறி இணையவன் வந்து தூக்கிப் போட்டார்

அவர்கள் நினைக்கினம்.. நாங்கள் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிச்சு.. சிறீலங்கா அரசு.. தாயகத்துக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவை அறுக்க முயற்சிப்பதில் பங்கெடுக்கிறோமோ என்று.

சிறீலங்கா அரசு.. அறுக்குதோ இல்லையோ.. இப்ப பாருங்கோவன்.. ஏ 9 பாதையை இராணுவம் திறக்க.. கொலிடேக்குப் போகப் போற எங்கட ஆக்கள் என்ன சொல்லப் போகினம் என்று. போன முறை போகேக்க.. வழியில வளைச்சு காசு கேட்டாங்கள். இந்த முறை அவங்கட தொல்லையே இல்லையப்பா. ஆமிக்காரன்.. சும்மா மேலோட்டமா பார்த்திட்டு.. எங்கட பிள்ளையளோட இங்கிலீசில கதைச்சிட்டு.. தூக்கிக் கொஞ்சிட்டு.. சின்னவளின்ர முகத்தில தடவிட்டு சிரிச்சிட்டு விட்டான் என்றால் பாருங்கோவன். அவங்கள் நல்லவங்கள். இவங்கள் அடிக்கிறதாலதான் அவங்கள் சனத்தை அடிக்கிறது..! இப்படிச் சொல்லாட்டி.. இது நடக்காட்டி.. பாருங்கோ. இன்னும் ஒரு 6 மாதம் மெத்த..! அங்க போகப் போற நம்மவர்களின் முதலீடுகளையும் பாருங்கோ.. திறபடப் போற பார்களையும் ரெஸ்ரோரண்டுகளையும்.. பார்க்கத்தானே போறியள்..! :icon_idea::D

பாராட்டுக்கள் நெடுக்ஸ் இப்படி பல நிஜத்தில நடந்திருக்கு இதுவும்...

நன்றி விஜி. மற்றும் கருத்துரைத்த உறவுகளுக்கும் நன்றிகள். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு சுதந்திரம் பற்றியே கவலைப் பட நிறையப் பேர் இப்ப. சுதந்திரமா எழுத விடத்தான் எத்தினையோ இடங்கள் இருக்காமே...குண்டுமணி, சிந்தாமணி அப்பிடி இப்பிடியெண்டு, பிறகேனப்பா யாழத் திருத்தப் பாடு படுறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த மருமோளாய் வாறவளவையள் எண்டைக்குத்தான் திருந்தப்போறாளவையளோ ?எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை?

உண்மையாய் உலகம் முழுக்க உதுதான் நடக்குதெண்டு பாத்தால் அட நாசமறுப்பு நெடுக்குசாமியின்ரை கதையிலையும் உவளைவையின்ரை அட்டகாசம் சொல்லிவேலையில்லையப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சம்பவம், கோர்ப்பு உரையாடல் மனத்தாங்கல் எல்லாம் தெளிவாக இச்சிறுகதையை நகர்த்தியிருக்கிறது.

அழுக்காறில் உழன்றாலும் அன்னம் போல் இருக்க ஆசைப்படுபவர்களும் சில சமயங்களில் பன்றிகளாகவும் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதையல்ல நிஜம்ன்னு போட்டிருக்கலாம் நெடுக்ஸ்ஸ்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சம்பவம், கோர்ப்பு உரையாடல் மனத்தாங்கல் எல்லாம் தெளிவாக இச்சிறுகதையை நகர்த்தியிருக்கிறது.

அழுக்காறில் உழன்றாலும் அன்னம் போல் இருக்க ஆசைப்படுபவர்களும் சில சமயங்களில் பன்றிகளாகவும் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாரும் யாரையும் சபிக்கல்லையக்கா.. நாங்களா எங்களை சபிச்சுக் கொண்டிட்டு.. உலகத்தைப் பார்த்து திட்டி.. சமாதானப்பட்டுக்கிறம்..! :D

நன்றி அக்கா கருத்துப் பகிர்விற்கு..! :D

கதையல்ல நிஜம்ன்னு போட்டிருக்கலாம் நெடுக்ஸ்ஸ்..

நான் சொல்லாட்டிக்கும் நீங்கள் சொல்லிட்டீங்கல்ல. அதுபோதாதா. நான் சொல்லுறதிலும் நீங்கள் வாசகர் சொல்லுறதிற்குத்தான் கனதி ஜாஸ்தி..! :D

உந்த மருமோளாய் வாறவளவையள் எண்டைக்குத்தான் திருந்தப்போறாளவையளோ ?எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை?

உண்மையாய் உலகம் முழுக்க உதுதான் நடக்குதெண்டு பாத்தால் அட நாசமறுப்பு நெடுக்குசாமியின்ரை கதையிலையும் உவளைவையின்ரை அட்டகாசம் சொல்லிவேலையில்லையப்பா :D

வீட்டுக்கு வீடு வாசற்படி.. என்ற பழமொழி.. எப்பவும் எல்லா இடமும் பொருந்தும் போல..! எனக்கு வீடும் இல்ல வாசற்படியும் இல்ல.. கண்ணில.. செவில விழுந்தது.. இங்க எதிரொலிக்குது.. அவ்வளவும் தான்..! :D

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து அடியுங்கோடா விடாமல் அடியுங்கோடா என்று சொன்னவர்களில் சிலர் இவங்கள் அடிச்சாதாலதான் பிரச்சனை என்று இப்ப தொப்பியைப் பிரட்டிக் கதைக்கிறார்கள். வென்றால் ஒரு கதை. தோற்றால் இன்னொரு கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.