Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் தாயக மக்கள்!

Featured Replies

தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் தாயக மக்கள்!

அனைவருக்கும் இழவு வணக்கங்கள்,

வழமையாக தாயகத்தில பொங்கல் எண்டால் வீடுகளில கோலம்போட்டு, விளக்கு ஏற்றி, புதுப்பானையில வயலில விளைஞ்ச அரிசி முத்துக்களை போட்டு, பால், கரும்பு, பழங்கள், இத்தியாதிகள் எண்டு பலவிதமான பொருட்கள் புடைசூழ இப்பிடி மங்களகரமாய் நடக்கும். ஆனால்... இந்தவருசம் மிகவும் வித்தியாசமாய், முன்பு ஒருமுறையும் இல்லாதவகையில சிறீ லங்கா அரச பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில தலைவிரிச்சு மயானகாண்டம் ஆடுற நிலமையில - தாயக மக்களிண்ட வாழ்வு மிகக்கேவலமாக்கப்பட்டு பொங்கல் அவர்களுக்கு சுடுகாட்டுக்க நடக்கிது.

வழமையாய் ஒரு ஊரில ஒதுக்குப்புறமாய் ஒரு இடத்தில சுடுகாடு இருக்கும். ஆனால்... தாயகத்தில இப்ப மக்கள் வாழுகின்ற முழுநிலப்பரப்புமே ஆக்கிரமிப்பு இராணுவத்தால சுடுகாடு ஆக்கப்பட்டு இருக்கிது. அங்கு வாழ்கின்ற தமிழ்மக்கள் நடமாடும் பிணங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீனம். அங்க இருக்கிற மக்களிண்ட உயிர்கள் கொடியவனால ஒருவர் பின் ஒருவராக தினமும் பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிது.

ஒருபுறம் மல்ரிபரலுகள் மூலம் மழைத்தூறல்களாக ஒவ்வொரு அங்குல தாயக நிலப்பரப்புக்களிலையும் வந்து வீழ்ந்து வெடிக்கின்ற குண்டுகள், இன்னொருபுறம் வகை வகையான விமானக்குண்டு வீச்சுக்கள், இன்னொருபுறம் அகதியாய் ஓடினாலும் துரத்தி துரத்தி சுடுகின்ற இனவாதிகளிண்ட துப்பாக்கிச் சன்னங்கள், இன்னொருபுறம் காடுகளில வாழ்கின்ற விச ஜந்துக்கள் - பாம்புகளிண்ட தாக்குதல்கள், இன்னொருபுறம் கொடிய நோய்கள், இன்னொருபுறம் பட்டினி.. அதாவது ஒட்டுமொத்தமாய் தாயக மக்கள் வெற்றுடல்கள் ஆக்கப்பட்டு, சுடுகாடாய் மாற்றம் பெற்றுள்ள தாயகத்துக்குள் ஓடித்திரிய விடப்பட்டு இருக்கிறார்கள்.

முன்பு எல்லாம் இறந்தபின்னர்தான் உடலை சுடுவார்கள். ஆனால் புத்தனின் பெயரில யுத்தம் செய்கின்ற சிங்கள இனவாதிகள் தமிழரின் உடல்களை தற்போது உயிருடனேயே எரிக்கின்ற பரிசோதனைகளில இறங்கி இருக்கிறார்கள். உலக வல்லரசுகளிண்ட ஆசனவாயுக்கால வெளியேறுகின்ற கழிவுகள் சிறீ லங்கா நாட்டுக்கு உரமாக கொடுக்கப்பட - அவை இறுதியில கொத்தணிக்குண்டுகளாக, எரிகுண்டுகளாக, வகை தொகை இன்றி தாயகத்தில - தமிழனின்ட தலையில கொண்டுவந்து கொட்டப்படுகிது.

தாயக மக்களை பொறுத்தளவில இப்போது சுடலையில பிணத்தை எரிக்கும்போது கொண்டு செல்கின்ற கொள்ளிக்குடத்துக்கும், பொங்கல் பானைக்கும் இடையில சொல்லிக்கொள்ளும்படியாக அதிக வேறுபாடுகள் ஒண்டும் இல்லை. வழமையாக பொங்கல் பானையுக்க ஊத்துற பாலை இந்தமுறை மக்கள் இறந்த பிணங்களிண்ட வாயுக்க ஊத்தவேண்டிய நிலமையில வாழ்ந்துகொண்டு இருக்கிறீனம். சிங்கள இனவாத அரசின் ரவுடீசம் தாயகத்தில அளவுக்குமிஞ்சி அட்டகாசம் செய்துகொண்டு இருக்கிது.

தங்கட இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையே முன்பு கொன்றுகுவிச்சு ஏப்பம்விட்ட சிங்கள பயங்கரவாத சாம்ராச்சியம் தமிழ் மக்களிண்ட நியாயபூர்வமான போராட்டத்துக்கு தீர்வுப்பொதியாக ஒட்டுமொத்த இன அழிப்பை - பகிரங்க மரண தண்டனையை நடைமுறையில தருவது ஆச்சரியப்படக்கூடிய ஒரு விசயம் இல்லை. தங்கட இனத்தை சேர்ந்த ஓர் சிறந்த ஊடகவியலாளனையே கொடூரமான முறையில பலர்முன்னிலையில சுட்டுக்கொன்று 2009ம் ஆண்டை மரணயோகமாக ஆரம்பிச்சு இருக்கிற சிங்கள பயங்கரவாத அரசு தன்னை யாராலும் ஒன்றும் செய்துவிட ஏலாது எண்டுற இறுமாப்பில தறிகெட்டு நிக்கிது. சிறீ லங்கா அரச கொலைவெறியர்களிண்ட கையில அகப்பட்டு இருக்கிற பல லட்சம் தமிழ் மக்களிண்ட வாழ்வு தாயகத்தில தற்போது மரணஊசல் ஆடிக்கொண்டு இருக்கிது.

சர்வாதிகாரி ஹிட்லர் கூட முன்பு யூதர்களை மில்லியன் கணக்கில கொடூரமாக கொன்றபோது அவர்களை பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம்களில அடைச்சு வச்சுத்தான் தனது கொலைவெறியை தீர்த்துக்கொண்டான். ஆனால் சிறீ லங்கா இனவாத அரசோ அதற்கும் ஒருபடி மேலாக சென்று, முற்றுமுழுதான தமிழர் தாயகத்தையுமே ஓர் சித்திரவதை கூடமாக - திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றி அதற்குள் வைத்து தமிழ் மக்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து இன அழிப்பு செய்து வருகிது.

உடல் சிதறி மரணம், உடல் எரிஞ்சு மரணம், இரத்தப்போக்கால் மரணம் எண்டு தாயகத்தில அப்பாவி தமிழ் மக்களுக்கு சிங்கள அரசினால உத்தியோகபூர்வமாக பகிரங்க மரண தண்டனை வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற இழவுச்செய்திகள் தினமும் வந்துகொண்டு இருக்கிது. ஆனால்... இந்த நேரடியான மரணதண்டனை தவிர, இதன் தாக்கங்களால ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற இதரபாதிப்புக்கள் பற்றி எதுவித தகவலும் இல்லை. அந்த தகவலை சேகரிக்கக்கூடிய நிலமையிலோ இல்லாட்டிக்கு சொல்லக்கூடிய நிலமையிலோ ஒருத்தரும் இல்லை. ஏன் எண்டால் ஒட்டுமொத்த தாயகமே சுடுகாடு ஆக்கப்பட்டு இருக்கிது. ஓர் ஊர் எண்டு ஒண்டு இருந்தால் அதன் ஒதுக்குப்புறமாக இருக்கிற சுடுகாட்டுக்க என்ன நடக்கிது எண்டு யாரிடமாவது கேட்டு அறிஞ்சுகொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாய் ஊர் முழுதுமே சுடுகாடாய் மாறி இருந்தால் யாரை எப்படி தொடர்பு கொள்ளுறது? என்னத்தை கேட்கிறது?

தெருவில நடந்து போகேக்க தற்செயலாக வழுக்கிவிழுந்தாலே குறிப்பிட்ட அந்த தெருவை சரியாக பராமரிக்க இல்லை எண்டு குற்றஞ்சாட்டி அந்த நகரசபையிட்ட நட்டைஈடு கேட்டு நீதிமன்றதுக்கு போறதுக்கு வசதிகள், வழிவகைகள் உள்ள நாட்டில நாங்கள் இப்ப வாழ்ந்துகொண்டு இருக்கிறம். ஆனால்.. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தாயகத்தில எங்கட உறவுகளை ஒவ்வொருத்தராக தேடித் தேடிச்சென்று பலவகையான குண்டுகள், ஆயுதங்கள், உயிர்வதைகள் மூலம் சிங்கள இனவாத அரசு அழிச்சுக்கொண்டு இருக்கிது எண்டுறதை நினைக்க - அங்குள்ள சட்ட அமுலாக்கத்தை நினைச்சுப்பார்க்க - என்ன சொல்லிறது எண்டே தெரிய இல்லை.

சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தினமும் தமிழ் மக்களின் பச்சை இரத்தம் ஆகாரமாக தேவைப்படுகிது. அவர்களுக்கு தேவையானது வெறும் நிலப்பரப்புக்கள் மட்டும் அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட தாயக நிலப்பரப்புக்களோடு தமிழர்களின் உயிர்களும் நிச்சயமாக அவர்களுக்குத் தேவைப்படுகிது. வெறும் நிலப்பரப்புக்களை கைப்பற்றுவது எண்டால் போர் நடைபெறுகின்ற இடங்களில, அதன் எல்லைகளில மாத்திரம் குண்டுகளை கொட்டினால் போதும். ஆனால்.. தமிழர் குடியிருப்புக்கள் மீது எல்லாம் தேடித் தேடிச்சென்று தாக்குதல்கள் செய்வதன் உள்ளார்ந்தம் தமிழர்களிண்ட உயிர்களை எடுக்கவேணும் எண்டுறது தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது..

ஒருவர்பின் ஒருவராக ஒவ்வொரு தமிழனின் உயிராக காவுகொல்லப்படும்போது மெல்ல, மெல்ல தமிழர் சனத்தொகை குறையும். பல இலட்சங்கள் கொஞ்சக்காலத்தில சில இலட்சங்கள் ஆகும். சில இலட்சங்கள் இன்னும் கொஞ்சக்காலத்தால பல ஆயிரங்கள் ஆகும். பல ஆயிரங்கள் இன்னும் கொஞ்சக்காலத்தால சில ஆயிரங்கள் ஆகும். இப்படியே தாயகத்தில இன அழிப்பு ஓய்வின்றி இருபத்து நான்கு மணிநேரமும் தொடரும்போது - இந்த இன அழிப்பு இயந்திரம் வருடம் முழுவதும் ஓய்வின்றி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது - தாயகத்தில எஞ்சும் தமிழர் சனத்தொகை சில நூறுகளாகவே இறுதியில இருக்கும். அந்த தப்பிப்பிழைக்கும் சிலநூறு தமிழர்கள் கூட அங்கவீனர்களாகவும், மூளை சிதைக்கப்பட்டு - மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவுமே இருப்பார்கள்.

இஞ்ச நீங்கள் கவனிக்க வேணும் ஒரு முக்கிய விசயம்: சார்ல்ஸ் டார்வினிண்ட கூர்ப்புக்கொள்கையில - வாழ்க்கைப்போட்டியில தப்பிப்பிழைக்கிற - சூழலினால தேர்வு செய்யப்படுகின்ற இறுதி எச்சங்கள் மிகுந்த ஆற்றல் உள்ளனவாக இருக்கின்றன. ஆனால்.. இதற்கு எதிர்மாறாக சிறீ லங்கா இனவாத அரசின் இன அழிப்பின்போது தாயகத்தில இறுதி எச்சங்களாக எஞ்சப்போபவையோ அங்கவீனர்கள், மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களாக இருக்கப்போகின்றார்கள். இதனால ஆனானப்பட்ட கூர்ப்புக் கொள்கைகூட தமிழர் தாயகத்தில தலைகீழாக மாற்றி எழுதப்படுகின்ற அகோர நிலமையில சிங்கள இனவாதம் கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிது.

சிறீ லங்கா தீவிரவாத அரசு இப்படி வெளிப்படையாகவே இன அழிப்பு செய்யுறதால தமிழருக்கு நிரந்தரமான தீர்வுப்பொதியை கொடுத்ததாகவும் இருக்கும், சிறீ லங்கா நாட்டை சிங்கள இனவாதிகளுக்கு மட்டும் உரிய ஏகபோக உரிமை ஆக்கினதாகவும் இருக்கும். சுருக்கமாக ஒரு கல்லில ரெண்டு மாங்காய்கள்!

கையை - கையை பிசைஞ்சு பிசைஞ்சு யோசிச்சு சிறீ லங்கா இனவாதிகளின் தலைவர் மகிந்த ராசபக்ச அவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்க இருக்கின்ற அரசியல் தீர்வுப்பொதி இதுவேதான்! தமிழ் சினிமா படங்களில வில்லன்கள் கற்பனை கதைகளில செய்கிற நடைமுறை வாழ்வில நடக்காத பயங்கரமான விசயங்களை - அயோக்கியத்தனங்களை இந்த சிங்கள இனவாதி நடைமுறை சாத்தியமாக்கி இருக்கிறார். இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் பல நூறு வருசங்களின் பின்னர் இவர் ஹிட்லரின் மறு அவதாரமாக வரலாற்றில நினைவு கூறப்படுவார் என்பதில எதுவித சந்தேகமும் இல்லை.

தமிழ் இலக்கியங்களில கதைகளாக பலப்பல விசயங்களை நாங்கள் பார்த்து இருக்கிறம். குளிரினால வாடின தாவரத்துக்கு தனது உடையை போர்த்து உதவிய அரசன், கோபம் கொண்டு நகரம் ஒன்றையே தனது கற்பின் மகிமையினால எரிச்ச பெண், தனது மகனை தேர்ச்சக்கரம் மூலம் நசித்துகொன்று நீதியை நிலைநாட்டிய அரசன்... இப்பிடி ஏராளம் கதைகள். ஆனால்.. தங்கட உடலையே பொங்கல் பானையாக்கி, வழிகின்ற உதிரம் மூலம் சூரியனுக்கு வணக்கம் செய்கின்ற ஒரு சமூகத்தை நாங்கள் இப்ப நேரடியாக பார்க்கிறம். இது வெறும் கதை இல்லை. பொய்கள், புரட்டுக்கள் நிறைஞ்ச புராணம் இல்லை. யதார்த்தமாக நடக்கிற நிஜம்! தாயகத்தில ஒவ்வொரு நொடியும் வரலாறாக எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிது.

இந்தவகையில... வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடிவந்த எல்லாரும் கோழைகளாக இருந்தாலும், தாயகத்தில இருக்கிற மானமுள்ள தமிழர்களிண்ட நேரடி உறவுகள் எண்டுறவகையில - அவர்களுக்கு இந்த இக்கட்டான காலகட்டத்தில உடனடியாக பல்வேறு உதவிகள் செய்வதன்மூலம், தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் வெற்றிபெற எங்களால முடியுமான ஆதரவினை கொடுப்பதன்மூலம் நாங்கள் ஓரளவுக்காயினும் திருப்திப்பட்டுக்கொள்ள முடியும். தாயகத்து மக்களுக்கு செய்கின்ற இந்த செஞ்சோற்று கடனை மிஞ்சியதாக பகலவனுக்கான வேறு ஓர் நன்றிகூறல் இருக்க முடியாது! பகலவன்கூட தாயகத்து மக்களுக்கு நாங்கள் செய்கின்ற உதவியைத்தான் தனக்கு படைக்கப்படுகின்ற பொங்கலைவிட சிறந்த மரியாதையாக ஏற்றுக்கொள்வான். இறுதியாக...

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சுடுகாடாகி இருக்கிற தாயகத்தில இருந்து எங்கட உறவுகள் தாமாக விரும்பியோ அல்லது விரும்பாமலோ தங்கட உடலில இருந்து பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் சூரியனுக்கு வணக்கம் செய்யேக்க... பூமிப்பந்திண்ட மறுகோடியில இருக்கிற நாங்கள் ஆரவாரமாக 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!' எண்டு கத்தி - ஊரைக்கூப்பிட்டு - நுரைதள்ளுகிற பாலை பொங்கல் பானையில வழியச்செய்து பொங்கல் கொண்டாடுறது எங்கட மனச்சாட்சிக்கு சரியானதோ? ஆர்ப்பாட்டம் இல்லாத - ஆடம்பரம் இல்லாத - அமைதியான அகவணக்கத்தை சூரியத்தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ? எண்ணங்கள் - தீர்மானங்கள் என்றும் உங்கட கைகளில்...!

பொங்கலோடு சேர்ந்து பிறக்கும் தமிழர் புத்தாண்டு தாயக மக்களின் துயரை போக்கும் - தாயக மக்களிற்கு ஓர் விடிவை கொண்டுவரும் என்கின்ற எதிர்பார்ப்புக்களுடன், நம்பிக்கைகளுடன், பிரார்த்தனைகளுடன்.. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! வணக்கங்கள்!

நன்றி!

அருமையான கடிதம் முரளி உங்கள் உணர்வுக்கு நான் மதிப்பளிப்பதோடு பொங்கல் தினமான இன்று உயிரை தியாகம் செய்த போராளிகளுக்கும் அப்பாவிகளுக்கும் என் கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஒவ்வொரு எழுத்தும் கண்ணீரை வரவழைக்கின்றது முரளி. கொண்டாட்டம் என்று பெயருக்குச்சொல்வதே தவிர; 2007 ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதிக்குப்பின்னர் எந்த வித களியாட்டங்களிலும் நான் கலந்து கொள்வதில்லை. தாயகவிடுதலையொட்டிய நிகழ்வுகளில் தவிர மற்ற நிகழ்வுகளில் மனம் செயற்படுவதும் இல்லை.

உங்கள் இந்தக்கட்டுரையை உங்கள் அனுமதியுடன் முத்தமிழ் குழுமத்தில் பிரசுரிக்கலாமா?!! இன்னும் என்ன நடக்கிறதோ என்று தெரியாமல் இன்பப்பொங்கல் பொங்குவோர்களுக்கு இதுவே நாம் சொல்லும் நன்றி நன்னாள் என்று தெரியப்படுத்துவோம்.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் சுபீட்சமாக வாழும் வரைக்கும் பொங்கல் தேவை இல்லை. ஏதோ இயலக்கூடிய வகையில் அவர்களுக்கு உதவுதல் தான் எமது சகோதர சகோதரிகளுக்கு செய்யும் கடமை. நன்றி முரளி.

முரளி உங்களின் இந்த படைப்பை உங்களின் அனுமதி இன்றி தமிழக மக்கள் கூடும் கருத்துகளத்தில்(tamilnadutalk.com)பதிந்

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் வித்தியாசமான பொங்கல் கண்டு நமக்கும் கண்ணீர் பொங்குகின்றது. எதோ விடியும் என்று காத்திருப்போம் .

எம்மால் ஆனதை செய்து. கொண்டு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி தங்கள் பதிவு இன்றைய நிலைமையில் ஈழத்தில் படும் மக்களின் நிலைமையை எடுத்தியம்புகின்றன் ஆனால் ஒன்று நாம் எல்லோரும் சேர்ந்து இழத்தில் சூரியனுக்க நன்றி செலுத்தும் காலம் மட்டும் வெகுதொலைவில் இல்லை.

எதற்குமே ஒருமுடிவுண்டு ஆனால் ஈழத்தில நடக்கும் கொலைகளுக்கு மட்டும்... ?

முரளி மிக விளக்கமாக தற்போதைய வன்னிதமிழ்மக்களின் நிலைமையை புரியவைத்துள்ளார்.... தற்போதைய தமிழர் நிலை மிக மிக மோசமான பரிதாபமான நிலை..

ஈழவனும் தமிழகமக்களின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கிறீர்.. நல்ல விடையம்..

பொங்கல் நாளில் எம்மக்களின் விடிவிற்காக எல்லா தமிழ்மக்களும் அவரவர் கடவுள்களை நினைத்து ஒரு நிமிடம் பிராத்திப்போம்... இதனையும் சிலர் விரும்ப மாட்டார்கள்... திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை... தமிழகத்தில் திருமாவளவன் எங்கள் மக்கள் விடிவிற்காக தைபொங்கல் நாளில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்க உள்ளார்..

தமிழனத்திற்கு நல்ல விடிவு பிறக்க தை திரு நாளில் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்....

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் உடல்களையே பானைகளாக்கி பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் கதிரவனுக்கு வணக்கம் செலுத்தும் தாயக மக்கள்!

சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தினமும் தமிழ் மக்களின் பச்சை இரத்தம் ஆகாரமாக தேவைப்படுகிது. அவர்களுக்கு தேவையானது வெறும் நிலப்பரப்புக்கள் மட்டும் அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட தாயக நிலப்பரப்புக்களோடு தமிழர்களின் உயிர்களும் நிச்சயமாக அவர்களுக்குத் தேவைப்படுகிது. வெறும் நிலப்பரப்புக்களை கைப்பற்றுவது எண்டால் போர் நடைபெறுகின்ற இடங்களில, அதன் எல்லைகளில மாத்திரம் குண்டுகளை கொட்டினால் போதும். ஆனால்.. தமிழர் குடியிருப்புக்கள் மீது எல்லாம் தேடித் தேடிச்சென்று தாக்குதல்கள் செய்வதன் உள்ளார்ந்தம் தமிழர்களிண்ட உயிர்களை எடுக்கவேணும் எண்டுறது தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது..

ஒருவர்பின் ஒருவராக ஒவ்வொரு தமிழனின் உயிராக காவுகொல்லப்படும்போது மெல்ல, மெல்ல தமிழர் சனத்தொகை குறையும். பல இலட்சங்கள் கொஞ்சக்காலத்தில சில இலட்சங்கள் ஆகும். சில இலட்சங்கள் இன்னும் கொஞ்சக்காலத்தால பல ஆயிரங்கள் ஆகும். பல ஆயிரங்கள் இன்னும் கொஞ்சக்காலத்தால சில ஆயிரங்கள் ஆகும். இப்படியே தாயகத்தில இன அழிப்பு ஓய்வின்றி இருபத்து நான்கு மணிநேரமும் தொடரும்போது - இந்த இன அழிப்பு இயந்திரம் வருடம் முழுவதும் ஓய்வின்றி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது - தாயகத்தில எஞ்சும் தமிழர் சனத்தொகை சில நூறுகளாகவே இறுதியில இருக்கும். அந்த தப்பிப்பிழைக்கும் சிலநூறு தமிழர்கள் கூட அங்கவீனர்களாகவும், மூளை சிதைக்கப்பட்டு - மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவுமே இருப்பார்கள்.

இஞ்ச நீங்கள் கவனிக்க வேணும் ஒரு முக்கிய விசயம்: சார்ல்ஸ் டார்வினிண்ட கூர்ப்புக்கொள்கையில - வாழ்க்கைப்போட்டியில தப்பிப்பிழைக்கிற - சூழலினால தேர்வு செய்யப்படுகின்ற இறுதி எச்சங்கள் மிகுந்த ஆற்றல் உள்ளனவாக இருக்கின்றன. ஆனால்.. இதற்கு எதிர்மாறாக சிறீ லங்கா இனவாத அரசின் இன அழிப்பின்போது தாயகத்தில இறுதி எச்சங்களாக எஞ்சப்போபவையோ அங்கவீனர்கள், மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களாக இருக்கப்போகின்றார்கள். இதனால ஆனானப்பட்ட கூர்ப்புக் கொள்கைகூட தமிழர் தாயகத்தில தலைகீழாக மாற்றி எழுதப்படுகின்ற அகோர நிலமையில சிங்கள இனவாதம் கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிது.

சிறீ லங்கா தீவிரவாத அரசு இப்படி வெளிப்படையாகவே இன அழிப்பு செய்யுறதால தமிழருக்கு நிரந்தரமான தீர்வுப்பொதியை கொடுத்ததாகவும் இருக்கும், சிறீ லங்கா நாட்டை சிங்கள இனவாதிகளுக்கு மட்டும் உரிய ஏகபோக உரிமை ஆக்கினதாகவும் இருக்கும். சுருக்கமாக ஒரு கல்லில ரெண்டு மாங்காய்கள்!

கையை - கையை பிசைஞ்சு பிசைஞ்சு யோசிச்சு சிறீ லங்கா இனவாதிகளின் தலைவர் மகிந்த ராசபக்ச அவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்க இருக்கின்ற அரசியல் தீர்வுப்பொதி இதுவேதான்! தமிழ் சினிமா படங்களில வில்லன்கள் கற்பனை கதைகளில செய்கிற நடைமுறை வாழ்வில நடக்காத பயங்கரமான விசயங்களை - அயோக்கியத்தனங்களை இந்த சிங்கள இனவாதி நடைமுறை சாத்தியமாக்கி இருக்கிறார். இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் பல நூறு வருசங்களின் பின்னர் இவர் ஹிட்லரின் மறு அவதாரமாக வரலாற்றில நினைவு கூறப்படுவார் என்பதில எதுவித சந்தேகமும் இல்லை.

தமிழ் இலக்கியங்களில கதைகளாக பலப்பல விசயங்களை நாங்கள் பார்த்து இருக்கிறம். குளிரினால வாடின தாவரத்துக்கு தனது உடையை போர்த்து உதவிய அரசன், கோபம் கொண்டு நகரம் ஒன்றையே தனது கற்பின் மகிமையினால எரிச்ச பெண், தனது மகனை தேர்ச்சக்கரம் மூலம் நசித்துகொன்று நீதியை நிலைநாட்டிய அரசன்... இப்பிடி ஏராளம் கதைகள். ஆனால்.. தங்கட உடலையே பொங்கல் பானையாக்கி, வழிகின்ற உதிரம் மூலம் சூரியனுக்கு வணக்கம் செய்கின்ற ஒரு சமூகத்தை நாங்கள் இப்ப நேரடியாக பார்க்கிறம். இது வெறும் கதை இல்லை. பொய்கள், புரட்டுக்கள் நிறைஞ்ச புராணம் இல்லை. யதார்த்தமாக நடக்கிற நிஜம்! தாயகத்தில ஒவ்வொரு நொடியும் வரலாறாக எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிது.

இந்தவகையில... வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடிவந்த எல்லாரும் கோழைகளாக இருந்தாலும், தாயகத்தில இருக்கிற மானமுள்ள தமிழர்களிண்ட நேரடி உறவுகள் எண்டுறவகையில - அவர்களுக்கு இந்த இக்கட்டான காலகட்டத்தில உடனடியாக பல்வேறு உதவிகள் செய்வதன்மூலம், தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் வெற்றிபெற எங்களால முடியுமான ஆதரவினை கொடுப்பதன்மூலம் நாங்கள் ஓரளவுக்காயினும் திருப்திப்பட்டுக்கொள்ள முடியும். தாயகத்து மக்களுக்கு செய்கின்ற இந்த செஞ்சோற்று கடனை மிஞ்சியதாக பகலவனுக்கான வேறு ஓர் நன்றிகூறல் இருக்க முடியாது! பகலவன்கூட தாயகத்து மக்களுக்கு நாங்கள் செய்கின்ற உதவியைத்தான் தனக்கு படைக்கப்படுகின்ற பொங்கலைவிட சிறந்த மரியாதையாக ஏற்றுக்கொள்வான். இறுதியாக...

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சுடுகாடாகி இருக்கிற தாயகத்தில இருந்து எங்கட உறவுகள் தாமாக விரும்பியோ அல்லது விரும்பாமலோ தங்கட உடலில இருந்து பொங்கி வழிகின்ற உதிரம் மூலம் சூரியனுக்கு வணக்கம் செய்யேக்க... பூமிப்பந்திண்ட மறுகோடியில இருக்கிற நாங்கள் ஆரவாரமாக 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!' எண்டு கத்தி - ஊரைக்கூப்பிட்டு - நுரைதள்ளுகிற பாலை பொங்கல் பானையில வழியச்செய்து பொங்கல் கொண்டாடுறது எங்கட மனச்சாட்சிக்கு சரியானதோ? ஆர்ப்பாட்டம் இல்லாத - ஆடம்பரம் இல்லாத - அமைதியான அகவணக்கத்தை சூரியத்தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ? எண்ணங்கள் - தீர்மானங்கள் என்றும் உங்கட கைகளில்...!

முரளி நாளாந்தம் தாயகம் பற்றியும், எங்கள் இனத்தின் வலிகள்பற்றியும் எண்ணிக்கையற்ற அவலசெய்திகளாக கேட்டு குமுறிக் கொண்டிருக்கிறோம். இரத்தம் சதையால் துன்பம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. புலம் பெயர் உறவகள் சிந்திப்பார்கள். இக்கட்டுரையை வாசித்தபின்னும் பொங்லோ பொங்கல் என்று குரல் ஒலித்து மனிதாபிமானத்தைக் கொன்றுவிட்டு வாழமாட்டார்கள் என்று நம்புவோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை உருக்கும் பதிவு முரளி.இதை எழுத உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்தது என்று அறீந்து கொள்ளலாமா? நான் அறீந்த‌ வ‌ரை இம்முறை புல‌த்தில் உள்ள மக்க‌ள் பொங்க‌ளை (பெரிதாக) கொண்டாட விரும்ப‌வில்லை.

  • தொடங்கியவர்

வணக்கம் எல்லார் கருத்துக்களுக்கும் நன்றி. வேற என்னத்தை சொல்லிறது? கு.போ அண்ணா இணைச்ச படங்களை பார்த்தன். எல்லாம் சீரழிஞ்சு கேவலமாய் இருக்கிது. யாராவது இதை வேறு எங்கையாவது இணைக்கிறது எண்டால் தாராளமாய் இணைக்கலாம். அனுமதி கேட்கத்தேவையில்லை. செய்தி போய்ச்சேர்ந்தால் காணும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொங்கல் தமிழர் நெஞ்சமெல்லாம் குமுறும் பொங்கல்! உருக்கமான பதிவு.

தாயக மக்களிண்ட வாழ்வு மிகக்கேவலமாக்கப்பட்டு பொங்கல் அவர்களுக்கு சுடுகாட்டுக்க ....

நிச்சயமாக எம்மக்கள் மீளுவார்கள், தர்மம் வெல்லும்.. அதுவரை தோள் கொடுப்போம்.

பானையில் பால் பொங்கும் என்றிருந்தோம்

பாவி வைத்தில் ரணம் பொங்குகிறது

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்கள் பதிவின் தலைப்பையும் குறுக்கு இணைத்த படங்களையும் எனது வலைப்பூவில் பாவித்துள்ளேன். அதே நேரம் தமிழ் மணத்திலும் இணைத்துள்ளேன். இதற்கு உங்கள் அனுமதியை கேட்காமலேயே இணைத்துள்ளேன். ஆனால் அதன் தேவை கருதி நீங்கள் என்னின் கோபிக்கமாட்டீர்கள் என நினைக்கிறென். நன்றி

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.