Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்- இராணுவத்தின் வசம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் சில தற்கொலைப்படைப் படகுகளையும் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

submarine_1.jpg

submarine_3.jpg

submarine_2.jpg

srilanka army.

இப்படங்களைப் பார்க்கின்ற போது நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருந்தும்.. ஏன் விடுதலைப்புலிகள் இவற்றை விட்டுச் சென்றனர் என்பது.. கேள்விக்குரியதாகவே இருக்கிறது..!

இது.. உண்மையில்.. கைப்பற்றப்பட்டதா அல்லது பிரச்சார நோக்கில்.. திசை திருப்பச் செய்யப்பட்டதா..??! (டம்மியா) :o:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 வருடத்துக்கு தேவையாக டீசலையும் இவர்கள் பிடித்தவர்கள் தானே அது போல தான இதுவும் என்று நினைக்கிறன்.

எதிரியின் பரப்புரை போர் பல பரிமாணங்களை பெற்று, அரசியல் இராணுவ மொழிகள் பேசுகிறது

என்னைப் போல" டமிழ் டயஸ்பரா " க்களுக்கு இருதய நோய் தந்து தான் அடியை நிறுத்துவாங்கள் போல.

Edited by Jil

அகதி முகாம்களில் இருந்தவர்களை பிடித்துக்கொண்டு வந்து இவர் பொட்டம்மானுக்கு அடுத்தவர். இவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்; என்று சொன்னவர்கள் தானே இது மட்டும் எம்மாத்திரம். :(:lol:

இப்படங்களைப் பார்க்கின்ற போது நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருந்தும்.. ஏன் விடுதலைப்புலிகள் இவற்றை விட்டுச் சென்றனர் என்பது.. கேள்விக்குரியதாகவே இருக்கிறது..!

இது.. உண்மையில்.. கைப்பற்றப்பட்டதா அல்லது பிரச்சார நோக்கில்.. திசை திருப்பச் செய்யப்பட்டதா..??! (டம்மியா) :lol::(

வன்னியிலை முன்னம் முன்னம் புலியின் வாலை பிடிச்சு இருக்கினம் பாராட்டாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறீயள்....

அது சரி உது தண்ணியிலை மொதக்குமா, மெதக்காதா..?? எண்டு பாக்காமலே நீர் மூழ்கி எண்டுறாங்களே... உதுக்கை இயந்திரம் இருக்குதோ எண்டு காட்டினாங்களா..??

உந்த கோமாளிகள் நேற்று ஒரு கூத்தை அடிச்சுதுகள்... 300 காயப்பட்ட தமிழரை வெளியாலை வவுனியாவுக்கு அனுப்பாமல் புலிகள் மனித உரிமையை மீறுகினம் எண்டு கூத்தை போட்டு அங்கை தமிழர் தங்களாலை காயப்ப்படுகினம் எண்டதை போட்டு உடைச்சாங்கள்... பின்னேரமா மண்டையிலை உறைச்சு நோயுற்ற தமிழரை எண்டு மாத்தி விட்டு இருக்கினம்...

எங்கட ஊடகங்கள் தமிழரை படுகொலை செய்வதை இலங்கை படைகள் ஒத்து கொண்டது எண்ட செய்தியை போட்டு பரபரப்பாக்குவினம் எண்டு நினைச்சன் நடக்க இல்லை எண்டது இன்னும் ஒரு கோமாளித்தனமா போச்சுது...

அவர்களின் பிரச்சாரத்திலை புலிகளை பலவீனமாக்க எண்டு சொல்லி கொண்டு அவர்களை பலப்படுத்தும் வண்ணம் பல ஓட்டை இருக்கு ... எங்கட பிரச்சாரம் ஒருங்கிணைப்பு இல்லாது பலவீனமாக இருக்கு எண்டதை சொல்லி எனது உரையை முடிக்கிறேன்...

நண்றி..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மாவா சொன்னாங்கள். மோட்டுச்சிங்களம் என்டு...

சும்மாவா சொன்னாங்கள். மோட்டுச்சிங்களம் என்டு...

:(

பிரித்தானியாவின் காடியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கு... ( மக்களின் அவலத்தை முக்கிய படுத்தி வந்த செய்தி அது)

அதோடு ஒரு படம் அதன் கீழ் ஒரு குறும் தகவல்...

Sri-Lankan-troops-inspect-001.jpg

Sri Lankan troops inspect the submarine-type craft developed by the Tamil Tiger rebels, in the north-eastern village of Udayarkattu Photograph: Ministry of defence/AFP/Getty Images.

புலிகளுக்கான பிரச்சாரத்தை எங்கட இலங்கை அரசாங்கம்தான் செய்யுது...

http://www.guardian.co.uk/world/2009/jan/2...lian-casualties

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் கைவிடப்பட்ட இயங்கு நிலையிலிருந்த 152 மி.மீ நெடுந்தூர எறிகணைச் செலுத்தி ஒன்றையும் தாம் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்திருக்கிறது. இச்செய்திக்கு கருத்து எழுதியுள்ள சிங்கள வாசகர்கள், இன்னும் பல இருக்கும், தேடிப்பாருங்கள் என்றும், நாளைக்கே போர் முடிந்தவுடன் இந்த எறிகணைகள், போர் விமானங்களை என்ன செய்யலாம்? இந்தியாவுக்குக் கொடுத்து அங்குள்ள தீவிரவாதத்தை ஒழிக்கச் செய்யலாம் என்று கூட அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
சும்மாவா சொன்னாங்கள். மோட்டுச்சிங்களம் என்டு...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்ப இதை நிறுத்தப்போறீங்கள்

எப்ப நிதானமாக யோசிசு;சு

ஒரு சமநிலையில நானும் மனிதன் அவனும் அதேயாதிதான் என்று யதார்த்தமா சிந்திக்க போறீர்கள்

மோடு மோடு என்று சொல்லி அவன் இப்ப எங்க நிற்கிறான்

புத்திசாலி அறிவாளி என்று நாம தீக்குளிக்கிற அளவில நிற்கிறம்

எப்ப எப்ப உண்மையை ஆராயப்போறம்

எப்ப உண்மையை ஒத்துக்கொண்டு யதார்த்தத்துக்கு வரப்போறம்

இல்ல இப்பவும் தலைவர் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுவார் என்றுபோட்டு........................

வாயால போட்டு விழாசுங்கோ

அவன் உண்மையா வேறே எதெல்லாமோ பாவிக்கிறானாம்

நீங்கள் வாய் ஆதரவைமட்டும் தலைவருக்கு தொடர்ந்து கொடுங்கோ..........

அவரும் அதையே திருப்பி உலகத்தை நோக்கி வீசட்டும்

எல்லாம் சுபமே முடியும்

அதையும் உங்க வாயாலேயே சுபம் போட மறந்திடாதீங்கோ.............?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்ப இதை நிறுத்தப்போறீங்கள்

எப்ப நிதானமாக யோசிசு;சு

ஒரு சமநிலையில நானும் மனிதன் அவனும் அதேயாதிதான் என்று யதார்த்தமா சிந்திக்க போறீர்கள்

மோடு மோடு என்று சொல்லி அவன் இப்ப எங்க நிற்கிறான்

புத்திசாலி அறிவாளி என்று நாம தீக்குளிக்கிற அளவில நிற்கிறம்

எப்ப எப்ப உண்மையை ஆராயப்போறம்

எப்ப உண்மையை ஒத்துக்கொண்டு யதார்த்தத்துக்கு வரப்போறம்

இல்ல இப்பவும் தலைவர் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுவார் என்றுபோட்டு........................

வாயால போட்டு விழாசுங்கோ

அவன் உண்மையா வேறே எதெல்லாமோ பாவிக்கிறானாம்

நீங்கள் வாய் ஆதரவைமட்டும் தலைவருக்கு தொடர்ந்து கொடுங்கோ..........

அவரும் அதையே திருப்பி உலகத்தை நோக்கி வீசட்டும்

எல்லாம் சுபமே முடியும்

அதையும் உங்க வாயாலேயே சுபம் போட மறந்திடாதீங்கோ.............?????

உண்மை நிலையை எல்லாரும் புரிந்து கொள்ள வேணும் தலைவரால தனித்து ஒன்றும் செய்ய முடியாது..!!!! நாங்கள் எல்லோரும் அவருடன் சேரவேண்ணும்

எங்களால் அங்கு போய் போராட முடியாது... இங்கு இருந்து அண்ணேக்கு இப்ப உடனடியாக வேண்டிய மிகப்பெரும் பலத்தைக் கொடுக்க முடியும்.....

அது பொருளாதாரம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கமுடியாது கை விட்டதாக இருக்கும், இப்படித்தான் எங்கட ஊர் பக்கம் ஒரு கெலிகாப்டரும் கனகாலமாய் கிடந்தது, எல்லாம் ஆய்வுக்காக செய்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்லறி.. புதைக்கப்பட்ட நிலையில் எடுத்தது என்று சொல்கிறார்கள்.. ஒரு தரப்பு. அதே தரப்பில் இன்னொன்று..சொல்லுது.. இயங்கு நிலையில் எடுத்து என்று.

ஒருவேளை கல்மடுவில் இராணுவம் கைவிட்டதோ தெரியவில்லை. 58 படையணி தேடிச் சென்ற ராங்கியைத்தான் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுவும் மிக் 27லால அடிச்சு ஓட ஏலாமல் செய்தது.. அதை இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல..!

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிடம் சுருங்கி விட்டது.. என்னத்தை எடுக்கிறீங்கள் என்று சிங்கள மக்கள் கேட்டால் எதைக் காட்டுறது.

நீர்மூழ்கிக் கப்பல்கள் சில செய்யப்படும்.. வெல்டிங் இடம் கைப்பெற்றப்பட்டிருக்கிறது.....!

எனிக் கொஞ்ச நாளைக்கு.. இப்படித்தான் செய்திகள் வரும்.

வாகரை பிடிக்கேக்கையும் வந்துது. பின். தொப்பிக்கல பிடிக்கேக்கையும் வந்துது. இப்ப வன்னி பிடிக்கேக்கையும் வருகுது..!

ஏதோ எல்லாம் மக்களின் பணம் தான்..! :(

Edited by nedukkalapoovan

newsltte_subs.jpg

இழுத்துச் செல்ல முடியாவிட்டால் அழித்துச் சென்றிருப்பார்களே!!!

இது எந்த இராணூவ முகாமில் எடுக்கப்பட்ட படங்கள்??? :D

இழுத்துச் செல்ல முடியாவிட்டால் அழித்துச் சென்றிருப்பார்களே!!!

இது எந்த இராணூவ முகாமில் எடுக்கப்பட்ட படங்கள்??? :D

உந்த இரும்பை தகர்க்க எதுக்கு சக்கையை வீணாக்குவான் எண்டுதான்... :D

ஜப்பான் காறன் செய்யாத கொடூரங்கள் இல்லை... ஆனால் அவர்களை இண்டைக்கு உயத்தி வச்சு இருக்கிறது அவர்களிம் புதியவைகளின் தேடுதல்களும் கண்டு பிடிப்புக்களும் தான்... வெள்ளைக்காறர் ஜப்பான் காறரை நண்பர்களாக்கியதும் அதனால்தான்...!

புலிகள் களவாக கடத்தி வந்த நீர் மூழ்கி எண்டு சொல்லி இருந்து இருக்கலாம் இல்லை புலிகளினால் தயாரிக்கப்பட்டு வெற்றி பெறாத நீர் மூழ்கி எண்டாவது சொல்லி இருக்கலாம்... தங்களை வீரர்களாக காட்ட புலிகளினால் தயாரிக்க பட்ட நீர் மூழ்கி எண்டு புலிகளுக்கு விளம்பரம் ஓட்டுகிறார்கள்...

இண்டைக்கு புலிகளால் தயாரிக்க பட்ட நீர் மூழ்கியாம் எண்டு இந்த படங்களை ஆச்சரியத்தோடை போட்டிருக்கிறது அனேக இங்கிலாந்து ஊடகங்கள்...

Edited by தயா

சுறா வடிவத்தில் அசத்தலாய் இருக்கு... இது உண்மையிலேயே புலிகள் செய்ததா??? :o:o:o:o

;இனி கடலுக்குள்ள உயிருள்ள சுறாக்களை பாத்தாலும் ஓடப்போகினம் :D:D

Edited by vasisutha

சுறா வடிவத்தில் அசத்தலாய் இருக்கு... இது உண்மையிலேயே புலிகள் செய்ததா??? :o:o:o:o

;இனி கடலுக்குள்ள உயிருள்ள சுறாக்களை பாத்தாலும் ஓடப்போகினம் :D:D

கிட்டத்தட்ட உங்களை போலத்தான் BBC காறர் ஆச்சரிய படுகினம்...

_45426516_submarine_1-1.jpg

The submarine is the latest example of the rebels' technical skills

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7859063.stm

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரித் தான் பருத்தித்துறையிலும், முனைக் கடற்கரையில் நான் இருவர் செலுத்தகூடியது ஒரு நீர் மூள்கிக் கப்பலைப் பார்த்திருக்கிறேன். 1995 ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். பச்சையும் கறுப்பும் கலந்த ஒரு நிறத்திலே வர்ணம் தீட்டியிருந்தார்கள். ஏதாவது ஒரு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் ஏனென்றால் பார்த்தால் உள்ளூரிலே செய்தமாதிரி தெரியவில்லை. ஆனால் அது வேலை செய்யவில்ல என நினைக்கிறேன் ஏனென்றால் இராணுவம் யாழைப் பிடித்தபோது அதைக் குண்டு வைத்துத் தகர்த்துவிட்டுத்தான் போனார்கள். அதன் ஒரு கரைச் செட்டை அருகிலிருந்த ஒரு வீட்டிலே வந்து விழுந்து நானும் போய்ப் பார்த்தனான். இதுகள அழிக்கும் போது கவனமாகச் செய்யாவிட்டால் பொதுமக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் அத்துடன் புலிகளுக்கு இதனைத் தகர்க்க போதிய நேரம் இல்லாது இருந்திருக்கலாம். :D

Edited by Thumpalayan

கிட்டத்தட்ட உங்களை போலத்தான் BBC காறர் ஆச்சரிய படுகினம்...

The submarine is the latest example of the rebels' technical skills

சாம்பிளுக்கே ஆச்சரியப்பட்டால், மற்றதுகளைப் பார்க்கும்போது என்ன செய்வார்கள்???? :D:D

சுறா வடிவத்தில் அசத்தலாய் இருக்கு... இது உண்மையிலேயே புலிகள் செய்ததா??? :o:o:o:o

;இனி கடலுக்குள்ள உயிருள்ள சுறாக்களை பாத்தாலும் ஓடப்போகினம் :rolleyes::lol:

கிட்டத்தட்ட உங்களை போலத்தான் BBC காறர் ஆச்சரிய படுகினம்...

_45426516_submarine_1-1.jpg

The submarine is the latest example of the rebels' technical skills

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7859063.stm

புலிகளிடம் உள்ள விமானங்களும் அவர்கள்தான் செய்திருப்பினமோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.