Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்தால் தேங்காய் கொடுத்து வரவேற்பு - ராஜபக்சே!!

Featured Replies

கொழும்பு: கருணா கோஷ்டியினர் சரணடைந்தபோது எப்படி அவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்றோமோ அதேபோல விடுதலைப் புலிகள் சரணடைந்தாலும் ராஜ மரியாதை அளித்து வரவேற்போம் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.

மத்திய மாகாண கவுன்சில் தேர்தலையொட்டி ரிக்கிலகஸ்தா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், நாம் சண்டையில் வெற்றி பெறுவோம். நாட்டைக் காப்போம்.

வடக்கை முழுமையாக மீட்போம். அங்கு அனைத்து சமுதாயத்தினரும் அமைதியுடனும், இணக்கத்துடனும் வாழ வழி செய்வோம். அதுதான் எனது முதல் கடமை.

விடுதலைப் புலிகள் சரணடைய முன்வர வேண்டும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இப்போது இல்லை.

அவர்கள் சரணடைய முன்வந்தால் மனிதாபிமான முறையில் அவர்கள் நடத்தப்படுவார்கள். முன்பு அவர்களுடைய சகாக்கள் (கருணா கோஷ்டி) சரணடைந்தபோது அவர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். படையினர் அவர்களுக்கு தேங்காய்களைக் கொடுத்து வரவேற்றனர்.

அதேபோன்ற வரவேற்பை விடுதலைப் புலிகளுக்கும் வழங்க அரசும், படையும் தயாராக உள்ளது.

வன்னியில் உள்ள குழந்தைகள், பாட நூல்களுக்குப் பதில் சயனைடு குப்பிகளும், டி-56 துப்பாக்கிளையும் ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது எனக்குக் கவலை தருகிறது என்றார் ராஜபக்சே.

தினத் தந்தி

சிங்களவரை ஏமாற்றுகிறார்.

slcrocodiletearsyf5.gif

வன்னியில் உள்ள குழந்தைகள், பாட நூல்களுக்குப் பதில் சயனைடு குப்பிகளும், டி-56 துப்பாக்கிளையும் ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது எனக்குக் கவலை தருகிறது என்றார் ராஜபக்சே.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேங்காயாலே..................தலையில போடனும் ரா.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறு மகனே பொறு காலம் பதில் சொல்லும் உன் மனதை திடப்படுத்திக்கொள் பலவற்றை நீ தாங்கிக்கொள்ளவேண்டும் நி செய்யும் ஒவ்வொரு அட்டுழியத்துக்கும் பதில் சொல்லவேண்டும் இப்போது உன்னுடைய நேரம் துள்ளு துள்ளிக்கொண்டே இரு

Edited by வில்லன்

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறு மகனே பொறு காலம் பதில் சொல்லும் உன் மனதை திடப்படுத்திக்கொள் பலவற்றை நீ தாங்கிக்கொள்ளவேண்டும் நி செய்யும் ஒவ்வொரு அட்டுழியத்துக்கும் பதில் சொல்லவேண்டும் இப்போது உன்னுடைய நேரம் துள்ளு துள்ளிக்கொண்டே இரு

காலத்தை நமதாக்கும் வலு எம்மிடமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மந்தி ராஜபச்சா தேங்காய் கொடுத்து வரவேற்றால் கட்டாயம் சில புலிகளாவது சென்று சரணடைவார்கள்.

ஆனால் இந்த அழ+க்குதேங்காய் சொன்ன சொல்லின்படி நடக்குமா என்பதுதான் கேள்வி? அந்த தேங்காயாலேயே மந்தியின் மண்டையை பிளந்துவிட நல்ல சந்தர்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர், இவரால் மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அதே போல் இவரைத்தேர்வு செய்த சிங்களமும் தனது சவக்குழியைத்தானே தயார் செய்ய வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்தத் தேங்காயாலே..................தலையில போடனும் ரா.........

மகிந்த

ரணில விட நல்லம் என்று வாக்கு போட்டீங்க. இப்ப தேங்காயை.......... :rolleyes:

மகிந்த ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர், இவரால் மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அதே போல் இவரைத்தேர்வு செய்த சிங்களமும் தனது சவக்குழியைத்தானே தயார் செய்ய வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

மன்னிக்கவும் வசீ.......... நம்ம சைட்டில இருந்த கோளாறலதான் மகிந்த வந்தவர். நாமதான் மனநலம் பாதிக்கப்பட்டு நிக்கிறம்? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேற கருணாக்கு தேங்காயைக்கொடுத்து 'நீ ஒரு தேங்காமடையன்" என்பதைச்சொல்லாமல் சொல்லிக்காட்டினவர். :rolleyes:

இந்த ஒரு பிழையான முன்மாதிரியால் மற்ற எல்லோரையும் மடையன் என்று நினைச்சுப்போட்டார் மகிந்த! இவரைக்குறை சொல்லி என்ன?!! எல்லாம் மல்ரிப்ரலும்,செல்லும், பிரணப்பின் ஆட்பலமும், ஆயுதபலமும் இருக்கிற போதை ..அது தெளியும் காலம் விரைவில் வரவேணும். அதற்கு எங்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த

ரணில விட நல்லம் என்று வாக்கு போட்டீங்க. இப்ப தேங்காயை.......... :unsure:

மன்னிக்கவும் வசீ.......... நம்ம சைட்டில இருந்த கோளாறலதான் மகிந்த வந்தவர். நாமதான் மனநலம் பாதிக்கப்பட்டு நிக்கிறம்? :o

அப்ப ரணில் நல்லவரோ??? ரணிலுக்கு போட்டிருந்தால் நல்லா இருந்திருப்பமோ?? சிலது நீர் நல்லா இருந்திப்பீரோ என்னமோ.... :rolleyes:

தலைவன் எண்டு பெயரை வைச்சுக்கொண்டு வடிவேல் மாதிரி காமெடியா கதைக்கப்பீடாது :rolleyes:

பி.கு: நகைச்சுவை நடிகர் வடிவேலே உணர்ச்சி பூர்வமாக கததக்கிறார் அவருடன் ஒப்பிட்டதுக்கு மன்னிக்கவும்.

Edited by Danklas

அப்ப ரணில் நல்லவரோ??? ரணிலுக்கு போட்டிருந்தால் நல்லா இருந்திருப்பமோ?? சிலது நீர் நல்லா இருந்திப்பீரோ என்னமோ.... :huh:

தலைவன் எண்டு பெயரை வைச்சுக்கொண்டு வடிவேல் மாதிரி காமெடியா கதைக்கப்பீடாது :wub:

பி.கு: நகைச்சுவை நடிகர் வடிவேலே உணர்ச்சி பூர்வமாக கததக்கிறார் அவருடன் ஒப்பிட்டதுக்கு மன்னிக்கவும்.

வடிவேல் காமெடி நடிகர்தான்

அவருக்கு இருக்கும் தமிழ் பற்று

அடுத்த முதன்மை நடிகர்களுக்கு இல்லை.

நன்றி அவரோடு ஒப்பிட்டதற்கு

தமிழர் அவலங்களுக்கு உணர்வோடு மேடைகளில் அவர் காமடி பண்ணுபவர் அல்ல.

கொழும்பிலும் - யாழ்பாணத்திலும் விடுதலைப்புலிகளின் அலுவலங்கள் திறக்க ரணில் உதவினார்.

அப்போதும் அவர் ஜனாதிபதியல்ல.

சந்திரிகாதான் ஜனாதிபதி?

கிடைத்த சந்தர்ப்பத்தில்

நாம் நம்மை பலப்படுத்தாது

நமக்கு வேண்டாதவனை போட்டுத்தள்ளுவதிலேயே குறியாக இருந்தோம்?

கருணா பிரச்சனையின் போது கூட

விடுதலைப்புலிகளும் கருணாவும் மட்டக்களப்பில் மோதிக் கொண்ட போதும்

அவர் தரப்பு அங்கே நடப்பது சொந்தப் பிரச்சனை என்று

இராணுவத்தை அனுப்பவில்லை.

அதை கருணாவே அண்மையில் பகிரங்கமாக சொன்னார்

நான் புலிகளிடமிருந்து பிரிய ரணில் காரணமல்ல என்று.

கருணா பிரிய காரணம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்?

ஆயுதம் மட்டுமே பலம் என்று நினைத்ததால் வந்த சோகம் இப்போது எமக்கு.

ஆயுதத்தை விட இன்னும் பல உண்டு என்பதை

இன்று உலகமெல்லாம் நாம் நடத்தும் சாத்வீக போராட்டங்களும்

முன்னெடுப்புகளும் பறை சாற்றுகின்றன.

இன்னும் அறிவீனராக இருந்தால்

ஆண்டவானலும் எம் இனத்தை காக்க முடியாது.

நாம் அநாதைகளாகிவிடுவோம்.

உண்மைகள் கசக்கும். ஆனால் நஞ்சாகாது.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையல்ல

புலிகள் கொடுத்த அல்லது பிரேரித்த அல்லது ஏற்க தயாராக இருந்த அனைத்தையும் ரணில் சாதுரியமாக தட்டிவிட்டார் என்பதே உண்மை

ரணில் ஒரு நரி

அவர் யே.ஆரிடம் இருந்து வந்தவர் என்பது வரலாறு.

புலிகள் போட்டதிட்டங்கள் என்ன......

ஏற்கத்தயாராக இருந்தவை என்ன??

பிரேரித்தவை என்ன???

என்று திரும்பி ஒருமுறை பார்க்கவும்

அதில் புலிகளுக்கானவை ஏதாவது இருந்ததா?

தமிழ்மக்களுக்காக இருந்ததா???

எல்லோரும் வெளியே இருந்து ஆ ஊ என்று பறையடித்தநேரத்தில் இறங்கி வேலை செய்திருக்கலாம்

கிடைத்த சந்தர்ப்பத்தில்

நாம் நம்மை பலப்படுத்தாது

நமக்கு வேண்டாதவனை போட்டுத்தள்ளுவதிலேயே குறியாக இருந்தோம்?

இது வீணான குற்றச்சாட்டு

அப்போ தமிழரின் பக்கமிருந்தவர்களைப்போட்டபோ

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரச்சனையின் போது கூட

விடுதலைப்புலிகளும் கருணாவும் மட்டக்களப்பில் மோதிக் கொண்ட போதும்

அவர் தரப்பு அங்கே நடப்பது சொந்தப் பிரச்சனை என்று

இராணுவத்தை அனுப்பவில்லை.

அப்போ கருணா எப்படித்தப்பி சிங்களப்பகுதிக்குப்போனார்

தனது ராணுவ பலத்தாலோ???

இப்போதெல்லாம் உங்களமாதிரி ஆட்கள் சிங்களவன் சொல்வதைவிட சேர்த்து நாலுவார்த்தை மெருகூட்டி எழுத ஆரம்பித்து விட்டீர்கள்

இது தமிழன் அழிவின் விளிம்பிலிருக்கிறான் என்ற தங்களது கணிப்பின் பயன்பாடாகும்

ஆனால் நெருப்பிலிருந்து தமிழன் எழுவான்

அன்று அழிவது சிங்களவன் மட்டுமல்ல உங்களைப்போன்ற..............???தான்.

உண்மைகள் கசக்கும். ஆனால் நஞ்சாகாது.

பொய் அழகாக இருக்கும்

நிலைக்காது

கருணா பிரச்சனையின் போது கூட

விடுதலைப்புலிகளும் கருணாவும் மட்டக்களப்பில் மோதிக் கொண்ட போதும்

அவர் தரப்பு அங்கே நடப்பது சொந்தப் பிரச்சனை என்று

இராணுவத்தை அனுப்பவில்லை.

அப்போ கருணா எப்படித்தப்பி சிங்களப்பகுதிக்குப்போனார்

தனது ராணுவ பலத்தாலோ???

இப்போதெல்லாம் உங்களமாதிரி ஆட்கள் சிங்களவன் சொல்வதைவிட சேர்த்து நாலுவார்த்தை மெருகூட்டி எழுத ஆரம்பித்து விட்டீர்கள்

இது தமிழன் அழிவின் விளிம்பிலிருக்கிறான் என்ற தங்களது கணிப்பின் பயன்பாடாகும்

ஆனால் நெருப்பிலிருந்து தமிழன் எழுவான்

அன்று அழிவது சிங்களவன் மட்டுமல்ல உங்களைப்போன்ற..............???தான்.

உண்மைகள் கசக்கும். ஆனால் நஞ்சாகாது.

பொய் அழகாக இருக்கும்

நிலைக்காது

இதைத்தான் நாம் தொடர்ந்து செய்து வந்துள்ளோம்.

சிங்களவனை நீங்கள் அழிப்பதாக

தமிழனைத்தான் அழித்துக் கொண்டுள்ளீர்கள்.

நல்லது

தமிழனை தமிழனே அழித்த வரலாறை எழுதுங்கள்

தமிழனே தமிழனால் அழிந்த வரலாற்றையும் எழுத தயாராவே இருங்கள்

அவற்றை கல்லறைகளிலல்ல

உங்கள் எதிர்கால சமுதாயத்தின் இதயங்களில்..........

உங்கள் இதயங்களிலும் கூட

எதுவும் நிலையானதல்ல.

அது உலக வரலாறு .

உங்களைப் போன்றவர்களுக்கு

எதிரிகளை மட்டுமல்ல

நண்பர்களைக் கூட தெரியாது

காரணம் கொலை வெறி

எம்மை நம்பி வந்த அப்பாவிகள் அங்கே பலிக் கடாவாகி இருக்கிறார்கள்.

அவர்கள் பாவம்

உங்களைப் போன்றவர்களல்ல.

எம்மோடு இருந்த அனைவரையும் அழித்தோம்

எம்மை திருத்த கருத்துரைத்தோரையும் அழித்தோம்

எமக்கு பக்க பலமாக இருந்தோரையும் அழித்தோம்.

அது தொடர்ந்தால் நாமும் அழிவோம்.

நமக்கான சந்தர்ப்பங்கள் வந்த போதெல்லாம்

நாம் நமது இனத்தவரை ஒன்றிணைத்து

நம்மை பலப்படுத்திக் கொள்ள முனையவில்லை.

யாரெல்லாம் நமக்கு எதிராக இருந்தார்களோ

அல்லது கருத்துகளை முன்வைத்தார்களோ

அவர்களை கொன்றொழிக்கவே

அந்த சமயத்தை பயன்படுத்தினோம்?

இன்று அல்லல் படும் எமக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் என்று

கதறி அழுகிறோம்.

இருந்தாலும் அடிமனதில் உள்ள கொலை வெறி

இன்னும் நீங்கவில்லையா?

நாம் நமது உரிமைகளுக்காகத்தான் போராடுகிறோம்.

அடுத்தவனை அழிப்பதற்காக அல்ல.

துப்பாக்கிளால் மட்டுமே வெற்றி கிட்டும் என்றால்

அது பலமானவனுக்கே வெற்றியை தரும்.

இப்போதும் திருந்தாத ஜென்மங்கள்

இனி எப்போதும் திருந்தாது.

நன்றி ஐயா

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Thalaivan' date='Feb 3 2009, 09:07 AM' post='487597']

கருணா பிரச்சனையின் போது கூட

விடுதலைப்புலிகளும் கருணாவும் மட்டக்களப்பில் மோதிக் கொண்ட போதும்

அவர் தரப்பு அங்கே நடப்பது சொந்தப் பிரச்சனை என்று

இராணுவத்தை அனுப்பவில்லை.

ரணில் தனது படையை அனுப்பாதற்கு காரணம் தமிழன் தங்களுக்குள்ளேயே அடிபட்டு சாகட்டும் என்ற நல் எண்ணம் தான்.

அதை கருணாவே அண்மையில் பகிரங்கமாக சொன்னார்

நான் புலிகளிடமிருந்து பிரிய ரணில் காரணமல்ல என்று.

கருணா பிரிய காரணம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்?

ரணில் மட்டும் காரணம் இல்லை ஆனால் ரணிலும் ஒரு காரணம்.கருணா பிரிய பிரதேசவாதம் தான் காரணம் என்றால் அவர் தலைவருடன் பேசித் தீர்த்து இருக்க வேண்டும்.நேரே போகத் தான் பயம் என்றால் தொலைபேசியில் பேசி தீர்த்து இருக்கலாமே.அவரை வெளிநாட்டுக்கு பேச்சு வார்த்தைக்கு அனுப்பிய பின்னர் தான் அவருக்கு தெரிந்ததா புலிகள் பிரதேசவாதம் பார்த்தார்கள் என்று நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு

ரணில விட நல்லம் என்று வாக்கு போட்டீங்க. இப்ப தேங்காயை....

புலிகள் மகிந்தவை தெரிவு செய்ததன் காரணம் இனப் பிரச்சனைக்கு நல்லதோ,கெட்டதோ விரைவில் தீர்மானம் கிடைக்கும் என்ற காரணத்தால் தான்.மகிந்த வெளிப்படை எதையும் செய்ய கூடியவர் ரணிலை மாதிரி குள்ள நரி இல்லை.

Edited by rathy

புலிகள் மகிந்தவை தெரிவு செய்ததன் காரணம் இனப் பிரச்சனைக்கு நல்லதோ,கெட்டதோ விரைவில் தீர்மானம் கிடைக்கும் என்ற காரணத்தால் தான்.மகிந்த வெளிப்படை எதையும் செய்ய கூடியவர் ரணிலை மாதிரி குள்ள நரி இல்லை.

அப்ப இனி புலிகள் , மகிந்தவுடன்தான் பிரச்சனையை வெளிப்படையாக பேசி தீர்க்க வேண்டும்.

நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

இதோ மகிந்த சொல்பவை:

படையினரிடம் சரணடையாத விடுதலைப் புலிகளை அடிமைப்படுத்த நேரிடும் எனவும் அதைத் தடுக்க எவராலும் முடியாது எனவும் ஹங்குரன்கெத்தையில் வைத்து மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

T56 துப்பாக்கியை தோளில் தொங்கவிட்டுக் கொண்டு சையனைட் குப்பியை கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் வடக்கின் குழந்தைகளை திருத்தி சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு 3 குழந்தைகளின் தந்தையான தனக்கு உண்டு என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

- Monday, 02 February 2009 செய்தி

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் அவர்களே

நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுகின்றீர்கள்

எம்மீது போடப்பட்ட அழுத்தங்களையும் மறைமுக கொலைகளையும் எமக்குத்தெரியாத வலைப்பின்னல்களையும் ஏற்காது தங்களின் வாதங்களை அடுக்குகின்றீர்கள்

பேசிப்பயன் இல்லை

நிறுத்துகின்றேன்

நன்றி எனக்காக சில நிமிடங்களைத்தந்ததற்காக..........

எம்மோடு இருந்த அனைவரையும் அழித்தோம்

எம்மை திருத்த கருத்துரைத்தோரையும் அழித்தோம்

எமக்கு பக்க பலமாக இருந்தோரையும் அழித்தோம்.

அது தொடர்ந்தால் நாமும் அழிவோம்.

நமக்கான சந்தர்ப்பங்கள் வந்த போதெல்லாம்

நாம் நமது இனத்தவரை ஒன்றிணைத்து

நம்மை பலப்படுத்திக் கொள்ள முனையவில்லை.

யாரெல்லாம் நமக்கு எதிராக இருந்தார்களோ

அல்லது கருத்துகளை முன்வைத்தார்களோ

அவர்களை கொன்றொழிக்கவே

அந்த சமயத்தை பயன்படுத்தினோம்?

இதில் அழிந்த ஒரு நல்லவரை சொல்லமுடியுமா???

Edited by விசுகு

தலைவன் அவர்களே

நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுகின்றீர்கள்

எம்மீது போடப்பட்ட அழுத்தங்களையும் மறைமுக கொலைகளையும் எமக்குத்தெரியாத வலைப்பின்னல்களையும் ஏற்காது தங்களின் வாதங்களை அடுக்குகின்றீர்கள்

பேசிப்பயன் இல்லை

நிறுத்துகின்றேன்

நன்றி எனக்காக சில நிமிடங்களைத்தந்ததற்காக..........

உங்களைப் போன்றவர்களுக்கு

எதிரிகளை மட்டுமல்ல

நண்பர்களைக் கூட தெரியாது

காரணம் கொலை வெறி

எம்மை நம்பி வந்த அப்பாவிகள் அங்கே பலிக் கடாவாகி இருக்கிறார்கள்.

அவர்கள் பாவம்

உங்களைப் போன்றவர்களல்ல.

எம்மோடு இருந்த அனைவரையும் அழித்தோம்

எம்மை திருத்த கருத்துரைத்தோரையும் அழித்தோம்

எமக்கு பக்க பலமாக இருந்தோரையும் அழித்தோம்.

அது தொடர்ந்தால் நாமும் அழிவோம்.

நமக்கான சந்தர்ப்பங்கள் வந்த போதெல்லாம்

நாம் நமது இனத்தவரை ஒன்றிணைத்து

நம்மை பலப்படுத்திக் கொள்ள முனையவில்லை.

யாரெல்லாம் நமக்கு எதிராக இருந்தார்களோ

அல்லது கருத்துகளை முன்வைத்தார்களோ

அவர்களை கொன்றொழிக்கவே

அந்த சமயத்தை பயன்படுத்தினோம்?

இதில் அழிந்த ஒரு நல்லவரை சொல்லமுடியுமா???

அநேகம்.

அதை விபரிக்க சரித்திரங்களை தேட வேண்டும்.

உங்களுக்கு வயதாகும் போது

அதை நீங்களே உணர்வீர்கள்?

சிலவேளை நீங்களே பேசுவீர்கள். :huh:

நீங்கள் கருத்தாளனாக பேசுங்கள்

என்னையும் கொலை செய்ய துணிகிறீர்களே?

அதை செய்யுங்கள்

சாவு ஒருநாள் நிச்சயம் :wub:

உங்கள் கரங்கள் என்னை நோக்கி மட்டுமல்ல

எம் இனத்தை நோக்கியும் திரும்பும் என்பது

அனைவருக்கும் தெரியும்

தமிழீழத்துக்காக போராட வந்தவர்களில்

பலர் இறந்தது சிங்கள அரசால் அல்ல

தமிழர்களால் என்பது மாற்ற முடியாத உண்மை.

நம்மை

நம் துப்பாக்கிகளே குறி பார்க்காத வரை

நமக்கு விடுதலை இல்லை.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் கொலை செய்ய துணிகிறீர்களே?

அதை செய்யுங்கள்

சாவு ஒருநாள் நிச்சயம்

இப்படி நான் எங்கும் குறிப்பிடவில்லை

இப்படி சனநாயகம் கதைக்கும் தாங்கள் பின் ஏன் இப்படி எழுதணும்

அப்புறம் எப்படி கொலை விளாதிருக்கும்

இப்போ நான் சொல்லணும் நீ கேட்கணும். அதுதான்யா விதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் கொலை செய்ய துணிகிறீர்களே?

அதை செய்யுங்கள்

சாவு ஒருநாள் நிச்சயம்

இப்படி நான் எங்கும் குறிப்பிடவில்லை

இப்படி சனநாயகம் கதைக்கும் தாங்கள் பின் ஏன் இப்படி எழுதணும்

அப்புறம் எப்படி கொலை விளாதிருக்கும்

இப்போ நான் சொல்லணும் நீ கேட்கணும். அதுதான்யா விதி

மாறி மாறி பதிலுக்குப்பதில் என்று எதுக்கு இப்ப உங்களுக்குள்ள மல்லுக்கட்டுறியள்? பிறகு மகிந்தவின்ற தேங்காயில சொதியும், சம்பலும் தான் அரைக்க வேணும்.

இப்ப நடக்க வேண்டிய நிகழ்வுகளில் கவனம் செலுத்துங்கள்.

இன்னொரு குழுமத்தில் ஒருவர் எழுதியிருந்தார் - நன்றி :டாக்டர் சங்கர் குமார்:

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!"

இங்கு வருகின்ற சிலரின் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பார்க்கும் போது, ஏதோ புலிகள் ஆயுதம் ஏந்தியதே இந்த இன அழிப்புக்குக் காரணம் என்கிற தவறான வகையில் அமைவது வேதனை அளிக்கிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!

தமிழின அழிப்பு தொடங்கி, தமிழர் நலன் ஒடுக்கப்பட்டபின்னரே சில பல எதிர்ப்பு இயக்கங்கள் இலங்கையில் தொடங்கப்பட்டன.

இவற்றுள் ஏற்பட்ட போட்டியின் விளைவாக, 'நீயா நானா?' என்கிற போராட்டம் வெடிக்க, அவரவர் பிழைக்கவே, ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்தது.

இது வருந்தத் தக்கதே எனினும், தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வு என்பது இதில் பயணித்தவர்க்கே புரியும்.

இதில் இறுதிவரை நின்ற இயக்கமே வி.பு.கள். எப்படி நின்றார்கள் என்பது குறித்து, பலவித கருத்துகள் இருக்கலாம். ஆனால், நின்றார்கள்.. இன்னமும் நிற்கிறார்கள் என்பதே நிஜம்!

இந்தியா தமக்கு உதவும் என மிகவும் நம்பிக்கையுடன் வரவேற்ற இந்திய அமைதிப் படையே ஒரு நிலையில், ஒரு கைக்கூலிப்படை போல செயல்பட்டு, தமிழினப் பெண்களையே மானபங்கப்படுத்திய கொடுமையும், தமிழரை அடித்து ஒழித்த அவலமும் நிகழ்ந்ததின் விளைவே இதன் 'மூலகாரணம்' மீது நடந்த தாக்குதல்.

இது ஒரு தடவை மட்டுமே நிகழ்ந்த தாக்குதலா, இல்லை, குடும்பத்தையே பூரணமாக அழிக்கப் போகும் புயலா எனப் புரியாது, நடந்த தவறுக்கு தீர்வு காணாது, நடத்தியவரை அழிக்க முற்பட்ட நிகழ்வே தற்போது ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் அடித்தொழிக்கும் ஒரு செயலாகப் பரிணமித்து, இலங்கை அரசோடு ஒத்துழைக்கும் அளவுக்குப் போக விட்டிருப்பதில், எல்லாருக்குமே பங்கு இருக்கிறது.

இன்று ஈழத்தமிழருக்கு ஒரு துணையாய் இருப்பது... ஆம்!... தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமே!

அவர்கள் மட்டும் இன்னமும் ஆயுதம் ஏந்தியிருப்பதால் மட்டுமே,.... ஒருவித அச்சத்துடன்,.... முழுதுமான தமிழர் ஒழிப்பு நிகழாமல் இருக்கிறது என்பதே நிதரிசனம், யதார்த்தம், நிஜம்!

இதை உணராமல், ஒரு சாராரை மட்டுமே இழித்தும், பழித்தும் ஏச்சுகளும், பேச்சுகளும் தொடர்ந்து நிகழ்த்துவதும், ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையச் சொல்வதும், நிலைமையைச் சீராக்காது, மேலும் அழிவுக்கே வழி வகுக்கும், என்பது புரியாமல், பேசுபவரை நினைத்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்கள்.... எதிர்பார்த்த ஒன்றேதான் என்றாலும்,.... மிக, மிகக் கேவலமாக இருக்கின்றன!

இந்தச் சூழ்நிலையில், சாதாரணப் பொதுமக்களாகிய நாம் செய்யக்கூடியது, நம் தமிழ் மக்களுக்கு... பாதிக்கப்பட்டு தினம் செத்துக்கொண்டிருக்கும்.... நம்மவர்க்கு நாம் அளிக்கும் ஆதரவும், ஆறுதல் சொற்களுமே!

நலம் நிறைந்தவர் நற்சொல் தாரீர்!

அதனில் குறைந்தவர் ஆதரவளிப்பீர்!

அதனும் இலாதார் அமைதி காப்பீர்!

நல்லதே நிச்சயம் நடக்கும்! முருகனருள் முன்னிற்கும்

என்னையும் கொலை செய்ய துணிகிறீர்களே?

அதை செய்யுங்கள்

சாவு ஒருநாள் நிச்சயம்

இப்படி நான் எங்கும் குறிப்பிடவில்லை

இப்படி சனநாயகம் கதைக்கும் தாங்கள் பின் ஏன் இப்படி எழுதணும்

அப்புறம் எப்படி கொலை விளாதிருக்கும்

இப்போ நான் சொல்லணும் நீ கேட்கணும். அதுதான்யா விதி

அன்று அழிவது சிங்களவன் மட்டுமல்ல உங்களைப்போன்ற..............???தான்.

இங்கே உங்களைப்போன்ற..............??? எதையோ விட்டுள்ளீர்கள் :huh:

பரவாயில்லை அதை புரிந்து கொள்கிறேன்.

இப்படி நான் எங்கும் குறிப்பிடவில்லை

இப்படி சனநாயகம் கதைக்கும் தாங்கள் பின் ஏன் இப்படி எழுதணும்

அப்புறம் எப்படி கொலை விளாதிருக்கும்

உள்ளத்தில் உள்ளவை வெளியே தெறிக்கும்

ஆனால் அதை வெளிப்படுத்துவோருக்கு புரிவதில்லை :wub:

வடிவங்கள் வேறாகலாம் . ஆனால் எண்ணம் அதுவே ஐயா.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான்..

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனோட. ஜே ஆர் - அத்துலத்முதலி கூட்டணி கொக்கரிச்சது.

1990 இல் யாழ் கோட்டையில் சிங்களப் படையை மீட்டிட்டு.. பிரேமதாச - ரஞ்சன் விஜயரட்ன கூட்டணி கொக்கரிச்சது.

1998 இல் 95% யுத்தத்தை முடிச்சிட்டு.. வீரக் கேடயம் வழங்கி.. சந்திரிக்கா - ரத்வத்தை கூட்டணி கொக்கரிச்சது.

2009 இல் 99% யுத்தத்தை முடிச்சிட்டு.. மகிந்த - கோத்தபாய கூட்டணி கொக்கரிக்குது.

இடையில

1987 இல பவான் இராணுவ நடவடிக்கையை முடிச்சிட்டு.. ராஜீவ் காந்தி - டிக்சிற் கூட்டணியும் இப்படித்தான் கொக்கரிச்சது.

புலி சரணடைஞ்சதோ.. சரணாகதி அடைய வைச்சதோ என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

எதுக்கும் பொறுத்திருந்து பாப்பமே...! :wub::huh:

---------------------

Operation Pawan - The Battle for Jaffna

Pawan23.jpg

பவான் இராணுவ நடவடிக்கையில் புலிகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரி 72 வகை ரஷ்சிய தாங்கியில் இந்திய ஜவான்கள்..!

http://www.bharat-rakshak.com/ARMY/History.../Chapter03.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.