Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை- தி.மு.க. செயற்குழுவில் கருணாநிதி

Featured Replies

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இலங்கையில் நடக்கும் அநீதியை ஒழித்துக்கட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும், ‘’இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை’’ என்று தெரிவித்துக்கொண்டார்

நன்றி நக்கீரன்

Edited by மோகன்

அப்ப என்னத்துக்கு உலக தமிழர் தலைவர் பட்டம் யாரையையா ஏமாத்துகிறீர்கள் தமிழகம் விழித்துவிட்டது உங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது

அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள்,பிரச்சாரங்

பிறகென்னத்துக்கு உந்தப் பதவி? 7 கோடி மக்களால் ஒரு அரசை பணியக்க வைக்க முடியலயே!!!!

அவர் மேலும், ‘’இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை’’ என்று தெரிவித்துக்கொண்டார்

தகவலுக்கு மிக்க நன்றி தமிழின தலைவரே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இலங்கையில் நடக்கும் அநீதியை ஒழித்துக்கட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும், ‘’இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை’’ என்று தெரிவித்துக்கொண்டார்

நன்றி நக்கீரன்

இலங்கை தமிழர்கள் உரிமைகளைப் பெற பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்த ஏற்பாடு: திமுக செயற்குழு தீர்மானம்

[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009, 06:58.37 AM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

நன்றி - தமிழ்வின்

தமிழ் மானத்தைவரித்தவாறு, உயிரீகத்தைப் புரிந்தவாறு தமிழகம் என்றோ பேரெழுச்சி கண்டு நிற்கிறது.அதனைக் கண்டு அஞ்சி, அதனை ஒடுக்கியவாறும், காவல்துறையை ஏவிவிட்டவாறும், அதனை நீர்த்துப் போகச்செய்யவே இதுபோன்ற செயல்களை செய்வது தி.மு.க வுக்கு வழமையாகிவிட்டது. உங்களின் தமிழின விரோத முகமூடிகிழிந்தது. ஒரே ஒரு கேள்வி, தமிழுக்காகப் பதவிகளைத் தியாகம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா? இல்லையென்றால் இனிமேல் தமிழினத் தலைவர் என்பதும் கேலிக்குரியதாகும் !

இதை சொல்ல ஒரு மீற்றிங்கா?..... வேஸ்டு பண்ணிபுடிங்கையா....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள்இ சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள்இ பேரணிகள்இ மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதிகாரம் இல்லை என்ற பின்பு..........

என்த்துக்கு இந்தக்கோரிக்கை

இவர்களது இந்த இழவுகள் தெரிந்ததால்தான் அவர்கள் இவர்களைக்கணக்கே எடுப்பதில்லை

பொன்சேகாவும் தூக்கியெறிந்து பேசும் துணிவு பெற்றுள்ளார்

இதற்குமேல் கலைஞரை நாம் நம்பினால்...........???

மக்களுக்கு விளங்குது

மத்திய அரசுக்கு சொல்லுங்க சாமி

இதற்குமேல் கலைஞரை நாம் நம்பினால்...........???
நாம் தான் உலகிலேயே முட்டாள்களாக இருப்போம்

களத்திலே உலவுகின்ற சில திமுக விசுவாசிகள் `களை'ஞர் அனுதாபிகளின் கருத்துக்கள் எவற்றையும் காணவில்லை.

கலைஞர் கருணாநிதி தமிழினத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரும் சேவை அல்லது உதவி என்னவென்றால்...... "ஈழத்தமிழர் பிரச்சனையில் எவ்விதத்திலும் தலையிடாமலும் வாய்திறவாமலும் இருப்பதுதான்" செய்யவேண்டியதைச் செய்ய தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் பலர் உள்ளார்கள். அவர்களை குழப்பாமல் அமைதியாக சிவனே என்று இருந்தாரென்றாலே போதும்.

தலையிட அவருக்கு விருப்பம் இல்லை... சோனியா காங்கிரசுக்கு வால் பிடிக்கிறதாய் முடிவேடுத்து வீட்டார்....

ஈழ மக்களை தனது அரசால் காக்க முடியாது எண்று கலைஞர் ஒதுங்கி கொண்டார் எண்டு தலைப்பை போடுங்கப்பா... பிறகு எதுக்கு ஒரு கௌரவமான தலைப்பு...??

  • கருத்துக்கள உறவுகள்

களத்திலே உலவுகின்ற சில திமுக விசுவாசிகள் `களை'ஞர் அனுதாபிகளின் கருத்துக்கள் எவற்றையும் காணவில்லை.

கலைஞர் கருணாநிதி தமிழினத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரும் சேவை அல்லது உதவி என்னவென்றால்...... "ஈழத்தமிழர் பிரச்சனையில் எவ்விதத்திலும் தலையிடாமலும் வாய்திறவாமலும் இருப்பதுதான்" செய்யவேண்டியதைச் செய்ய தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் பலர் உள்ளார்கள். அவர்களை குழப்பாமல் அமைதியாக சிவனே என்று இருந்தாரென்றாலே போதும்.

யாழ். களத்தில் மட்டுமல்ல

திமுகவிலும் எமக்கு உதவுகின்ற எம்மீது பாசம்கொண்ட கோடிக்கணக்கான நல்ல இதயங்கள் இருக்கின்றன

அவர்கள் கலைஞர் அவர்கட்கு அழுத்தங்களைக்கொடுக்கமுடியு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 2 விதமான விடயங்களை நான் பார்க்கின்றேன்

1-மாநில அரசுப்பொறுப்பிலிருந்து எதுவுமே செய்யமுடியாது என்பதை அறிவிக்கின்றார்

2-இந்தப்பதவியை விட்டுவிட்டாலும் ஈழத்தமிழருக்கு இன்னும் ஆபத்துத்தான்

எனவே நானே இருந்துவிட்டுப்போகின்றேன் என்பது.

ஆனால் கலைஞர் அவர்கள் இதில் பலப்பரீட்டை செய்ய துணியவில்லை

தன்னையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கின்றார்

இதற்காக அவர் வேதனைப்பட்டிருப்பார்

வேதனைப்படுவார் என்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை

தி.மு.க. செயற்குழுவில் கருணாநிதி

அட நாசமறுப்பு உந்தவிசயம் உங்கை ஒருத்தருக்கும் இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சு :huh:

இதில் 2 விதமான விடயங்களை நான் பார்க்கின்றேன்

1-மாநில அரசுப்பொறுப்பிலிருந்து எதுவுமே செய்யமுடியாது என்பதை அறிவிக்கின்றார்

2-இந்தப்பதவியை விட்டுவிட்டாலும் ஈழத்தமிழருக்கு இன்னும் ஆபத்துத்தான்

எனவே நானே இருந்துவிட்டுப்போகின்றேன் என்பது.

ஆனால் கலைஞர் அவர்கள் இதில் பலப்பரீட்டை செய்ய துணியவில்லை

தன்னையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கின்றார்

இதற்காக அவர் வேதனைப்பட்டிருப்பார்

வேதனைப்படுவார் என்று நினைக்கின்றேன்

கருணா ரொம்ப நல்லவர் எண்டுட்டாங்க....

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ரொம்ப நல்லவர் எண்டுட்டாங்க....

அப்படி எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை

அவரது முடிவுக்கு காரணம்தான் எழுதினேன்

அதேநேரம் அவரை நாம் இனி பின்தொடரமுடியாது

அவரை நம்பி எதுவும் நடக்கப்போவதில்லை

அப்படி எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை

அவரது முடிவுக்கு காரணம்தான் எழுதினேன்

அதேநேரம் அவரை நாம் இனி பின்தொடரமுடியாது

அவரை நம்பி எதுவும் நடக்கப்போவதில்லை

வேதனை படுவார் என்பது அதைத்தான் குறிக்கிறது...

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமோ தெரியாது.... ஈழப்பிரச்சினையில் பல இயக்கங்களை ஆதரித்தால் எங்களுக்கு பல போட்டி பிரிவுகள் உருவாகி பலம் பிரிந்து விடும் எண்று சொல்லித்தான் MGR அவர்கள் பலமான ஒரு அமைப்புக்கு மட்டும் உதவினார்...

ஆனால் கலைஞர் அப்படி செய்ய வில்லை பல அமைப்புகளை ஊக்குவித்து ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ளும் நிலைக்கு ( அதே காலத்தில் பலஸ்தீனத்தை உதாரணமாக தெரிந்தும்) தள்ள வேண்டும் எனும் RAW ன் நிலைப்பாட்டை பலப்படுத்தினார்....

கலைஞர் எப்போதும் RAW வின் கைப்பொம்மைதான்.... அதுக்காக எல்லாம் அவர் வருந்துவது இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நான் குறிப்பிட்ட 2 காரணங்களும் நியமானவை

ஆனால் அவை கலைஞரை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றோ அல்லது

அவரது நடவடிக்கை சரி என்கின்றேன் என்றோ

அல்லது கலைஞருக்கு வேறுவழயில்லை என்கின்றேன் என்றோ அர்த்தமல்ல

தமிழக முதல்வர் கலைஞருக்கு

1947ல் உங்கள் தலைவர் அண்ணா எழுதியது

"திராவிட இன உனர்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மக்களுக்கு ஆர்வம்ஏற்படாமல் போனதால் அல்ல. நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதை தவறு என்று எண்ணியதால். ஒரு இருபது ஆண்டுகள் மாயமான் வேட்டையில் மந்திரி பதவி அமைப்பதில், அதாவது சுய நல வேட்டைக்கு அதன் விளைவாக, சதியாலோசனைகளுக்குச் சொலவிடப்பட்டன. அந்த காலத்திலே மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவோர் அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம். மக்கள் இந்த காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டவட்டமாக தெரிந்துகொண்டு கட்சியை கண்டிக்கவே தொடங்கினர். மாளிகையிலே சதிச் செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று, ஒரு தலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு ஒருவொருகொருவர் அடித்துக்கொண்டு, கும்பலாக சாய்ந்தனர். அந்த அதிர்சியில் ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று, மடியவில்லை. அந்த உணர்ச்சிஎன்றுமே மடிந்தது இல்லை - அடிக்கடி மங்கி இருக்கிறது -ஏனெனில் அந்த உணர்ச்சி உள்ளத்தின் பேச்சு - அரசியல் வெட்டுக் கிளிகள் கூச்சல் அல்ல."

இதிலேயே சில வார்த்தைகளை மாற்றினால் தாங்களுக்கு எவ்வாறு பொருந்துகிறதுஎன்று பாருங்கள்

இன உனர்சிக்காக எடுத்துக் கொள்கின்ற முயற்சிகள் முறியடிக்கப்படுகிறது. மக்களுக்கு ஆர்வம்ஏற்படாமல் போனதால் அல்ல. நமது தலைவர்கள் தங்கள் சுய நல அரசியலை மட்டுமே கவனித்து இனத்தின் பிரச்சனையில் தலையிடுவதை தவறு என்று எண்ணியதால். தாங்களின் முயற்சிகள் அனைத்தும் மாயமான் வேட்டையில் மந்திரி பதவி அமைப்பதில், அதாவது சுய நல வேட்டைக்கு அதன் விளைவாக, சதியாலோசனைகளுக்குச் சொலவிடப்பட்டன. செலவிடப்படுகின்றன, அந்த காலத்திலும் இந்த காலத்திலும் உங்கள் மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவோர் அரங்கமேறினர்! இனவிரோதிகளுக்கு கொண்டாட்டம். மக்கள் இந்த காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டவட்டமாக தெரிந்துகொண்டு கட்சியை கண்டிக்கவே தொடங்கினர்(அதாவது வீரமரணம் அடைந்த முத்துக்குமார் போன்று). மாளிகையிலே சதிச் செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று, ஒரு தலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு ஒருவொருகொருவர் அடித்துக்கொண்டு, கும்பலாக சாய்ந்தனர். அந்த அதிர்சியில் ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி உங்களைப் போன்றோரால் மங்கிற்று, மடியவில்லை. அந்த உணர்ச்சிஎன்றுமே மடிந்தது இல்லை - அடிக்கடி மங்கி இருக்கிறது -ஏனெனில் அந்த உணர்ச்சி உள்ளத்தின் பேச்சு - அரசியல் வெட்டுக் கிளிகள் கூச்சல் அல்ல."

முதல்வர் அவர்களே தொடர்ந்தும் அண்ணாவின் கருத்துக்களை அப்படியே தருகிறேன்.

குற்றச்சாட்டுகள், பகட்டான பேச்சு, வாக்குறுதி பறந்தது, பதவி வேட்டை, லஞ்சத்திலே பங்கு, கள்ள மார்கெட் வரவு, அதிகார மோகம் என இதழ்கள் தூவியுள்ள குற்றச்சாட்டுகளை ஜனநாயக வளர்ச்சி உள்ள எவரும் தாங்கிக் கொள்ள முடியாது. பச்சையாக கண்டித்தும் சகித்தும் கொள்கின்றனர். ஆச்சரியம் அதிலே இல்லை. இவ்வளவு குற்றச்சாட்டுகளூக்கு உரியவர்களை கயவர்களை நாடு சகித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் ஆச்சரியம். ஆனால் அதற்கு காரணம்? பாசம்! பாசம் பொல்லாத நோய்;எளிதில் போவதில்லை-(திராவிட நாடு)

ஆம் கலைஞர் அவர்களே, தமிழர்கள் வைத்துள்ள பாசத்தால் தப்பித்து கொள்கிறீர், சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ், பரம்பரை காங்கிரஸ் என்றெல்லாம் கோலோச்சிய காங்கிரஸ் தமிழகத்திலிருந்து விரட்டப்பட்டது, அவர்களின் வேசம் வெளிப்பட்டதால்தான். தாங்களின் வேசமும் வெளிப்படுகிறது அவர்களின் நிலை உங்களுக்கு ஏற்படாதா?

சந்தக் கடையில் இருக்கவேண்டியவர்களை. சட்ட சபைக்கு அனுப்புவது கட்சியின் நன்மைக்குஎன்று கருதுவது, தாய்மார்களுக்கு தெரிந்த அளவு, தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்கு, கட்சி பற்று காரணமாக தெரியாமல் போய்விடுகிறது என்று அங்காலாய்தார் அண்ணா. தொடர்ந்தும் கட்சிகாரர்களை அவ்வாறே வைத்திருக்க முடியாது கலைஞர் அவர்களே.

அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்பிகிறோம் என்ற அண்ணா கூறுகிறார் கட்சியை விடக் கொள்கை முக்கியமே ஒழிய கட்சியல்லஎன்று கூறும் நெஞ்சுரம்ஏற்படவேண்டும்என்ற

அய்யா,

அறிஞர் அண்ணாவின் முத்தான வரிகளை இங்கு சிந்திநீகள்.... நன்றிகள்.

தமிழக முதல்வர் கலைஞருக்கு

இன்னும்எவ்வளவோ கேட்கலாம்....பதில் கிடைக்காது.........செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

அரசியல் விபச்சாரத்துக்கும் அரசியல் சாணக்கியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளாதவரையில்

மானத்தை விற்று மடியை நிறைத்துக் கொள்ளும் இந்த அரசியல் வேசித்தனம் தொடரவே செய்யும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற வெற்றிலைக்க்கொடிக்கு கலைஞர் அணைக்கும் மண் ஆகதான் இருப்பார் என்று நினைத்தேன் இன்று அதை சிதைக்கும் மழையாகிவிட்டாரே ? :huh:

ம்ம்... நாம ரியூப்லைற் தான் :wub:

பொன்சேக அப்ப சொன்னது இவரை பார்த்துதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இலங்கையில் நடக்கும் அநீதியை ஒழித்துக்கட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும், ‘’இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை’’ என்று தெரிவித்துக்கொண்டார்

நன்றி நக்கீரன்

1984ல் இருந்து 1990 வரையிலும் அந்த உரிமையை மத்திய அரசு தங்களுக்கு அழித்திருந்ததா? அப்போ தமிழகமக்களின் ஈழ ஆதiவை பயன்படுத்தி ஆட்சி ஏறிய தாங்கள். இப்போ சோனியாவின் முந்தானை தடவி ஆட்சி செய்கிறீன்கள் என்பதை. நீங்கள் உங்கள் வாயாலா சொல்லி நாங்கள் தெரிய வேண்டியதில்லையே? எந்த முந்தானையை நீங்கள் தடவினாலும் இன்னும் மூன்று மாதங்கள்தானே? அதற்குள் எல்லாம் முடிந்துவிடும் என்று றோ வந்து உங்கள் காதுக்குள் ஓதிட்டுபோயிருக்கும் அதைதான் நீங்கள் ஊதிறீங்கள்? ஊதுங்கோ ஊதுங்கோ ஆனாலும் வன்னி மக்களை தலமையின்றி தவிப்பவர் என்று எண்ணிவிடாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.