Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் முடியாது: ஆயுதங்களை கீழே வைப்பதே நன்று - சொல்கைம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனி விடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் சிறீலங்கா நிலவரம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் மற்றும் இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் மேற்படி கருத்தை சொல்கைம் முன் வைத்துள்ளார். இதே கருத்தையே இணையத்தலைமை நாடுகளும் நோர்வேயும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வெளியிட்டிருந்தன.

இதற்கிடையே நேற்றைய தினம் சிறீலங்காவில் போர் கட்டுப்பாடின்றி தொடர்வது கவலை அளிப்பதாகவும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு யுத்தத்தை நிறுத்தி பேச்சு மேசைக்கு வர வேண்டும் என்று அறிக்கை விட்ட இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் கருத்தை இன்னொரு அறிக்கையூடு இந்திய வெளிவிவகார மந்திரியும் சோனியா காந்தியின் கையாளுமான பிரணாப் முகர்ஜி நிராகரித்திருப்பதுடன் சிறீலங்கா முன்னெடுக்கும் போரை இந்தியா வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். யுத்தத்தை முன்னெடுத்துக்கும் அதேவேளை பொதுமக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் முகர்ஜி.

யுத்தத்தை முன்னெடுக்கும் போது.. பாதிப்பு வராமல் யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய.. வித்தை.. சோனியாவுக்கும்.. முகர்ஜிக்கும் தான் தெரிஞ்சிருக்குது..! என்னே கருசணை.. ஈழத்தமிழர்கள் மீது.

செய்தி ஆதாரம்:

Indian Home Minister, Foreign Minister differ on Colombo's war

[TamilNet, Friday, 06 February 2009, 02:17 GMT]

"We are not happy that the Sri Lankan government has resumed hostilities," said India's Home Minister P. Chidambaram, who said the LTTE must lay down arms and come to the negotiating table. However, within a few hours after his statement, Indian Foreign Minister Pranab Mukherjee approved the Sri Lankan military offensive by saying: "Along with military offensive, the Sri Lankan government should ensure that the lives of innocent civilians should be protected."

Meanwhile, Erik Solheim, the Norwegian minister of International Development, who is currently on a visit to India, met National Security Adviser M.K. Narayanan and UN secretary general Ban Ki-moon on Thursday and discussed the crisis in Sri Lanka with them. Talking to Norwegian journalists from India, Mr. Erik Solheim said that the LTTE "needed to understand that it cannot win militarily," and added that the Tigers now have to lay down their weapons and concentrate on fighting through political means.

He further said there was a jointly agreed statement by the Co-chairs on Tuesday (Norway, Japan, EU and USA) where they called on the Tigers to lay down their arms and negotiate with Colombo to end the fighting. India has also expressed the same view on Thursday, he said.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை முன்னெடுத்துக்கும் அதேவேளை பொதுமக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் முகர்ஜி.

இவர்கள் பேசிப்பேசியே ஆட்களை கொல்லும் வித்தை தெரிந்தவர்கள் .

புலம்பெயர் தமிழர்களை நம்பிக்கை இழக்கச்செய்து விடுதலை புலிகளிடம் இருந்து பிரிக்கும், சதித்திட்டத்தின் ஒருபகுதியாகவே

இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இணைத்தலைமை நாடுகளினதும், திரு.சொல்ஹெய்ம் போன்றவர்களினதும் இதுபோன்ற அறிக்கைளின் பின்னணி

இந்தியாவின் மறைமுக அழுத்தங்களும், யுத்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்னும் எச்சரிக்கையும் ஆகும்.

இது போன்ற அறிக்கைகளால் புலம்பெயர் தமிழர்களிடையே ஏற்பட்டிருக்கும்

எழுச்சியை சிதைத்து விடலாம் என்று மேற்குலகும் இந்தியாவும் நம்புகின்றன.

இவர்களின் சதிநடவடிக்கைகள் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டன என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

ஆகவே தான் இது போன்ற நடைமுறை சாத்தியமற்ற அறிக்கைகளை விடும் அளவுக்கு குழம்பி போய் இருக்கிறார்கள்!

Recent statments of disarming of liberation tigers can be taken as one regional power is in a desperate situation and

its time is running out due to forthcoming elections.

Edited by vettri-vel

ஆயுதங்களைக் கீழே வைத்தல், அதன் பிற்பாடு பேச்சு. ஆயுதங்களை வைத்திருந்து இராணுவ வலுச் சமநிலையில் நிலைமை இருந்தபோது யுத்தநிறுத்தம் தேவைப்பட்டது. இப்போது இராணுவ வலுச்சமநிலை கீழ்ப்பட்ட பொழுது ஆயுதங்களைக் கீழே வைத்தல். என்ன கோரிக்கையிது. தலையங்கத்தைப் பார்த்தால் விடுதலைப்புலிகளை போரிடும்படி கூறுவது போலுள்ளது.

சமாதானத்திற்கான நோபல் பரிசை மகிந்தாவுக்கு கொடுத்தலும் கொடுப்பீங்கள்,நாங்கள் அதை பார்த்து கை தட்ட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவீங்கள்.

மக்களுக்கு நம்பிக்கை எப்பயும் இருக்கும் புலிகளை பற்றி நன்கு அறிந்தவர்கள்...இவர்களின் அறிக்கைகள்மாறவேண்டுமானால் யுத்தகளத்தில் புலிகள் கைகள் ஓங்கிக்காட்டவேண்டும்

புலி பிஸ்டல் உடன் நின்றபொழுதும் உதைதான் சொன்னீன்கள்,பீரங்கியுடன் நிக்கும் பொழுதும் உதைதான் சொல்லுறியள்.

புதுசா அரசியல் தீர்வு பற்றி சொல்லுங்கோ

ஆயுத கதையை விடுங்கோ... ஆயுதங்களை கீழை வைக்க முன்னம் நீங்கள் முழு தமிழரையும் அழித்து முடித்து விட்டு இருக்க வேண்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி பிஸ்டல் உடன் நின்றபொழுதும் உதைதான் சொன்னீன்கள்,பீரங்கியுடன் நிக்கும் பொழுதும் உதைதான் சொல்லுறியள்.

புதுசா அரசியல் தீர்வு பற்றி சொல்லுங்கோ

சரியாச் சொன்னீங்கள்.

நான் சிறியவனாக இருக்கும் போது கூட வெற்றிமாலை.. அன்பு வழி என்று இரண்டு நிகழ்ச்சிகளோடு இந்திய தேசத்தில் இருந்து.. வானலைகள் வழி.. எமது தாயக மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க.. அவர் சரண்.. இவர் சரண்.. ஆயுதம் கண்டுபிடிப்பு.. சாம் கண்டுபிடிப்பு.. புலிகளின் விமானம் கண்டுபிடிப்பு.. புலிகள் ஆயுதங்களை வைச்சிட்டு சரணடைய வேண்டும்.. இப்படியே கத்திக் கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு அவை செய்திகளாகவே பட்டன. அவற்றின் பின்னால் இருந்த வலியை உணரும் பக்குவத்தில் இருக்கவில்லை. ஆனால் அன்றும் மக்கள் புலிகளிடம் பெரிதாக எதிர்பார்த்து இறுதியில்.. ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர் என்றே நினைக்கிறேன். ஆனாலும் இறுதியில் புலிப்படை வென்றது..!

சர்வதேசத்துக்கு இந்தளவுக்கு மறதி இருக்கும் என்று நான் நினைக்கல்ல. எமது மக்களை பலியிடுவதில்.. அடிமைப்படுத்தி ஆட்சி புரிவதில்.. தங்கள் நலனை அதில் காத்துக் கொள்வதில்.. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனரே தவிர.. கடந்த காலத்தை மீட்டிப்பார்த்து.. அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் நிலையில் சர்வதேசமும் இல்லை.. சிங்கள தேசமும் இல்லை.. தோற்று ஓடிய பாரத தேசமும் இல்லை..!

நிச்சயம் புலிகள் இச்சவால்களை வெல்வார்கள். அதற்கு மக்கள் எல்லோரும் துணை இருக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழும் வரை போராட வேண்டும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இந்த நாய் இரு பகுதியினரையும் சமமாக மதிக்கிறோம் என்று சொல்லி விட்டு நடுநிலை யாளராய் இருந்தவன் எப்படி சொல்லலாம் ?

ஒருதீர்வும் இல்லாமல் எப்படி ஆயுதத்தை கீழே போடச் சொல்லுது உருளைக்கிழங்கு நோர்வேஜியன்.

நோர்வேத்தமிழர் தங்களது கண்டனத்தை கள்ள கொம்னீஸ்ட் முகம் போட்ட ஏரிக்கு தெரிவிக்க வேண்டும்

இந்த கெய்ம் உண்மையான ஆளாக இருந்திருந்தால் ஐரோப்பியாவில் புலிகள், அரசு பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கும்போதே புலிகளை ஐரோப்பியா தடை செய்ய விட்டு இருக்கமாட்டார். அப்போதே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அப்பவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது... பாவி அமெரிக்கா இந்தியா இலங்கை எல்லாம் சேர்ந்து அடிமை நிலையை மாற்றி சுதந்திர இனமாக்க, பலமான போரட்ட நிலையில் இருந்த, தமிழனத்தை சதி செய்து 5வருட போர் ஒப்பந்தம் செய்தது இலங்கையரசை இராணுவ ரீதியில் பலப்படுத்தி முட்டுக்கொடுக்க தான் என்பது இப்போ விளங்க வைத்துள்ளான்..

அப்போதே இலங்கை பிரதிகளுடன் கூட்டு சதி செய்து கூடிக்குலாவும் போதே விளங்கியது..

உலகம் முழுவதும் சதி இப்போது அம்பலம்.. கறுத்த கண்ணாடி கருணா நிதி தொடக்கம் தமிழனத்தை (எரித்த) சுல்கெய்ம் வரை.. இயற்கையும் சதி...

இனி ஒருதருக்கும் கட்டுப்பட தேவையில்லை காலமும் அழிவும், பலவீவமாக்கலும் தான் மிச்சம்...

நாங்கள் எதற்கு புறப்பட்டோமோ அதனை விளைவுகளை எதிர்பார்க்காமல் செய்து முடித்து வெற்றிக்கொட்டி நாட்டுவதே அறிவு.. எதற்கும் பின்னால் நிற்க தேவையில்லை.. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பின் பலமாக இருப்பர்.. கருங்காளிகளைத்தவிர...

க்டைசி முழுப்பலாமும் தமிழர் தரப்பில் பாவித்து முடிவு காண்பது அறிவு.,

எப்படியும் அழிப்பான் முழு இனத்தையும்.. வெளி நாடுகளிலும் தமிழரில் கண்வைத்துள்ளான் என்பது அவன் உரைகளில் இருந்து தெரிகிறது..

இனியும் தயக்கமென்ன? புலம் பெயர் தமிழ் மக்கள் தொடக்கம் தமிழக மக்களும் பச்சைக்கொடி காட்டி விட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவர்கள்? ஆயுதங்களை கீழேபோட செல்ல?? என்ன உரிமை??? இவர்களா எமக்கு ஆயுதங்கள் தந்தார்கள்???? இவர்கள் விடுதலைபுலிகளை யார் என்று நினைத்தார்கள் அவர்கள் தமிழ்மக்களில் இருந்து வளர்ந்தவர்கள்!! வேற்றுகிரகவாசிகள் அல்ல!!! தமிழ்மக்களின் கவசங்கள்!!!! மக்களின் அவலங்களை தடுக்க வக்கில்லை வந்தீட்டாங்கள்! அறிக்கைவேறு...... கொஞ்சம் பொறுங்கள் தலைவனின் இராணுவ விய+கம் வெளிப்படும். அப்போது பிரம்மிப்பீர்கள்!!! அப்போது வாருங்கோ வன்னிநிலம் வரவேற்க்கும் அறிக்கை விட்டவை எல்லோரும் அல்லல்பட்ட மக்களின் கேள்விக்கு கட்டாயம் பதில்சொல்லியே தீரனும்!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் என்று போய் அதிகாரங்களை காட்டி.. பலஸ்தீன இயக்கங்களுக்குள் சீண்டு முடிந்து அவர்களை துண்டாடி பலவீனப்படுத்திய பெருமை.. நோர்வேயைச் சாரும்.

நோர்வே நேட்டோ அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதி. நேட்டோ எப்பவுமே தன்னை உலகின் இராணுவ அரசியல் அதிகார மையமாக வைத்துக் கொள்ள விரும்புகின்ற ஒரு அமெரிக்கக் கட்டமைப்பு.

ஜனநாயகத்தைக் காக்கிறம் என்ற போர்வையில்.. மக்களின் மாற்றுக் கருத்துக்களை.. போராட்ட வடிவங்களை இராணுவ முனைப்பால் அடக்குவதை நேட்டோவூடே இப்போ அமெரிக்கா முன்னெடுக்கிறது.

நோர்வே சமாதானத்தை விரும்பும் நாடாக தன்னைக் காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் சலுகைகளால் போராட்டங்களை பலவீனப்படுத்தி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவாகும் சவால்களை முறியடிப்பதன் சாந்தமான முகமே நோர்வே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாய் இரு பகுதியினரையும் சமமாக மதிக்கிறோம் என்று சொல்லி விட்டு நடுநிலை யாளராய் இருந்தவன் எப்படி சொல்லலாம் ?

ஒருதீர்வும் இல்லாமல் எப்படி ஆயுதத்தை கீழே போடச் சொல்லுது உருளைக்கிழங்கு நோர்வேஜியன்.

நோர்வேத்தமிழர் தங்களது கண்டனத்தை கள்ள கொம்னீஸ்ட் முகம் போட்ட ஏரிக்கு தெரிவிக்க வேண்டும்

யார் இவர்கள்? ஆயுதங்களை கீழேபோட செல்ல?? என்ன உரிமை??? இவர்களா எமக்கு ஆயுதங்கள் தந்தார்கள்???? இவர்கள் விடுதலைபுலிகளை யார் என்று நினைத்தார்கள் அவர்கள் தமிழ்மக்களில் இருந்து வளர்ந்தவர்கள்!! வேற்றுகிரகவாசிகள் அல்ல!!! தமிழ்மக்களின் கவசங்கள்!!!! மக்களின் அவலங்களை தடுக்க வக்கில்லை வந்தீட்டாங்கள்! அறிக்கைவேறு...... கொஞ்சம் பொறுங்கள் தலைவனின் இராணுவ விய+கம் வெளிப்படும். அப்போது பிரம்மிப்பீர்கள்!!! அப்போது வாருங்கோ வன்னிநிலம் வரவேற்க்கும் அறிக்கை விட்டவை எல்லோரும் அல்லல்பட்ட மக்களின் கேள்விக்கு கட்டாயம் பதில்சொல்லியே தீரனும்!!!!!!

இந்த கெய்ம் உண்மையான ஆளாக இருந்திருந்தால் ஐரோப்பியாவில் புலிகள், அரசு பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கும்போதே புலிகளை ஐரோப்பியா தடை செய்ய விட்டு இருக்கமாட்டார். அப்போதே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அப்பவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது... பாவி அமெரிக்கா இந்தியா இலங்கை எல்லாம் சேர்ந்து அடிமை நிலையை மாற்றி சுதந்திர இனமாக்க, பலமான போரட்ட நிலையில் இருந்த, தமிழனத்தை சதி செய்து 5வருட போர் ஒப்பந்தம் செய்தது இலங்கையரசை இராணுவ ரீதியில் பலப்படுத்தி முட்டுக்கொடுக்க தான் என்பது இப்போ விளங்க வைத்துள்ளான்..

அப்போதே இலங்கை பிரதிகளுடன் கூட்டு சதி செய்து கூடிக்குலாவும் போதே விளங்கியது..

உலகம் முழுவதும் சதி இப்போது அம்பலம்.. கறுத்த கண்ணாடி கருணா நிதி தொடக்கம் தமிழனத்தை (எரித்த) சுல்கெய்ம் வரை.. இயற்கையும் சதி...

இனி ஒருதருக்கும் கட்டுப்பட தேவையில்லை காலமும் அழிவும், பலவீவமாக்கலும் தான் மிச்சம்...

நாங்கள் எதற்கு புறப்பட்டோமோ அதனை விளைவுகளை எதிர்பார்க்காமல் செய்து முடித்து வெற்றிக்கொட்டி நாட்டுவதே அறிவு.. எதற்கும் பின்னால் நிற்க தேவையில்லை.. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பின் பலமாக இருப்பர்.. கருங்காளிகளைத்தவிர...

க்டைசி முழுப்பலாமும் தமிழர் தரப்பில் பாவித்து முடிவு காண்பது அறிவு.,

எப்படியும் அழிப்பான் முழு இனத்தையும்.. வெளி நாடுகளிலும் தமிழரில் கண்வைத்துள்ளான் என்பது அவன் உரைகளில் இருந்து தெரிகிறது..

இனியும் தயக்கமென்ன? புலம் பெயர் தமிழ் மக்கள் தொடக்கம் தமிழக மக்களும் பச்சைக்கொடி காட்டி விட்டார்கள்..

உண்மைதான்

மூதூருக்குள் புலிகள் புகுந்தபோது மட்டும்

அவை அவையள்ர இடத்திற்கு போங்கள் என்று சொன்ன சதிகாறனிவன்

ஆரம்பத்திலிருந்தே இவன்மீது தமிழ்மக்களுக்கு சந்தேகமிருந்தது

இப்போ போட்டு உடைத்துள்ளான்

நன்றி சொல்கெய்ம் உன்னுடைய வஞ்சகத்திற்கு.... இப்பவும் தெரியுது நீயெல்லாம் நடுநிலையாளனா என்று..... ஒருதலைப்பட்சமாக அவன் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும்போது தூங்குவதுபோல் நடித்தவர்கள்தானே நீங்களெல்லாம், இப்போது நடக்கும் அத்தனை அழிவுகளுக்கும் நீயும் உனது கூட்டணிகளுமே பொறுப்பு.... சனனாயக முகமூடியணிந்த ஓநாய்கள்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள்...(மகிந்தவுக்குக் கீழே)

புலிகளால் முடியாது

முடியாது என்று உலகம் கணக்கிடுகிறது!!!!!!???? இல்லை முடியும் என்று காட்டுவதுதான் .......... இன்றைய சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டிய செய்தியும்!! எதிர் பார்ப்பும் .......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவன் நல்லது செய்திருந்தால்

செய்வானாக இருந்தால்

தலைவர் படத்தோடு இவனின் படமும் எமது வீடுகளில் இருக்கும் என்று என் நண்பனொருவன் முன்பு குறிப்பிட்டிருந்தான்

நானும் அதை அப்போது ஆமோதித்திருந்தேன்

வெட்கப்படுகிறேன்

எனி விடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

:rolleyes:

ராசா ...வா அப்பு ...உனக்கு ....வன்னியில தோசையும் ....கோழிக்கறியும் .....பரிமாறக் காத்திருக்கிறம்.....பொறுமையாக ...நல்லெண்னத்துடன்...மனிதாபிமா

எங்கோ ஒரு இடத்தில் வாசித்தேன்... "இஸ்ரேல் அமெரிக்காவின்ரை கொடுரமுகம் நோர்வே அமெரிக்காவின் அன்பு முகம்" என்று. என்னவோ முகம் ஒன்றுதான். ஆயுதம் ஏன் எடுக்கவேண்டி வந்தது என்பதை இவர்கள் அறியமாட்டார்களா? எல்லாம் நடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தைப் பார்த்தால் விடுதலைப்புலிகளை போரிடும்படி கூறுவது போலுள்ளது.

இறைவனின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன்..! மனச்சாட்சியற்ற இந்த உலகில நியாயம் தர்மம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லாமல் சொல்கிறார். முடிந்தால் அடித்து விரட்டு. அப்போது காத்திருக்கிறது சிம்மாசனம் என்கிறார். நினைவில் வைத்திருங்கள். இதை இந்தியாவில் வைத்திச் சொல்லியிருக்கிறார். உள்ளுக்குள் நடப்பதை அவர் ஓரளவேனும் அறிந்திருப்பார் இல்லையா.?

. தலையங்கத்தைப் பார்த்தால் விடுதலைப்புலிகளை போரிடும்படி கூறுவது போலுள்ளது.

அதேதான்!!! இது பல முறை பல பேரூடாக அனுப்பப்பட்ட செய்தி!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா .........உங்களுக்கு தெரியாதா ? தலைவர் அகராதியில் "முடியாது "என்ற வார்த்தை இல்லை என்பது ,

தாமதமாகலாம் ஆனால் ........உங்களால் தான் முடியவில்லை . சிங்களத்தை பணியவைக்க, திசை மாற்ற ,சாதிக்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் நோர்வேயின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை.

இந்தியா விடுதலைப்புலிகள் என்ற தனக்கு அடங்காத சக்தி அந்நிய நாடுகளை நாடுவதை.. அந்த நாடுகளை தனது ஆதிக்கமுள்ள பிராந்தியத்துக்குள் இழுத்து வருவதை விரும்பாத நாடு. அதாவது தானும் படாது.. தள்ளியும் படாது..!

இருந்தும் விடுதலைப்புலிகள் இந்திய மத்தியஸ்தத்தை விரும்பாது நோர்வேயை நுழைத்துக் கொண்டதை இந்தியா கோபத்தோடே நோக்குகிறது. இன்று அதன் சாதுரியமான நகர்வுகளால்.. தான் நினைத்ததை சாதித்தது மட்டுமன்றி நாமே விரும்பி அழைத்த நோர்வேயை நாமே திட்டும் அளவுக்கு எம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது இந்தியா.

2001 இல் புலிகள் வெற்றி முகத்தில் இருந்த போது.. சிறீலங்கா படையினரை குடா நாட்டில் இருந்து மீட்க இந்தியா பரபரப்பாக இயங்கியது மட்டுமன்றி.. விடுதலைப்புலிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி.. போலியான உறுதிமொழிகளை அளித்து.. அவர்களின் முயற்சியைத் தடுத்தது.

அதில் இரண்டு விடயங்கள் நடந்தன. ஒன்று சந்திரிக்கா இந்தியாவை அணுகிக் கொண்டு.. அமெரிக்காவையும் அணுகிய படியால்.. இந்தியாவுக்கு விடுதலைப்புலிகளிடம் போய் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேவேளை இரண்டாவதாக சிறீலங்கா இராணுவத்துக்கு போர் ஓய்வும் நவீன ரக ஆயுதத் தேவையும் ஏற்பட்டிருந்ததால்.. உடனடியாக புலிகளுக்கு வளைவது போல வளைந்து கொடுத்து.. இராணுவத்திற்கு ஓர் போர் ஓய்வை வழங்கியது.

அதை அன்றைய சிறீலங்கா இராணுவத்தலைமைகள் பாவித்து.. மல்ரி பரல்கள் உட்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானிடம் பெற்றுக் கொண்டன. இந்தியா ஆனையிறவு வீழ்ச்சிக்கு தொடர்ச்சியான விமானத்தாக்குதல் செய்யாமையும்.. புலிகளை ஒன்று கூட அனுமதித்ததுமே காரணம் என்று விளக்கம் கொடுத்தது.

அதன் பின் இராணுவம் புலிகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்து அரியாலையில் நின்ற புலிகளை முகமாலை வரை துரத்திவிட்டது.

இன்று.. புலிகளை.. துரத்தோ துரத்து என்று துரத்தி.. ஒரு மூலைக்குள் கொண்டு வந்து விட்டிருக்கிறது. மீண்டும்.. இந்தியாவின் நட்பை.. தயவை நாடப் போயே புலிகள்.. இந்தச் சரிவை சந்தித்திருக்கின்றனர். இதேதான் 1987 இலும் நடந்தது. இது ஒருவகையில் புலிகளின் இராஜதந்திர காய் நகர்த்தலுக்கு ஏற்பட்ட தோல்வியே..!

இதில் இருந்து புலிகளையும் போராட்டத்தையும் காக்க வேண்டிய கடமை தமிழ் மக்களாகிய எமதே. அதற்கு நாம் பல வழி முயற்சிகளையும் செய்ய வேண்டும். சொல்கைமை திட்டுவதால் பயனில்லை. அவரை அந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.. இந்தியா.

இதில் சிறீலங்கா ஒட்டுண்ணி போல இருந்து பயனை அனுபவிக்கிறது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாச் சொன்னீங்கள்.

நான் சிறியவனாக இருக்கும் போது கூட வெற்றிமாலை.. அன்பு வழி என்று இரண்டு நிகழ்ச்சிகளோடு இந்திய தேசத்தில் இருந்து.. வானலைகள் வழி.. எமது தாயக மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க.. அவர் சரண்.. இவர் சரண்.. ஆயுதம் கண்டுபிடிப்பு.. சாம் கண்டுபிடிப்பு.. புலிகளின் விமானம் கண்டுபிடிப்பு.. புலிகள் ஆயுதங்களை வைச்சிட்டு சரணடைய வேண்டும்.. இப்படியே கத்திக் கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு அவை செய்திகளாகவே பட்டன. அவற்றின் பின்னால் இருந்த வலியை உணரும் பக்குவத்தில் இருக்கவில்லை. ஆனால் அன்றும் மக்கள் புலிகளிடம் பெரிதாக எதிர்பார்த்து இறுதியில்.. ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர் என்றே நினைக்கிறேன். ஆனாலும் இறுதியில் புலிப்படை வென்றது..!

சர்வதேசத்துக்கு இந்தளவுக்கு மறதி இருக்கும் என்று நான் நினைக்கல்ல. எமது மக்களை பலியிடுவதில்.. அடிமைப்படுத்தி ஆட்சி புரிவதில்.. தங்கள் நலனை அதில் காத்துக் கொள்வதில்.. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனரே தவிர.. கடந்த காலத்தை மீட்டிப்பார்த்து.. அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் நிலையில் சர்வதேசமும் இல்லை.. சிங்கள தேசமும் இல்லை.. தோற்று ஓடிய பாரத தேசமும் இல்லை..!

நிச்சயம் புலிகள் இச்சவால்களை வெல்வார்கள். அதற்கு மக்கள் எல்லோரும் துணை இருக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழும் வரை போராட வேண்டும்..! :rolleyes:

ரொம்ப சரி நெடுக்ஸ் இனி வரும் காலம் அதை மீண்டும் ஞாபகப்படுத்தும்

இந்தியாவை எதிர்த்து இந்த மேற்குலகம் ஒன்றுமே செய்யாது.

வெறுமனே கண்டன அறிக்கை மட்டும் தான். அது தன் சொல்கைம் கூட 10 வார்தை பேச மினகட்டு

இந்தியாவிற்கு போய் மொட்டை தலையனை சந்திச்சு இப்படி சொனவர்.

இன்னும் ஏன் தாமதம். இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு

எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.

இந்தியாவிற்கு நாம் யார் என்பதை காட்டுவோம்

வல்லரசான இந்தியாவை புல்லரசு ஆக்குவோம்.

தமிழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.