Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒரு காதல்

Featured Replies

பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம்

நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும்

நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது.

எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன்

பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான்.

நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல்

போனது.

பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை

பொழிந்து அவளை வளர்த்தனர்.படிப்பிலும் அவள் சுட்டி.

நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின .

பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு பல இடங்களில் இருந்தும்

வரன்கள் வரத் தொடங்கின.

சீதனம் எதுவும் இல்லாமல் அவளை மனைவியாக்க பலர் தயாரhய் இருந்தனர்.

அனால் எந்த வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராய் இல்லை என்பதுதான் அவளது துரதிஸ்ட்டம்.

கண்ணன் அவளோடு கூடப் படித்தவன் .படிப்பில் இவளை விடக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு நல்ல பண்புடையவனாக இருந்தான்.

பள்ளியில் நட்பாக தொடங்கிய அறிமுகம் நாளடைவில் காதலாக உருமாறியது .

இருவர் உள்ளங்களிலும் காதல் பரிமாறப்பட்டபோது காலம் அவர்களை தற்காலிகமாக பிரித்து வைத்தது.

நாட்டு நிலை காரணமாக கண்ணன் வெளிநாடு ஒன்றிற்கு அகதியாக குடி பெயர்ந்தான்.

கண்ணீரோடு இருவரும் விடை பெற்று கொண்டனர்.

''பைரவி நீ அழாதே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யார் தடுத்தாலும் நீதான் என் மனைவி ''

இதுதான் அவன் போகும்போது சொன்ன வரிகள்.

நேரில் சந்திக்காவிட்டாலும் கடிதமூலமும் தொலைபேசி மூலமும்

அவர்கள் காதல் தொடர்ந்து வளர்ந்தது.

முகங்கள் சந்திக்கவிட்டலும் நாளும் வார்த்தைகள் சந்தித்து கொண்டன.

மொழிகள் உறவாடிக் கொண்டன.

காலம் யாருக்காகவும் காத்திராமல் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

பைரவியும் இருபத்தாறு வயதை கடந்திருந்தாள். வீட்டினரின்

எதிர்ப்பையும் மீறி அவள் கண்ணனுக்காக காத்திருந்தாள்.

தாயின் கண்ணீராலும் தந்தையின் கண்டிப்பாலும் அண்ணனின்

பாசத்தாலும் கூட அவள் வைராக்கியத்தை மாற்ற முடியாமல்

.போனது

அன்றும் வழமைபோல் தொலைபேசி அழைப்பு வந்தது.பேசியவளிற்கு

ஒரே சந்தோசம்.

''பைரவி வPஷா கிடைத்து விட்டது வாற மாசம் வாறன் ''

அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கனவுலகத்திற்கு அழைத்து

சென்றது.ஒரு மாதமும் ஒரு வாரம் போல் கடந்து போனது.அவன் சொன்ன

நாளும் வந்தது.ஆனால் அவன் ......அவளை பார்க்க வரவேயில்லை.

பக்கத்தில் உள்ளவர்கள் அவன் வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள்.

. ''பாவம் அவரிற்கு வேலை போல எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு

ஒரு நல்ல முடிவோடு வருவார்.பிறகென்ன அடத்து எங்கட

திருமணம்தான;''

என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். நாட்கள் ஓடி சென்றன.

ஆனால் கண்ணன் மட்டும் வரவேயில்லை. கண்ணன் வீட்டிற்கு செல்ல பைரவிக்கும் அனுமதி கிடைக்கவில்லை.

அவளின் மனம் மட்டும் கண்ணனுக்காக ஏங்கிக் கொண்டே இருந்தது.

அவனை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஒவ்வொரு நாளும்

ஒரு யுகம் போல் கழிந்தது.

அன்று மாலை நான்கு மணி இருக்கும் படலை திறக்கும் ஓசை கேட்டு

ஓடி சென்றவளிற்கு ஒரே அதிர்ச்சி.

அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பைரவிக்கு கடவுளே நேரில் வந்த சந்தோசம்.

''வாங்கோ வங்கோ ''

என்று வரவேற்றாள் கண்ணனின் முகத்தில் எந்த சலனமோ சந்தோசமோ இல்லை .

அவன் வந்ததும் வராததுமாக ஒரு பத்திரிகையை அவளிடம் கொடுத்தான். அதை பிரித்து பர்ர்த்தவளிற்கு வானமே இடிந்து தலையில் விழுந்தது போன்ற வலி....

அப்படியே தரையிலிருந்துவிட்டாள்.

அது அவனது திருமண பத்திரிகை. அவள் தன் நிலைக்கு திரும்பு முன்னே அவன் தொடர்ந்தான்.

'' பைரவி இது எங்கட உறவுக்காரப் பெண்.அந்தஸ்தில் எங்களை விட உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். அம்மா நான் வர முதலே இதை நிச்சயம் செய்து விட்டார்கள்.

என்னால் பெற்றோரின் பேச்சை மீற முடியவில்லை. தப்பென்றால் என்னை மன்னித்து விடு.முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வந்துவிட்டுபோ"

என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

இதை கேட்டு துடித்தாள் பைரவி. அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. தன் கண்ணனா இப்படி பேசியது? நினைக்க நினைக்க அவள் மனம் துடித்தது.

யாரிற்காக தன் பெற்றோரை துடிக்க வைத்தாளோ இன்று அவன் அவனது

பெற்றோருக்காக தன்னையே தூக்கி எறிந்து விட்டானே என்று எண்ணும்போது இதயமே நின்றுவிடும் போல் இருந்து.

இரவு முழுக்க அழுதும் அவள் சோகம் மறைந்து விடவில்லை. மனம் இன்னும்

பாரமாகவே இருந்தது.

அவனால் என்னை மறக்க முடியும் என்றால் என்னாலும் அவனை மறந்து

வாழ முடியும் என மனம் சொன்னாலும் அதை செயற்படுத்துவது கடினமானதாகவே இருந்தது.

பலவாறு மனதை குழப்பி கொண்டிருந்தவளிற்கு அம்மாவின் அழைப்பு

சுய நினைவிற்கு அவளை இழுத்து வந்தது.

''பாவம் அம்மா யாரோ ஒருவனுக்காக என் அம்மாவை வேதனைப் பட

வைத்து விட்டேனே ''

என்று மனம் ஏங்கியது.

சரி என் விதி எப்படி நடந்து விட்டது. மறக்க முடியாததென்று இவ்வுலகில்

எதுவுமே இல்லை. காலம் எந்த காயத்தையும் மாற்ற கூடியது.

நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல சம்பவங்களும் எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற புதிய அனுபவங்களும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க செய்துவிடும்.

அப்போது நான் மீண்டும் ஒரு புதுப் பைரவியாக மாறி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் புதிய விடியலை எதிர்கொண்டு வரவேற்க தயாரானாள்......

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்தவன் கை விட்ட போதும் தன்னை திடப்படுத்தி மீள நினைக்கும்

பைரவிக்கு ஒரு சபாஷ் .......நல்ல கதை. காதலில் உறுதியிலாதவர்கள்

வாழும் போது ,அவளும் வாழ்ந்து காட்டத்தான் வேண்டும் .நன்றி பாராடுக்கள். .

  • கருத்துக்கள உறவுகள்

அவனால் என்னை மறக்க முடியும் என்றால் என்னாலும் அவனை மறந்து

வாழ முடியும்

இந்த நம்பிக்கையும் துணிவுதரும் முடிவும் தான் வாழ வைக்கும் வல்லமையுள்ளது. காதலுக்காகக் கடைசிவரை கண்ணீர் வடித்தாள் கசிச்துருகினாள் என்ற கதைசொல்லாமல் துணிந்தாள் என்பது உங்கள் கதைக்கு பலம்.

பாராட்டுக்கள்:

வழமைபோல காதல் போயின் சாதல் என்று முடிக்கப்போறீங்களோ என்று நினைத்தேன். கதையை முடித்தவிதம் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற நிலையில்.. கண்ணீரும்.. கம்பலையும்.. காதல் போயின் சாதலும்.. மலையேறிப் போயிட்டு. பார்த்தமா.. பேசினமா.. விசயத்தை முடிச்சமா.. கைவிட்டமா.. இன்னொன்றைப் பார்த்தமா என்றிருக்கனும்..! அப்பதான் உலகத்தில இந்த விசயத்தில ஏமாற்றங்களை தவிர்த்து பிரதான வாழ்க்கையை மன உறுத்தலின்றி வாழலாம். அது ஒரு காலம்.. லைலா.. மஞ்சுனு.. ரோமியோ.. யூலியட்.. என்பதெல்லாம்..! இப்ப அவை கதை. நிஜம்.. வேற..! :rolleyes:

நல்ல பலமான முடிவு. இதுதான் இன்றைய உலகில் அவசியம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையில பிடிச்சதே இதுதான் பார்த்தமா.. பேசினமா.. விசயத்தை முடிச்சமா.. கைவிட்டமா.. இன்னொன்றைப் பார்த்தமா என்றிருக்கனும்..!

  • தொடங்கியவர்

nillamathy Posted Today, 01:42 AM

காதலித்தவன் கை விட்ட போதும் தன்னை திடப்படுத்தி மீள நினைக்கும்

பைரவிக்கு ஒரு சபாஷ் ......

shanthy Posted Today, 02:48 AM

காதலுக்காகக் கடைசிவரை கண்ணீர் வடித்தாள் கசிச்துருகினாள் என்ற கதைசொல்லாமல் துணிந்தாள் என்பது உங்கள் கதைக்கு பலம்.

வசி_சுதா Posted Today, 04:31 AM

வழமைபோல காதல் போயின் சாதல் என்று முடிக்கப்போறீங்களோ என்று நினைத்தேன். கதையை முடித்தவிதம் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்...

shanthi , வசி சுதா ,nilaamathy

உங்கள் பாராட்டுக்கு

எனது நன்றிகள் ....

Edited by nige

  • தொடங்கியவர்

nedukkalapoovan, putthan

உங்கள் இருவரதும் பதிலுக்கு நன்றிகள்

nedukkalapoovan Posted Today, 04:54 AM

இப்ப எல்லாம் உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற நிலையில்.. கண்ணீரும்.. கம்பலையும்.. காதல் போயின் சாதலும்.. மலையேறிப் போயிட்டு. பார்த்தமா.. பேசினமா.. விசயத்தை முடிச்சமா.. கைவிட்டமா.. இன்னொன்றைப் பார்த்தமா என்றிருக்கனும்..! அப்பதான் உலகத்தில இந்த விசயத்தில ஏமாற்றங்களை தவிர்த்து பிரதான வாழ்க்கையை மன உறுத்தலின்றி வாழலாம். அது ஒரு காலம்.. லைலா.. மஞ்சுனு.. ரோமியோ.. யூலியட்.. என்பதெல்லாம்..! இப்ப அவை கதை. நிஜம்.. வேற..! laugh.gif

நல்ல பலமான முடிவு. இதுதான் இன்றைய உலகில் அவசியம்..! smile.gif

putthan Posted Today, 03:31 PM

இந்த கதையில பிடிச்சதே இதுதான் பார்த்தமா.. பேசினமா.. விசயத்தை முடிச்சமா.. கைவிட்டமா.. இன்னொன்றைப் பார்த்தமா என்றிருக்கனும்..!

பார்த்து பழகிவிட்டு பிரிந்து விடுவதல்ல காதல்

மனம் ஒத்த இருவரை திருமண பந்தத்தில் இணைப்பதே காதல்

மரணங்கள் மலிந்து விட்ட இப் பூமியில் காதல்தோல்வியாலும்

மரணங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு

முடிவை தேர்ந்து எடுத்தேன்

நீங்கள் குறிப்பிடுவது போல் பழகிவிட்டு பின் மாறிவிடுவது என்ற அர்த்தத்தில்

இந்த முடிவை எழுதவில்லை.காதல் தோல்வியால் பெண்கள் தம் வாழ்வை

இழந்தது போதும். இனியாவது புதுமையாக சிந்திக்கட்டுமே..........................

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்புக்கள் மாறி மாறி விழுகின்ற போது காதல் ஆண்களுக்கும் தோல்விதான் பெண்களுக்கும் தோல்விதானுங்கோ

எனது நண்பன் காதலித்தான் ஒரு பெண்ணை நண்பனுக்கு வேலை மலேசியாவில் கிடைக்க நண்பனும் செல்ல அந்த பெண்ணுக்கு தன் பெற்றோர்களால் திருமணம் முடித்து வைக்கப்பட்டது இதனால் எனது நண்பன் மனம் தளரவில்லை அவளுக்கு எதிராக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்க்காக உழைத்தான் இன்று ஒரு முதலாளியாக [எனது அனுபவமும்] :D:)

காதல் காரியத்தை முடித்து கப்சிப்பாக இருக்கின்றவனுக்கு காதல் இனிக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

வென்ற காதல்... கலியாணம்.. பிள்ளை குட்டி என்று அதன் புனிதம் இழந்து.. பத்தோட பதினொன்றாகப் போனதுதான் வரலாறு. ஆனால் தோற்ற காதல் தான் காவியங்களாக்கப்பட்டுள்ளன. தமிழில் மட்டுமல்ல.. பிற மொழி இலக்கியங்களிலும் கூட. தோற்ற காதலுக்கே ஆயுளும் அதிகம்.. சாதிக்கும் வெறியும் அதிகம்..!

காதல் தோல்விக்காக தம்மை வருத்துபவர்கள்... கோழைகளிலும் கோழைகள். வாழத்தெரியாதவர்கள்..!

காதல் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் போல. விளையாடி அவுட்டானா.. அல்லது திட்டமிட்டு அவுட்டாக்கப் போட்டாலோ.. நேர்மையா... கிரவுண்ட விட்டுப் போயிடனும். அப்பதான் மரியாதை..!

எவரும் நான் அடித்த பந்தை.. அடுத்தவர் அடிக்கக் கூடாது என்றிருக்கக் கூடாது. நாங்கள் விளையாடும் மட்டும் தான் அது எங்கள் பந்து. மற்றவர் கைக்கு அது போயிட்டா.. அது அவைட பந்து. அவையையும் விட்டு இன்னொருத்தரட்டப் போயிட்டா.. அது அடுத்தவர் பந்து. ஆக.. விளையாடிய பந்துக்காகவோ.. அவுட்டானதிற்காகவோ வருத்தப்பட்டால்.. பூமியில் வாழ முடியாது. சிலர்.. தவறான அம்பயரிங் செய்தும்.. அவுட்டாக்கப்படுறாங்க என்பது.. கிரிக்கெட்டில் சகஜம்..! விளையாடினமா.. மட்டையை விசிக்கினமா.. போனமா என்றிருக்கனும்..! அம்பயர்.. பந்து.. மட்டை, தோல்விக்காக எல்லாம் வருந்த முடியாது..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நல்ல முடிவு நிகே பாராட்டுக்கள்.

nedukkalapoovan Posted Today, 08:02 PM

வென்ற காதல்... கலியாணம்.. பிள்ளை குட்டி என்று அதன் புனிதம் இழந்து.. பத்தோட பதினொன்றாகப் போனதுதான் வரலாறு. ஆனால் தோற்ற காதல் தான் காவியங்களாக்கப்பட்டுள்ளன. தமிழில் மட்டுமல்ல.. பிற மொழி இலக்கியங்களிலும் கூட. தோற்ற காதலுக்கே ஆயுளும் அதிகம்.. சாதிக்கும் வெறியும் அதிகம்..!

காதல் தோல்விக்காக தம்மை வருத்துபவர்கள்... கோழைகளிலும் கோழைகள். வாழத்தெரியாதவர்கள்..!

காதல் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் போல. விளையாடி அவுட்டானா.. அல்லது திட்டமிட்டு அவுட்டாக்கப் போட்டாலோ.. நேர்மையா... கிரவுண்ட விட்டுப் போயிடனும். அப்பதான் மரியாதை..!

எவரும் நான் அடித்த பந்தை.. அடுத்தவர் அடிக்கக் கூடாது என்றிருக்கக் கூடாது. நாங்கள் விளையாடும் மட்டும் தான் அது எங்கள் பந்து. மற்றவர் கைக்கு அது போயிட்டா.. அது அவைட பந்து. அவையையும் விட்டு இன்னொருத்தரட்டப் போயிட்டா.. அது அடுத்தவர் பந்து. ஆக.. விளையாடிய பந்துக்காகவோ.. அவுட்டானதிற்காகவோ வருத்தப்பட்டால்.. பூமியில் வாழ முடியாது. சிலர்.. தவறான அம்பயரிங் செய்தும்.. அவுட்டாக்கப்படுறாங்க என்பது.. கிரிக்கெட்டில் சகஜம்..! விளையாடினமா.. மட்டையை விசிக்கினமா.. போனமா என்றிருக்கனும்..! அம்பயர்.. பந்து.. மட்டை, தோல்விக்காக எல்லாம் வருந்த முடியாது..!

நெடுக்ஸ் தோற்ற காதல் காவியமாகிறது.

வென்ற காதல் வரலாறாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நல்ல முடிவு நிகே பாராட்டுக்கள்.

நெடுக்ஸ் தோற்ற காதல் காவியமாகிறது.

வென்ற காதல் வரலாறாகிறது.

என்ன பெரிய வரலாறாகுது. அப்படின்னா ஆடு மாட்டுக்கும் வரலாறு இருக்கென்ற மாதிரியொல்லோ நாம் படிக்கனும். ஆனால் காதல் தோல்வி காவியங்களைப் படிச்ச அளவுக்கு... உப்படி மலிவான வரலாறுகளைப் படிக்கல்லையே..! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நிகே.

காதல் காதல் காதல்

காதல் போயின் சாதல் என முடிப்பீங்க என நினைத்தேன் நல்ல முடிவு.

  • தொடங்கியவர்

இப்ப என்ன சொல்ல வாறிங்க நெடுக்ஸ்....?

nedukkalapoovan	  Posted Today, 06:32 PM

	  வென்ற காதல்... கலியாணம்.. பிள்ளை குட்டி என்று அதன் புனிதம் இழந்து..
காதல் என்றால் தோல்வி முக்கியம் என்கிறீர்களா? அல்லது செத்தால் தாஜ்மஹால் கிடைக்கும் என்கிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை. முன்னுக்கு பின் முரணாக உள்ளது. காதல் கல்யாணத்தில் முடிந்தால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று புதுக்கதைவேறு சொல்லுகிறீர்கள். முடிவாய் என்னதான் சொல்ல வாறிங்க....?
ஆப்புக்கள் மாறி மாறி விழுகின்ற போது காதல் ஆண்களுக்கும் தோல்விதான் பெண்களுக்கும் தோல்விதானுங்கோ எனது நண்பன் காதலித்தான் ஒரு பெண்ணை நண்பனுக்கு வேலை மலேசியாவில் கிடைக்க நண்பனும் செல்ல அந்த பெண்ணுக்கு தன் பெற்றோர்களால் திருமணம் முடித்து வைக்கப்பட்டது இதனால் எனது நண்பன் மனம் தளரவில்லை அவளுக்கு எதிராக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்க்காக உழைத்தான் இன்று ஒரு முதலாளியாக [எனது அனுபவமும்] :D:) காதல் காரியத்தை முடித்து கப்சிப்பாக இருக்கின்றவனுக்கு காதல் இனிக்கும் :)
இது பதில் யதார்த்தமான வரிகள் நன்றி முனிவர் ஜீ
rathy	  Posted Today, 09:17 PM

வாழ்த்துகள் நிகே.

காதல் காதல் காதல்

காதல் போயின் சாதல் என முடிப்பீங்க என நினைத்தேன் நல்ல முடிவு.

நன்றி றதி புதுமையாய் இருந்தால்தானே திரில் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறிங்க நெடுக்ஸ்....?

nedukkalapoovan	  Posted Today, 06:32 PM

	  வென்ற காதல்... கலியாணம்.. பிள்ளை குட்டி என்று அதன் புனிதம் இழந்து..

காதல் என்றால் தோல்வி முக்கியம் என்கிறீர்களா? அல்லது செத்தால் தாஜ்மஹால் கிடைக்கும் என்கிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை. முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

காதல் கல்யாணத்தில் முடிந்தால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று புதுக்கதைவேறு சொல்லுகிறீர்கள்.

முடிவாய் என்னதான் சொல்ல வாறிங்க....?

காதல் தோல்வி என்பது இறப்பில் அல்ல. பிரிதலில் விலகலில் ஏமாற்றலில்.. என்று பல நிலைகளில் அமையலாம் அல்லவா. இறப்பில் காதல் தோல்வி என்பதை ஏற்க முடியாது. அது அழிவு. பேரழிவு..!

நான் சொல்ல வாறது என்னென்றால்.. வென்ற காதலை விட தோற்ற காதலே அதிகம் பேசப்பட்டிருக்குது. வென்ற காதல்.. பல.. காமத்தோடு கூடி.. பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு.. விவாகரத்திலும் முடிஞ்சிருக்குது..!! ஏன் தினம் அடிபாட்டோடும் கழிஞ்சிருக்குது..! அப்படி இருக்கேக்க.. அது எல்லாம் எப்படி வரலாறாகும். முதலில்.. காதலிக்கிறவங்க.. ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கணும். வெறும் சம்மதங்கள் புரிதல் அல்ல. சும்மா பின்னே இழுபட்டுப் போறதிலும் புரிதல் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்.. காதல் என்ன அவர்களிடையேயான உறவே பிரியாது..! அது காதலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. நல்ல நட்பாகக் கூட இருக்கலாம்..! :)

  • தொடங்கியவர்

nedukkalapoovan

தங்கள் கருத்து நியாயமானதே

நன்றி

  • தொடங்கியவர்

நன்றி

முல்லை சதா

முல்லைசதா Posted Feb 20 2009, 10:43 PM

நல்ல முடிவு பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.