Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென ஐரோப்பிய ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் சிறிலங்கா அரசால் கண்மூடித் தனமான இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கெதிரான மக்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழகத்திலும், தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஈழத் தமிழ மக்களுடைய போராட்டங்களுக்கான செய்திகளுக்கும், மற்றும் ஈழத்தில் நடைபெறும் யுத்தம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென வெளிநாடுகளிலுள்ள ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சிச் செய்தி ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் நடைபெறும் தாக்குதல்களையோ அன்றி வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களையோ, எந்தவிதமான தடையுமின்றி செய்தியாகத் தரும் வெளிநாட்டு ஊடகங்கள், அதன் காரணமாகவே தமிழ்மக்கள் குறித்த செய்திகளை முன்னிறுத்த முடியாதுள்ளதெனப் பெயர் குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு ஊடகமொன்றின் செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இது ஏன் என்பதனையோ அல்லது இந்த அறிவுறுத்தல் அல்லது மட்டுப்படுத்தலுக்கான கோரிக்கை யாரால் முன் வைக்கபட்டிருக்கின்றதென்பதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா ஆரியன் இந்தியா ஆரியன் இந்தியா ஆரியன் இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

இயன்றளவு பணத்தை உபயோகித்து நாங்கள் அந்த கடமையைச் செய்யலாம.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் என்று வெளிப்படையாகச் சொல்ல என்ன தயக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் எந்த அடிப்படையில் அத்தகைய ஊடகங்களில் அழுத்தம் கொடுக்கமுடியும்?

இங்கு இந்திய ஊடகங்களா அல்லது சர்வதேச ஊடகங்களா?,காசாவில் நடந்தவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக

ஈழ அவலங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதா? காரணம் தெளிவில்லை,செய்தியும் தெளிவில்லை

ஆனால் பிபிசியின் போக்கை ,யு என் ஓவின் போக்கை,இந்தியாவின் போக்கை பார்க்கயில் திட்டமிடப்பட்டே இந்த இருட்டடிப்பு

நடாத்தப்படுகிறது என்பது மட்டும் தெளிவு.

இந்தியாவோ,அமெரிக்காவோஎ ஏன் யுஎனோவோ இதன் பின்னணியில் இருக்க கூடும்

ஆனால் ஊடகங்களில் செய்திகளை இருட்டடிப்பு செய்யுமாறு அறிவுறுத்தலை வழங்கியதை நிரூபிப்பது இலேசான காரியமல்ல

இதென்ன ஸ்ரீலங்காவா ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க. கோத்தபாயவிடம் வெள்ளை வான் மடும் தான் உள்ளது, வெள்ளை பிளேனோ கப்பலோ இல்லை. ஈராக் விவகாரத்தில் bbc அரசை புரட்டி எடுத்த விதம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்பு ரீதியாக இருக்கக் கூடிய ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளர் மூலம் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட செய்தி இது எனவும், வெளிநாட்டு ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட மறுத்தாலும், வெளியுலகிற்கு உண்மைச் செய்திகளை கொண்டு வருவதையும் ஒரு போராட்டமாகவே செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே அதனைச் செய்தியாகத் தந்தோம் எனவும் மேற்படி செய்தியை வெளியிட்டவர்களுடன் தொடர்பு கொண்ட போது அறிய முடிந்தது. வெளிநாட்டு ஊடகங்களின் செயற்பாட்டை பார்க்கும் போது , இது ஒரளவுக்கு உண்மையென்றே எண்ணத் தோன்றுகின்றது. இந்தத் தடையையும் நாங்கள் தாண்ட வேண்டும்.

அநேகமான சர்வதேச ஊடகங்களினது தென்னாசியாவிற்கான நிருபர்களாகவும், செய்தி ஆசிரியர்களாகவும் இருப்பவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்களே. அவர்களிலும் அநேகர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேரளாவினைச் சேர்ந்தவர்களாகவோ தான் இருக்கின்றனர். நேரடியாக நிருபர்கள் சென்று தகவல் பெற முடியாது இலங்கை அரசால் தடுக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையில் இத்தகைய சர்வதேச ஊடகங்களுக்கு பொறுப்பான இந்தியர்களின் அரசியல் நிலைப் பாடின்படிதான் இலங்கைச் செய்திகள் வடிகட்டப் படுகின்றன.

இவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பான செய்திகளை மட்டும் அன்றி இந்தியாவில் ஒடுக்கப் பட்டிருக்கும் ஏனைய மக்கள் குழுவினரதோ அல்லது சாதிப் பிரிவினரதோ அவலங்களையும், போராட்டங்களையும் கூட ஒரு போதும் வெளியே கொண்டு வருவது இல்லை / அல்லது/ மிக குறைவு. உதாரணத்திற்கு, திரிவேணி சங்கம நிகழ்வுக்கும் அங்கு வந்த நிர்வாண சாமியார்களுக்கும் சர்வதேச ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவம், நந்தி கிராம தலித் மக்கள் மீதான கலவரத்திற்கு கொடுக்கப் படவில்லை. எங்கு இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனரோ அங்கெல்லாம் தமது குறுகிய அரசியல் நிலைக்குட்பட்டே இயங்குகின்றனர்.

இந்தப் பின்னனியில், ஒரு முக்கிய அரசு கேட்டுக் கொண்டதிற்கு இணங்க சர்வதேச ஊடகங்கள் அமைதி காக்கின்றது என்பது சரியான வாதமாக இருக்காது. ஆனால் இந்தியர்களின் ஆதிக்கத்தினால் சூழப் பட்டிருக்கும் தென்னாசிய பத்திரிகைத் துறை இந்திய மேலாதிக்கத்தின் சிந்தனையையே பிரதிபலிக்கும். காஷ்மீர் போராட்டத்தினை எந்தளவுக்கு கேவலமாகவும், பயங்கரவாதமாகவும் இவை பார்க்கின்றனவோ அதே போன்றே எம் பிரச்சனையையும் பார்க்கின்றன

விடுதலைக்காக அனைத்தையும் இழந்து போராடும் நாம் எமக்கான தனியான ஒரு ஊடக துறையினை வளர்க்கவும், அதனூடாக சர்வதேச பல்லூடக பரப்பில் நிலையாக கால் பரப்பவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச செய்தி ஊடகங்களில் குறிப்பாக பி.பி.ஸி தமிழோசையில் ஈழத் தமிழர்களின் எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதியிலும் இருந்த செல்வாக்கு மறைந்து படிப்படியாக அது தென்னிந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்களின் கைக்கு மாறியதிலிருந்து அதன் போக்கு ஈழத்தமிழர்க்கெதிரானதாக அல்லது, ஈழத் தமிழர் நலன் சாராததாக இருந்துவருவது கண்கூடு. ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத் தமிழர் மேல் உண்மையான கரிசனை கொண்ட வானொலி நிகழ்சித் தயாரிப்பாளர்கள் இருந்த காலத்துடன் இன்றிருப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த வேறுபாடு பளிச்சென்று தெரியும். முன்னர் தமிழோசை நடைபெறும் நேரத்தில் ஈழத்தமிழர் வீடுகளின் அவரவர் தமது வேலைகளை அப்படியே விட்டு விட்டு வானொலிக்கு முன்னால் கூடுவதை இன்று தமிழோசை நடைபெறும்போது வானொலியை நிறுத்திவிட்டுத் தமிழர் போகும் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் இது ஓரளவிற்குப் புரியும்.

இந்திய வெளிவிவகார உளவுப் பிரிவான ரோ இனது ஒற்றர்களும் அல்லது அவர்களால் இயக்கப்படுபவர்களும் சில காலத்துக்கு முன்பே தமிழோசைச் சேவைக்குள் ஊடுருவியுள்ளனர் என்பதே உண்மை. இதன் மூலம், தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் சென்றடைய வேன்டும், எவ்வாறானவை தவிர்க்கப்பட வேன்டும் என்று மிக நுணுக்கமகா ஆரயப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கும், அதன் உளவுத்துறையின் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கும் குறுக்கே நிற்பவர்களான புலிகளுக்கும் அதனோடிணைந்த ஈழத் தமிழர்களுக்கும் எவ்வாறான செய்திகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும், உளவியல் போர் ஒன்றின் மூலம் தமிழரின் உளவுரனை எப்பாடியான செய்திகள் மூலம் அழித்து விடலாம் என்பதிலும் இன்றுள்ள தமிழோசை செய்தித் தயாரிப்பளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா உற்பட பல உலக நாடுகளுக்கு இலங்கையில் தமது பிராந்தியப் பாதுகாப்பு நலன்கள், வியாபார நலன்கள் காரணமாக புலிகள் தோற்பதென்பதோ அல்லது சிங்கள அரசு வெல்வது என்பதோ மிகவும் அவசியமானதொன்று. புலிகளைத் தீவிரவாத இயக்கமென்று பல வருடங்களுக்கு முன்னமே அறிவித்ததும் இதனால்த்தான். இன்று அமெரிக்கா, கணடா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்த்திரேலியா போன்ற நாடுகள் ஈழத்தமிழர் வகை தொகையின்றிக் கொல்லப்படுவதைக் கண்டும் காணாதது போல் இருப்பதன் காரணம் புலிகளும் அவர்களோடிணைந்த தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிய வேன்டும் அல்லது மழுங்கடிக்கப்பட வேண்டும் என்பதால்த்தான். இதன் ஒரு அங்கமாகவே இந்தியா வெளிப்படையாகவும், அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள் மறை முகமாகவும் தமிழின அழிப்பை ஊக்குவிப்பதோடு, அது சம்பந்தமான செய்திகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. அவர்கள் பாராமுகமாக இருப்பது போல் பாசாங்கு செய்தாலும், உண்மை என்னவென்றால் இது அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட, நடத்தப்படுகிற திட்டமிட்ட இருட்டடிப்பு என்பதுதான்.

உதாரணத்துக்கு, அண்மையில் அவுஸ்த்திரேலியா சிட்னியில் இளைஞர்கள் நடத்திய உண்ணா விரதத்துக்கு வருமாறு பலராலும் கெஞ்சிக் கேட்ட பின்பும் எந்தவொரு பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி வானொலிச் சேவையோ அங்கு வரவில்லை என்பது. உண்ணாவிரதம் நடைபெற்ற இடம் மிகவும் பிரபலமான நகரத்தின் மைய்யப்பகுதி என்பதும், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் இடமாக இருந்தும் கூட இச்செய்தி வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இறுதி நாளான அன்று இரவு 11.30 இற்கு அங்கு வருகை தந்த சானல் 10 இன் படப்பிடிப்பாளர் " இது உங்கள் பிரச்சனை, எமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, அவுஸ்த்திரேலியர்கள் இதுபற்றிக் கவலை கொள்ளப்போவதில்லை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இங்கு பல ஊடகங்களும், அரசியல் வாதிகளும் "தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் எம்மால் எதுவுமே செய்ய முடியாது " என்று சப்பைக் கட்டுக் கட்டினாலும், உண்மை என்னவென்றால் புலிகள் அழிக்கப்படவேண்டுமென்பதே, இன்னொரு வகையில் தமிழர்கள் அழிக்கப்படவேண்டும் என்பதே இவர்கள் அனைவரினதும் தேவையாகவும் விருப்பமாகவும் உள்ளது.

இந்த செய்தி தலைப்பு குறித்த நம்பக தன்மை கேள்விக்குரியது...

தமிழ் மக்கள் செய்யும் போராட்டங்களை வலுவிளக்க செய்ய மிகவும் பிராயத்தனப்பட்டு சோர்வடைய செய்யும் செய்திகளை சிங்கள , இந்திய செயற்பாட்டாளர்கள் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்...

யாரும் கண்டு கொள்ளவில்லை எனும் எண்ணம் பெருண்பாண்மையான மக்களை போராட்டம் நோக்கி போக தூண்டாது என்பது அவர்களின் கணிப்பு...

எதிரியின் உளவுரனை நோக்கிய பிரச்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழினம் என்பதே இண்றைய உண்மை நிலை...

இந்த செய்தி தலைப்பு குறித்த நம்பக தன்மை கேள்விக்குரியது...

தமிழ் மக்கள் செய்யும் போராட்டங்களை வலுவிளக்க செய்ய மிகவும் பிராயத்தனப்பட்டு சோர்வடைய செய்யும் செய்திகளை சிங்கள , இந்திய செயற்பாட்டாளர்கள் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்...

யாரும் கண்டு கொள்ளவில்லை எனும் எண்ணம் பெருண்பாண்மையான மக்களை போராட்டம் நோக்கி போக தூண்டாது என்பது அவர்களின் கணிப்பு...

எதிரியின் உளவுரனை நோக்கிய பிரச்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழினம் என்பதே இண்றைய உண்மை நிலை...

இது தான் உண்மை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி தலைப்பு குறித்த நம்பக தன்மை கேள்விக்குரியது...

தமிழ் மக்கள் செய்யும் போராட்டங்களை வலுவிளக்க செய்ய மிகவும் பிராயத்தனப்பட்டு சோர்வடைய செய்யும் செய்திகளை சிங்கள , இந்திய செயற்பாட்டாளர்கள் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்...

யாரும் கண்டு கொள்ளவில்லை எனும் எண்ணம் பெருண்பாண்மையான மக்களை போராட்டம் நோக்கி போக தூண்டாது என்பது அவர்களின் கணிப்பு...

எதிரியின் உளவுரனை நோக்கிய பிரச்சாரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழினம் என்பதே இண்றைய உண்மை நிலை...

மிகவும் உண்மை.

அடடா.. இதற்கு இப்படி ஒரு பார்வையும் இருக்குதா...

நன்றி தயா.... நீங்கள் சொல்வது சரி

இலங்கை தனிப்பட்ட முறையில் விருந்துக்கள் என்று கவனித்து பிழையான பிரச்சாரங்களை வெளி நாட்டு பத்திரிகைகளுக்கு செய்வதாக அறிகிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் வெளிநாட்டு ஊடகங்களை பனியவைக்கமுடியுமா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பார்வை தயா!

  • கருத்துக்கள உறவுகள்

தயா உங்களின் கருத்து மிகவும் சரியானது. எங்கட சனம் இப்ப என்றும் இல்லாதவாறு குழம்பிப் போய் உள்ள நிலையில் எதையும் நிதனமாக சிந்திக்க தவறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமுனைகளில் மட்டுமல்லாது இலங்கை தீவு முழுதும் ஊடகம் ஊமையாக்கப்பட்ட நிலையில் "அரசு" எனும் இயந்திரத்துக்குதான் எங்கும் மவுசு இருக்கும். அரசு அமைக்க நினைக்கும் குழுவுக்கோ அந்தக் குழுவின் இனத்துக்கோ வரவேற்பு குறைவாகவே இருக்கும். இந்த செய்தி உண்மையாக இருக்கும் அளவுக்கு உலக ஊடகத்துறை சோரம் போகவில்லை என்று நம்புகிறேன்.

Edited by அமரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.