Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்": ஐ.நா. செயலாளர் நாயகம்

Featured Replies

"பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதிய தவல் தனக்கு வரவில்லை என்றார் ஒருகிழமைக்கு முதல் இப்ப ஆராம் குடுத்தது, யாழ்களத்தில இருந்து ஆரும் அனுப்பினியளோ உவருக்கு. பன் கீ மூன் பேரை பார் முளு மூன் மாதிரி இருக்கு.

Edited by சித்தன்

"பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் போரை இடைநிறுத்தவேண்டும் (புலிகளோ அல்லது தமிழ் மக்களோ இன்னும் போர்தொடங்கவில்லையே,எமது வீட்டுக்குள் ஒரு பாம்பு வந்தால் என்னசெய்வம் அதை துரத்துவோம் அல்லது சிலவேளை கொல்வோம் சிலவேளை அதன் புற்று எங்கு இருக்கிறது என்று பார்த்து அந்த புற்றை அழிப்போம் அதை ஏன் செய்கிறோம் ?எம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே, அது போர் அல்லவே )

போர்நிறுத்தம் தற்காலிகமாக தேவையானது ஒன்றுதான் ஆனால் அதுவே எமக்கு தீர்வாகிவிடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேனும்.போர்நிற

UN Plaza: Pay Attention to Sri Lanka

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டு மண்டைகளே!

நாங்கள் இப்போதும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பது தெரிந்தும் பூச்சாண்டியா காட்டுகின்றீர்கள்?

யுத்தம் என்றால் என்னவென்று அறிய விரும்புகின்றீர்களா? அல்லது உண்மையில் யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றீர்களா? நாம் இப்போது யுத்தம் செய்துகொண்டிருந்தால் விளைவு எப்படியிருக்கும் என்பதை அறியாமலா அறிக்கை விடுகின்றீர்கள்?

மோட்டுச்சிங்களவனை, ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதியை, மனித வெறிபிடித்த நாய்களை மக்களை கொல்வதை நிறுத்து என்று சொல்ல தயங்குவதேன்? இவ்வளவு ஆதாரங்களை உங்களுக்கு அனுப்பியும் உங்களது இரட்டை வேடம் எதற்காக? நாங்கள் கேட்பார் இல்லாத ஒரு சிறுபான்மை இனம் என்பதிற்காகவா உங்களது இந்த ஒருதலைப்பட்சமான அறிக்கைகள்? நீங்கள் எல்லாம் உண்மையான ஜனநாயக வாதிகளா? அல்லது நீங்களும் மனிதவேட்டைக்கு ஒத்துப்போகின்றீர்களா? விடுங்கள் எங்களை பிரிந்து, சுதந்திரமாக வாழ.

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் தலையிட எண்ணை ஒரு காரணமாக இருந்தது போல, இலங்கையில் எதுவும் இல்லை. அதனால் இலங்கைப்பிரச்சினையில் "என்னவாவது நடக்கட்டும்" என்று மேற்குலகம் பாராமுகமாக இருக்கின்றது. அதிக பட்சம்,பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அது சாத்தியப்படாததால், உலகமயமாக்கலுக்கு தமிழீழ போராட்டம் தடையாக இருப்பதால், தற்போது இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதுவும் இஸ்ரேலுக்கு கொடுப்பது போல நிபந்தனையற்ற ஆதரவல்ல. அவ்வப்போது மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி இலங்கை அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது நடக்கின்றது.

நன்றி கலையகத்து கலையரசனுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

"பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

பாங்கீமூனையா எந்த நாடோ எனக்குத் தெரியாது. ஐயா பென்சனெடுக்கேக்கை, ஐயாவைக் கொண்டே அலாஸ்க்காவிலை விட்டால் மகிழ்வா இருப்பியளோ அல்லது சொந்த நாட்டுக்குப்போனா மகிழ்வா இருப்பியளோ ஐயா. நாங்களொன்றும் நாடற்றவரல்ல. எமக்கான தேசத்தில எங்கட மக்கள் உங்களமாதிரி சுதந்திரமா கண்ணாடி மாளிகை வேண்டாம், நாலு தடியை நட்டுக் கொட்டிலாவது போட்டிருக்கிறதைத்தான் விரும்புகினமேயன்றி நீங்கள் நினைக்கிற வீம்புத்தனமான சிறையடைப்பையல்ல. அதென்ன பங்கருக்கால வந்து முள்ளுக்கம்மிப்கை இருக்கவைக்கவே போராடினது. இப்ப நீங்களெல்லாம் சிரிச்சுச் சிரிச்சு ஒண்டாச் சேர்ந்து புலியள சுத்தி வளைச்சுத்தானே(?) வைச்சிருக்கிறியள். பிறகென்ன? மக்களை அவையளின்ர சொந்த இடத்தில விடவேண்டியதுதானே. அதவிட்டிட்டு, அதென்னது பாதுகாப்பான வெளியேற்றுதல். ஏலவே யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. வவுனியவிலை சிறைச்சாலை. தென்தமிழீழத்திலையும் சனமெல்லாம் ஒரு உத்தியோகப்பற்றற்ற வீட்டுக்காவலில். எப்பவும் தமிழராயிருந்தால் பிடிக்கலாம். இருக்கிறதைப் புடுங்கலாம். சுடலாம். இந்த லடசணத்தில, சிறீலங்காவின்ர இனப்படுகொலையில பங்கெடுப்பதென்று உலக சபையும் முடிவெடுத்தவிட்டதா? எண்டு கேட்கிறன் விளக்குவீரா செயலாளர் ஐயா ! எங்களை எமது மண்ணில் வாழவிடுங்கள். சிங்களப் படைகளை வெளியேறச் சொல்லுங்கள். வெளியேற்ற வேண்டியவைய விட்டிட்டு, அந்த மண்ணில காலம்காலமா வாழ்ந்த எங்களை வெளியேற்றுவது எப்படி நீதியாகும்.

யாழ்க்கள உறவுகளே வெளியேற்றப்பட வேண்டியது சிங்களப்படைகளன்றி, மக்களல்ல என்பதை வலியுறுத்தி ஒரு மடலொன்றை பதிவு செய்தால் அவற்றை இந்தப் பாங்கீமூன் முதல் ஐ.ஒ. வரை அனுப்புதல் பயனுடையதாயிருக்கும். உதவுவீர்காளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UN Plaza: Pay Attention to Sri Lanka

">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பான் மூன் ஜயாவை தன்னுடைய வேலையை மட்டும் பார்க்கச்சொல்லும் சிறிலங்காவிட்ட நல்லா வாங்கிக்கட்டப்போறார் வயதுபோன காலத்தில

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கிறத விட்டுட்டு சும்மா போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுசொன்னா சரியா நீங்கள் எல்லாம் இந்தப் பதவிக்கு உரிய ஆட்கள் இல்லை. அமெரிக்காவின் அடிவருடிகள்.இந்தப் பதவிக்கு துணிவும் நேர்மையும் எந்த அழுத்தங்களுக்கும் பணிந்து கொடுக்காத ஆளுமை உடைய ஆள் தேவை.எங்கட தலைவர் தான் இதுக்குப் பொருத்தமான ஆள்.

இணைப்பிற்கு நன்றி. இதில உரையாடுபவர்கள் யாரென்று கூறமுடியுமா?

Mark Leon Goldberg UN Dispatch, The American Prospect VS Matthew Lee Inner City Press, Predatory Bender

http://bloggingheads.tv/diavlogs/17772?in=...3&out=32:56

அந்த வீடியோவின் சுருக்கம்..

UN Plaza: Pay Attention to Sri Lanka!

Are humanitarian NGOs ignoring Sri Lanka? (09:31)

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.