Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் "தமிழர் விழிப்பு இயக்கம்" அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

Featured Replies

இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது..உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது.

ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது மக்கள் படும் இன்னல்களையும, போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன.

எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை.

அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கரியத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காளத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம்

அன்பார்ந்த தமிழ் மக்களே!

ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்!

அன்பார்ந்த வர்த்தகர்களே!

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

"வலிமையே வாழ்வு"

ஒற்றுமையே வலிமை"

-தமிழர் விழிப்பு இயக்கம்-

நன்றி : நிதர்சனம்

அப்ப தீபம் ரிவி, ஜெய ரிவி நிகழ்ச்சிகளை போடுறவை இல்லையோ?

எங்களுங்குள்ளேயே இன்னும் நாங்கள் பல குழுக்களாக பிரிய வேணும்.....அப்ப தான் எங்களுக்கு ஈழம் கிடைக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தீபம் ரிவி, ஜெய ரிவி நிகழ்ச்சிகளை போடுறவை இல்லையோ?

அட ... நம்ம வடிவேலு .

அடாது மழை பெய்தாலும் விடாது , நம்ம தொலைக்காட்சியை தூற்றவும் . :)

வந்தவன் ...நிண்டவன்...பொனவன' எல்லாரையும் எதிர்க்க வேணும்....இது தான் நல்லது எவனையும் அரவணைக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் ...நிண்டவன்...பொனவன' எல்லாரையும் எதிர்க்க வேணும்....இது தான் நல்லது எவனையும் அரவணைக்க கூடாது.

சரியாக வாசித்த பின்னர் தான் கருத்து சொல்லுறீங்களோ? ஏன் புறக்கணிப்பு எண்டு காரணமும் இருக்கே அந்த அறிக்கையில? அல்லது அந்தக் காரணம் உங்களுக்கு ஒரு வலிய காரணமாக தெரியேல்லயோ? குழுக்களாக ஏன் பிரிய வேண்டியிருக்கெண்டு யோசிக்க மாட்டீங்களோ? ஒருவன் "மானாட மயிலாட" எண்டு நிக்கிறான், சனம் தமிழ் நாட்டிலயே எரிஞ்சு சாகிற செய்திய சரியா சொல்ல மாட்டன் எண்டுறான். உங்கட ஐடியா என்ன மாதிரி? அவன் செய்யுறது பிழையில்ல எண்டு "ஒண்டா சேந்து ஒண்டுக்கு" இருக்கிற தேவைக்காக அரவணைக்கலாம் எண்டுறியளா? அப்ப நாளைக்கு துவங்கப் போற நாலு ரி.வி காரனும் புலம் பெயர்ந்த தமிழனுக்கு தில்லாலங்கடி டான்ஸ் நாலு போட்டுக் காட்டி தாங்கள் வயிறு வளக்கலாம் எண்டு நாங்களே சொல்லிக் குடுத்த மாதிரி இருக்காதா?"ஒற்றுமை பலம்" எண்டு ஐந்தாம் வகுப்பில படிச்சத கண்ண மூடிக் கொண்டு பின்பற்றுறத விட "இப்ப எங்கட துலங்கல் என்ன மாதிரி இருந்தா, உரியவருக்கு (மு.க உட்பட) செய்தி போய்ச் சேரும் எண்டும் உங்கட "வளர்ந்த (?)" மூளையப் பாவிச்சு யோசிக்க மாட்டீங்களா?

:)

ஓம் பாருங்கொ ! அவங்கள் மானாட மயிலாட எண்டுறாங்கள் அது மட்டும் தெரியுது .....எங்கட சில சில விசுக் கோத்துக்ள் வெளி நா:களில் ஆடுற ஆட்டம் தெரியவில்லை .....

  • கருத்துக்கள உறவுகள்

:)

ஓம் பாருங்கொ ! அவங்கள் மானாட மயிலாட எண்டுறாங்கள் அது மட்டும் தெரியுது .....எங்கட சில சில விசுக் கோத்துக்ள் வெளி நா:களில் ஆடுற ஆட்டம் தெரியவில்லை .....

சரி தான், எங்கட விசுக்கோத்துகள் தான் உங்கட standard , அது தான் சொல்லுறீங்களே விசுக்கோத்துகள் எண்டு? பிறகேன் அதுகளிட ஆட்டத்தப் பற்றி பேச்சும், அதக் கொண்டு வந்து சன்டிவி புறகணிப்பில புகுத்துறதும்? உணர்ச்சி வசப்பட்டா போதாது. அதில ஏதாவது பயனுள்ள விளைவு வர வேணும் பாருங்கோ!

முதலில் இங்கு GTV இற்கு சந்தா கேட்கிறார்கள்! அதற்கு முதலில் எம்மவர் ஆதரவளிப்போம்!! எம்மவர் ஊடகங்களை வளர்ப்போம்!!

நான் குறிப்பிட்டது எமக்கான ஊடகங்களை, அதற்காக தீபம் போன்றவைகளையல்ல!! ...... பெண்ணுரிமை எனும் தோரணையில் சமூக சீரளிவாளர்களுக்கு தளம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்!! . இவர்கள் மதில் மீது நிற்கும் பூனைகள், எப்போதும் எங்கும் பாய்வதற்கு தயாரானவர்கள்!! விளிப்பாக இருப்போம்!!

மற்றயது எமக்கு, உந்த கலைஞரும், சண்ணும் வேண்டாம்!! அண்மையில் ஓர் வயோதிபர் குறிப்பிட்டது ......"தமிழை அழிப்பதில் முதன்மை வகிப்பவர்கள் இக்கலைஞர் குடும்பத்தினரே" ...... எமக்கு அதரவளிக்காததற்கு அல்ல .... தமிழை கொல்லும் ஊடகங்கள் எனக்கு எதற்கு????????

அட ... நம்ம வடிவேலு .

அடாது மழை பெய்தாலும் விடாது , நம்ம தொலைக்காட்சியை தூற்றவும் . :)

தம்பி சிறி.. நான் ஈழத்து ரிவிகளுக்கு எதிராக ஒன்றும் சொல்லவில்லை ஆனால் மக்களை மீண்டும் தவறாக வழிநடத்த கூடாதுப்பு.

ரிரி என் க்கு பின் ஈழப்பிரச்சனைகளை சரியான முறையில் சொல்ல ஒர் ஊடகம் இல்லை ஆனால் இவர்களும் ரி ரி என் விட்ட தவறை விட போகிறார்கள்.

அவர்கள் விட்ட தவறை , இவர்களும் செய்வார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா ........... வடிவேல் .

Edited by தமிழ் சிறி

அவர்கள் விட்ட தவறை , இவர்களும் செய்வார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா ........... வடிவேல் .

அணில் பிடிக்கும் நாயை முகத்தில் தெரியாதா? :)

ஏன் இந்த அமைப்புக்கு ஜெயா அம்மையாரின் 'jeya TV' கண்ணில் படவில்லையா அல்லது வியாபார பாசமா?

---

எமக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் மக்கள் ரி.வியையும் தமிழன் ரி,வி யையும் யாராவது கனடா ஐரோப்பியா எங்கும் தகுந்த முறையில் வழங்கினால் அவர்களை ஊக்குவித்த மாதிரியும் இருக்கும் தரமான நிகழ்ச்சிகளை பார்த்த மாதிரியும் இருக்கும் (தற்பொழுது யாராவது இதனை ஒளிபரப்புகின்றார்களா என தெரிந்தால் சொல்லவும்)

----

தனிப் பட்ட ரீதியில் என் வீட்டில் எந்த தமிழக தொலைக் காட்சிகளுக்குமான இணைப்பும் இல்லை. வீட்டில் சனியனை கொண்டு வந்து இருத்துவதும் இத்தகைய தமிழக தொலைக்காட்சிகளை இணைப்பதும் ஒன்று.

நீ ஒரு துரோகி என்று சொல்ல ஆசை ஆனால் உங்கள் கருத்துகள் என் மனம் ஏற்றுக் கொள்கின்றன ஆகவே நானும் ஒரு தூரோகி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இங்கு GTV இற்கு சந்தா கேட்கிறார்கள்! அதற்கு முதலில் எம்மவர் ஆதரவளிப்போம்!! எம்மவர் ஊடகங்களை வளர்ப்போம்!!

நான் குறிப்பிட்டது எமக்கான ஊடகங்களை, அதற்காக தீபம் போன்றவைகளையல்ல!! ...... பெண்ணுரிமை எனும் தோரணையில் சமூக சீரளிவாளர்களுக்கு தளம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்!! . இவர்கள் மதில் மீது நிற்கும் பூனைகள், எப்போதும் எங்கும் பாய்வதற்கு தயாரானவர்கள்!! விளிப்பாக இருப்போம்!!

மற்றயது எமக்கு, உந்த கலைஞரும், சண்ணும் வேண்டாம்!! அண்மையில் ஓர் வயோதிபர் குறிப்பிட்டது ......"தமிழை அழிப்பதில் முதன்மை வகிப்பவர்கள் இக்கலைஞர் குடும்பத்தினரே" ...... எமக்கு அதரவளிக்காததற்கு அல்ல .... தமிழை கொல்லும் ஊடகங்கள் எனக்கு எதற்கு????????

காலம்கடந்து புயலாகத் தோன்றியுள்ள ஞானோதயம். இது முழுமையகச் செயலுருவாக வேண்டும். வேலைசெய்யும் இடத்தில்,ஒரு உணவு இடைவேளை. இது தொடர்பாகக் கதைக்கிறோம். ஒரு சிலர், டமிலர். சொல்கிறார்கள் வேலையால களைச்சுப்போய், ஒரு பொழுதுபோக்குத் தேவையாம். சிந்திக்க வேண்டிய விடயம்.இந்தத் தொல்லைக்காட்சிகளால் பிள்ளைகளிடையே கூட தவறான மொழிப் பிரயோகங்கள் கூட வளர்கிறது. காசு குடுத்து வினையை வேண்ட யாரும் விரும்ப மாட்டார்கள். தமிழினம் சிந்தைகொள்ளுமா? தமிழின நலனை விடுவோம்! உங்களது குழந்தைகளையாவது காக்க வேண்டாமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53195

இந்த செய்தி நேற்றையதினம் சபேசனாலும் இணைக்கப்பட்டிருந்தது.

இங்கு குத்தியாட்டம் போடும் வடிவு வடிவேலும் அங்கும் தமாஷ் பண்ணியிருந்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த அமைப்புக்கு ஜெயா அம்மையாரின் 'jeya TV' கண்ணில் படவில்லையா அல்லது வியாபார பாசமா?

நிழலி ஐரோப்பாவில் jeya tv ஒளிபரப்பாவதில்லை. அது ஒரு தனிப்பட்ட அலைவரிசையாக இங்கு இல்லை. சில jeya tv நிகழ்ச்சிகளை ஜிடிவி ஒளிபரப்பி வந்தது.. ஆனால் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை போலியான இந்திய தேசியவாத மாயைக்குள்ளும், கிந்தி எனும் அடக்குமுறையின் வடிவமான கவர்சிக்குள்ளும் வைத்திருக்க இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யும் வேலைகள் வெளிப்படையானது. இவற்றுடன் ஜெயா தொலைக்காட்சியையும் சேர்த்துவிடுவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தவன் ...நிண்டவன்...பொனவன' எல்லாரையும் எதிர்க்க வேணும்....இது தான் நல்லது எவனையும் அரவணைக்க கூடாது.

தமிழனை சுரண்டி தொப்பை வளர்க்கும் பணமுதலைகளை சொன்னதால் கோபமா உங்களுக்கு!!!!! இவர்கள் பற்றி கேட்டால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு நீங்கள் வரும் மர்மம் என்ன????? ஒவ்வொரு நாளும் பல மக்கள் கொல்லப்படும்போது இந்த சன்டிவியோ கலைஞர் டிவியோ ஜெயாடிவியோ ஒருநாளாவது அதைப்பற்றி ஒளிபரப்பியதா? ஏன் மக்கள் தொலைக்காட்சி தமிழன் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லையா?

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எங்கள் அவலங்களை துன்பங்களை சோகங்களை சொல்லாத எந்த புடலங்காய் டிவி என்றாலும் எங்களுக்கு ம.....க்கு சமன் என்று நாங்களே பொங்கி எழ, ஒன்று சேரவேண்டாமா?!! தமிழனின் வந்தாரை வளர்க்கும் பண்பாடு புல்லரிக்க வைக்கிறது !!

வேண்டாம் சாமி நீங்கள் எந்த டிவி என்றாலும் பாருங்கோ.. மக்களை பார்க்க வேண்டாம் என்று சொல்பவனையும் துரோகி என்று திட்டுங்கோ! கலாநிதி மாறனுக்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இருக்கும் சொத்துகள் போதாது இன்னும் இன்னும் அதிகமாக்க வேணும்! அதுக்கு நாங்கள் இங்கு மட்டையடித்து, கோப்பை கழுவி வரும் பணத்தை வாரி இறைக்க வேணும்!! மக்களே நீங்கள் ரெடியா... நான் ரெடி!!

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

quote name='pepsi' date='Mar 1 2009, 12:51 PM' post='493967']

ரகு உங்களை நான் திட்டவில்லை <_< ; மேலே quote பண்ணியிருப்பதை பார்க்கவும். அவரையும் நான் திட்டவில்லை. என்ன இப்படி புரியாமல் எழுதிவிட்டாரே என்ற எரிச்சலில் வந்த வார்த்தைகள்.

Edited by pepsi

தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி நிகழ்வுகள் முற்றுமுழுதாக சண் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் புறக்கணிப்பிற்கான குறித்த இரு தொலைக்காட்சிகளையும் புறக்கணிப்பதால் எமக்கு ஏற்படும் நம்மை என்ன?

அந்த தொலைக்காட்சி நிறுவனங்களிற்கு ஏற்படப்போகும் இழப்பு என்ன?

நாம் அவற்றைப் புறக்கணிப்பதால் அவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படுமா?

யாராவது கொஞ்சம் விளக்கமாக விபரியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் சொன்னேனே புறக்கணிக்க வேண்டாம் வளர்த்து விடுவம்!

சண் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிக்கு நாங்கள் மேலும் மேலும் பல சந்தாதாரர்களை கூட்டுவோம்!

கலாநிதிமாறனை இன்னும் வளர்ப்போம், கலைஞர் குடும்பத்திற்கு கைகொடுப்போம்!

எங்கள் ஊடகத்தை சந்தாதாரர் வேண்டி கெஞ்சவைப்போம் இழுத்து மூடவைப்போம்!

வாழ்க தமிழன் பண்பாடு! வளர்க எம் எட்டப்பர் கூட்டம்!

Edited by pepsi

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கலைஞரின் சொத்து 52.3 கோடி ரூபா மதிப்பு. மாயாவதி 55 கோடி ரூபா மதிப்பாம். மாயாவதி முதலாவது இடம். கருணாநிதி இரண்டாம் இடம். ஆதாரம்: India Today.

கறுப்பு பணம் எவ்வளவோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட கருத்து புறக்கணிப்பது இப்போதைய கால கட்டத்தில் தேவையற்றது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு கனடாவில் ஒரு வானொலி சுனாமி நேரத்தில் மக்களால் மிக மோசமாக மக்களால் வெறுக்கப்பட்டது.பெயர் சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன்.ஆனாலும் காலப்போக்கில் அவர் மாறி இன்று எம்மோடு பயணிக்கிறார். அவரின் செய்தியாளர் வோசிங்டனில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு கூட நேரடி ஒலிபரப்பை செய்திருந்தார்கள். ஆனால் பல மக்களின் கேள்விகணைகளால் தாக்கு பிடிக்க முடியாமல் தான் அவரது மனச்சாட்சியை கேட்டுள்ளார் போலும்.

எனவே எதிரிகளை நிறையவே சம்பாதித்து விட்டோம். ஆனால் எமது எதிரியோ பல பகைவர்களை நண்பர்களாக்குகிறான். நாம் இக்கட்டான கால கட்டத்தில் எல்லோரையும் அரவணைத்து செல்வதே புத்திசாலித்தனமானது.

சிங்களவர்களை மோடர்கள் என்று கூறி நாங்கள் மோடர்கள் ஆக அனுமதிக்காமல் மேற்படி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தொலைபேசியிலோ அல்லது தொலைநகலிலோ அல்லது வேறு வழிகளிலோ தொடர்பு கொண்டு உங்கள் ஆதங்களை தெரிவியுங்கள். பலன் நிச்சயமாக கிடைக்கும்.

இன்று வரை எமக்கு ஒரு நண்பன் கூட கிடைக்காததை எண்ணிப்பாருங்கள் உறவுகளே!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.