Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது எமக்கு வாழ்வா சாவா போராட்டம்

இதில் நாம் அழிந்து விடுவோம்

அதிலும் எம்மை அழிப்பவனை அழிக்காமல் அழிந்துவிடுவோம் என்று யாராவது எதிர்பார்த்தால்.....

அவருக்கு ஒருவனின் அழிவின் பெறுமதி தெரியவில்லை என்றுதான் அர்த்தமே தவிர

அழிபவனுக்கு அது தெரியாது என்பதல்ல..........

  • Replies 54
  • Views 5.5k
  • Created
  • Last Reply

விடுதலைக்காய் களமாடி, எதிரியின் தளத்தை கைப்பற்றி , வெற்றியுடன் வீழ்ந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய வீரர்களுக்கு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடி காவியமான வீர வேங்கைகளிற்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியுடன் சண்டையிட்டு மண்மீட்புக்காய் இனிய உயிரை ஈகம் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

வீரவணக்கங்கள்!

அவர்கள் அவர்களது கடமையை செவ்வனவே செய்கிறார்கள். நாங்கள் எமது கடமையை செய்வோமா? வருகிற 16ஆம் திகதி உலகெங்கும் நடைபெறும் மாபெரும் உரிமைப்போர் போராட்டங்களில் பங்குபற்றுவோம். புலிகள் தான் எங்கள் காவலர்கள் என்பதை உரத்து சொல்வோம்! தயவுசெய்து எல்லோரும் பங்கெடுங்கள்!

அதுசரி

பிரான்சிலிருப்பவர்களுக்கு மட்டுமல்ல

ஐரோப்பாவின் வேறு பகுதியிலுமுள்ள மக்களுக்கு

சுவிசுக்கா

பெல்ஐpயத்திற்கா போவது என்று தடுமாற்றமாக உள்ளதாக தெரிகிறது

யாராவது தெளிவுபடுத்தமுடியுமா???

அதுசரி

பிரான்சிலிருப்பவர்களுக்கு மட்டுமல்ல

ஐரோப்பாவின் வேறு பகுதியிலுமுள்ள மக்களுக்கு

சுவிசுக்கா

பெல்ஐpயத்திற்கா போவது என்று தடுமாற்றமாக உள்ளதாக தெரிகிறது

யாராவது தெளிவுபடுத்தமுடியுமா???

இரண்டும் ஒரே நோக்கத்துடன் நடைபெறுவதால் எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ அதற்கு செல்லலாம் என்பது எனது கருத்து! ஏதாவது ஒன்றுக்கு கட்டாயம் செல்லவேண்டும்! ஐரோப்பாவிலிருப்பவர்கள் யாராவது இதை தெளிவுபடுத்துங்கள்!

கனடாவில் ரொறன்ரோ பகுதியிலும் முன்பு நடந்த மனிதச்சங்கிலியைவிட பெரியளவில் 16ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளார்கள். அனைவரையும் அந்நாள் வேலையிலும் பாடசாலையிலும் விடுப்பு எடுத்து தயாராக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது! நேரம் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது!

Edited by eelamlover

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி லெப்.கேணல் மாறன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலைஇனியவன்

ஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

எம்மின விடுதலைக்காக தமது உயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்

கனடாவில் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து இளைஞர்களும் வரவேண்டும். இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தெரிந்தால் அறியத்தரகின்றேன். இங்கு வேறு எவருக்கும் தெரிந்திருந்தால் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா . என்னை இங்கு கருத்து எழுத அனுமதித்தத்துக்கு நன்றிகள் ஆயிரம் . நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் எமது மண்ணுக்கும் எமது மக்களுக்கும் செய்ய ஒன்றாக இணைவோம் .

தாழ்மையுடன் ரகு

எதிரியுடன் சண்டையிட்டு மண்மீட்புக்காய் இனிய உயிரை ஈகம் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுவமடுவில் 6 ஆட்லறி செலுத்திகள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்பு (2ம் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் உள்ள சிங்கள படையினரின் ஆட்லறி பீரங்கி தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினராலும் கிட்டு பீரங்கி பிரிவினராலும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசுவமடு தேராவில் பகுதியில் புதிதாக அண்மையில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறி பீரங்கி தளமே இவ்;வாறு தாக்கியளிக்கப்பட்டுள்ளது.

தளத்துக்குள் புகுந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினராலும் கிட்டு பீரங்கி பிரிவினராலும் தளத்தில் இருந்து ஆட்லறிகள்,பீரங்கிகளை கொண்டு படையினர் மீது தொடர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவற்றினை தாக்கியளித்துவிட்டு அணிகள் தளம் திரும்பியுள்ளதாக விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதில் 50க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடி பொருட்களும் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி

விசுவமடு பகுதியில் இருந்து 6 ஆட்லறி செலுத்திகள் விடுதலைப்புலிகளின் அணிகளினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வன்னி தகவலை ஆதாரம் காட்டி வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஆயிரக்கணக்கான ஆட்லறி எறிகணைகளும் பெருமளவான ஆயுதங்களும் விடுதலைப்புலிகளின் அணிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் http://www.swissmurasam.net/news/breakingn...1-09-17-22.html

wow

எது அந்த வெளிநாட்டுச் செய்திச்சேவை, வன்னியில் மக்கள் படும் அவலம் தெரியாத அவர்களுக்கு எவ்வாறு இந்தத் தகவல் தெரியும். மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பவும் , புலம்பெயர் மக்களிள் எழுச்சியின் வீச்சைக் குறைக்கவும் தான் உந்தச் செய்திகள் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் செய்தியோடு கொசுறுத்தகவலை சேர்த்துவிட்டு.. வன்னியில் இருந்து வரும் செய்தி என்று சொன்னால் எம்மால் அதை உறுதிப்படுத்தத்தான் முடியுமா என்ற துணிச்சலில் தான் பல புலம்பெயர் ஊடகங்களும் ஊடக அவியலாளர்களும் செய்திகளும் புனைகதைகளும் புளுகுக்கட்டுரைகளும் வரைந்து கொண்டிருக்கின்றனர்.. குறிப்பாக இணையத்தளங்களுக்கு.

புலிகள் அழித்துவிட்டதை.. இவர்கள் பொறுக்கிக் கட்டி இழுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு செய்தி போடுகிறார்கள் ஆக்கும்.

ஐயா இணையத்தள ஊடக அவியலாளர்களே.. விசுக்கோத்துகளே.. போர்க்களத்தில் இருந்து புலிகள் சொல்வதை மட்டும் எழுதுகள். அதற்கு மேல் ஏன் உங்களுக்கு ஆராய்ச்சி. :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது வந்து என்னவென்றால் பாருங்கோ நெடுக்ஸ்! பிறகு ஒரே செய்தியைப் போட்டால் குறித்தவர்களின் செய்தியைக் கொப்பியடிச்சுப் போட்டமாதிரியல்லவா போகும்.. எங்களுக்கும் செய்தி வன்னியில் இருந்து வாற மாதிரிக் காட்ட, 5 ஆட்லரி என்றால், 6,7 என்று கூட்டிக் குறைச்சு எழுதணும். இது தான் ஊடகதந்திரம்.

அதை விட ஈகோ, தனிப்பட்ட விருப்பங்கள், பண்புகளைத் வைச்சும் தான் செய்தி எழுதணும். அப்போது தான் அவை பெறுமதி மிக்க செய்திகளாக மாறும்.

இல்லை நெடுக்கண்ணா!

அவர்களுடைய ஆய்வு உரிமையை நாம் பறிக்கலாகாது. அவர்களுடைய ஆய்வு உரிமைக்கு நாம் குறுக்கே நிற்க கூடாது. அவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று அங்கிருந்து ஆராய்ச்சி செய்து ஆய்வு கட்டுரையை வடியுங்கள். இல்லையேல் களத்தில் இருந்து வரும் செய்திகளை போட்டுவிட்டு உங்கள் கதிரையில் உட்காருங்கள் என்பதே எனது கருத்து!

வீரத்துடன் களமாடி வீரமரணமடைந்த

கரும்புலி லெப்.கேணல் மாறன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலைஇனியவன்

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அது வந்து என்னவென்றால் பாருங்கோ நெடுக்ஸ்! பிறகு ஒரே செய்தியைப் போட்டால் குறித்தவர்களின் செய்தியைக் கொப்பியடிச்சுப் போட்டமாதிரியல்லவா போகும்.. எங்களுக்கும் செய்தி வன்னியில் இருந்து வாற மாதிரிக் காட்ட, 5 ஆட்லரி என்றால், 6,7 என்று கூட்டிக் குறைச்சு எழுதணும். இது தான் ஊடகதந்திரம்.

அதை விட ஈகோ, தனிப்பட்ட விருப்பங்கள், பண்புகளைத் வைச்சும் தான் செய்தி எழுதணும். அப்போது தான் அவை பெறுமதி மிக்க செய்திகளாக மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்

அதேபோல்தான்

இந்த வீர அஞ்வலிகளும் எனக்குப்படுகின்றன

ஒருவர்அஞ்சலி என்பார்

மற்றவர் வீர அஞ்சலி என்பார்

இன்னொருவர் அதற்கும் மேலே போய் புலி அடித்ததாம் என்றவுடனேயே அஞ்சலி வசனம் எல்லாம் எழுதுவார்

இப்படி ஆளை ஆளை மிஞ்சி எப்படி அஞ்சலிக்கு வசனம் எழுதுவதிலேயே கவனம் செலுத்துகின்றோமே தவிர

அவர்களின் கனவுகளை நிறைவேற்ற....

ஒவ்வொரு அஞ்சலி எழுதும் போதும் ஏதாவது செய்தோமென்றால்....................?????????????

புதினத்தின் செய்தியோடு கொசுறுத்தகவலை சேர்த்துவிட்டு.. வன்னியில் இருந்து வரும் செய்தி என்று சொன்னால் எம்மால் அதை உறுதிப்படுத்தத்தான் முடியுமா என்ற துணிச்சலில் தான் பல புலம்பெயர் ஊடகங்களும் ஊடக அவியலாளர்களும் செய்திகளும் புனைகதைகளும் புளுகுக்கட்டுரைகளும் வரைந்து கொண்டிருக்கின்றனர்.. குறிப்பாக இணையத்தளங்களுக்கு.

புலிகள் அழித்துவிட்டதை.. இவர்கள் பொறுக்கிக் கட்டி இழுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு செய்தி போடுகிறார்கள் ஆக்கும்.

ஐயா இணையத்தள ஊடக அவியலாளர்களே.. விசுக்கோத்துகளே.. போர்க்களத்தில் இருந்து புலிகள் சொல்வதை மட்டும் எழுதுகள். அதற்கு மேல் ஏன் உங்களுக்கு ஆராய்ச்சி. :rolleyes::unsure:

என்ன நெடுக்கு அண்ணா...

அவங்க ஆய்வு செய்து புளுகி எழுதினால்தானே நீங்கள் விமர்சனம் செய்து லபோ லபோனு யாழ்களத்தில கத்தலாம் :lol:

Edited by Kuddi thampi

வீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள். நெடுக்ஸ் இன் கருத்தே எனது கருத்தும்.நாம் எமது பங்களிப்பை சரியாக செய்து வந்தாலே காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வசம்! 6 ஆட்டிலறிகள் புலிகளால் அழிப்பு!

சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மூங்கிலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினால் ஆட்டிலறித் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி ஒன்று மூங்கிலாற்றில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் அமைக்கப்பட்ட ஆட்டிலறி ஏவுகணைத் தளத்தில் இருந்த 6 ஆட்டிலறிகளைக் (122 மில்லி மீற்றர் - பற்றி ) கைப்பற்றியுள்ளனர்.

ஆட்டிலறியைக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் 25-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

ஆட்டிலறித் தளத்தில் எந்த நேரம் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்த 6 ஆட்டிலறிகளைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப் படுத்திய 1000 அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகள் நோக்கி ஏவியுள்ளனர்.

நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகள் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வன்னி நிலப்பரப்பில் கடந்த சனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் தேசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும்தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.