Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தல இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

+44 (0) 20 8808 0674

  • Replies 102
  • Views 9.4k
  • Created
  • Last Reply

தல இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.+44 (0) 20 8808 0674

நண்றி மீரா..

நண்பர் வட்டமாக பணம் சேர்த்து மொத்தமாக கொடுக்கலாம் எண்று முடிவு எடுத்து உள்ளோம்... வேற்று இன மக்களும் பங்களிப்பதாக வாக்களித்து இருக்கிறார்கள்...

Edited by தயா

இதன் எதிர்மறைத் தாக்கங்கள் புலிகளின் ர்ரல் செய்திவீச்சில் ஒலிபரப்பாகியிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண்' அந்தப்பெயருக்கு ஏற்றபடி நல்லபடியாக எம் உறவுகளின் தேவைகளைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

முயலாமை தான் தோல்வி.

முயற்சிகள் தோல்வி அல்ல

"வணங்கா மண்" போய் சேருமா இல்ல சர்வதேசக் கடற்பரப்பில் வைச்சே இந்திய - அமெரிக்க - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையில் மூழ்கடிக்கப்படுமா..??!

இந்தக் கப்பலுக்கு யார் வழித்துணை வழங்கப் போகினம்..??!

இந்திய - சிறீலங்கா அரசுகளின் அனுமதி இருக்கா..??!

ஐநா அல்லது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுத்து இக்கப்பலை முல்லைத்தீவை நோக்கிக் கொண்டு செல்லுமா அல்லது சிறீலங்காவிடம் ஒப்படைக்குமா..??!

இப்படி இன்னோரென்ன கேள்விகளுக்கு பதில் இல்லாமல்.. கொடுங்கள்.. கொட்டுங்கள் என்றால்..???! இறுதியில் கொடுக்கிறதோட வணங்கா மண் கடலுக்கு அடியில் கொட்டுண்டு போய் கிடக்கும்..! இல்ல சிங்களவனுக்கு புத்தளத்தில அஸ்ரப்பின் பணத்தில் குட்டி போட்டு பெருகிக் கொண்டிருக்கும் சோனிக்கும் போய் சேரும்..! :icon_idea::unsure:

உங்களது கேள்விகள் அனைத்திற்க்கும் புலிகளின் குரல் செய்தி வீச்சில் பதில் அளித்து இருக்கிறார்கள் நெடுக்ஸ்...

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...2/Newsveech.mp3

இணைப்பிற்கு நன்றி.

அனைவரும் ஒத்துழைத்து தாயக மக்களை காக்க உறுதியுடன் செயலாற்றுவோம்.

அடங்காப் பற்று வன்னிக்கு வணங்கா மண் என்ற கப்பல் உணவு, மருந்துகளோடு இங்கிருந்து புறப்படுகிறது என்பது பாதிக்கப் பட்ட தாயக உறவுகளுக்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கு, சிங்களவர்களுக்கு, ஏன் முழு உலகத்தவர்க்குமே செய்திகள் பல சொல்லி நிற்கிறது.

பசியோடு இருக்கும் ஒரு தாய்க்கு உணவு ஊட்டச் செல்லும் கைய்யை தட்டி விடுபவன் எந்தப்பெரிய கொம்பனாக இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் என பிரித்தானியத் தமிழர்கள் புறப்பட்டு விட்டார்கள்.

அசல் வித்தில் முளைத்த தமிழர்களுக்கு இந்த ஓர்மம் இயல்பாகவே இருக்கும் என்று ஊரில் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் எப்படி பங்குபெறுவது என்ற யாருக்காவது தெரிந்தால் எழுதுங்கள்

என் பங்கை உறுதிப்படுத்துவதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் உணவு மருந்து என்ற போர்வையில் ஆயுதம் கடத்த முயற்சித்த கப்பல் தகர்ப்பு!

கடத்தி சென்ற சில ஆயுதங்களும் இந்திய- இலங்கை கூட்டு கடற்படையினரால் மீட்பு. அதற்குள் சில இராசாயன அழிவு ஆயுதங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்த செய்தி வராது தடுக்க நாம் என்ன செய்போகிறோம். வெறும் மலையுடன் ஓடிபோய் மோதி வீழ்வது ஒரு முயற்சி என்று எண்ணலாகுமா? ஆகவே இந்த கப்பல் புறப்படுமுன்னரே.... பல ஊடகங்களுக்கு இது பற்றிய செய்தியை கொடுத்துகொண்டிருக்க வேண்டும். இலங்கையை அண்மிக்கும் கால பகுதிகளில் ஒல்வொருநாளும் இது செய்தியாக படவேண்டும். அதற்கான முயற்சிகளும் ஏறபாடுகளும் முன்னெடுக்க படவேண்டும். அந்த கப்பல் இலங்கையை அண்மிக்கும் கால பகுதியில் பாரிய ஒரு அமைதி போராட்டத்தை ஐநா முன்றலில் செய்ய வேண்டும். கப்பலுக்கு ஏதும் ஆகுமிடத்து அமைதி போராட்டம் அமைதி இழக்கும் ஒரு நிலைமையிருப்பதை ஐநா விற்கு முன்கூட்டியே அறிகுறியாக்கபட வேண்டும். நாம் புலபெயர்ந்தவர்கள் இனியும் கொஞ்சமாவது சில அர்பணிப்புகளுக்கு துணியவேண்டும் இல்லையேல் எல்லாம் செவிடன்காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் CNN AL JZEERA BBC போன்ற சர்வேதேச தரத்திலான ஒரு ஊடகமொன்று எம்மால் உருவாக்கப்படவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். எத்தனை விலைகொடுத்தாவது அதை நாம் செய்ய முன்வரவேண்டும் வெளிநாட்டவர்கள் ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் வேலைக்கு அமர்த்தவேண்டும் சகல சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக அது அமைய வேண்டும். இளைய தலைமுறையே அதில் அதிக முயற்சி கொள்ளவேண்டும். அதை நாம் நிஜமாக்கினால் சன்ரீவி கலைஞர்ரீவி போன்ற எரிகின்ற வீட்டீல் லாபத்தை புடுங்க நினைக்கும் அடாவடிகளை விரட்டியடிக்கலாம். அந்த ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தலாம். இதற்கான அஸ்திவாரத்தை யாழ்களத்தில் உள்ள நாமே போடலாம். பெருமெடுப்பில் தொடங்கி வெற்றிபெறுவோமாயின் பின்நாளில் லாபத்தை கொடுக்க கூடிய தொலைகாட்சி சேவையாக மாற்றலாம். இஸ்ரேல் பலஸ்தீனத்தில் செய்யும் கொடுமைகள் அனைத்தும் மேற்குலகில் மறைக்கபடுவதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் யூதர்களின் காசு தயவில் இயங்குவதே. எமக்காகவோ உண்மைக்காகவோ ஒரு தொலைகாட்சி சேவையி;ல்லை என்ற காரணத்தால்தான் இந்திய வெறிநாய்கள் காலையில் பேசு என்றும் மாலையில் போர் என்றும் வெறிகாரர்கள்போல் பேசுகின்றார்கள்.

நோர்வே மருத்துவர்கள் நாலு பேரும் கனடிய மருத்துவர்கள் 6 பேரும் இக் கப்பலில் போக தயாராக இருப்பதாக கேள்வி.

மருத்துவர்கள் வேண்டாம் குறைந்த பட்சம் தொண்டர்களாக போக எத்தனை தமிழர்கள் தயார்?

வெள்ளைக்காரனே வெளிக்கிட்டுப் போறான் . . .

கொஞ்சம் அதிமேதாவிகள் இஞ்ச இருந்து கொண்டு போகுமா? தாளுமா?

ஆக்கப+ர்வமான விமர்சனங்களை வையுங்கப்பா . . .

வைக்கிற நீங்கள் எந்த இடத்தில நிண்டு சொல்லுறீங்கள் எண்பதையும் சொல்லுங்க.

கப்பலில போறவனுக்கும் கப்பலை ஓட்டுறவனுக்கும் தன்ட உயிரில இல்லாத அக்கறை.

இஞ்ச படுத்துக் கிடந்து கொண்டு பம்மாத்துக் கதைகள் கதைச்சுச் கொண்டு திரியிற உங்களுக்கு இருக்கு எண்டும் போது புல்லரிக்குது.

எனக்குப் போக விருப்பம் ஆனால் என்னை அவர்கள் கூட்டிப் போகனுமே :icon_mrgreen::wub::blink:

Edited by rathy

ஜஙரழவந யெஅநஸ்ரீ'சயவால' னயவநஸ்ரீ'ஆயச 13 2009இ 02:53 Pஆ' pழளவஸ்ரீ'497451'ஸ

எனக்குப் போக விருப்பம் ஆனால் என்னை அவர்கள் கூட்டிப் போகனுமே :டிடiமெ: :டழட: :டிடiமெ:

ஜஃஙரழவநஸ

உங்களுக்கான இடம் இதுவல்ல ரதி. உங்களுக்குத்தான் கருத்தெழுத யாழ்களத்திலேயே நிறையப் பகுதிகள் இருக்கின்றனவே. அங்கு போய் உங்கள் திறமையைக் காட்டவும். தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் இங்கு வைக்க முயற்சியுங்கள்.

சனியன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஈழம் கிடைத்தாலும் இவ்வாறான ஆக்கள் திருந்தவே மாட்டார்கள்.

சொல்ல மறந்திட்டன்.

ஒரு கப்பலை பிடிச்சு அதை அங்க வரைக்கும் கொண்டு போகலாமா?

சட்ட சிக்கல்கள் இருக்கா? பிரித்தானியா என்ன மாதிரி பார்க்குது?

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய போகுது?

இதில் அரசியல் என்ன மாதிரி எல்லாம் இருக்கும்?

இப்படி எல்லாம் அலசி ஆராய்ந்து போட்டுத்தான் இதை ஒழுங்கமைத்து இருக்கினம்.

நல்ல காலம் எல்லாத்தையும் செய்து போட்டு வந்து சொன்னாங்கள்.

முதலே கப்பல் விடப் போறம் எண்டு சொல்லி இருந்தா . . .

கிழிச்சிருக்கும்.

இவ்வளவு சனத்திட்டையும் கடமைப்பட்டு கஸ்டப்பட்டு சேர்க்கிறவங்களுக்கு

என்னைவிட ஆயிரம் மடங்கு பொறுப்பும் அக்கறையும் இருக்கும்

சேகரிப்பவைகளை கவனமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில்.

இது எனது நம்பிக்கை.

நித்திரைப் பாயால எழும்பி இன்ரர்நெட்டை திறந்து போட்டு....

ஆ... கப்பல் போகுதா? ... அதெப்படி போகலாம் ? நான் இஞ்சை ஒரு பெரிய தமிழ் புடுங்கி.

எண்டு நாலு கேள்வி கேக்க வெளிக்கிடுறதுகள் எல்லாம்.

ஐயோ இவங்கள் இப்ப காசு சேர்க்க வெளிக்கிட போறாங்கள்...

அதை குடுக்காம எப்படி தப்பிக்கலாம் . . இதை எப்படி குழப்பலாம் ...

கஸ்டப்படுற சனத்துக்கு ஒரு பவுண் உதவி செய்ய மனமில்லாத செம்மறிகள் என்பதே என் கணிப்பு.

இம்முயற்சி நல்லபடி நிறைவேற வேண்டும்.

அதற்காக முயல்வோம். பிராத்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'சயவால' னயவநஸ்ரீ'ஆயச 13 2009இ 02:53 Pஆ' pழளவஸ்ரீ'497451'ஸ

எனக்குப் போக விருப்பம் ஆனால் என்னை அவர்கள் கூட்டிப் போகனுமே :டிடiமெ: :டழட: :டிடiமெ:

ஜஃஙரழவநஸ

உங்களுக்கான இடம் இதுவல்ல ரதி. உங்களுக்குத்தான் கருத்தெழுத யாழ்களத்திலேயே நிறையப் பகுதிகள் இருக்கின்றனவே. அங்கு போய் உங்கள் திறமையைக் காட்டவும். தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் இங்கு வைக்க முயற்சியுங்கள்.

சனியன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஈழம் கிடைத்தாலும் இவ்வாறான ஆக்கள் திருந்தவே மாட்டார்கள்.

இதிலே பிழையாக நான் என்ன எழுதினேன் தமிழிச்சி? சனியன் என்பவர் தனது பதிவில் தொண்டர்களாக போவதற்கு எத்தனை தமிழர் தயார் எனக் கேட்டார் அதற்கு தான் பதிலளித்திருந்தேன்.எனக்கு உண்மையாகவே போக விருப்பம்.மேலே என்னுமொருவரும் தனி நபர்கள் போக இடமுண்டா எனக் கேட்டுள்ளார்.அதில் என்ன தப்பு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பேப்பர்” இல் வந்த செய்தி

வணங்கா மண்: வன்னிக்கான மனிதாபிமானப் பயணம்

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போர் தீவிரமடைந்து வருகின்றபோதும், எமது மக்களுக்கு உதவுவதற்க, அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டிவருகின்றன. தொண்டு நிறுவனங்களை அங்கு செயலாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்துள்ளது என்பது ஒருபுறமிருக்க அவர்களது நடவடிக்கைகள் சிறிலங்கா அரசிற்கு துணை போவதாகவே காணப்படுகின்றன.

சிறிலங்காப்படையினர்இ பாதுகாப்பு வலயம் என்று ஒரு பிரதேசத்தை அறிவித்துவிட்டு, அங்கு செறிந்து வாழும் மக்கள் மீது கொத்தணி எறிகுண்டுகளை வீசி அவர்களை கொன்று குவித்து வருகிறார்கள். அங்கு காயப்பட்டவர்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்து செல்லும் பணியில் மாத்திரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருகிறது. அதுதவிர வன்னியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்கு வேறெந்த மனிதாபிமான நிறுவனமும் முன்வரவில்லை.

அடுத்த வினாடி உயிர் வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், உணவுக்கும் உறைவிடத்திற்கும் அல்லல் பட்டுக்கொண்டுஇ இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டபடி எங்கள் மக்கள் அவதிப்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் நிலைகுலைந்து போகவில்லை, யாருக்கும் மண்டியிடவும் தயாராகவில்லை. அந்த உறவுகளுக்கு உதவிடும் பொறுப்பினையேற்றுஇ புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முயற்சியே “வணங்கா மண்” என்ற பெயரிடப்பட்டுள்ள மனிதாபிமானப் பணி.

முதற்கட்டமாக வன்னிமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேர்த்துக் கொண்ட, கப்பலில் வன்னிக்குசெல்வதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது. பிரித்தானிய துறைமுகமொன்றிலிருந்து இன்னமும் இருவாரங்களில் புறப்படவிருக்கும் இக்கப்பலில், மருத்துவர்கள, மனிதாபிமானப் பணியாளர்களுடன் ஊடகவியலாளர்களும் செல்லவிருக்கிறார்கள். தமிழ் மருத்துவர்கள் மட்டுமல்லாமல், பிறவினங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் இக்கப்பலில் செல்லுவதற்கு முன்வந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. ஏற்கனவே நான்கு நோர்வீஜிய சத்திரசிகிச்சை நிபுணர்களும, ஆறு கனேடிய மருத்துவர்களும் இக்குழுவினருடன் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அரசியல் பிரமுகர்களும் இம்முயற்சிக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேற்படி முயற்சிக்கு உதவுமாறு அனைத்துலகமட்டத்தில் செயற்படும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பொருளாக பணமாக உதவிடலாம்.

மேலதிக விபரங்களை பின்வரும் முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

VANANGA MAN,

Coordinating Committee for the Mercy Mission to Vanni

Tamil House

Unit 1, Broad Lane

London N15 4AG

www.vannimission.org

info@vannimission.org

44 (0) 20 8808 0674

Edited by MI7

பயங்கரவாதிகள் உணவு மருந்து என்ற போர்வையில் ஆயுதம் கடத்த முயற்சித்த கப்பல் தகர்ப்பு!

கடத்தி சென்ற சில ஆயுதங்களும் இந்திய- இலங்கை கூட்டு கடற்படையினரால் மீட்பு. அதற்குள் சில இராசாயன அழிவு ஆயுதங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்த செய்தி வராது தடுக்க நாம் என்ன செய்போகிறோம். வெறும் மலையுடன் ஓடிபோய் மோதி வீழ்வது ஒரு முயற்சி என்று எண்ணலாகுமா? ஆகவே இந்த கப்பல் புறப்படுமுன்னரே.... பல ஊடகங்களுக்கு இது பற்றிய செய்தியை கொடுத்துகொண்டிருக்க வேண்டும். இலங்கையை அண்மிக்கும் கால பகுதிகளில் ஒல்வொருநாளும் இது செய்தியாக படவேண்டும். அதற்கான முயற்சிகளும் ஏறபாடுகளும் முன்னெடுக்க படவேண்டும். அந்த கப்பல் இலங்கையை அண்மிக்கும் கால பகுதியில் பாரிய ஒரு அமைதி போராட்டத்தை ஐநா முன்றலில் செய்ய வேண்டும். கப்பலுக்கு ஏதும் ஆகுமிடத்து அமைதி போராட்டம் அமைதி இழக்கும் ஒரு நிலைமையிருப்பதை ஐநா விற்கு முன்கூட்டியே அறிகுறியாக்கபட வேண்டும். நாம் புலபெயர்ந்தவர்கள் இனியும் கொஞ்சமாவது சில அர்பணிப்புகளுக்கு துணியவேண்டும் இல்லையேல் எல்லாம் செவிடன்காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் CNN AL JZEERA BBC போன்ற சர்வேதேச தரத்திலான ஒரு ஊடகமொன்று எம்மால் உருவாக்கப்படவேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். எத்தனை விலைகொடுத்தாவது அதை நாம் செய்ய முன்வரவேண்டும் வெளிநாட்டவர்கள் ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் வேலைக்கு அமர்த்தவேண்டும் சகல சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக அது அமைய வேண்டும். இளைய தலைமுறையே அதில் அதிக முயற்சி கொள்ளவேண்டும். அதை நாம் நிஜமாக்கினால் சன்ரீவி கலைஞர்ரீவி போன்ற எரிகின்ற வீட்டீல் லாபத்தை புடுங்க நினைக்கும் அடாவடிகளை விரட்டியடிக்கலாம். அந்த ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தலாம். இதற்கான அஸ்திவாரத்தை யாழ்களத்தில் உள்ள நாமே போடலாம். பெருமெடுப்பில் தொடங்கி வெற்றிபெறுவோமாயின் பின்நாளில் லாபத்தை கொடுக்க கூடிய தொலைகாட்சி சேவையாக மாற்றலாம். இஸ்ரேல் பலஸ்தீனத்தில் செய்யும் கொடுமைகள் அனைத்தும் மேற்குலகில் மறைக்கபடுவதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் யூதர்களின் காசு தயவில் இயங்குவதே. எமக்காகவோ உண்மைக்காகவோ ஒரு தொலைகாட்சி சேவையி;ல்லை என்ற காரணத்தால்தான் இந்திய வெறிநாய்கள் காலையில் பேசு என்றும் மாலையில் போர் என்றும் வெறிகாரர்கள்போல் பேசுகின்றார்கள்.

செயற்பாட்டின் அடுத்த நகர்வொன்றினை எண்ணியிருக்கின்றீர்கள். நல்ல விடயம் நல்ல எண்ணங்கொண்ட யாவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ரதி, உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். அதைவிடுத்து, இங்கே கருத்தெழுதி, அதற்கு முகக்குறிகள் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள் சனியன். தமிழச்சி.... போன்றவர்கள்.

நண்பர்களே இந்த கப்பல் பயணம் நிறுத்தபடவேண்டும் என்பது யாருடைய எண்முமில்லை இங்கே. என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசியதலைவரே பலமுறை சொல்லுவாரே சின்ன பாம்பு என்று சின்ன தடியால் அடிக்க கூடாது என்று. அதுதான் இங்கே நடக்கிறது. கப்பலை அனுப்பினோம் என்பது பொருட்டல்ல அதை சரியான கரை சேர்த்தோம் என்பதே எமது யாபரினதும் அவா. அதற்கு தடைகளாக எது இருக்கும் இந்த தடைகளை நாம் எவ்வாறு உடைக்கலாம் என்று யோசிக்க வேண்டாமா நண்பர்களே.

அதை உரியவர் செய்வார் செய்வார் என்றால் அந்த உரியவர் யார்? அவருக்கு நாம் ஆதராவாக இருக்க வேண்டாமா? எமது ஒவ்வொரு சதமும் உரியமுறையில் உரிய இடங்களை அடைய வேண்டும். அதற்காக நாம் பல பாதைகளை உருவாக்க வேண்டும் எ;னபதே எங்கள் அவாவாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலில் சொன்ன பிறகும் பெயர் விபரங்களை வேணும் என்றால் சற்று யோசிக்க வேண்டும்.

இந்த நிகழ்வின் போது மட்டுமல்ல. பட்டினியால் பரிதவிக்கும் எம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ஏதாவது செய்யப் புறப்பட்டதும் அந்தப் பணிக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாது வீட்டிலே இன்ரெர்நெற்றுக்கு முன்னாலை குந்திக் கொண்டு இருந்து ஆய்வரங்கம் செய்யிற கன பேர் இருக்கினம்.

உப்பிடித்தான் அமெரிக்கப் பேரணிக்கு பல பேருந்துகளில் இஞ்சையிருந்து சனம் புறப்பட்டுப் போன அண்டு அவையள் போன பேருந்துகள் குறித்த இடத்தை அடைய தாமதமாகுது எண்ட செய்தியைப் பாத்துப் போட்டு அந்தப் போராட்டத்திலை பங்களிக்காமல் வீட்டிலை இருந்த 'இன்ரர்நெற் போராளிகள்' கொஞ்சப் பேர் கொதிச்செழுந்தவை. உவையளுக்கு மூளை பிடரிக்குள்ளையோ இருக்குது. வேளையோடை போகாமல் இவ்வளவு நேரமும் என்ன செய்தவை எண்டு ஆயிரம் கேள்வி கேட்டவை.

அதே மாதிரி பிரித்தானியாவிலை பாராளுமன்றத்திற்கு முன்னால் கண்டனப் பேரணி எண்டதும் அது நடந்து கொண்டிருந்த அதே நேரம் அங்கை போகாத சில 'சிங்கங்கள்' உவங்களுக்கு அகிம்சை வழி சரிவராது றோட்டை மறியுங்கோடா பாளிமென்ருக்குள்ளை குதியுங்கோடா எண்டு உணர்சிப் பிளம்பாக் கொந்தளிச்சவை. உவை போய் முதலிலை குதிச்சுக் காட்டினால் மற்றச் சனமும் பின்னாலை போகும் தானே. அதைச் செய்ய மாட்டினம்.

இந்தக் கப்பல் விசயத்திலையும் பாஞ்சு விழுந்த கனபேர் இப்ப புலிகளின் குரலிலையும் இதைப் பற்றிக் கதைக்கினம் எண்டதும் கொஞ்சம் சுருதியைக் குறைச்சிட்டினம். ஆனாலும் நான் பிடிச்ச முயலுக்கு முண்டு கால் எண்டதிலை இருந்து விலகத் தயாரில்லை.

இந்த இன்ரெர்நெற் கருத்தாளர்கள் கதைச்சுக் கொண்டே இருக்கட்டும். திடமான உள்ளம் கொண்டவை தங்கள் பணியைச் செய்யட்டும். அவைக்கு நாங்களும் எங்களாலை முடிஞ்ச வகையிலை முழுமையான ஒத்துழைப்பைக் குடுப்பம்.

உப்படித்தான் என்னை ஒருவர் பிரித்தனியாவில் நடந்த பேரணிக்கு நான் போகும் போது kettar.. உங்களுக்கு என்ன தெரிந்து போறிர்கள் என்று கேட்டார்.. ஒன்றும் தெரியாத நீங்கள் போயுதான் ஈழம் கிடக்க போகுதா என்று கேட்டார்.. எனக்கு கவலையா போயுட்டுது என்றாலும் சொன்னன் எனக்கு தெரியுதோ தெரியலையோ என்னால் முடிந்தது இதுதான் நான் பண்ணுறன் என்று சொன்னன்.. வெட்டியா பேசுவர்கள் ஆயிரம் பேர்.. இதுகளை காதில் வாங்கி இட்டு இருக்க முடியாது..

யாரவது லண்டனில் இருப்பவர்கள் இருந்தால் சொல்லுங்கள் காசு குடுக்கலாமா இல்லை என்ன மாதிரியான சாமங்கள் குடுக்கலாம் என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை உரியவர் செய்வார் செய்வார் என்றால் அந்த உரியவர் யார்?

கனம் மருதங்கேணி,

இது ஒன்றும் அனாமதேயங்களின் இணையவழி செயற்திட்டமல்ல. முகமுடைய மனிதர்களே இதனை முன்னெடுக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்களை ஏற்கனவே தந்தாயிற்று. இன்னமும் யார் அவை என்று கேட்டுக் கொண்டிருப்பீர்களேயானால் .. அவர்களது விபரங்களை நாம் தரப்போவதில்லை, மாறாக உங்களது நோக்கம்பற்றியே சந்திக்க வேண்டியிருக்கும்.

இவர் இந்த எண்ணத்தோடுதான் இதை எழுதியிருப்பார் என்று எண்ணிவிட்டு ஒரு கருத்தை வாசித்தால். நீங்கள் எதை எண்ணினீர்களோ அதே அர்த்தத்தோடு கருத்து நிற்பது ஒன்றும் வியப்பில்லை. நண்பர் எம்17 நான் முன்னுக்கு எழுதியதையும் விட்டு விட்டு பின்னுக்கு எழுதியதையும் விட்டு விட்டு. ஒரு கேள்வியை தூக்கி போட்டார். போட்டுவிட்டு நான் அவர்களின் விபரம் கேட்டு எழுதியதாக ஒரு காரமான பதிலையும் எனக்கு அளித்திருக்கின்றார். அதனால்தான் நான் இதை எழுத நேரிடுகின்றது. தவிர ஒரு ஆக்கபூர்பமான விடயத் தலைப்பின் கீழ் வீண் வரண்டாவாதம் செய்வதில் எந்த பயனுமில்லை.

உரியவர் செய்வார் உரியவர் செய்வார் என்றால் யாரந்த உரியவர்?

அந்த உரியவருக்கு உள்ள உரிமையும் கடமையும் எமக்கில்லையா அவருக்கு கொடுக்கும் எமது தோளை இன்னமும் கொஞ்சம் உயர்த்தலாகாதா? என்ற பொருளோடு எழுதியிருந்தேன். இது மெகாசீரியல் காலம் என்பதால் எல்லாவற்றையும் விரித்து எழுதாதது எனது குறையாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.