Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

ஐயோ நிழலி நான் உங்களை சொல்லவில்லை :rolleyes:

என்னை வைத்து காமெடி கீமடி செய்யவில்லை தானே? :rolleyes::)

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் எமது போரட்டத்துக்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள்.

அப்படியான

அனைத்து நாடுகளையும் எதிர்ப்போம்.

அவர்களிடமிருந்து பெற்றுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் உதறித் தள்ளுவோம்.

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

சபேசன்

இங்கே உங்கள் பிரச்சனை இந்திய சினிமா எதிர்ப்போ

தமிழர் பிரச்சனைகளை சண் - கலைஞர் எதிர்ப்போ அல்ல

உண்மையிலேயே ஒரு தொலைக் காட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் தேசியத்தை பாவிக்க முயல்கிறீர்கள்

இங்கே நாம் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள்தான் போகிறோம்.

அங்கே மட்டுமல்ல (தமிழகம் : பம்பாய் . டெல்லி)

அமெரிக்கா : மலேசியா போன்ற இடங்களில்

ஊர்வலம் போவது இந்திய தமிழர்

அங்கே தீயிட்டு தன்னையே சாகடித்துக் கொள்வது இந்திய தமிழர்.

இவர்களது உணர்வை : அன்பை இழக்கப் போகிறீர்கள்.

ஏதோ புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவதாக சொல்கிறீர்களே?

போராடுவதாக சொல்கிறீர்களே?

இந்த நாடுகள் தொடர்ந்து பண உதவிகளை செய்கிறது.

தொடர்ந்தும் ஆதரவு வழங்குகிறது.

சும்மா வீதிகளை தடைசெய்து ஒன்றும் நடக்காது.

கூட்டம் கூட்டி மட்டும் ஒன்றும் ஆகாது.

உங்களைப் போன்றவர்கள் ஒரு குழுவாக போய்

இங்குள்ள அரசியல் தலைமைகளை சந்தியுங்கள். பேசுங்கள்.

போராடுங்கள்.

இது போன்ற காட்சிகளை எத்தனை இந்திய படத்திலேயே பார்த்து நாமே திட்டி இருப்போம்.

எத்தனை பிரசவ வேதனைகளை

எத்தனை இழப்புகளை

எத்தனை அவசர தேவைகளை

இழந்து மக்கள் அவலப்படுவதை வெறுத்து பேசியிருக்கிறோம்?

இப்போது நாமே அதை செய்கிறோமே?

இதன் பெயர்தான் அறிவா?

உங்களால் இதையெல்லாம் சிந்திக்க எங்கே நேரம்.

எதையாவது குட்டிச் சுவராக்கிவிட்டு

தலையை சொறியத்தான் நேரம் இருக்கும்.

அதே இந்திய சினிமா நடிகர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்தும் போது

உங்களுக்கு வராத கோபம் எல்லாம் இப்ப பொத்துக் கொண்டு வருது.

இதனால் பாதிப்படையப் போவது சண் - கலைஞர் மட்டுமல்ல

அங்கு வேலை செய்யும் எமக்கும் ஆதரவான பல்லாயிரம் மக்களும்தான்.

ஒரு நிறுவனத்தை அடித்து உடைத்தால்

அந்த நிறுவனம் சமாளித்துக் கொள்ளும்.

அதை நம்பி வாழும் ஊழியர்களது குடும்பங்கள் பசியோடும் பட்டினியோடும் வேதனைப்படும்.

அவர்களில் பலர் எமக்கு சார்பானவர்களாகவே இருப்பார்கள்.

ஒன்றை செய்துவிட்டு துன்பியல் என்று நெழிந்தோம்.

அதை இல்லை என்றே மறுத்திருக்கலாம்.

அதையே செய்யவில்லை.

எல்லாம் அங்கு நடக்கும். அவங்களுக்கு தெரியும் என்று மேளம் தட்டிப் போட்டு

கையிலிருந்த கயிறை தூக்கி எறிஞ்சுட்டு

தப்புறதுக்கு புல்லாவது கிடைக்காதா என அலையிற பரிதாபம் இன்று.

இதை இப்ப சொல்லாதவங்க

இனி சொன்னா என்ன

சொல்லாட்டித்தான் என்ன?

இப்படியான புறக்கணிப்பை தாயகத்திலிருந்து

அதன் முக்கியஸ்தர்கள் அறிவிக்கட்டும்.

நிச்சயம் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

நான் வாழும் நாட்டில ஒரு கடைக்காரரிடம்

சிறீலங்காவிலிருந்து வரும் பொருட்களை விக்கிறதை நிறுத்துங்களேன் அண்ணன் என்றேன்.

என்னிடம் ஏன் அண்ண சொல்றியள்

கொண்டு வந்து போடுறவையிட்ட சொல்லுங்களேன் .

அவங்க ஆக்கள்தானே கொண்டு வந்து போடுறதெண்டு

நக்கலா சிரிக்கிறார்.

வன்னியல சிறீலங்கா இராணுவம்தான் மோதுவதாக தகவல்.

இப்பதான் தெரியுது சண்காரர் அங்க களத்தில நிக்கினம் எண்டு

எதிரியென்றால் எதிரி . நண்பனென்றால் நண்பன்.

பிறகென்ன கொஞ்சல் குலவல்.

***

இந்த கருத்துகளை நீங்கள் வாசித்தாலே போதும் இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது இவர் இந்த தலைப்பு பற்றி இன்னமும் ஒரு உருப்படியான கருத்தை முன்வைக்க முன்னவரவில்லை மாறாக. இங்கே நடத்தபடும் குறைந்தபட்ச அறவழி போராட்ங்களையும் குற்றுயிரும் கொருயிருமாக ஜனநாயகம் ஜனநாயகம் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளில் அவர்கள் இதற்கான அனுமதிகளை நிறுத்து முன்பே நாம் நிறுத்திவிட வேண்டும் என்பதே இவரது அவா. இந்த சிறியளவிலான போராட்டம் சில உள்ளநாட்டு பத்திரிகைகளை தொட்டிருப்பது இவருக்கு எந்தளவு வேதனையை கொடுத்திருக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அறிவுரை போல் சொல்லிகொள்கிறார் நாம் அனைத்து நாடுகளையும் எதிர்த்து போராடவேண்டுமாம். அதற்கு சில வினாடி முன் வைதத்த கருத்தில் தனது பிறிதொரு கருத்து உயிர்வாழ நாம் உலகநாடுகளையும் எதிர்த்து போராடலாமா? என்ற கேள்வியை அவரே முன்வைத்திருந்தார். அயன் படம் ஓடாதுபோனால் சன் தொலைகாட்சியில் வேலைபார்க்கும் சில ஈழ ஆதரவாளர்களை பாதிக்கும் என்ற கருத்தையும் இவர் முன்வைக்கிறார். எந்தளவு தூரம் ஆய்வு செய்கிறார்? ஆக உலக வெப்பநிலை தொடர்பான போராட்டங்கள் காபன்டி ஓக்சைட்டை நாளந்தாம் வெளியேற்றும் தொழில்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை பாதிக்குமாம் என்பது இவரது தோரணை. இதில் நாளையை பற்றி புலிகளும் அதன் ஆதரவாளர்களும் யோசிப்தில்லையாம் வேதனைபடுகிறார். உலவெப்பம் உச்சநிலை எய்தின் உலகில் மனித வாழ்வே கேள்விக்குள்ளானது. இதில் தொழில்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளியின் வாழ்வு எவ்வாறானது? தமிழினத்திற்கு தூரோகிகளேனிலும் அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை ஸ்ரீலங்கா இனபடுகொலை இராணுவம் அன்போடு பேணவில்லையா? அப்போ தழிழர்களை அவர்கள் கொல்கிறார்கள் என்று உங்களால் எப்படி கூறமுடியும் என்ற கேள்வி ஒன்று புதைந்து கிடக்கிறது. ஆக எரிகிற வீட்டில் லாபத்தை புடுங்க நினைக்கும் சன்ரீவி போன்ற ஊடகங்களை நாம் ஏன் எதிர்க வேண்டும்? ஆனாலும் அதை தமிழ் மக்களாகிய நாங்கள் முடிவுசெய்து செய்ய கூடாது. புலிகளை இதற்குள் இழுத்து சன்ரீவிக்கும் புலிகளுக்கும் ஒரு முரண்பாடு உருவாகும் எனில் தான் அதற்கு ஆதரவு தருவதாக உறுதி தருகிறார். வார்த்தை வன்னியில் இருந்து வரவேண்டுமாம். ஆக ஒட்டு மொத்தமாக "தலைவன்' என்ற உறுப்பினரை நான் கேட்கிறேன். நீங்கள் சொல்ல வருவது என்ன? உங்களிடம் உள்ள நிலைப்பாடு என்பது என்ன?

குட்ட குட்ட ஒரு உயிர்இனம் குனிந்து கொண்டே இருக்கமுடியாது. அது மரணம் கிட்டயில் போராடியே சாகும். இது இயற்கை இதை எந்த பிராணியாலும் பிடுங்க முடியாது. அதுதான் இப்போது நடக்கிறது. இந்த நிலைக்கு வந்தோம் இந்த நிலைக்கு வந்தோம் என்று நாம் எந்தநிலைக்கும் வரவில்லை. நீதியும் மனிதமும் இறக்கும் நிலையில் மனிதர்கள் இறப்பது அதிசயமல்ல. ஆனாலும் இறுதியில் தர்மம் வெல்லும் இதுவே இதுவரை இந்த உலகில் இதுவரை நடந்தது. இனியும் அதுதான் நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் தமிழர்கள் ஆகிய நாங்கள் புலிகளுடன் புறப்பட்டு பயணிக்கிறோம். நாம் வயலை பண்படுத்தி நெல் விதைத்தாலும் பல புல்லுகள் முளைப்பதை நாம் மூன்று வயதிலேயே பார்த்திருக்கிறோம். ஆகவே எந்த துரோகமும் எமை நிறுத்திவிடாது என்பதை புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்வது அவர்களுக்கே நல்லது.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா சொல்வது போல நாம் 17 சதுர கிலோ மீற்றர்களுக்குள் உள்ள இயக்கம் அல்ல. தமிழ் மக்கள் இருக்கும் இடம் எங்கும் வியாபித்து நிற்கும் உலகு எங்கும் கூட வியாபித்து தமிழ் மக்களின் உள்ளங்களின் உணர்வாக இருக்கும் விடுதலை அமைப்பு.

எம்மை இலகுவில் அழித்து விடலாம் என்ற எதிரியின் கணக்கை தகர்க்கும் வல்லமை எம்மிடம் உண்டு. அதனை நாம் உறுதியாகச் செய்வோம். எவரும் அஞ்சவோ கலங்கவோ ஐயுறவோ தேவையில்லை. உறுதியுடன் தளராது குழப்பம் இல்லாது செயற்படுங்கள். எதிரியின் தாக்குதல்களில் உங்களின் உயிர்களை காத்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார் சி.இளம்பருதி

இங் உள்ள சில உறுப்பினர்களின் நெஞ்சில் வேல்பாய்ச்ச கூடியதுதான் இந்த கருத்து. அதற்கு என்ன செய்ய உண்மை இதுவாகதானே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் பிரச்சினைகளை வளர்க்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொறுத்தவரை ஐங்கரனிடம் சொல்லிக்கொள்ளலாம் சண் நிறுவன படங்களை திரையிட வேண்டாம் என்று.

சபேசனிடம் ஒரு கேள்வி குறை நினைக்க வேண்டாம். நீங்கள் திருமணமானவரா? ஆம் என்றால். உங்கள் மனைவி விழாக்களுக்கு அணியும் ஆடைகள் இந்திய ஆடைகள்தானே? அதிலை கை வைத்தால் பெண் வர்க்கமே ஈழப்போராட்டத்துக்கு எதிராக கிளம்பிவிடும்.

இதுக்கெல்லாம் குரல் கொடுக்கின்றீர்கள் . இங்கு எத்தனை விழாக்கள் நடைபெறுகின்றது. அதற்காவும் குரல் கொடுங்கள். சண் நிறுவனத்துக்கு எதிரக செயற்பட நல்ல வழி முதலில் அவர்களுடைய தொலைக்காட்சியை புறக்கணிக்கலாம். பலரால் புறக்கணிக்க முடியாவிட்டால் அவர்களை இலவசமாக பார்க்க வைக்கலாம். அதற்கான வழியை சொல்லிக் கொடுங்கள் மற்றவர்களுக்கு. அடுத்த அடியாக படங்களில் கைவைப்போம்.

  • தொடங்கியவர்

நான் இந்தியப் பொருட்களை புறக்கணிப்பது பற்றி இங்கே பேசவில்லை. அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர் தமிழர்கள் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆதரிக்கவும் செய்கின்றேன். அதற்கான பல காரணங்களில் ஒரு காரணத்தை இங்கே எழுதியும் இருக்கின்றேன்.

நான் இங்கே பேசுவது எமக்கு எதிராக செயற்படும் ஒரு ஊடகம் பற்றியே. எமக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு, தன்னுடைய பொருட்களையும் (சன் தொலைக்காட்சி, திரைப்படங்கள்) எம்மிடமே விற்கின்றது. நாமும் அதை வாங்கி அந்த நிறுவனத்திற்கு நல்ல இலாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றோம்.

இந்த ஊடகம் இன்று எமக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கான எதிர்ப்பை தெரிவிப்பது பற்றியே நான் பேசுகின்றேன்.

இதை அனைவரும் சரியாகப் புரிந்து கொண்டு கருத்து வையுங்கள்

மென்மேலும் பிரச்சினைகளை வளர்க்க வேண்டுமா?

சிங்களவனின் பொருட்களை புறக்கணிகிறீர்கள் நியாயமானது... சிங்களவனுக்கு வலுச்சேர்க்கும் ஜப்பானின் பொருட்களை புறக்கணிக்க கூறுகிறீர்கள் தார்மீக அடிப்படை கொண்டது...

உங்களுக்கு ஆதரவு தரவில்லை என்பதுக்காக ஒரு ( தமிழர்களின்) தொலைக்காட்ச்சியை புறக்கணிக்க சொல்வது எந்த வகை நியாயம்...?? உங்களின் தலையில் குண்டு போட ஆட்ச்சியில் இருக்கு கலைஞர் துணை போவது போலவா போகிறார்கள்...??

முன்னரும் இப்படித்தான் கேடம்பாக்க மாயை எண்று கட்டுரை எல்லாம் எழுதி தமிழ் படங்களை புறக்கணிக்க சொல்லி எழுதினார்கள்... அப்போது தமிழக திரைப்பட துறையினார் ஈழத்துக்கு ஆதரவு அளிக்க இல்லை... அபோது யாரும் அந்த படங்களையும் துறையினரையும் புறக்கணிக்க இல்லை, அவர்களுக்கு ஈழத்து உணர்வுகளை ஊட்ட முனைந்தனர்... அதுக்கு சீமான் அண்ணா போண்ற ஒப்பற்ற கனவான்கள் கருணை இருந்தது... இப்போது யாரும் தமிழ் திரைப்படங்களுக்கு எதிரிகள் இல்லை...

தமிழர்களை புறக்கணிக்காதீர்கள், ஆதரவு வேண்டி நடவடிக்கை எடுங்கள், புரிய வையுங்கள், ஆதரவு தர நிர்ப்பந்தியுங்கள்.... பிறகு இதையும் சகோதர யுத்தம் எண்று பிரச்சார படுத்த முனைவார்கள்...

தமிழர்கள் யாரும் எதிரிகளாக்க வேண்டிய நிலையிலா எம்மக்களின் நிலை இருக்கிறது....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ஐங்கரனிடம் சொல்லிக்கொள்ளலாம் சண் நிறுவன படங்களை திரையிட வேண்டாம் என்று.

சபேசனிடம் ஒரு கேள்வி குறை நினைக்க வேண்டாம். நீங்கள் திருமணமானவரா? ஆம் என்றால். உங்கள் மனைவி விழாக்களுக்கு அணியும் ஆடைகள் இந்திய ஆடைகள்தானே? அதிலை கை வைத்தால் பெண் வர்க்கமே ஈழப்போராட்டத்துக்கு எதிராக கிளம்பிவிடும்.

இதுக்கெல்லாம் குரல் கொடுக்கின்றீர்கள் . இங்கு எத்தனை விழாக்கள் நடைபெறுகின்றது. அதற்காவும் குரல் கொடுங்கள். சண் நிறுவனத்துக்கு எதிரக செயற்பட நல்ல வழி முதலில் அவர்களுடைய தொலைக்காட்சியை புறக்கணிக்கலாம். பலரால் புறக்கணிக்க முடியாவிட்டால் அவர்களை இலவசமாக பார்க்க வைக்கலாம். அதற்கான வழியை சொல்லிக் கொடுங்கள் மற்றவர்களுக்கு. அடுத்த அடியாக படங்களில் கைவைப்போம்.

உங்களுடன் எதிர் வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் சில விடயங்களை நானும் நீங்களுமாக தெளிவுறலாமா? என்பதுதான் எனது முயற்சி. சன்ரீவி யின் அயன் படத்தை புறக்கணிப்பது பற்றி பேசுகையில். இந்திய தயாரிப்பு ஆடைகளை நீங்கள் ஏன் தூக்குகின்றீர்கள்? இங்கே பல விடயங்கள் விழங்காமல் இருக்கிறது. சன்ரீவியின் வெளிநாட்டு பார்வையாளராக நின்று அதன் வெளிநாட்டு ஒலிபரப்பை உறுதிசெய்பவர்கள் ஈழதமிழர்களே அப்படியிருந்தும் அவர்களின் துன்பகரமான வாழ்வியல் பற்றி ஒரு தீர்கமான விடயத்தை ஒளிபரப்ப பின்னிற்பதோடு இந்தியாவின் நயவஞ்சனைத்தனமான போக்கை ஆதரிக்கவும் முற்படுகின்றது இந்த சன்ரீவி. அது எமது தயவில் தனது வெளிநாட்டு பிரஜாஉரிமை பெற்றும் அதைசெய்கின்றது எனில். நாம் முட்டாள்கள் என்ற தோணியில்தான் இது நடக்கின்றது. ஆகவே சன்ரீவியின் எண்ணங்களை நாம் வாழவைப்பதா இல்லை சாவில் நிற்கும் எமது இனத்தை சன்ரீவி போன்ற தொலைகாட்சி நிறுவனங்கள் ஊடாக உண்மை நிலையை கொண்டுவர போராடுவதா? என்பதுதான் கேள்வியாக நிற்கின்றது. நாம் இந்தியாவின் எதிரிகளல்ல ஆனால் எமை இந்தியாவின் எதிரிகளாக்கும் விஸமிகளை நாம் இனம் கண்டு அதை வெளிபடுத்த வேண்டும் என்பதே எனது நிலைபாடு. இந்தியாவை நாம் எதிரியாக்கிவிட முடியாது அதற்காக இராஜதந்திரம் என்று சில விஸமிகளின் அடாவடிதனங்களை ஏற்கவும் முடியாது. ஆகவே நாம் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும் எனும் உங்களின் எண்ணமும் எனது எண்ணமும் ஒன்றுதான். சன்ரீவியை நாம் எதிர்க்கவில்லை ஆனால் காலத்தின் தேவையறிந்து பொறுப்புடன் நடக்கவே;ணடும் என நாம் வற்புறுத்த வேண்டும். அந்த வற்புறுத்தல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதே கேள்வி. அதற்கான விடையாகத்தான் அயன் திரைபடம் வந்தது. அது சரியான தேர்வா பிழையான தேர்வா என்பதை நல்ல கருத்தாடல் மூலம் மன்வைத்தாலே புரிந்துகொள்ள முடியும். சன்ரீவி றோவின் ஊதுகளாலாக கூட சில சமயங்களில் ஊதுகின்றது என்பதை நீங்கள் கடந்தகாலங்களில் அறிந்திருக்கலாம்.

***

இதில் சபேசன் கேட்டதில் என்ன தவறு!! "சன் குழுமம்" எனும் ஓர் பன்னாடைக்குடுமபம், எம் நலனில் எந்த ஒரு அக்கறையும் இல்லை, ஆனால் எம் பணத்தை குறி வைத்து தொலைக்காட்சி, திரைப்படங்கள் வெளியிட நாம் அதை புறக்கணிக்கக் கோருவதில் என்ன தவறு???

இதை புறக்கணிக்கிறோமோ இல்லையோ, புறக்கணிப்பு என்ற செய்தியே சில தாக்கங்களை நிச்சயம் ஏற்படுத்தும்!!!!

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சண் ரீவி மட்டும் அல்ல, ஜெயா , ராஜ் , கலைஞர், விஜய் ரீவி எண்று எந்த ரீவி உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறீர்கள்... புறக்கணிப்பதாக இருந்தால் அந்த ரீவிகளில் வரும் எல்லாவற்றையும் நாடகங்கள் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் புறக்கணியுங்கள்...

இதை உங்கட வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கலாம்... தவறு இல்லை... அப்படி பார்த்தால் தமிழ் நிகள்ச்சிகள் எதையும் நீங்கள் திரையில் பார்க்க கூடாது...

தயா கோவிக்கவேண்ணாம். இவற்றை காசு கொடுத்தா பார்கிறார்கள்? இது சன்ரிவி தயாரிக்கும் படம். படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு நட்டம் வரும்.

அதைவிடுத்து தொலைக்காட்சி நாடகம் அதில் போடும் நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் என்ன பிரயோசனம்?? :unsure::):lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்க்கருத்து எழுதுபவர்கள் முதலில் "புறக்கணிப்பு" என்பதற்கு உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுவும் ஒருவகையில் எம்மவர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு சமமானது.

இந்த வழிமுறைகளாலும் எமது ஈழபிரச்சனைகளை வெளிப்படுத்தலாமென நினக்கின்றேன்.

போரை நடாத்துவது இந்தியா என்று நிரூபிக்கப்பட்டு விட்டது

காங்கிரஸ் கூட்டணி தான் போரை நாடாத்துகிறது காங்கிரஸில் இருக்கும் அனைத்து ஒநாய்களும் கொலைஞரும் தான் எங்கள் மேல் குண்டு போடுகிறார்கள்

கட்டையில் போகும் நேரத்திலும் பதவிக்கும் பணத்திற்கும் தமிழர்களை கொன்று தின்னும் கொலைஞர் இன்னும் தமிழருக்கு நல்லது செய்கின்றார் என்று சொல்லும் நீங்களும் எங்கள் மேல் குண்டு போடுகிறீர்கள்

Edited by tamilsvoice

தயா கோவிக்கவேண்ணாம். இவற்றை காசு கொடுத்தா பார்கிறார்கள்? இது சன்ரிவி தயாரிக்கும் படம். படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு நட்டம் வரும்.

அதைவிடுத்து தொலைக்காட்சி நாடகம் அதில் போடும் நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் என்ன பிரயோசனம்?? :unsure::):lol::(

இண்டைக்கு மீள் ஒளிபரப்பு செய்யும் எல்லா தொலைக்காட்ச்சிகளும் காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள், நீங்கள் தொலைக்காட்ச்சிகளில் பார்கும் போது அதனால் ஏற்படும் ரேட்டிங் மட்டும்தான் எண்று இல்லை அவர்களின் தயாரிப்புக்களுக்கு இருக்கும் மவுசுதான் விளம்பரங்களுக்குகான பணம் எவ்வளவு என்பதை தீர்மானிக்கும்...

பொருட்கள் ஏற்று மதி ஆக வேண்டும் எண்றால் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட எல்லாருக்கும் ஒரு பொருள் பிரபல்யம் ஆக வேண்டும், இலவசமாக நீங்கள் இணையத்தில் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஸ்பொன்சர் என்பதை தவிர்க்காமல் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்...

எந்த நிகழ்ச்சிக்கு யார் ஸ்பொன்சர் என்பதை நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களை கேட்டு பாருங்கள் என்ன பொருட்கள் எண்று சொல்வார்கள்... அதுக்காக தான் பணத்தை விளம்பர தாரர்கள் தொலைக்காட்ச்சிகளுக்கு வழங்குகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு முடிவை எடுத்து நான் சபேசனை தான் எதிர்க்க பாடுபடுவதாக சொல்லி கொள்வது மட்டும் நாகரீகமா...?? முதலில் நான் சொல்வதில் நியாயங்கள் கிடையாது என்பதை நீறூபித்து விட்டு உங்களின் உள்ளச் சேர்க்கைகளை ஆரம்பியூங்கள்...

மற்றவருக்கு அறிவுரை சொல்ல முன்னம் அந்த அறிவுரைகளை நீங்கள் பிந்தொடர முயலலாமே...??

சண் ரீவி மட்டும் அல்ல, ஜெயா , ராஜ் , கலைஞர், விஜய் ரீவி எண்று எந்த ரீவி உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறீர்கள்... புறக்கணிப்பதாக இருந்தால் அந்த ரீவிகளில் வரும் எல்லாவற்றையும் நாடகங்கள் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் புறக்கணியுங்கள்...

இதை உங்கட வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கலாம்... தவறு இல்லை... அப்படி பார்த்தால் தமிழ் நிகள்ச்சிகள் எதையும் நீங்கள் திரையில் பார்க்க கூடாது...

மக்கள் தொலைக்காட்ச்சி தவிர்ந்த யாரும் உங்களுக்கு ஆதரவளிக்க இல்லை... உணர்ந்து கொள்ள முடிந்தால் முயலுங்கள்...

உணர்ந்து கொண்டிருக்கிறோம் தயா, இங்கே எனது முகவரி தருகிறேன், நீங்கள் வந்து பார்க்கிறீர்களா? (பிளேன் ரிக்கற் நீங்கள் தான் எடுக்க வேணும், பரவாயில்லையா?). நான் தமிழ் நிகழ்ச்சிகள் எவையும் பார்ப்பதில்லை. இணையத்தில் கூட பார்ப்பதில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்ட எல்லா தொலைக்காட்சியையும் புறக்கணி என்று சொல்ல எனக்கு அருகதை நீங்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும் உண்டு. மேலும் சன் ரிவி என்பது தனித்து புறக்கணிக்கப் பட வேண்டிய காரணத்தை உங்கள் போன்ற ஒருவருக்கு யாரும் வந்தா விளங்கப் படுத்த வேணும்? அது யாருடையது, அவர்களின் கையில் தமிழரின் ரத்தம் உண்டா என்றெல்லாம் கேட்கப் படும் கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியா விட்டால் அது நடிப்பா அல்லது வேறெதுமா? தமிழன் முதுகில் பொருளாதார ரீதியாக சவாரி விட சன்ரிவி உட்பட நிறையப் பேர் வரிசையில் நிக்கினம். நாங்கள் அவர்களை அவர்கள் தொப்பூள் கொடி உறவென்பதற்காகவே சவாரி செய்ய அனுமதிப்போம். அவர்கள் எங்கள் மரணத்தில் அரசியல் நடத்தி வாரிசுகளுக்கு சொத்தும் பதவியும் சேர்த்தாலும் நாம் பொறுத்துக் கொள்வோம். இந்த இழிச்ச வாய்த்தனத்துக்கு "இராச தந்திரம்" எண்டு பேர் வைத்து கொஞ்ச நஞ்சம் விழிப்படைய விரும்புகிற மக்களுக்கும் காயடிப்போம். நல்ல பணி, தொடர்ந்து செய்யுங்கோ!

எச்சரிக்கை :- உங்களின் உளவுரனை குறிவைத்தும் எதிரி தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறான்...

கவனமாக நகருங்கள்...

அயன் எப்ப ரிலீஸ்? இப்படியாக ஒரு படம் வந்துள்ளதென்றும் அதனை எம் எதிரிகள் தான் தயாரித்தனர் என்றும் தகவல் தந்தமைக்கு நன்றி

மற்றது, உங்களின் எத்தனை பேர் வீட்டில் எம்மை ஆதரிக்கும் மக்கள் ரீ.வி இருக்கு?

அயன் எப்ப ரிலீஸ்? இப்படியாக ஒரு படம் வந்துள்ளதென்றும் அதனை எம் எதிரிகள் தான் தயாரித்தனர் என்றும் தகவல் தந்தமைக்கு நன்றி

மற்றது, உங்களின் எத்தனை பேர் வீட்டில் எம்மை ஆதரிக்கும் மக்கள் ரீ.வி இருக்கு?

மக்கள் TV யா ...??? புலம்பெயர் நாட்டில் அப்படி ஒண்டும் வாறதா...?? அது தமிழ்குடிதாங்கியின் தொலைக்காட்ச்சி இல்லையா...???

பொறுங்கோ அவர் போய் அம்மாவோடையோ, இல்லை ஐயாவோடையோ சேரட்டும் அதை புறக்கணிக்க சொல்லி ஒரு தலைப்பு போட இருக்கிறன்... :lol:

Edited by தயா

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணியுங்கள்!

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது:

இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது.

ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது மக்கள் படும் இன்னல்களையும,; போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன.

எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை.

அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கர்யத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம்

அன்பார்ந்த தமிழ் மக்களே!

ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்!

அன்பார்ந்த வர்த்தகர்களே!

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

„ஒற்றுமையே வலிமை“

„வலிமையே வாழ்வு“

-தமிழர் விழிப்பு இயக்கம்

thamilarvilippuiyakkam2009@gmail.com

<a href="http://tamilthesiyam.blogspot.com/2009/02/blog-post_7605.html" target="_blank">http://tamilthesiyam.blogspot.com/2009/02/...-post_7605.html</a>

அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் - அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?

சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.

பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். இணைய தளங்களை பார்க்கும் வசதி சாதாரண மக்களுக்கு இல்லை.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?

சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Dinamalar :

dmrcni@dinamalar.com

Dinakaran :

dotcom@dinakaran.com,

Sun TV :

suntv@sunnetwork.in

Jaya TV :

program@jayanetwork.in

Kalaignar TV :

info@kalaignartv.co.in

http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_14.html

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் TV யா ...??? புலம்பெயர் நாட்டில் அப்படி ஒண்டும் வாறதா...?? அது தமிழ்குடிதாங்கியின் தொலைக்காட்ச்சி இல்லையா...???

பொறுங்கோ அவர் போய் அம்மாவோடையோ, இல்லை ஐயாவோடையோ சேரட்டும் அதை புறக்கணிக்க சொல்லி ஒரு தலைப்பு போட இருக்கிறன்... :lol:

வாறகிழமை தொடக்கம் டண் எண்ட நாசமறுப்பு ரூபவாகினியோடை கூட்டுச்சேர்ந்து பதின்மூண்டு பாகையிலை ஒளிவீசப்போகுதாம்

புறக்கணிப்பு புலம் பெயர்மக்களுக்கு மட்டுமே

இதில் புலிகளையோ , தாயக மக்களையோ இங்கு புகுத்துவது விவாதற்கு அப்பாற்பட்டது தற்போதைய நிலை எல்லோரும் அறிந்தது

இங்கு பலர் இந்தி தேசியவாதியாகவும் கொலைஞர் விசுவாசியாக இருப்பதும் ஒரு பக்கச்சார்பான விவாதமாகவும் தனிநபர் தாக்குதலாகவும் மாறி விட்டது

முதலில்

சன் தொலைக்காட்சியை மட்டுமே புறக்கணிக்கவில்லை

அதுவும் முற்று முழுதாக சன் தொலைக்காட்சியினை இழுத்து மூடுவதற்கான போராட்டமும் அல்ல

அது எம்மால் செய்யவும் முடியாது அது தமிழக மக்களால் தான் முடியும் அது நமக்கு தேவையும் அல்ல நோக்கமும் அல்ல

எங்களுக்கு ஆதரவாக செயற்படவில்லை என்பதற்காக என்பது ஏற்றுக்கொள்ள முடியாது

இந்த ரிவிக்கள் ஒரு பக்கச்சார்பாக சிங்களவனுக்க ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது ஆகக் குறைந்தது நடுநிலையாகக் கூட இல்லை

சன் தொலைக்காட்சியின் தமிழின படுகொலைகள், அவலங்கள் , நியாயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதற்காக மட்டுமே புறக்கணிப்பு போராட்டம்

சன் தொலைக்காட்சி திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டதினால் மற்றய ரிவி க்களை விட இவர்களை புறக்கணிப்பு செய்வதற்கு புலம்பெயர் தமிழருக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவே

அதனால் இதற்கு எதிராக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக இல்லை

மக்கள் தொலைக்காட்சி ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் அவரது தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது

ஆனால் சன் ரிவி கலைஞர் ரிவி ஏன் செய்யவில்லை ?

இதானால் மக்கள் ரிவி சிறிலங்காவில் ராணுவத்தால் தடை செய்யப்பட்டதிலிருந்து அதன் தாக்கம் புரியும்

ஆகவே மக்கள் ரிவி ஒப்பீட்டளவில் ஒளிபரப்பில் குறை கூறமுடியவில்லை

அதற்காக ராமதாசை போற்ற முடியாது அவரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு படுகொலையில் கை நனைக்கின்றார்

இதில் கலைஞர் பற்றி சொல்லத் தேவையில்லை இவர் தமிழினத் தலைவர் தானாக இருக்கவேண்டும் என்ற பதவி ஆசையும் அதற்கு ஏற்றாற் போல் இவரால் செயற்பட்டிருக்க முடியும்

ஆனால்

எதுவுமே செய்யவில்லை மாறாக தமிழக எழுச்சியை அடக்கி ஒடுக்குவதில் மும்மரமாக நின்று செயற்படுகின்றார் அது இவரின் மேல் தனிப்பட்ட ரீதியாகவும் புறக்கணிப்பு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது

Edited by tamilsvoice

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம்.

பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள்.

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும்.

அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும்.

"அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

- சபேசன்-

http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

நன்றிகள் இணைப்பிற்கு, நிச்சயமாக இது மிகப் பெரிய பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று!! எம் நலனில் எவ்வித அக்கறையும் அற்று, எமக்கெதிரான பிரச்சாரங்களை தங்களது சன் குழுமம் ஊடாக மேற்கொண்டு வரும் தமிழக கருணாவின் குடும்ப கும்பலின், எம் பணத்தை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட இக்குப்பைகளை நிச்சயம் புறக்கணிப்பதானது, அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியை சொல்லும்!!!!

இதில் யாழ் இணையம் முக்கிய பக்காற்ற முடியும்!!!

(நான் தமிழ் படங்கள் பார்த்து வருடங்கள் ஆகின்றன .... அதில் ஆர்வமும் இல்லை!)

மோட்டுத்தனமாக எதையும் சிந்திக்காமல் எடுத்த முடிவு.சூர்யாவும் அவரது தந்தையும் ஈழத்தமிழர்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் அதனை புரிந்து கொண்டால் சரி.நாமே நமக்கு எதிரிகளை உருவாக்கும் செயற்பாடே இது.

உருப்படியாக ஏதாவது செய்யலாமே !!!!.

1. சன் TV பார்க்க வேண்டும், அதில் வரும் நாடகங்களைப்பார்க்க வேன்டும்

2.இந்தியாவில் இருந்து தான் கோயில் பூசகர் வர வேண்டும், எமது இளைஞர்கள் எத்தனையோ பேருக்கு அந்த தகுதி இருந்தும் அவர்கலுக்கு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள்.

3.பாலு மகேந்திரா என்ற ஒருவர் அகில இந்திய ரீதியில் பிரசித்தம் பெற்ற இயக்குனர் ஒன்றுமே பேசாமல் இருக்கிரார், அவரை தட்டிக் கேற்க வக்கில்லை

4.விஜய்யுடைய குப்பைகளை முண்டியடித்துக்கொண்டு பார்ப்போம், இந்த லட்சனத்தில் எமது ஊர் பெணை திருமணம் செய்தபடியால் தான்

ஈழத்து மருமகன் என்ற புருடா வேறு அவரை புறக்கணிக்க மாட்டோம்.

ஆனால் ஐயன் மட்டும் புறக்கணிக்கப்பட்டால் தமிழ ஈழம் வந்து விடுமாம்

ஒரு காலத்தில் முழு உலகத்தையுமே வியக்க வைத்த போராட்டம் இப்போது கேவலமான தமிழ் சினிமாவின் காலில் விழும் அளவிற்கு வங்குரொத்துதனதிற்கு வந்து விட்டது. :lol::unsure:

மாட்டைப்பற்றி எழுதச் சொன்னால் மாட்டை மரத்தில் கட்டி விட்டு மரத்தை ப் பற்றி எழுதுகிறார் டாஸ் --------- ==== -----

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.