Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ட்ரீம்பொக்ஸ் பாவித்து சன் கலைஞர் தொல்லைகளை பாருங்கள். 2 வருடத்தில் அவர்களாகவே சுருட்டிக் கொண்டு போய் விடுவார்கள். இல்லாவிட்டால்..... சுருட்டிக் கொண்டு போவார்கள்.

ஆ... அயனை விடுங்கோ..

எந்திரனை என்ன செய்வம்.

ராசபக்சே நீயொரு ஆம்பிளையா எனக் கேட்டு எங்களையெல்லாம் புளுகமடைய வைத்த ரசினிக்காக அதனை பாக்கிறதா..

அல்லது

சன் தயாரிப்பிற்காக

பார்க்காமல் விடுவதா...?

மண்டை காயுது

யாராவது சொல்லுங்கள்..

----

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஈழவன்,

இது தமிழ் திரையுலகத்தை சேர்ந்த யாருக்கும் எதிரான நடவடிக்கை அன்று. அயன் புறக்கணிப்பு என்பது சன் குழுமத்திற்கு எமது எதிர்ப்பை சொல்லும் நடவடிக்கை மட்டுமே.

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கின்ற போதும், சில தமிழுணர்வாளர்கள் பாதிக்கப்படக் கூடும். அதற்காக சிறிலங்காப் பொருட்களை ஆதரிக்க முடியாது. அப்படித்தான் சன் குழுமத்தின் வெளியீடான அயன் திரைப்படப் புறக்கணிப்பையும் பார்க்க வேண்டும்.

டாச்,

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணித்தால் தமிழீழம் கிடைத்து விடுமா? மேற்குலக நாடுகளில் ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைத்து விடுமா? கொழும்பில் குண்டு வீசினால் தமிழீழம் கிடைத்து விடுமா?... இப்படி கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனைத்து விதமான போராட்டங்களையும் செய்தாற்தான் தமிழீழம் கிடைக்கும்.

தமிழீழப் போராட்டம் கிறீம் பிஸ்கட்டின் காலில் விழுந்து விட்டதா?

தமிழீழத்திற்கு எதிராக செயற்படுபவர்களை புறக்கணியுங்கள் என்று சொன்னால், அவர்களின் காலில் விழுவதாக அர்த்தமா?

என்ன புரிதல் இது?

காவடி,

எந்திரன் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லும: அதற்குள் நிறைய மாற்றங்கள் வரக் கூடும். கலைஞர் மீண்டும் ஈழத் தமிழர்களுக்காக ஒரு கவிதை எழுதலாம். நாம் மீண்டும் கலைஞரை தலையில் வைத்துக் கொண்டாடலாம். இன்றைய கசப்புகள் மறந்து போய்விடும் நிலை ஏற்படலாம்.

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து கலைஞருக்கும் எமக்குமான உறவு இப்படித்தான் இருக்கின்றது. சில ஆண்டுகள் கலைஞரை தூற்றுவதும், சில ஆண்டுகள் அவரை போற்றுவதுமாக மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றது.

அதனாற்தான் தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன்

சன் குழுமம், கலைஞர் தொலைக்காட்சி போன்றன மீதான புறக்கணிப்பு அவர்களின் இன்றைய நிலைப்பாட்டுக்கு எமது கடும் அதிருப்தியை தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே. சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது போன்று இது நீண்ட கால நோக்கு கொண்டது அன்று என்பது என்னுடைய கருத்து.

இன்றைக்கு அயன் திரைப்படத்தை புறக்கணித்தால் இது பல மட்டங்களில் பலரை சிந்திக்கத் தூண்டும்.

தன்னுடைய படமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் ரஜனிகாந்த் கூட சன் குழுமத்தின் நிலைப்பாட்டை மாற்றும்படி அழுத்தம் கொடுக்கலாம். ஸ்டாலின் குடும்பத்தினரால் தயாரிக்கப்படும் படங்கள் வேறு இருக்கின்றன. இவர்களும் நிச்சயமாக மாற்றம் பற்றி சிந்திப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஐங்கரனின் உபயத்தில் கலைஞரில் மானடலாம் மயிலாடலாம்.. கூட புலம்பெயர்ந்த தமிழர்களும் ஆடலாம். ஆனால் சன்னின்ர.. அயனாடக் கூடாது..! என்ன ஒரு புறக்கணிப்புக் கொள்கை பாருங்க. ஒற்றுமையை கண்டு சன் காரர் ஓடப்போறாங்க..! :rolleyes::o

முகப்பில புறக்கணி சிறீலங்கா என்றுட்டு பின்னால சிங்களத்தியளின்ர படத்தை வைச்சு சிறீலங்கன் விமான சேவைக்கு ஆசனப்பதிவு செய்வதுபோல இருக்குது இது. :D:unsure:

Edited by nedukkalapoovan

சன் தயாரிப்புக்களான திண்டுக்கல் சாரதி தெனாவெட்டு [color="#FF0000"] தீ போன்ற படங்களுக்கு புறக்கணிப்பு இல்லாமல் அவர்களின் தயாரிப்பான அயன்[/ படத்துக்கு மட்டும் ஏன்? சார்.

Edited by vvsiva

அய்யோ..... என் மிகவும் தெரிந்த நண்பர் ஒருவின் வீட்டில் அவருடைய சந்ததியே அளிந்துவிட்டது அவரின் குடும்பத்தை விட.... மனைவியார் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள்.

இது போன்று தான் பலர் வீடுகளில்......

தயவு செய்து நடிகர்களையும் சினிமாவையும் விட்டுவிட்டு இந்த செய்திகளை வெளியே கொண்டு வாருங்கள்....

இவற்ரை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஓருவன் சினிமா பார்க்க போவானாக இருந்தால் அவனை விடுங்கள!

திரு மோகன் அவர்களே தயவுபண்ணி இந்த விவாதத்தை இத்துடன் முடியுங்கள்!

  • தொடங்கியவர்

சன் குழுமத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தல் என்பது கலைஞருக்குமானதுதான். கலைஞர் கருணாநிதியுடன் சன் குழுமம் சமாதானமாகப் போனது எமக்கு உண்மையில் பாதகமாகப் போய் விட்டது. ஆரம்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்வுகளுக்கும் இடம் கொடுத்த சன் குழுமம் தற்பொழுது இருட்டடிப்புச் செய்கிறது. இதற்குப் பின்னால் கலைஞர் கருணாநிதியே உள்ளார்.

கலைஞரின் குடும்பத்தில் இருந்து வருகின்ற ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை புறக்கணித்து எமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது இன்றைய தேவை.

நொற்பொயற் சொன்னது போன்று இன்றைக்கு தமிழர்கள் குடும்பம்; குடும்பமாக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். வயிற்றில் உள்ள குழுந்தைகள் கூட கொல்லப்படுகிறார்கள. இவற்றை எல்லாம் வெளிக்கொர வேண்டியது யாருடைய கடமை?

உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஊடகங்களின் கடமை இது. சன், கலைஞர் போன்ற பலமான ஊடகங்கள் இந்தக் கடமையை செய்யாததும் அன்றி, எமது எதிரிகளின் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதனாற்தான் இவர்களை புறக்கணித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்கிறேன். இது கூட எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணரும் ஒரு போராட்டம்தான்.

விவிசிவா,

வெளிநாடுகளில் திரையிடுகின்ற படங்களைத்தானே எம்மால் புறக்கணிக்க முடியும். நீங்கள் குறிப்பிட்ட படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அவர்களே,

உங்கள் கருத்தோடு ஒன்றுகின்றேன்.

**ஏகன்** நான் பார்க்கவே இல்லை.

கலைஞர், சன் தொ.கா புறக்கணிப்பில் முதலிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் எனக்கு விளங்கவில்லை சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நாங்கள் புறக்கணித்தால் அது கலைஞர் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும்?

பொதுவாகவே ஈழத்தில் ச‌னங்கள் கஸ்ட‌ப்படும் போது ஒருவரும் அதாவது உண்மைத் தமிழன் தியேட்ட‌ருக்கு போய் பட‌ம் பார்க்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

சபேசன் எனக்கு விளங்கவில்லை சன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நாங்கள் புறக்கணித்தால் அது கலைஞர் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும்?

இரண்டும் ஒன்று தானே குடும்ப சொத்து தானே இதில் என்ன விளக்குவதற்கு

பொதுவாகவே ஈழத்தில் ச‌னங்கள் கஸ்ட‌ப்படும் போது ஒருவரும் அதாவது உண்மைத் தமிழன் தியேட்ட‌ருக்கு போய் பட‌ம் பார்க்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

கனடிய தொலைகாட்சிகள் வானொலிகளில் தியேட்டர் விளம்பரங்களில் இன்னும் விலாசிக்கொண்டிருக்கிறார்கள

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் அயன்படத்தை ஏவிஎம் தானே தயாரிக்கிறது.

KV Anand, who introduced Prithviraj in ‘Kana Kandein’ will introduce a new villain in his forthcoming directorial venture 'Ayan', starring Suriya. He is in search for a new face for the baddie role from other languages. Prabhu will don an important role in the film, produced by AVM.

ஐங்கரனிலும் தயாரிப்பு ஏவி எம் எனத்தான் காட்டுகிறார்கள்.

சன் சிலநேரம் இந்திய விநியோக உரிமைகளை கொண்டிருக்கலாம்.

  • தொடங்கியவர்

காவடி,

சன் குழுமம் இதுவரை எந்த ஒரு படத்தையும் நேரடியாகத் தயாரித்தது இல்லை. எந்திரன் திரைப்படத்தைத்தான் முதன் முறையாக நேரடியாகத் தயாரிக்கின்றது.

இதுவரை சன் குழுமம் வெளியிட்ட அனைத்துத் திரைப்படங்களும் வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு, சன் குழுமத்தால் மொத்தவிலை கொடுத்து ஒட்டு மொத்தமாக வாங்கப்பட்டவை.

பெரும்பாலரின திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியே தற்பொழுது வாங்கி வருகின்றது. சன் தொலைக்காட்சியிடம் தற்பொழுது புதிய படங்கள் இல்லை. ஒரு சிறப்பு நாளில் (புத்தாண்டு, தீபாவளி) போடுவதற்கும் ஏற்ற படங்கள் இல்லை. படையப்பாவையும் சந்திரமுகியையும்தான் திருப்பி திருப்பி போட வேண்டிய நிலை சன் தொலைக்காட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே "சன் பிக்ஸர்" என்னும் தயாரிப்பு நிறுவனத்தை சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, வெளியிட முடியாமல் இருந்த படங்களை வாங்கியது. அபாரமான விளம்பரத்தால் அந்தப் படங்களை ஓட வைத்தது. காதலில் விழுந்தேன், திண்டுக்கல் சாரதி, படிக்காதவன், தீ, அயன் என்று அனைத்துப் படங்களுமே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டவை.

இவைகளை சன் குழுமம் ஒட்டுமொத்தமாக வாங்கி விட்டது. இந்தப் படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் இதை தயாரித்தவர்களுக்கு நட்டம் இல்லை. அவர்கள் ஒரு விலைக்கு சன்னிடம் விற்று விட்டார்கள்.

இந்தப் படங்கள் ஓடி வருகின்ற லாபம் சன் குழுமத்திற்கே. ஓடாவிட்டால் நட்டமும் அவர்களுக்கே.

இதுவரை சன் குழுமம் வெளியிட்ட அனைத்துப் படங்களும் விளம்பரத்தால் மாத்திரமே ஓரளவு வெற்றி பெற்றன. விளம்பரம் இல்லையென்றால் இந்தப் படங்களுக்கு அதோ கதிதான் நேர்ந்திருக்கும்.

ஆனால் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சன் தயாரிப்புக்கு ஒரு கெட்ட பெயர் உருவாகி விட்டது. குப்பைப் படங்களை தொடர்ந்து வெளியிட்டு, விளம்பரத்தால் திரையரங்குக்கு தம்மை வரச் செய்கிறார்கள் என்கின்ற ஏமாற்ற உணர்வு பார்வயாளர்களுக்கு உருவாகி விட்டது.

இதனால் "அயன்" படத்திற்கு "ஏவிஎம்" நிறுவனத்தின் பெயரும் இணைத்து விளம்பரப்படுத்தப்படுகின்றத

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிள்ளைகளே

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்

ஆயுதத்தை ஆயுதத்தால் எதிர்க்கின்றோம்

அதை ஆதரிப்பவர்களுக்கு ஆதரவைத்தர மறுக்கிறோம்

எம்மக்களின் அவலங்களை புறக்கணிப்பதால் நாமும் அவர்களின் படைப்புக்களை புறக்கணிக்கினறோம்

போராட்டமென்பது தனியே ஆயுதமேந்துவது மட்டுமல்ல

எதிரிகளை எல்லா வழிகளிலும் எதிர்கொண்டு வலுவிழக்கச்செய்யவேண்டும்.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் புரட்சியிலே

வாத்தியார்

*****************

ஆனால் அயன்படத்தை ஏவிஎம் தானே தயாரிக்கிறது.

KV Anand, who introduced Prithviraj in ‘Kana Kandein’ will introduce a new villain in his forthcoming directorial venture 'Ayan', starring Suriya. He is in search for a new face for the baddie role from other languages. Prabhu will don an important role in the film, produced by AVM.

ஐங்கரனிலும் தயாரிப்பு ஏவி எம் எனத்தான் காட்டுகிறார்கள்.

சன் சிலநேரம் இந்திய விநியோக உரிமைகளை கொண்டிருக்கலாம்.

அப்படியா...??

அப்ப படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வந்திட்டுது... நாலு பேருக்கு சொல்லினீங்கள் எண்டால் இன்னும் நல்லது....

இப்ப எல்லாம் தியட்டர்களில் தமிழ் படம் அவ்வளவாக ஓட இல்லை... மக்கள் 1 பவுன்சுக்கு வாங்குறை DVD களை கூட வாங்குவதில் அவ்வளவு ஆர்வமாக இல்லை... ஆகவே இந்த புறக்கணிப்பு உங்களை எல்லாம் அந்த பக்கம் திரும்பி பாக்க வைத்து வியாபாரிகளின் மனதில் பாலை வாத்து இருக்கு... சந்தோசம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதையடுத்தே "சன் பிக்ஸர்" என்னும் தயாரிப்பு நிறுவனத்தை சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, வெளியிட முடியாமல் இருந்த படங்களை வாங்கியது. அபாரமான விளம்பரத்தால் அந்தப் படங்களை ஓட வைத்தது. காதலில் விழுந்தேன், திண்டுக்கல் சாரதி, படிக்காதவன், தீ, அயன் என்று அனைத்துப் படங்களுமே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டவை.

சினிமாப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைத்தால் மட்டும், (அதிலும் சிவாஜி, தசவதாரம் என்பது எல்லாம் தமிழாம்) தமிழ் வாழ்ந்துவிடும் என்று கண்டு பிடித்த கலைஞர் போல, எத்தனையோ படங்களைச் சன்னும், கலைஞரும் தயாரித்தாலும், "அயன்" படத்தை மட்டுமே தாக்கி, பெரும் புகழைச் சம்பாதிக்க முனையும் மதிப்புக்குரிய சபேசனுக்கு என் வாழ்த்துக்கள்.

படப்புறக்கணிப்பு வெற்றி பெறுகின்றதோ இல்லையோ, இதையும் வைச்சு "நாங்களும் இராமர் அணில் போல ஏதோ செய்து போராட்டத்திற்கு" உதவினோம்(அல்லது உபத்திரம் செய்தோம்) என்ற பெருமை வரலாற்றில் நிச்சயம் இடம் கிடைக்கும். .

மீண்டும் வாழ்த்துக்கள் சபேசன்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

உதால உடனடியாக ஏதும் ஏற்படுமோ தெரியாது.

ஆனால் எல்லோரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஐரோப்பாவில் விளம்பரங்களை வழங்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்களின் விளம்பரங்களை நிறுத்த கோருங்கள். இதனால் உடனடியான மாற்றம் ஏற்படும்.

  • தொடங்கியவர்

தூயவன்,

கலைஞர் தொலைக்காட்சி இன்னும் எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை. கலைஞர் குடும்பத்தில் ஸ்டாலினின் மகனின் பெயரில் "குருவி" படம் தயாரிக்கப்பட்டிருந்தது. (குருவி படம் வந்த நேரத்தில் நாம் கலைஞரை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்ததாக ஞர்பகம்)

சன் தயாரித்த படங்களில் பெரும்பாலானவைகள் வெளிநாடுகளில் திரையிடப்படவில்லை. "படிக்காதவன்" மட்டும்தான் சில நாடுகளில் திரையிடப்பட்டது. இந்த நேரத்தில்தான் சன், கலைஞர் தொலைக்காட்சிகளை புறக்கணிப்பது பற்றிய விவாதமும் ஆரம்பமாகியிருந்தது.

சன், கலைஞர் குழுமங்களின் வெளியீடுகளை புறக்கணிக்கும் சிந்தனை உருவான பிற்பாடு, அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் திரையிடப்படக்கூடிய படமாக முதலில் வெளிவருவது "அயன்" திரைப்படமாக இருக்கின்றது.

அந்த வகையில் "அயன்" இதற்குள் வந்து சிக்குப்பட்டு விட்டது. இதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.

ஆகவே சன், கலைஞர் குழுமத்தின் மற்றைய படங்களை ஏன் புறக்கணிக்கவில்லை என்ற கேள்வி அர்த்தமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நடிகர்களையும் சினிமாவையும் விட்டுவிட்டு இந்த செய்திகளை வெளியே கொண்டு வாருங்கள்....

இவற்ரை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஓருவன் சினிமா பார்க்க போவானாக இருந்தால் அவனை விடுங்கள!

இதுவும் சரி தான். இதையெல்லாம் மறந்து போட்டு ஒருவன் சினிமா யுவன் ஷங்கர் ராஜாவுடன் 150 டொலர் கொடுத்து இராப்போசனம் என்று போவானாய் இருந்தால் அவனைப் பற்றிப் பேசி ஏன் தான் நாம் நேரத்தை வீணாக்குவான்? வேறென்ன செய்யலாம் எண்டு யோசிக்க இந்த நேரத்தைப் பாவிக்கலாம்.

இதுவும் சரி தான். இதையெல்லாம் மறந்து போட்டு ஒருவன் சினிமா யுவன் ஷங்கர் ராஜாவுடன் 150 டொலர் கொடுத்து இராப்போசனம் என்று போவானாய் இருந்தால் அவனைப் பற்றிப் பேசி ஏன் தான் நாம் நேரத்தை வீணாக்குவான்? வேறென்ன செய்யலாம் எண்டு யோசிக்க இந்த நேரத்தைப் பாவிக்கலாம்.

இதனைப் புரிந்து கொண்டால் சரி. நாம் எழுதவும், காரியமாற்றவும் எத்தனையோ விடயங்கள் இருக்கையில் உப்புச் சப்பு இல்லாத விடயங்களை முன்னிறுத்தி அதற்காக நேரம் செலவழிப்பது என்பது தவறானது என்பது என் கருத்து. எமது எதிரி யார் என்பதில் தெளிவான ஒரு பார்வை இருக்குமாயின் வெறும் சில்லரைகளின் சின்ன சின்ன விடயங்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்கள் வராது என நம்புகின்றேன். எமது பிரதான எதிரி சிங்கள இனவாதமும் அதற்கு சகல வழிகளிலும் உதவும் ஆரிய அடிவருடிகளும் தான். அவர்களின் இருப்பும் கருத்தியலும் அது சார்ந்த அரசியலும் தான் தமிழ் தேசியத்தினை நிராகரிக்கின்றன, தமிழரின் இருப்பையே அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. தன் மீனவன் கொல்லப் படுவதையே காட்டாத ஒரு தொலைக் காட்சியியையும் சினிமாவையும் எதிர்க்க பயன் படும் எமது சக்தியை இந்த பெரும் முதலைகளை எல்லா வழிகளிலும் இல்லாமாக்க செலவழிப்போம்

  • தொடங்கியவர்

ஒரு தொலைக் காட்சியியையும் சினிமாவையும் எதிர்க்க பயன் படும் எமது சக்தியை இந்த பெரும் முதலைகளை எல்லா வழிகளிலும் இல்லாமாக்க செலவழிப்போம்

எமக்கு சக்தி உண்டா என்பது என்னுடைய கேள்வி. தனக்கு எதிராக உள்ள ஒரு ஊடகத்தையோ, சினிமாவையோ எதிர்க்கும் சக்தியும், ஒற்றுமையும் தமிழனுக்கு இல்லை என்பதுதான் இதுவரை நிரூபணம் ஆகியிருக்கின்றது. இனியாவது அது மாற வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு தொலைக்காட்சிக்கு தன்னுடைய அதிருப்தியை தெரிவிப்பதற்கான சக்தி கூட இல்லாத ஒரு இனம் பெரும் முதலைகளை எப்படித்தான் எதிர்க்கப் போகின்றதோ? அந்த முதலைகளின் கரங்களில் ஒன்றாக சன் குழுமம் போன்ற ஊடகங்கள் இருப்பதை புரிந்து கொள்ளுகின்ற சிந்தினைத் திறன் கூட இல்லாமல் நாம் இருக்கின்றோம்.

எமக்கு சக்தி உண்டா என்பது என்னுடைய கேள்வி. தனக்கு எதிராக உள்ள ஒரு ஊடகத்தையோ, சினிமாவையோ எதிர்க்கும் சக்தியும், ஒற்றுமையும் தமிழனுக்கு இல்லை என்பதுதான் இதுவரை நிரூபணம் ஆகியிருக்கின்றது. இனியாவது அது மாற வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு தொலைக்காட்சிக்கு தன்னுடைய அதிருப்தியை தெரிவிப்பதற்கான சக்தி கூட இல்லாத ஒரு இனம் பெரும் முதலைகளை எப்படித்தான் எதிர்க்கப் போகின்றதோ? அந்த முதலைகளின் கரங்களில் ஒன்றாக சன் குழுமம் போன்ற ஊடகங்கள் இருப்பதை புரிந்து கொள்ளுகின்ற சிந்தினைத் திறன் கூட இல்லாமல் நாம் இருக்கின்றோம்.

நீங்கள் எதிர்க்க சொன்ன ஒரே காரணத்திற்காக மக்கள் எதிர்க்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள் சபேசன்? நீங்கள் எதிரி என்று சுட்டும் விரலின் முன் இருப்பவர்களை எல்லாம் எம் தமிழ் மக்கள் எதிரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களோ தலைவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மக்களால் ஏற்றுக் கொள்ள தேவையற்ற ஒரு விடயத்தை சொல்லி விட்டு, பின் மக்களை குறை சொல்லுவதும் பெரும் எதிரிகளை எதிர்க்க வலுவற்றவர்கள் என்று அவர்களை குறை சொல்வதும் 'இது தான் தமிழனின் ஒற்றுமை' என சலிப்பதும் வீணான வேலை.

உங்களிடம் கேட்கின்றேன்.... நீங்கள் தான் கடந்த மாதம் 'நான் கடவுள்' திரைப் பத்தினைப் பார்த்து அதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதியவர். அந்த திரைப்படத்திற்கும் இந்த திரைப் படத்திற்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள். 'அயன்' படத்தினை சன் தொலைக்காட்சி நிறுவனம் (அல்லது தி.மு.க) தயாரிக்கவில்லை என்பதைத் தவிர வேறு என்ன வேறுபாடு? நாம் (ஈழ மக்கள்) சன் தொலைக்காட்சியை எம் அழிவுகளை செய்தியாக போடாமல், இலங்கை அரசின் பிரச்சாரத்தினை (defence ministry யின் செய்திகளை) மட்டும் போடுகின்றது என்ற காரணத்திற்காக மட்டுமே எதிர்க்க வேண்டும் என்றால் மற்ற எல்லா தமிழக தொலைக்காட்சி நிறுவனங்களையும் எதிர்க்க வேண்டும். எம் அழிவுகளை கதையாக சொல்லாமல், இலங்கைக்கு போய் வெளிப்புற காட்சிகளை படம் எடுத்து வரும் திரைப்படங்களையும் எதிர்க்க வேண்டும் (அண்மையில் வெளியான 'சிலம்பாட்டம்' படத்தின் பல காட்சிகள் இலங்கையில் எடுக்கப் பட்டவை)..

தமிழகத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளில் 'மக்கள் தொலைக் காட்சி' எமக்கு சார்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. சன் நிறுவனத்தினை எதிர்க்க முனையும் நாம், எமக்கான ஆதரவினை தரும் மக்கள் தொலைக் காட்சிக்கு என்ன செய்கின்றோம்? எத்தனை புலம் பெயர் நாடுகளில் 'மக்கள் தொலைக்காட்சி' ஒளிபரப்பப் படுகின்றது?

எதிரிகளின் எண்ணிக்கையை கூட்ட மட்டுமே எமக்கு தெரியும். ஆதரவு கொடுப்பவர்களை தூக்கி கொண்டாட தெரியாத நாம் எம் விருப்பு படி நடக்காதவர்களை எதிரிகளின் பட்டியலில் இட்டு வெற்று முழக்கம் இட்டு எம் ஒவ்வொருவரையும் தலைவர்களாக கற்பனை செய்கின்றோம். நாம் சொன்னதை கேட்காவிடின் சிந்தனை திறன் அற்ற சின்னப் பயல்கள் என்று மற்றவர்களை விமர்சித்து விட்டு எம் அறிவை நாமே மெச்சுகின்றோம்

எம் எதிரி... பிரதான எதிரி சிங்கள இனவாதிகளும் அவர்களின் ஆரிய சகபாடிகளும் தான். எம் இலக்கு அவர்கள் மட்டும் தான். எம் சக்தி சிதறடிக்கப் படாமல் அதனை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். உங்களின் சொல்லைக் கேட்டு வரும் போவோரை எல்லாம் எதிரிப் பட்டியலில் இட்டு இன்னும் இன்னும் சீரழிய அவர்கள் உடன்படப் போவதில்லை

இந்த திரியில் இதற்கு மேல் ஒன்றும் எழுதப் போவதில்லை. உங்களின் எதிரிப் பட்டியல் மேலிம் நீள என் வாழ்த்துகள்

உங்களின் எதிரிப் பட்டியல் மேலிம் நீள என் வாழ்த்துகள்

:):lol::)

நிழலி வாழ்க

சபேசன் ஒழிக

அயன் படத்தை யாழ் குழுமத்தோடு பார்ப்போம் யாழை விட்டு சபெசனைப் புறக்கணிப்போம்

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர்களை அழிக்க நினைப்பவர்களை "சொக்கத் தங்கம்" என்றும் "தூயவர்" என்றும் பாராட்டி அவர்களின் செய்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து எம்மிடம் விற்க முயற்சிக்கப்படும் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையிலும்...

எமது மக்களின் அவலங்களை வெளியில் சொல்ல வேண்டிய பாரிய கடமையை செய்ய மறுத்து எம்மை அழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவான செய்திகளை தந்து கொண்டிருக்கும் ஒரு ஊடகத்தால் எம்மிடம் விற்க முயற்சிக்கப்படும் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையிலும்..

"அயன்" திரைப்படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசுகிறேன்.

"அயன்" ஒரு திரைப்படம் என்பதற்காகவோ, அதில் அவர் நடிக்கிறார், இவர் நடிக்கிறார் என்பதற்காகவோ புறக்கணிப:;பு பற:;றி பேசவில்லை.

இதை பலமுறை தெளிவாகச் சொல்லி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை அழிக்க நினைப்பவர்களை "சொக்கத் தங்கம்" என்றும் "தூயவர்" என்றும் பாராட்டி அவர்களின் செய்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து எம்மிடம் விற்க முயற்சிக்கப்படும் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையிலும்...

இது சுத்தப் பொய்.

இன்றைய நிலையில் ஐரோப்பாவுக்குள்ளும்.. அமெரிக்காவுக்குள்ளும்... தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை அதிகம் புகுத்தியது ஐங்கரன் நிறுவனம். இன்று அந்த நிறுவனம் வர்த்தக உரிமை கொண்டாடுகிறது கருணாநிதியின் கலைஞர் தொலைக்காட்சியுடன். சன் நிறுவனத் தயாரிப்புப் படங்கள் பலவற்றை விநியோகிக்கும் உரிமையையும் பெற்று வைத்துள்ளது. சன்னிடம் பெருந்தொகை கொடுத்து படங்களை.. ஓடியோ வரவுகளை வாங்கி விநியோகிக்கிறது.

ஐங்கரனுக்கு எதிராக ஒரு புறக்கணிப்பை இவர்கள் செய்தால் அவர்கள் ஐரோப்பாவுக்குள் இவற்றை நுழைப்பதை நிறுத்துவார்கள். இப்படங்களை தனித்தனியே புறக்கணிக்கனும் என்றதைக் காட்டிலும் அதுமேலானது. உண்மையில் புறக்கணிக்கனும் என்றால். ஆனால் அது முடியாத காரியம். ஐங்கரன் எமது நிறுவனம். அது இலாபம் ஈட்டுவது எமக்கு நன்மை என்பதால் என்பார்கள்.

சகல புலம்பெயர் தமிழ் தொலைக்காட்சிகளும் ஜெயா ரீவி... கலைஞர் ரீவி.. சன் ரீவி.. விஜய் ரீவி நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொடர்களை நம்பியே காலம் ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றால் வருமானம் பெறுவது.. ஜெயா ரீவியும்.. கலைஞர் ரீவியும்.. விஜய் ரீவியுமே.

இவர்களில் எவரும் ஈழத்தமிழருக்காக உண்மையில் உழைக்க முன்வரவில்லை.

அப்போ எல்லா புலம்பெயர் தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிச்சிட்டு.. தங்கள் சொந்த தயாரிப்புக்களை வெளியிடலாமே. அன்றி நேரடியாக தாங்களே உரிமம் பெற்று ஒளிபரப்பலாமே. இப்படிப் புறக்கணி என்று ஒவ்வொரு படத்துக்கும் கொடுக்குக் கட்டிற நேரத்துக்கு.. ஒரு நீண்ட கால திட்டத்தை வகுத்து அதன் படி செயற்படலாமே..??! ஏன் அதைச் செய்ய முடியல்ல..???!

இது புறக்கணி புறக்கணி என்ற சூழலில் நாங்களும் நாங்களும் என்று போடுற விளம்பரக் கோசமே அன்றி செயற்பாட்டுக்கான உண்மை அக்கறையின் பாலான குரல் அல்ல..! :icon_idea:

***

இத்தலைப்பில் எனது கருத்தைச் சொல்லிட்டன். அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை..! :D:)

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களை அழிக்க நினைப்பவர்களை "சொக்கத் தங்கம்" என்றும் "தூயவர்" என்றும் பாராட்டி அவர்களின் செய்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து எம்மிடம் விற்க முயற்சிக்கப்படும் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையிலும்...

எமது மக்களின் அவலங்களை வெளியில் சொல்ல வேண்டிய பாரிய கடமையை செய்ய மறுத்து எம்மை அழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவான செய்திகளை தந்து கொண்டிருக்கும் ஒரு ஊடகத்தால் எம்மிடம் விற்க முயற்சிக்கப்படும் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையிலும்..

"அயன்" திரைப்படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசுகிறேன்.

"அயன்" ஒரு திரைப்படம் என்பதற்காகவோ, அதில் அவர் நடிக்கிறார், இவர் நடிக்கிறார் என்பதற்காகவோ புறக்கணிப:;பு பற:;றி பேசவில்லை.

இதை பலமுறை தெளிவாகச் சொல்லி விட்டேன்.

இந்திய திரைப்படங்கள் (தமிழ் : இந்தி............ அனைத்தும்)

படத்துக்கு பூஜை போட்ட நாளிலேயே

விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டு விடுகின்றன.

அதற்கான ஒப்பபந்தம் போடப்பட்டு முன்பணம் பெறப்படுகிறது.

படமே வெளியாகும் தருவாயில் திருப்பி என்ன விற்க முயற்சி.

:icon_idea::):D

  • தொடங்கியவர்

அஜீவன்,

நீங்கள் சொல்வது ஓரளவுதான் சரி. அனைத்துத் திரைப்படங்களும் பூசை போட்ட அன்றே விற்பனையாவது இல்லை. படம் எடுத்து முடித்தும் விற்க முடியாத நிலையில் பல திரைப்படங்கள் இருக்கின்றன.

ஆனால் "அயன்" ஏற்கனவே விற்கப்பட்டிருக்கலாம். அதற்காக எமது முயற்சியை கைவிட வேண்டியது இல்லை. வரும் காலத்திலும் சன் குழுமம் திரைப்படங்களை எம்மிடம் விற்க இருப்பதால், ஏற்கனவே விற்கப்பட்ட படத்தை புறக்கணிப்பதும் பயன் தரக்கூடியதுதான்.

நெடுக்காலபோவான்,

நீங்கள் பெரிய திட்டங்களை போடுகிறீர்கள். அவைகள் நடைபெறுமானால் மிகவும் நன்மையாக அமையும்.

அதே வேளை தமிழ்நாட்டில் இருந்து வருபவைகளை ஒட்டுமொத்தமாக எக்காலத்திற்கும் புறக்கணிக்க வேண்டியது அவசியம் இல்லை என்பது கருத்து.

கலைஞர் குடும்பத்திற்கும், சன் குழுமத்திற்கும் எங்களின் கோபத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதே "அயன்" புறக்கணிப்பு பற்றிய கோரிக்கையின் அடிப்படைக் காரணமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.