Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிப்போம் கனடாவில் யுவன்சங்கர் ராஜாவின் மாபெரும் இசைநிகழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி ? ???

இங்கேயும் கொஞ்சம் அழுத்துங்களேன்

genocide srilanka

srilanka state terrorism

தமிழ்த்தேசியம்

சுத்துமாத்துக்கள்

அழியாச்சுடர்கள்

வன்னி அவலம்

வருகைக்கு நன்றிகள்

பிற்குறிப்பு:இது எனது கருத்தில்லை. இதனால் ஏற்படும் கருத்து மோதலுக்கும் நான் பொறுப்பாக இருக்க முடியாது. எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது.

Edited by ragunathan

  • Replies 62
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஏற்கனவே சில பிழையான தகவல்களுடன் களத்தில் வந்து, நான் ஏற்பாட்டாளர்கள் எனக்கு எழுதிய பதிலை இங்கே இணைத்த பிறகு, முழுத் திரியும் நீக்கப் பட்டு விட்டது. ஏற்பாட்டாளர்களின் பதிலின் சுருக்கம் இது தான்:

1. தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்து விட்டதாலும்

2. மக்கள் மிகவும் சோர்ந்திருப்பதால் அவர்களை உற்சாகமூட்டவும்

3. வன்னி மக்களுக்கு லாபத்தைக் கொடுக்க இருப்பதாலும்

தாங்கள் இந்த நிகழ்வை நடத்தியே ஆகப் போவதாக கூறியிருந்தார்கள்."இது சரியில்லை" என்று மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிய போது " நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் என்று தெரியும். இனிப் பேசுவதானால் நேரே வாங்கோ, முகம் பார்க்க வேணும்" என்று பதில் வந்திருக்கு. ஆனால் இரண்டு விடயங்கள் தெளிவானது

1. உலகத் தமிழர் அமைப்பு (இது தடை செய்தாயிற்றே?) இதற்கு அனுசரனை இல்லை.

2. சன் குழுமத்தின் பங்களிப்பு இல்லை (என்று சொல்லப் பட்டது).

நான் கனடாவில் எனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் செய்தியைக் கசிய விட்டு, புறக்கணிப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன். இதில் யாழ் கள நிர்வாகத்தின் நிலைப்பாடு என்னவென்று அறியேன். அதால தகவல்களை மட்டும் இங்கே தருகிறேன், சுய புத்தியுள்ள தமிழர்கள் என்ன செய்வதெண்டு முடிவெடுக்கட்டும். (இதுவும் நீக்கப் படுமோ தெரியாது).

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ரகுநாதன் இப்போது என்ன சொல்ல வாறீங்க? என்ன எதிர்பார்க்கின்றீங்க?

நான் ஏன் இப்படி கேட்கின்றேன் என்றால், இந்த நிகழ்வுமூலம் கிடைக்கும் நிதியை என்ன செய்யப்போகின்றார்கள் என்று முதலில் உறுதிப்படுத்துங்கள், அதன்பின்பு புறக்கணிப்பு பற்றிய கோரிக்கையை முன்வையுங்கள்.

எல்லாமே சந்தேகத்துடன்தான் இந்த கோரிக்கையை நீங்கள் முன்வைத்துள்ளமாதிரி தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, அதுதான் சொன்னேனே , இது எனது செய்தியல்ல், எனது நண்பர் அனுப்பிய சில மின்னஞ்சல்களில் வந்தது என்று. ஒரு உள்நோக்கமும் கிடையாது. ஏற்கனவே பதியப்பட்டு நீக்கப்பட்டிருந்ததும் நினைவிருக்கு. சரி, இதையும் நீக்கி விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ரகுநாதன் இப்போது என்ன சொல்ல வாறீங்க? என்ன எதிர்பார்க்கின்றீங்க?

நான் ஏன் இப்படி கேட்கின்றேன் என்றால், இந்த நிகழ்வுமூலம் கிடைக்கும் நிதியை என்ன செய்யப்போகின்றார்கள் என்று முதலில் உறுதிப்படுத்துங்கள், அதன்பின்பு புறக்கணிப்பு பற்றிய கோரிக்கையை முன்வையுங்கள்.

எல்லாமே சந்தேகத்துடன்தான் இந்த கோரிக்கையை நீங்கள் முன்வைத்துள்ளமாதிரி தெரிகிறது.

வல்வை மைந்தன்,

நிதி வன்னி மக்களுக்கு (நான் நினைக்கிறேன், லாபம் அல்லது லாபத்தில் ஒரு பகுதி) போவதாகத் தான் விளம்பரம் சொல்லுது. நான் இதைப் புறக்கணிக்கச் சொல்லும் காரணங்கள் இவை தான்:

1. இன்றைய நிலையில் இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி ரொரன்ரோ மத்தியில் தமிழர்களால் நடாத்தப் படுவதை தமிழர் அல்லாதோர் எப்படிப் பார்ப்பார்கள்? இவர்கள் சோகம் எல்லாம் தீர்ந்து விட்டது என நினைக்க நாமே வழியமைக்கிற மாதிரி ஆகும்.

2. இந்த நிகழ்ச்சி எங்கள் மக்களின் பலவீனமான பக்கத்தை ஊக்குவிக்கிறது. ரிக்கற் எழுபது டொலர். அதே எழுபது டொலரை (எந்த முதலீட்டுக் கழிவும் இல்லாமல்) தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கோ கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ கொடுக்க மறுக்கும் ஒருவர், இந்தியப் பாடகர் பாடகிகளை அருகில் நின்று பார்க்கக் கொடுக்கப் போகிறார். அதில் எஞ்சியதை வன்னி மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் கொடுப்பார்களாம். இந்தப் பலவீனத்தை முற்றாக ஒழிக்க இயலா விட்டாலும் மேலும் மேலும் ஊக்குவிக்காமலாவது இருக்க வேணுமென நான் நம்புகிறேன்.

3. மேலும் இது போன்ற நிகழ்வுகள், வன்னிக்கு உதவுகிறேன் என்ற கோஷத்துடன் தொடரும். ஏனெனில் இந்த ஏற்பாட்டாளர்களே பல அமைப்புகள் வானொலி நிலையங்கள் இந்த ஆண்டில் இப்படியான நிகழ்வுகளை திட்டமிடுவதாகவும் அதனால் தாங்கள் மட்டும் விதி விலக்காக நடக்க ஆயத்தமில்லை என்றும் கூறுகிறார்கள். நான் நினைக்கிறேன் மக்கள் கவனயீர்ப்பை விட்டு விட்டு இது போன்ற கேளிக்கை கூத்துகளுக்குச் செல்வார்கள், சிறி லங்கா, இந்திய உளவுக் குழுக்களுக்கு நல்ல ஆயுதம் ஒன்று கிடைக்கும்.

4. தனி மனித விருப்பினால் இது போன்ற புறக்கணிப்புகள் செய்யப் படுவது தான் நல்லது.ஆனால் இயலுமான போது நாங்கள் சூழலையும் மாற்ற வேண்டியது முக்கியம். இவர்களுக்கு புறக்கணிப்பு மூலம் பதில் கொடுத்தால் இனி ஒருவரும் இப்படி கேளிக்கை விற்று வன்னிக்கு காசனுப்ப முயல மாட்டார்கள் என நம்புகிறேன்.

ஜஸ்டின்,

மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் படும் அவலத்தில் கவலைப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தால் இப்படியான களியாட்டங்களுக்குப் போக முடியும் என்று காட்டுவது இவ்வளவு காலமும் நாங்கள் செய்துவந்த பேரணிகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அர்த்தமில்லையென்று சொல்லப் போகிறது. வன்னிக்கும் பணம் அனுப்ப வேண்டும்தான், அதற்காக இப்படி இங்கிதம் தெரியாமல் அல்லது இன்றைய அவலங்களுக்கு சற்றுமே ஒத்துவராத நிகழ்வு மூலம் பணம் சேர்ப்பதென்பது விசித்திரமாகத்தான் எனக்குப் படுகிறது. அப்படி எம்மவர் இந்நிகழ்ச்சிக்குப் போனால் நீங்கள் சொல்லியது போல 70 டாலர் வன்னிக்கு அனுப்ப விருப்பமில்லாதவர்கள், தமிழக கலைஞர்களை அருகில் சென்று பார்ப்பதற்குக் கொடுப்பதாக அமைந்து விடும்.

இது எனது கருத்து. அது சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. இதனுடன் முரண்படுபவர்களின் கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பணம் என்று பார்க்கும்போது எல்லாம் ஒன்றுதான் ஆனால் எப்படிச் சேர்கிறது என்று பார்த்தால்த்தான் எனக்கு சிறிது தயக்கமாக இருக்கிறது.

ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதெல்லாம் வாஸ்த்தவம் தான். ஆனால் அதை இன்னொரு நாளுக்கு ஒத்திப்போட முடியாதா? அவ்வளவிற்கு எமது ஈழத் தமிழர்கள் பொறுமை அற்றவர்களா?

நான் ரகுநாதனின் கருத்துடன் உடன்படுகின்றேன். இதுமாதிரியான நிகழ்ச்சிகள் இப்போது எம்மவர்கள் மத்தியில நெஞ்சில தோன்றி இருக்கின்ற நெருப்பை அணைப்பதற்கே வழிகோலும்.

வன்னி மக்களுக்கு ஏற்கனவே பொருட்கள் ஒன்றும் போக முடியாமல் இடையில தடக்குப்பட்டு நிக்கிது. வன்னி மக்களுக்கான நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி எண்டுற காரணத்துக்காக இந்த நிகழ்ச்சிக்கு ஆதாவு கொடுப்பது என்றால்...

நடக்கப்போகும் நிகழ்ச்சியை கொஞ்சம் மாற்றி அமைக்கலாம்... அதாவது சும்மா சினிமா பாடல்களை தவிர்த்து தாயக நினைவுகளை சுமந்து வரும் பாடல்களை இசைக்கலாம்.

முக்கியமாக இப்படியான நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில எம்மவர்களின் மனதை திசை திருப்பாத வகையில பார்த்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறன்.

அங்க இருக்கும் ஐயர் ஒருவர் தங்களுக்கு மரக்கறி இல்லையாம் உடனடியாக மரக்கறி தேவையாம் என்று சொல்லி பேட்டி கொடுக்கேக்க எங்களுக்கு சிரிப்பு வருகிது. உயிர் முக்கியமா இல்லாட்டிக்கு மரக்கறி முக்கியமா என்று..... ஆனால்... இப்படியான நிகழ்ச்சி எங்களுக்கு முக்கியமா இதுகளை நாங்கள் கவனிக்க தேவையில்லையா என்று பார்த்தால்... அது வேற எங்கையோ போய் உதைக்கிது!

கனடாவில் வாழும் தமிழ் மக்கள் எல்லாம் கொதித்துப் போயிருக்கிறொம். எமது மக்களின் மரணங்கள் கொண்டு கவலைகொண்டுள்ளோம் என்பதனை இங்குள்ள வானொலிகள் மூலம் பிரச்சாரம் செய்வதற்காக நாம் ஏராளமான பணத்தைச் செலவளிக்கிறொம். (இதனைப் பலரும் அறிந்திருப்பீர்கள்) இப்பொழுது எமது மக்கள் எல்லாம் களியாட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதனை இந்த நிகழ்ச்சி மூலம் கனடா வாழ் சமூகத்திற்குச் சொல்லப் போகிறோமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை இங்கு இணைத்ததன் நோக்கம் எமது கள நண்பர்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தவல்ல. எம் எல்லோருக்கும் தெரியும் நாம் தனித்தனியாகவும் சேர்ந்தும் எமது மக்களுக்காக இன்று செய்துவரும் போராட்டங்கள் பற்றி. ஆகவே இந்தத் தலைப்பால் எமக்குள் ஒரு பிளவு வேண்டாம். ஏற்கனவே இந்தத் தலைப்பி கருத்தாடி நிழலி அவர்களுடன் ஒருமுறை முரண்பட்டிருக்கிறேன். அவர் எமது ஊடக் போர்முனைப் போராளிகளில் முக்கியமானவர். ஆகவே எவரின் மனதையும் புண்படுத்த வேண்டாம்.

நன்றி.

இதை புறக்கணிப்பதே சிறந்தது என்பது எனது கருத்து..காரணம் யுவன் சங்கர்ராஜாயும் அவித்து போட்டு ஆட வரும் நடிகைகளுக்கும் பெரும் தொகை பணம் கொடுக்க வேண்டும். எமக்கே தாயக நிதி பங்களிப்பு கடமைகள் பல இருக்கும்போது தேவையில்லாமல் இவர்களுக்கு ஏன் கொட்டி கொடுக்க வேண்டும்?? அதுவும் இலாபத்தில் எத்தனை பங்கு எப்படி யாருக்கு நன்கொடையாக அளிக்கப்பட இருக்கின்றது என்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னும் சொல்லவில்லை. முதலில் இதை ஏற்பாடு செய்தவர் யார் என்று தெரியுமா?..எனக்கு தெரியாது தெரிந்தால் கூறுங்கள்...அவர் தேசியத்திக்கு ஆதரவானவரா இல்லை மாற்று கருத்து மாணிக்கமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜயாமாரே உங்கள் கோரிக்கையுடன் நானும் உடன்படுகின்றேன், விடியட்டும் என்னால் முடிந்ததை செய்கின்றேன்.

இதில் விபரிக்க விரும்பவில்லை.

கிழமையில் ஏழு இரவும் ஒலிபரப்பாகி இப்போது இரண்டு இரவு மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழோசை வானொலியின் உரிமையாளர் ஸ்ரீஸ்காந்தராசா என்றழைக்கப்படும் ஸ்ரீ என்பவரினால் தான் இது ஒழுங்கு செய்யப்பட்டதாக ஒரு தகவல்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் ஒரு நகைக்கடை வரும் மே மாதம் இன்னிசை நிகழ்ச்சி ஒன்று வைக்கவுள்ளதாக ஊடகங்களில் விளமபரம் கொடுக்கிறார்கள். .

வல்வை மைந்தன்,

நிதி வன்னி மக்களுக்கு (நான் நினைக்கிறேன், லாபம் அல்லது லாபத்தில் ஒரு பகுதி) போவதாகத் தான் விளம்பரம் சொல்லுது. நான் இதைப் புறக்கணிக்கச் சொல்லும் காரணங்கள் இவை தான்:

1. இன்றைய நிலையில் இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி ரொரன்ரோ மத்தியில் தமிழர்களால் நடாத்தப் படுவதை தமிழர் அல்லாதோர் எப்படிப் பார்ப்பார்கள்? இவர்கள் சோகம் எல்லாம் தீர்ந்து விட்டது என நினைக்க நாமே வழியமைக்கிற மாதிரி ஆகும்.

2. இந்த நிகழ்ச்சி எங்கள் மக்களின் பலவீனமான பக்கத்தை ஊக்குவிக்கிறது. ரிக்கற் எழுபது டொலர். அதே எழுபது டொலரை (எந்த முதலீட்டுக் கழிவும் இல்லாமல்) தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கோ கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ கொடுக்க மறுக்கும் ஒருவர், இந்தியப் பாடகர் பாடகிகளை அருகில் நின்று பார்க்கக் கொடுக்கப் போகிறார். அதில் எஞ்சியதை வன்னி மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் கொடுப்பார்களாம். இந்தப் பலவீனத்தை முற்றாக ஒழிக்க இயலா விட்டாலும் மேலும் மேலும் ஊக்குவிக்காமலாவது இருக்க வேணுமென நான் நம்புகிறேன்.

3. மேலும் இது போன்ற நிகழ்வுகள், வன்னிக்கு உதவுகிறேன் என்ற கோஷத்துடன் தொடரும். ஏனெனில் இந்த ஏற்பாட்டாளர்களே பல அமைப்புகள் வானொலி நிலையங்கள் இந்த ஆண்டில் இப்படியான நிகழ்வுகளை திட்டமிடுவதாகவும் அதனால் தாங்கள் மட்டும் விதி விலக்காக நடக்க ஆயத்தமில்லை என்றும் கூறுகிறார்கள். நான் நினைக்கிறேன் மக்கள் கவனயீர்ப்பை விட்டு விட்டு இது போன்ற கேளிக்கை கூத்துகளுக்குச் செல்வார்கள், சிறி லங்கா, இந்திய உளவுக் குழுக்களுக்கு நல்ல ஆயுதம் ஒன்று கிடைக்கும்.

4. தனி மனித விருப்பினால் இது போன்ற புறக்கணிப்புகள் செய்யப் படுவது தான் நல்லது.ஆனால் இயலுமான போது நாங்கள் சூழலையும் மாற்ற வேண்டியது முக்கியம். இவர்களுக்கு புறக்கணிப்பு மூலம் பதில் கொடுத்தால் இனி ஒருவரும் இப்படி கேளிக்கை விற்று வன்னிக்கு காசனுப்ப முயல மாட்டார்கள் என நம்புகிறேன்.

மிகவும் தெளிவாகவும் முற்றிலும் சரியாகவும் எழுதி இருக்கின்றீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றது மக்களுக்கு எழுசியுட்டகூடிய நிகழ்ச்சிகள் தானேயொழிய கேளிக்கைகள் இல்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் போராட்டங்களுக்கு பின்னடைவை ஏற்ப்படுத்தும். ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். இப்படியான களியாட்டங்கள் புலத்தில் நடக்குதென்று வன்னியில் உள்ள மக்களிடம் செய்தி போனால் எவ்வளவு அவநம்பிக்கையை அது ஏற்படுத்தும்.

நாங்கள் எவ்வளவு கஷ்டபட்டு இந்த உலகத்தினை திரட்டி வைத்துள்ளோம் இந்த நேரத்தில் இந்த நிகழ்வு தேவையற்றது என்பது என் சொந்த கருத்து,எங்கள்மேல் உள்ள இரக்கமற்றுவிடும்,இதை வைத்தே இலங்கைத்தூதுவர் பிரசாரம் செய்யவெளிக்கிட்டு விடுவார்.எப்படியும் நாளை இரவுக்குள் தவலறிந்து களத்தில் இணைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

காகம் ஒன்று செத்துவிட்டால் கரைகிறது முழு இனமும்....

அன்றிதற்காய் ஏப்ரல் வரைக்குமா சாவுகள் நாட்டில் தொடரும் என்று

ஏதோதோ விவாதங்களும் வியாக்கியானங்களும்

மூச்சுத் தணறித் திணறி மார்ச்சும் முடிவு நெருங்கி...

செத்தவர் கணக்கை எண்ண ஏப்ரல் எமக்குப் போதாது.

சொன்னால் எவருக்கும் விளங்காது.

சக்திக்குப் பாட்டிசைத்த சத்தியவான் கேட்டாராம்.

காகம் ஒன்று செத்துவிட்டால் கரைகிறது முழுஇனமும்

உலகுலுக்கி தீய்கிறது உணர்வுள்ள தமிழினம்.

கனடாவாழ் தமிழினம் இன்னிசை கேட்கும் நிலையிலா?

அன்னை தமிழகத்தின் இன்னிசை வேந்துணர்வின்

ஒருதுளிகூடவா...........???

கொட்டகை போடவும்,

கொண்டாட்டம் கும்மாளமென கட்டையில போறதுகள்

எழுச்சி படைக்க என்று கச்சிதமா கதையுரைக்கும்.

நாளாந்தச் சாவிற்காய் நினைவேந்தும் உள்ளரங்கில்

அலங்காரப்பதுமைகளே அனைத்துமாய் பரிணமிக்கும்.

உல்லாச வாழ்வுக்கு உசுப்பேத்த

உதவாத சில்லறைகள் வழிதேடி வலை வீசும்.

தேவாரம் பாடி, ஆண்டவர் காப்பார் என்று அரோகராக் கூட்டம்

அடுத்த கட்டம் அறியாது அமைதியாய் கிடக்கும்.

அந்நிய மோகத்தின் வாழ்வோட்டம் தெரியாமல்

சந்திக்குச்சந்தி சில சத்தியத்திற்காய் தமை வருத்தும்.

கதகதக்கும் குடில்களுக்குள் கண்ணுறங்கா மானுடமாய் சில

துருவவெளிகளில் அனல் மூட்டப் போராடும்.

நாழிகைகள் ஒவ்வொன்றும் நம்மினத்தின் வாழ்வு

வினாக்குறியாகி செத்துப் பிழைக்கிறது.

ஒப்பாரி மட்டுமே எமக்குள் ஓர்மத்தின் தீ மூட்டும்.

ஒன்றரை இலட்சம் புலிக்கொடி எங்கள் கைகளில் என்றால்

எந்தக் கலை நிகழ்ச்சி எழுச்சி ஊட்டி வைத்தது?

அடங்காமண் நோக்கி வணங்காமண் எழுச்சி

எந்தக் கலை நிகழ்ச்சியால் எடுத்தூட்டம் பெற்றது?

ஒப்புக்குச் சப்பாணி சாட்டுரைக்க முனையாதீர்

சாத்தியத்தீ அணைக்கும் செயல் படைக்க விளையாதீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா கனடா வாழ் தமிழினம் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மானிலத்திலும் மே மாதத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க உள்ளது. ஏதோ ஒரு நகைக்கடையின் 21வது ஆண்டு நிறைவு விழாவாம்

யாழ்கள நண்பர்கள் ரகுநாதன், ஜஸ்டின், கலைஞன், நிழலி மற்றும் வல்வை சகாறா ஆகியோரின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை.

தாயகத்தமிழர்களின் அவலவாழ்விற்காக புலம்பெயர் தமிழர்களிடம் நிகழ்வு நடத்தித்தான் காசு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.அங்கிருப்பவர்கள் அனைவருமே எம் உறவுகள். அவர்களின் தவிப்பை துடிப்பை உணர்ந்து அவர்களின் துன்பத்தை துடைக்க நெருப்பாய் எழுந்து நிற்கும் தருணத்தில் எங்களுக்கு, எம்மக்களுக்கு நாங்கள் தானே ஒழிய அவை(இசைக்குழு+நடிகைகள்) வந்து நடத்தித்தான் நாங்கள் காசு கொடுக்க வேண்டும் இல்லை.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயவுசெய்து கவனிக்கவும்.எம்மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் பண்ணும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்தவித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.எம் ஈழவிடுதலை வரலாற்றில் வணங்காமண் நிச்சயம் சரித்திரம் எழுதப்போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய கணக்கு

மொத்த வரவு- 1000 பேர் வந்தால்*70=70000 $

மொத்தச் செலவு-

போக்குவரத்து=x

தங்குமிடம்=y

இதர=z

ஆகவே மொ.செலவு=x+y+z(2000)

தேறிய லாபம்= 7000-(x+y+z)=உதாரணத்திற்கு 5000 என்றால் அதன் அர்த்தம் 2000 தேறிய நட்டம்

மொத்த தேறிய நட்டம் இது மட்டு மல்ல = 2000+இழக்கப்போவது 2000 இது 5000 மாறலாம்

இழப்புகள்

• மக்களின் போராட்ட உளவுரண்

• எதிரிக்கு காட்டிக்கொடுப்பது

o நாளை டக்ளஸ் ஒரு கூட்டத்தில் இப்படி பேசினால் பதில் என்ன கூறுவீர்கள்?

o கொஞ்சத் தமிழர்கள் கனடாவில் உங்களை(வன்னியில்) சொல்லி காசு கொள்ளையடிக்கிறார்கள் என்று. அது அவர்களுக்கு பரப்புரைக்கு இலகுவானதாகிவிடும்.

o இது இவ்வளவு காலமும் பெற்ற போராட்ட வலுவை குறைக்கும்

• சிலவேளை கனடா காவல் பணத்தை பாவிக்க முடியாத படி செய்தால் விளைவுதான் என்ன?(5000) சிங்களவன் சும்மா திண்ணையில் இருந்து அரட்டை அடிக்கவில்லை.sbs கருத்துகள் பின்னூட்டலில்.

• தமிழ் நாட்டு சகோதரங்களுக்கு கொடுக்கும் பணம் சிலவேளை இந்தியா கொடுக்கிற ஆயுதமாக மாறதென்பதற்கு என்ன நிச்சயம்.சந்தேகப்படவேண்டும்

• தமிழக உறவுகளின் நம்பகத்தன்மையை நாம் இழப்போம்

• அப்ப ஏன் அயன் படத்தை திரையிடக்கூடாது.

• இன்னும் பல

அல்லல் படும் மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைக்க வேண்டாம்.

அதிகம் அலச தேவையில்லை நாமளே சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்தாகிவிடும்

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் சுனாமிக்கு ஒரு வானொலி காசு சேர்த்தது. பிறகு அந்த பணம் போய் சேர்ந்ததாக தெரியவில்லை. அதே போல் தான் இதுவும். ஒன்றரை லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடியதை கனேடியர்களே அட இவ்வளவு பிரச்சனை உங்கள் நாட்டில் உள்ளதோ என கேட்கும் அளவுக்கு ஒரு பிரச்சாரத்தை கொடுத்தது. இப்போ களியாட்ட நிகழ்வை நடத்தும் போது நிச்சயமாக பிழையான எண்ணத்தை கனடிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். அத்தோடு எதிரி எப்படி எமது பிரச்சாரங்களை முறியடிக்கலாம் என மண்டையை உடைத்துக்கொண்டிருக்க நாமே பொல்லை கொடுத்து அடி வாங்கியதாக தான் முடியும்.

ஒன்றரை இலட்சம் மக்கள் குளிரில் மத்தியிலும் வீதியில் இறங்கி போராடியவர்கள். அவர்களிடம் இப்படியான களியாட்டங்கள் வைத்து தான் காசு வாங்க வேண்டும் என்றில்லை. வேறு பல வழிகளில் (வணங்கா மண் போல) செய்யலாம்.

இந்நிகழ்ச்சியை பகிஸ்பரிப்பது என்பது யுவனையோ, அல்லது இளையராஜாவையோ அல்லது ஏனைய கலைஞர்களையோ அவமதிப்பது என்பதல்ல. நாளொன்றுக்கு 100க்கு மேற்பட்ட எமது மக்கள் வன்னியில் கொல்லப்படும் போது நாம் எப்படி களியாட்ட நிகழ்ச்சியை நடாத்த முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் சொல்லலாம்.

உங்களின் கருத்தை நான் வரவேற்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை சொன்னால் யாழ் களமும் ஏற்காது தமிழர்கள் சிலரும் ஏற்க்க மாட்டார்கள்

யுவனிடமே இதை தெரிவித்தால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாட்டத்தில் கலக்க வருபவர்கள் தமிழர்கள் என்றால் ஏன் அதனை முன் கூட்டியே கொடுத்தால் என்ன? நிகழ்வை ரசித்து தான் உதவ வேண்டுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.