Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணிப்போம் கனடாவில் யுவன்சங்கர் ராஜாவின் மாபெரும் இசைநிகழ்ச்சி

Featured Replies

மக்களே....இது தமிழனுக்கு தமிழனால் செய்ப்படும் தூரோகம்..... உலகத்தமிழர் மைய்ம் இதனை செய்கிறதது என்றால் இதற்கு நிற்சையம் நாட்டின் அனுமதி கிடைத்திராது..... ஒரு பக்கம் மக்கள் போராட்டங்கள் மறுபக்கம் குதூகல நிகழ்வுகள்..... இது ஒட்டுமொத்த உலத்தமிழர் போரடடங்களையும் ஒரு நாளில் மழுங்கடித்து விடும்.

ஒரு சில மாதங்கள் இக்கு முன்னர் ஒரு சிறுமி பேசிய பேச்சு இன்னும் நினைவு இருக்கிறதா? இவற்றை மழுங்கடிக்க ஒத்துளைக்க போறிங்களா?

நான் எனக்கு தெரிந்த மற்றும் உறவினர் ஊடாக ஒரு பரப்புரையை நடத்தியுள்ளேன்.

யாரும் முடிந்தால் ஒரு மின்னஞசல் போரட்டத்தனை ஆரம்பியுங்கள். யுவனுக்கும் இதைத் தெரிவியுங்கள்

யுவனின் மின்னஞசல் முகவரி yuvansha@hotmail.com

  • Replies 62
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் இதை நடாத்தும் அந்த நபர்களுக்கும் அனுப்பி விடுங்கள் அச்செய்தியை புறக்கணிப்போம் என்று

என்ன அதிசயம்!!! எல்லோரும் இங்கு ஒற்றுமையாக கருத்து வைத்திருக்கிறார்கள்!! :icon_idea::)

vanni_20090324002.jpg

இந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பது ஒரு நல்ல விடயம்.

சென்ற வருட இறுதியில் நம்மூர் தமிழ் சங்கம் வருடாவருடம் நடாத்தும் தமிழ் பள்ளி மாணவர்களின் விழா கடைசி நேரத்தில் தள்ளி போடப்பட்டது. பின் மீண்டும் அதனை நடாத்துவதா இல்லையா என்று அங்கத்தவர் கூட்டத்தில் ஆராயப் பட்டது. நடத்துவது இல்லை என்றே அனைவரும் முடிவெடுத்தனர். காரணம் தொடரும் வன்னி அவல நிலை.

இப்படி நிறுத்தப்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் நீளமானது. இந்நிலையில் ஒரு பிழையான முன்னுதாரணத்தை ஆரம்பித்து வைக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பது ஒரு நல்ல விடயம். நான் இதைப்பற்றி 50 emails அனுப்பிவிட்டோன்

ஒரு ஐடியா!

வருபவர்களில் பலர் எமக்கு ஆதரவான கலைஞர்கள். அத்தோடு நிகழ்ச்சியில் வரும் நிதியில் ஒரு பங்கு வன்னிக்கும் போகுமாம்.

கனடிய மக்கள் எம்மைப் பற்றி தவறாக நினப்பார்கள் என்பதுதானே பிரச்சனை?

இந்த நிகழ்ச்சியை ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்ப்பது போன்று நடத்த முடியாதா? அப்பொழுது கனடிய மக்கள் நாம் படம் பார்ப்பதாக நினைத்து ஏமாந்து விடுவார்கள்.

நாம் எதிரிகளையும் அதிகரிக்கத் தேவையில்லை. நாட்டுக்கும் நிதி சேர்த்த மாதிரி இருக்கும். கலைஞர்களோடு நின்று படம் எடுத்த மாதிரியும் இருக்கும்

:icon_idea:

அப்படியே பாகம் 1 & பாகம் 2 என்று விமர்சனமும் எழுதி போட்டா இன்னும் நல்லம் :):D

பாவம் சபேசன் நீங்கள். உங்களின் அயன் படப் புறக்கணிப்பு பற்றிய கருத்தாடலில் ஏற்பட்ட மனச் சோர்வை இங்கு சொருகி களைப்பாறுகிறீர்கள்

இங்கு பிரச்சனை கலை நிகழ்ச்சி நடாத்த வருபவர்கள் பற்றி அல்ல...எம் மக்களின் துயர் துடைக்கின்றோம் என்ற பெயரில் எம் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத களியாட்டத்தினை நடாத்தி கொள்ளை அடிக்க முனையும் அமைப்பின் முயற்சி பற்றியது.

இந்த நிகழ்ச்சியை மட்டும் அல்ல இது போன்ற அனைத்து நிகழ்சிகளையும் எம் தாய அவலம் மிக மோசமாக இருக்கும் காலம் வரைக்கும் நடாத்த முனைவது ஒரு பொறுப்பற்ற செயல் என்ற சிந்தனையின் அடிப்படையில் எடுக்கப் பட்டது. உங்களைப் போல ஆக ஒரே ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரே ஒரு 'அயன்' திரைப்படத்தினை மட்டும் எதிர்த்து மற்றவற்றை ஆதரிக்கும் முயற்சி அல்ல.

Edited by நிழலி

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விடுத்து நிகழ்ச்சி நடத்த வருபவர்களுக்கு எமத ஆதங்கங்களை எடுத்துக் கூறுங்கள். அவர்களும் தமிழர் தானே அவர்களுக்க எமது வேதனை புரியும். அத்துடன் எம்மவர் மத்தியிலும் ஒரு பரப்புரையை ஆரம்பித்தால் நன்மை பயக்கும்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐடியா!

வருபவர்களில் பலர் எமக்கு ஆதரவான கலைஞர்கள். அத்தோடு நிகழ்ச்சியில் வரும் நிதியில் ஒரு பங்கு வன்னிக்கும் போகுமாம்.

கனடிய மக்கள் எம்மைப் பற்றி தவறாக நினப்பார்கள் என்பதுதானே பிரச்சனை?

இந்த நிகழ்ச்சியை ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்ப்பது போன்று நடத்த முடியாதா? அப்பொழுது கனடிய மக்கள் நாம் படம் பார்ப்பதாக நினைத்து ஏமாந்து விடுவார்கள்.

நாம் எதிரிகளையும் அதிகரிக்கத் தேவையில்லை. நாட்டுக்கும் நிதி சேர்த்த மாதிரி இருக்கும். கலைஞர்களோடு நின்று படம் எடுத்த மாதிரியும் இருக்கும்

:icon_idea:

கொசுறாக உங்களின் "நான் கடவுள்" விமர்சனைத்தை மக்களிடம் கொடுத்தனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும். :):D

இந்தப் புறக்கணிப்பு என்பது தமிழகக் கலைஞர்களுக்கு எதிரானதல்லவென்பதையும் தற்போதைய நிலையில் இது தேவையற்றது என்பதையுமு; விளக்கி அந்தக் கலைஞர்களுக்கு பலரும் மின்னஞ்சல்களை அனுப்புங்கள். காரணம் அவர்களிடத்தில் இது திரிபுபடுத்திச் சொல்லப்படலாம்.

நான் அனுப்பி விட்டேன். நீங்களும் செய்யுங்கள்..

அவர்களின் ஈ மெயில் விலாசங்களைத் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் ஈ மெயில் விலாசங்களைத் தாருங்கள்

yuvansha@hotmail.com

நிழலி,

எனக்கு ஒரு சோர்வும் இல்லை. ஆனால் ஒரு விடயம் புரியவில்லை. கனேடியர்கள் நாம் இசை நிகழ்ச்சிக்குப் போனால் தவறாக நினைப்பார்கள், ஆனால் தியேட்டரில் படம் பார்க்கப் போனால் "பாவம், சரியான மனக் கவலை, அதுதான் படம் பார்க்கப் போகிறார்கள்" என்று நினைப்பார்களா?

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இந்த இசை நிகழ்ச்சி பற்றி யுவன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இன்றைக்கு ஈழ மக்கள் படும் துன்பத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா என்று ஒரு நிருபரால் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் யுவனும் "இந்த நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்டது, இப்பொழுது நிறுத்த முடியாது, நிகழ்ச்சி நடக்கின்ற நேரத்தில் ஈழத்தில் நிலைமை மாற்றம் அடைந்திருக்கும் என்று நம்புகிறோம்" எனச் சொன்னார்கள்.

ஆனால் ஈழத்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்து விட்டது. அவர்களின் நம்பிக்கை வீணாகி விட்டது.

இப்பொழுது செய்யக் கூடியது ஒன்றுதான்.

இந்த இசை நிகழ்ச்சியை ஒரு எழுச்சி நிகழ்வாக மாற்றுவதற்கு முயற்சி எடுங்கள். எமக்கு ஆதரவான கலைஞர்கள் பலர் வருகின்றார்கள். அவர்களோடு பேசி எழுச்சி மிக்க பாடல்களை வழங்கச் சொல்லுங்கள். மேடையில் எமது மக்களுக்காக குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

குத்தாட்ட நிகழ்ச்சியாக இல்லாது, எமது மக்களின் துன்பங்களையும், தமிழினத்தின் விடுதலையையும் சொல்லும் நிகழ்ச்சியாக மாற்றுவதற்கான வேலைகளைப் பாருங்கள்.

மற்றையபடி இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது வெற்றியை தரும் என்று நான் நம்பவில்லை. பலமான பின்னணிகள் இருப்பதாக செய்திகள் வருகின்ற பொழுது, மாற்று வழியைப் பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறு இல்லை.

thevaya.jpg

அண்ணாமாரே அக்காமாரே நான் இப்படித் துடிடித்துக் கொண்டிருக்க உஙங்களுக்குக் குத்தாட்டப் பாடல்கள் தேவைவதானா?

math_08.jpg

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள் :icon_idea::)

Edited by kuddipuli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

math_08.jpg

அண்ணை சிறிகாந்தராசா எனக்கு கொஞ்சம் ம்ருந்து அனுபிவிடுகிறீர்களா?

அல்லது யுவனுடன் கேட்க போகிறேன்

விழா நடாத்தி வரும் இலாபத்தை நாட்டுக்கு அனுப்புவம் என்று பம்மாத்து கதைப்பது தொடர்கதையாக இருக்கின்றது. சுண்டங்காய் காப்பணம் சுமை கூலி முக்காப்பணம். இரத்தமும் சதையுமாக சனம் தெருத்தெருவாக சிதறிக்கிடக்கும் நிலை கண்டு புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உலகெங்கும் தெருவில் இறங்கி போராட்டம் செய்து வரும் நிலையில் உலகம் எம்மை கூர்ந்து கவனிக்கின்றது இது போன்ற கேலிக்கை நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும். தேசியம் கதைக்கும் ஊடகங்களும் நிகழ்வை வெளம்பரம் செய்வதற்கு பணங்கொடுத்தால் விளம்பரம் செய்வார்கள். ஊடகங்கள் திருந்தாதாமல் இருக்கும் வரை இது போன்ற விடயங்கள் தொடர்கதையாகத்தான் இருக்கப்போகின்றது.

எனக்கு ஒரு சோர்வும் இல்லை. ஆனால் ஒரு விடயம் புரியவில்லை. கனேடியர்கள் நாம் இசை நிகழ்ச்சிக்குப் போனால் தவறாக நினைப்பார்கள், ஆனால் தியேட்டரில் படம் பார்க்கப் போனால் "பாவம், சரியான மனக் கவலை, அதுதான் படம் பார்க்கப் போகிறார்கள்" என்று நினைப்பார்களா?

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இந்த இசை நிகழ்ச்சி பற்றி யுவன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இன்றைக்கு ஈழ மக்கள் படும் துன்பத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா என்று ஒரு நிருபரால் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் யுவனும் "இந்த நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்டது, இப்பொழுது நிறுத்த முடியாது, நிகழ்ச்சி நடக்கின்ற நேரத்தில் ஈழத்தில் நிலைமை மாற்றம் அடைந்திருக்கும் என்று நம்புகிறோம்" எனச் சொன்னார்கள்.

ஆனால் ஈழத்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்து விட்டது. அவர்களின் நம்பிக்கை வீணாகி விட்டது.

இப்பொழுது செய்யக் கூடியது ஒன்றுதான்.

இந்த இசை நிகழ்ச்சியை ஒரு எழுச்சி நிகழ்வாக மாற்றுவதற்கு முயற்சி எடுங்கள். எமக்கு ஆதரவான கலைஞர்கள் பலர் வருகின்றார்கள். அவர்களோடு பேசி எழுச்சி மிக்க பாடல்களை வழங்கச் சொல்லுங்கள். மேடையில் எமது மக்களுக்காக குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

குத்தாட்ட நிகழ்ச்சியாக இல்லாது, எமது மக்களின் துன்பங்களையும், தமிழினத்தின் விடுதலையையும் சொல்லும் நிகழ்ச்சியாக மாற்றுவதற்கான வேலைகளைப் பாருங்கள்.

மற்றையபடி இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது வெற்றியை தரும் என்று நான் நம்பவில்லை. பலமான பின்னணிகள் இருப்பதாக செய்திகள் வருகின்ற பொழுது, மாற்று வழியைப் பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறு இல்லை.

முன்பு எனக்கு தெரிந்த ஒரு சம்பவம். கலியாணவீட்டுக்கு நாள் குறித்திருந்தார்கள் குறித்த நாளில் பெண்ணின் தந்தையார் இறந்துவிட்டார். இருந்ததும் நாள் முகூர்த்தம் எல்லாம் குறித்து விட்டபடியால் அந்த நாளில் தந்தையின் பிணம் ஒருபக்கம் இருக்க கலியாணவீடு செய்தார்கள். இதை செய்யக் கூடாது என்று சிலர் சத்தம் போட்டார்கள் ஆனால் சமூகத்தில் மூத்தவர்கள் மெய்பணமாக வரும் வசூலை வைத்து செத்தவீட்டையும் எட்டுசெலவையும் சிறப்பாக செய்யலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார்கள். அது நல்ல விசயம் என்று பட்டதால் அவ்வாறே செய்தார்கள். சாதராண கலியாண வீட்டையே தள்ளி போட முடியாத ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் போது இந்தியா எங்கே இருக்கின்றது கனடா எங்கே இருக்கின்றது எப்படி இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை தள்ளிப்போட முடியும்?

நல்லவேளை நாங்க கனடாவிலயே இல்லை...

திரியை படிச்சு முடிக்கவே நேரம் போயிடிச்சு..

நிழலி,

எனக்கு ஒரு சோர்வும் இல்லை. ஆனால் ஒரு விடயம் புரியவில்லை. கனேடியர்கள் நாம் இசை நிகழ்ச்சிக்குப் போனால் தவறாக நினைப்பார்கள், ஆனால் தியேட்டரில் படம் பார்க்கப் போனால் "பாவம், சரியான மனக் கவலை, அதுதான் படம் பார்க்கப் போகிறார்கள்" என்று நினைப்பார்களா?

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இந்த இசை நிகழ்ச்சி பற்றி யுவன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இன்றைக்கு ஈழ மக்கள் படும் துன்பத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா என்று ஒரு நிருபரால் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் யுவனும் "இந்த நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்டது, இப்பொழுது நிறுத்த முடியாது, நிகழ்ச்சி நடக்கின்ற நேரத்தில் ஈழத்தில் நிலைமை மாற்றம் அடைந்திருக்கும் என்று நம்புகிறோம்" எனச் சொன்னார்கள்.

ஆனால் ஈழத்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்து விட்டது. அவர்களின் நம்பிக்கை வீணாகி விட்டது.

இப்பொழுது செய்யக் கூடியது ஒன்றுதான்.

இந்த இசை நிகழ்ச்சியை ஒரு எழுச்சி நிகழ்வாக மாற்றுவதற்கு முயற்சி எடுங்கள். எமக்கு ஆதரவான கலைஞர்கள் பலர் வருகின்றார்கள். அவர்களோடு பேசி எழுச்சி மிக்க பாடல்களை வழங்கச் சொல்லுங்கள். மேடையில் எமது மக்களுக்காக குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

குத்தாட்ட நிகழ்ச்சியாக இல்லாது, எமது மக்களின் துன்பங்களையும், தமிழினத்தின் விடுதலையையும் சொல்லும் நிகழ்ச்சியாக மாற்றுவதற்கான வேலைகளைப் பாருங்கள்.

மற்றையபடி இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது வெற்றியை தரும் என்று நான் நம்பவில்லை. பலமான பின்னணிகள் இருப்பதாக செய்திகள் வருகின்ற பொழுது, மாற்று வழியைப் பற்றி சிந்திப்பது ஒன்றும் தவறு இல்லை.

உங்களைப் போன்றவர்கள் சிறந்த கொள்கைவாதிகள்தான்.

சபேசன் போன்ற ஆட்கள் நாட்டுக்கு ரொம்ப தேவை.

யாழ்களத்தில யாரோ சில ராஜபார்வைகள்

கனடாவில இசை நிகழ்ச்சி குறித்த தகவலை தூக்கிட்டு

புறக்கணிப்போம் என்ற தலைப்பை போட்டு ............... வேண்டாம்? :icon_idea:

உண்மையை சொன்னா அடிக்க வாறாங்க

பொய்யை சொன்னா கை தட்டுறாங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக் கூரை எரியும் போது பாட்டுப்பாட நேரம் ஏது?

முன்னரே ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்ச்சியா?கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் மீது கொடுந்தாக்குதல் ஏவி விடப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கு.யாருக்கு காது குத்துகிறீர்கள்.வன்னி மக்களின் அவலம் தீர்க்க என்று நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்றால் வன்னி மக்கள் அவல நிலைக்கு வந்த பின்னர் தானே ஏற்பாடு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.இப்ப வன்னி மக்கள் என்று சொன்னால்தான் காசு சேர்க்கலாம் என்ற நிலை.கலியாணவீட்டுச் செலவுக்கு விபச்சாரம் செய்து பணம் சேர்க்கிற மணமகள் மாதிரி இருக்கு.தமிழகத்தில அவனவன் எங்களுக்காக தீக்குளிச்சுச் சாகிறான்.இஞ்ச நீங்கள் களியாட்டம் நடத்தி காசு சேர்க்கிறீங்கள்.சீ........

இன்றைய காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.