Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் கெலிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத படைகளுக்கு வான் வழி உதவி வழங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறீலங்கா வான்படை உலங்குவானூர்திகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தரை - வான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வீசித் தாக்கினர் என்றும் இருந்தும் விமானிகள் இரண்டு உலங்குவானூர்திகளையும் பத்திரமாக சேர்ப்பிடத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் என்றும் சிறீலங்கா வான் படை செய்தி வெளியிட்டுள்ளது.

Two helicopters narrowly miss LTTE fire - SLAF

The Air Force claimed that LTTE cadres had fired anti-aircraft missiles at two of its helicopters from inside the 'No Fire Zone'. The copters which were engaged in evacuating injured soldiers narrowly missed the enemy fire and reached their assigned destination.

டெயிலிமிரர்.கொம்

மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா புதிய திட்டம்

மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்தவதற்கு நியாயம் தேடும் வகையில் சிறிலங்கா புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்த படையினரை அழைத்துச்செல்ல வந்த இரு பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகவும், விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த படையினரை ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்தியை விமானி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இந்த அறிவிப்பானது பாதுகாப்பு வலயத்தின் மீது ஏற்கனவே தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும்போ

மக்கள் பாதுகாப்பு வலையத்தினுள் சிங்கள இராணுவமே குண்டு வீசி பொதுமக்களைக் கொலை செய்வதாக நேற்று Human Rights Watch என்ற அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

அந்த அறிக்கை பொய்யானது என மறுப்பதற்காக உருவாக்கப்பட்ட சோடிப்பாகவும் இதைக் கொள்ளலாம்.

இது சோடிக்கப்பட்ட சிங்களவனின் செய்தியாகத்தான் இது இருக்கும்.2 மாதங்களுக்கு முன் மிக் விழுந்த போது இயந்திர கோளாறு என்று சொன்னவர்கள் இதை இவ்வாறு சொல்லும் போது சிங்களவனின் நோக்கம் வேறு???

வன்னியில் இன்னும் இரத்தம் குடிக்கப்போகின்றான் என்பது தெரிகின்றது

Edited by THEEPAN0007

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத படைகளுக்கு வான் வழி உதவி வழங்கிக் கொண்டிருந்த .

நெடுக்கு... தயவு செய்தி சிங்களத்தை இனிமேலும் பேரினம் எனும் பதத்துக்குள் அடக்காதீர்கள்.... இண்று உலக மொத்த தமிழினமே சிங்களவனின் இனவாதத்தை புரிந்து கொண்டு இருக்கிறது... சிங்களவரை எதிக்க துணிந்தும் இருக்கிறது...

ஈழத்தமிழரை பொறுத்த மட்டில் நாங்கள் சிறுபாண்மைதான்... இண்று ஒட்டு மொத்த தமிழனும் பேரினவாதி எண்று சிங்களவரை அழைப்பது எங்களின் வலுவை நாங்கள் சுருக்கி கொள்வதோடு , உளவியலில் நாங்கள் சிங்களவரை பெரியவராக நினைக்கவும் தோண்றுகிறது...

ஆகவே பெரிய இனமாகிய நாங்கள் சிறிய இனமான சிங்களவனை பேரினம் எண்று அழைப்பது தவிர்க்க பட வேண்டியது... சிறிய இனமான சிங்களத இனவாதம் அடக்க பட கூடியதும் கூட.....

நாங்கள் இண்றும் தமிழர்களை எதிர்த்து புறக்கணிப்புக்களை செய்யும் நிலைப்பாட்டோடும், அப்படியான கேட்டில்தான் இருக்கிறோம் எண்று நீங்கள் சொன்னால் . அதுக்கு சொல்வதுக்கு என்னிடம் பதில் ஏதும் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இண்றும் தமிழர்களை எதிர்த்து புறக்கணிப்புக்களை செய்யும் நிலைப்பாட்டோடும், அப்படியான கேட்டில்தான் இருக்கிறோம் எண்று நீங்கள் சொன்னால் . அதுக்கு சொல்வதுக்கு என்னிடம் பதில் ஏதும் இல்லை....

தயா நெடுக்கை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கிறார்..! :icon_idea:

நாம் பெரிய இனம் நமக்கு ஒரு நாடு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயா நெடுக்கை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கிறார்..! :D

சிறீலங்காவைப் பொறுத்தவரை சிங்களவர்கள் தம்மை பேரினவாத சிங்களத் தேசியத்துக்குள்ளதான் திணிச்சு வைச்சிருக்கினம்.

தமிழர்கள் எங்கும் பேரினமாக இல்லை. இந்தியாவில் தெற்குக் கோடியில் ஒரு அனாதைப் பிழைப்பு.. சிங்கப்பூரில் மலேசியாவில் அப்படி.. சிறீலங்காவில் பூர்வீகத்தையே இழந்து அப்படி.. புலம்பெயர்ந்த நாடுகளில் கூலிகளாக.. இப்படி அவையை பேரினம் என்று அடையாளப்படுத்த ஒரு கறுமமும் இல்லை அவையட்ட..! :D:icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான சான்றுகள் உள்ளன: ஜோன் ஹோம்ஸ்

[ புதன்கிழமை, 25 மார்ச் 2009, 12:03.17 PM GMT +05:30 ]

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரசேதங்களில் அரசாங்க இராணுவத்தினால் எறிகணை தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைப் பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்ககையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க படையினரின் இந்த எறிகணை வீச்சுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத பாதுகாப்பு வலயப் பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்படுகின்றமையை அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் காண்பிக்கப்பட்ட, மோதல் பிரதேசங்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொது மக்கள் தொடர்பான புள்ளி விபரங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாகவும் ஜோன் ஹோம்ஸ் இதன் போது தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2a26QV14b...3g2hF2ccdlj0o0e

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவைப் பொறுத்தவரை சிங்களவர்கள் தம்மை பேரினவாத சிங்களத் தேசியத்துக்குள்ளதான் திணிச்சு வைச்சிருக்கினம்.

தமிழர்கள் எங்கும் பேரினமாக இல்லை. இந்தியாவில் தெற்குக் கோடியில் ஒரு அனாதைப் பிழைப்பு.. சிங்கப்பூரில் மலேசியாவில் அப்படி.. சிறீலங்காவில் பூர்வீகத்தையே இழந்து அப்படி.. புலம்பெயர்ந்த நாடுகளில் கூலிகளாக.. இப்படி அவையை பேரினம் என்று அடையாளப்படுத்த ஒரு கறுமமும் இல்லை அவையட்ட..! :D:icon_idea::)

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகள் என்ற சொற்பதமே பொருத்தமானதாகும்.

Edited by Valvai Mainthan

'சிங்கள அரசாங்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதம் சமன் பெரிய இனவாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.