Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"என்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது": எரிக் சொல்ஹெய்ம்

Featured Replies

நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தார்.

எரிக் சொல்ஹெய்மின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள பிரான்சில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பிரபல எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், "எரிக் சொல்ஹெய்மைப் பொறுத்தவரையில் அவருக்கு அற்புதங்களை நிகழ்த்த முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர் இந்த விடயத்தில் தவறுகளைச் செய்வதையாவது தவிர்த்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

"இராஜதந்திரம் என்பது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் கலையாக இருக்கலாம். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் என்பது சாத்தியமற்றவைகளைச் சாத்தியமாக்குவது" எனவும் குறிப்பிட்ட அரவிந்தன், "இதனைப் புரிந்துகொள்ள நோர்வே தவறிவிட்டது" எனவும் சுட்டிக்காட்னார்.

20080608011.jpg

[கி.பி.அரவிந்தன்]

"சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் நோர்வே இழைத்த தவறின் காரணமாக, அனைத்துலக சமாதான முயற்சிகள் என்ற கருத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது" எனவும் குறிப்பிட்ட கி.பி.அரவிந்தன், "இந்தத் தவறைத் திருத்திக்கொள்வதற்கு அவர்ளுக்கு இப்போது கூட நேரம் இருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டினார்.

"நோர்வேயைப் பொறுத்த வரையில் அது வல்லரசுகளின் புவியியல் சார்ந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கையாளாகச் செயற்படாமல், உண்மையிலேயே சுயாதீனமாகச் செயற்பட்டு அனைத்துலக மனித நாகரீகம் என்ற அடிப்படையில் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டால் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஏற்கனவே இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்" எனவும் அரவிந்தன் குறிப்பிட்டார்.

சமாதான முன்னெடுப்புக்களில் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக்கொண்ட நோர்வே, இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை எவ்வகையிலும் நியாயப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அரவிந்தன், அதிலும் குறிப்பாக வன்னியில் உள்ள மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு கால கட்டத்திலேயே இந்தக் கருத்தை எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதங்கள் செய்ய தேவையில்லை...நியாயமாக நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் நோர்வே இழைத்த தவறின் காரணமாக, அனைத்துலக சமாதான முயற்சிகள் என்ற கருத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது" எனவும் குறிப்பிட்ட கி.பி.அரவிந்தன், "இந்தத் தவறைத் திருத்திக்கொள்வதற்கு அவர்ளுக்கு இப்போது கூட நேரம் இருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டினார்.

"நோர்வேயைப் பொறுத்த வரையில் அது வல்லரசுகளின் புவியியல் சார்ந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கையாளாகச் செயற்படாமல், உண்மையிலேயே சுயாதீனமாகச் செயற்பட்டு அனைத்துலக மனித நாகரீகம் என்ற அடிப்படையில் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டால் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஏற்கனவே இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்" எனவும் அரவிந்தன் குறிப்பிட்டார்.

சமாதான முன்னெடுப்புக்களில் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக்கொண்ட நோர்வே, இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை எவ்வகையிலும் நியாயப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அரவிந்தன், அதிலும் குறிப்பாக வன்னியில் உள்ள மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு கால கட்டத்திலேயே இந்தக் கருத்தை எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்

இந்த மனிதாபமானம் என்றவொரு தார்மீக பதத்தை எப்படியெல்லாம் ஒவ்வொரு நாடுகளும் தன் புவிநலன் சார்ந்த விடயங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன..! உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கலவரத்தையுண்டு பண்ணி ஆயுதங்களை பரிசோதிக்கும் சந்தைகளாக மாற்றும் அமெரிக்காவும் இதையே சொல்கிறது... மனிதாபிமானதிற்கெதிரான போர் என்ற போர்வையில் ஜப்பான், சீனா, ரஷ்யா போன்றவை தன் நலன் சார்பிலும் ஆயுத விற்பனையிலும் லாபம் தேடுபவை..இந்த சந்தடிகளுக்கு நடுவே உலக சமதானமென்ற போர்வையில் சூழ்நிலைக்கேற்ப பக்க தாளமிடும் நார்வே,பிரிட்டன் போன்ற நாடுகள்.. இச்சூதாட்டத்தில் அகப்படும் சிறிய வறிய நாடுகளின் நிலை, பூனையிடம் ஆப்பத்தை பறிகொடுத்து, நியாயம் தேடும் நிலைதான்.

எரிக் சொல்ஹெய்மன் கூற்று தட்டிகழித்து நழுவும் போக்காகவே தெரிகிறது. இவர்களால் அற்புதங்கள் செய்ய இயலாவிடினும், புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுச் சரணடைய வேண்டுமென தடம் மாறி, அற்பங்கள், அனர்த்தங்கள் ஏதும் செய்யமலிருந்தாலே போதும்.

Edited by ராஜவன்னியன்

அவரிடம் அற்புதத்தையோ அல்லது அருள்பாலிப்பையோ தமிழர்கள் வேண்டி நிற்கவில்லை. சமாதான தூதுவர் என்ற முறையில் மனட்சாட்சியுடன் நடந்திருக்க வேண்டும். தமிழர்களின் முதுகில் குத்திய சகுனி. இதை ஒரு கருத்துப்படமாக பதிவு செய்து நோர்வே ஆர்பாட்டங்களில் துர்க்கி பிடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது , அற்புதங்களை செய்யமுடியாது என்று கூறும் எரிக் சோல்கைம் சாமாதான பேச்சு விடயத்தில் தலையிட்டது ஏன் ?

மற்றவனுக்கு எமது இருப்பை காட்டிக் கொடுக்கவா ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூல்கைம் சொல்ல வந்தது என்னவென்றால் "போர் கடைசி கட்டத்திற்கு வந்து விட்டது இனிமேல் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்கவும் இதிலிருந்து பின்னோக்கி நகரவும் காலம் கடந்துவிட்டது - இனி தமிழனை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இன அழிப்புக்கு துணை போகும் செயல் ஒன்றைத் தவிர நோர்வேயால் வேறு ஏதாவது இப்போது செய்ய முடிந்தால் அது அற்புதமே" என்பது தான்.

உண்மையில் சூல்கைம் சொல்லியிருக்க வேண்டியது: "இனி நோர்வே அரசால் ஒன்றும் செய்ய முடியாது" உங்கள் பாட்டை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்பதைத்தான்.

Edited by vanangaamudi

எரிக்சசுல்கெய்ம் ஒரு பசுதோல் போட்ட வெள்ளை நரி..

6 வருடங்களின் முன்னர் பலமான நிலையில் இருந்த புலிகளை பலவீனமாக்கி அழிக்க யுத்தத்தில் பலவீனமான இலங்கையை மீண்டும் பலமாக்க 5வருட யுத்தனிருத்தமும் தேவைப்பட்டது..

உலக கூட்டு சதித்திட்டத்தில் புலிகளை பலவீனப்படுத்தல்.இல்லாமல் அழித்தல் என

அரங்கேறுகிறது..

சண்டையில் முடியாததை சதியில் சாதிக்கிறார்கள்... நோர்வே முடிய இந்தியா தொடர்கிறது...

எனவே தமிழரின் தலைவிதியை எதிர்காலத்தில் தமிழரே கையாளும் வகையில் கையாளப்படவேண்டும்...

எரிக் என்ன எவர் வந்தாலும் அவதானமாக இருக்க வேண்டும்..எம்மினத்தை எம்மினமே எம்மினத்தை அழிப்பவுடன் சேர்ந்து சதி செய்யும் போது மற்றவனை எப்படி எதிர்பார்ப்பது... உலகத்தில் மன சாட்சி கிலோ என்ன விலை எனக்கேட்கும் காலம்?

ஒற்றுமை, புத்திசாலிகளினல் உலக நாடுகலுக்கு ஏற்ற, கலத்திற்கேற்ற காய் நகர்த்தல்... அமைதியான சணக்கிய நகர்த்தல் என்பன காலத்தின் தேவை...

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை கூட சுட்டிகாட்ட முடியவில்லை. நடுநிலையாளராகவே செயற்பட முடியவில்லை. அதற்குள் அற்புதம் செய்யபோகிறாராம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வே கால் வைத்த இடங்களில் அமைதி தோன்றவில்லை. மாறாக விடுதலைப் போராட்டங்கள் காலநீட்சி என்னும் பொறியில் சிக்கவைக்கப்படு பலவீனமாக்கப்பட்டன.

1. பாலஸ்தீனம்

2. தமிழீழம்

  • கருத்துக்கள உறவுகள்

சில மனுசரைக் கிருமியள் எண்டு சொல்லுவினம். எனக்குத் தெரிஞ்ச நோர்வேக்காறர் 2பேரை அதுக்குள் வகைப்படுத்தலாம். முதலாமவர் எரிக் சூல்கைம் இரண்டாமவர் கன்ஸ் பெளவர். இரண்டாமவர் கிருமிகளுக்கெல்லாம் தாய்க் கிருமி மாதிரி. சமாதானத் தூதர்கள் போல் வேடமிட்டு இவர்கள் செய்தவைகள் என்று பல விடயங்கள் இருக்கின்றன. இப்போது உடனடி ஞாபகத்தில் வருபவை

- சிறீலங்கா அரசாங்கம் செய்த யுத்த நிறுத்த மீறல்களைத் தந்திரமாக வெளிச் சொல்வதைத் தவிர்த்து புலிகளை மட்டும் பல இடங்களில் குற்றவாளியாக்கும் செய்திகளைச் சொன்னார்கள்.

- புலிகளின் நடவடிக்கைகளைப் பகிரங்கமாக விமர்சித்த இவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தை பல்வேறு இக்கட்டில் இருந்து காப்பாற்றினார்கள்.

- நடுநிலையாளர்கள் என்ற நிலையைக் கடந்து புலிகள் தமது சொற்படி நடக்க வேண்டும் என அழுத்தங்களை வைத்தார்கள். அத்துடன் பல அபத்தமான குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாகவே சொல்லியுள்ளார்கள்.

- தென்னிலங்கையில் புதிய புதிய திட்டங்களுக்கு என பெரும் நிதியுதவிகளைச் செய்தார்கள். தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட சிறு உதவிகளும் போய் சேரவில்லை எனச் சுட்டிக்காட்டிய போது நொண்டிச் சாட்டுக்கள் சொன்னார்கள்.

- புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இரகசியங்களை உடனுக்குடன் இணைத்தலைமை நாடுகளுக்குக் காவிச் சென்றார்கள்.

தமிழர் தலைமைக்கெதிரான பல பகிரங்கப்படுத்த முடியாத விடயங்கள் இருக்கின்றன. நிச்சயம் காலம் தான் அவைகளை வெளிக்கொணரும்.

நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம், காலம் வரும் போது உருவாகும் தமிழீழம் என்ற நாட்டை அங்கீகரிக்கின்ற கடைசி நாடாகத் தான் நோர்வே இருக்குமே தவிர பலர் நினைப்பது போன்று முதலில் அங்கீகாரத்தினை வழங்காது.

ஏன் உதுகளை முன்னர் எழுதேல்ல எண்டு கேக்கிறது மாதிரியும் இருக்க. உப்படி முதல் சில விடயங்கள் எழுத வெளிக்கிட தடுக்கப்பட்டு விட்டேன். நாங்கள் எங்கள் செய்திகள் மூலம் ஒரு மாயைத் தோற்றத்தைத்தான் கட்டி எழுப்பியிருக்கின்றோம். எரிக் சூல்கைம், கன்ஸ் பெளவர் பல பேட்டிகளில் சிறீலங்கா அரசை மென்மையாகச் சாடியும் புலிகளைக் கடுமையாகச் சாடியும் எமது தமிழ் மக்கள் கூடியிருந்த பல கூட்டங்களில் பேசியுள்ளார்கள். அவர்கள் பேசியவற்றில் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களைத் தவிர்த்து சிறிலங்கா பற்றிப் பேசியதை மட்டும் பெரிய கொட்டை எழுத்துக்களில் போட்டு அதைத் திரும்பத் திருப்பப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். தமிழ் மக்களிடம் இவ்வாறு பேசியவர்கள் வெளியில் என்ன சொல்லியிருப்பார்கள் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உப்படி எமக்கு எதிரான செய்திகளை இப்படி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பேசுவதை தணிக்கை செய்வதில் எமக்கு நாமே பட்டங்கள் கொடுத்துக் கொள்ளலாம். இதே விடயம் பல இடங்களில் இப்போதும் நடைபெறுகின்றது. தயவு செய்து இப்படியானவர்களையும் அடையாளம் காட்டுங்கள். ஏன் சொல்லுவதில்லை எண்டு கேட்ட உவையளையும் பகைச்சு என்னத்தைக் காணப்போகின்றோம். எனக்கு மேலே குறிப்பிட்ட இருவரையும் பற்றித் தெரிந்தபடியால் அவர்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன். ஆனால் இப்படியான மூடிமறைப்புக்களைச் செய்து என்ன்தைக் கண்டீர்கள் என இப்போது அனுபரீதியாகவும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

மேலதிகமாக

பலருக்கு நோர்வே பற்றி இன்னும் நல்ல ஒரு அபிப்பிராயம் இருக்கு. ஆனா உலகமெல்லாம் சமாதன முகமூடி போட்டுக் காட்டும் நோர்வேயின் மறுபக்கம் என்பது மிகப் பயங்கரமானது. யுத்தத்திற்கு எதிராகப் போராடுவது மாதிரி பாவனை செய்யும் இவர்கள் யுத்த, நாசகார ஆயுதங்களுக்கு தமது நாட்டின் எண்ணை வருமானத்தின் பெரும்பகுதியை முதலிட்டு பெரும் ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதும் நாசகார ஆயுத மற்றும் அதி நவீன ஆயுத ஆராச்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெறும் ஒரு விடயம். உலகப் பணக்காரர் வரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் நோர்வே மிகப் பெரும் பணத்தை தொழில்நுட்ப ஆராச்சிகளுக்குப் பயன்படுத்தியும் வருகின்றது. தொழில் நுட்ப ஆராச்சி எனும்போது அதில் நாசகார ஆயுதங்களும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"என்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது":

பிறகு எதற்கு இந்த உலகில்

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே கால் வைத்த இடங்களில் அமைதி தோன்றவில்லை. மாறாக விடுதலைப் போராட்டங்கள் காலநீட்சி என்னும் பொறியில் சிக்கவைக்கப்படு பலவீனமாக்கப்பட்டன.

1. பாலஸ்தீனம்

2. தமிழீழம்

அதுவும் அப்படியோ

தமிழ்ச்செல்வன் அண்ணா இறந்ததுக்கு முழுக்காரணமும் இவர்கள்தான்...

தமிழ்ச்செல்வன் அண்ணா இறந்ததுக்கு முழுக்காரணமும் இவர்கள்தான்...

வசி தெளிவாக சொல்லுங்கள்.

சமாதானம் சமாதானம் என்று சொல்லியே தமிழ்ச்செல்வன் அண்ணாவை கொன்றவர்கள் இவர்கள்தான். சமாதானப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு.. வன்னிக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள். இவர்களோடு உளவாளிகளும் சென்றனர். இவர்கள் இப்படி சென்று வந்ததன் பின்னர்தான் சிறீலங்காவுக்கு வன்னியின் ரகசிய இடங்கள் பற்றிய விபரங்களும், சகல வரைபடங்களும் கிடைத்தன.

Edited by வசி_சுதா

சமாதானம் சமாதானம் என்று சொல்லியே தமிழ்ச்செல்வன் அண்ணாவை கொன்றவர்கள் இவர்கள்தான். சமாதானப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு.. வன்னிக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள். இவர்களோடு உளவாளிகளும் சென்றனர். இவர்கள் இப்படி சென்று வந்ததன் பின்னர்தான் சிறீலங்காவுக்கு வன்னியின் ரகசிய இடங்கள் பற்றிய விபரங்களும், சகல வரைபடங்களும் கிடைத்தன.

கொம் ஒப் மான்...............

நாங்கள் மட்டும் என்ன? சமாதாணம் பேசி பேசி யே சில போராட்டா குழுக்கள் அழிந்தது என்று சொல்லி சொல்லியே நாங்களும் அழிந்து விட்டோம்.

2001 வந்த ஆபத்த 5 வருடம் சமாதாணம் பேசி பேசி கழித்தாலும் அந்த காலத்தில் உலகை படித்து இருகலாம் 2 அவது பழைக்கு பழி என்ற பரம்பரை நாங்கள் மட்டுமில்லை இந்தியனுக்கும் இருக்கு அதை எதிர்பார்த்து இருக்கலாம்.

3

****
  • கருத்துக்கள உறவுகள்

வசி தெளிவாக சொல்லுங்கள்.

தமிழ்ச்செல்வன் அண்ணா இறக்கும் இடத்தில் , அவர் 45 நிமிட நேரம் தொடர்ச்சியாக அந்த அலுவலகத்தில் இருந்து தொலைபேசி கதைத்ததாக இணையம் ஒன்றில் வாசித்த ஞாபகம் உள்ளது வடிவேல் .

அதுகும் வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பு என்று குறிபிட்டிருந்தார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.