Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரால் பெரும் துயரில் ஈழத் தமிழர்கள் - மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார்.

அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம்.

இலங்கை நிலவரம் மற்றும் அங்குள்ள அப்பாவி மக்களின் துயரம் குறித்து ஹில்லாரி கிளிண்டன் கேட்டறிந்தார். நம்மால் என்ன செய்ய முடியும் எனவும் கேட்டார். அதற்கு நான் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்றேன்.

தற்போது இந்தியாவின் சார்பில் அங்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். போர்க்களத்திலிருந்து தப்பி வரும் மக்களுக்குத் தேவையானதை செய்து வருகிறோம்.

அப்பகுதி மக்களுக்கு மறு வாழ்வுக்கான தேவைகளை செய்து வருகிறோம். இதன் மூலம் வடக்கு இலங்கையில் தமிழ் மக்கள் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் தமிழ் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அது அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது என்றார் மேனன்.

இன்று தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

இதற்கிடையே, மேனனை இன்று வி.எஸ்.சம்பந்தன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

ஏதோ எல்லாம் எழுத வேண்டும்போலுள்ளது. எழுதினால் நீக்கிவிடுவார்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பம்மாத்து பரதேசிகள் . தமிழன் காதில் பூச்சுத்தி சுத்தியே தங்கள் சாக்;கடை அரசியலை நடத்துகின்ற ஈனப்பிறவிகள்

யாழ் களத்தில் தூசனம், கேடு கெட்ட கேவலமான வார்த்தைப் பிரயோகம் என்பன தடை செய்யப் பட்டுள்ளமையால், இந்த ஈனப் பிறப்பின் கருத்துப் பற்றி எதனையும் எழுதாது மெளனமாகின்றேன்

கோமணத்தில சாணி அள்ளி அடிக்கவேணும் உவனுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எல்லாம் எழுத வேண்டும்போலுள்ளது. எழுதினால் நீக்கிவிடுவார்களே.

பம்மாத்து பரதேசிகள் . தமிழன் காதில் பூச்சுத்தி சுத்தியே தங்கள் சாக்;கடை அரசியலை நடத்துகின்ற ஈனப்பிறவிகள்

யாழ் களத்தில் தூசனம், கேடு கெட்ட கேவலமான வார்த்தைப் பிரயோகம் என்பன தடை செய்யப் பட்டுள்ளமையால், இந்த ஈனப் பிறப்பின் கருத்துப் பற்றி எதனையும் எழுதாது மெளனமாகின்றேன்

கோமணத்தில சாணி அள்ளி அடிக்கவேணும் உவனுக்கு....

தோல்வியின் வார்த்தைகள் இவை

உன்னால் முடியும்

உன்னால் முடியும்

தமிழா உன்னால் முடியுமடா..........

  • கருத்துக்கள உறவுகள்

மேனனு புல்லரிக்குதுங்க உங்க மாய்மாலத்தை கேட்க .

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு ஒ............................... :)

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக இவர்கள் சந்திக்கப்போனார்கள்?!......

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் வார்த்தைகள் இவை

உன்னால் முடியும்

உன்னால் முடியும்

தமிழா உன்னால் முடியுமடா..........

இன்னமும் சாதிக்க முடியும் என்பதை நம்புகிறோம் அதனால்தானே பேரணி போர்களை தொடர்கிறோம். ஆனால் விசுகண்ணா இந்த பொறுக்கிகளின் பேச்சுக்களை சகிக்க முடியது உள்ளதே அதுதான் வெறுப்பில் இருக்கிறோம்.

தமிழதங்கை அக்கா! அரசியலில் சில வழைவு நெளிவுகளை செய்துதான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் சாதிக்க முடியும் என்பதை நம்புகிறோம் அதனால்தானே பேரணி போர்களை தொடர்கிறோம். ஆனால் விசுகண்ணா இந்த பொறுக்கிகளின் பேச்சுக்களை சகிக்க முடியது உள்ளதே அதுதான் வெறுப்பில் இருக்கிறோம்.

தமிழதங்கை அக்கா! அரசியலில் சில வழைவு நெளிவுகளை செய்துதான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குருட்டு கபோதி இவ்வளவு நாளா கண்ண மூடிந்து இருந்தான் போல :):D

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதங்கம் அதுவல்ல.........

பிழை விட்டவர்கள் நாங்கள்...

அந்தப்பிழையை இன்னும் உணராதவர்கள் நாங்கள்

அதை திருத்தமுயலாதவர்கள் நாங்கள்

ஏன் இன்றும் ஒற்றுமைப்படாதவர்கள் நாங்கள்

இப்படி நாமே எல்லாவற்றையும் செய்துவிட்டு....

செய்து கொண்டு...

அவனை இவனை தூசித்து என்ன பலன்.............???

இதுவே என் கேள்வி?

இதைவிட

தளபதிகளின் இழப்புக்கு...

சிங்களவன் விழா எடுத்ததாகவோ......

களியாட்டம் நடத்தியதாகவோ...

இதுவரை நான் அறியவில்லை

ஆனால் எம்மவரில் சிலர் பரீசில் நடத்தியுள்ளனர்....

தெரியுமா? தங்களுக்கு............???

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட

தளபதிகளின் இழப்புக்கு...

சிங்களவன் விழா எடுத்ததாகவோ......

களியாட்டம் நடத்தியதாகவோ...

இதுவரை நான் அறியவில்லை

ஆனால் எம்மவரில் சிலர் பரீசில் நடத்தியுள்ளனர்....

தெரியுமா? தங்களுக்கு............???

இப்படியிருக்கும் போது என்னத்தை சொல்லுவது :):D

  • கருத்துக்கள உறவுகள்

வாயிலை நல்லா வருது.செந்தமிழில பாட விட மாட்டாங்கள் போல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
வாயிலை நல்லா வருது.செந்தமிழில பாட விட மாட்டாங்கள் போல இருக்குது.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசாத கூட்டமைப்பினர் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தமில்லை - அரசாங்கம் அறிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு சென்று அங்குள்ள தலைமைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவருகின்றது. ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒன்று வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அது குறித்து அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்திருந்தனர். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என்றே அரசாங்கம் கருதுகின்றது.

முதலில் ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்பின்னரே அவர்கள் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயவேண்டும். காரணம் பிரச்சினைகளுக்கான தீர்வை இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே காண முடியும்.

http://www.tamilwin.org/

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டோடும்.........

கவிதையோடும்........

வீரஆவேசபேச்சோடும்.........

எழுத்தோடும்..........நின்றுவிட்டோம் நண்பரே...

அதைத்தான் இன்று அறுவடை செய்கிறோம்

இனியாவது.................???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.