Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் அண்ணா,

உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஆகையால் உங்களின் உறுதிக்கு தலை வணங்குகிறேன்.

நன்மையே நடக்கும் என்று நம்பிக்கையுடன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன்

எடுத்த ஓர் கொள்கைக்காக மரணத்தையே வெல்லத் துணிந்தவன். மரணத்தின் வாசல் வரை சென்றதனால் இலங்கை அரசின் பொய் முகத்தை பிரித்தானியாவுக்கு புரிய வைத்தவன். நீ உண்ணாவிரதம் இருந்து அதன் வலியை எங்களுக்குத் தந்தவன் அத்துடன் மக்களின் சக்தியையும் அவர்களுக்கு எடுத்துக்கூறியவன், இங்கிலாந்து சட்டத்தில் உண்ணாவிரதமிருந்து மரணிக்க இடமுண்டாம் எனும் காரணத்துக்காகவே உன் உயிர் பிரிந்தாலும் கவனிக்க மாட்டார்கள் போலே இருக்கிறதே என்று எ ந் நாளும் எங்களை அழவைத்த ஓர் தியாகி. உன் உயிர் காப்பாற்றப்பட்டதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி நண்பனே..

இளங்கவி

24 நாட்கள் உண்ணாநோன்பிருந்து எமது பிரச்சினையை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றியும் , பாராட்டுக்களும் பரமேஸ்வரன் .

இது ஒரு மகத்தான சாதனையே! நான் ஒவ்வொரு நாளும் மனம் வருந்தினேன் இவர் இருக்கும் உண்ணாநோன்பிற்கு இன்னமும் அரசு செவிசாய்க்கவில்லை என்று.....

இந்நேரம் இவர் மரணித்திற்கு வாய்பளித்திருந்தால் ஒரு முத்துக்குமாரனுக்கும் முருகதாசுக்கும் வணக்கம் செலுத்தி (அடியோடில்லை)அவர்கள் தியாகத்தையும் வீரியத்தையும் மறந்ததைப் போல் மறந்திடுவோம்....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் தேசபற்றுக்க தலைவணங்குகின்றேன் அண்ணா!

பல நாள் பட்டினியால் பரமேஸ்வரனின் பல உள் அங்கங்கள் செயலிளந்த இருக்கலாம். அவருக்கு அப்படி ஒரு நிலை இருக்குமெனில் நாம் தான் அதற்கா போராட வேண்டியவர்கள். லண்டனில் உள்ள கள உறவுகள் இது பற்றி அறிவதில் ஆர்வம் செலுத்தி அறிய தந்தால் மிகுதி இங்குள்ளவர்கள் அவரது மருத்துவ செலவுகள் துரிதமாக நடக்க ஏதாவது உதவிகள் செய்யலாம். இந்த உறுதி உள்ள இளைஞர்களே நமக்கு தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கடவுளே பரமேசை காப்பாற்றியமைக்காக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்த்தமிழீழத்தின் மானம் உங்களைப்போன்ற உணர்வாளர்களால் தான் காப்பாற்றபப்ட்டுக்கொண்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மகத்தான சாதனையே! நான் ஒவ்வொரு நாளும் மனம் வருந்தினேன் இவர் இருக்கும் உண்ணாநோன்பிற்கு இன்னமும் அரசு செவிசாய்க்கவில்லை என்று.....

இந்நேரம் இவர் மரணித்திற்கு வாய்பளித்திருந்தால் ஒரு முத்துக்குமாரனுக்கும் முருகதாசுக்கும் வணக்கம் செலுத்தி (அடியோடில்லை)அவர்கள் தியாகத்தையும் வீரியத்தையும் மறந்ததைப் போல் மறந்திடுவோம்....

உண்மை ஸ்னைப்பர் ,

இதுவரை தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் முதல் இதுவரை பதின்நான்கு தமிழ் உயிர்கள் தீக்குளித்து இறந்த போதும் மத்திய , மாநில அரசுகள் கண்டு கொண்டதா .......

எல்லாம் அன்றாட செய்திகளுடன் போய்விட்டது .

அதுகும் காணாமல் , நாம் தான் ஆயுதமும் , போர்ப்பயிற்சியும் ஸ்ரீலங்காவிற்கு கொடுத்தோம் என்று இந்தியாவின் வெளிநாட்டமைச்சர் பகிரங்கமாக சொல்லும் போது ......

ஏற்கனவே திலீபன் முதல் அன்னை பூபதி வரை நடந்ததும் இது தான் .

பரமேஸ்வரன் 24 நாள் உண்ணாவிரதத்தின் மூலம் எமது அவலத்தை பிரித்தானியாவின் கவனத்தில் கொண்டுவந்துள்ளார் .

எல்லா தியாகங்களும் , வேண்டுதல்களும் ,கவனயீர்ப்பு போராட்டங்களும் நிச்சயம் பலனளிக்கும் .

Edited by தமிழ் சிறி

மரணத்தைத் தொட்டு வந்த பரமேஸ்வரன் நமக்குத் தேவையானவர். நாள்கள் கூடிக்கொண்டு செல்லும்போது நானும் தடுமாற்றமடைந்தேன். எவ்வளவோ அவலங்கள் தமிழருக்கு நேர்கின்றபோதும் கண்டுகொள்ளாதிருந்த மனிதாபிமானம் பேசும் இனம், பரமேஸ்வரனைக் கைவிட்டுவிடுமோ என்ற கலக்கம் இருந்தது.

போராளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஈழத்தமிழரின் இருப்பே அவர்கள்தான். எத்தனையோ தமிழரின் அவலங்களுக்காக அதை நீக்குவதற்கு முன்னிற்கும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்த ஒருவனின் பாடுகள் வெள்ளை இனத்தவராலும் புரிந்து கொள்ளப்படாமல் விடப்பட்டுவிடுமோ என்பதுதான் எனது ஆதங்கமாயிருந்தது.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் ஐ.நா மன்றத்தின் முன்னால் தீக்குளித்தும் விழிக்காதிருந்த உலகை விழிக்க வைத்தவன் நீ!திலீபன் களத்தில் தோற்றுவித்த மக்கள் எழுச்சியைப் புலத்தில் கொண்டு வந்தவன் நீ!அதுவும் இலன்டனில் வரலாறு காணாத மக்கள் எழுச்சியைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி விடுதலையைக் கொச்சைப் படுத்தி பேசியவர்கள் பலபேரை விடுதலைப் போராட்டத்தின் பால் திருப்பியிருப்பது நிதர்சனமான உண்மை!இந்த எழி;ச்சி தொடரும்.;. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனயீர்ப்பு நிகழும் இடத்திற்கு வரவேண்டியது நமது கடமை என சிலரையாவது தூண்டி விட்டது உனது போராட்டம். நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்!!!! வாழ்த்துக்கள் தம்பி!நீ உண்ணா விரதத்தை முடித்து வைத்ததை தொலைக்காட்சியில் பார்த்த சின்னப் பிள்ளைகள் கைகளைத் தட்டி மகிழ்ந்ததைப் பார்த்து மெய் சிலிர்த்தேன். உ னது போராட்டம் பலரை சென்றடைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை!!!!!

  • தொடங்கியவர்

உண்ணா விரதம் முடிந்த பின்னர் கொடுக்க பட்ட அறிக்கை தான் இன்னும் ஆச்சரியத்தை கொடுத்தது... இளையோர்கள் தெரிந்துதான் செய்தார்களோ நான் அறியேன்... அப்படி வேண்டும் எண்றே கொடுத்து இருந்தால் உண்மையில் பாராட்ட பட வேண்டும்...

நல்ல அரசியல் முதிர்ச்சி...

சிங்களவர் இதை கேள்வி பட்டால் தூக்கம் வராத நோயினால் இண்டைக்கு இன்னும் சில நாட்களும் அவதிபட போவது மட்டும் நிச்சயம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா ,

ஏனோ .... எப்படியோ ......

விரும்பியோ .... விரும்பாபலோ ......

இளையோரின் பணி மிக , மிக முக்கியமாக உள்ளது .

இதில் நாம் தவறு விட்டால் ........

தமிழரை வருங்கால சந்ததி மியூசியத்தில் பார்த்து பெருமைபட்டுக் கொள்ளட்டும் .

சகோதரர் பரமேஸ்வரன் அவர்கள் தமது சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை நிறைவுசெய்தது மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. உண்ணாவிரதம் காரணமான அவர் உடல்நிலையும், தாயகத்தில் அவர் குடும்பத்துக்கு நிகழ்ந்த தனிப்பட்ட துன்பியல் அனுபவங்களும் மிகுந்த வேதனையை தந்தது.

பலருடன் பரமேஸ்வரன் பற்றி கவலையுடன் கதைத்தபோது... அனைவரும் இந்த அராஜக உலகத்தில் அகிம்சை வழி பயன்தரப்போவது இல்லை. இவ்வளவு ஆற்றலும், மன உறுதியும் உடைய இளைஞன் தாயகத்திற்காக வேறு வழிகளில் நீண்டகால நோக்கில் போராடலாம் என்று கூறி இருந்தார்கள்.

அம்மா, தங்கச்சி என்று முழுக்குடும்பமுமே சிறீ லங்கா பயரங்கரவாத அரசினால் அழிக்கப்பட்டால் பரமேஸ்வரன் வெளிநாட்டில் இருந்து இதுதவிர வேறு எதைச் செய்யமுடியும் என்றும் பலர் ஆதங்கத்துடன் கேட்டார்கள்.

பரமேஸ்வரன்போல் அநாதைகளாக்கப்பட்ட உறவுகளுக்கு நாங்கள் - தமிழ்மக்கள் தான் ஆதரவு கொடுக்கவேண்டும்.

மிகவும் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரன் உடலும், உள்ளமும் விரைவில் சுகம்பெற, அவரது முயற்சிகள் வெற்றிபெற பிரார்த்தனைகள்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு தலை வணங்குகின்றேன்.

சகோதரன் பரமேஸ்வரனுக்கு பாரட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துக்களும் வந்து குவிந்துவிட்ன. அவர் செய்த தியாகம் அப்படிப்பட்து. இனி பிரித்தானியர்கள் பார்த்துக் கொள்வார்கள் நாம் எமது பாட்டைப் பார்ப்போம் என்றிராமல், அந்த சகோதரனின் உண்ணாநோன்பினால் ஏற்பட்ட மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி மேலும் செய்ய வேண்டியவைகளை முன்னெடுப்போம். அல்லாமல் நாமும் மறக்க அவர்களும தமது பாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

சகோதரனே பரமேஸ் எமக்காய் உன்னை ஆகுதியாக்க நினைத்தாய். உன் உணர்வுகளுக்கு என் நன்றிகள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தாலும் அதே இடத்தில் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.அதே இடத்தை தொடர்ந்து பாவிக்கலாம் என காவல் துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.

நேற்று நண்பகல் 1 மணியளவில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவர் திரும்பவும் 4 மணியளவில் திரும்பவும் அதே இடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று விட்டு பாராளுமன்றத்திற்கு மாணவர் அணியுடன் சென்றார் அதன் பின்னர் அவர் அங்கிருந்து நேரே வைத்தியசாலைக்கு திரும்பவும் எடுத்து செல்லப்பட்டார்.

திரும்பவும் அவர்கள் செவ்வாய்கிழமை அன்று மில்பாண்ட் அவர்களை சந்திக்க உள்ளதாகவும் அச் சந்திப்புக்கு சில முக்கிய தகவல்கள் தேவையாக உள்ளதாகவும் கூறினர்.அதன் பின் அங்கு இருக்கும் மாணவர்களால் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.பாராளுமன்றத்த

உன்னதமான உன்னுயிரை மெழுகுபோல் 24 நாட்கள் பகல், இரவாக உருக்கி உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து, பிரித்தானியாத் தமிழர்களின் நெஞ்சங்களில் தேசப்பற்று விழிப்புணர்ச்சியை பலப்படுத்திய உமக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 'தமிழ் மறவன்' பரமேஸ்வரா!

நீர் மாணவர் சமுதாயத்தையும், மக்களையும் உரிமையுடன் கேட்டுக் கொண்டதுபோல் ஒற்றுமையாக செயல்படுவோம். மிகவும் பாதிக்கப்பட்ட உமது உடல்நிலை விரைவில் நலம்பெற்று, உமது கடுமையான முயற்சியும் வெற்றி பெற்று எம்மக்களின் மனித அவலம் விரைவில் தீர்வுகாண வாழ்த்துகளும் பிராத்தனைகளும்.

பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வீதியில் நின்று எம்குரல்களை எழுப்பி, பிரித்தானியாப் பாராளமன்றத்தின் கதவுகளைத் திறந்து மாணவர்கள் உள்ளே சென்று எம்மக்களின் மனித அவலத்தை வெளிக்கொண்டுவரும் சந்தர்ப்பம் கைக்கூடி வந்துள்ள இந்த நேரத்தில், தொடர்ந்தும் நாம் இணைந்து எமது ஆதரவை பலப்படுத்த வேண்டும் மக்கேள சலித்து விடாதீர் திரண்டு வாரீர்!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் உதவமுடியும் எப்படியான தகவல் தேவை என்றால் பெற்றுக் கொள்ள முடியும் எப்படி என்னை தொடர்பு கொள்வீர்கள் மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொண்டு என்னுடைய இணைய முகவரியை பெற்று தொடர் கொள்ளுங்கள் இதில் என் இணைய முகவரியை தரமுடியாது என் பாதுகாப்பு கருதி.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வரிகள் பரமேஸ்வரனிடம் இருந்து.....

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடானு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் பரமேஸ்வரா

உன் பணியை வேறு வகையில் தொடர்க

இன்னுமொரு திலீபனை இழக்க தயாரில்லை

அதை தாங்கும் சக்தியும் எமக்கில்லை,அயர்லாந்து சிறைஉண்ணா நோன்பை நினைக்கையில் அடிக்கடி ஒரு பயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.