Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துச் செல்லும் பொதுமக்களின் மரணங்கள்": அமெரிக்கா கண்டனம்

Featured Replies

தொடரும் போர் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாதளக்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திரு்கும் அமெரிக்கா, பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

"நாம் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றோம். ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமக்களின் உயிரழப்புக்கள் அதிகரித்திருப்பதாக நாம் கருதுகின்றோம்" என இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கெலி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆயுதங்களைக் கீழே வைக்குமாறும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்டு வந்திருக்கின்றோம். அதேவேளையில், தமது தாக்குல் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகவும், பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் கவனர ஆயுதங்களை இனிமேல் பாவிக்கப்போவதில்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தலின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்

அறிக்கைகளால் பலனேற்படப் போவதில்லை. எந்தக் கண்டனமும் இவற்றைத் திருத்தப் போவதில்லை. மேற்கத்தைய நாடுகள் உள்நுழைய முடியாதபடி சிறிலங்கா சார்பு நாடுகள் அரண் அமைத்திருக்கின்றன. அதைத் தகர்த்து தலையீடு செய்தால் ஒழிய இதனை நிறுத்த முடியாது.

அல்லது இளந்திரையன் கூறியது போல், தலைமை வலிந்த தாக்குதல்களைச் செய்ய முனைய வேண்டும். எதற்காக இந்த மௌனம்?

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையுமில்லை – சிறிலங்கா அரசாங்கம்

பாதுகாப்பு வலய பகுதி மீது சிறி லங்காப் படையினர் தாக்குதல் நடத்தினால், கடும் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மைக் ஒவன்ஸ் விடுத்துள்ள அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மைக் ஒவன்ஸ் சிறிலங்காவின் பொதுமக்கள் பற்றி குறிப்பிடும் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் தாக்குதலில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அமெரிக்கா இந்த விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிக்கு சிறி லங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த உரிமையுமில்லை என அரசாங்கத்தின் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை, விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் அமெரிக்க தேர்தலின் எதிர்பார்ப்பு??????????????????

அடுத்து

இந்திய தேர்தலின் எதிர்பார்ப்பு??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சம் மக்கள் இறந்த பின்னும் அமெரிக்கா இதைத்தான் சொல்லும்..

"ஆயுதங்களைக் கீழே வைக்குமாறும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்டு வந்திருக்கின்றோம்."

இவர்கள் நினைத்தால் 24 மணிநேரத்துக்குள் யுத்தத்தை முடிக்கலாம். 2000ம் ஆண்டு புலிகள் யாழ் நகரைப் பிடிக்க நெருங்கிய போது B 52 யுத்த வானூர்த்தியை அனுப்பிக் கண்கானிச்சவையும் 40,000 சிங்களப் படைகளை பத்திரமாக மீட்க ஏற்பாடுகளை செய்தவையும் இன்று இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்ல அனுமதிச்சிட்டுத்தானே இருக்கினம்..! இதிலிருந்து என்ன தெரியுது.. மேற்படி சக்திகளின் திட்டமிடலின் கீழ் தான் இந்த யுத்தம் நடக்குது என்பது. பின் அவர்களிடத்திலேயே தீர்வைக் கொண்டு வா என்றால் எப்படி அவர்களால் முடியும்..??! :(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள் கு.சாமியார் , இப்படியே எதிர் பார்த்து எதிர்பார்த்து .........காலங்கள் போகிறது இனமும் அழிகிறது

......தேவை ஒரு அதிரடி ..........

நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் 2000இல் இருந்த அமெரிக்க அரசுக்கும், இப்போத் இருக்கும் அமெரிக்க அரசுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. அச்சந்தர்ப்பத்தில் கிளின்டன் ஜனாதிபதியாக இருதாலும் புஷ் நிர்வாகம் பொறுப்பெடுத்த காலம், அத்ன் பின்னர் புஷ் அடித்த் கூத்து எல்லோறுக்கும் தெரியுமே. புஷ் நிர்வாகம் வந்த்வுடன் அது இந்தியாவுடன் மென்மையான போக்கை கடைபிடித்த்து அதன் பின்ன்ர் 2004இல் வந்த காங்கிரசும் சேர்ந்த்வுடன் புலிகலை முடிக்க ஆரம்பித்தனர். ஆனால் தற்போதைய நிலவரப் படி மேற்கு நாடுகள் எம் பக்கமே ஆனால் இந்தியாவைப் பகைத்து எவரும் வரத் தயார் இல்லை. இப்போது இந்தியா,சீனா,ரஷியா ஆகிய சொறிலங்காவின் பக்கம் நிக்க க்கு எமத் போராட்டதிற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 4 மாத்ங்களுக்கு முன் வெறும் மொஉனம் சாதித்து வந்த வெளி நாடு அரசும் ஊடகங்கலும் இபோது நேரடியாகவே சொரிலங்காவைக் கண்டிக்கின்ரன, பின்னர் இது எமக்குச் சாதகமாக மாறும், நாம் எமது போராட்டங்கலை இடைவிடாது முன் எடுக்க வேண்டும் .

ஒன்றை அவதானிதீர்களா அமெரிக்காவில் குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்தால் இந்திய்யவின் தலையீடு அதிகமாக் இருக்கும்

1980- 1992 -ரீகன்,புஷ் (குடியரசுக் கட்சி) - இந்தியா அதிகம் தலையிட்ட காலம்

1992- 2000- கிலின்டன் (ஜனனாயக்க் கட்சி) இந்தியா பெரும் பாலும் ஒதுங்கி இருந்து

2000 - 2008- புஷ் (குடியர்சுக் கட்சி) மீண்டும் இந்தியா

2009 சில மாதங்களுக்கு முன் இருந்த அளவு ஈடுபாடுடன் இந்தியா இல்லை ஏன் என்றால் உலகின் கண்கள் எம் மீது படிய இந்தியா தான் அகப்படாமல் விலகப் பார்க்கிரது, இப்போது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான், சொறிலங்காவிற்கு

ஆனால் எமது இனத்தையே மண்ணோடு மண்ணாக புதைது விடுவார்கள் போல் இருக்கிறது

ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று எனத் தெரிந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே...???

வெறும் அறிக்கைகளை யார் எதிர்பார்க்கின்றார்கள்???

அத்தோடு, புலிகள் தமது ஆயுதங்களை கீழே போடவேண்டும் என அமெரிக்கா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்.

அதனை புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களின்போது இடித்துரைத்து... புரியவைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துச் செல்லும் பொதுமக்களின் மரணங்கள்": அமெரிக்கா கண்டனம்.

அப்போ ஏற்றுக்கொள்ள கூடிய அளவு ஒன்றும் உண்டு?

அல்கெய்தா அந்த அளவை வைத்துத்தான் 9-11-2001 தாக்குதலில் 3000 மக்களை மட்டுமே கொன்றார்களோ தெரியாது. அதை மட்டும் ஏன் அவர்கள் ஏற்று கொண்டு அல்கைத்தாவை பாராட்டவில்லை?

"ஊருக்குத்தானடி உபதேசம்" இந்த பணவெறி நாய்களால் அமெரிக்க மக்களே அவல நிலை வாழ்வைதான் வாழ்கிறார்கள் இதில் ஈழத்தில் எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.