Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது.

Featured Replies

எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது.

ஆனாலும், ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்?

நம்மை கட்டுப்படுத்தி... எது சரி, எது பிழை என வழிநடத்திய தலைவனே இல்லையென்று சிங்களம் அறிவித்தபோதும் நாம் அமைதியாகவே இருந்தோம்.... இருக்கின்றோம்.

இவையெல்லாம் எதற்காக???

தம் தலைவன் வருவான் என்ற நம்பிக்கைக்காக...

அவன் சுட்டும் விரல் அசைவிற்காக... காத்துக்கிடக்கிறது தமிழினம்.

நேர்மையோடும் நியாயத்தோடும் சுய உரிமைக்காக நடத்தப்பட்ட எமது போராட்டத்துக்கு கிடைத்த பரிசு பயங்கரவாத முத்திரையும் இழப்புக்களுந்தான். ஆனாலும் இப்பொழுது காலம் விட்ட வழியில் நமது போராட்டம் சர்வதேசத்தின் நீதிக்காக காத்திருக்கின்றது. இவ்விறுதி சந்தர்ப்பத்திலும், தமிழினத்துக்கு நியாயமான நீதியினைப் பெற்றுத்தர சர்வதேசம் தவறுமானால்,

அதன் பாரதூரமான விளைவுகளை சர்வதேசமும் அனுபவித்தே தீரும்.

சர்வதேசமே!

ஈழத்தமிழன் விடுதலைப் போராளியே தவிர,

தீவிரவாதியல்ல.

கூட்டுச் சேர்ந்து சதிசெய்து அவனை அடிமையாக்க நினைத்தால்,

தீவிரவாதிகளை உருவாக்கிய "பெருமை" உன்னையே சேரும்!

Edited by பருத்தியன்

நாம் அதை செய்திருக்க வேண்டும். செய்யாதது எம் தவறு. மக்களை கொன்று குவித்த அரசுக்கு ஆதரவாக பேசுகின்றார்கள். புலிகள் நேர்மையாக போரிட்டதுதான் தவறு போல இருக்கின்றது. இதுவும் புலிகள்விட்ட தவறில் ஒன்றுதான்

நன்றி பருத்தியன்!

தமிழீழ விடுதலைப் புலிகளை 'பயங்கரவாத அமைப்பு' என்று தடை செய்த சர்வதேச நாடுகள் பல இன்று ஸ்ரீலங்கா அரசு போரின் மூலம் மனித உரிமைகளை மீறியதற்கு எதிராக 'மனித உரிமை மீறல்கள்' ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கவனத்திற்கு எடுக்கப் படவேண்டும் என்று கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேசம் இன்று தமிழீழப் போராட்டம் நியாயமானது என்று புரிந்து கொள்ளத் தொடங்கயுள்ளது...

புலம்பெயர் மக்களால் முன்னேடுகப்டட அகிம்சைப் போராட்டமானது வலுப் பெற்றுத் தொடரவேண்டும், அப்படித் தொடருமேயானால் சர்வதேசம் தமிழினத்துக்கு ஓர் நியாயமான நீதியினைப் பெற்றுத்தர வாய்ப்புகள் வெகுதொலைவில் இல்லை.

இதுவரை காலமும் ஒருவன் அடிப்பதும் மற்றவன் தடவுவதுமாக தமிழனை சர்வதேசம் ஏமாற்றியவிதம் இன்னமும் புரியவில்லையா?

அறிக்கை விட்டே செத்த இனம் எண்டா அது நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை காலமும் ஒருவன் அடிப்பதும் மற்றவன் தடவுவதுமாக தமிழனை சர்வதேசம் ஏமாற்றியவிதம் இன்னமும் புரியவில்லையா?

பயங்கர வாதத்தின் மேல் தொடுக்க படும் போர் என்ற பொய் போர்வையின் கீழ் தான் இதுவரை இலங்கை விடுதலை புலிகளுடனான போரை உலகிற்கு நியாயப்படுத்தி கொண்டு இருந்தது....

புலிகள் தோற்கடிக்க படவில்லை, பின் வாங்கி இருக்கிறார்கள்...

இலங்கையை பொறுத்த வரை, சர்வதேசத்தை பொறுத்த வரை, துரோகிகளை பொறுத்த வரை புலிகள் "இராணுவ ரீதியாக" தோற்கடிக்க பட்டதாகவே இருக்கட்டும்....

ஆனால் புலிகள் தோற்கடிக்க பட்டதாக நம்பி அவர்கள் இளைப்பாற முன்னமே - நாமே புலிகள் தோற்றதான அலை வரிசையில் சிந்தித்துக் கொண்டு இருப்போமானால் நாம் தான் கடைந்தெடுத்த முட்டாள்கள்!

உண்மையில் புலிகளுடன் போராடி கொண்டு இருந்த இலங்கை இராணுவமே இன்னும் ஒரு லட்சம் இராணுவம் தேவை என்று அதற்குள் ஆள் சேர்த்து கொண்டு இருக்கேக்க - நாம் இங்கே துவண்டு போய் இருப்பது எவ்வளவு அறிவு கெட்ட வேலை?! சிங்களமே நம்பவில்லை புலி ஓய்ந்து போயிட்டு என்று!!!

இனியும் நாம் - தமிழீழ மக்கள் - பஞ்சி, அலுப்பு, நம்பிக்கையின்மை, தளர்வு, சோர்வு, என்று "தமிழீழ விடுதலை" போராட்டத்தை விட்டு கொடுப்போமாக இருந்தால்.....அது உலகமே எதிர் பார்த்தது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சிங்களம் வென்று ஈழம் தோத்தது என்றே ஆகும்.... அதற்கு அர்த்தம் எம்மை நாமே பயங்கரவாதிகள் என்று மட்டும் ஏற்று கொள்வதாகும்.

இன்றைய நிலைமையில் சிங்களம் தான் பயங்கரவாதிகள் என்று இதனை காரணிகள் இருந்தும், நாம் அதை உலகிற்கு உணர்த்த இயலாமல் போனால் - அது எம் தவறு....

உணர்த்தியும், அவர்கள் ஒன்றும் செய்யாது இருந்தால் - அது அவர்கள் தவறு....அதன் பிரதி பலன்களை அவர்கள் உணர்வார்கள்......இதற்கு இன்னும் சிறிது அவகாசம் இருக்கு.... இப்போதைக்கு உணர்த்தும் வேலையை மட்டும் பாப்போம்....

சர்வதேச மட்டத்தில் நடக்கும், நடத்த படும் எல்லாம், ஒரு நோக்கம், நிகழ்ச்சி நிரல் உடன் தான் நடக்கிறது என்பதை விளங்கி, எமக்கு உள்ள மக்கள் புரட்சி கடமையை மட்டும் சீராய் செய்வதில் முனைவோம். அதற்கான காலம் தான் இது, சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம்...

----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -------

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் உயிர்கள் மிஞ்சியிருக்குது.

இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள்.

எல்லாமே சரியாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியன் உங்கள் நம்பிக்கை எல்லாருக்கும் இன்று தேவையானதுதான். ஆனால், அதுவே மூட நம்பிக்கையாகைப் போகாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும். ஆளாளுக்குத் தலைவர் இறந்துவிட்டார் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள

ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

அதாவாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களில் கணணியில் அறிவுள்ளவர்களின் வீதம் குறைவாகவே உள்ளது. அதிலும் கணணியினூடாக எமது கவனயீர்ப்பை செய்யும் எங்களைப் போன்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. கனடாவில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த பலருடன் உரையாடும் போது மிக உணர்ச்சிவசமாக தங்கள் கருத்துக்களை கூறிய அதே வேளை பலர் எங்களைப் போன்ற கணணி தெரிந்தவர்கள் தான் அதிகமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுடன் அவர்கள் என்னை ஊக்குவித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அவர்களின் பாணியிலேயே "தம்பி நாங்கள் கத்திக் கத்திக் களைச்சுப் போனம் உலகத்தின் மனச்சாட்சி சரியான சிலோவாத் தான் இருக்கு. ஆனால் கொம்பியூற்றர் தெரிஞ்ச உங்களைப் போன்றவை தான் ஏதேனும் செய்யவேண்டும். எங்களுக்கு கொம்பியூற்றர் தெரியாது. எங்களாலா ஆர்ப்பாட்டம் மட்டும் தான் நடத்த ஏலும். நீங்கள் தான் என்னண்டாலும் செய்து இந்த உலகத்தின் மனச்சாட்சியை உலுப்ப வேண்டும்"- இது அவர்கள் சொன்து. நான் அவர்களிற்கு கூறினேன் அப்படி இல்லை பெரியவர்களே உங்களைப் போன்றவர்களது இந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் என் போன்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவதை குறைத்து கணணியை உபயோகிக்கின்றோம் எங்களது பங்கிற்கு. நீங்கள் எல்லோரும் ஆர்ப்பாட்டத்தில் இருப்பதனால்தான் நாங்கள் கணணியினூடாக கவனயீர்ப்புகளில் ஈடுபடுகின்றோம். நீங்கள் அந்க தெருவழி கவனயீர்ப்பில் இல்லாவிட்டால் நாங்கள் தான் நிற்கவேண்டும். அப்படி நின்றால் எங்களிற்கு நேரம் கிடைக்காமல் விட்டுவிடும். ஆகவே தெருவழி போராட்டங்களும் முக்கியமானது. ஆகவே நீங்கள் தொடர்ந்து அதனை செய்து கொண்டு இருங்கள் என்று கூறினேன். அதற்கு பலர் கூறினார்கள் நிச்சயமாக நாங்கள் தொடர்வோம். ஆனால் தெருவழிப் போராட்டங்கள் மட்டும் பெரியளவில் முழு மாற்றத்தையும் பெற்றுத் தரப்போவதில்லை என்றார்கள்.

அதன் பின்னர் தான் நான் ஏதோ கணணியில் நிறையவே செய்வதாக நினைத்து விட்டு எண்ணிப் பார்த்தேன். அதிக நேரம் யாழ் களத்தில் எழுதுவது. ஒரு கி;ட்டத்தட்ட 500 தமிழரல்லாத வேற்றினத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்புவது. ஒரு சில ஆங்கில ஊடகங்களிற்கு ஒரு சில இணைப்பை அனுப்பி வைப்பது.? எனக்கு இப்பொழுது ஒரு கேள்வி எத்தனை மில்லியன் தமிழரல்லாத இனங்கள் இருக்கும் போது ஆக 500 பேருக்கு அதுகும் கனேடியர்களிற்கு மட்டும் அனுப்பினால் போதுமா? அதுவும் ரொரன்ரோனியனிற்கு மட்டும் தான். கனடாவில் எத்தனை மாகனங்கள் இருக்கும் போது ரொரன்ரோனியருக்கும் மட்டும் நான் மின்னஞ்சல் அனுப்பினால் போதுமா? நான் சார்ணியா என்ற நகரத்திற்கு நேற்று சென்றிருந்தேன். மிகவும் பெருமையாக நினைத்தேன் என்னுடன் கதைத்த தமிழர் என்றவுடன் வெள்ளையர்கள் எமது பிரச்சினையைப் பற்றித்தான் கதைப்பார்கள் என்று.(ரொரன்ரோவில் அப்படித்தான் இப்போது நிலமை. எல்லா வெள்ளையர்களும் முதலில் எங்கள் நாட்டு நிலையைத் தான் கேட்பார்கள்) ஆனால் அங்கே உள்ள வேறு இனத்தவர்கள் என்னுடன் எல்லாம் கதைத்த பின்னர் இறுதியாக காத்திருந்தேன் ஏதேனும் ஒரு சொல்லாவது கேட்பார்களா என்று. எதுவும் கேட்கவில்லை. என்னை மதிய உணவிற்கு வரும்படி கேட்டிருந்தார்கள். இறுதியில் நான் தான் கூறினேன் இல்லை எங்கள் மக்கள் இறந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் என்னால் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று. அப்போது அவர்கள் கேட்டார்கள் ஏன் மக்கள் சாகின்றார்கள் என்று? தாங்கள் அப்படி எதுவுமே கேள்விப்படவில்லை என்பதுடன் தாங்கள் இலங்கை என்பது மிகவும் ஒரு அழகான சுற்றுலா இடம் என்றும் அதைப்பற்றி தான் கேட்டிருந்ததுடன் தாங்கள் அங்கு சுற்றுலாவிற்கு செல்ல காத்திருப்பதாகவும் சொன்னார்கள். அதன்பின்னர் நான் நடந்தவைகளை கூறியபின்னர் அதிர்ந்து போனார்கள். அவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை தந்து தங்களிற்கு எல்லாவற்றையும் அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார்கள். என்ன கூற வருகின்றேன் என்றால் ஒரு நாட்டில் வௌ;வேறு நகரங்கள் மாகணங்களிற்கு கூட எங்களது கவனயீர்ப்பு சென்று சேரவில்லை. அதற்காகவெல்லாம் எல்லா தமிழரும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. ஒரே வழி இணையங்கள் மின்னஞ்சல்கள் மூலம் கவனயீர்ப்பை விரிவு படு;த்துவது.

2) அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் மைக் என்பவரை அந்த நகரத்திலே சந்தித்திருந்தேன். அப்போது எங்கள் நாட்டுபிரச்சிணை பற்றி கதைக்கும் போது அவர் கூறிய கருத்துக்கள் சிங்களவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் மைக் என்பவர் மிக நல்லவராக காணப்பட்டார். நான் கேட்டேன் எங்கிருந்து இந்த செய்திகள் கிடைக்கின்றன என்று. அதற்கு அவர் கூறியிருந்தார் உங்கள் நாட்டவர்கள் தான் எனக்கு மின்னஞ்சல்களிற்கூடாக செய்திகளையும் இணையத்தளங்களின் முகவரிகளையும் அத்துடன் வீடியோ இணைப்புகளையும் அனுப்பி வைக்கின்றார்கள் என்பதுடன் சிலரது பெயர்களையும் கூறிஇருந்தார் தனக்கு நீண்டகாலமாக மின்னஞ்சல் அனுப்புபவர்களாக மென்டிஸ் பந்துல, சுரங்க பண்டா, சாமினி குலதுங்க....... (அப்போ நீங்கள் என்ன நிiகை;கின்றீர்கள் எம் உறவுகளே?)

ஆகவே கனடாவில் அடுத்த மாகனத்திற்கே எம் தமிழரின் நிலை தெரியவில்லை(சிங்களவர்களது தொடர்பாடல் எங்கும் பரந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது). அப்படி எனி;ன் உலகில் உள்ள எத்தனை நாடுகள் அத்தைனை நாடுகளில் உள்ள அத்தனை மாகாணங்களிலும் இதனை நாம் கொண்டு செல்ல வேண்டும். நாம் கொண்டு சென்றது உலகில் ஓரளவு தான். உலகில் எத்தனை மில்லியன் ஊடகங்கள் இருக்கின்றன. அதில் ஏதோ நூறோ ஆயிரமோ ஊடகங்கள் இதனை எழுதலாம். அதுகும் சிங்களவர்களின் கருத்துகளும் அதிகமாக முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே நாம் உலகில் உள்ள அனைத்து ஊடகங்களிற்கும் எங்கள் அவலங்கள் பற்றிய இணைப்புகளை அனுப்ப வேண்டும். தனிய ரொரன்ரோவோ அல்லது மொன்றியல் ஊடகங்களிற்கு மட்டும் அனுப்பினால் போதாது. கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள சகல ஊடகங்களிற்கும் தொடர்ந்து மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டும்.

அது மட்டுமல்லாது உதாரணத்திற்கு கியூபா நாட்டு மக்களிற்கோ அல்லது அந்த நாட்டு ஊடகங்களிற்கோ எமது பிரச்சினைகள் தெளிவாக புரிந்திருக்கவில்லை. (சிங்களவர்கள் அங்குள்ள ஊடகங்களிற்கும் மின்னஞ்சல் அனுப்புகின்றார்கள்) எங்களது நிலையை நாம் யாழில் எழுதுவதுடன் நின்றுவிடாமல் சகல நாட்டு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இதனை அனுப்பி வைக்க வேண்டும். இதை நாம் ஏற்கனவே செய்திருந்தால் கீயூபா ஒருவேளை எமக்கு ஆதரவாக கதைத்திருக்கலாம். இதை தான் எமது ஆர்ப்பாட்டங்களிலே கலந்து கொள்ளும் பெரியவர்கள் கணணி தெரிந்த எங்களைப் போன்றவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள்.ஆகவே நாம் எமது கவனயீர்ப்பை நாம் விரிவு படுத்த வேண்டும். அதற்கு இணையங்களையும் மின்னஞ்சல்களையும் பயன்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இப்படி நம்மை நாமே ஏமாற்றி கொள்ளப்போகிறோம் பருத்தியன்? எமது வலியினையும் வேதனையினையும் சிங்களவன் புர்ரிந்து கொள்ள மறுக்கிறான். உலகம் இப்போதுதான் மிகவும் மெதுவாக அறிதுயில் கலைந்து எழுந்துகொண்டிருக்கிறது. அது முழுமையாக விழிப்பினை பெறும்போது, தமிழர் பகுதிகள் முழுமையும் சிங்களர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே தமிழன் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டிருப்பான்.

இனவாத சிங்கள அரசுக்கு போட்டியாக ஒரு முழுமையான தமிழர் அரசாங்கம் நடந்தபோது சர்வதேசம் அதை அங்கீகரிக்க மறுத்தது. போராளிகள் பயங்கரவாதிகள் என்ற நிலையில் இருந்து இறங்கி வர மறுத்தது.

இன்று பேரினவாத அரசு, தமிழனை ஆடு மாடுகளை போல் முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் நிலையிலும், அவர்களுக்கு அடிப்படையான உதவிகள் சென்று சேர்வதற்கும் அவர்களை கெஞ்சி கொண்டிருக்கிறது. இதுதான் சர்வதேச சமூகத்தின் உண்மையான முகம். வலுத்தவர்களை தான் அவர்கள் ஆதரிப்பார்கள். சிங்களவன் பாணியிலேயே, போராளிகள் ஆயிரகணக்கில் சிங்களர்களை கொன்று குவித்திருந்தால், இதே சர்வதேச சமூகத்திடம் நாம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியது போன்று, அவர்கள் நம்மிடம் மன்றாடி இருப்பார்கள். அனால் சிங்களனுக்கு ஒன்று சர்வ நிச்சயமாக தெரியும்.

"தமிழன் புற நானூறு கால மன நிலையிலேயே இருக்கிறான். நாம் நூறு அப்பாவி தமிழர்களை கொன்றாலும் பதிலுக்கு அவன் ராணுவத்தை மட்டும்தான் தாக்குவான். அவன் தாக்கும்போது பின்வாங்கி ஓடி வந்துவிடுவோம். இவ்வாறே சிறுக சிறுக அவன் இனம் முழுமையும் அழித்து விடுவோம்" என்பதுதான் அது. அவனது நோக்கத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளான்.

நாம் இப்போதும், "நான் நினைச்சேன்னா..." என்று வீர வசனம் பேசிகொண்டிருக்கிறோம். அடிபட்டவனுக்குதான் வலி தெரியும். சிங்களனுக்கு வலி தெரிய வேண்டுமானால், அவன் அடிபட வேண்டும்.

எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது

இன்னும் நாங்கள் கனவுலகிலும்,கற்பனைவுலகிலும் தான் இருக்கிறோம்.

உள்வாங்கி அடிப்பார்கள் என்று கட்டுரை எழுதினோம் ஆனால் உள் வந்து சிங்களவன் அடிப்பான் என்று ஒருத்தரும் எழுதவில்லை.முள்ளிவாய்கால் சிங்களவனுக்கு மரணபொறி என்றோம் ஆனால் அது எமக்கான மரணபொறி என்பதை இன்னும் நாங்கள் உணராமல் இருப்பது கவலைக்குறியது.

  • தொடங்கியவர்

எம் இழப்புக்களின் வலிகளை சிங்களத்துக்கும் உணர்த்த ரொம்ப நேரம் ஆகாது.

ஆனாலும், ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்?

நம்மை கட்டுப்படுத்தி... எது சரி, எது பிழை என வழிநடத்திய தலைவனே இல்லையென்று சிங்களம் அறிவித்தபோதும் நாம் அமைதியாகவே இருந்தோம்.... இருக்கின்றோம்.

இவையெல்லாம் எதற்காக???

தம் தலைவன் வருவான் என்ற நம்பிக்கைக்காக...

அவன் சுட்டும் விரல் அசைவிற்காக... காத்துக்கிடக்கிறது தமிழினம்.

நேர்மையோடும் நியாயத்தோடும் சுய உரிமைக்காக நடத்தப்பட்ட எமது போராட்டத்துக்கு கிடைத்த பரிசு பயங்கரவாத முத்திரையும் இழப்புக்களுந்தான். ஆனாலும் இப்பொழுது காலம் விட்ட வழியில் நமது போராட்டம் சர்வதேசத்தின் நீதிக்காக காத்திருக்கின்றது. இவ்விறுதி சந்தர்ப்பத்திலும், தமிழினத்துக்கு நியாயமான நீதியினைப் பெற்றுத்தர சர்வதேசம் தவறுமானால்,

அதன் பாரதூரமான விளைவுகளை சர்வதேசமும் அனுபவித்தே தீரும்.

சர்வதேசமே!

ஈழத்தமிழன் விடுதலைப் போராளியே தவிர,

தீவிரவாதியல்ல.

கூட்டுச் சேர்ந்து சதிசெய்து அவனை அடிமையாக்க நினைத்தால்,

தீவிரவாதிகளை உருவாக்கிய "பெருமை" உன்னையே சேரும்!

இக்கருத்து என் மன ஆதங்கங்களின் வெளிப்பாடு. எனது தனிப்பட்ட கருத்து.

தோற்றுப்போய்விட்டோம் என்று கவலைப்படவில்லை. ஏனென்றால் மன உறுதிதான் தமிழன் தூக்கிய முதல் ஆயுதம். அதை இன்னும் இழக்கவில்லை.

இழப்புக்களைக் கண்டு துவண்டு போவது என்பது சுதந்திரத்துக்காகப் போராடும் ஒரு இனத்துக்கு உரிய அடையாளமில்லை.

ஆனால், எமது போராட்டத்தினை வஞ்சகமாக அழிக்க நினைக்கும் சர்வதேசத்தினை நினைக்கும்போது கோபம்தான் வருகின்றது.

நம்பவைத்து நம்பவைத்து கழுத்தறுக்கின்றார்கள்.

நமது வலிகளை அவர்களும் உணரும்வரை நமது நியாயப்பாட்டினை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

நாம் அனுபவித்த அதே வலிகளை இனவெறிபிடித்த சிங்களத்துக்கு அப்படியே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று துடிக்கும் அளவுக்கு பெரும்பாலானோர் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருப்பதை உணர முடிகின்றது.அதில் நானும் ஒருவன்.

இவையெல்லாம் எனது தனிப்பட்ட கருத்துக்கள்.

இழப்புக்களின் வலிகளினால் மிகவும் நொந்து போயிருக்கும் என் மனதிலிருந்து தோன்றியவை.

உறவுகளே!

சர்வதேசமும் எம்மைக் கைவிட்டால்,அதன் பின்பு எமது போராட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற உங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே!

சர்வதேசமும் எம்மைக் கைவிட்டால்,அதன் பின்பு எமது போராட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற உங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.

நியாயமான விடுதலை கோரிக்கைகள் நிராகரிக்க பட்டால்...

கேளாமலேயே பலர் எம்மை அவர்களுக்கு கடமை படுத்தி உள்ளார்கள்... இந்த போரில் அனைவருக்கும் அது தெட்ட தெளிவு. எனவே காலம் தாழ்த்தி கைம்மாறு செய்து வட்டியையும் கூட்டாமல், வேளைக்கே அந்த கடமைகளை முடிக்கலாம்!

----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -------

இளயதம்பி

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? யார் கடமைப்பட்டார்? எந்தத்தேசமும் எங்களுக்கு கடமை செய்யவேண்டும் நீதி செய்யவேண்டும் என்று இன்னும் நம்புகிறீகளா?

எங்களின் தொப்பிழ்க்கொடி உறவுகளாலேயே எங்களை காப்பாற்ற முடியவில்லை. அவ்வாறு சற்று குரலை உயர்த்தி பேசியவர்கள் எல்லாருக்கும் நடந்தது தெரியும்தானே?

தனி ஈழம் எண்டு முழக்கமெல்லாம் தூவானமாப்போச்சு.

எங்களுக்கு ஏதாவது நடக்குமெண்டா இனியும் ஆரையும் நம்பி நாறுறதை விடவேண்டும்.

அப்பத்தான் சுயமாக முயற்சிக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கடமை பட்டு உள்ளோம்..- எமக்கு அநீதி இழைத்த நாடுகளுக்கு.. "கடமை" என்ன மாதிரியானது என்று நீங்களே விளங்கி கொள்ளுங்கள்... அப்பாவித்தனமாய் நான் அதை எழுதவில்லை அண்ணா!! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே!

சர்வதேசமும் எம்மைக் கைவிட்டால்,அதன் பின்பு எமது போராட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற உங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.

சர்வதேசம் எமக்கு எதுவும் செய்யாது நிச்சயமாக எம்மை கைவிடும் என்று நம்புகிறேன்,அப்படி நடந்ததன் பின்பு நாம் தீவிரவாதியாக(அவர்களது பாசையில் ) மாறவேண்டும்,மனிதாபிமானத்தை தூக்கி இந்தியாப்பக்கம் எறிந்துவிட்டு ஆயுதம் ஏந்தி போராடவேண்டும்,போராட்டவழிமுற

  • கருத்துக்கள உறவுகள்

போர் இன்னும் ஓயவில்லை

உணர்ச்சிக் கட்டத்தில் இருப்பதால் இங்கு நாம் கருத்துக்களை முன்வைக்கின்றோம் .......நானும் சில கருத்துக்களை பகிர விரும்புகின்றேன் ...அதற்கு முன் ...

இன்கே எவர் எதை சொன்னாலும் ...தாறு மாறாக பதில் கருதத்தை எளுதுவதை பார்த்து நான் மெதுவாக ஒதுங்கி கொன்டேன் ..பத்தி எழுதிய பலர் தங்களுக்கு கிடைத்த தகவல்கழையும் ஊகத்தையும் வைத்து தான் எழுதினார்கள்....முதலில் அவர்களை கண்ட பாட்டுக்கு விமர்சிக்காமல் கருத்துக்களை எடுத்துக் கொள்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்....விடயத்துக்கு வருகின்ரேன்

அண்மையில் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் விடுதலைப்புலிகலின் தலமைத்துவம் பாதுகாப்பாக இருகின்ரது என்ர்ற் முத்த்லில் அறிக்கை விடுத்தார் பின்னர் அவரே பிரபாகரன் இற்ந்து விட்டார் என்று அறிக்கை விட்டார் அதை எல்லோரும் இன்று எவ்வாறு பார்க்கின்ரார்கள் எப்படி கதி கலங்கிப் போய் இருக்கின்ர்ரார்கள் என்பதும் உண்மை

எனது அபிப்பிராயப்படி அந்த அறிக்கை காரணம் கருதி வெளியிடப்படதாகவே தெரிகிறது இன்று நாம் எல்லோரும் சர்வதேச சமுகம் எமது பிரச்சனையில் என்ன முடிவு எடுக்கப்போகின்ரட்றது என்று எதிர்பார்த்திருக்கின்றோம் என்பது மட்டும் உண்மை

இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்திருக்கிரார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலயில் போர்க் குற்றம் சுமத்தி விசாரணை செய்ய வேண்டும் என்று கோரும் நிலையில் ...அரசாஙகம் ஏற்கனவே புலிகள் முற்றக அழிக்கப்பட்டு விட்டர்கள் என்றும் ...பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றும் கூறியுள்ள நிலையில் ..அத்துடன் புலிகளின் அரசியல் பங்களிப்பையும் ஏற்க அரசு மறுத்துள்ள நிலையில் அவர்கள் மீதான விசாரணை செய்வதற்கு ...புலிகளின் தலைமையோ அல்லது அந்த அமைப்போ உத்தியோக பூர்வமாக இல்லத நிலயில் யார் மீது குற்றம் சுமத்த முடியும்.......கொலை வழக்கு ஒன்றில் எதிரி இறந்து விட்டார் என்ற ஆதாரம் நீதிமன்றுக்கு கிடத்தால் அந்த வழக்கு எவ்வாறு தள்ளுபடி செய்யப்ப்டுமோ அதே போல்.....புலிகள் மீதான விசாரணை என்பதும் செல்லாத ஒன்றாக ஆகிவிடும் ...எனவே தலைமை இப்போதைக்கு இல்லை என்று இருப்பதே நல்லது....இதற்காக இதை கூறியவர் மீது பழி சுமத்துவதோ அல்லது துரோகி என்று சொல்வதோ சரியானதென்று படவில்லை...பொறுத்திருந்து பார்ப்பதே இப்போதைக்கு நல்லது...

அது மட்டுமல்ல இனிமேல் நடக்கப்போகும் எதற்கும் அவர்கள் பொறுப்பல்ல...இனி சில வேளைகளில் பழிகுப்பழி வாங்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்....அப்போது சிங்கள அரசினால் யார் மீது குற்றம் சொல்ல முடியும்...அவர்களே கூறி விட்டர்கள் முற்றாக அழித்து விட்டோம் என்று....

ஆக மொத்தத்தில் தமிழரின் தலைமை இன்னும் பாதுகாப்பாவகே உள்ளது ...அது நிழலாக உள்ளது என்று தான் தோன்றுகிறது ...சரியான நேரத்தில் தலைமை வெளியே தோன்றும் அதுவரை வீண் கலக்கங்களை ,சந்தேகங்களை விடுத்து நாம் செய்ய வேண்டிய கடமைகளை மும்முரப்படுத்த வேண்டும் ...இததனை அழிவுகளைத் தந்தவருக்கான பதிலடி கிடைக்கும் என்பது மட்டும் உண்மை....( எந்த வடிவத்தில் என்பதை விட்டு விடுவோம் ) அப்போது எதிரி உணர்வான் நாம் பட்ட வலி என்னவென்று...போர் இன்னும் ஓயவில்லை...

இது எனது கருத்து

  • தொடங்கியவர்

ஈழவிடுதலைக்கான பெருங்கடமை புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தருணத்தில்,

தமிழர் தரப்பு பெரும் இழப்புக்களை சந்தித்து திக்கித்து நிற்கும் சமயத்தில்,

ஐ.நா சபையிலும் அநியாயம் அரங்கேறி நிற்கும் நிலைமையில்,

நம்மை நாமே நிலைநிறுத்துவோம்!

உறவுகளே!

சர்வதேசமும் எம்மைக் கைவிட்டால்,அதன் பின்பு எமது போராட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற உங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நாங்கள் கனவுலகிலும்,கற்பனைவுலகிலும் தான் இருக்கிறோம்.

உள்வாங்கி அடிப்பார்கள் என்று கட்டுரை எழுதினோம் ஆனால் உள் வந்து சிங்களவன் அடிப்பான் என்று ஒருத்தரும் எழுதவில்லை.முள்ளிவாய்கால் சிங்களவனுக்கு மரணபொறி என்றோம் ஆனால் அது எமக்கான மரணபொறி என்பதை இன்னும் நாங்கள் உணராமல் இருப்பது கவலைக்குறியது.

ரகசியங்களை காப்பதில்தான் ஒரு போரின் வெற்றி தங்கியிருக்கும்போது. வெளிப்படையாக எதையும் கூறமுடியாது. 30 வருட காலமாக எங்களது நாட்டில் சண்டை நடைபெறுகின்றபோது. எனக்கென்ன என நான் இருந்தால் அதற்கு புலிகள் பொறுப்பாளிகள் அல்ல. எனது அழிவுக்கு நானே காரணம். சர்வதேசத்தின் சதிவலையை எவ்வாறு முறியடிக்கலாமோ.......? அவ்வாறு முறியடிக்க பட்டிருக்கின்றதை இன்று சர்வதேசம் உணர்ந்துள்ளது. இலங்கையின் எதிர்கால வாழ்வு முதலாளிகளின் கையில் இருக்கின்றது (அதாவது வெளிநாட்டு முதலாளிகளின் கையில்) எனது மனைவியை மாற்றானிடத்தில் விட்டு அலங்கரித்து நன்றாக இருக்கிறாள் என்று நானே பாராட்டுவது போன்றது அது. இனி தொடர போவது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது யார்? இந்த போட்டியில் இந்தியா வெல்லும்... வெல்லுவதே எதிர்பார்க்க பட்டது....... இனி பொருளாதார வளர்ச்சி இது சாத்தியமா என்பதுதில்தான் போரின் வெற்றி தங்கியிருக்கின்றது. இராணுவமுகாம்களுக்குள் நகரங்கள் அமைத்து அதற்குள் தொழில்சாலைகள் அமைத்து அங்கிருந்து வாழ்கை நடத்த நாட்டு மக்கள் பணிக்க பட்டால்தான் சாத்தியம். இல்லாத பயங்கரவாத்தை முன்னின்று உலகிற்கு அறிமுகபடுத்தியது அமெரிக்காவும் பிரிட்னும். ஆனால் பயங்கரவாத குட்டையில் சீனா மீன்டிபித்தது என்பது தற்போதைய உலக பொருளாதார நிலை அந்நிலையை முறியடிக்க சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முண்டுகொடுத்தது அது எந்த இந்தியா அணுவை வைத்திருக்கவே கூடாது என்று அமெரிக்கா கூறியதோ அதே இந்தியாவிற்கு அணுவை ஏற்றுமதி செய்யுமளவுக்கு கொண்டுசென்றது. எதை செய்தாலும் ஒரு வெள்ளைஇனத்தவனே எல்'லாவற்றையும் செய்தான் என்பதில் தம்பட்டமடித்த பிரிட்டனும் அமெரிக்காவும் இன்று அமெரிக்கா நாட்டிற்கே ஒரு கறுப்பினத்தவரை ஜனதிபதியாக்கி பயங்கரவாத பரபரப்பில் ஆழ்ந்த உலகை கொஞ்கம் ஆற்ற நினை;கின்றார்கள். தலிபான்களை பின்தள்ளும் போரில் பாகிஸ்தான் படைகளாலேயே பாகிஸ்தான் மக்கள் கொல்லபடுகின்றார்கள். சின்ன் உலகத்திற்கு செய்தி சொல்லலாம்..... போரில் அழிந்து கொண்டிருப்பவர்களுக்கு செய்திசொல்லலாமா? உலகம் பல மாற்றங்களுக்காக காத்திருக்கின்றது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இதுதான் எனது மனதிலும் இருக்கிறது நாங்களும் எவ்வளவுநாள் தான் துன்பத்ததை அனுபவிப்பது அதை அவர்களையும் உனரச்செய்யவேண்டும் அப்போதுதான் தெரியும் விலியும் வேதனையும்

சிங்கள தேசம் நிச்சயமாக பறிதாபமாக இறந்த எம் உறவுகளின் வேதனையை அணுபவித்தே ஆக வேன்டும் அதற்கு ஒரே வழி பலிக்கு பலி தான்.

பழியுணர்வை விடுத்து விடுதலையுணர்வுடன் எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

உறவுகளே!

சர்வதேசமும் எம்மைக் கைவிட்டால்,அதன் பின்பு எமது போராட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற உங்களது கருத்துக்களை முன்வையுங்கள்.

சிங்கள தேசம் நிச்சயமாக பறிதாபமாக இறந்த எம் உறவுகளின் வேதனையை அணுபவித்தே ஆக வேன்டும் அதற்கு ஒரே வழி பலிக்கு பலி தான்.

போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடினாலும், சிங்கள மக்களை கொன்று குவிக்கவில்லை... பொருளாதார வீழ்ச்சியையே குறிபார்த்தனர்... அதுவே தலைவரின் அணுகு முறையாகவும் இருந்தது... தலைவரின் மேல் நாம் வைத்த நம்பிக்கை, மரியாதை வீண்போகக் கூடாது. எச்சந்தர்பத்திலும் தலைவர் வகுத்த பாதை தடம்பிரளக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

முதல் படியாக ஸ்ரீலங்கா பொருட்களை வாங்கவேண்டாம் என்று சொன்னாலும் எங்கட சனம் பலர் கேட்கிறதா இல்லை... குரக்கன் மா புட்டும், விளமீன் குழம்பும் மூக்குப் பிடிக்க திண்டு கொண்டு இருக்குதுகள்.... கடைகளிலும் இன்னும் வாராந்த வீரகேசரி பத்திரிக்கை... இதுகள் எல்லாம் என்ன இழவுக்கு???? தமிழருக்கு ஒற்றுமை இன்னும் பலமாக வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதம் இல்லாத ஒரு ஆயுதம் ஏந்திய விடுதலை போராக இருந்த எமது போராட்டத்தில்....கடந்த 30௦ வருடம் தமிழன் என்ற மரியாதையுடன் தலை நிமிர்ந்து நின்றோம் - விடுதலை புலிகள் உள்ளார்கள், பிரபாகரன் உள்ளார் என்று!

இன்று தமிழினம் காணாத அவல நெருக்கடி....தமிழருக்கு என்று எழ் அளவேனும் மரியாதை இல்லை..

பயங்கரவாத முத்திரை குத்த பட்டு உலகால் ஒடுக்க பட்டு இருக்கும் சமூகம், "ஆயுதங்களை மௌனித்து" இத்தனை அநீதிகளை தாங்கி உலகிற்கு எடுத்து சொல்லியும், அந்த உலகு பாரா முகமாய் இருந்தால் - இனி மேல் தான் உலகம் எமது பாசையில் பயங்கரவாதம் என்ன என்பதை பார்க்கும்....இது வெருட்டல் இல்லை, யதார்த்தம்...மனோதத்துவம்.

தமிழினம் இந்த போரில் இழந்தது அதிகம்... அவசர பட்டு திரும்பவும் ஆயுதம் எடுத்து இன்னும் எமது இழப்பை கூட்டாமல்.... மீட்க பட வேண்டிய பல உறவுகள் அங்கே உண்டு... முதலில் அதை சர்வதேசத்திற்கு அரியண்டம் குடுத்து செய்விக்கலாமா என்று பாப்போம்....எமது அவசர ஆத்திர புத்திக்கு அவர்கள் பலியாக கூடாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.