Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாதகல் பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசம் – மகிந்தவின் மகன்

Featured Replies

ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உச்ச பாதுகாப்பின் மத்தியில் இந்தப் பயணம் இன்று காலை இடம்பெற்றிருந்தது. எனினும் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எங்கும் அவர்கள் சென்றிருக்கவில்லை. அந்தப் பகுதிக்கு கடற்படையினரால் பலத்த சோதனைகளின் பின்னர் அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களுக்கு உதவிப் பொருட்களையும் இவர்கள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மதியத்துடன் இவர்கள் கொழும்பு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

இலங்கை முழுவதும் பெளத்த பிரதேசமா ஆகிட்டுது...இதுல மாதகலும் மட்டக்களப்பும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க துட்டகேமுனு

[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]

கவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன் என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும் என்கிறான்.

மேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய கைப்புள்ளையின் வீரம் போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.

கதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது எல்லாளன் என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு ஒண்டிக்கு ஒண்டி வற்றியா என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.

இவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்‌ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.

புலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்‌ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்‌ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.

இன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா? தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.இரண்டாமவன்: மடையா, ராஜபக்‌ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.

ஆம் நண்பர்களே, ராஜபக்‌ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்‌ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்வாழ்க துட்டகேமுனுhttp://vijaygopalswami.wordpress.com/2009/05/28/hail_duttakemunu/

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தம் ஒரு புனித மதம் ............அதை பின் பற்றுபவர்கள் .............?........இவர்களால் மதத்தின் புனிதம் கெடுகிறது

நாங்கள் துட்டகைமுனு என்றுதான் படித்தோம். துட்டகேமுனு என்னும் சொல்லை வெளி நாட்டவர்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.இலங

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் துட்டகைமுனு என்றுதான் படித்தோம். துட்டகேமுனு என்னும் சொல்லை வெளி நாட்டவர்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.இலங??கை சரித்திரம், உலக சரித்திரம் (முதன் முதலாக) தமிழில் எழுதிய ஆசிரியர், ஆ.சபாரத்தினம் இன்னும் உயிரோடுதான்

இருக்கிறார். ,அவர் துட்டகைமுனு என்னும் பெயரைத்தான் கையாண்டிருக்கின்றார்

http://vijaygopalswami.wordpress.com/2009/...il_duttakemunu/

இருக்கலாம். பின்னூட்டத்தில் சில விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். வாசியுங்கள்.

சிங்களத்தில் கெமுனு என்பது சரி. ஆனால் தமிழாசிரியர்கள் தமிழ் வழக்கிற்கேற்ப பெயைர்களை மாற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி ஆ.சபாரத்தினம் உங்களுக்குத் தெரிந்தவரா?எங்க ஊருக்காரர் ஆச்சே.

யாழ் மாதகல் பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசம் – மகிந்தவின் மகன்

ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உச்ச பாதுகாப்பின் மத்தியில் இந்தப் பயணம் இன்று காலை இடம்பெற்றிருந்தது. எனினும் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எங்கும் அவர்கள் சென்றிருக்கவில்லை. அந்தப் பகுதிக்கு கடற்படையினரால் பலத்த சோதனைகளின் பின்னர் அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களுக்கு உதவிப் பொருட்களையும் இவர்கள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மதியத்துடன் இவர்கள் கொழும்பு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.nerudal.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை மரண ஓலம், எத்தனை அவலம்,

பிச்சைகாரரை கூட கண்டிராத எம் இனத்தை இன்றைக்கு இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டு...

விகாரையா? கட்டுங்கோ கட்டுங்கோ....

எங்கட காணிக்க கொணர்ந்து கட்டினா ஒரு நாள் இல்லாட்டிலும் இன்னொரு நாள் "அபிஷேகம்" இருக்கு!

Edited by Ilayapillai

யாழ் மாதகல் சம்பில்துறை பௌத்த விகாரைக்கு சிராந்தி ராஜபக்ஸ நாமல் ராஜபக்ஸ சகிதம் திடீர் விஜயம் பௌத்தர்கள் புனித பிரதேசமாம்?

srinthy.jpg

இலங்கை அரசின் முதற் பெண்மணியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.

உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உச்ச பாதுகாப்பின் மத்தியில் இந்தப் பயணம் இன்று காலை இடம்பெற்றிருந்தது. எனினும் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எங்கும் அவர்கள் சென்றிருக்கவில்லை. அந்தப் பகுதிக்கு கடற்படையினரால் பலத்த சோதனைகளின் பின்னர் அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களுக்கு உதவிப் பொருட்களையும் இவர்கள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மதியத்துடன் இவர்கள் கொழும்பு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

updated - 2009-06-05

மூலம் - Global Tamil News செய்தியாளர்

சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர்.

சங்கமித்தை வரலாற்று ரீதியாக எங்கு முதன்முதல் ஒன்ணுக்கு போனவர் என்று கண்டறிந்து அங்கும் ஒரு விகாரை கட்டுக... :lol:

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கமித்தை வரலாற்று ரீதியாக எங்கு முதன்முதல் ஒன்ணுக்கு போனவர் என்று கண்டறிந்து அங்கும் ஒரு விகாரை கட்டுக... :lol:

:D

:D:D

இப்படியே வரலாற்று ரீதி என்று போட்டு உசுப்பேத்தி கொண்டு இருந்தினம் என்றால், கொஞ்ச நாள் போக "வணங்கா மண்" பானாந்துறை கடற்பரப்பின் மேல் தானே அடையாளம் கண்டு கொள்ள பட்டது என்றார்கள் -

இருக்கட்டும், நாங்கள் பானாந்துறையையும் வரலாற்று ரீதியாக பெரு நிலப்பரப்போட கொண்டு போய் சேர்த்து விடுறம்!

சங்கமித்தை வரலாற்று ரீதியாக எங்கு முதன்முதல் ஒன்ணுக்கு போனவர் என்று கண்டறிந்து அங்கும் ஒரு விகாரை கட்டுக... :lol:

:D

:D :D போற போக்கில ஒண்ணுக்கு, இரண்டுக்குப் போனதுக்கு எல்லாம் அடையாளமாக விகாரைகளை கட்டி உள்ள சனம் போக இயலாமை இருக்கப் போகுது...

வீனா என்னத்துக்கு காசு செலவழிச்சு விகாரைகளைக் கட்டிக் கொண்டு... சிராந்தி ராஜபக்ஸவே ஒரு நடமாடும் விகாரை மாதிரித் தானே இருக்கு...??? :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பம் ஆணவம் பிடித்து ஆடுகின்றது.எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கமித்தை ஒரு தமிழ் பெளத்த துறவி,,,மாதவியின் சொந்தக்கார பெண்,, மணிபல்லவத்தீவு ஈழம்,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

சிராந்தி ராஜபக்ஸவே ஒரு நடமாடும் விகாரை மாதிரித் தானே இருக்கு...??? :(

நடமாடும் விகாரை சம்பில்துறையிலும் ஒரு விகாரை வேணும் என்று அடம்பிடிக்கிறா.booj.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒர வேளை ஆள் கனவு கண்டிருக்குமோ

மலைநாட்டில இருக்கிற சிவனொளி பாதமலை இந்துக்களின் புனிததேசமாய் இருந்து இருக்கிது. இதுமாதிரி கதிர்காமமும் இருக்கிது. எண்டபடியால அதுகளை நினைச்சு கொஞ்சம் ஆறுதல் அடையுங்கோ. என்னதான் நாங்கள் சண்டை பிடிச்சாலும் பெளத்தமும் இந்துசமயமும் ஈழம் எங்கும் ஒண்டுக்க ஒண்டு ஊடல் செய்து இருக்கிது.

மாப்பிள்ளை என்னது சிவனொளி பாத மலை இந்துக்களின் புனித பிரதேசமா?!!! :rolleyes:

நாங்கள் தான் அப்படி எழுதி படிச்சுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறம்.. கிறிஸ்துவ மதத்தினர் அதை தங்கள் கடவுளின் பாதம் பட்ட மலை என்றும், முஸ்லிம்கள் தங்கள் தூதுவரின் பாதம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் சிங்கள பௌத்தர்கள் இதை ஏற்பதில்லை 'ஸ்ரீபாத'மலை தான் அவர்கள் வைத்துள்ள பெயர். சிங்களவன் அதை தங்கள் புத்தரின் பாதம் பட்ட மலை என்று சொல்லி புனித பாதம் என்று அதற்கு பிக்குகளை வைத்து ஒவ்வொரு நாளும் தாமரைப்éக்கள் வைத்து சாம்பிராணியும் வைத்து பிரித் ஓதி வருகினம். தங்கள் வரலாற்றில் இருக்காம் புத்தர் இங்கு விஜயம் செய்தபோது வைத்த கால்சுவடாம் அது. அங்கு மலை மேலே போனாலே பிக்குகள் ராஜ்ஜியம்தான்.

இதே போலத்தான் கதிர்காமமும் ஏற்கனவே அந்த பிரதேசத்தில் மிகப்பெரிய புத்தவிகாரை அமைத்தாயிற்று..

கொஞ்சம் கொஞ்சமாய் முருகனும் சிங்களவரின் கடவுளாய் மாறிகொண்டு வாறார். :lol:

http://sripada.org/

Edited by வசி_சுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.