Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் சரிவில் சாவின் விழிம்பில் ஒட்டுண்ணிகள். அவர் தம் சரித்திரம் முடிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

balletbox.jpg

ஈழத்தில் கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தது 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டியே சிங்கள மற்றும் இந்திய அரசுகள் கையளித்த ஆயுதங்களை, பணத்தை, செல்வாக்கை வைத்து ஈழம், தமிழ் மக்கள் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழ் மக்கள் முன்னெடுத்த தாயக விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எதிரியின் காய்நகர்தல்களுக்கு முழுமையாக உதவி வந்த ஒட்டுண்ணி தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுள் சேடம் இழுக்கும் நிலையை எட்டியுள்ளது.

2006ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இன அழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தத்தை சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசு ஆரம்பித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளின் நேரடி உதவியூடு இவ்வாண்டின் மே மாதத்தில் புலிகளை வென்று குறித்த யுத்தத்தில் ஆயுத பாவனையை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டதாக அறிவித்தது.

அப்படி ஒரு அறிவிப்பு விடப்பட்டு முழுமையாக ஒரு மாதம் கூட இன்னும் ஓடிடவில்லை.

யுத்தத்தின் வடுக்களை சுமந்த மக்களில் அவை ஆறக் கூட இல்லை. வேட்டுக்களும் குண்டுகளும் ஏற்படுத்திய காயங்களின் ரணங்கள் ஆறக் கூடவில்லை. உயிரிழப்புகளின் சோகங்கள்.. கணக்கெடுப்புக்கள் கூட முடியவில்லை. வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் சொந்த இடம் மீள முடியாது அகதி முகாம்கள் என்ற பெயரில் நடத்தப்படும் திறந்த வெளிச் சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் நிலை தொடர்கிறது.

இத்தனைக் துயர்களையும் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மக்கள் பற்றிய எந்த கருசணையும் இன்றி யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கு தேர்தலை நடத்தி தான் இலங்கையின் வடக்குக் கிழக்கில் சனநாயகத்தை, இயல்பு நிலையை நிறுவி விட்டுள்ளதாக வெளியுலகுக்கு ஒரு போலித் தோற்றத்தைக் காட்ட சிங்கள அரசு போடும் நாடகத்தில் பங்கெடுக்க மக்கள் விரோத ஒட்டுண்ணிகள் தயாராகிவிட்டனர்.

தமிழ் மக்களின் இரத்தத்தில் அரசியல் செய்து வாழ்ந்து பழகிவிட்ட இந்தப் புண்ணியவான்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை பதியத் தயாராகிவிட்டனர்.

1987 இல் இந்தியப் படைகள் தமிழீழத் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டு தான் ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா விரும்பும் தீர்வை ஜனநாயக வழியில் புலிகளை வென்று பெற்றுக்கொடுத்துவிட்டதாக உலகை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை ஆடியது. அன்றும் சனநாயகம் ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புக் கருவியாக, பகடைக்காயாக ஈழத்தமிழர்களை பலியிட்டது. இன்றும் அதே ஒட்டுண்ணிகளைக் கொண்டு சிங்களத் தலைமை தமிழர்களை சனநாயகத்தின் பெயராலும் பலியிடத் தயாராகிவிட்டது.

இத்தனை மக்களின் துயர்மிகுந்த சூழலிலும்.. இந்த தமிழ் மக்களின் இரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள் தமது தாகத்தை தீர்த்துக் கொள்ளவதிலேயே முன்னிற்கின்றன. அதற்காக எதிரியோடு சேர்ந்து அவனுடைய கட்சி அடையாளத்தின் கீழும் தமக்குள் கூட்டணி போட்டும் பிரிந்தும் அவனின் வெற்றிப்பிரச்சாரத்துக்காக சனநாயகத்தை சோடை போகச் செய்து அதன் கீழ் தமது வாழ்க்கையை பார்த்துக் கொள்ளக் தயாராகி விட்டனர்.

தமது ஈழம்.. தமிழ் மக்கள் என்ற அடையாளங்களைக் கூட சிங்கள பேரினவாதத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராகிவிட்டனர். ஆனால் இவர்கள் புலிகள் வாழும் வரை கொக்கரித்ததோ.. புலிகள் இன்றேல் தாம் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை எப்போதோ பெற்றுக் கொடுத்திருப்போம் என்பதே.

இதுதானா இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சுதந்திரம்.

இவர்களின் கட்சி இருப்புக்களே கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய நிலையில் இவர்களில் வாய்சவடால்களை மக்கள் முற்றாக நிராகரித்து காலம் காலமாய் தமிழ் மக்களின் குருதியில் வயிறு வளர்க்கும் இந்தத் துரோகிகளை ஆயுத சனநாய் அக நீரோட்டத்தில் இருந்தும் முழுமையாக விரட்டி அடிப்பதோடு தமிழீழ மக்களின் அபிலாசைகளை பற்றுறுதியோடு பற்றி நின்று தமிழீழ மக்களையும் போராட்டத்தையும் வைத்து போலித் தேர்தல்கள் மூலம் தமிழர் தேசத்தை உலகுக்கு விலை பேச முயலும் எதிரிகளின் திட்டங்களையும் முறியடிக்க வேண்டும். அதற்காக திணிக்கப்படும் தேர்தலில் சரியான பாடம் ஒன்றைக் கற்பிக்க அன்பார்ந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வாழ் எம்முறவுகள் முன்வர வேண்டும்.

22,000 க்கும் மேற்பட்ட எம் மாவீரர்களினதும் 150,000 மேற்பட்ட எமது மக்களினதும் இழப்பில் துயரத்தில் கிஞ்சிதமும் அக்கறையற்று 3 இலட்சம் மக்களின் சிறைவாழ்க்கை பற்றிய எந்தக் கவலையும் இன்றி எதிரிக்கு வாலிபிடிக்க தயாராகிவிட்ட அத்துணை ஒட்டுண்ணிகளுக்கும் மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.

1989 இல் இந்தியாவுக்கு வழங்கிய அதே படிப்பினையை சிங்கள எதிரிகளுக்கும் அவனோடு கூட்டணி அமைத்து எமது மக்களைக் கொன்றழிக்க துணை நின்ற ஒட்டுண்ணிகளுக்கும் மக்கள் புகட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் இந்த ஒட்டுண்ணிகளின் ஆயுளை இத்தோடு சரிக்க வேண்டும்.

அந்த வகையில் துயர்கள் பல சுமந்தும் தமிழ் மக்களோடு இறுதிவரை களத்தில் நின்ற உண்மையான மக்கள் பிரதிநிதிகளை ஆதரிப்போம். தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் குரல்களை பலப்படுத்துவோம். தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி தமிழர் தாயகத்தில் எமக்கான நிரந்தர அமைதிக்கு வழி சமைப்போம்.

அதுமட்டுமன்றி சுதந்திர தமிழீழம் அமைய உலகத்தமிழினத்தோடு தாயக மக்கள் கைகோர்கும் நிலை வர வேண்டும். அதற்காக இன்றே துணிந்து ஒரு முடிவு செய்வோம். வினை விதைத்தவனுக்கு அதனை பரிசளிக்கத் தயாராவோம்..!

இவ்வாக்கம் தொடர்புபட்ட செய்தி:

சிங்களச் சிறீலங்காவின் சுதந்திரக் கட்சின் வெற்றிலைச் சின்னத்தில் ஒட்டுண்ணி ஈபிடிபி வடக்குத் தேர்தலில் போட்டி.

பிரதானம்: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • Replies 50
  • Views 4.7k
  • Created
  • Last Reply

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதுதான் இந்த கதையின் முடிவாகும்! முந்தி புலிகள் இயங்குகையில் ஒட்டுண்ணி என்று எதிர் கருத்தாளர்களை எள்ளி நகையாடிய நாம் வரும் காலங்களில் இந்த பதங்களை அவர்களுக்கு எதிராக பாவிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிந்திக்கிடைத்த செய்திகளின் படி புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் சரணடைந்துள்ளனர். இதில் அரசியல் துறையின் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பான ஒருவரும் காலம் சென்ற புலிகளின் முக்கிய தளபதியின் துணைவியார் ஒருவரும் மகிந்த கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனராம்! போற போக்கிலை மகிந்தர் ஏகப்பிரதிநிதியாக மாறிக்கொண்டு வருவதாக கதை! எனவே கல்லெறிகையில் கவனித்து எறியவும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எதிரியிடம் சரணடையக் கூடாது என்று தம்மைத் தாமே மாய்த்துக் கொண்ட போராளிகள் பலர். எனவே சரணடைந்த நேரத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரா என்பது கேள்விக்குரிய ஒன்று. அதுமட்டுமன்றி புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் புலிகள் அமைப்புக்குரியவர்கள் அல்ல. அதுமட்டுமன்றி தமிழீழ நிர்வாக சேவைகளில் பணியாற்றியோர் புலிகள் அல்ல.

எவராக இருந்தாலும் மாவீரர்களினதும் மாண்ட மக்களினதும் கனவுகளுக்கு எதிராகச் செயற்படின்.. மக்களை இனத்தை அழித்த எதிரிகளுக்கு சார்பாகச் செயற்படின் அது மன்னிக்கக் கூடியதொன்றல்ல.

எத்தனையோ கரும்புலிகள் தமிழீழக் கனவோடே விடைபெற்றுச் சென்றனர். அவர்களின் இலட்சியத்தை மாய்த்து எதிரிக்கு சேவகம் செய்வதை எந்த மனச்சாட்சி உள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

இது கல்லெறிதல் அல்ல. தமிழீழ இலட்சியத்தை தாங்கும் மக்களின் குரல்.. என்பதை முதலில் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டு கருத்தெழுதுவதும்.. துரோகிகளுக்கு அரசியல்வாதிகள் பட்டமளிப்பதையும் செய்யுங்கள்..!

ஆனால் எந்தத் தன்னினமானமுள்ள தமிழனும்.. மாவீரர்களின் தமிழீழக் கனவோடு மாண்ட மக்களின் கனவுக்கு பாதகம் செய்யமாட்டான்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி

ஆக அற்புதம் அருமை ....உங்கள் புலனாய்வுச் செய்திக்கு ..

வாழ்க தமிழ் (?)

வெல்க தமிழன் (?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா... சரணடைந்தவர்கள் புலிகள் இல்லை என்றால்.. அவர்கள் எல்லோரையும் என்ன சாகச் சொல்கிறீர்களா..... அவங்க என்னய்யா பிழை செய்தாங்க.... நமக்காக போரட புறப்பட்டது பிழையா... நாம புலத்தில இருந்து எதுவம் கதைக்கலாம்..... வலி அவங்களுக்குதான்...... நமக்கில்லை

எதிரியின் எண்ணத்தின்பால் செயற்படுவதால் வரும் வலி உங்கள் தாத்தாவுக்கானதா? தமது சக போராளிகளினதும் இவர்கள் தொடர்வார்கள் எனும் கனவுடன் வெடிமருந்து சுமந்தவரிக் இலட்சியங்களை புதைப்பதென்பது விபச்சாரத்திலும் கீழானது. இங்கே விபச்சாரியின் வலி பற்றி பிதற்றுவதிலும் விபச்சாரத்தால் சீரழிய போகும் ஒரு சமுதாயம் பற்றி சிந்திப்பதை உங்களால் ஏன் ஏற்றுகொள்ள முடியவில்லை?

இளம்பரதி மற்றது தமிழ்ச்செல்வன் அண்ணாவின் துனைவியார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா... சரணடைந்தவர்கள் புலிகள் இல்லை என்றால்.. அவர்கள் எல்லோரையும் என்ன சாகச் சொல்கிறீர்களா..... அவங்க என்னய்யா பிழை செய்தாங்க.... நமக்காக போரட புறப்பட்டது பிழையா... நாம புலத்தில இருந்து எதுவம் கதைக்கலாம்..... வலி அவங்களுக்குதான்...... நமக்கில்லை

சரணடையாமல் அவர்கள் செத்திருந்தால் வீரமல்லவா....?

அவர்கள் நம்பியவர்கள் எல்லாரும் எதிரியிடம் வெள்ளைக்கொடியுடன் சென்றது வீரம் சரணடந்த மிச்சமெல்லாம் துரோகம் இதுதான் அசன் பலரது தேசபக்தி. பாவம் அவர்கள் இன்று ஒரு மாற்றுடையோ நல்லுணவோ ஏதுமின்றி அவலப்படுகிறார்கள்.

இங்கிருந்து மூன்றுவேளையம் மூக்குமுட்டப்பிடித்துவிட்ட

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போராடவென்று போன போராளிகளைத் துரோகிகள் விபச்சாரிகள் என்று அந்தப்புனிதங்களை அசுத்தம் செய்பவர்கள் எல்லாரும் இங்கிருந்து வீராப்பு வீசாமல் அங்கை போய் ஆயுதம் எடுத்துப் போராடட்டும். அதற்கு இயலாதெனில் அந்தப்போராளிகளைக் குற்றவாழிகள் ஆக்காமல் விட்டுவிடுங்கள். அவர்கள் அந்த மண்ணுக்குக் கடமை செய்யப் போனார்கள். இங்கிருந்து எதுவுமே செய்யாமல் ஊர்வலத்தில் சீருடை போட்டு சிக்னல் காட்டியதும் , ஊர் வருவாயில் உடம்பை வளர்த்ததும் , போராடு போராடென களத்தில் நின்றவர்களை புலத்தில் இருந்த விசிலடித்து வாழ்த்தியதும் போதும்.

வாயால் அந்தப் போராளிகளை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு மகிழும் மன்னவர்கள் முதலில் தாங்கள் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு ஒற்றுமைப்படட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களுடன் கூட்டுச் சேர்ந்து எவர் தேர்தலில் நின்றாலும் அவர்கள் துரோகிகளே!!! அவர்களுக்குச் சரியான பhடத்தை மக்கள் தேர்தலில் புகட்டுவார்கள்.பணத்திற்கும் பொருளுக்கும் மயங்கி தங்கள் இலட்சியத்திற்கு மாறாக தமிழீழ மக்கள் ஒரு போதும் செயற்பட மாட்டார்கள்.

Edited by புலவர்

துரோகப் பட்டியல் இன்னும் நீளட்டும். சரணடைந்த, சயனைட் குப்பி அடிக்காத அனைவரையும் இந்த லிஸ்டில் சேர்த்து கொள்வோம். மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினியில் இருந்து புதுவை இரத்தினதுரை வரை மட்டும் நீளாது ஈற்றில் புழு, பூச்சி, மட்டத்தேள் என்று எல்லாவற்றையும் துரோகி என்போம்

வெளிநாட்டுக்கு ஓடிவந்து விட்டு சரணடைந்தவர்களையும் துரோகி என பழிக்கும் அளவிற்கு இவர்களுக்கு கொழுப்பு மெத்திப் போட்டுது..

Edited by நிழலி

எதிரியின் எண்ணத்தின்பால் செயற்படுவதால் வரும் வலி உங்கள் தாத்தாவுக்கானதா? தமது சக போராளிகளினதும் இவர்கள் தொடர்வார்கள் எனும் கனவுடன் வெடிமருந்து சுமந்தவரிக் இலட்சியங்களை புதைப்பதென்பது விபச்சாரத்திலும் கீழானது. இங்கே விபச்சாரியின் வலி பற்றி பிதற்றுவதிலும் விபச்சாரத்தால் சீரழிய போகும் ஒரு சமுதாயம் பற்றி சிந்திப்பதை உங்களால் ஏன் ஏற்றுகொள்ள முடியவில்லை?

ஆகவே என்ன சொல்கின்றீர்கள் என்றால், இறுதிவரைக்கும் தலைவனின் சொல்லுக்காய் முள்ளிவாய்க்காலில் நின்று போராடி ஈற்றில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரும் விபச்சாரிகளையும் விட கீழானவர்கள் என்றா? உங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் இவ்வாறு சொல்ல? வெளிநாட்டுக்கு ஓடி வந்து எந்தவிதமான தியாகமும் செய்யாது வீணே வயிறு வளர்க்கும் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் போராளிகளின் தியாகத்தினை பற்றி கேவலமாக சொல்லும் அளவிற்கு நிலமை வந்துவிட்டது. சரி, அவர்கள் தான் தமது சக போராளிகளினதும் "இவர்கள் தொடர்வார்கள் " எனும் கனவுடன் வெடிமருந்து சுமந்தவர்களின் இலட்சியங்களை புதைத்து விபச்சாரிகளாகி விட்டனர், தமிழினி அக்காவும், தமிழ் செல்வன் அண்ணாவின் மனைவியும் கூட அப்படி ஆகிவிட்டனர்... ஏன் நீங்கள் போய் போராடலாம் தானே? எது உங்களை தடுக்கின்றது?

மோகண் அண்ணா... யாழில் இந்த பதிலிற்காகவது, உலகில் உள்ள அனைத்து விதமான கேவலமான தூசனங்களை கொண்டு ஏசுவதற்கு அனுமதி அளியுங்கள்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எதிரியிடம் சரணடையக் கூடாது என்று தம்மைத் தாமே மாய்த்துக் கொண்ட போராளிகள் பலர். எனவே சரணடைந்த நேரத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரா என்பது கேள்விக்குரிய ஒன்று. அதுமட்டுமன்றி புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் புலிகள் அமைப்புக்குரியவர்கள் அல்ல. அதுமட்டுமன்றி தமிழீழ நிர்வாக சேவைகளில் பணியாற்றியோர் புலிகள் அல்ல.

சரணடைய வெள்ளைக்கொடியோடை போன நடேசனும் புலித்தேவனும்..மட்டுமல்ல ..நாங்:கள் சரணடையத்தயார் மிகுதியான மக்களையும் காயமடைந்த போராளிகளையும் காப்பாற்றுங்கள் என்று இறுதி அழைப்பு விடுத்த சூசையும்.. சரணடைந்த இளம்பருதி.பாலகுமார்..தமிழினி..

புதுவை இரத்தினதுரை..நிதித்துறை பாரி இவர்களெல்லாம் புலிகள் இயக்கமா இல்லையே துரோகிகள் தானே..போராளியாய் இருந்து தமிழ்செல்வனிற்கும் சூசைக்கும்.பாலகுமாரிற்கும் மனைவிகளானவர்களெல்லாரும் இராணுத்திடம் சரணடைந்ததால்.. அவங்களும் துரோகிகள் தானே???வெளிநாட்டிலையிருந்து காலாட்டியபடி கணணி தியாகிகளாவோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலின் போதும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தோர் இந்தியப் படைகளிடம் சரணடைந்தனர். அப்படிச் சரணடைந்த பலர் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டனர்.. விலகிப் போக அனுமதிக்கப்பட்டனர். அப்படிப் போனவர்களில் சிலர் மாற்று இயக்கங்களில் சேர்ந்து காட்டிக் கொடுப்புப் பணியாற்றியதுடன்.. மரண தண்டனைக்கு உள்ளானோரும் உண்டு. பலர் புலம்பெயர் நாடுகளில் பிள்ளை பெத்து குடியும் குடித்தனமும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

போராளிகளாக இருந்து இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தற்போது போராளிகள் அல்ல. அதேபோன்று அவர்களின் குடும்பத்தினரும் போராளிகள் அல்ல. அதேபோன்று தமிழீழ நிர்வாக சேவையில் இருந்தோரும் போராளிகள் அல்ல. அரசாங்க நிர்வாக சேவை செய்வோர் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களா..??!

இங்கு சரணடைந்த யாரையும் துரோகிகள் என்று எவரும் மொழியவில்லை. ஆனால் சரணடைதல் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு முரணானது என்பது இவர்கள் சரணடையும் வரை விதிப்பு. அந்த விதிப்புக்கு கட்டுப்பட்டு உயிர் திறந்த மறவர்கள் நூற்றுக்கணக்கானோர். மண்டைதீவில் 1990 இல் 60 போராளிகள் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சரணடையாது சயனைட் உட்கொண்டு மாண்டது பலருக்கு மறந்திருக்கலாம். அல்லது இன்று சரணடைந்தவர்கள் பெரிய புள்ளிகள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதால்.. அதனை மறந்து இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்களோ தெரியவில்லை.

சரணடைவது அவரவரின் விருப்பம். ஆனால் சரணடைந்து தாம் போராடிய மக்களைக் கொன்று குவித்த அரசுடன் இணைந்து பணியாற்றுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அப்படி ஏற்றுக் கொள்வதென்றால் கருணாவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளையானின் செயலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போ ஏன் இத்தனை காலமும் சயனைட் கட்டித் திரிந்தார்கள். பெரிய தலைகள் கழற்றி வீசிட்டு சரணடையவும் சரணடைந்து சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கவுமா..???! அப்போ ஏன் இத்தனை மாவீரர்களையும் களப்பலி இட்டபோது இந்தக் கருணை பிறக்கவில்லை..???! அப்போ ஏன் மில்லர் அண்ணா திலீபன் அண்ணா போன்றோர் மரணத்தை அணைக்கப் போகையில் இவர்கள் தடுக்கவில்லை. அவர்களிடம் தாம் ஒரு காலத்தில் சரணடையப் போவதைச் சொல்லியா அனுப்பி வைத்தார்கள். இல்லையே. அத்துணை போராளிகளும் தமது மக்களும் சகாக்களும் தமது இலட்சியத்தை வெல்ல வைப்பர் என்றுதான் மரணத்தை அணைத்தனர். இல்லை என்கிறீர்களா..??!

நான் போராளியாகி இருப்பின் நிச்சயம் சரணடைவதை ஏற்றுக் கொண்டே இருக்கமாட்டேன். களத்தில் நின்ற பல அண்ணாமார் சரணடையாமல் தலைமறைவாகியும் உள்ளனர். அவர்களின் குடும்பங்களை விட்டுவிட்டு இடம்தெரியாமல் போயுள்ளனர். ஏன் அவர்களுக்கு சரணடையத் தோன்றவில்லை..??! அரசுக்கு சேவகம் செய்து தமது குடும்பத்தைக் காக்கத் தெரியவில்லை..???!

இத்தனை ஆயிரம் மக்களும் மாண்டது ஒரு நம்பிக்கையோடு தான். அவர்களின் உயிர்களும் இவர்களின் உயிர்களும் ஒன்றே. போராளிகள் என்போர் மக்களின் கவசங்கள். அதனை வரிந்து கொண்டுதான் போராளியானார்கள். இப்போ சரணடைந்தது அல்ல பெரிய விடயம். சரணடைந்து அரசுக்கு சேவகர்களாக மாறுவதுதான் தவறு எங்கிறோம். உண்மையில் சரணடைந்தது கூட இயக்க விதிக்கு முரணானதே. இறுதி நேரத்தில் விதி மாற்றியது பற்றி மாண்டு போன போராளிகளுக்கும் மக்களுக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அவர்களும் சரணடைந்து இந்தப் போராட்டத்தை என்றோ முடித்து வைத்துவிட்டு அரச அமைச்சர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்பர். இல்லை என்கிறீர்களா..??!

அதென்ன உங்களுக்கு வேண்டப்பட்டவைக்கு ஒரு நியாயம். மாண்டு போன மறவர்களுக்கு ஒரு நியாயமா..??!

நீங்கள் சிலர் தான் போராளிகளின் இலட்சிய உறுதியை மலினப்படுத்தி போராளிகளின் தமிழீழ வேட்கையை மலினப்படுத்தி அவர்கள் இவ்வளவு காலமும் செய்த உயிர் தியாகங்களையும் இன்னோரென்ன சாதனைகளையும் சந்தித்த சவால்களையும் மலினப்படுத்துகின்றீர்கள்.

மக்களின் போராளிகளின் இழப்புக்கு துன்பத்துக்கு காரணமான அரசுடன் இணைந்து பணி புரியும் அனைவரும் துரோகிகளே. அது டக்கிளசாக இருக்கலாம்.. கருணாவாக இருக்கலாம் அல்லது தயா மாஸ்டர் கூட போராளிகளின் மாவீரர்களின் நம்பிக்கைக்கு எதிராகப் போகின் அவரும் அடங்கலாம். எவரும் அடங்கலாம். அதில் மாற்றுக் கருத்துக்கோ மன்னிப்புக்கோ இடமில்லை. இதுதான் ஒரு உண்மைத் தமிழனின் உணர்வாக இருக்கும்..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோகப் பட்டியல் இன்னும் நீளட்டும். சரணடைந்த, சயனைட் குப்பி அடிக்காத அனைவரையும் இந்த லிஸ்டில் சேர்த்து கொள்வோம். மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினியில் இருந்து புதுவை இரத்தினதுரை வரை மட்டும் நீளாது ஈற்றில் புழு, பூச்சி, மட்டத்தேள் என்று எல்லாவற்றையும் துரோகி என்போம்

வெளிநாட்டுக்கு ஓடிவந்து விட்டு சரணடைந்தவர்களையும் துரோகி என பழிக்கும் அளவிற்கு இவர்களுக்கு கொழுப்பு மெத்திப் போட்டுது..

அண்ணோய் நீங்கள் களத்தில் நின்று கொண்டு இதனை எழுதவில்லை. கனடாவில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள். எமக்கும் கனடாவில் இருந்து கொண்டு உங்களைப் போன்று எழுத உரிமை இருக்கிறது. அதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது நன்று. அநாவசியமாக தனிப்பட்ட கருத்தாளர்களை தாக்குவதை தவிர்ப்பது நன்று.

நீங்கள் கனடாவுக்கு ஓடி வர முடியும் என்றால் ஏன் 22000 க்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் 150,000 மக்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்கல்ல..???! ஏன் செய்து கொடுக்காம ஓடி வந்தீங்க..??! :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப வசத்தால் சரணடைந்தவர்களை யாரும் துரோகிகள் என்று சொல்ல வில்லை.தமிழருக்கு அவலத்தைத் தந்தவர்களுடன் கூட்டுச் சேர்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழினத் துரோகிகளே.அவர்களுக்கு ஒரு நியாயம் கருணா டக்கிளசுக்கு ஒரு நியாயம் கிடையாது.

அண்ணோய் நீங்கள் களத்தில் நின்று கொண்டு இதனை எழுதவில்லை. கனடாவில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள். எமக்கும் கனடாவில் இருந்து கொண்டு உங்களைப் போன்று எழுத உரிமை இருக்கிறது. அதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது நன்று. அநாவசியமாக தனிப்பட்ட கருத்தாளர்களை தாக்குவதை தவிர்ப்பது நன்று.

நீங்கள் கனடாவுக்கு ஓடி வர முடியும் என்றால் ஏன் 22000 க்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் 150,000 மக்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்கல்ல..???! ஏன் செய்து கொடுக்காம ஓடி வந்தீங்க..??! :)

தம்பியோய், நான் கனடாவுக்கு ஓடி வந்ததை என்றும் மறைத்தது இல்லை. ஆனால் அப்படி வந்துவிட்டு கொழுப்பெடுத்துப் போய், சரணடைந்த போராளிகளை கேவலமாக எழுதும் அளவுக்கு உங்களைப் போல் இன்னும் கொழுப்பு ஏறவில்லை.

போராளிகளாக இருந்து இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தற்போது போராளிகள் அல்ல. அதேபோன்று அவர்களின் குடும்பத்தினரும் போராளிகள் அல்ல. அதேபோன்று தமிழீழ நிர்வாக சேவையில் இருந்தோரும் போராளிகள் அல்ல. அரசாங்க நிர்வாக சேவை செய்வோர் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களா..??!

தமிழினியும், இளம் பருதியும், சர்வதேசத்தினை நம்பி வெள்ளைக் கொடியுடன் போன நடேசன் அண்ணாவும், புலித்தேவன் அண்ணாவும் புலிகளை விட்டு எப்ப விலகினவையள் என்று அறியத்தந்தால் நல்லது. எல்லாம் அறிந்த லண்டனில் இருக்கும் தியாகச் சுடர் உங்களுக்கு மட்டும் சொல்லிவிட்டு எப்ப விலகினார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பியோய், நான் கனடாவுக்கு ஓடி வந்ததை என்றும் மறைத்தது இல்லை. ஆனால் அப்படி வந்துவிட்டு கொழுப்பெடுத்துப் போய், சரணடைந்த போராளிகளை கேவலமாக எழுதும் அளவுக்கு உங்களைப் போல் இன்னும் கொழுப்பு ஏறவில்லை.

ஓம் அண்ணோய். உங்க தம்பியோ சகோதரமோ போர்களத்தில் மாண்டு மாவீரராகி இருந்து இப்ப அவர்களை வழிநடத்தினவை சரணடைஞ்சதும் இல்லாம அரசாங்கத்துக்குச் சேவகம் செய்வதை குற்றமென்றால் உங்களுக்கு கொழுப்பெடுத்த மாதிரித்தான் தெரியும். ஏனென்றால் இழப்பின் வலி உங்களுக்குப் புரியாது. நீங்கள் தான் குடும்பத்தோட ஓடி வந்திட்டியளே. கொழுப்பில்ல எல்லாம் வத்தின மாதிரி நடிக்க என்ன பஞ்சம் உங்களிடம்..!

அதுமட்டுமல்ல.. இத்தனை பேர் சரணடைஞ்ச இடத்தில இராணுவத்தட்ட சரணடைய மாட்டம் என்று போன போராளிகளும் உள்ளனர். அவர்களும் கொழுப்பெடுத்த ஆக்களோ..??!

அநாவசியமா வார்த்தைகளை கொட்டாதீங்க. நீங்களே உங்கள் எழுத்துக்களால் அசிங்கப்படுவீங்க..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியும், இளம் பருதியும், சர்வதேசத்தினை நம்பி வெள்ளைக் கொடியுடன் போன நடேசன் அண்ணாவும், புலித்தேவன் அண்ணாவும் புலிகளை விட்டு எப்ப விலகினவையள் என்று அறியத்தந்தால் நல்லது. எல்லாம் அறிந்த லண்டனில் இருக்கும் தியாகச் சுடர் உங்களுக்கு மட்டும் சொல்லிவிட்டு எப்ப விலகினார்கள்?

புலிகள் எப்ப சரணடைவதை கொள்கையாகக் கொண்டவை என்பதை நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள் என்றால் மிச்சத்தை நான் சொல்லுறன்.

நடேசன் அரசியல் துறைப் போராளி. அவர் போர்க்களம் போய் சண்டை போட்டவரோ தெரியாது. ஆனால் போர்க்களத்தில் நின்று களமாடி எதிரியிடம் சரணடையாது இயக்க விதிக்கு மதிப்பளித்து மாண்டு போன வீரர்களுக்கு நடேசன் என்ன சொல்லிட்டு வெள்ளக்கொடியோட போனவர் என்பதையும் சொல்லுங்கோ..??! அவையை சர்வதேசம் மீண்டும் உயிர்ப்பித்துத் தரும் எண்டு உத்தரவாதம் பெற்றே போனவர்..???!

சர்வதேசம் எனி ஒரு போர் தொடங்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று 2004 இல் சமாதான நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக விலகிய போது எச்சரிக்கேக்க வராத வெள்ளக்கொடி.. இத்தனை போராளிகளின் மக்களின் களப்பலிக்குப் பிறகு முளைத்ததன் தார்ப்பரியம் என்ன..??! :)

ஓம் அண்ணோய். உங்க தம்பியோ சகோதரமோ போர்களத்தில் மாண்டு மாவீரராகி இருந்து இப்ப அவர்களை வழிநடத்தினவை சரணடைஞ்சதும் இல்லாம அரசாங்கத்துக்குச் சேவகம் செய்வதை குற்றமென்றால் உங்களுக்கு கொழுப்பெடுத்த மாதிரித்தான் தெரியும். ஏனென்றால் இழப்பின் வலி உங்களுக்குப் புரியாது. நீங்கள் தான் குடும்பத்தோட ஓடி வந்திட்டியளே. கொழுப்பில்ல எல்லாம் வத்தின மாதிரி நடிக்க என்ன பஞ்சம் உங்களிடம்..!

சரணடைந்தவர்களில் யாரெல்லாம் அரசாங்கத்திற்கு சேவகம் செய்யப் போகினம் என்ற லிஸ்டை தம்பி பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு தான் கதைக்கிறியள் போல. விளங்காமல் போயிட்டு... அப்படி என்றால் சரணடைந்த போராளிகள் குற்றவாளிகள் அல்ல, அபபடி சரணடைந்த பின்னும் அரசாங்கத்திற்கு சேவகம் செய்பவர்களைத் தான் குற்றம் சொல்கின்றீர்கள் என்பது இந்த மரமண்டைக்கு புரியாமல் போயிட்டு

அதுமட்டுமல்ல.. இத்தனை பேர் சரணடைஞ்ச இடத்தில இராணுவத்தட்ட சரணடைய மாட்டம் என்று போன போராளிகளும் உள்ளனர். அவர்களும் கொழுப்பெடுத்த ஆக்களோ..??!

சரணடைந்த போராளிகளை குற்றவாளிகள் என்று சொல்லி கொழுப்பெடுத்து ஆடினது நீங்கள். நானல்ல.. என்னிடம் இந்த கேள்வி கேட்க முன் உன்களிடம் முதலில் கேளுங்கள்.

அநாவசியமா வார்த்தைகளை கொட்டாதீங்க. நீங்களே உங்கள் எழுத்துக்களால் அசிங்கப்படுவீங்க..! :)

உண்மை தான்... தான் ஓடி வந்து ஒளிந்து கொண்டு மாண்ட மாவிரர்களின் பெயரை சொல்லி வீரம் காட்டி, பல பெயர்களில் குருவி மாதிரி பறந்து பறந்து எழுதி கொள்ளும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் எழுதி என்னுடைய தரத்தினை தாழ்த்திக் கொண்டால், அசிங்கப் பட்டுத் தான் போவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு சொந்த நிலம் வேண்டும்.

தயவு செய்து வேண்டா விவாதங்களை தவிருங்கள்.

புலிகள் எப்ப சரணடைவதை கொள்கையாகக் கொண்டவை என்பதை நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள் என்றால் மிச்சத்தை நான் சொல்லுறன்.

நடேசன் அரசியல் துறைப் போராளி. அவர் போர்க்களம் போய் சண்டை போட்டவரோ தெரியாது. ஆனால் போர்க்களத்தில் நின்று களமாடி எதிரியிடம் சரணடையாது இயக்க விதிக்கு மதிப்பளித்து மாண்டு போன வீரர்களுக்கு நடேசன் என்ன சொல்லிட்டு வெள்ளக்கொடியோட போனவர் என்பதையும் சொல்லுங்கோ..??! அவையை சர்வதேசம் மீண்டும் உயிர்ப்பித்துத் தரும் எண்டு உத்தரவாதம் பெற்றே போனவர்..???!

... கடைசியில் தன்னுடைய அனைத்து வசதிகளையும் வாழ்வையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக விலை கொடுத்த மாவீரன் நடேசன் அண்ணாவும் சரணடையும் முடிவை எடுத்து பிழை விட்டு விட்டார் என்று எந்த வசதியையும் இழக்காமல் லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் நீங்கள் சொல்றியள்..... இந்தளவுக்கு அவரையும் புலிகளையும் ஒட்டுக் குழுவில் இருப்பவர்கள் கூட கேவலமாக எழுதினமா என்பது தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த போராளிகளை குற்றவாளிகள் என்று சொல்லி கொழுப்பெடுத்து ஆடினது நீங்கள். நானல்ல.. என்னிடம் இந்த கேள்வி கேட்க முன் உன்களிடம் முதலில் கேளுங்கள்.

உண்மை தான்... தான் ஓடி வந்து ஒளிந்து கொண்டு மாண்ட மாவிரர்களின் பெயரை சொல்லி வீரம் காட்டி, பல பெயர்களில் குருவி மாதிரி பறந்து பறந்து எழுதி கொள்ளும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் எழுதி என்னுடைய தரத்தினை தாழ்த்திக் கொண்டால், அசிங்கப் பட்டுத் தான் போவன்

மேல தெளிவாகத்தான் எழுதி இருக்கிறோம்.

சரணடைந்த நேரத்தில் இருந்து அவை போராளிகளாக கருதப்பட முடியாதவர்கள் என்றும் சரணடைந்து சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டால் அவர்களும் குற்றவாளிகள் என்றே சொல்லி இருக்கிறோம்.

புலிகள் இயக்கத்தில் சரணடைதல் அவர்களின் கொள்கைக்கு முரணானது என்பது தவறா. அப்படி என்றால் ஏன் சயனைட் காவித் திருந்தார்கள்..??!

எங்கு எழுதினோம்.. இன்னார் இன்னார் செயற்பட போகின்றனர் என்று. செயற்பட்டால் அவர்களும் குற்றவாளிகள் என்றே.

குருவியின் ஆக்கத்தில் என்ன தவறிருக்கிறது. அவர் இவற்றை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. டக்கிளஸ் என்ற ஒரு இனத் துரோகியின் செயற்பாட்டை உதாரணம் காட்டி மேற்படி முடிவை எடுக்க மக்களிடம் கோரி இருக்கிறார். ஒரு சக பொதுமகனாக அவருக்கு தனது உறவுகளை அப்படிக் கேட்டுக்கொள்ள எல்லாத் தகுதியும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதில் விடயத்தை சரிவர உள்வாங்காமல்.. கருத்தாளர்கள் மீது அவர்களின் கருத்துக்குப் பதில் எழுதாமல் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது தான் உங்களின் நாகரிகமோ..! அதுவும் அவர்கள் இல்லாத இடத்தில்..! :)

... கடைசியில் தன்னுடைய அனைத்து வசதிகளையும் வாழ்வையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக விலை கொடுத்த மாவீரன் நடேசன் அண்ணாவும் சரணடையும் முடிவை எடுத்து பிழை விட்டு விட்டார் என்று எந்த வசதியையும் இழக்காமல் லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் நீங்கள் சொல்றியள்..... இந்தளவுக்கு அவரையும் புலிகளையும் ஒட்டுக் குழுவில் இருப்பவர்கள் கூட கேவலமாக எழுதினமா என்பது தெரியவில்லை

நடேசன் சரணடைய முடிவெடுத்தது தப்பில்ல.. என்றால்.. ஏன் இதற்கு முன்னர் போராளிகளைச் சரணடைய அனுமதிக்கவில்லை. சயனைட் வில்லைகள் ஏன் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன.

நியாயம் என்று வரும் போது.. யார் எவர் செய்தார் என்பதல்ல முக்கியம். இயக்க விதிக்கு அமைவாக நடந்தனரா என்பதுதான் முக்கியம். இந்தியப் படையோடு போராடிய போது இந்தியப் படை சொல்லி திலீபன் அண்ணா சரணடைந்திருந்தால் இன்று நீங்கள் அவரை மாவீரர் என்றா புகழ்வீர்கள். ஆக நீங்கள் புகழனும் என்பதற்காக இதர போராளிகள் மாழனும்.. ஆனால் நடேசன் என்ர போராளி மட்டும் வீரச்சாவடைவது பாவம். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. அப்படியா..???! நடேசன் சரணடைவது நியாயம் என்றால் கருணா ஆயுதத்தோடு சரணடைந்தது மட்டும் ஏன் தப்பு..???! அது எப்படி துரோகம் ஆகும்..??! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு சொந்த நிலம் வேண்டும்.

தயவு செய்து வேண்டா விவாதங்களை தவிருங்கள்.

தவிர்க்கிறேன் கு.சா.

தலைப்புச் செய்தி டக்கிளசின் ராஜபக்ச அரசுடன் இணைந்து போட்டியிடும் முடிவோடு சம்பந்தப்பட்டது. அதை திசைமாற்றியது யாரென்று காண்பீர்கள் என்று நினைக்கிறேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்க்கருத்துக்களுடன் முட்டி மோதுவதை விடுத்து அமைதியாக எங்கள் திசையை நோக்கி செல்வதே மேல் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.