Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள்

Featured Replies

கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள்

இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர்.

அப்போது கப்பலை அனுமதிப்பது தொடர்பாக இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம். கிருஷ்ணா நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

nakheeran

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இது பகிடி இல்லைத் த்தானே ........ஐரோப்பா வுக்கு மீண்டும் புறப்படுவதாக சொனார்கள்.

:) நான் நினைக்கிறன் கப்பல் புறப்பட்ட நேரம் சரியில்லை போல .........

காலம் செய்யாததை நாளும் கோளும் செய்யுமாம். அப்படியா ?

  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள்

இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர்.

அப்போது கப்பலை அனுமதிப்பது தொடர்பாக இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம். கிருஷ்ணா நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

nakheeran

உதை நம்பச் சொல்லுறீங்களா? அறம்புரமா செல்லடி விழேக்க போர்நிறுத்தம் வந்திட்டிது எண்டு செய்தி விட்ட ஆக்களாச்சே..!

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம். கிருஷ்ணா நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ..................அனுமதிக்க இலங்கை அரசு

ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வணங்காமண்' எனும் குறியீட்டுப் பெயருடன், ஐரோப்பிய தமிழ் உறவுகளின், உணர்வுகளின் அடையாளமான, மனித நேய உதவிப் பொருட்களுடன் , 48 நாட்கள் கடலில் தத்தளித்த, 'கப்டன் அலி' கப்பல் இன்னும் சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளை நோக்கி பயணிக்கப் போகிறது. பலரது மனங்களிலும், ஏக்கத்தினையும், துக்கத்தினையும், ஏற்படுத்தியிருந்த இந்த விடயத்திற்கு, இறுதியாக இந்திய அரசு முடிவு கண்டுள்ளது.

இந்த மனிதாபிமான பணி வன்னித் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் கொடுத்தது. இது குறித்து மேலும் அறிவருவதாவது, ஐரோப்பிய தமிழர்களின் கொடை மூலம் 884 மெட்ரிக் டன் எடை கொண்ட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை சுமந்து கொழும்பு நோக்கி சென்றது.

கொழும்பில் இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாய் அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் அற்ப காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற லண்டனில் உள்ள மெர்ஸி மெசின் அமைப்பு, குறைந்தபட்சம் அக்கப்பலில் உள்ள பொருட்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பயன்படுத்தட்டும் என எண்ணினர். தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் மனிதம் - மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியத்திடம் இப்பணியை ஏற்றுக் கொண்டு முறையாக விநியோகிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

வணங்காமண் சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12ம் தேதி கொண்டுவரப்பட்டது. ஆனால் வந்தது பல சோதனைகள் என்ற பெயரில் இந்திய அதிகாரிகளும் காவல் துறையினரும் மேற்கொண்டனர். மனிதம்- மனித உரிமை அமைப்பின் அங்கத்தினர்களை விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரத்திற்கு மேல் மனித வதை செய்தனர். அச்சுறுத்தல்களால் பயப்படுத்தினர். சென்னையில் உள்ள கப்பலின் பொருட்களை இறக்குமதி செய்யும் முகைமையாளரான இம்பிரியல் ஷிப்பிங் முகவரையும் காவல்துறை விசாரித்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி அதிரடியாய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம், கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என எழுதினார். கால அவசரம் கருதி, இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதத்தை எடுத்து டெல்லி சென்று, இந்திய மத்திய அமைச்சர் இராசா உடன் கிருஷ்ணாவை சந்தித்து கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியாளித்திருந்தார்.

ஆனால் இங்கு தமிழர்கிடையே உள்ள சிலர் 24 மணி நேரமும் கப்பலில் உள்ள பொருட்கள் இங்கு இறக்குமதியோ அல்லது வன்னிக்கோ செல்ல விடாமல் தடுக்க பல முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இதற்காக பல சிரத்தைகளை எடுத்துக் கொண்டு புரளிகளை பல வகைகளில் கிளப்பி விட்டனர். இதனால் அச்சமடைந்த இந்திய கப்பற்படை அதிகாரிகள் கப்பலை சோதனையிடமலேயே, கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுக காப்பரேசனுக்கு அறிவித்தனர். இதற்கு பயந்த துறைமுக காப்பரேச அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர்.

கப்பலில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் ஆனதால், கப்பலில் குடிநீர் பற்றக்குறை ஏற்பட்டது. அத்தோடு சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. இச்செய்திகளை ஊடகங்களுடன் மனிதம் அமைப்பினர் பகிந்து கொண்டு ஊடகங்களில் வெளி வந்ததால், உடனடியாய் சென்னை துறைமுக காப்பரேசன் குடிதண்ணீர் ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா இன்று இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்து கொள்ளப்படும் என அறிவித்தார்.

இன்று காலை முதலே, இந்திய ஊடகங்களில் வணங்காமண் குறித்து செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து மேல் மட்ட அதிகாரிகளாக அந்நாட்டின் அதிபர் ராசபக்சேவின் இரண்டு சகோதரர்களான கோதபைய ராசபக்சே மற்றும் பசில் ராசபக்சே ஆகியோர் தலைமையில் மதியம் டெல்லி வந்து சேர்ந்தனர். இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திமுகவின் மத்திய அமைச்சர் ராசா தலைமையில் இன்று மதியம் மற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.

இரு நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். கூட்டத்தின் முதலிலேயே வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாய் சம்மதம் தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிழுவை சங்கம் மூலம் பொருட்களை எடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்களை தற்போது சென்னையிலோ அல்லது தூத்துக்குடி துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு சென்று சேர உள்ளது.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...ion-go-to-vanni

பணத்துக்காகவிருக்கும் என்னவானாலும் நம் மக்களுக்கு இவை போய்ச் சேர்ந்தாலே பெரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப்பின் என்ன சதி இருக்கிறதோ

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப்பின் என்ன சதி இருக்கிறதோ

ஆனால் பேரீச்சம்பழத்துக்குப் போகவில்லை என்பது ஒரு ஆறுதல்தானே..! :)

ஆனால் பேரீச்சம்பழத்துக்குப் போகவில்லை என்பது ஒரு ஆறுதல்தானே..! :)

என்ன இளிப்பு வேண்டி இருக்கு டங்கு உமக்கு...

நான் இது இலங்கைக்கு வரக்கூடாது பேரீச்சம்பழத்துக்கு போகவேணும் என்று நேத்தி வைச்சிருக்கிறன்...

பழைய ஈயம் பித்தளை இரும்புச்சாமானுக்கு பேரீச்சம்பழம்....... :)

Edited by வசி_சுதா

டங்கு எனக்கு ஒரு சந்தேகம்.. அவ்ளோ பெரீய்ய்ய கப்பலுக்கு எத்தினை கிலோ பேரீச்சம்பழம் கிடைக்கும்.. ? :huh::unsure:

வசியுக்கு பேரீச்சம்பழம் எண்டால் நல்ல விருப்பமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களுக்கு இந்திய அரசு கொடுத்த உதவி என்று சொல்லாட்டி சரிதான். தேர்தலம் வருகிறது அதுதான் இராஜபக்சே சகோதரர்கள் கொஞ்சம் இரக்கம் காட்டுறாங்கள் போல இருக்குது.எப்படியோ வன்னி மக்களுக்கு போய் சேர்ந்தால் சரி.

உதை நம்பச் சொல்லுறீங்களா? அறம்புரமா செல்லடி விழேக்க போர்நிறுத்தம் வந்திட்டிது எண்டு செய்தி விட்ட ஆக்களாச்சே..!

இதே கேள்விகள் தான் எனக்கும்... சரி அப்படி அனுமதிச்சாலும், வன்னி மக்களுக்குக் கிடைக்குமா? இல்லாட்டி அதுக்குள்ள எவ்வளத்தைச் சுருட்டலாம் என்று கணக்குப் போட்டு இருப்பாங்களா?? நல்ல எண்ணத்துடனேயே முன்னெடுத்த காரியம்... சரிவரவேணும்...!

டங்கு எனக்கு ஒரு சந்தேகம்.. அவ்ளோ பெரீய்ய்ய கப்பலுக்கு எத்தினை கிலோ பேரீச்சம்பழம் கிடைக்கும்.. ? :unsure::D
வசி_சுதா, கிலோ கணக்கை விடுங்கோ... கொட்டை நீக்கிய பேரீச்சம்பழமா? நீக்காத பேரீச்சம்பழமா?? :huh:
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் பேரிச்சபழத்திற்கு போகுதாம் என்று அங்கால யாரோ ஒரு தமிழ் மக்கள் நலன் ஒன்றே தனது வாழவென்று வாழும் ஒரு அறிவாழியே எழுதியுள்ளார் இது சும்மா கதையாகத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச குடும்பமும் சோனியா குடும்பமும் மனிதாபிமான உதவியை வைச்சு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவியை தடுத்து.. நீ கலைப்பது போல கலை நான் அணைப்பது போல அணைக்கிறன் என்ற பாணியில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உதவி என்றோ தமிழ் மக்களைச் போய் சேர்ந்திருக்க வேண்டியது. இரண்டு மனிதாபிமானமற்ற அரசுகளும் தங்களின் நலனுக்காக ஆளுக்காள் எமது மக்களின் துயரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கான பலனை என்றோ ஒருநாள் அனுபவித்தே தீர்வார்கள்..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='வசி_சுதா' date='Jun 24 2009, 08:24 PM' post='525967']

என்ன இளிப்பு வேண்டி இருக்கு டங்கு உமக்கு...

நான் இது இலங்கைக்கு வரக்கூடாது பேரீச்சம்பழத்துக்கு போகவேணும் என்று நேத்தி வைச்சிருக்கிறன்...

பழைய ஈயம் பித்தளை இரும்புச்சாமானுக்கு பேரீச்சம்பழம்....... :huh:

Maruthankerny Posted Today, 08:54 PM

கப்பல் பேரிச்சபழத்திற்கு போகுதாம் என்று அங்கால யாரோ ஒரு தமிழ் மக்கள் நலன் ஒன்றே தனது வாழவென்று வாழும் ஒரு அறிவாழியே எழுதியுள்ளார் இது சும்மா கதையாகத்தான் இருக்கும்

பேரீச்சம் பழத்திற்கு கப்பல் போகுதின்னு கட்டுரையை படித்திட்டு உண்மையிலேயே எங்களோடை மக்களிற்கு அந்த உதவிகிடைக்கலையேங்கிற அக்கறையிலைதான் கட்டுரையாளரை அங்கை திட்டினீங்களாக்கும் என்னு நினைச்சன்.. ஆனால் ராஜபக்ச சகோதர்களிண்டை அறிக்கையையும் இந்தியாவோடை அறிக்கையையும் அப்பிடியே நம்பி இங்கை மீண்டும் கட்டுரை எழுதினவரை நக்கல் பண்ணிறதை பார்த்தால் அவங்களிற்கும் உங்களிற்கும் பெரிய வித்தியாசமே இல்லையே...அப்போ தமிழ் மக்களோடை நலனை ராஜபக்சாவிற்கும் இந்தியாவிற்கும் மட்டுமே அக்கற இருகின்னுறதை ஒத்துக்கொள்ளுறீங்களா??

அன்பின் சிவாஜினி;....

கட்டுரையாளரை நக்கல் பண்ணுவதாக நினைத்து உங்களுக்கு எப்படி கோவம் வருதோ....

அதேபோலத்தான் வணங்காமண்ணை நக்கல் பண்ணுவதாக நினைத்து எங்களுக்கு கோவம் வந்திச்சு?!

நக்கலுக்க நக்கல் சரியாபோச்சு... இந்த நக்கல் சரி எண்டா அந்த நக்கல் பிழை..அந்த நக்கல் சரி எண்டா இந்த நக்கல் பிழை.. அந்த நக்கலில் கவலை இருந்திச்சா அப்படி எண்டா இந்த நக்கலில் மகிழ்ச்சி இருக்கு.. இது கட்டுரையாளரை நக்கல் பண்ணும் கேவலமான நக்கல் இல்லை.. எப்படியாவது கப்பல் அங்க போகப்போகுது என்ற நக்கல். எப்பவும் நக்கலை இனம் பிரித்து பார்க்க வேணும்.. வன்மமான நக்கல், வன்மம் இல்லாத நக்கல் என்று.. இதில நாங்கள் மேல பண்ணியிருப்பது இரண்டாவது வகை.. இது கட்டுரை எழுதியவரை வன்மமாக நக்கல் பண்ணும் நக்கல் இல்லை.. பொதுவான நக்கல்.

இப்ப நான் எழுதினதை நக்கல் எண்டு மட்டும் நினைச்சுபோடாதீங்கோ சிவாஜினி. யாழுக்க ஒண்டுமண்டா பழகிறம் இதில நக்கல் பண்ணி என்னத்தை சாதிக்கபோறம்.

அப்போ தமிழ் மக்களோடை நலனை ராஜபக்சாவிற்கும் இந்தியாவிற்கும் மட்டுமே அக்கற இருகின்னுறதை ஒத்துக்கொள்ளுறீங்களா??

சரி இனி மிச்சத்தை கப்பல் இலங்கைக்கு போன பிறகு கதைப்பம் என்கிறீங்கள் ஓகே.. (பேரீச்சம்பழம் போச்சே :huh: )

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சிவாஜினி;....

கட்டுரையாளரை நக்கல் பண்ணுவதாக நினைத்து உங்களுக்கு எப்படி கோவம் வருதோ....

அதேபோலத்தான் வணங்காமண்ணை நக்கல் பண்ணுவதாக நினைத்து எங்களுக்கு கோவம் வந்திச்சு?!

நக்கலுக்க நக்கல் சரியாபோச்சு... இந்த நக்கல் சரி எண்டா அந்த நக்கல் பிழை..அந்த நக்கல் சரி எண்டா இந்த நக்கல் பிழை.. அந்த நக்கலில் கவலை இருந்திச்சா அப்படி எண்டா இந்த நக்கலில் மகிழ்ச்சி இருக்கு.. இது கட்டுரையாளரை நக்கல் பண்ணும் கேவலமான நக்கல் இல்லை.. எப்படியாவது கப்பல் அங்க போகப்போகுது என்ற நக்கல். எப்பவும் நக்கலை இனம் பிரித்து பார்க்க வேணும்.. வன்மமான நக்கல், வன்மம் இல்லாத நக்கல் என்று.. இதில நாங்கள் மேல பண்ணியிருப்பது இரண்டாவது வகை.. இது கட்டுரை எழுதியவரை வன்மமாக நக்கல் பண்ணும் நக்கல் இல்லை.. பொதுவான நக்கல்.

இப்ப நான் எழுதினதை நக்கல் எண்டு மட்டும் நினைச்சுபோடாதீங்கோ சிவாஜினி. யாழுக்க ஒண்டுமண்டா பழகிறம் இதில நக்கல் பண்ணி என்னத்தை சாதிக்கபோறம்.

சரி இனி மிச்சத்தை கப்பல் இலங்கைக்கு போன பிறகு கதைப்பம் என்கிறீங்கள் ஓகே.. (பேரீச்சம்பழம் போச்சே :unsure: )

வசி.. நல்லாவே நக்கிறீங்கள்..! :huh:

Edited by Danguvaar

அன்பின் சிவாஜினி;....

கட்டுரையாளரை நக்கல் பண்ணுவதாக நினைத்து உங்களுக்கு எப்படி கோவம் வருதோ....

அதேபோலத்தான் வணங்காமண்ணை நக்கல் பண்ணுவதாக நினைத்து எங்களுக்கு கோவம் வந்திச்சு?!

நக்கலுக்க நக்கல் சரியாபோச்சு... இந்த நக்கல் சரி எண்டா அந்த நக்கல் பிழை..அந்த நக்கல் சரி எண்டா இந்த நக்கல் பிழை.. அந்த நக்கலில் கவலை இருந்திச்சா அப்படி எண்டா இந்த நக்கலில் மகிழ்ச்சி இருக்கு.. இது கட்டுரையாளரை நக்கல் பண்ணும் கேவலமான நக்கல் இல்லை.. எப்படியாவது கப்பல் அங்க போகப்போகுது என்ற நக்கல். எப்பவும் நக்கலை இனம் பிரித்து பார்க்க வேணும்.. வன்மமான நக்கல், வன்மம் இல்லாத நக்கல் என்று.. இதில நாங்கள் மேல பண்ணியிருப்பது இரண்டாவது வகை.. இது கட்டுரை எழுதியவரை வன்மமாக நக்கல் பண்ணும் நக்கல் இல்லை.. பொதுவான நக்கல்.

இப்ப நான் எழுதினதை நக்கல் எண்டு மட்டும் நினைச்சுபோடாதீங்கோ சிவாஜினி. யாழுக்க ஒண்டுமண்டா பழகிறம் இதில நக்கல் பண்ணி என்னத்தை சாதிக்கபோறம்.

இதை விட 'விசு' அவர்களின் 'பைத்தியத்திற்கு வைத்தியம்...' தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றன்

வசி.. நல்லாவே நக்கிறீங்கள்..! :huh:

காக்கைக்கு எப்பவுமே 'ஏதோ' தின்ற நினைப்புதான் இருக்கும் என்பது போல டங்குக்கு எப்பவும் இப்படியான எண்ணங்கள் தான் (யார் சொல்றது உத..)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் சிவாஜினி;....

கட்டுரையாளரை நக்கல் பண்ணுவதாக நினைத்து உங்களுக்கு எப்படி கோவம் வருதோ....

அதேபோலத்தான் வணங்காமண்ணை நக்கல் பண்ணுவதாக நினைத்து எங்களுக்கு கோவம் வந்திச்சு?!

நக்கலுக்க நக்கல் சரியாபோச்சு... இந்த நக்கல் சரி எண்டா அந்த நக்கல் பிழை..அந்த நக்கல் சரி எண்டா இந்த நக்கல் பிழை.. அந்த நக்கலில் கவலை இருந்திச்சா அப்படி எண்டா இந்த நக்கலில் மகிழ்ச்சி இருக்கு.. இது கட்டுரையாளரை நக்கல் பண்ணும் கேவலமான நக்கல் இல்லை.. எப்படியாவது கப்பல் அங்க போகப்போகுது என்ற நக்கல். எப்பவும் நக்கலை இனம் பிரித்து பார்க்க வேணும்.. வன்மமான நக்கல், வன்மம் இல்லாத நக்கல் என்று.. இதில நாங்கள் மேல பண்ணியிருப்பது இரண்டாவது வகை.. இது கட்டுரை எழுதியவரை வன்மமாக நக்கல் பண்ணும் நக்கல் இல்லை.. பொதுவான நக்கல்.

இப்ப நான் எழுதினதை நக்கல் எண்டு மட்டும் நினைச்சுபோடாதீங்கோ சிவாஜினி. யாழுக்க ஒண்டுமண்டா பழகிறம் இதில நக்கல் பண்ணி என்னத்தை சாதிக்கபோறம்.

நல்லாத்தான் நக்கிறீங்க..பாத்துங்க சுதா..கரிச்சு நக்குங்க..நாக்கு பத்திரம்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. மூலம் கையேற்க இலங்கை இணக்கம்- இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் முடிவு

வீரகேசரி நாளேடு 6/25/2009 9:16:47 AM -

தற்போது சென்னையில் தரித்துள்ள வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்துச்செல்லப்படும் என இன்று டில்லியில் இலங்கை இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியால் 884 மெற்றிக்தொன் எடை கொண்ட உணவுப்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுடன் கொழும்பு நோக்கி வந்த மேற்படி கப்பல் திருப்பியனுப்பப்பட்டது.

பின்னர் இக்கப்பல் சென்னை கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இக்கடிதத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்துசென்று, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்துக் கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இந்திய கடற்படை அதிகாரிகள், வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்திருந்தனர். இதன் காரணமாக, துறைமுக அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் தூரம் நகர்த்தி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு, பணியாளர் சிலருக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. உடனடியாக சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனம் குடிதண்ணீர் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நேற்று டில்லி வந்த இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் கப்பல் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இலங்கை அதிகாரிகள் குழு சம்மதம் தெரிவித்ததாக தெரியவருகிறது.

இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சென்னையிலோ அல்லது தூத்துக்குடித் துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும். இதேவேளை, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் நிவாரணக் கப்பலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுமதிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியா சொல்லி சிறிலங்கா செய்யிற முதல் காரியம் இதுதான் என்று நினைக்கிறன்.

முதலே மரியாதையாக செஞ்சிலுவை முலம் தமிழனுக்கு கொடுத்துஇருக்கலாமே.

சிறிலங்காவின் இறையான்மை க்கு வந்த முதலாவது எச்சரிக்கை,தொடரட்டும் இன்னும் பல .

கப்பலை பிராந்தியத்தை விட்டு அப்புறப்படுத்தினால் போதும் என்ற நிலையில் எடுத்த முடிவு. இதிலுள்ள பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம்தான் பொறுப்பேற்க இருக்கிறது. அதை சிறீலங்காவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்த்து விட்டே அடுத்த முடிவை எடுக்கும்?

சிறீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்த்து , கதைச்சு , அனுமதி வாங்கி , ஓகே ஆகிறதுக்குள்ள நாள்பட்ட பொருட்கள் என்று ..........................?

இந்த வருட பத்தாம் மாதத்துக்கு மேற்பட்ட பொருட்களைத்தான் பாக்பண்ணினனாங்கள், இன்னமும் காலம் இருகிறது அதற்குள் மக்களுக்கு போய் சேர்ந்தால் சந்தோசம், கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம் பழத்திற்கு கப்பல் போகுதின்னு கட்டுரையை படித்திட்டு உண்மையிலேயே எங்களோடை மக்களிற்கு அந்த உதவிகிடைக்கலையேங்கிற அக்கறையிலைதான் கட்டுரையாளரை அங்கை திட்டினீங்களாக்கும் என்னு நினைச்சன்.. ஆனால் ராஜபக்ச சகோதர்களிண்டை அறிக்கையையும் இந்தியாவோடை அறிக்கையையும் அப்பிடியே நம்பி இங்கை மீண்டும் கட்டுரை எழுதினவரை நக்கல் பண்ணிறதை பார்த்தால் அவங்களிற்கும் உங்களிற்கும் பெரிய வித்தியாசமே இல்லையே...அப்போ தமிழ் மக்களோடை நலனை ராஜபக்சாவிற்கும் இந்தியாவிற்கும் மட்டுமே அக்கற இருகின்னுறதை ஒத்துக்கொள்ளுறீங்களா??

உங்கள் தமிழ் விளக்கத்தில் ஏதோ தவறு இருப்பதாக எனக்க படுகின்றது. இல்லை எனது எழுத்தில் தவறு இருப்பதாக நினைத்தால் தவறை சுட்டி காட்டவும் திருந்த வாய்பாக இருக்கும். தவிர நேர்த்தியான கருத்தாடல்களைதான் விரும்புகிறேன். குதர்க்ககம் பேசுவதும் எழுத தெரிவதால் முன்விளைவு பின்விளைவு தெரியாது கட்டுரை வடிப்பதும் உரிய நேரத்தில் சுட்டிகாட்டபட்டுள்தே தவிர நக்கல் பண்ணும் நிலையில் நானில்லை.

கப்பலுக்கு "வணங்காமண்: என்று பெயரிட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணத்திலாவது நாம் வென்றாக வேண்டும். அதுவே நன்மை விரும்பிகளின் கருத்தாக இருக்கும்.

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.