Jump to content

கடுப்பேத்தும் செயல்கள்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியைப் படிச்சதில என்ன கடுப்பு வாறதெண்டே மற‌ந்து போச்சுது..! :D

அது தான் ..... அந்த தலைப்பின் வெற்றி . டங்குவார் . :lol:

உண்மையில் இந்த தலைப்பிட்ட குட்டிக்கு தாங்ஸ் சொல்ல வேணும் . :lol:

ஏற்கனவே ஆரையும் காய்ச்சி கடுப்பு ஏத்தவேணும் எண்டு பாத்துக் கொண்டிருந்தனான் . :lol:

அதுக்குள்ளை நெடுக்காலை போவான் பூந்து ........ ஔவையாரின் பாடல்களை தந்தது நன்றாக இருந்தது .

அந்த பாடல் வரிகளை மீண்டும் எல்லோரும் படித்தால் நல்லது .

------

------

அரியது கேட்கின் வரிவடிவேலோய்

அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்

கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான் செய்தலரிது

தானமும் தவமும் தான் செய்ததாயின்

வானவர் நாடு வழி திறந்திடுமே

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்

அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால்

இன்புற உண்பது தானே

பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு

நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்

கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்

குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண்

புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்

இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது

உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது

தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது

முதலில் முடிவது முடிவில் முதலது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது .

(ஒளவை)

இந்த அருமையான பாடல் கே . பி . சுந்தராம்பாளின் குரலில் கேட்க இனிமையாக இருக்கும் யாரிடமாவது இருந்தால் இணைத்து விடுங்களேன் .

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

அது தான் ..... அந்த தலைப்பின் வெற்றி . டங்குவார் . ^_^

உண்மையில் இந்த தலைப்பிட்ட குட்டிக்கு தாங்ஸ் சொல்ல வேணும் . :)

ஏற்கனவே ஆரையும் காய்ச்சி கடுப்பு ஏத்தவேணும் எண்டு பாத்துக் கொண்டிருந்தனான் . :lol:

அதுக்குள்ளை நெடுக்காலை போவான் பூந்து ........ ஔவையாரின் பாடல்களை தந்தது நன்றாக இருந்தது .

அந்த பாடல் வரிகளை மீண்டும் எல்லோரும் படித்தால் நல்லது .

:lol: :lol: நல்ல காலம் நான் எஸ்கேப்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவருடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் எதிர்பது அல்லது தங்களுடைய வேலையை மட்டும் பார்ப்து மற்றவரைப்பற்றி அக்கறைப்படுவதில்லை இது உறவுகளாலேயே ஏற்படுவதுதான் வேதனையானது இந்த உலகத்தில் மனிதனை விட ஏன் உறவுகளை விட பணத்தைதான் மதிக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாருங்கோ.... ஆளாளுக்கு கடுப்பேறி காய்ச்சி கொண்டு இருக்கினம்!!! :lol::)

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry529912

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry529912

"பாம்பு எங்கே ...... ?

சூரிய கிரகணத்தின் போது ராகு காலம் வரும் .

அதே நேரம் சந்திரகிரகணும் வந்தால் மகா ஆபத்து .

ஒரு பாம்பால் சந்திரனையோ .... சூரியனையோ ஒரு முறை தான் விழுங்க முடியும் .

இரண்டையும் ஒன்றாக விழுங்கினால் பாம்புக்கு .... தொண்டையில் விக்கி .... விக்கல் வந்து விடும்..."

:lol::)

சிறி அண்ணா, யார் சொல்லி தந்தது உங்களுக்கு இப்படி எல்லாம் ஜோசிக்க?!! :D

சரி இண்டைக்கு நான் செய்த நல்ல வேலை - உந்த திரிக்கு சிறி அண்ணாவை பிடிச்சு அனுப்பி விட்டது தான்..... இப்ப தான் அது களைகட்டி இருக்கு!! :lol:

அங்க உள்ள நாலு பேரை கடுபேத்தியாச்சு....நான் போய் நிம்மதியா நித்திரை கொள்ளலாம்!!! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரெண்டு நாட்களுக்கு முன்னால நடந்தது...

உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கம் பற்றி இங்கு தமிழ்தொலைக்காட்சியில் ஒரு நேரடி கலந்தாய்வு நிகழ்வு போனது. சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்திச்சினம்.

அப்ப தொலைபேசி அழைப்பில் ஒருத்தர் வந்தார். ஏதோ உருப்படியா நாடுகடந்த அரசைப் பற்றி சொல்லப்போறாராக்கும் எண்டு பார்த்தால் ஆள் சொன்னார், "இங்க பாருங்கோ, மன்னாரில ஆமியை உள்ள விட்டால் அவன் பொக்கணையில வந்து நிப்பான் எண்டு எங்களுக்குத் தெரியும். இதை நாங்கள் ஏற்கனவே இம்ரான் பாண்டியன் ஆக்களுக்கு சொல்லிப்போட்டம்..! "

நிகழ்ச்சியை நடத்துபவர், இதை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்ளலாம் எண்டு மரியாதையாக கட் பண்ணி விட்டார்..!

அலசும் பொருளுக்கு சம்பந்தமில்லாமல் பலர் தொலைபேசியில் கதைப்பது வழக்கமதான். அதுக்காக இப்பிடியா? :unsure:

Link to comment
Share on other sites

டங்கு, பொதுவா டிவி, ரேடியோவில் தொலைபேசி மூலம் கலந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சியால் வைச்சாலே இது தான் பிரச்சனை... எப்படியாவது மணிக்கனக்ககக் காத்திருந்து வந்து தலைப்பை கருத்தில் வைத்து பிரயோசனமாகக் கதைப்பவர்கள் மிக மிக குறைவு...

ஐ.பி.சி.யிலும் அடிக்கடி இப்படி நடக்கும்... அண்மையில் ஒரு அரசியல் கண்ணோட்டம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்து தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாததுகளைக் கதைக்கத் தொடங்கியதும், நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் தொலைபேசி அழைப்பைக் துண்டித்து விட்டார்... மீண்டும் ஒரு நிமிடத்துக்குள் அவர் திரும்ப வானலையில் வந்தார்... எங்கு விடாரோ, அதே இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க தொகுப்பாளர் மீண்டும் துண்டிக்கப் பட்டது... அந்த ஆளும் விடுறதா இல்லை.. ஆக மொத்தம் மூன்று தரம் துண்டித்தும், திரும்ப வந்து ஹலோ நான் தான் என்றார்... கேட்டுக் கொண்டு இருந்த எனக்குக் கடுப்பாகி கணணியின் wire-ஐ நான் துண்டித்தது தான் ஞாபகம் வந்தது...

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

.

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்களை கண்டால்.... கடுப்பு வரும்.

ஸ்ரீ லங்காவில் பிரச்சினை தீர்ந்து விட்டது தானே..... என்று கேட்கும் வெள்ளைக்காரனை கண்டால் கடுப்பு வரும்.

சஸ் பென்ரர் தெரிய..... திரியும், தமிழ் பெடியளை கண்டால் கடுப்பு வரும்.

சில.... பெண்கள் அளவுக்கு அதிகமான லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு திரிவதை பார்த்தாலும் கடுப்பு வரும்.

.

Link to comment
Share on other sites

சில பேர் ஆட்களுக்கு மிக அண்மையில் வந்து கதைப்பினம்.இதில் வாய்மணம் வேறு. துப்பலும் ஆங்காங்கே பறக்கும்.வாழ்க்கை வெறுக்கும். :lol::lol:

doc.gif

Link to comment
Share on other sites

.

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்களை கண்டால்.... கடுப்பு வரும்..

எதுக்கும் சொல்லி வைப்பம் ... பார்கிறதுக்கு என் பெயர் பெண் பெயர் போன்று இருந்தாலும், அதன் அர்த்தம் வேறு (நிழலி = நிழல் + இல்லாதவன் )... பிறகு லண்டன் நான் வரும்போது கடுப்பில இருட்டடி தாரதில்லை...இப்பவே தெளிவகிக்கி விட்டேன் :lol:

Link to comment
Share on other sites

.

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்களை கண்டால்.... கடுப்பு வரும்.

ஸ்ரீ லங்காவில் பிரச்சினை தீர்ந்து விட்டது தானே..... என்று கேட்கும் வெள்ளைக்காரனை கண்டால் கடுப்பு வரும்.

சஸ் பென்ரர் தெரிய..... திரியும், தமிழ் பெடியளை கண்டால் கடுப்பு வரும்.

சில.... பெண்கள் அளவுக்கு அதிகமான லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு திரிவதை பார்த்தாலும் கடுப்பு வரும்.

.

சிறிலங்கா என்று சொன்னதும், nice food I want to go there என்று சொல்லும் பண்டாரன்களைப் பார்க்க கடுப்பு பத்திக் கொண்டு வரும். தின்னத்தானே போறாய்? எங்கட ஊர் சாப்பாடு இங்கயும் தான் இருக்கு, உன்னை நல்ல ஒரு restaurant க்குக் கூட்டிக் கொண்டு போறான், அங்க போனால் ஒரு துன்ன்டாய் நீ திரும்பி வர மாட்டாய், அது உனக்கு ஓகே எண்டால் வடிவா போ என்று தான் நான் சொல்லுறது.

சில பேர் ஆட்களுக்கு மிக அண்மையில் வந்து கதைப்பினம்.இதில் வாய்மணம் வேறு. துப்பலும் ஆங்காங்கே பறக்கும்.வாழ்க்கை வெறுக்கும். :lol::lol:

doc.gif

ஹிஹீஹி.... கொழும்பில ஒரு டாக்குத்தர் இருந்தவர்.... அவர் கதைச்சால் தூவானம் அடிச்சது மாதிரி இருக்கும்... அவருக்கு நாங்கள் வைச்ச பெயர் dr .சாரல் :(:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

1. குடி போதையில் என்னோடு யாரும் பழகுவது எனக்குப் பிடிப்பதில்லை.

2. புகைப்பிடித்துக் கொண்டு எமக்கு அசெளகரியம் தருபவர்களைப் பிடிப்பதில்லை.

3. பொது இடங்களில்.. போக்குவரத்து ஊடகங்களில்... நிகழ்வுகளில்.. எங்கென்றாலும்.. ஆக்களோடு உரசிக்கொண்டு.. முட்டிக் கொண்டு நிற்பது எனக்குப் பிடிக்காது.

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

5. அன்பைக் காட்டவே தெரியாமல் நட்பென்றால் என்னென்றே உணராமல்.. அன்பாய் நட்பாய் இருக்கிறன் என்று சொல்பவர்கள் மிகக் கடுப்படிப்பவர்களாக இருக்கின்றனர்.

6. புழுகர்கள் கடுப்பின் உச்சியில் இருப்பார்கள்.

7. அளவுக்கு அதிகமாக நேரிலோ.. தொலைபேசியிலோ கதைப்பர்வகளைக் கண்டாலும் கடுப்புத்தான்.

8. மீன்.. முட்டை.. இறைச்சி வாசனைகளோடு துப்பரவு செய்யாத பாத்திரங்களில் உணவு அல்லது நீர் பரிமாறுவதும் எனக்குக் கடுப்படிக்கும் விடயம்.

9. குளிக்காமல்.. வாழும் இடத்தை துப்பரவு பண்ணாமல் இருப்பவர்கள் மிகவும் கடுப்படிப்பவர்களாவர்.

10. வீட்டிற்குள் வெளியில் போட்டுக் கொண்டு போன சப்பாத்து அல்லது செருப்போடு வருபவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

11. அதிக நகை அல்லது அதிக செயற்கை அலங்காரம் போடுபவர்களை கண்ணில் காட்டக் கூடாது.

12. மூக்கை அரிக்கும் வாசனை திரவியங்களை பாவித்துவிட்டு அருகில் உட்கார்பவர்களை பிடிக்காது.

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

14. பேரூந்தில்.. தொடரூந்தில்.. சீற்றுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் குரங்குகளை பிடிக்காது.

15. சிக்னலை மதிக்காது ரோட்டை கடந்து சாரதிகளுக்கு இடைஞ்சல் பண்ணுபவர்களையும் பிடிக்காது அதேபோல் நடைபாதையில் செல்பவர்களை மதிக்காத சாரதிகளும் கடுப்பேத்துபவர்களாக இருக்கின்றனர்.

16. கெட்ட வார்த்தைகள் மற்றும்.. ஒருமையில் விளித்து.. அல்லது பாவித்து கதைப்பவர்களோடு கதைக்கவே விருப்பம் வராது.

17. அருகில் இருந்து கொண்டு கத்தி கதைப்பவர்கள் விரைவாக கடுப்பேத்துபவர்களாக இருப்பர். இவர்கள் மட்டுமன்றி தொலைபேசியில் எம்மை கதைக்க விடாமல் தாங்கள் மட்டும் சொல்வதை கேட்க வேண்டும் என்று அளந்து கொண்டிருப்பவர்களும் கடுப்படிப்பவர்களாவர்.

18. கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

19. றோட்டில் போகும் போது கட்டிப்பிடிச்சு கொஞ்சிக் கொண்டு போகும் மந்திகளையும் பிடிப்பதில்லை. கைகோர்த்துக் கொண்டு பின்னால் முன்னால் வருபவர்கள் பற்றிக் கவலை இன்றி அலையும் ஜந்துகளையும் பிடிப்பதில்லை.

20. அதிக ஓசையில் பாடல் கேட்பவர்களையும் பிடிப்பதில்லை.

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :lol:

Link to comment
Share on other sites

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

...

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

ஆக உங்களுக்கு எங்கட சனத்தைக் கண்டால் பிடிக்காது என்று சொல்லுங்கோ...

...

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

மனுசர் நிக்கவே இடமில்லாமல் வேர்வை வெக்கையில மூச்சடக்கிக் கொண்டு தொடரூந்தில வாறது. அந்த நேரம் சில விவஸ்தை இல்லாத சனம் இந்த வேலை செய்யேக்க நேரம் அடுத்த ஸ்டேசனில கதவு திறக்கேக நேரம் பேப்பரை பறிச்சு வெளிய எறியவேனும் போல தான் மனம் வரும்...

...

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :lol:

நான் முதலில் பேசாமல் தான் விலத்தி போவன், திரும்பவும் அதே மாதிரி செய்தால் நேரடியாக சொல்லிவிடுவான். சிலதுகளை சொல்லித்தான் திருத்தலாம், சிலதுகள் சொன்னாலும் திருந்தாதுகள்... அவர்களைக் கைகளுவிடுவன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

1. குடி போதையில் என்னோடு யாரும் பழகுவது எனக்குப் பிடிப்பதில்லை.

2. புகைப்பிடித்துக் கொண்டு எமக்கு அசெளகரியம் தருபவர்களைப் பிடிப்பதில்லை.

3. பொது இடங்களில்.. போக்குவரத்து ஊடகங்களில்... நிகழ்வுகளில்.. எங்கென்றாலும்.. ஆக்களோடு உரசிக்கொண்டு.. முட்டிக் கொண்டு நிற்பது எனக்குப் பிடிக்காது.

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

5. அன்பைக் காட்டவே தெரியாமல் நட்பென்றால் என்னென்றே உணராமல்.. அன்பாய் நட்பாய் இருக்கிறன் என்று சொல்பவர்கள் மிகக் கடுப்படிப்பவர்களாக இருக்கின்றனர்.

6. புழுகர்கள் கடுப்பின் உச்சியில் இருப்பார்கள்.

7. அளவுக்கு அதிகமாக நேரிலோ.. தொலைபேசியிலோ கதைப்பர்வகளைக் கண்டாலும் கடுப்புத்தான்.

8. மீன்.. முட்டை.. இறைச்சி வாசனைகளோடு துப்பரவு செய்யாத பாத்திரங்களில் உணவு அல்லது நீர் பரிமாறுவதும் எனக்குக் கடுப்படிக்கும் விடயம்.

9. குளிக்காமல்.. வாழும் இடத்தை துப்பரவு பண்ணாமல் இருப்பவர்கள் மிகவும் கடுப்படிப்பவர்களாவர்.

10. வீட்டிற்குள் வெளியில் போட்டுக் கொண்டு போன சப்பாத்து அல்லது செருப்போடு வருபவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

11. அதிக நகை அல்லது அதிக செயற்கை அலங்காரம் போடுபவர்களை கண்ணில் காட்டக் கூடாது.

12. மூக்கை அரிக்கும் வாசனை திரவியங்களை பாவித்துவிட்டு அருகில் உட்கார்பவர்களை பிடிக்காது.

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

14. பேரூந்தில்.. தொடரூந்தில்.. சீற்றுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் குரங்குகளை பிடிக்காது.

15. சிக்னலை மதிக்காது ரோட்டை கடந்து சாரதிகளுக்கு இடைஞ்சல் பண்ணுபவர்களையும் பிடிக்காது அதேபோல் நடைபாதையில் செல்பவர்களை மதிக்காத சாரதிகளும் கடுப்பேத்துபவர்களாக இருக்கின்றனர்.

16. கெட்ட வார்த்தைகள் மற்றும்.. ஒருமையில் விளித்து.. அல்லது பாவித்து கதைப்பவர்களோடு கதைக்கவே விருப்பம் வராது.

17. அருகில் இருந்து கொண்டு கத்தி கதைப்பவர்கள் விரைவாக கடுப்பேத்துபவர்களாக இருப்பர். இவர்கள் மட்டுமன்றி தொலைபேசியில் எம்மை கதைக்க விடாமல் தாங்கள் மட்டும் சொல்வதை கேட்க வேண்டும் என்று அளந்து கொண்டிருப்பவர்களும் கடுப்படிப்பவர்களாவர்.

18. கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

19. றோட்டில் போகும் போது கட்டிப்பிடிச்சு கொஞ்சிக் கொண்டு போகும் மந்திகளையும் பிடிப்பதில்லை. கைகோர்த்துக் கொண்டு பின்னால் முன்னால் வருபவர்கள் பற்றிக் கவலை இன்றி அலையும் ஜந்துகளையும் பிடிப்பதில்லை.

20. அதிக ஓசையில் பாடல் கேட்பவர்களையும் பிடிப்பதில்லை.

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :lol:

சிங்கன் சந்நியாசி ஆகுவதற்குரிய தகுதியும் முதுமையும் ஆற்றலும் பெற்றுவிட்டான். :lol:

Link to comment
Share on other sites

1. முகத்திற்கு முன் சிரித்து கதைத்து விட்டு புறம் கூறுதல்.

2. வேண்டும் என்றே ஆண்கள் பார்ப்பதற்காக குட்டை பாவாடை அணிந்து விட்டு அது மேலே வர வர அதை கீழே இழுத்து விடும் காரிகைகள்.(குறிப்பாக பதின்ம வயதினரிடம் இப்பழக்கம் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.)

3. தற்போது புலம்பெயர் தமிழர்களிடம் தோன்றி உள்ள பகிரங்கக்கடிதம் எழுதும் பழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன்

அச்சா பி்ள்ளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் சந்நியாசி ஆகுவதற்குரிய தகுதியும் முதுமையும் ஆற்றலும் பெற்றுவிட்டான். :lol:

நான் எனக்கு அறிவு வந்த நாளில் இருந்து இப்படித்தான். அப்ப நான் சின்னனில் இருந்தே சந்நியாசியா...?! விசுவாமத்திரரின் மறுபிறப்போ.. மோனகை யை தான் காணக் கிடைக்கேல்ல... எங்கே..! ??! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்பேத்தும் செயல்களில் முக்கியமானவை அல்லது முக்கியமானவர்கள் என்று சொன்னால்..

1. குடி போதையில் என்னோடு யாரும் பழகுவது எனக்குப் பிடிப்பதில்லை.

2. புகைப்பிடித்துக் கொண்டு எமக்கு அசெளகரியம் தருபவர்களைப் பிடிப்பதில்லை.

3. பொது இடங்களில்.. போக்குவரத்து ஊடகங்களில்... நிகழ்வுகளில்.. எங்கென்றாலும்.. ஆக்களோடு உரசிக்கொண்டு.. முட்டிக் கொண்டு நிற்பது எனக்குப் பிடிக்காது.

4. உள்ளொன்று வைச்சுக் கொண்டு வெளிப்படைக்கு நல்லவர்களாக நடிப்பவர்களைக் கண்டு பிடிச்சன்.. வாழ்க்கையில் அவர்களை எனக்குப் பிடிக்காது.

5. அன்பைக் காட்டவே தெரியாமல் நட்பென்றால் என்னென்றே உணராமல்.. அன்பாய் நட்பாய் இருக்கிறன் என்று சொல்பவர்கள் மிகக் கடுப்படிப்பவர்களாக இருக்கின்றனர்.

6. புழுகர்கள் கடுப்பின் உச்சியில் இருப்பார்கள்.

7. அளவுக்கு அதிகமாக நேரிலோ.. தொலைபேசியிலோ கதைப்பர்வகளைக் கண்டாலும் கடுப்புத்தான்.

8. மீன்.. முட்டை.. இறைச்சி வாசனைகளோடு துப்பரவு செய்யாத பாத்திரங்களில் உணவு அல்லது நீர் பரிமாறுவதும் எனக்குக் கடுப்படிக்கும் விடயம்.

9. குளிக்காமல்.. வாழும் இடத்தை துப்பரவு பண்ணாமல் இருப்பவர்கள் மிகவும் கடுப்படிப்பவர்களாவர்.

10. வீட்டிற்குள் வெளியில் போட்டுக் கொண்டு போன சப்பாத்து அல்லது செருப்போடு வருபவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

11. அதிக நகை அல்லது அதிக செயற்கை அலங்காரம் போடுபவர்களை கண்ணில் காட்டக் கூடாது.

12. மூக்கை அரிக்கும் வாசனை திரவியங்களை பாவித்துவிட்டு அருகில் உட்கார்பவர்களை பிடிக்காது.

13. அருகில் இருந்து கொண்டு பத்திரிகை படிக்கும் போது பத்திரிகை தாள்களை எங்கள் மூஞ்சியில் பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களை பிடிக்காது.

14. பேரூந்தில்.. தொடரூந்தில்.. சீற்றுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் குரங்குகளை பிடிக்காது.

15. சிக்னலை மதிக்காது ரோட்டை கடந்து சாரதிகளுக்கு இடைஞ்சல் பண்ணுபவர்களையும் பிடிக்காது அதேபோல் நடைபாதையில் செல்பவர்களை மதிக்காத சாரதிகளும் கடுப்பேத்துபவர்களாக இருக்கின்றனர்.

16. கெட்ட வார்த்தைகள் மற்றும்.. ஒருமையில் விளித்து.. அல்லது பாவித்து கதைப்பவர்களோடு கதைக்கவே விருப்பம் வராது.

17. அருகில் இருந்து கொண்டு கத்தி கதைப்பவர்கள் விரைவாக கடுப்பேத்துபவர்களாக இருப்பர். இவர்கள் மட்டுமன்றி தொலைபேசியில் எம்மை கதைக்க விடாமல் தாங்கள் மட்டும் சொல்வதை கேட்க வேண்டும் என்று அளந்து கொண்டிருப்பவர்களும் கடுப்படிப்பவர்களாவர்.

18. கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களும் கடுப்புக்குரியவர்கள்.

19. றோட்டில் போகும் போது கட்டிப்பிடிச்சு கொஞ்சிக் கொண்டு போகும் மந்திகளையும் பிடிப்பதில்லை. கைகோர்த்துக் கொண்டு பின்னால் முன்னால் வருபவர்கள் பற்றிக் கவலை இன்றி அலையும் ஜந்துகளையும் பிடிப்பதில்லை.

20. அதிக ஓசையில் பாடல் கேட்பவர்களையும் பிடிப்பதில்லை.

இந்த 20 வகையினரும் முதன்மையாக கடுப்படிப்பவர்கள். இன்னும் இருக்கிறார்கள். என்ன தான் கடுப்படிச்சாலும் நானா விலகி நடந்துக்குவனே அன்றி வாயால் கதைக்கமாட்டன். :lol:

இப்படியானவர்களைக் கண்டால் கடுப்பேறும் :lol: கட்டுப்பாடற்ற சுதந்திர உலகத்தில் இருந்துகொண்டு கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதிக்கக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களைக் கண்டால் கடுப்பேறும் :lol: கட்டுப்பாடற்ற சுதந்திர உலகத்தில் இருந்துகொண்டு கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதிக்கக்கூடாது :lol:

தவறு கட்டுப்பாடில்லா சுதந்திர உலகம் என்ற கருத்தியலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் விரும்பிய ஓர் இடத்திற்கு செல்ல எத்தனையோ மனித இயற்றுகை சட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.. இயற்கையின் தடைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சிட்டுக்குருவி போல் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரம் வேண்டும் என்று. ஆனால் அந்தச் சிட்டுக் குருவிக்கும் பருந்து போல் பறக்க ஆசை ஆனால் அதற்கு அது முடியாது. ஏனெனில் இயற்கை விதித்த கட்டுப்பாடு அங்குண்டு.

எனக்கும் நிலவிற்குப் போய் இளைப்பாற ஆசை.. முடியுமா...??! ஏன் எனக்கும் தமிழீழம் தரப்பட வேண்டும் என்று ஆசை. தருவார்களா..??!

இதற்குள் எங்கு சுதந்திர உலகம் என்றது இருக்குது. எங்கும் எதிலும் மனித இயற்றுகை சட்டங்கள் எம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது.. நாமே நமக்கு சில கட்டுப்பாடுகளை போட்டுக் கொள்வது அடுத்தவர்களால் எமக்கும் எம்மால் அடுத்தவர்களுக்கும் அசெளகரியம் ஏற்படாமல் இருக்கவும் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை பயமின்றி அனுபவிக்கவும் வகை செய்யும் என்பது எனது நிலைப்பாடு.

முன்னரெல்லாம் பஸ்களில் பெரிதாக பயணிகள் இசை இசைக்க அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது நான் வெறுத்திருக்கிறேன். சட்டம் வெறுக்கவில்லை. இப்போ சட்டமும் தண்டம் போடுகிறது. இது ஒரு உதாரணம்.. சட்டம் போட்டு தடுத்தாலும்.. அதை தட்டிக்கேட்க மாட்டாங்க.. தனி மனிதன் தனது செளகரியம் வேண்டி தனக்கு தானே போடும் சட்டங்களை மட்டும் அடக்குமுறை என்று சொல்லி கத்துவாங்க..! ஏன் இப்படி மனிதர்கள் மந்தைகளாகவே இருக்க விரும்புகின்றனர்.. அடுத்தவனின் கீழ் அடிபணியத் தயாராக இருப்பவர்கள்.. தனக்குத்தானே அடிபணிவதில்.. அவமானம் காண்பது கேலித்தனமாக அல்லவா இருக்கிறது.

எனக்கு அனுமதிக்கப்பட்ட சுதந்திரத்துள் மற்றவர்கள் தலையீடு செய்யா வகைக்கு என்னை நானே வழிநடத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அது எனது பாதையில் நான் சுதந்திரமாக தடையின்றி செல்ல வழி கோலும் என்பது எனது நோக்கம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கத்தில மனைவிமாரை வைத்துக் கொண்டு மற்ற பெண்களை ஜொல்லு விடும் ஆண்களை கண்டால் கடுப்பு வரும்.

கோயில்களுக்கு போனால் பின்னுக்கு போய் நிண்டு கொண்டு வம்பு அளப்பவர்களை கண்டால் கடுப்பு வரும்.

அதே நேரத்தில் சாப்பாட்டுக்கு மட்டும் முன்னுக்கு வந்து நிண்டு கொண்டு அல்லது இடையில் புதுந்து இடித்து தள்பவர்களை கண்டால் கடுப்பு வரும்...இங்கே பிறந்த பிள்ளைகள் செய்யும் போது என்னும் கடுப்பு கூடும் :lol:

Link to comment
Share on other sites

...

கோயில்களுக்கு போனால் பின்னுக்கு போய் நிண்டு கொண்டு வம்பு அளப்பவர்களை கண்டால் கடுப்பு வரும்.

அதே நேரத்தில் சாப்பாட்டுக்கு மட்டும் முன்னுக்கு வந்து நிண்டு கொண்டு அல்லது இடையில் புதுந்து இடித்து தள்பவர்களை கண்டால் கடுப்பு வரும்...இங்கே பிறந்த பிள்ளைகள் செய்யும் போது என்னும் கடுப்பு கூடும் :lol:

ரதி, இதே வேலையைத்தான் கடந்த வருடம் பாராள மன்ற சதுக்கத்திலும் பலர் செய்தார்கள்... எல்லாம் பழக்க தோஷம் போல... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இல்லாதபோது gossip பண்ணுவது என்னை கடுப்பேத்தும். அதுதான் இப்போ இங்கு நடக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் தொலைபேசியில் இருக்கும் பெண்களைக் கண்டால் கடுப்பு வரும்.

அதே போல் சீரியல்களை பார்த்தழும் பெண்களைக் கண்டால்....

எதற்கெடுத்தாழும் பெண்கள் ஏமாற்றி விட்டார்கள் என எழுதும் நெடுக்ஸ் தம்பி போன்றவர்களை கண்டால் கடுப்பு வரும்

மற்றவர்களின் புரபயல்[profile] போய் பார்த்து யாருக்கு யார் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என பார்க்கும் டங்கு போன்ற கருத்தாளரைக் கண்டால் கடுப்பு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி நடப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

ஆண்களை சைட் அடிக்கும் பெண்களைக் கண்டால் கடுப்பு வரும்.

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உற்று பார்ப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும். (எங்கே பார்க்கினம் எண்றே தெரியாமல் விழிக்கும் நிலை)

gossip பண்ணுபவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

எல்லாம் தெரிஞ்சமாதிரி என்னை விட்டால் ஆள் இல்லை என்பது போல் சதா தம்பட்டம் அடித்து கதைத்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

மிருகவதை - மாமிசம் சாப்பிடுபவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி நடப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உற்று பார்ப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும். (எங்கே பார்க்கினம் எண்றே தெரியாமல் விழிக்கும் நிலை)

எல்லாம் தெரிஞ்சமாதிரி என்னை விட்டால் ஆள் இல்லை என்பது போல் சதா தம்பட்டம் அடித்து கதைத்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

மிருகவதை - மாமிசம் சாப்பிடுபவர்களைக் கண்டால் கடுப்பு வரும்.

அப்படியா! நம்மைக் கண்டால் ரொம்பக் கடுக்கப்போகின்றது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.