Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகனின் மகள் - மகன் - இறுதி நிமிடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.

முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

இந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்குகள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண்டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந்திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்துவது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது.

"பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?' "பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்', "பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்' பிரபாகரனது கண்களுக்கு முன் அவரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்'' என்றெல்லாம் வரத் தொடங்கியிருக்கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப்போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழ் ஈழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, ""உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?'' எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. ""அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்'' என்று கூறிய அவர், ""உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை'' என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன்.

அவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேதனையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் ""என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்'' என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

உண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள்ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக்கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே "நீ போய் படுத்துக்கோ தம்பி' என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் "அப்பா, மாமா, அண்ணே... என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.

துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். "எனது தேவதை இந்தப் பிள்ளை' என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி "மாலதி படையணி'யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா... எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை... முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்... உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.

உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக் கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார

Edited by kuddipaiyan26

:lol:
  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்னையே நல்ல உறவுகள நல்ல மனிதர்கள இழந்திட்டோம்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: :lol: :(:blink::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுவதற்கு மட்டுமே தமிழனாய் பிறந்துவிட்டோமோ என்று ஏங்க வைத்த கொடிய மரணங்கள்?!

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

வீரச்செல்வங்களே...."கண்ணீர் மல்கிட

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது.

இவை வெறும் வடுக்களாக நிறம்மாறக் கூடாது. விடுதலையுணர்வு உள்ளுறையும் வெப்பமாக தகித்துக் கொண்டேயிருக்க வேண்டும்..இலக்கை அடையும்வரை.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுகள் பொய்யாகிவிடக்கூடாதா!

அதிகாரமும் அதனைச் செலுத்த மக்கட் கூட்டமும் கிடைத்தவுடன் தலைகெட்டு ஆடி தன் முழு வம்சத்திற்கே பொருள் சேர்க்கும் மனிதர்கள் வாழும் இந்த உலகில், தன்னை மட்டும் அன்றி தன் இரு பிள்ளைகளையும் கூட தான் இறுதி வரை நேசித்த தமிழர்களின் விடிவிற்காய் உவந்தளித்த தலைவர் பிரபாகரன் போன்ற ஒருவரை மானுட வரலாறு முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டாது.

இன்று நரிகளும் ஓநாய்களும் தமிழர் உரிமை பற்றி சிங்களத்துடன் கூத்தாடி கூத்தாடி கதைப்பதை பார்க்கும் போது வயிரே பற்றி எரிகின்றது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ikke-navngivet-5.jpg

thalaivarmadhivathanichiz7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தினம் வரும் சேதிகள் மேலும் மேலும் .........நெஞ்சை பிளகிறதே .மனம் ஏற்க மறுக்கிறது. அருகிலிருந்து பார்த்தது போல தினம் வரும் சேதி

கட்டுக்கதையாக இருக்க கூடாதா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதியக்கா இன்று 03.07.2009. எல்லுப்போல சிந்திச்சுப்பாருங்கோ இண்டைவரைக்கும் எத்தினைபேர் ஒவ்வொருமாதிரி எழுதீனம். உண்மையெண்டா அப்ப உடனயே எழுதியிருப்பினமெல்லோ? வழுதி எழுதுவார் பின்பு அதை தழுவி எழுதுவார் இன்னொருத்தர். எல்லாரும் இப்ப நக்கீரன் கோபாலுமாதிரி துப்புத்துலக்கிறாங்கள்.

குழப்பங்களில் இருந்து தமிழர்கள் கடந்து செல்லவேண்டும். அப்போதுதான் அடுத்த நகர்வில் தெளிவாக இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்போன்ற கட்டுரைகள் எமது போராட்டம் முன்னோக்கி நகர்வதிற்கு இடையூறாக இருக்கின்றனவே தவிர வேறொன்றுமில்லை, இருப்பினும் வழுதியின் சதியை இந்த கட்டுரை சற்று தெளிவாக்கின்றன.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

நானும் அவருடன் சென் ஜோன்ஸ் பொஸ்கோ ஆரம்பப்பாடசாலையிலும், பின் பரி யோவான் கல்லூரியிலும் (St Johns College) படித்தேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்... அந்த வகையில் ஓர் சகதேழனாக அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது!!

கடந்து போன நாட்களில் நடந்து போன கொடூரங்களை நினைத்து

கண்ணீர்வடித்து, வெற்று உணர்ச்சி பித்தர்களாகி நாம் காலம் கடத்துவது

நாம் பெற்ற தோல்வியை நிரந்தரமாக்கிவிடும் வேலைகளை

திரைமறைவில் மிகவேகமாக முடுக்கிவிட்டுள்ள சிங்களத்தின் பேராசைக்கே உதவும்!

விலைமதிக்க முடியாத இந்த இழப்புகள், தமிழரின் விடுதலை வேள்வியை

இன்னும் வேகமாக, இன்னும் திறமையாக, இன்னும் வலிமையாக

முன்னெடுத்துச் செல்லும் உறுதியையும் உத்வேகத்தையும் எமக்கு தரவேண்டுமே ஒழிய

கண்களில் இருந்து கரைபுரண்டு ஓடும் கண்ணீர் துளிகளை அல்ல!

எனக்கும் அழவேண்டும் என்று தான் கடந்த பலவாரங்களாக தோன்றுகிறது

ஆனால் அந்த கண்ணீர் துளிகள் கூட சுதந்திர தமிழ் மண்ணில் ஒருநாள் விழவேண்டும்

என்று நினைக்கிறேனே ஒழிய, அன்னிய மண்ணில் அல்ல!

வெற்றுக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட செய்திகளை வாசித்து விட்டு

உணர்ச்சிவசப்பட்டு அழுது புலம்பி அப்படியே ஒரு இனம் ஸ்தம்பித்து விட்டால்

அந்த இனம் விடுதலை அடையும் தகுதியை இழந்து விடும்!

உலக வரலாற்றில் எவனும் எவனுக்கும் தங்கத்தட்டில் வைத்து விடுதலையை பரிசளித்ததில்லை

ஒருமுகப்படுத்தப்பட்ட, உலக ஒழுங்குக்கு அமைவான விதத்தில் வடிவமைக்கப்பட்ட, உறுதியான

அரசியல், இராணுவ நகர்வுகளே ஒரு இனத்தை கரையேற்றும் வல்லமை கொண்டது

என்பதை வரலாற்றின் பக்கங்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது!

புழுதி கிளப்பும் வழுதிகளும் அழுது வடியும் பத்திரிகைகளும்

பழுது செய்து விடாத வண்ணம் எமது விடுதலை பயணத்தை முன்னெடுப்பதே

தமிழர்களை கரைசேர்க்கும்!!! :lol:

Edited by vettri-vel

அப்படியென்றால் ஊரார் பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்துவிட்டு தன்பிள்ளைகளை மட்டும் பொத்திப்பொத்தி வளர்த்து, கவனமாக படிக்கவைத்து, வெளிநாட்டுக்கு அனுப்பியும்வைத்து அழகுபார்க்கிறார் என்று தலைவரைப்பற்றி குற்றச்சாட்டுக்கள் சொன்னவர்கள், பந்தி பந்தியாக எழுதியவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள்?

எம் விழிகள் நீர் சிந்தக் கூடாது. கண்ணீரால் எமது சோகம் வேகம் தடைப்படும். தற்போதைய நிலையில் எம் கண்களில் நீரல்ல நெருப்பையே பகைவனை வென்றொழிக்கும் வரை, விதையானவர் உயிர்மூச்சு தாயகக் கனவு கிட்டும் வரை அக்கினித் தீயே கொழுந்து விட்டெறிதல் வேண்டும். வீழ்ந்திட்ட ஒவ்வோரு வித்தும் எமக்கு ஓர்மத்தையும், தாயகவிடிவையும் ஊட்டிச் சென்றுள்ளனர். கண்ணீரையல்ல.

எம் காலத்தில் இந்த பூவுலகின் ஒப்பற்ற வீரனின் ஒப்பற்ற தலைவனின் வழிநடத்தலில் வாழ்கின்றோம் நாம் என்ற நெஞ்சு நிமிர்தலுடன் அடுத்த கட்டத்தை நோக்கி வீறு கொண்டெழுவோம். இந்த மாவீரரின் கனவை நனவாக்குவோம்.

விதையானவரே வழியின் கனலுடன் வீர அஞ்சலிகள்.

ஜானா

Edited by Janarthanan

""உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை'' என்றார்.

இப்படிப்பட்ட தலைவனையே நாம் தோற்கடித்து விட்டோம்

இனி இப்படி ஒரு தலைவன் தமிழனுக்கு கிடைக்கமாட்டான் அது மட்டும் 200 வீதம் நிச்சயம்

இந்த உறங்காத கண்மணிகளுக்கு எனது வீரவணக்கங்கள்

இதைப்போன்ற கட்டுரைகள் எமது போராட்டம் முன்னோக்கி நகர்வதிற்கு இடையூறாக இருக்கின்றனவே தவிர வேறொன்றுமில்லை, இருப்பினும் வழுதியின் சதியை இந்த கட்டுரை சற்று தெளிவாக்கின்றன.

தலைவரின் மகனும் மகளும் இறந்தது பற்றி வழுதி சொல்லவில்லை. சொன்னது பத்மநாதன் அவர்கள் இந்தியன் டுடேக்கு.

மற்றது நக்கீரன் பத்திரிகை இந்தியாவில் இருக்கும் பத்திரிகை. பரபரப்புச் செய்திகள் சொல்வதுண்டு. மேலே உள்ள கட்டுரையில் 18ம் திகதி தலைவர் சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 18ம் திகதி எனது பிள்ளைகளை போரில் தமிழ் மண்ணுக்கு கொடுத்துவிட்டதாக தலைவர் சொன்னதாக இருக்கிறது. ஆனால் பத்மநாதன், அறிவழகன், வழுதி ஆகியோர் தலைவர் 17ம் திகதி வீரமரணம் அடைந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். நக்கீரன் பத்மநாதனின் பேட்டியைக் கேட்டு விட்டு பரபரப்புக்காக திகதியை வடிவாப் பார்க்காமல் எழுதியிருக்கிறது.

Edited by sivakumaran

உறவுகளே அன்றும் சரி இன்றும் சரி

உரத்துச்சொல்கின்றேன் தலைவன் தன் கடமையை சரிவரச்செய்திருக்கின்றார் நாம்தான் அவர் செய்கின்றார் இவர் செய்கின்றார் என்று கதைப்பதிலேயே காலத்தை விரயமாக்கி விட்டோம்

சாள்ஸ் உடன் படித்த மாணவன் ஒருவன் இந்த களத்திலும் இருக்கின்றார். தற்போது அவரது எழுத்துக்களை காணவில்லை அவர் சாள்சினது உற்ற நண்பனும் கூட

மேடைப்பேச்சில்லாமல் செயலிலும் காட்டுபவர்தான் எம் தேசியத் தலைவர்

அந்த வீரத்திலகங்களிற்கு எனது வீர வணக்கங்கள்

எப்படியோ எல்லாம் வாழ்ந்திருக்கலாம் இருந்தும் தமது தந்தையின் வழியே எம் வழியும் என்று இறுதிவரை போராடி வீழ்ந்தவர்கள் அவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மகனும் மகளும் இறந்தது பற்றி வழுதி சொல்லவில்லை. சொன்னது பத்மநாதன் அவர்கள் இந்தியன் டுடேக்கு.

மற்றது நக்கீரன் பத்திரிகை இந்தியாவில் இருக்கும் பத்திரிகை. பரபரப்புச் செய்திகள் சொல்வதுண்டு. மேலே உள்ள கட்டுரையில் 18ம் திகதி தலைவர் சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 18ம் திகதி எனது பிள்ளைகளை போரில் தமிழ் மண்ணுக்கு கொடுத்துவிட்டதாக தலைவர் சொன்னதாக இருக்கிறது. ஆனால் பத்மநாதன், அறிவழகன், வழுதி ஆகியோர் தலைவர் 17ம் திகதி வீரமரணம் அடைந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். நக்கீரன் பத்மநாதனின் பேட்டியைக் கேட்டு விட்டு பரபரப்புக்காக திகதியை வடிவாப் பார்க்காமல் எழுதியிருக்கிறது.

Hmm

இதே பத்மநாதன் அறிவழகன் தான் சொன்னவை தலைவர் பத்திரமாய் இருக்கிறார் என்று.. அதே ஆக்கள் தான் பிறக்கு சொன்னவை தலைவர் உயிருடன் இல்லை என்று..

இந்த உலகத்தில யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்று தெரியல.. அந்த உறவு ஏதோ நடந்ததை தான் எழுதி இருக்கிறார் என்று எனக்கு தோன்றுது..பொய்ய அவர் எழுதி என்னத்தை கானப் போறார் :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் உடன் படித்த மாணவன் ஒருவன் இந்த களத்திலும் இருக்கின்றார். தற்போது அவரது எழுத்துக்களை காணவில்லை அவர் சாள்சினது உற்ற நண்பனும் கூட

இருவர் உள்ளார்கள். புதிதாக ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கிறார். யாழ்கள பழைய உறுப்பினர் ஒருவரும் சாள்ஸுடன் படித்தவர். இடைக்கிடை யாழில் தலைகாட்டுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.