Jump to content

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணக் கட்டுரை அபாரம் நிழலி. உங்கட நக்கல் நளின வெறுப்பைத் திசை மாற்ற நல்ல வழியக் கண்டு பிடிச்சிருக்கிறீங்கள். எனக்கும் அடையாளம் தெரியுது படத்தில இருக்கிற இடம். அந்த இரண்டாவது படத்தில இருக்கிற இயந்திரப் படியால இறங்கிப் போனால் சன நெரிசல் மிக்க வரித் தீர்வையற்ற கடைகளுக்குப் போகலாம் (முதலாவது படம்). நானும் வரித்தீர்வையற்ற கடையெண்டவுடன எல்லாம் புறக்கோட்டை நடை பாதை றேஞ்சில கிடைக்குமாக்குமெண்டு போய்ப் பார்த்தன்,விலையள் பார்க்கவே கண்ணக் கட்டீற்றுது, திரும்பி மற்றப் பக்கப் படியால ஏறி வந்து கேற்றுக்குக் கிட்ட இருந்திட்டன்.

அது சரி, எயார் போட் படம் போட்டது மாதிரி இம்பீரியல் படமும் போடுவியள் தானே? இல்லையோ?! :rolleyes:

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கை பவுணை ......

நம்ம ஊர் சந்தையில கத்தரிக்காய் , தக்காளிப்பழம் மாதிரி குவிச்சு வைச்சிருப்பாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கை பவுணை ......

நம்ம ஊர் சந்தையில கத்தரிக்காய் , தக்காளிப்பழம் மாதிரி குவிச்சு வைச்சிருப்பாங்கள் .

இது கொஞ்சம் அவியல்.. நான் போன இடத்தில கண்ணாடிப் பெட்டியுக்க பூட்டித் தான் வைச்சிருந்தவங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்கள் adults only என்று எழுத வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டியள்......ஆறுமுக நாவலர் பெரிய புராணத்தை கை கழுவிட்டு இப்ப இதை தான் follow பண்றாராம் என்று கேள்வி!!!

:rolleyes:

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கொஞ்சம் அவியல்.. நான் போன இடத்தில கண்ணாடிப் பெட்டியுக்க பூட்டித் தான் வைச்சிருந்தவங்கள் :rolleyes:

கத்தரிக்காய் , தக்காளிப்பழம் என்னும் போதே ........ அவியல் தானே .....

ஆனால் ...... கண்ணாடிப் பெட்டிக்குள்ளும் குவித்து வைத்திருப்பார்களே பவுணை கிலோ கணக்கில் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் adults only என்று எழுத வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டியள்......ஆறுமுக நாவலர் பெரிய புராணத்தை கை கழுவிட்டு இப்ப இதை தான் follow பண்றாராம் என்று கேள்வி!!!

:rolleyes:

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

வேலையெல்லாம் செய்யேல்ல, இரண்டு தரம் எமிரேட்சில போய் வரேக்க டுபாய்க்கால போய் வந்திருக்கிறன். ஒரு தடவை ஒரு நாள் ஹோட்டலில தங்கி வந்தன்..நிழலி சொல்ற இரண்டு விஷயங்கள் தெளிவாத் தெரிஞ்சுது

1. அந்த அனல் வெய்யில். ஹோட்டல விட்டு வெளியில வரும் போது காவலாளியிட்டக் கேட்டன் ஏதாவது பல் பொருள் அங்காடி பக்கத்தில இருக்க எண்டு..இருக்குது பத்து நிமிஷ நடையில எண்டான். அவனே தொடர்ந்து நடந்தா போகப் போறியள் (பி .ப 3 மணி அப்ப!) எண்டு கேட்டுப் போட்டு ஒரு மாதிரிப் பார்த்தான். வெளியில இறங்கி நடக்கேக்க தான் அவன்ர பார்வையின்ர அர்த்தம் விளங்கீச்சு.

2. பெண்கள் மூடிக் கட்டிக் கொண்டு திரிவினம் எண்டு போனால், அங்க படு தாராளம் கண்டியளோ. அது வெள்ளையும் இல்லாம பிறவுணும் இல்லாம ஒரு கலர் வேற..ஆவெண்டு பாத்து மனிசியிட்ட நுள்ளு வாங்க வேண்டியதாப் போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

------

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

இளையபிள்ளை ,

நான் விமானத்தில் பயணம் செய்யும் போது கவனித்து ......

அங்குள்ள பயண மாற்றங்களை முன்யோசனையாக செலவிடுவது வழக்கம் .

இதற்கு என்று தனியாக செலவு செய்ய விருப்பமில்லை . ( ஆகா..... தமிழனுக்கே உள்ள குணம் என்று நீங்கள் புறு , புறுப்பதும் கேட்குது )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வேலையெல்லாம் செய்யேல்ல, இரண்டு தரம் எமிரேட்சில போய் வரேக்க டுபாய்க்கால போய் வந்திருக்கிறன். ஒரு தடவை ஒரு நாள் ஹோட்டலில தங்கி வந்தன்..நிழலி சொல்ற இரண்டு விஷயங்கள் தெளிவாத் தெரிஞ்சுது

1. அந்த அனல் வெய்யில். ஹோட்டல விட்டு வெளியில வரும் போது காவலாளியிட்டக் கேட்டன் ஏதாவது பல் பொருள் அங்காடி பக்கத்தில இருக்க எண்டு..இருக்குது பத்து நிமிஷ நடையில எண்டான். அவனே தொடர்ந்து நடந்தா போகப் போறியள் (பி .ப 3 மணி அப்ப!) எண்டு கேட்டுப் போட்டு ஒரு மாதிரிப் பார்த்தான். வெளியில இறங்கி நடக்கேக்க தான் அவன்ர பார்வையின்ர அர்த்தம் விளங்கீச்சு.

2. பெண்கள் மூடிக் கட்டிக் கொண்டு திரிவினம் எண்டு போனால், அங்க படு தாராளம் கண்டியளோ. அது வெள்ளையும் இல்லாம பிறவுணும் இல்லாம ஒரு கலர் வேற..ஆவெண்டு பாத்து மனிசியிட்ட நுள்ளு வாங்க வேண்டியதாப் போச்சு!

தமிழ் சிறி: "இளையபிள்ளை ,

நான் விமானத்தில் பயணம் செய்யும் போது கவனித்து ......

அங்குள்ள பயண மாற்றங்களை முன்யோசனையாக செலவிடுவது வழக்கம் .

இதற்கு என்று தனியாக செலவு செய்ய விருப்பமில்லை . ( ஆகா..... தமிழனுக்கே உள்ள குணம் என்று நீங்கள் புறு , புறுப்பதும் கேட்குது )"

:lol: நல்லது நல்லது... :)

இங்க வரி கட்ட பஞ்சில கொஞ்ச நாள் dubaiக்கு கிட்ட இன்னொரு oven உக்குள்ள இருந்து (வெட்கையை தான் சொல்கிறேன்) வேகினான் - அதான் கேட்டேன்!

ஆனால் நிச்சயமாக நிழலி அண்ணாவின் adults only திரியில் குறிப்பிடும் படியான அனுபவம் ஒன்றுமில்லை என்னிடம்!! :rolleyes:

Posted

அங்கம் 4: எரிக்காத வெயில்

....

ஒரு மூன்று நிமிடம் நடந்து இருப்பன். போறணைக்கு பக்கத்தில் நின்றால் உடம்பு சூடாகுவது போல் உடல் முழுக்க சூடு ஏறத் தொடங்கியது. நடு மண்டையில் நச் சென்று சூரியன் வந்து குந்தி இருந்து எகத்தாளமாக சிரிப்பது போல ஒரு உணர்வு. மூன்று நிமிடத்தில் கடந்த தூரத்தை முப்பது செக்கனில் ஓடிக் கடந்து மீண்டும் விடுதிக்கே வந்து விட்டேன்.

....என்னைப் போன்ற நல்ல தங்க நிறமான ஆக்கள் (யாழ் களத்தில் உள்ள அனேகம் பேரை நிச்சயம் சந்திக்க மாட்டன் என்ற துணிவு இருக்கு...என்னை நேரில் பார்த்தவர்கள் தம் திருவாயை மூடிக் கொள்ளவும்) எவ்வளவு வெயில் அடித்தாலும் கறுக்க மாட்டினம். கையில் முட்டையுடன் போனால், நடு வீதியில் வைத்து பொரியள் செய்து சாப்பிடலாம்.

...

நிழலி அண்ணா, உங்கள் சொந்த அனுபவங்களுடன் இடைக்கிட நகைச்சுவையையும் கலந்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை கொடுத்து எழுதுறீங்கள்... :)

ஒரு சின்ன சந்தேகம்... :D நீங்கள் மெகா சிரியல் பார்ப்பீர்களோ??? :unsure: அடிக்கடி தொடரும்... என்று பாதில நிறுத்திவிடுப் போகிறீர்கள் அது தான் கேட்டேன்.... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி நிழலி.

இப்படிக்கு

பென்மன்

Posted

ம்ம்ம்ம்,நாங்களும் டூபாய் யில *சலாம் அலைக்கும் ,அலைக்கும் சலாம் ,கேவில் கால்,தமாம் " எல்லாம் சொன்னமாக்கும்...தொடருங்கள் உங்கள் பிஸ்முல்லா வை

Posted

ஐயா நிழலி

ஒரே தடவையில் 5 வசனங்களுக்கு மேல் எழுதுவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களா?

பொறுமையைச் சோதிக்கத் தான் வேண்டும் அதற்காக இப்படியா........

ஒரு சின்ன சந்தேகம்... :lol: நீங்கள் மெகா சிரியல் பார்ப்பீர்களோ??? :( அடிக்கடி தொடரும்... என்று பாதில நிறுத்திவிடுப் போகிறீர்கள் அது தான் கேட்டேன்.... :icon_idea:

நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகின்றேன். அனேகமாக அலுவலகத்தில் இருக்கும் போது கிடைக்கும் சொற்ப நேரங்களில் தான் எழுதுகின்றேன். வீட்டில் vista OS என்பதால் கடினம். அத்துடன் விஸ்டா (Vista) வில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் மூன்று முறை மறைந்து மறைந்து பின் தான் சரி வருகின்றது (Vista 64BIT + IE8)...

அத்துடன் எழுதுவதற்கு என்று சரியான Mood கிடைக்க வேண்டும். வீட்டில் நிற்கும் போது Mood வேறு எங்கோ போவதால் எழுத முடிவது குறைவு

சின்ன ஒரு கவலை அண்ணா உங்கட பேயருக்கு பக்கதில் இருப்பவரைக்காணத்தான் கொஞ்சம் கண் கூசுது . :D^_^ அண்ணா.ஆதிகால மனிதரின்ட நினைப்பு வருகிறது.ம்ம்ம்.... :lol::lol:

யாயினி.

ம்ம்ம்... அது நான் இன்னும் டார்வின் கூர்ப்பின் படி சரியாக பரிணாமம் அடையவில்லை என்பதை காட்ட....

உங்கட நக்கல் நளின வெறுப்பைத் திசை மாற்ற நல்ல வழியக் கண்டு பிடிச்சிருக்கிறீங்கள்.

உண்மை தான் ஜஸ்ரின்... அரசியல் பற்றி எதனை எழுதினாலும், வெறுப்பு ஒரு மேகக் கூட்டமாக கவிந்து கொள்கின்றது. அதனூடாக எரிச்சலும், ஆத்திரமுமே வந்து எழுத்தில் தங்கி நிற்கத் தொடங்கி விட்டது. குற்ற உணர்வு மேலிட்டு மற்றவரை குற்றம் கண்டு பிடிப்பதில் போய் முடிகின்றது. எனவே இப்போதைக்கு தீவிரமாக எதனையும் எழுதாமல் விடுவது என்று நல்லம் என்று நினைத்துள்ளேன். அது வரை இந்த தொடர் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த விரும்புகின்றேன்

Posted

அங்கம் 5: சிதைவுற்ற ஆளுமைகள்

எமக்கு கூச்சம் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும்

என் தொழில் ரீதியான கூட்டங்களி்ல் (Meetings), கற்றல் தொடர்பான அரங்குகளில் (seminars) நான் இலகுவில் எனது கருத்துகளை முன் வைக்க மாட்டன். என் புரொஜக்ட் தொடர்பான கூட்டங்களில் எத்தனையோ நல்ல திட்டங்கள் மனதில் எழுந்தாலும் அதனை எல்லோரும் முன் தைரியமாக சொல்ல மனம் விடாது. "எங்கே நான் சொல்லப் போய் அதில் ஏதாவது பிழை இருந்திட்டால் அவமானமாகப் போய் விடுமே என்ற" என்ற ஒரு தயக்கம் வந்து எட்டிப் பார்க்கும். இத்தகைய கூச்சம், தயக்கம் என்னில் மட்டும் அல்லாது எம்மவர்களில் அநேகமானோரிடம் கண்டுள்ளேன். இதற்கு நாம் வளர்க்கப் படும் தமிழ் சூழ்நிலையும் முக்கிய காரணம். அப்பாவில் இருந்து பெரியப்பாவின் மனிசியின் ஒன்று விட்ட சித்தப்பன் வரைக்கும் நாம் சிறுவர்களாக இருக்கும் போது எம்மில் அதிகாரம் செலுத்த முனைவதும், எம் பள்ளிக் கூட கல்வி முறையும் இந்த தயக்கத்தினை எமக்குள் விதைத்து வைத்திருக்கின்றது. எந்த இடத்திற்கு போனாலும், அந்த இடத்தில் உள்ள அதிகார மையத்துடன் சமரசம் செய்து கொண்டு மறு பேச்சில்லாமல் எம்மை மெளனிகளாக வைத்திருக்க இந்த சமூக அமைப்பு எமக்கு கற்றுத் தந்துள்ளது.

இது ஒரு ஆளுமைச் சிதைவு.

ஒன்றுமே தெரியாதவன் தன் வாயால் வெட்டி வீழ்த்தி உயர் நிலையை அடையும் போது, ஓரளவிற்கேனும் திறமையுள்ள எம்மவர்கள் தம்மோடு கூடப் பிறந்த தயக்கத்தினால் வாயே திறக்காமல் இருந்து அதே நிலையிலேயே (position) தொடர்ந்து இருப்பதை அவதானித்துள்ளேன். இந்த தயக்கம் எமக்குள் இயலாமையை தோற்றுவித்து இருக்கும். இத்தகைய மனப்பான்மையை ஒப்பீட்டளவில் அதிகம் வாய்ப்புகளை பெற்று இருக்கு சிங்கள இளைய சமூகத்திடம் கூட கண்டுள்ளேன்.

இந்த ஆளுமைச் சிதைவால் எமக்குள் இருக்கும் திறமைகளை மற்றவர் முன் வெளிக்காட்ட தயங்குவோம். அதேபோல் எமக்குள் இருக்கும் ஆசைகளையும் கூட வெளியே காட்ட மாட்டோம். ஒரு விடயதிற்காக ஆசைப் பட்டாலும், அதனை வெளியே காட்டாது, அந்த ஆசையே எமக்கு இல்லை என்பது போல் நடிக்க முற்படுவதில் எம்மை விட சளைத்தவர்கள் யாரும் இல்லை

என் நண்பன் ஷான், வந்த முதல் நாளே இரவு விடுதிக்கு போவோமா எனக் கேட்கும் போது எனக்கும் போக வேண்டும் என்ற ஆசை எக்கச்சக்கமாக வந்தது. வெளியே திரியும் அழகான பெண்களை அருகே சென்று தொட்டுப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. ஆனால் பாழாய்ப் போன தயக்கமும், ஆசையை வெளியே காட்டக் கூடாது என்ற பழக்க தோசமும் அன்று என்னை "வேண்டாம் மச்சான்.. இன்னொரு நாளைக்கு பார்ப்பம்" என்று பதில் சொல்ல வைத்தது.

அடடா, நிழலி உண்மையைச் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறான் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ஆனால் உண்மையில் அன்று நடந்தது அது தான். அதன் பின்னான ஐந்து வருட டுபாய் வாழ்வில் என் சக அலுவலக தமிழ் நண்பர்களுடன் சென்று இப்படி எத்தனையோ இரவு விடுதிகளுக்கு சென்று இரவிரவாக கூத்தடித்து இருந்தாலும் அன்று (வந்த முதல் நாளே) என்னால் போக முடியவில்லை என்பதே உண்மை.

அவனுக்கு அப்படி சொன்னேனே ஒழிய, அன்றிரவு முழுதும் "போயிருக்கலாமே" என்று என்னையே எனக்குள் திட்டிக் கொண்டு இருந்தேன்.

இரண்டாவது நாள்

இந்த நாளை என்னால் மறக்க முடியாது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியவனை ஒரு பெரிய அண்டாவுக்குள் இறக்கி விட்டதாக உணர்ந்த நாள். இலங்கையில் சிறிய நிறுவனங்களில் வேலை செய்த நான் கிட்டத் தட்ட 1100 பேர் வரைக்கும் வேலை செய்யும் நிறுவனத்துக்கு மாறிய நாள். அத்துடன் இந்தியர்கள் அதிகளவில் நிறைந்து இருக்கும் ஒரு நிறுவனத்தில் இந்தியர்களுடன், அதுவும் ஒரு மலையாளியை முகாமையாளராக கொண்ட ஒரு Project இல் வேலை செய்ய சந்தர்ப்பம் வந்த நாள்.

இந்த நாளும் அதன் பின்னான வாழ்வும் எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்தது. இந்த ஐந்து வருடங்களில் சிங்கள நண்பர்களுடனான உறவு, இந்தியர்களுடனான நட்பு, சக தமிழ் நண்பர்களுடனான உறவு என்பன எம் தேசிய விடுதலைப் போராட்டம் சார்பான என் கருத்துருவாக்கங்களில் பின்னாட்களில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன. இந்த 5 வருட காலகட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான சமாதான காலகட்டத்தினையும், கருணாவின் பிரிவையும், சுனாமி வந்ததையும், மகிந்தவவின் வரவையும், மாவிலாறில் இருந்து தொப்பிகல வரையான பிரதேசங்களை இழந்தமையும் உள்ளடக்கிய காலகட்டம். தமிழ் நண்பர்களை விட அதிகமான சிங்கள நண்பர்களையும், முஸ்லிம் நண்பர்களையும், இந்திய நண்பர்களையும் கொண்ட, தன் வாழ்நாளில் அதிகமான கால கட்டத்தினை சிங்கள பிரதேசத்தில் கழித்த, ஒரு ஈழத் தமிழனான எனக்கு இந்த காலகட்டம் உணர்த்திய உண்மைகள் பல.... அதே போல், மிக சுதந்திரமான உணர்வுகளுடனான பெற்றோரால் வளர்க்கப் பட்ட ஒருவனின் கையில் தேவையான அளவு காசும், சுதந்திரமான சூழ்நிலையும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் இவை எனக்கு உணர்த்தின.

இந்த தொடரை எழுத வேண்டும் என என்னை தூண்டிய காரணங்களும் அவையாகவே அமைந்தன.

(தொடரும்)

Posted

என் தொழில் ரீதியான கூட்டங்களி்ல் (ஆநநவiபௌ)இ கற்றல் தொடர்பான அரங்குகளில் (ளநஅiயெசள) நான் இலகுவில் எனது கருத்துகளை முன் வைக்க மாட்டன். என் புரொஜக்ட் தொடர்பான கூட்டங்களில் எத்தனையோ நல்ல திட்டங்கள் மனதில் எழுந்தாலும் அதனை எல்லோரும் முன் தைரியமாக சொல்ல மனம் விடாது. "எங்கே நான் சொல்லப் போய் அதில் ஏதாவது பிழை இருந்திட்டால் அவமானமாகப் போய் விடுமே என்ற" என்ற ஒரு தயக்கம் வந்து எட்டிப் பார்க்கும். இத்தகைய கூச்சம்இ தயக்கம் என்னில் மட்டும் அல்லாது எம்மவர்களில் அநேகமானோரிடம் கண்டுள்ளேன். இதற்கு நாம் வளர்க்கப் படும் தமிழ் சூழ்நிலையும் முக்கிய காரணம். அப்பாவில் இருந்து பெரியப்பாவின் மனிசியின் ஒன்று விட்ட சித்தப்பன் வரைக்கும் நாம் சிறுவர்களாக இருக்கும் போது எம்மில் அதிகாரம் செலுத்த முனைவதும்இ எம் பள்ளிக் கூட கல்வி முறையும் இந்த தயக்கத்தினை எமக்குள் விதைத்து வைத்திருக்கின்றது. எந்த இடத்திற்கு போனாலும்இ அந்த இடத்தில் உள்ள அதிகார மையத்துடன் சமரசம் செய்து கொண்டு மறு பேச்சில்லாமல் எம்மை மெளனிகளாக வைத்திருக்க இந்த சமூக அமைப்பு எமக்கு கற்றுத் தந்துள்ளது.

இது ஒரு ஆளுமைச் சிதைவு.

உண்மை சரியான விடயத்தை விளக்கமாகச் சொல்லியள்ளீர்கள் நிழலி

அடடாஇ நிழலி உண்மையைச் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறான் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ஆனால் உண்மையில் அன்று நடந்தது அது தான். அதன் பின்னான ஐந்து வருட டுபாய் வாழ்வில் என் சக அலுவலக தமிழ் நண்பர்களுடன் சென்று இப்படி எத்தனையோ இரவு விடுதிகளுக்கு சென்று இரவிரவாக கூத்தடித்து இருந்தாலும் அன்று (வந்த முதல் நாளே) என்னால் போக முடியவில்லை என்பதே உண்மை.

அவனுக்கு அப்படி சொன்னேனே ஒழியஇ அன்றிரவு முழுதும் "போயிருக்கலாமே" என்று என்னையே எனக்குள் திட்டிக் கொண்டு இருந்தேன்.

உண்மையை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள்

எத்தனைபேர் இப்படி உண்மையை சொல்வார்கள் நான் உட்பட

Posted

நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகின்றேன். அனேகமாக அலுவலகத்தில் இருக்கும் போது கிடைக்கும் சொற்ப நேரங்களில் தான் எழுதுகின்றேன். வீட்டில் vista OS என்பதால் கடினம். அத்துடன் விஸ்டா (Vista) வில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் மூன்று முறை மறைந்து மறைந்து பின் தான் சரி வருகின்றது (Vista 64BIT + IE8)...

அத்துடன் எழுதுவதற்கு என்று சரியான Mood கிடைக்க வேண்டும். வீட்டில் நிற்கும் போது Mood வேறு எங்கோ போவதால் எழுத முடிவது குறைவு

நிழலி அண்ணா, நீங்கள் நேரம் கிடைக்கும் பொது எழுதுங்கள்... யாழ் கள உறவுகளுக்கும் ஒரு பிராக்கு வேணும் தானே... எல்லாத்தையும் ஒரேயடியா எழுதினால், முழு மூச்சாக இருந்து வாசிச்சுடுப் போய்விடுவினம்... நீங்கள் இப்படியே தொடருங்கோ... நன்றி!

Posted

நிழலி அண்ணா, நீங்கள் நேரம் கிடைக்கும் பொது எழுதுங்கள்... யாழ் கள உறவுகளுக்கும் ஒரு பிராக்கு வேணும் தானே... எல்லாத்தையும் ஒரேயடியா எழுதினால், முழு மூச்சாக இருந்து வாசிச்சுடுப் போய்விடுவினம்... நீங்கள் இப்படியே தொடருங்கோ... நன்றி!

ஹி ஹி... "இருக்கிறாரா இல்லையா" என்று விதண்டாவாத பத்திகள் வாசிப்பதை விட இப்படி வாசிக்கிறது நல்லம் என்பது என் தாழ்மையான கருத்து.

இப்படியான நக்கல் நையாண்டி விமர்சனங்கள் நிறைய வரும் என்று முன்னமே நிறைய எதிர்பார்த்தேனுங்கோ.. நீங்கள் கொஞ்சம் லேட்டுங்கோ..... உப்படி எல்லாம் எழுதினால் நான் எழுதுறதை நிப்பாட்ட போறதில்லைங்கோ.... நான் இழுக்கும் அளவுக்கு நீங்களும் இழுபட்டு தொடர்ந்து வாசிங்கோ...வேற வழி இல்லைங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஆளுமைச் சிதைவால் எமக்குள் இருக்கும் திறமைகளை மற்றவர் முன் வெளிக்காட்ட தயங்குவோம். அதேபோல் எமக்குள் இருக்கும் ஆசைகளையும் கூட வெளியே காட்ட மாட்டோம். ஒரு விடயதிற்காக ஆசைப் பட்டாலும், அதனை வெளியே காட்டாது, அந்த ஆசையே எமக்கு இல்லை என்பது போல் நடிக்க முற்படுவதில் எம்மை விட சளைத்தவர்கள் யாரும் இல்லை

எமது சமூக அமைப்பால் ஏற்பட்ட பாதிப்பு என்பது , சரியான கணிப்பு நிழலி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் நிழலி என்ற பெயரில் எழுதுவது உங்கள் மனைவிக்கு தெரியுமா...அப்படியாயின் நீங்கள் உண்மையிலேயே தைரியசாலி தான்...வாழ்த்துகள் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நிழலி அண்ணா.நன்றாகப்போகிறது உங்கள் மெகா தொடர் ச்சி......டுபாய் தொடர்.மற்றத்தொடர் எப்ப வரும் என்று காத்திருந்து வாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.வேலை இல்லமாமல் மண்டையைப் குளப்பிக்கொண்டு இருக்கிற என் போன்றவர்களுக்கு நல்ல விடயத்தை கொண்டு வாறயள் அண்ணா.நல்ல விடயம். :D:D:D

பிரியமுடன்:யாயினி.

Posted

ஹி ஹி... "இருக்கிறாரா இல்லையா" என்று விதண்டாவாத பத்திகள் வாசிப்பதை விட இப்படி வாசிக்கிறது நல்லம் என்பது என் தாழ்மையான கருத்து.

இப்படியான நக்கல் நையாண்டி விமர்சனங்கள் நிறைய வரும் என்று முன்னமே நிறைய எதிர்பார்த்தேனுங்கோ.. நீங்கள் கொஞ்சம் லேட்டுங்கோ..... உப்படி எல்லாம் எழுதினால் நான் எழுதுறதை நிப்பாட்ட போறதில்லைங்கோ.... நான் இழுக்கும் அளவுக்கு நீங்களும் இழுபட்டு தொடர்ந்து வாசிங்கோ...வேற வழி இல்லைங்கோ

நிழலி அண்ணா... நீங்கள் சொன்னது போல "இருக்கிறாரா இல்லையா", "மீசையா தாடியா" என்னும் சில தலைப்புகளால் என் தலை படும் பாடு நான் மட்டுமே அறிவேன்... என்னைப் போன்று பலர் யாழில் தலையைப் பிச்சுக்கொண்டு இருப்பதை என்னால் உணரமுடிந்தது... அதனால் தான் உங்கள் கதை, யாழுக்கு ஒரு புதுப் பிராக்கு என்று சொனேனே தவிர, உங்ககளை எழுதவிடாமல் தடுப்பதுக்குரிய எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இருக்க இல்லை.... நேரம் கிடைக்கும் பொது தொடர்ந்து எழுத்துங்கள்.... நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி தொடருங்கள் ...பேரீச்சைப்பழத்துடன் கவ்வா...அடிச்ச அனுபவமுண்டோ?

Posted

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

முதல் நாள் அலுவலகத்துக்கு செல்கின்றேன். எனது குழு (team) இருக்கும் அறையினுள் அலுவலக பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டிச் செல்கின்றார். என்னை வேலைக்கு தொலைபேசி மூலம் நேர்முகம் செய்த பெண்மணியான 'யஸ்மின்' வரவேற்கின்றார். வரவேற்று என் இருக்கையை காட்டுகின்றார். என்னை விட ஆகக் குறைந்தது அரை அடியாவது உயரமான இந்த முகாமையாளர் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கு..ஆரம்பத்தில் கடும் சண்டை பிடித்து பின் திடீரென ஒரு நாளில் நண்பர்கள் ஆவது ஒரு நல்ல நட்பான உறவைத் தரும் என்பார்கள்.அதேபோல் தான் இந்த கேரளாவைச் சேர்ந்த யஸ்மினும் இன்று வரைக்கும் தொடர்பில் இருக்கும், எனக்கு கிடைத்த மிகச் சிறந்த தோழிகளில் ஒருவராக இருக்கின்றார். நீங்கள் எல்லாரும் கொடுப்புக்குள் சிரித்தாலும், உண்மை அதுதான்

என் இருக்கையில் ஒரு வித அன்னியத்தன்மையுடன் போய் அமர்கின்றேன். எப்பவுமே புதிய வேலை ஒன்றுக்கு போய் அது எமக்கு சரியாக பொருந்திக் கொள்ள ஒரு மாதமாவது எடுக்கும். ஆனால் என்னைப் போன்ற எந்த திறமையும் இல்லாவிடினும் எக்கச்சக்கமான தலைக்கனமும் விட்டேத்தி தனமும் கொண்ட ஒருவனுக்கு புதிய வேலை சரியாக பொருந்த பல நாட்கள் எடுக்க வேண்டி இருக்கும்.

என் இருக்கையில் அமர்ந்த பின் முன் தெரிந்த யன்னலால் வெளியே தெரியும் காட்சியை முதன் முதலில் பார்க்கின்றேன். என்னால் நம்பவே முடியாத ஒரு காட்சி விரிகின்றது.... வரிசையாக விமானங்கள் தரை இறங்குவதும். வரிசை கட்டி நிற்பதும், மேலே கிளம்பி போவதுமாக எவருக்குமே பார்க்க பிடிக்கின்ற அருமையான காட்சி விரிகின்றது. விமான நிலையத்துக்கு அருகாமையால் வேலை செய்யும் கட்டிடம் இருப்பதும் நான் ஏழாம் மாடியில் வேலை செய்வதும் இத்தகைய காட்சிகளை பார்க்க மிக இலகுவாக இருந்தது.

நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இலங்கையர்கள் அதிகம். எப்பவுமே இரு சாராருக்கும் நிழல் யுத்தம் போன்ற ஒன்று நிகழ்ந்து கொண்டே இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. முக்கியமாக சிங்களவர்கள் இந்தியர்கள் மீது கடும் விரோத மனப் பான்மையுடன் ஆனால் வேறு வழி இன்றி பழக வேண்டி இருக்கின்றதே எனும் உணர்வினால் உந்தப்பட்டவர்களாகவே காணப் படுவர். இந்திய முகாமையாளர்கள் (Project managers) பலரைக் கொண்ட இந்த நிறுவனத்தில் நாம் அவர்களின் குழுவில் இருக்கும் உறுப்பினர்களாகவே (Team members) அதிகமாக இருந்தோம். எனவே இந்தியர்களின் Domination மிக அதிகமாகவே உணர முடிந்தது. மென் பொருள் உற்பத்தியில் Project manager இன் பங்கு அதிகமாக திட்ட வடிவமைப்பில் காணப்படுவது இயல்பான ஒன்று. இதனை சிங்களவர்கள் அடியோடு வெறுத்தனர். ஆனால், வேறு வழியின்றி வேலையும் செய்தனர். எப்போதும் சாப்பாட்டு மேசைகளிலும், வேறு இடங்களிலும் இந்தியர்கள் மீதான முழு வெறுப்பை கொட்டித் தீர்ப்பர். இந்தியர்களின் இயல்பு இவற்றுக்கு வேறுபட்டதாக இருக்கும்

இந்தியர்கள் சற்று உயர் பதவியில் இருந்தால், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர். தன் கீழ் உள்ள உறுப்பினரிடம் இருந்து தேவைக்கு மேலாக அதிகமான மரியாதையையும் எதிர் பார்ப்பர். பல PM கள் தம் குழுவில் இருப்பவர்களை வரன்முறைக்கு மேலாக அதிகாரம் செலுத்த முனைவர். அதே போல் ஒரு PM இற்கு கீழ் இருக்கும் சக இந்திய உறுப்பினர்கள், தம்மை என்ன சொன்னாலும் சரி என்பது போல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமுள்ள ஒரு வேலைக்காரன் போல் நடந்து கொள்வர். எதிர்த்து ஒரு சிறு குரல் தானும் வராது. அப்படியானவர்கள் உயர் பதவியினை அடைந்த உடனேயே, தாம் எவ்வாறு முகாமையாளரால் சிரமத்துக்குள்ளானார்களோ அதே போன்ற அதிகாரத்தினை மற்றவர் மீது பிரயோகிக்க முயல்வர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கைத்தமிழர்களான என்னைப் போன்ற சிறிய எண்ணிக்கையானவர்களின் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கே எம் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் இருக்கும் போது, தமிழகம் தவிர்ந்த மற்ற எல்லோரும் எம்மையும் சிங்களவர்களாகவே பார்த்தனர். சிங்களவர்களோ எம்மை இந்தியர்களின் நண்பர்களாக பார்த்தனர். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது இது தான் போலும்.

எனக்கோ அடிப்படையில் இந்திய படையினரின் அடாவடித்தனங்களாலும், இந்திய தேசத்தின் துரோகத்தனத்தாலும் சிங்களவர்களின் மீது இருப்பதை விட அதிகமாக இந்தியர்கள் மீது இருந்தது. சிங்களவர்கள் வரலாற்று எதிரிகள்.. இந்தியர்கள் வரலாற்று துரோகிகள் எனும் புரிதலில் இன்றும் கூட இருக்கும் எனக்கு ஆரம்பத்தில் எந்த தனிப்பட்ட இந்தியர்களை கண்டால் கூட பிடிக்காமல் இருந்தது. என் குழுவில் அப்போது 18 பேர் இருந்தனர், அதில் ஒரு அரபுப் பெண்ணையும் என்னையும் தவிர்த்து விட்டால் மிகுதி அனைவரும் இந்தியர்களே, எனவே முதல் நாளில் இருந்து பிரச்சன ஆரம்பமானது

வேலை நேரம் காலை 7 இல் (ஆம் காலை 7) இல் இருந்து மாலை 03:30 வரை. ஆரம்ப நாட்களில் நான் சரியாக 7 மணிக்கு வேலைக்கு போனால் மாலை 3:30 க்கு வேலை முடியும் நேரத்தில் வெளியே வந்து விடுவேன். மற்ற அனைத்து இந்தியர்களும் இரவு 7 மணி வரையாவது இருந்து வேலை செய்து தம் பிறவிக் கடனை தீர்த்துக் கொண்டிருக்கும் போது எந்த அலட்டலும் இன்றி நான் மட்டும் வெளியே வருவேன். மானேஜர் 04:30 இற்கு Meeting போட்டால், எக்காரணம் கொண்டும் வரமாட்டேன் என்று சொல்லி வெறுபேத்துவன். 8:30 மணித்தியாலம் என்றால் 08:30 மணித்தியாலம் தான்....Noway என்பது போன்ற ஒரு திமிர் தனம் ஒட்டிக் கொண்டு இருந்தது. உண்மையில் மென் பொருள் உற்பத்தி துறையில் அதிகப் படியான வேலை என்பது சர்வ சாதாரணம். பல இடங்களில் இரவு 12 மணிவரை கூட வேலை செய்ய வேண்டி வரும். அப்படிச் செய்தும் இருக்கின்றன்....ஆனால், எல்லாம் தெரியும் என்ற தலைக்கனமும்,. இந்தியர் மீதான் வெறுப்பும், விட்டேத்தி தனமும்

ஒன்று சேர்ந்து கூத்தாடிக் கொண்டு இருந்தன எனக்கு

எனவே என்னை மீண்டும் எப்படியாவது இலங்கைக்கு அனுப்பி விட துடித்துக் கொண்டு இருந்தார் யஸ்மின் எனும் என் முகாமையாளர். அதற்கு உடனே அவல் மாதிரி ஒரு காரியம் செய்தேன் நான்

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதென்ன ஆன்டி.. ஆன்டின்னு சொல்லுறீங்க.., சீக்கிரம் ஆன்டியையும் அங்கிளையும் பத்தி சொன்னீங்கன்ன நாங்க எங்கள் வேலையைப் போய் பார்ப்போமில்ல...:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதென்ன ஆன்டி.. ஆன்டின்னு சொல்லுறீங்க.., சீக்கிரம் ஆன்டியையும் அங்கிளையும் பத்தி சொன்னீங்கன்ன நாங்க எங்கள் வேலையைப் போய் பார்ப்போமில்ல...:rolleyes:

அது தானே ....... ராஜவன்னியன் , :D

அங்கம் 6 ல் ஆன்டியும் , அங்கிளும் வந்தவையா ? அட கொடுமையே ....... நான் வாசிக்க முதல் நிழலி சுய தணிக்கை செய்து போட்டாரே . :D

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.