Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் சுரதா - தமிழ்க் கணிமை விருது 2009

Featured Replies

கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள்

வெங்கட்ரமணன்

தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ் தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று நடந்தது.

நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச்சென்றதில் வெற்றிகண்ட அம்பைக்கு இந்த ஆண்டு விருது கிடைத்திருக்கிறது. மரபார்ந்த பெண்ணுக்குக் கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும் தன் சுதந்திரத்தைத் தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காகப் பேசினாலும் அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர்.

அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்தைய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

ஏற்புரையில் அம்பை இவ்விருது பெறும் தருணம் தன்னைப் பொறுத்தவரை அபூர்வமானது, நடமாடிக் கொண்டு, விரைந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் விருது என்பதால் தன்னைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அதிகமாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது என்றார். பிற எழுத்தாளர்கள் சொல்வதுபோல் சன்னலைத் திறக்கக் கதைகள் தானாகத் தன்னிடம் வருவதில்லை என்றும் வானெழும் மேகங்கள் தன்னிடம் எழுத வேண்டும் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை என்றும் சொன்னார். பதினாறு வயதில் சாகசக் கதையாக முதல் நாவல் எழுதியதைத் தொடர்ந்து தன் எழுத்தின் வளர்நிலைகளைக் கூறினார். எழுத்தில் உண்மை - போலியைப் பாகுபடுத்துவது எளிதான காரியமல்ல. மேலும் உண்மையின் வரையறை என்ன என்ற கேள்வியும் உண்டு: “எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும் அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும் உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம்.”

தொடர்ந்து பின்வரும் வருடாந்திர இலக்கிய விருதுகளும் நிகழ்வில் வழங்கப்பட்டன.

புனைவு விருது - தமிழவன் - வார்ஸாவில் ஒரு கடவுள்

அபுனைவு விருது - முனைவர் முருகர் குணசிங்கம் - இலங்கையில் தமிழர்

கவிதை - லீனா மணிமேகலை - உலகின் அழகிய முதல் பெண்

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.

இவ்வாண்டு மாணவர் கட்டுரை இலக்கியப் பரிசு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்விருது அஞ்ஜெலா பிரிட்டோவுக்கு “Naan Poitu Varan”: The Importance of Tamil Studies in a Diasporic Context என்னும் கட்டுரைக்காக வழங்கப்படுகிறது.

நன்றி: காலச்சுவடு | http://www.kalachuvadu.com/issue-114/page79a.asp

யாழ் கருத்துக்களத்தில் தொடக்ககால உறுப்பினராக ("யாழ்" என்ற பெயரில்) இருந்த சுரதா அண்ணாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இணைய ஊடகத்தில் தமிழுக்கு பயன்படக்கூடிய பல்வேறு விடயங்களை அவர் எமக்கு அளித்துள்ளார். சுரதா அண்ணாவின் இணையத்தளம்: http://www.suratha.com

சுரதா அண்ணாவுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிகத் தாமதமாக வழங்கப்பட்டுள்ள விருது இது. எப்படி இருப்பினும்.. இப்பவாவது விருது கொடுத்து யாழ் (சுரதா) அண்ணாவின் திறமை ஊக்குவிக்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது..!

வாழ்த்துக்கள் சுரதா (யாழ்) அண்ணா..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் சுரதா அண்ணாவுக்கு. ஏனைய துறைகளில் பரிசு பற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு உண்மையிலேயே மிகவும் பணியாற்றியிருப்பவர்.இயல் இசை நாடகம் என்ற வரிசையில் கணணித் தமிழைக் கொண்டு வந்த அறிஞர்களில் முக்கியமானவர். காலம் கடந்தாலும் வரவேற்கத்தக்க விருது. திரு.சுரதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுரதா அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்

சுரதா அண்ணாவிற்கு நாங்கள் நிறையக்கடமைப்பட்டு இருக்கின்றோம். சும்மா உங்கடை பம்மாத்து விருதுகள் கொடுத்து புகழ்வதைவிட அவருக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுகொடுத்து அவர் பொருளாதாரத்தை பலப்படுத்தி இன்னும் பல ஆக்கபூர்வமான விடயங்களை தமிழுக்காக தமிழர்களுக்காக அவர் செய்வதற்கு ஆதரவு கொடுப்போம். எல்லாம் ஓசியில பாவிச்சு பழகிப்போட்டு கடைசியில சமூகசேவையாளன் இல்லாட்டிக்கு தமிழ்ப்பற்றாளன் என்று மட்டும் பேச்சோட சொல்லி நைசாக நழுவிவிடுற பழக்கத்தை நிறுத்திக்கொள்வோம்.

இப்படியானவர்களுக்கு நாங்கள் பொருளாதார ஆதரவு கொடுத்தால்தான் அவர்கள் துறைசார் ரீதியாக இன்னும் பல அரிய சேவைகளை செய்வார்கள். ஓசியில எல்லாம் வேணுமென்றால்.. பாரதியார் மாதிரி சாப்பாடு இல்லாமல் கிடந்து அழுந்த வைத்து அவரை நாங்கள் கெதியில பரலோகம் அனுப்பவேண்டியதுதான்.

நான்கூட இணையத்தளத்தில் உங்களுடன் கலைஞன் / மாப்பிள்ளை என்கின்ற பெயரில் இங்கு முன்னால் தோன்றி பல்வேறுவகைகளில் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றேன் என்றால் மோகனிற்கு அடுத்தபடியாக சுரதா அண்ணா அவர்களே காரணம். அவரது ஆங்கிலத்தில் தமிழில் எழுதுகின்ற தட்டச்சு பொறி இருந்து இருக்காவிட்டால் என்னை நீங்கள் பெரும்பாலும் வலைத்தளத்தில் சந்தித்து இருக்கமாட்டீர்கள்.

சுரதா அண்ணாவிற்கு இதயபூர்வமான நன்றிகள்! உங்கள் சேவைகள் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு எங்கடை ஆக்களுக்கு எல்லாம் ஓசியில செய்துகொடுத்து நாசமாய்ப்போகாமல் உங்கள் பொருளாதாரத்தை ஆகக்குறைந்தது உங்கள் துறைசார் முயற்சிகளை பலப்படுத்திக்கொள்வதற்காவது நம்மவரிடையே உங்கள் சேவைகளிற்கு கட்டணம் அறவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதோ கொடுத்திருக்கவேண்டிய விருது பிந்தித்தான் கிடைத்திருக்கிறது. இருப்பினும் இப்போதாகிலும் இத்துறையைத் தெரிவுசெய்து கொடுத்தது மகிழ்வைக் கொடுக்கிறது. மதிப்பிற்குரிய சுரதா யாழ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

இணைப்பிற்கு நன்றி இளைஞன்...

திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.

யாழ் கருத்துக்களத்தில் தொடக்ககால உறுப்பினராக ("யாழ்" என்ற பெயரில்) இருந்த சுரதா அண்ணாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இணைய ஊடகத்தில் தமிழுக்கு பயன்படக்கூடிய பல்வேறு விடயங்களை அவர் எமக்கு அளித்துள்ளார். சுரதா அண்ணாவின் இணையத்தளம்: http://www.suratha.com

சுரதா அண்ணாவுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இன்று பிரயோசனமாக அறிந்து கொண்ட விடயம் - சுரதா என்பவரை பற்றியது தான். அவருக்கு நல்வாழ்த்துக்கள்.

தகவலை அறிய தந்ததற்கு நன்றி இளைஜன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுரதாவுக்கு நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழும்போதே பாராட்டுவதும் கெளரவிப்பதும் செய்யப்படவேண்டும் என்பதில் சிரத்தையுடையது 'தோரணம்'. புதிய தொழில்நுட்ப யுகத்தில், இன்று நான்காம் தமிழாக தமிழ் கணனி வலைப் பின்னல்களூடாக அழகாகப் பவனி வருகிறது. எமக்குத் தெரிந்த மன்னராட்சி முதல் இன்று தனக்கான தனித்துவமான அரசாட்சியில் இல்லாத நிலையிலும் தமிழ் கோலோச்சுவதற்கு தன்னலமற்ற தமிழார்வலர்களின் அளப்பெரிய பங்களிப்பே காரமாணகும். இதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு சான்றுகளுண்டு. மற்றெல்லா மொழிகளும் அரசுகளின் அரவணைப்பால் வளமூட்டப்படும் போது தமிழ் அரசுகளால் 'தமிழால் முடியுமா? எனவாகக் கேலியுடன் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும்' தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரமாயிரமாண்டுகள் தாண்டியும் வாழும் மொழியாக இன்று புவியிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்று. இதைக் கடற்கோள் என தமிழில் அழைக்கப்பட்ட சுனாமியாலும் அழிக்க முடியவில்லை. வரலாற்றில் ஆக்கிரமிப்புகள் செய்த காலனித்துவச் சுனாமிகளாலும் அழிக்க முடியவில்லை.

உலகமொழிகளின் தரத்திற்கு இணையாக நிமிர்ந்து செல்கிறதென்றால் அது அன்று தொட்டு இன்று வரை தமிழால் முடியும் என்ற முனைப்புடன் அர்ப்பணிப்புகளை வழங்கிய தமிழார்வலர்களின் தொண்டுகளால்தான என உறுதிபட கூறமுடியும். அடுத்த யுகத்திற்கான தமிழ் பயணத்தை இலகுவாக்கியுள்ளார் சுரதா. தன்னலமற்ற தமிழ்த் தொண்டாற்றியவர்கள் வரிசையில் மதிப்புக்குரிய சுரதா யாழ்வாணனும் இடம்பெறுகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

சுரதா யாழ்வாணனின் அளப்பெரிய பங்காற்றியிருப்பதற்கான அங்கீகாரமாக காலச்சுவடால் வழங்கப்பட்ட இந்த விருதை நோக்கலாம். தமிழ்நாட்டு இந்திய எல்லைகள் தாண்டியநிலையில் சுரதாவிற்கு இப்படியொரு விருது கிடைத்திருப்பதானது தமிழ்ப் பேசும் உலகினருக்குக் கிடைத்த கெளரவமாகும்.

புதிய கணனி இணைய தொழில்நுட்ப உலகின் தமிழ்ப் பயணத்துக்கான அகண்ட சாலை அமைத்து இதில் பயணமாவோரின் மகிழ்வில் சங்மித்துள்ள சுரதாவே நீ வாழ்க! நீவிர் வாழ்க! வாழ்க!! என மனமார வாழ்த்துகிறோம்.

அன்றைய அதியமான் இன்றிருப்பானாகில் இந்தச் சுரதா யாழ்வாணனுக்கே நெல்லிக்கனி வழங்கப்பட்டிருக்கும்!

-யூலை 2009 பாரீஸ்

thanks: http://thoaranam.blogspot.com/2009/07/3_16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.