Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் சுயநலத்தால் வீழ்ந்த போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடு தமிழீழத்தை நிறுவிட தமிழர்கள் ஒத்துழைத்தார்களோ இல்லையோ.. ஈழத்தில் இருந்து தமிழகம் வரை தமிழர்கள் ஒரு விடயத்தில் மாற்றுக் கருத்து.. மண்ணாங்கட்டிக் கருத்துகளின்றி ஒத்துழைத்துள்ளார்கள்.. அந்த விடயத்தில் இன்றும் தமிழர்கள் தமக்கிடையே போட்டி இருந்தாலும்.. ஒத்துழைக்கிறார்கள்.

அது வேறெதுவும் இல்லை.. ஈழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தவரின் துயர நிலையை தமதாகக் காட்டி மேற்கு நாடுகளில் (கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா) அகதி அந்தஸ்து வாங்கி தங்களது பொருளாதார அகதி நிலையை.. அரசியல் அகதிகள் நிலையாகக் காட்டி ஆகக் குறைந்தது மேற்கு நாட்டு அரசாங்கங்களின் பணத்தில் சீவிக்க வழிதேடிக் கொண்டதே அல்லது கொள்வதே அது.

இவ்வாறு அகதி அந்தஸ்துப் பெற்ற/பெறுகின்ற தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் தரப்பினரை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அந்த வகையில்...

ஈழப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காத தமிழகத்தில் இருந்து கூட தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று பொய் கூறி மேற்கு நாடுகளுக்கு வந்து அகதி அந்தஸ்துகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் அநேகர் இலங்கையில் நடந்த போராட்டத்தில் எந்த வகையிலும் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏன் பலர் இலங்கையில் நடக்கும் தாயக விடுதலைப் போராட்டத்தின் அரசியல் பின்னணியைக் கூட அறிந்திராதவர்களாக இருக்கின்றனர். ஆனால் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இதில் பல பிரிவினர் உள்ளனர். பிரதானமாக இதில் 5 வகுப்பினரை இனங்காணலாம்.

1. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காத.. அல்லது பாரதூரமான பாதிப்புக்களைச் சந்திக்காத (வடக்குக் கிழக்குத் தமிழர்கள்.. உள்ளடங்க) பல தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம் குடும்பங்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று குடியுரிமையும் பெற்றுள்ளன.. (பெரும்பாலானோர் இந்த வகையினரே..!)

2.தமிழீழ விடுதலைப் போராட்டத்தால் எந்தப் பாதிப்புக்களையும் சந்திக்காத தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் (கொழும்பு வாழ் மேட்டுக்குடி தமிழர்கள் அல்லது அரசியல் வர்த்தகப் பின்னணி கொண்ட தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள்.) இந்த அரசியல் தஞ்சம் என்பதைப் பெற்றுள்ளனர்.

3. போராட்டத்தில் இணைந்து பணியாற்றி.. வெளிநாட்டுக்கு அகதியாகப் போய் வாழலாம் என்ற ஆசை வர அல்லது ஊட்டப்பட போராட்டத்தை இடைநடுவில் விட்டுவிட்டு அல்லது காட்டிக் கொடுத்துவிட்டு ஓடி வந்து அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழர்கள்...!( இந்த வகையினரிலும் பலர் உள்ளனர்.)

4. போராட்டத்தில் உண்மையில் பங்கெடுத்து.. அல்லது போராட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு அங்கு நிலவிய போட்டி அரசியலால் அரசாங்கத்தின் பகுதியில் கூட பாதுகாப்புடன் வாழ முடியாது என்ற புற நிலையில் அரசியல் தஞ்சம் பெற உண்மையான தகுதியுடன் அரசியல் தஞ்சம் அடைந்தோர். (இந்த வகுப்பில் வெகு சிலரே உள்ளனர்.)

5. சிறீலங்கா அரசாங்கச் சார்பு, புலி எதிர்ப்பு ஒட்டுக்குழுக்களில் இருந்து சிறீலங்கா அரச பாதுகாப்பில் வாழ்ந்து கெட்டு பின்னர் அதனாலேயே பணம் கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அதன் சிபார்சுக் கடிதங்கள் அல்லது ஒட்டுக்குழுக்களின் சிபார்சுக் கடிதங்களைக் காட்டி அல்லது அரச பணியாளர்களாக இருந்து புலிகள் தம்மைக் கொல்லப் போகிறார்கள் அரசாங்க புலனாய்வுத்துறை தன்னை இலக்கு வைத்துவிட்டது என்று பொய் சொல்லி அரசியல் தஞ்சம் பெற்றோர். (அரசாங்கப் பணி நிமித்தம்.. அரசியல் பிரதிநிதிகளாக வெளிநாடுகளுக்கு வந்து மேற்குலக வாழ்க்கை முறையில் மயங்கி.. அகதி அந்தஸ்தானவர்களில் பலர் இந்த வகையினர்.)

என அகதி அந்தஸ்து வாங்கியோரை வைப்படுத்தலாம்.

இந்த வகையில் நோக்கின்.. உண்மையைப் பேசின்.. மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்ற தமிழர்களில் அநேகர் உண்மையான அரசியல் தஞ்சத்துக்கு உரியவர்கள் அல்லர். அநேகர் சட்டத்தரணிகளால் எழுதிக் கொடுத்த பொய்களைப் பேசியே அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர்.

இதில் எல்லாத் தமிழர்களும் வெளிப்படுத்திய ஒற்றுமை என்ன என்றால்.. தமது சுயநலத்துக்காகப் பேசிய பொய்களில்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும்.. அதன் பிரதான போராட்ட சக்தியாக விளங்கிய விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழர்கள் அளித்த அல்லது அளிக்கும் வாக்கு மூலங்களே..!

கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் தஞ்சம் பெற்ற தமிழனும் ஒரு கட்டத்தில் தான் புலிகளாலும் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் ஆபத்தைச் சந்தித்து இலங்கையில் எங்கும் வாழ முடியாத சூழ்நிலையிலேயே மேற்குநாடுகளுக்கு தப்பி வந்ததாகக் கூறி இருக்கிறான் அல்லது கூறி வருகிறான் என்பதுதான் நடைமுறை உண்மை. அதனடிப்படையிலேயே இவர்களுக்கு அரசியல் அகதி என்று கருதி தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது அல்லது படுகிறது.

இவர்கள் வழங்கிய வாக்கு மூலங்கள் சட்ட வலுவுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னே தான் அகதி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இவர்கள் தமது சுயநலத்துக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்திய பொய்கள் கூட உண்மைகளாக சட்ட வலுவுள்ள கூற்றுக்களாகவே மேற்குநாடுகளின் குடிவரவு குடிபெயர்வு குறிப்பேடுகளில் இடம்பிடித்துள்ளன. அங்கிருந்து அவை அரசாங்கங்களின் கொள்கை வகுப்பாளர்களுக்கு பரிமாறவும் படுகின்றன.

மேலும்.. கடந்த (2009 முதல் 6 மாதங்களில் மட்டும்) 6 மாதங்களில் கூட சுவிஸ்லாந்தில் மட்டும் 7000 தமிழர்கள் அரசியல் அந்தஸ்துக்கோரி விண்ணப்பித்துள்ளனர். இது இந்த ஆண்டில் அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களில் இரண்டாவது பெரிய தொகையாகும்.

கடந்த 35 ஆண்டுகால போராட்டத்தில் ஈடுபட்டு மாவீரனாவர்களின் தொகை கிட்டத்தட்ட 25,000 ஆகும். மரணமான மக்களின் தொகை கிட்டத்தட்ட 130,000 (தமிழ் தரப்புகளின் செய்திப்படி) ஆகும்.

ஆனால் மேற்குநாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றவர்களின் தொகை 1.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.1981 இல் இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை கிட்டத்தட்ட 3.2 மில்லியன்களாகும். இதைவிட தமிழகம்.. மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்கா என்றும் தமிழர்கள் இடம்பெயர்ந்து போயுள்ளனர்.

அதுமட்டுமன்றி கடந்த 35 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக இலங்கையின் வடக்குக் கிழக்கு.. தமிழர் தாயகம் என்ற உச்சரிப்பு பலமாகிக் கொண்டிருக்க.. அங்கிருந்த காணிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு (மேற்குநாடுகளுக்கு) அகதிகளாக ஓடிவந்து நிரந்தர வதிவிட அனுமதிகளை பெற்றுவிடவே தமிழர்கள் முனைப்புக் காட்டினர்.

இன்று அவ்வாறு அகதி அந்தஸ்துப் பெற்று மேற்குநாடுகளில் நிரந்தர வதிவிட உரிமையும் பெற்றுவிட்டுள்ள தமிழர்களில் பலர் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும் வடக்குக் கிழக்குக்கு வெளியிலும், இந்தியாவில்.. தமிழகத்தில் கர்நாடகாவில் (பெங்களூரில்) கேரளாவிலும் வீடுகள் காணிகளை வாங்கிவிட்டுள்ளதுடன் பெருமளவில் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் இடங்களாக இவற்றை பாவித்தும் வருகின்றனர்.

அதுமட்டுமன்றி தமிழகத் தமிழர்கள் (மற்றும் தென்னிந்தியர்கள்) தமது வெளிநாட்டு முதலீட்டுக்கான மூலதனமாக அகதி அந்தஸ்து பெற்று மேற்குநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களைப் பாவிக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜவுளிக்கடைகளும் நகைக்கடைகளும் இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலிய பிராந்திய நாடுகளில் இருக்கின்றன. சாப்பாட்டுக்கடைகள் இருக்கின்றன. தொலைக்காட்சிகள்.. சினிமா என்பனவும் நன்கு செழிப்பாக வளர்கின்றன.

இந்த அடிப்படையில் தான் மேற்கு நாடுகளில் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளும் இருக்கின்றன. 2009ம் ஆண்டின் தொடக்கம் வரை அவர்கள் வேறு எந்தக் கவலையும் இன்றி.. எப்படி தமது அரசியல் அகதி அந்தஸ்து நிலையை தற்காத்துக் கொள்வது.. எப்படி நிரந்தர வதிவுரிமை பெறுவது.. அப்படிப் பெற்றுவிட்டால் எப்படி கலியாணம் முடிப்பது.. அப்படி முடித்துவிட்டால் எப்படி பொருளாதாரத்தை ஈட்டுவது.. அப்படி ஈட்டிவிட்டால் எப்படி அதைப் பெருக்குவது.. இப்படியான நடவடிக்கைகளிலேயே தமிழர்கள் அதிகம் நேரத்தைச் செலவு செய்தனர்.

தாயகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எதிராகச் சொன்ன பொய்களுக்குப் பிராய்ச்சித்தம் தேடவோ என்னவோ ஒரு தரப்பினர் (இன்னொரு தரப்பினர் மாற்றுக் கொள்கை மாணிக்கங்களாக சிறீலங்கா சிங்கள அரச விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்.) அப்பப்போ சில பத்து டொலர்களை தூக்கி வீசிவிட்டு "நாங்களும் புகலிடத்தில் இருந்து குளிருக்குள் இருந்து உழைச்சு உதவி செய்தனாங்கள் தானே" என்று கதையளக்க வாய்ப்பாக சில உதவிகளைச் செய்து கொண்டிருதனர்.

ஆனால் எந்த ஒரு உருப்படியான வேலைத்திட்டத்தின் கீழும் தமிழீழ விடுதலைக்கான சாதகமான புறநிலை அரசியல் அல்லது இராஜதந்திரச் சூழலை மேற்குநாடுகளில் உருவாக்க தமிழர்கள் முயலவில்லை என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.

இலங்கையில் இருந்து தமிழர்கள் 1983 முதல் மேற்குநாடுகளில் அகதி அந்தஸ்துக்களைப் பெருமளவில் பெற்று வருகின்ற போதும் மேற்குநாடுகளில் அந்தந்த நாட்டு மக்களிடம் அரசாங்கங்களிடம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் தொடர்பாக அரசியல் விழிப்புணர்வூட்டும் உருப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முயலவில்லை. தாயகத்தில் அரசியல் ரீதியாக தாம் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கூட வெளிக்கொண்ர முயலவில்லை அல்லது அதைச் செய்ய பக்குவப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய உண்மை.

அதன் பலாபலன்.. 1998 முதலான தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதத் தடை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தமிழர்கள் அடிப்படை அரசியல் உரிமைக்கான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக உலகம் அங்கீகரிக்காத நிலை.

இந்தப் புறநிலைககள் திடீர் என்று சிறீலங்காவின் நகர்வுகளால்.. இந்தியாவின் நகர்வுகளால் உருவானவை அல்ல. தமிழர்கள் தங்கள் சுயநலத்தையே பெருதுபடுத்தி வாழ விளைந்ததாலும் கூட உருவானவை.

தற்போது புலம்பெயர் தமிழர்களாக தம்மை அடையாளம் காட்டும் இந்த அகதி அந்தஸ்து தமிழர்கள் புலம்பெயர்ந்தது முதல் ஒன்றை மட்டும் வளர்க்க மறக்கவில்லை. அதுதான் மாற்றுக் கருத்து அரசியல்.

இதனூடு புலி எதிர்ப்பு, தமிழீழ விடுதலைப் போராட்ட எதிர்ப்புச் சிந்தனைகள் தொடர்ச்சியாக விதைக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றுற்கு எதிராகவும் காத்திரமான பங்களிப்புக்களை தமிழர்கள் செய்ய முனையவில்லை.

இந்த மாற்றுக்கருத்தாளர்கள் தமிழர்களின் அரசியல் தேவை.. சுயநிர்ணய உரிமை அனைத்தையும் புலிஜிசமாகவே வர்ணித்துக் கொண்டிருந்தனர்.. இருக்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு.. தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை உரிமைகளையும் எதிர்த்தே கருத்துக்களை விதைத்தனர். அது மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் மத்தில் உரிமை வேண்டாம் எனும் ஒரு தரப்பும் இருப்பதாக இனங்காட்டியது. இதனை முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரும் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

இறுதியில் தமிழர்களின் மதியூகம் அற்ற சுயநல செயற்பாடுகளால்.. 35 ஆண்டுகளாக, விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப் பலியிட்டு வளர்த்த.. காத்த விடுதலைப் போராட்டம்.. அவர்களின் கண் முன்னே சிதைவடைந்து போனது. அப்போது கூட ஆகக் கூடியது 70 நாட்கள் தான் அதுவும் பெரும் பாடுபட்டு வீதியில் இறங்கிப் போராடினார்கள். அதிலும் பலர் கொத்துரொட்டியும்.. இடியப்ப பிரியாணியும்.. புட்டுப் பிரியாணியும் இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. அதைச் சாப்பிடுவம் என்று.. தான் இறங்கினார்கள். இளையவர்களில் பலர் பொழுதுபோக்கிற்காகக் கூடினர் என்பதும் உண்மை..!

இவர்கள் அகதி அந்தஸ்து வாங்க தாயகத்தில் விமானக் குண்டு வீச்சுக்களையும் துப்பாக்கி வெடிகளையும் ஆட்லறி எறிகணைகளையும்.. பல்குழல் வெடிகணைகளையும் தாங்கி நின்ற 3 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக அடிப்படை வாழ்வுரிமை இழந்து (இந்தப் போராட்டம் ஆரம்பமாக முதல் மேற்கு நாடுகளில் அரசியல் அந்தஸ்து வாங்கிய பலர் இருந்த பொருளாதார நிலையை விட இன்று அகதிகளாக அடைப்பட்டுக் கிடக்கும் மக்கள் பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்தனர். குறிப்பாக விவசாய விளை பொருட்கள் கடலுணவுகள் போதிய அளவுக்கு அவர்களிடம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.)அடிப்படை வாழ்வுக்கான பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும் அவர்களின் நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்லி தொடர் போராட்டங்களால் அவர்களுக்கு சிறீலங்கா சிங்கள அரசின் திறந்த வெளிச் சிறைகளில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுக்க இந்த அகதி அந்தஸ்து தமிழர்களுக்கு மனம் வரவில்லை..!

இது எதனைக் காட்டுகிறது. தமிழர்களின் சுட்டுப்போட்ட சுயநலத்தையே காட்டுகிறது. இப்படியான ஒற்றுமையற்ற.. ஒரு மனித இனக்குழுமத்துக்கு.. இந்த உலகில்.. சுதந்திர நாடு அமைக்கப் போராடியது சரியா என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. திருந்துவார்களா இந்தத் தமிழர்கள்..???!

ஆயிரம் சித்தாந்தம் பேசி.. காலத்தை ஓட்டும் தமிழன்.. ஒரு சித்தாந்தத்தையாவது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருப்பானா..??! எதிர்காலத்திலாவது.. ஓரிருவரின் தியாகத்தில் குளிர்காய நினைக்காமல்.. முழு இனத்தில் எல்லோரும் (அல்லது பெருன்பான்மையானோர்) ஒற்றுமையோடு போராட முன் வருவதோடு.. தமிழர்கள் வாழும் இடமெங்கும் சாத்தியமான வழிகளில் எல்லாம் தொடர்ந்து போராடினால் தான்.. தமிழர்களுக்கு என்று ஒரு தேசம்.. விடிவு.. இந்த உலகில் வரும்..!

ஓய்வெடுத்து... சுயநலம் பார்த்து.. போராடிக் கொண்டிருந்தால்.. விடுதலை கிட்டாது. அகதி அந்தஸ்துக் கிட்டலாம்..! இதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றேல்.. தமிழர்களின் நிலை இவ்வுலகில் தாழ்வது உறுதி..!

source: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகையில் நோக்கின்.. உண்மையைப் பேசின்.. மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்ற தமிழர்களின் அநேகர் உண்மையான அரசியல் தஞ்சத்துக்கு உரியவர்கள் அல்லர். அநேகர் சட்டத்தரணிகளால் எழுதிக் கொடுத்த பொய்களைப் பேசியே அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர்.

உண்மை கசக்கும் ,

  • கருத்துக்கள உறவுகள்

சில சிங்களவர்களும் தமிழர் என்று சொல்லி வெளினாட்டுக்கு அகதி அந்தஸ்து கோரியிருக்கினம். மட்டக்களப்பில் இந்தியா அமைதிப்படையில் இருந்த தமிழ் நாட்டு இராணுவத்தினர் ஒருவரும் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கேட்டிருக்கிறார்.

வந்தவர்கள் வந்த இடத்தில் உழைச்சு காசை மட்டும் ஊருக்கு அனுப்பி வைத்து போட்டு இருந்தாலும் பறவாய் இல்லை... இலங்கையிலை வாழ முடியாது உயிர் பிரச்சினை எண்டு விசா பெற்று பிறகு குடியுரிமை எடுத்து போட்டு முதல் வேலையா பாஸ்போட்டை எடுத்து கொண்டு ரிக்கட் போடுவினம்... போட்டு கொழும்பிலை இறங்காட்ட பிறவி பெரும் பயனை அடைய மாட்டீனம்...

எனக்கு கேஸ் எடுத்த வெள்ளை பரீஸ்ரர் ஒருவர் சொன்னார்... உங்கட ஆக்கள் அகதி அந்தஸ்து கோருவினம்.. கோரி எடுத்து பாஸ் போட்டையும் எடுத்து கொண்டு கொழும்பு போய் வருவினம் வரும் வளியில் இங்கை விமான நிலையத்திலை குடிவரவு அதிகாரி கேப்பான் மிக அக்கறையாக " எப்படி சிறீலங்கா...??? , அங்கை உங்களுக்கு ஏதாவது பிரச்சினையோ....??? " ( How is Srilanka....?? Did you had any problem down there...?? ) இவர்களும் வளிந்து கொண்டே சொல்வார்கள் இல்லை , இல்லை அங்கை( எங்களுக்கு ) ஒரு பிரச்சினையும் இல்லை...

இந்த தகவல்கள் குடிவரவு அதிகாரியால் அவர்களின் பாஸ் போட் விபரங்களோடு சேர்த்து ஆவணப்படுத்த படுகின்றன... இலங்கையில் தமிழருக்கு எந்த பிரச்சினையும் இல்லாது இங்கை வந்து அகதி அந்தஸ்து கோருபவர்களாகத்தான் தமிழர்கள் பார்க்க படுகின்றனர்...

35 லட்ச்சத்தில் 12 லட்ச்சம் வெளிநாடுகளில்... அதிலும் விட முக்கியமாக 10 லட்ச்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்து சிங்களவரோடு சேர்ந்து வாழ தலைப்பட்டு கொழும்பிலும் அதனை அண்டியும் வந்து வாழ்கிறார்கள்...

ஆகவே தமிழருக்கு இப்ப என்ன பிரச்சினை.... ???

இப்ப 3லட்சம் தமிழருக்குத்தான் பிரச்சனை இருக்கு அதுவும் அவர்கள் புலிகளுடன் இருந்தபடியால்தான் பிரச்சனை,மற்றும் படி 32லட்சம் தமிழருக்கு no problem at all

:lol: நமக்கெல்லாம் சுதந்திரம் ஒரு கேடா????
  • கருத்துக்கள உறவுகள்

தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலையொன்றுதான் வழியா? பின்னடைவிற்கான திறனாய்வு தேவைதான். குறைகளைக் கலைந்து தளராமல் முயற்ச்சிப்பதே சித்திக்கு வழி. முதலில் முகாம்களில் சிதையுறும் மக்களை காப்பாற்ற வழியுண்டாவென தேடுவதைவிட்டு அவன் சரியில்லை இவன் சரியில்லை என இப்போது அலசுவதால் உடனடி நிவாரணம் கிட்டுமா? காட்டிக்கொடுப்புகளையும், தடைகளையும் கடந்து இவ்வளவு காலம் போராடவில்லை? நம்பிக்கை வையுங்களப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

பல நிதர்சனமான உண்மைகளைத் தொட்டிருக்கிறார் நெடுக்கர். ஆனால் இந்த அலசல்களை வெளியிடும் நேரம் இதுவா என்பதே கேள்வி.

எப்போதுமே ஒரு விடயம் நடந்து முடிந்தபின் அதை அலசுவது என்பது சுலபமானது. ஆகையால் இந்த வகை விமர்சனங்கள் தமிழரின் கை ஓங்கி இருந்த நேரத்தில் வெளிவந்திருக்க வேண்டும்..! ஆனால் நாங்கள் எல்லோரும் அதல பாதாளத்தில் கிடக்கும் போது இதைச் சொல்லி என்ன லாபம்? கால் இடறி கீழே விழுந்தவனிடம் நீ கால் இடறித்தான் விழுந்தாய் என்று வியாக்கியானம் பேசுவதற்கு ஒப்பாக அல்லவா இருக்கிறது. தயவு செய்து நெடுக்கர் இதை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

தமிழரிடத்தில் பல பாரதூரமான குறைப்படுகள் இருந்திருக்கின்றன; இருக்கின்ற‌ன; இருக்கும். ஆனால் விடுதலையடைந்த இனங்கள் எல்லாம் குறையற்றவைபோலவும், நாம்தான் எதற்குமே லாயக்கற்றவர் போலவும் கருத்துக்களை முன்வைப்பது சரியாகப் படவில்லை. Balanced Approach இங்கே கையாளப்படவில்லை.

ஒரு சின்ன‌ஞ்சிறிய‌ இன‌ம், ப‌ல‌ த‌டைக‌ளையும் தாண்டி தன‌து போராட்ட‌த்தை 35 வருடங்களாகக் க‌ட்டிக்காத்து அதன் நியாயப் பாட்டை உல‌க‌ அர‌ங்கில் ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. இதை வெற்றியாக்குவ‌தும் தோல்வியுற‌ வைப்ப‌தும் இனிவ‌ரும் கால‌ங்க‌ளில் நாம் எடுக்க‌ப் போகும் ஆக்கபூர்வமான ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் த‌ங்கியிருக்கிற‌தே ஒழிய, எம்மை நாமே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் அல்ல. அந்த வகையில் எமது உள்வீட்டுச் சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உல‌க‌ ஓட்ட‌த்துட‌ன் இசைந்து ஒற்றுமையாக‌ எம‌து நியாய‌ப்பாட்டை முன்னிறுத்த முன்வ‌ர‌வேண்டும்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் புலம்பெயர் தமிழர் சமூகமே போராட்டத்திற்கென இருக்கும் கடைசித் துருப்புச் சீட்டு. அச்சமூகம் அகதி அந்தஸ்து கோரியவனாலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டது. இச்சமயத்தில் அவனிடம் பிழைபிடிப்பது (சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் சரியானவையாகவே இருந்தாலும்) துருப்புச்சீட்டை வேண்டுமென்றே கைவிடுவதற்கு ஒப்பானது. :lol:

இது எதனைக் காட்டுகிறது. தமிழர்களின் சுட்டுப்போட்ட சுயநலத்தையே காட்டுகிறது. இப்படியான ஒற்றுமையற்ற.. ஒரு மனித இனக்குழுமத்துக்கு.. இந்த உலகில்.. சுதந்திர நாடு அமைக்கப் போராடியது சரியா என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. திருந்துவார்களா இந்தத் தமிழர்கள்..???!

இனத்துக்கான சுதந்திரப்போராட்ட முயற்ச்சியை சுயநலத்திற்காக பாவித்து இனச்சுதந்திரத்தை கருவறுத்துள்ளோம் என்பது மறுக்கமுடியாத உண்மையே. இத்தோடு அன்று தொட்டு தமிழக பிரதான அரசியல் கட்சிகள் இந்த சுதந்திர முயற்சியை தமது சுயநல அரசியலுக்காக பாவித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக எமக்கு நாமே குழிதோண்டியது என்பது உண்மை.

எல்லோரும் படிப்படியாக நெளிவு சுழிவுகளுடாக அனுசரித்து வாழக்கற்றுக்கொண்டார்கள். 32 இலட்சத்தில் மாட்டுப்பட்டது 3 இலட்சம் மக்கள். இந்த மூன்று இலட்சம் மக்களை சிங்களவனும் ஏனைய தமிழர்களும் சேர்ந்தே நரகவாழ்வில் தள்ளியுள்ளனர். எல்லோரும் விலத்திக்கொண்டு சிங்களவனுடன் வாழ்ந்துகொண்டு இராணுவக்கட்டுப்பாட்டில் வாழ்ந்துகொண்டு உலகெங்கும் பல்லின தேசிய இனங்களுடன் அனுசரித்து வாழ்ந்துகொண்டு புலிகளுக்கு எதிராக அகதி அந்தஸ்த்துக்காக பொய் கூறி சாட்சிகள் சொல்லிக்கொண்டு அதே நேரம் தமிழீழம் பெற்றுவிட வேண்டும் என்று துடித்தனர். பொருளாதராத்தில் பின்தங்கிய மக்களே இறுதியில் இந்த தமிழீழ விருப்த்தை நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டனர். உண்மையில் துரோகத்துக்கெல்லாம் அப்பனான துரோகம் இது. இந்த கேட்டில் அவன் துரோகி இவன் துரோகி என்றுவே பினாத்திக்கொண்டு இருப்பது எவ்வளவு கேவலம் !

இந்தப் புலப்பெயர்வு என்பது இனத்துக்கான சுதந்திரத்தை விட மேலானது என்று புலம்பெயர்ந்தவர்களின் வாழ்கை முறை பொருளாதார வசதி கல்வி சுற்றுலா என அனைத்தும் ஒவ்வொரு ஈழத்தில் வாழ்நதவனையும் வெளிநாடு சென்றுவிட துர்ண்டியது. நாட்டை விட்டு வெளியேறிவிடத் தூண்டியது. இதுவும் ஒரு மோசமான நிலை.

32 இலட்சம் மக்களின் விடுதலை வெறும் 3 லட்சம் மக்களின் கைகளில் நிர்ப்பந்தமாக திணிக்கப்பட்டு அவர்கள் நிர்கதியாக்கப்பட்டது மாபெரும் சுயநலம் என்றால் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. போராட்ட முயற்ச்சியில் இருந்து மக்கள் பெருமளவு விலத்தியபின் அழுத்தங்கள் கொடுத்துக்கொண்டு இருக்காவிட்டால் இந்த 3 லட்சம் வறிய மக்களும் சிங்களவனுடன் சேர்ந்து அனுசரித்து வாழ்தல் குறித்து ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும். வேறு வழி இல்லை. பெருமளவு மக்கள் அனுசரித்து வாழப்பழகிவிட்டார்கள். வெளியேறி விட்டார்கள். அனுசரித்து வாழ்பவர்களோ அல்லது வெளியேறியவர்களோ களத்தில் இறங்கவும் துளியும் தயாராக இல்லை இந்நிலையில் வேறு வழி என்ன இருக்கின்றது?

உண்மையில் என்ன திருத்தத்தை எதிர்பார்க்க முடியும்? எவ்வாறு திருந்த முடியும்? சுயநலம் வாழ்கை முறையாக பிற நாடுகளின் குடியுரிமையாக நிரந்தரமாகிவிட்டதன் பின்னர் எவ்வாறான திருத்தம் சுதந்திரம் குறித்து நடைமுறைக்கு வரும்? நாமெல்லோரும் தாயகம் செல்லுதல் ஒன்றே திருந்துவதற்கான ஒரே வழி. இது சாத்தியப்படப்போவதில்லை என்பதே யதார்த்தம். தமிழக அரசியல்வாதிகள் திருந்தப்போவதும் இல்லை. மாற்றங்களும் திருத்தங்களும் எவ்வகையிலும் எதிர்பார்க்க முயாத துர்பாக்கிய நிலையில் தமிழினம் உள்ளது. தனித் தமிழீழக் கோரிக்கைக்கும் தமிழீழம் பெற்றுவிட விருப்பம் உடையவனும் அதற்கு தகுதியுடையவனாய் உரிய இடத்தில் இருந்து உரிய கடமைகளை செய்வது ஒன்றே வழி இல்லையேல் சிங்களவனுடன் எஞ்சிய மக்களும் சேர்ந்து வாழ்தலுக்கான அனுசரணையை வழங்க வேண்டும். தொடரும் சுயநலத்திற்கும் துரோகத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி குறித்தே இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆயிரம் சித்தாந்தம் பேசி.. காலத்தை ஓட்டும் தமிழன்.. ஒரு சித்தாந்தத்தையாவது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருப்பானா..??! எதிர்காலத்திலாவது.. ஓரிருவரின் தியாகத்தில் குளிர்காய நினைக்காமல்.. முழு இனத்தில் எல்லோரும் (அல்லது பெருன்பான்மையானோர்) ஒற்றுமையோடு போராட முன் வருவதோடு.. தமிழர்கள் வாழும் இடமெங்கும் சாத்தியமான வழிகளில் எல்லாம் தொடர்ந்து போராடினால் தான்.. தமிழர்களுக்கு என்று ஒரு தேசம்.. விடிவு.. இந்த உலகில் வரும்..!

முதலில் ஒழிய வேண்டியது சாதி வேற்றுமை. தமிழர்கள் மொழி, இன, மத வேறுபாட்டைப் புறம்தள்ளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் சாதி வேற்றுமையைப் புறக்கணிக்க முடியவில்லை. சாதியின் பெயரால் ஒரு கிராமத்தையே வடக்கு தெற்கு மத்தி என்று கூறுபோட்டுக் காவல் காப்போம். ஆனால் சிங்களவர் தமிழரது நிலத்தை ஆக்கிரமிப்பது எமக்குக் கேவலமாகப் படவில்லை.

தமிழினத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது, எமது குடும்பம் சொந்தம் ஊர் என்ற எல்லைக்குள்ளேயே நிற்கும்வரை நாம் ஒற்றுமைப்படப் போவதில்லை.

இன்று எமது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தோம். இன விடுதலை என்ற பொதுவான சிந்தனை இல்லையேல் நாளை எமது இனம் அழியப் போவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒழிய வேண்டியது சாதி வேற்றுமை. தமிழர்கள் மொழி, இன, மத வேறுபாட்டைப் புறம்தள்ளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் சாதி வேற்றுமையைப் புறக்கணிக்க முடியவில்லை. சாதியின் பெயரால் ஒரு கிராமத்தையே வடக்கு தெற்கு மத்தி என்று கூறுபோட்டுக் காவல் காப்போம். ஆனால் சிங்களவர் தமிழரது நிலத்தை ஆக்கிரமிப்பது எமக்குக் கேவலமாகப் படவில்லை.

தமிழினத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது, எமது குடும்பம் சொந்தம் ஊர் என்ற எல்லைக்குள்ளேயே நிற்கும்வரை நாம் ஒற்றுமைப்படப் போவதில்லை.

இன்று எமது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தோம். இன விடுதலை என்ற பொதுவான சிந்தனை இல்லையேல் நாளை எமது இனம் அழியப் போவது நிச்சயம்.

சாதியை நிலைநாட்ட, சொத்துக்கள் பறிபோவதைத் தடுக்க‌ ஏதோ ஒரு முறையில் சித்தப்பா, மாமன் முறை வருபவர்களையெல்லாம் தமது பெண்களுக்கு (தெரிந்துகொண்டே) திருமணம் செய்துவைக்கும் பெருமைமிக்க‌ இனம்தானே எங்களது? அதனால் சிங்களவன் நிலத்தைப் புடுங்குவதால் எந்த வெட்கக்கேடும் இல்லை எமக்கு..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி என்பது வடக்கில் சில கிராமங்களில் மட்டுமே இருந்தது. சாதி ஒரு பிரசனையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை இப்பொழுது. சில கிராமங்களின் பிரசனைகளை முழு தமிழர்களின் பிரச்சனையாக கருதவேண்டாம். சாதி அழிந்து கொண்டு இருக்கின்றது. நாம் வேகமாகவும், ஒற்றுமையாகவும் இனவிடுதலைக்காக செயல்படும் நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது வடக்கில் சில கிராமங்களில் மட்டுமே இருந்தது. சாதி ஒரு பிரசனையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை இப்பொழுது. சில கிராமங்களின் பிரசனைகளை முழு தமிழர்களின் பிரச்சனையாக கருதவேண்டாம். சாதி அழிந்து கொண்டு இருக்கின்றது. நாம் வேகமாகவும், ஒற்றுமையாகவும் இனவிடுதலைக்காக செயல்படும் நேரம்.

எங்கட ஊரில நடந்ததை, நடக்குறதைச் சொன்னனம்மா..! :lol: நீங்கள் சொன்ன மாதிரி வடக்கில மட்டும்தான் உந்தப் பிரச்சினையோ தெரியாது..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல நிதர்சனமான உண்மைகளைத் தொட்டிருக்கிறார் நெடுக்கர். ஆனால் இந்த அலசல்களை வெளியிடும் நேரம் இதுவா என்பதே கேள்வி.

எப்போதுமே ஒரு விடயம் நடந்து முடிந்தபின் அதை அலசுவது என்பது சுலபமானது. ஆகையால் இந்த வகை விமர்சனங்கள் தமிழரின் கை ஓங்கி இருந்த நேரத்தில் வெளிவந்திருக்க வேண்டும்..! ஆனால் நாங்கள் எல்லோரும் அதல பாதாளத்தில் கிடக்கும் போது இதைச் சொல்லி என்ன லாபம்? கால் இடறி கீழே விழுந்தவனிடம் நீ கால் இடறித்தான் விழுந்தாய் என்று வியாக்கியானம் பேசுவதற்கு ஒப்பாக அல்லவா இருக்கிறது. தயவு செய்து நெடுக்கர் இதை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

தமிழரிடத்தில் பல பாரதூரமான குறைப்படுகள் இருந்திருக்கின்றன; இருக்கின்ற‌ன; இருக்கும். ஆனால் விடுதலையடைந்த இனங்கள் எல்லாம் குறையற்றவைபோலவும், நாம்தான் எதற்குமே லாயக்கற்றவர் போலவும் கருத்துக்களை முன்வைப்பது சரியாகப் படவில்லை. Balanced Approach இங்கே கையாளப்படவில்லை.

ஒரு சின்ன‌ஞ்சிறிய‌ இன‌ம், ப‌ல‌ த‌டைக‌ளையும் தாண்டி தன‌து போராட்ட‌த்தை 35 வருடங்களாகக் க‌ட்டிக்காத்து அதன் நியாயப் பாட்டை உல‌க‌ அர‌ங்கில் ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. இதை வெற்றியாக்குவ‌தும் தோல்வியுற‌ வைப்ப‌தும் இனிவ‌ரும் கால‌ங்க‌ளில் நாம் எடுக்க‌ப் போகும் ஆக்கபூர்வமான ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் த‌ங்கியிருக்கிற‌தே ஒழிய, எம்மை நாமே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் அல்ல. அந்த வகையில் எமது உள்வீட்டுச் சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உல‌க‌ ஓட்ட‌த்துட‌ன் இசைந்து ஒற்றுமையாக‌ எம‌து நியாய‌ப்பாட்டை முன்னிறுத்த முன்வ‌ர‌வேண்டும்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் புலம்பெயர் தமிழர் சமூகமே போராட்டத்திற்கென இருக்கும் கடைசித் துருப்புச் சீட்டு. அச்சமூகம் அகதி அந்தஸ்து கோரியவனாலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டது. இச்சமயத்தில் அவனிடம் பிழைபிடிப்பது (சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் சரியானவையாகவே இருந்தாலும்) துருப்புச்சீட்டை வேண்டுமென்றே கைவிடுவதற்கு ஒப்பானது. :lol:

அண்ணா இந்தக் கட்டுரையின் நோக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்கள் கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்து... இன்னும் இன்னும் சுயநலத்தையே மூலதனமாக்கிக் கொண்டிருக்காமல்.. தேவையான ஒற்றுமையுடன் கூடிய வேலைத்திட்டங்களோடு தமிழர்களின் தேச விடுதலையை நிச்சயப்படுத்தப் பாடுபட முன்வர வேண்டும் என்பதே.

எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் காசைக் கொடுத்திட்டு வம்பளந்து கொண்டிருப்பம் என்ற காலம் இப்போ இல்லை. அதனால் இதனை இப்போதே எழுத வேண்டும். காலம் கடந்த பின் எழுதிப் பயனில்லை. இந்த வகையான எழுத்துக்கள் இணையத்தில் ஓரிருவரைத்தான் சென்றடையும். ஆனால் இந்த வகையான உணர்வுகள் எழமால் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெல்ல முடியாது என்பது மட்டும் திண்ணம்.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழனும்.. தானா உணர்ந்து போராட வேண்டிய தேவை இருந்தும்.. வெகு சிலரைத் தவிர பலர் அப்படிச் செய்யத் தயார் இல்லா நிலையையே நான் தமிழர் சமூகத்தில் காண்கிறேன்.

இதற்காகவா.. 25,000 மாவீரர்களும்.. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களும் உயிர்க்கொடை செய்தனர்...???!

துன்பப்படும் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டிய நாமே.. அதற்கு எதுவும் செய்யாமல் வாழாதிருக்கும் நிலை..???! இதனை என்னென்பது..???! :lol:

Edited by nedukkalapoovan

இந்த கட்டுறை, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் செத்து போய்கொண்டிருக்கும் ஈழ உணர்வை கல்லறைக்கு அனுப்பும்போல கிடக்கு.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுறை, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் செத்து போய்கொண்டிருக்கும் ஈழ உணர்வை கல்லறைக்கு அனுப்பும்போல கிடக்கு.... :lol:

அது ஏற்கவே சமாதி அடைந்து விட்டதாகவே எனக்குத் தெரிகிறது. கொடி பிடித்தவன் எல்லாம் ரிக்கெட் போடுறான்.. சிறீலங்காவிற்கு.. விடுமுறை கழிக்க வேணுமாம்..! இப்படி இருக்கும் போது.. அடைப்பட்டுள்ள அந்த மக்களின் மீட்பர்கள் யார்..???!

ஆயுதம் தூக்கினால் தான் நாம் ஆதரவளிப்போம் என்பது போல நடந்து கொள்ளும் இந்த சமூகம் இருந்தென்ன.. இருந்தும் சமாதியாகத்தானே செயற்பாடு இருக்கிறது..!

பொங்கி எழ வேண்டிய வேளையில் தூங்கிக் கிடப்பது பிணமன்றி வேறேன்ன..???! :lol:

எனகென்னமோ நாங்கள் ஒரு பாரிய வலையில் சிக்கியிருப்பதாக்வே படுகிறது (ஒரு முப்பது வருசமாய்?)

70% கட்டுகுள் இருக்கும்போதே.... 60% மேல் சிங்களவனுடன் வாழ ஓம்.. இப்ப 2% தேறினா அதிசயம்.

காப்பிலி மாதிரி வாழ தயார் செய்வம்.... ( உண்மையா!)

  • கருத்துக்கள உறவுகள்

எனகென்னமோ நாங்கள் ஒரு பாரிய வலையில் சிக்கியிருப்பதாக்வே படுகிறது (ஒரு முப்பது வருசமாய்?)

70% கட்டுகுள் இருக்கும்போதே.... 60% மேல் சிங்களவனுடன் வாழ ஓம்.. இப்ப 2% தேறினா அதிசயம்.

காப்பிலி மாதிரி வாழ தயார் செய்வம்.... ( உண்மையா!)

பனங்காய்.. யூடியூபில உங்கட கணக்கை மூடிறதுக்கு நேரம் வந்திட்டிது..! :lol:

கைவிட்டு ஒண்டர மாசம் :lol:

http://www.youtube.com/user/tamiljaguar

நீங்கள் எல்லாரும் யோக்கியவான்கள் புலம்பெயர் தமிழர்களை எல்லாவிதமாயும் போட்டுத் தாக்குங்கோ. நல்லது, கெதியில எல்லாம் நல்லதாய் நடக்கும். சனங்களை நல்லாய் மெண்டல் ஆக்கவேண்டியது. பிறகு இன உணர்வு, தமிழ் உணர்வு மண்ணாங்கட்டி எண்டு சொல்லி தண்ணிகாட்ட வேண்டியது. வாழ்த்துகள்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

எனகென்னமோ நாங்கள் ஒரு பாரிய வலையில் சிக்கியிருப்பதாக்வே படுகிறது (ஒரு முப்பது வருசமாய்?)

70மூ கட்டுகுள் இருக்கும்போதே.... 60மூ மேல் சிங்களவனுடன் வாழ ஓம்.. இப்ப 2மூ தேறினா அதிசயம்.

காப்பிலி மாதிரி வாழ தயார் செய்வம்.... ( உண்மையா!)

உண்மைதான். வேறு வழியில்லை. நாம் இங்கிருந்து தனி நாடு தனி நாடு என்று உசுப்பேத்தி அங்க இருக்கிற மிச்ச சனங்கள சாகடிப்பது நேர்மைக்கு புறம்பானது. ஒன்றில் தமிழன் தமிழன்ர இடத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து ஒரு போராட்டத்துக்கு ஏதுவான நிலையை ஏற்படுத்த முனைய வேண்டும் அவனவன் அந்த அந்த இடங்கள்ள பாதுகாப்ப இருந்துககொண்டு தனிநாடு என்று மல்லுக்கு நிற்பது சரிவராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் யோக்கியவான்கள் புலம்பெயர் தமிழர்களை எல்லாவிதமாயும் போட்டுத் தாக்குங்கோ. நல்லது, கெதியில எல்லாம் நல்லதாய் நடக்கும். சனங்களை நல்லாய் மெண்டல் ஆக்கவேண்டியது. பிறகு இன உணர்வு, தமிழ் உணர்வு மண்ணாங்கட்டி எண்டு சொல்லி தண்ணிகாட்ட வேண்டியது. வாழ்த்துகள்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

செயலின்றி.. வெற்றி இல்லை.. தாகமும் தீராது.

செயலிழந்த ஒரு புலம்பெயர் சமூகத்தையே இப்போ அவதானிக்க முடிகிறது. மீண்டும் பழைய கிழவி கதவத்திறவடி நிலையாய்..??!

எழுதலாம்.. அழகா.. தமிழரின் தாகம் தமிழீழம் என்று.. புலிகளின் தாகத்துக்கு ஒரு விடை கிடைக்கல்ல... தமிழரின் செயற்பாட்டு வேகத்தை பார்க்கிறப்போ.. தாகம் தீருறாப் போல தான் இருக்குது.

அதுசரி.. யார் இந்தப் புலம்பெயர் மக்கள்.. யாரு இவையைப் புலம்பெயரச் சொன்னது. போராடக் கேட்டதா.. புலம்பெயரக் கேட்டதா.. இப்படியும் பதில் கேள்வி விதண்டாவாதமாகக் கேட்கலாம்.

அதல்ல தேவை. இப்போ தேவை.. ஓரிருவரின் செயற்பாடல்ல. ஒட்டு மொத்த மக்களின் செயற்பாடு ஒரே திசையில் விடுதலையின் திசை நோக்கி இருக்க வேண்டிய இன்றே தவிர வேறல்ல. அதை தொடங்க வேண்டியவர்கள்.. நீங்கள் சொன்ன புலம்பெயர் மக்களே.

ஆனால் அப்படியா ஏதும் தெரியல்ல. எனி இன்னொரு பிரபாகரன் வந்து.. இவர்களை எழுப்பும் வரை.. கும்பகர்ண நித்திரைதான் போங்கோ..! :lol:

பொதுமக்கள் ஒற்றுமையாக கடுமையான காரியங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. யூத சமுதாயத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டபோது கூட அவர்கள் ( பொதுமக்கள்) ஒற்றுமையான சமுதாயமாக செயற்படவில்ல. ஆனால் யூதர்களின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் சாணக்கியமாக நடந்து கொண்டதனால் அவர்களுக்கு நாடு கிடைத்தது.

வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம். உங்கட வேண்டாப் பெண்டாட்டியை நிம்மதியாய் இருக்கவிடுங்கோ நெடுக்காலபோவான்.

முதலில் ஒழிய வேண்டியது சாதி வேற்றுமை. தமிழர்கள் மொழி, இன, மத வேறுபாட்டைப் புறம்தள்ளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் சாதி வேற்றுமையைப் புறக்கணிக்க முடியவில்லை. சாதியின் பெயரால் ஒரு கிராமத்தையே வடக்கு தெற்கு மத்தி என்று கூறுபோட்டுக் காவல் காப்போம். ஆனால் சிங்களவர் தமிழரது நிலத்தை ஆக்கிரமிப்பது எமக்குக் கேவலமாகப் படவில்லை.

அண்ணை உதுதான் எங்கட பிரச்சினையே...

இன உணர்வு எண்டது நீங்கி போய் எவ்வளவு காலம் ஆச்சுது எண்டே தெரிய இல்லை.... தமிழன் எண்று சொல்லி கொள்வதில் எங்கட ஆக்களுக்குள் அவ்வளவாக பெருமையும் இல்லை.... இப்படி இன உணர்வு இல்லாத மக்களால் என்ன செய்ய முடியும்... அப்படி இன உணர்வு இல்லாத மக்களுக்கு உணர்வை ஊட்ட முயண்று இருக்கலாம்... அப்படி எல்லாம் செய்வதை விட்டாச்சு...

தமிழர் எதிர் சிங்களவர் எனும் நிலையில் வாழ்வா சாவா எண்று தமிழன் இருக்கும் போது... நீங்கள் மரியாதையாக வாழ வேண்டும் ஆகவே தமிழனுக்குள் இருக்கும் சாதியை ஒளியுங்கள் எண்று பிரச்சாரம் செய்வதுதான் இன உணர்வா...???

இல்லை சாதியங்கள் வீரியமாக இருக்கிறது தமிழருக்கு தலைமை தாங்கும் புலிகள் அதுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இல்லை, எடுக்க போவதும் இல்லை எண்று மறை முகமாக குற்றம் சாட்டுகிறீர்களா...??

ஏன் எண்றால் புலிகள் இன அடக்கு முறைக்கு எதிராக போராடும் போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் உள் முரண் பாடுகளை கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள்... நீங்கள் எல்லாம் எதையும் காலம் அறிந்து செய்ய மாட்டீர்களா...???

மாறாக இப்போது சாதியம் பார்த்த தலைமுறை இறந்து கொண்டு இருக்கிறது... இப்போதும் புதைக்க பட்டு கொண்டு இருக்கும் சாதி சடலங்களை கிண்டி எடுத்து ஒப்பு பாடி வைத்து தேவை இல்லாது தமிழர்களை பிளவு படுத்தி கொண்டு இருக்கிறதுதான் தமிழர்களுக்கு செய்யும் சேவையா...???

தமிழர்கள் எல்லாவகையிலும் பிளவு பட்டு நிக்க வேண்டும் என்பதுதான் சிங்களவனது ( எதிரிகள் அனைவரினதும் ) நோக்கம்... இதை தெரிந்தே செய்கிறீர்களே...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.