Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.

இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடுகிறது.

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் முன்னுரை இன்னும் நிறையச் செய்திகளைச் சொல்கிறது.

நாவல் தயாரிப்பில் வந்தபோது ஒரு பரிசோதனை முயற்சி செய்து பார்த்தோம். இலங்கையின் எண்பதுகளில் வந்த புத்தக அட்டைகளுக்கு என ஒரு தனியான ஸ்டைல் இருந்தது. ஆரம்பகால வீர கேசரிப் பிரசுர நாவல்கள் மற்றைய நாவல்களில் இவ் அட்டைப்படங்களில் ஒருமிப்பைக் காணமுடியும். கே. எஸ் பாலச்சந்திரனது நாவலும் கதைப்படி எழுபதுகளில் நிகழ்கிறது. ஆகவே அட்டைப்படத்தை அந்தக் காலங்களுக்குரியதாக செய்யலாம் என்றொரு எண்ணம். இலங்கைத் தமிழ் நாவல்களில் பரீட்சயம் உள்ளவர்களுக்கு இந்நாவலின் அட்டைப்படம் நாவல் பேசப்போகும் காலத்தை நினைவு படுத்தும் என நினைக்கின்றேன். தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஓவியர் ரமணி நாவலுக்கான அட்டைப்படத்தை தயாரித்துத் தந்தார் அவருக்கு நன்றி. இரண்டொரு தினங்களில் தமிழகத்திலும் ஓரிரு வாரங்களில் கனடாவிலும் ஓரிரு மாதங்களில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் மற்றும் வடலி இணையத்தில் உடனடியாகவும் இந்நாவல் கிடைக்கும்.

0 0 0

postcover.jpg

பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் முன்னுரை

பன்முகக் கலைஞன் பாலா வனொலி,தொலைக்காட்சி,மேடை,திரை

  • Replies 69
  • Views 8.9k
  • Created
  • Last Reply

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனை யாழ்களநேயர்கள் மறந்துவிட்டார்களா? அவரது நாவலைபற்றிய செய்திக்கு யாரும் பதில்கூட ஏழுதவில்லை. நீண்டகருத்துரை எழுதிய சயந்தனுக்கு நன்றி.

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

1992ம் ஆண்டு, இலங்கை அணி, கிரிக்கட் விளையாட்டில் “டெஸ்ட்” அந்தஸ்த்து பெற்றபின் முதன் முதலாக நடைபெற்ற “அவுஸ்திரேலிய-இலங்கை” டெஸ்ட் விளையாட்டின்போது, நேர்முகவர்ணனை செய்தவர்கள் வரிசையில் பாலாவுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு.

சிறிலங்கா 92ம் ஆண்டுக்கு முன்பே டெஸ்ட் விளையாடி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தான் முதலாவது போட்டி. அதன் பிறகு நடைபெற்ற சில போட்டிகளுக்கு பிறகு கண்டி அஸ்கிறியாவில் சிறிலங்கா முதன் முதலாக அவுஸ்திரெலியாவுக்கு எதிராக விளையாடி படுதோல்வி அடைந்தது. வினோதன் ஜோன் என்ற தமிழன் புனித கண்டியில் விளையாடக்கூடாது என்று பெளத்த பிக்குகள் சொன்னதினால் இப்போட்டியில் விளையாடவில்லை. இப்போட்டி 80 களில் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கே. எஸ் . பாலச்சந்திரனை மறக்கவில்லை அருமையான நகைச்சுவையாக பேசும் கலைஞர் .

சிறிது காலத்திற்கு முன் அவரின் பேட்டி வைப்பது போன்ற நல்ல நிகழ்ச்சியை ( வைத்திலிங்கம்) தொலைக்காட்சியில் பார்த்தேன் .

அதனை விட அவரின் நாடகங்களை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மூலமாக கேட்டுள்ளேன் . அவரின் விசிறி நான் .

இப்ப என்ன .....நாட்டு நிலமையளாலை எல்லாத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ........கனடாவில் வைத்திலிங்கம் ஷோ வில் வாரமொரு கலைஞ்சரை அறிமுகபடுத்திய , வர வாய்த்த பெரும் இவரையே சாரும். வானொலி புகழ் கே.எஸ் பாலசந்திரன் .........தொலைகாட்சியிலும் கொடி கட்டி பறந்தவர் இலங்கையிலும் பின்பு கனடாவிலும் அவருக்கு இந்த சிறியவளின் வாழ்த்துக்களும் பாராடுக்களும்.

வாழ்த்துக்கள் ஐய்யா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணறைற் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் ஐயாவிற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.அவரை யாரும் இலகுவில் மறந்து விடமுடியாது.

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணறைற் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் ஐயாவிற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.அவரை யாரும் இலகுவில் மறந்து விடமுடியாது.

யாயினி.

யாயினி ,

பலரும் கே. எஸ். பாலச்சந்திரனின் , அண்ணைறைற் நாடகத்தைப் பற்றி புகழ்ந்து பேசியதை கேட்டுள்ளேன் .

ஆனால் அதனை நேரில் பார்த்ததில்லை . அதன் இறு வெட்டுகள் எங்காவது கிடைக்குமா ?

Edited by தமிழ் சிறி

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனை யாழ்களநேயர்கள் மறந்துவிட்டார்களா? அவரது நாவலைபற்றிய செய்திக்கு யாரும் பதில்கூட ஏழுதவில்லை. நீண்டகருத்துரை எழுதிய சயந்தனுக்கு நன்றி.

பொன்னியின் செல்வன் அண்ணை கனகாலத்துக்கு பிறகு உங்களை கண்டது சந்தோசம். மற்றவர்கள் பற்றி தெரியாது.. ஆனால்..சயந்தன் எழுதியவற்றை நான் நேரம்கிடைக்கும்போது வாசிப்பது வழமை. இன்னமும் முழுமையாக வாசிக்க இல்லை. வாசித்துவிட்டு.. முடியுமானால் புத்ககத்தையும் வாங்கி வாசிச்சும் கருத்து கூறுகின்றேன். நீங்கள்.. இல்லை மன்னிக்கவும்... கே.எஸ். பாலச்சந்திரன் ஐயா கொஞ்சம் உடல்நலக்குறைவாய் இருந்ததாய் காதோரம் ஓர் செய்தி வந்திச்சிது. கே.எஸ். பாலச்சந்திரனின் நாவல் கண்டு சந்தோசம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரை பற்றி கேள்விப்பட்டுள்ளேன் இவருக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனை யாழ்களநேயர்கள் மறந்துவிட்டார்களா? அவரது நாவலைபற்றிய செய்திக்கு யாரும் பதில்கூட ஏழுதவில்லை. நீண்டகருத்துரை எழுதிய சயந்தனுக்கு நன்றி.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலகட்டம் இருக்கின்றது.

ஊடகத்துறையில் பிரபல்யமானவர்கள் அதுவும் எம்மினத்தவர்கள் ஏதாவது ஒன்றை இன்றைய காலகட்டத்தில் செய்யும்போது அது எதிரிக்கு சாட்சியாக மாறிவிடும்.

இது ஈழவிடுதலையின் எதிரிக்கு நல்லதொரு சாட்சி.

வடலி நிறுவனத்திற்க்கு வாழித்துக்கள்!

ரமணி ஐயாவின் ஓவியம் அருமை!

ரமணி ஐயாவின் ஓவியங்களை செங்கை ஆழியானின் அனேக படைப்புக்களைில் கண்டு வியந்திருக்கிறேன், அந்த வகையில் தான் இந்த ஓவியமும்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.

இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடுகிறது.

எனது நாவலான "கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெளிவருவது பற்றி விரிவாக எழுதிய சயந்தனுக்கும், கருத்துக்கள் வழங்கியதோடு வாழ்த்துரை தந்த ஈழமகள், றதி, மாப்பிள்ளை, தமிழ்சிறி, யாயினி, சின்னக்குட்டி, நிலாமதி, கந்தப்பு, குமாரசாமி ஆகிய அனைவருக்கும் என் றன்றிகள்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி நிறுவனத்திற்க்கு வாழித்துக்கள்!

ரமணி ஐயாவின் ஓவியம் அருமை!

ரமணி ஐயாவின் ஓவியங்களை செங்கை ஆழியானின் அனேக படைப்புக்களைில் கண்டு வியந்திருக்கிறேன், அந்த வகையில் தான் இந்த ஓவியமும்.

நன்றி

ஆமாம் தர்மராஜ் எங்கள் நோக்கமும் அதுவே.; எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவரை மீண்டும் வாசகநேயர்கள் மத்தியில் நிலைநிறுத்தும்; நோக்கமே எங்களை தூண்டியது.. இதற்கு வழிகாட்டிவர்களில் முக்கியமானவர்கள் கானா பிரபாவும், சயந்தனுமே. தற்போது யாழ்ப்பாணத்தில் வாழும் ரமணி அவர்கள் எனது வேண்டுகோளை ஏற்று காலம் தாழ்த்தாது அட்டைப்பட ஓவியத்தை வரைந்து அனுப்பினார். அவருக்கு நன்றி.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் புகழ் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் புகழ் மேலும் சிறக்க வாழ்த்துகள்

நிறைய வானொலி நாடகங்கள், மேடைநாடகங்கள், சில சிறுகதைகள் என்று எழுதியிருந்தாலும் எனது நாவல் ஒன்று நூல் வடிவில் வருவது இதுவே முதற் தடவை. உங்கள் வாழ்த்துக்கள் என்னை மகிழ்விக்கின்றன. நன்றி.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

அது ஒரு காலம்

நடத்திரன் செவ்விந்தியனும் அசுவகோசும், திருக்கோயில் கவியுவனும், றஷ்மியிம், ஆத்மாவும். மூத்த கவிஞர்கள் சேரனும், வ.ஐ.ஜெ யும் எம் துரோணர்களாக இருந்த காலம்

கே.எஸ் என்பது மிக மலிவான ஒரு பெயர்.................அப்துல் ஹமிட் என்பவர் சிங்களவனுடன் சமரசம் செய்து வயிறு பிழைக்கும் ஒரு கேவலமான ஊடகவியளாளன் (தென்னாலி பற்றி 10 பக்கங்களில் கேவலமாக விமர்சித்து நான் எழுதிய விமர்சனத்தின் புள்ளியும் அவரே)

செங்கையாழியான், டானியலை தொட்டு, எஸ் போ தொடர்ந்து கே.எஸ் வரை, அவர்களின் இலக்கியம் எமக்கு "கேவலம்"....ஏனெனில் அவர்கள் பழையவர்கள்.

நாம் யார்?.........................விடுதலை வேட்கையில் ஊறி குடும்பத்தில் பலரை இழந்தவர்கள்

நாம் புதியவர்கள் (பு, மக்கள், நாம்)

எனவே கே.எஸ் சின் எல்லா ஆளுமைகளையும் எதிர்த்தோம்.......................

ஆனால் கே.எஸ் வேடம் போடவில்லை....போலித் தேசியத்தை புனைவு கொள்ளவில்லை'

இன்று பம்மாத்து இலக்கியம் பேசிய நான் அம்மணமாக, பாலியல் தொழிலாளிக்கு கூட நிர்வாணத்தை காட்டும் கேடு கெட்டவராக கே.எஸ் முன் நிற்கின்றேன்

அவருக்கும் என்னைத் தெரியாது.....எனக்கும் அவரை தெரியாது

ஆனாலும் அவரை வெறுத்தேன்......அது தான் நவீன தேசியவாதம்...புலிகளால் உணர்த்தப்பட்ட தமிழ் தேசியம்

மன்னிக்கவும் கே.எஸ். சிரம் தாழ்த்துகின்றோம்..... நீங்கள் எம் முன்னோர் உங்களின் பாடங்களை படிக்க மறந்துட்டோம். கொள்கையை விட கோசம் முக்கியம் என்றோம்

மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஒரு காலம்

நிழலி

உங்கள் அன்புக்கு என் நன்றி.

கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bala.jpg

npvrose.jpg

kamal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் அண்ணாவின் புத்தகத்தை வெளியிட்ட வடலிக்கு வாழ்த்துக்கள்..கானமயிலாடக்கண

்ட வான் கோழி போல அவருடைய பாதிப்புக்களால்..நானும் சில நாடகங்கள் எழுதியும்.தாயாரித்தும் இருக்கிறேன்..மற்றபடி ஒரு பேப்பரில் அவரும் எழுதுவதால் அவர் எழுதுகின்ற பத்திரிகையில் நானும் எழுதுகிறேன்.என்று பெருமைப்பட்டுக் கொண்ட நாட்களும் உண்டு..அவரது எழுத்துக்கள் தொடரவேண்டும்.. நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் அண்ணாவின் புத்தகத்தை வெளியிட்ட வடலிக்கு வாழ்த்துக்கள்..

அன்பின் சாத்திரிக்கு,

உங்கள் கட்டுரைகளை ஒருபேப்பரிலும், யாழ்களத்திலும் வாசித்திருக்கிறேன்.;. நன்றாகவே, நன்றானவே எழுதினீர்கள்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

பாலச்சந்திரன் அண்ணாவின் புத்தகத்தை வெளியிட்ட வடலிக்கு வாழ்த்துக்கள்

வணக்கம் ஐயா !

என் பின்னூட்டத்திற்கு மறு பின்னூட்டமிட்டமையை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் . ..

இன்னுமொன்றை உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்

நீங்கள் நடித்து வெளிவந்த செம்மீன் திரைப்பட (பெயர் சரியென நினைக்கிறேன்) பாடலான வாடைக்காற்று வீசுகின்ற... என்ற பாடலை எங்கு தரவிறக்கம் செய்ய முடியுமென தெரிவிப்பீர்களா ? ? ?

நன்றியுடன்

தர்மராஜ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி காவடி,

நீங்கள் இணைத்துள்ள படங்கள் எனது வேறு,வேறு காலங்களை காட்டுகின்றன என்றளவில் சந்தோசமே.. 70களில் அண்ணைறைற் படம், 80களில் நாடு போற்ற வாழ்க திரைப்படத்தில் 90 களில் கமலுடன் சந்தித்தமை என்று செல்கிறது. இவற்றை எங்கே தேடிப்பிடித்தீர்கள்..? நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.