Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன 11 members have voted

  1. 1. தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

    • களத்தில் எங்களோடு சமர் செய்வது
      4
    • வீதி போராட்டங்கள் நடத்துவது
      4
    • அரசியல்வாதிகளை ஒதுக்கி வைப்பது
      10
    • நிதி உதவி செய்வது
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் கேள்வி

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

களத்தில் எங்களோடு சமர் செய்வது

வீதி போராட்டங்கள் நடத்துவது

அரசியல்வாதிகளை ஒதுக்கி வைப்பது

நிதி உதவி செய்வது

சதீஷ் பாண்டியன் ,

தற்போது ஈழத்தமிழன் உள்ள சூழ்நிலையில் .........

மேற் குறிப்பிட்ட எதுவுமே பயனைக் கொடுக்காது .

முப்பது வருட போராட்டத்தில் இரண்டு லட்சம் தமிழ் உயிர்களையும் , எண்ணுக் கணக்கற்றோர் முடமாகி ,

வாழ்விடங்களை , தேடிய சொத்துக்களை , கல்வியை இழந்த நிலையில் .......

ஒரு நாளில் 20 , 000 தமிழ் உயிர்கள் பறிக்கப் பட்ட போது ..... உங்களது ஒரு சில அரசியல் தலைவர்களைத்தவிர .......

மற்றைய முன்னணி ஊடகங்களான தொலைக்காட்சிகள் கூட , வாய் மூடி மௌனித்து இருந்த கொடுமையையும் பார்த்தோம் தானே .

இதற்கு பிறகும் தமிழகம் ஏதாவது செய்யும் என்று எதிர் பார்ப்பது . எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமன் .

உக்கிரப் போர் நடந்த இறுதிக் காலகட்டத்திதில் எத்தனை அவசர வேண்டுகோள்கள் , தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி விடுக்கப்பட்டன .எதுவுமே கண்டு கொள்ளப்படவில்லை .

ரொம்ப நொந்து போயிருக்கிறோம் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் மறுகேள்விகள்! :icon_idea:

  • மானுக்கும் மயிலுக்கும் வலிப்புவந்து ஆடியது போதுமென அடங்கி ஒடுங்கி மூலையில் நிரந்தரமாக முடங்கட்டும்.
  • ஜென்மத்திலும் வராத ஒற்றுமை முதலில் வரட்டும்.
  • தமிழன் என்ற இன உணர்வு (அப்படீன்ன என்னனென்னு மட்டும் கேட்டுராதீங்க!) மனதில், செயலில் தோன்றட்டும்.
  • அண்டையரால் திணிக்கபட்ட ரஜினி, கஜினி, கோரி, பூரி, சந்திரகுப்தன், விசித்திரகுப்தன், இ, ச, ரா ரா காந்தி, பூந்திகளின் சரித்திர தரித்திரங்களை நினைவில் நீக்கி, தன் வீட்டு சேர, சோழ பாண்டியரின் வீரங்களை கடுகளவேனும் படித்து நினைவில் நிறுத்தட்டும்.
  • வடக்கத்தியானுக்கு காலை நக்கும் அடிமை புத்தி அறவே நீங்கட்டும்.
  • 'பொந்தியன்' என்ற அடிமை, அவமானச் சின்னம் முதலில் மனதிலிருந்தாவது துடைத்தெறியட்டும்.
  • அடுக்கு மொழியில் நாலு வார்த்தை தமிழில் பேசினால் தமிழீனத்தலைவரென புகழ்பாடும் சிறுபுத்தி மரிக்கட்டும்.
  • இவ்வளவும் கடைப்பிடிப்பது சிரமமெனில் மறைந்ததாக சொல்லப்படும் வீரனின் ****** +++++++, அப்பவாவது புத்தி தெளியட்டும்.
  • அத்தைக்கு மீசையும் முளைத்து, சித்தப்பனாகி வாழ்ந்து செத்தாலும் சாகலாம்... இவையெல்லாம் மீறி தமிழக தமிழனுக்கு ஏதாவது தோன்றுமா? ஞானம் பிறக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மந்தைகளுக்கு சிந்தையில் உறைப்பதைவிட சிதைந்து சிதறும் உணர்வுகளை கட்டமைப்பதில் காலத்தை செலவிடலாம்...பயனாவது தேறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யைச்சொன்னால் எனது வாக்கு தமிழ்சிறி மற்றும் ராஜாவன்னியன் இருவரினதும் கருத்துக்களிற்குத்தான். அக்கருத்துகள்தான் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே..

தயவு செய்து இங்கே இருக்கும் அரசியல்வாதிகளை வைத்து தமிழக மக்களை நினைக்காதீர்கள்.

அவர்களை பொறுத்தவரை கலைஞர் போர் முடிந்தது என்று சொன்னால் முடிந்தது என்றே நம்புகிறார்கள்.

இதை மறுத்து கூறவேண்டிய நிலையில் ஒரு எதிர் கட்சியும் இல்லை.

ஹிந்து சொல்வதை மேல்குடி மக்கள் நம்புகிறார்கள் என்றால் தினமலர் சொல்வதை கீழ்குடி மக்கள் நம்புகிறார்கள்.

நான் இங்கே மென் பொருள் துறையில் வேலை பார்க்கிறேன். நாங்களாக ஒரு அமைப்பு தொடங்கி ஒரு வருடம் பல வேறு போராட்டங்கள் மூலம் ஈழத்தில் நடந்த கொடுமைகளை கொண்டு சென்றோம். மேலும் செல்வதற்குள் உங்கள் போராட்டங்கள் எல்லாம் ஓய்ந்து விட்டன. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது தான் எண்களின் நிலை இப்போது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்வாதிகளை வைத்து தமிழக மக்களை நினைக்காதீர்கள்.

அவர்களை பொறுத்தவரை கலைஞர் போர் முடிந்தது என்று சொன்னால் முடிந்தது என்றே நம்புகிறார்கள்.

ஹிந்து சொல்வதை மேல்குடி மக்கள் நம்புகிறார்கள் என்றால் தினமலர் சொல்வதை கீழ்குடி மக்கள் நம்புகிறார்கள்.

நான் இங்கே மென் பொருள் துறையில் வேலை பார்க்கிறேன். நாங்களாக ஒரு அமைப்பு தொடங்கி ஒரு வருடம் பல வேறு போராட்டங்கள் மூலம் ஈழத்தில் நடந்த கொடுமைகளை கொண்டு சென்றோம். மேலும் செல்வதற்குள் உங்கள் போராட்டங்கள் எல்லாம் ஓய்ந்து விட்டன. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது தான் எண்களின் நிலை இப்போது.

நடக்கப் போகிறது நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொல்லிக் கதறிக்கொண்டிருக்கவும் ஒன்றல்ல இரண்டல்ல 50,000 மக்கள் எங்கள் உறவுகள் கதறக் கதற படுகொலை செய்யப்பட்டதை இன்னமும் மறக்க முடியாமல் படும் வேதனையின் வெளிப்பாடுதான் நீங்கள் மேலே பார்த்த சில பதில்கள்.

நீங்கள் சொன்ன இந்துவோ, தினமனியோ சொல்லும் கருத்துக்களை மக்கள் வாசிக்கும் வரை சாண் ஏற முழம் சறுக்கும் கதைதான் தமிழ் நாட்டில் நடக்கும். காரணம் அண்மையில் இந்து ராம் வவுனியா முகாமை பார்த்துவிட்டு எல்லாமே நல்லபடியாகத்தான் இருக்கிறது என்று சொன்னதை அவரின் பத்திரிகையை வாசிக்கும் எந்தனை கோடித் தமிழர்கள் நம்புவார்கள் அப்படித் தினமணி பத்திரிகை சொல்வதையும் எத்தனை கோடி மக்கள் நம்புவார்கள். அப்படி தமிழ் நாட்டில் நிலமையிருக்க ஈழத்தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத்தர உதவும் ஓர் மக்கள் போராட்டத்தை உங்களால் எப்படிச் செய்ய முடியும்...

உங்கள் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களே இப்படியொரு இனப்படுகொலை நடந்ததா என்று கேட்பது போல் அமர்ந்திருந்தால் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அவர்களுக்கு வோட் போட்ட மக்களுக்கு இது எப்படித் தெரியும்....

விரல்விட்டு எண்ணக்கூடிய உண்மையான தமிழின ஆதரவாளர்களின் குரல்களினால் உங்கள் மத்திய அரசை ஒன்றுமே செய்யமுடியாது அவர்களுக்கே மக்கள் பலம் தேவை உங்கள் நகரங்களே முழுதாக இயங்கமுடியாத நிலைக்குரியதாக்கி மத்திய அரசை ஆட்டம் காண வைக்க... அப்படியொரு நிலை வரும் வரை உங்களாலும் ஒன்றுமே செய்ய முடியாது....

மக்கள் இன்னமும் முட்கம்பி வேலிக்குப் பின்னால் தான் இருக்கிறார்கள், நீங்கள் தொடங்கிய அந்த அமைப்பின் மூலம் உங்கள் போராட்டத்தை விரிவு படுத்தி மக்கள் போராட்டமாக மாற்ற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் யாராவது எலக்ஸன் கேக்கிறார்களா....? ஏன் கேக்கிறன் எண்டால் வாக்கு எடுப்புக்கு கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.ஐயா சபேஸ் பாண்டியன்.....இலங்கை தமிழர் நாம் இந்தியா ஆடிய நாடகத்தை நம்பி இன்று நொந்து லூலாகிப்போய் நிக்கின்றோம்.....இனிமேலா இந்தியா கண்திறக்கப்போகிறது.உலக சாதனை ஒண்டு நடத்தியிருந்தார் ஒரு அரசியல் வாதி உங்களுக்கு தெரியாதா....?அது தான் காலை உணவு உண்ணும் வேளையிலிருந்து மதிய வேளை உணவு உண்ணுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உண்ணா நிலைப் போராட்டம்..இது ஒரு உலக சாதனை.அதாவது 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் எண்டால் இந்த கருணை இல்லாத நிதி தான்.

மதியவேளை வந்தவுடன் இலங்கையில் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஆகவே இன்னமுமா எங்களை நம்பச் சொல்கிறீர்கள்...?ஒட்டு மொத்த இந்திய தமிழனையும் நாம் குறை சொல்லவில்லை.இந்திய தேசமே ஆக மொத்தம் நான்கு பேருக்குத்தான் சீதணமாக்கப்பட்டுள்ளது...யார் அவர்கள்....?

1.கருணை இல்லாத நிதி.

2.ஜே அம்மா...

3.இத்தாலி தந்த மருமகள்..

4.தொப்பியும்...தாடியும் வைத்த சிங்...

தெரியமால்தான் கேக்கிறன் இவர்களை விட்டால் இந்தியாவில் தரமான அரசியல் வாதிகள் யாருமே இல்லையா...?இந்தியா எழுதுப்பட்டது இந்த நால்வருக்கும் தானா...?

முள்ளிவாய்காலில் பொறுத்த சண்டை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது ஓர் உயிர் அபயக்குரல் எழுப்பிக் கேட்டதே....எங்களை காப்பாற்றுங்கள் எண்டு அப்ப எங்யே போய் இருந்தீர்கள்...?

ஒரு நாளில் கொடிய சிங்களவன் நச்சுக்குண்டையும்,பொஸ்பரசைய

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

வாக்கு போடக்கூடிய மனநிலையில் இல்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் அல்லது உங்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் வடக்கத்தையானை

சிறிதுகாலம் ஈழத்தமிழர் விடயத்தில் ஓய்வெடுக்கச்சொல்லுங்கள்.

"எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒருகண்ணாவது போக வேண்டும்"

இதுதான் ஈழத்தமிழன் குமாரசாமியின் அவா ....

இது எனது இனத்தின், சகோதரத்தின், உறவுகளின், அயலவரின் அழிவின் காரணமாக வந்த அகோர சிந்தனை இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண ரொம்ப டப்பா மாற்றருக்குல்லாமா வோட்டுக்கேட்பீங்க

நான் என்ன சொல்ல வாறேன்ன முதல்ல உங்க மக்களையெல்லாம் நாம் தமிழர் என்று மனதிலை நினைக்கச்சொல்லுங்க

அப்படி நினைச்சாலே அரைவாசி பிரச்சனை தீர்ந்த மாதிரித்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நாங்கள் நீங்கள் எல்லாரும் நினைப்பது போல் ஒரு ஜனநாயக நாட்டில் வாழவில்லை.

இங்கு தான் ஈழ மக்களுக்காக போராடியவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க பட்டனர்.

இங்கு தான் போராடிய மாணவர்களை போராடவிடாமல் விடுமுறை விடப்பட்டது.

போராட்டம் நடத்த விரும்புபவர்கள்இ நடத்தியவர்கள் உளவுத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

வழக்கறிங்கர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

இதே போல் நீங்கள் இருக்கும் நாட்டில் நடந்து இருந்தால் சொல்லுங்கள்..

தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன

தமிழக முதல்வரின் கோவணம்(கச்சை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக முதல்வரின் கோவணம்(கச்சை)

அந்த நாத்தம் புடிச்சதை தோய்சு நீங்க கட்ட போறீங்களா :wub::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் கேட்டவரை இந்த வாட்டு வாட்டுகிறிர்கள். எல்லாம் கண் முன்னே இனம் சாக கையாலாகாத நிலையில் தாய்த் தமிழகம் இருந்ததால் வந்த வார்த்தைகளே அவை.அதற்காக தன்மானமுள்ள தாய் தமிழக உறவுகளிடம் மட்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தராத அரசியல்வாதிகளைத் தேரந்தெடுத்தது தான் நீங்கள் விட்ட பிழை. இளைஞர்களாகிய நீங்கள் அரசியல் இயக்கம் துவக்குங்கள்.முதலில் உங்கள் உரிமைக்காகப் பேராடுங்கள்.இப்போதிருக்கும் அரசியல் பெருச்சாளிகளைத் துடைத்தழியுங்கள். அப்பொழுதுதான் தமிழகம் உருப்படும்.தமிழகம் எருப்பட்டால் தமிழினம் உருப்படும்.

:icon_mrgreen::lol:கு சா வின் கருத்துத்தான் எனது கருத்து காரணம் நாம் அழும் சத்தம் இந்தியா என்ற நாட்டுக்கு சரியாக கேட்டிருந்தால் உலகிற்க்கு கேட்டிருக்கும் அல்லது இந்தியாவுக்கு கேட்டிருந்தால் மற்ற உலக நாடுகளுக்கு கேட்க்க வேண்டிய அவசியம் இல்லை ....!!!!! தமிழகத்து கள உறவே மன்னிக்கவும் உலகிலேயே அதிகமாக இழந்தவர்கள் நாம் அந்த இழப்பிற்க்கு அதிக காரணமாக இருந்தது இந்தியா அத்தோடு தேர்தல் விபச்சாரத்துக்கு ஒரு இனத்தை அழிக்க உதவியது இன்னும் இன்னும் .....வேண்டாமே
  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒருகண்ணாவது போக வேண்டும்"

இதுதான் ஈழத்தமிழன் குமாரசாமியின் அவா ....

அந்த எதிரி(கள்) யார்? சிங்களனும் இந்தியனும் மட்டும்தானே? இல்லை, தமிழகமுமா...? குழப்பத்தை தெளிவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த எதிரி(கள்) யார்? சிங்களனும் இந்தியனும் மட்டும்தானே? இல்லை, தமிழகமுமா...? குழப்பத்தை தெளிவியுங்கள்.

என்னளவில் இந்தியன் என்று சொல்லும்போது நான் தமிழ்நாட்டை அதில் உள்ளடக்குவதில்லை..!

"தமிழக தமிழர்களாகிய எங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?" என்ற இந்தக் கேள்விக்கு இதுவரை என்னிடம் ஒரு பதிலும் இருக்கவில்லை..! இப்போது சீமான் நாம் தமிழர் இயக்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளாரே..! அதற்கு உங்கள் முழுமையான ஆதரவையும், பிரச்சார பலத்தையும் கொடுத்து பலப்படுத்தலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா தமிழருக்கும் ஏற்ற நல்ல ஒரு சுயநலமற்ற தலைமையை உருவாக்குங்கள். மக்கள் நிச்சயமாக தமிழ்மக்கள் திரளுவார்கள். மிக பெரும் சக்தியாக உருவெடுக்கும்.

ஈழமக்கள் நம்மிடம் இனி என்ன எதிர்பார்த்து என்ன ஆகப்போகிறது சகோதரா???

தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு .... ஈழ மக்கள் துயரத்திற்காக துடித்து , கையறுநிலையால் வேதனைப்படும் சில தமிழர்களில் நானும் ஒருவன்...

விரக்தியின் விளிம்பில் நானும் வாக்களிக்கவில்லை ...

திருமணம் ,ஆகி குழந்தையும் இருப்பதால் கோழையாகிப்போனேன் .....

நம்மை இனி ஈழத்தமிழன் நம்புவதை விட ..... அவர்களை மட்டுமே இனி அவர்கள் நம்பினால் தான் விடிவு பிறக்கும்...

இந்தியாவின் வீழ்ச்சி,சிங்களனின் வீழ்ச்சி இவை இரண்டும் என்று நடக்கிறதோ அன்றே ... சிறிது ஆறுதல் கிடைக்கும்!

நாம் முதலில் ஒன்று பட்டு நமக்குள் ஒரு நல்ல ஒற்றுமையான தன்னலமற்ற அமைப்பை உருவாக்குவோம்.... சீமானின் நாம் தமிழர் அமைப்பை பலப்படுத்துவோம்...(வேறு வழி தெரியவில்லை)

நண்பர் சதீஷ் பாண்டியனுக்கு வணக்கம்.

முதலாவது திராவிடப் போர்வை போர்த்திய ஓநாய்களை தலைவர்கள் என்று கும்பிட்டு கூத்தடுவதை நிறுத்த முயற்சிசெய்யுங்கள். சுத்த தமிழன் ஒருவனை தலைவனாக்குங்கள்.

கருணாநிதி - தெலுங்கு

ஜெயலலிதா - கன்னடம்

கோபால்சாமி - தெலுங்கு

விஜயகாந் - தெலுங்கு

ரஜினிகந் - கன்னடம்

இவர்கள் தானே தமிழக தலைவர்கள். சுத்த தமிழன் யாராவது அறிஞர் அண்ணாவுக்கு பின்னர் தமிழகத்தை ஆண்டதுண்டா?

திராவிடன் திராவிடன் என்று தமிழகத்து தமிழரை ஏமாற்றும் குள்ளநரிகளை ஒதுக்குங்கள். தமிழ் பேசுகின்றவன் வேறு தமிழன் வேறு என்பதை பிரித்து அறியக் கற்றுக்கொள்ளுங்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் நாம் கேட்பது

தமிழர்களாய் இருங்கள் என்பதுதான்.. சங்கம் வளர்த்த உங்களின் உணர்வுகளின் தமிழன் என்ற அடையாளம் அழிந்து பல காலமாகிவிட்டது. ஆரிய கூத்தாடிகளின் விளையாட்டு பொம்மைகளாய் இருந்து கொண்டும் வெறும் தமிழன் எனும் பெயரளவிலான அடையாளத்தை கொண்டிருக்காமல் உண்மையான தமிழனாக மாறுங்கள். உலகம் எங்கும் எப்படி வேறு இனம் தம்மை நிலைப்படுத்த முயற்சி செய்கின்றது என்பதை பார்த்து சூடு சுரணை என்பனவற்றை உள்வாங்குங்கள். ஈழத்தமிழனுக்கும் ஒரு மூன்னுதாரணமாக இருங்கள்

இந்தியாவில் தமிழனாக இருந்தாலும் சரி மாற்று மொழி சேபவர்கள் என்றாலும் சரி இனியும்

இவர்களை நம்புகிறோம் நம்புவோம் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான்

எங்கள் மக்கள் அணு அணுவாக இறந்து கொண்டிருந்த போது மனிதாபிமானத்தை

புதை குழிக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற நீங்கள் எல்லோரும்

எங்களிடம் வாக்கு கேட்கிறீர்களா???

உங்களுக்கு மனச்சாட்சி தான் இல்லை என இன்று வரை எண்ணியிருந்தோம் ஆனால் தற்போது மானமே இல்லை என்று நிருhபித்து விடடீர்கள் நன்றி!!!!!!

நான் அனைத்து மக்கள் அரசியல் வாதிகள் எல்லோரையுமே சேர்த்து சாடுகிறேன்

மண்டபம் முகாம்களில் அல்லல்ப் பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் தொப்புள் கொடி

உறவுகளை எந்த அரசியல் வாதி போய் சந்தித்தான்.............???

அத்தோடு எங்களின் துன்பங்களை எவனாவது ஒருவன் தினமும் பத்திரிகையில் எழுதுகிறானா???

சினிமாவுக்கு பெயர் போன உங்கள் நாட்டு மக்கள் அனைவருமே பெரீ........................ய நடிகர்கள்!!!

சீமானின் உரை எங்கள் பக்கம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை நீங்களே முட்டாள்கள் ஆக்கிக் கொள்கிறீர்கள்.

இவர்கள் எல்லோரும் பேசி பேசியே உசுப்பேத்தி விட்டு மௌனித்து போகிறவர்கள்!!!!

(தன் கையே தனக்கு உதவி உன்ற கோட்பாட்டில் இருந்து விலகாமல் இருக்க

இனி என்றாலும் ஈழ தமிழன் உறுதி கொள்ள வேண்டும்)

இந்தியாவுக்கு இல்லாத கருணையும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கருசரணையும் வெள்ளைக்காரனுக்கு அதிகமாக இருக்கிறது

அது மட்டுமல்லாமல் அங்கே சித்திரை வதை முகாம்களில் செத்துக் கொண்டிருக்கும்

எங்கள் உறவுகளுக்கு வாழ்வு கொடுக்க வேணும் எண்ட துடிப்பு நிறைய இருக்கு

அதை உங்கள் நாடு வைக்கல் பட்டடை நாய் போல் இருந்து செய்யவிடாமல்

தடுக்காமல் இருப்பதே இன்றய நிலமையில் ஈழ தமிழனுக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம்

அதையே உங்களிடமும் எதிர் பார்கிறோம்.

தமிழ்மாறன்;

கருணாநிதி ஜயான்ட கோமனமனத்தை தான் நான் எதிர்பாக்கிறேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.