Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sathyaseelan.jpg

ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..

Get Flash to see this player.

Edited by வலைஞன்

  • Replies 59
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைய,நிறைந்த விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

புரிந்தவனுக்கு சொல்லத்தேவையுமில்லை.

புரியாதவனுக்கு சொல்லி பிரயோசனமுமில்லை.

பேட்டி கண்ட சயந்தனுக்கும் பாராட்டுக்கள்.

சாத்திரிக்கு பாராட்டு கீராட்டு ஒண்டுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் டப்பிங்தான் :lol: கதை வசனம் எல்லாம் சாத்திரிதான்... அப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் நான்தான் என கண்டுபிடிக்கிறீங்க :lol: பெரிய SPB தான் நான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியசீலன்...நீங்களுமா,,???ஆயுதப்போராட்டம் தேவையா இல்லையா என்பது இப்போதைய கேள்வி இல்லை.இந்த ஆக்கம் பற்றிய என்னுடைய சில பார்வைகளுக்கு சத்தியசீலனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.சத்தியசீல

அப்ப இவரா அடுத்த தலைவர்,

அப்ப இவரா அடுத்த தலைவர்,

????????????? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம் தான் ஒரே வழி என முதன் முதலில் சொன்னவர் இவராக இருக்கலாம். அதற்கு பலர் செயல்வடிவம் கொடுத்தார்கள். தான் தாக்குதல் நடாத்தியதாக எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.

அரசியல் ரீதியாக மட்டும் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் என்றால் கனவிலும் நடக்காது. ஒரு கெரில்லா போராட்டத்தினூடான அரசியல் போராட்டம் ஒரு வேளை தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதன் முடிவு தமிழீழத்தில் வாழும் மக்கள் சார்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலப்பகுதி என்பது சிறுகியதாகவும் இருக்கலாம். ஆனால் சத்தியசீலன் சொல்வது போல போராட்டம் என்பது முடிவடையவில்லை. ஏனென்றால் நாங்களும் சிங்களவர்களும் 1000 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்....

ஒரு ஆயுதப்போராட்டத்தையோ அல்லது அரசியல் போராட்டத்தையோ செய்யக் கூடிய தகுதியில் இந்த இனம் இல்லை என்பதையே இந்தக் காலம் உணர்த்தி நிற்கின்றது. ஒரு காலத்தில் இலங்கை அரசை எதிர்க்க வேண்டிய தேவை சில நாடுகளுக்கு வரும் போது தமிழர்களை பயன்படுத்துவார்கள் என்பது சாத்தியம் ஆனால் அதற்க்கு தகுதியுடையவனாக தமிழன் இல்லை என்பதே யதார்த்தம். தமிழினத்தை நம்பி எந்த நாடும் எந்தக் காரியத்தையும் இலங்கை அரசுக்கு எதிராக செய்யத் துணியாது. இந்த நிலையானது எப்போது சிங்களவனை அனுசரித்துப்போகும் போக்கை உலகநாடுகளுக்கு ஏற்படுத்தும். இந்தவகையில் சிங்கள இனம் அதிர்ஸ்டமானது என்றும் சொல்ல முடியும்.

இன விடுதலைக்கான போராட்டம் ஆரம்பித்த போது இருந்த தமிழனின் பலம் என்பது படிப்படியாக செந்த தேசத்தை விட்டு பெருவாரியான வெளியேற்றம் மதவாரியான நிரந்தரப்பிளவு இறுதியில் பிரதேசவாரியான பிளவு நிலை அதிகரித்தமை என சிதைந்த இனம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மேலும் சிதைந்து விட்டது. தற்போதைய இனம் குறித்த மாயையும் சிந்தனையும் ஒரு மிகக் குறுகிய தரப்பின் கருத்து நிலை மட்டுமே. நாம் ஒரு அரசியல் அல்லது ஆயுதப்போராட்டத்தை செய்து வெற்றி பெறுவதற்கு முதலில் நாம் ஒரு இனமக பலம் பெறவேண்டும். எமக்கென்று ஒரு வடிவம் வேண்டும். இதன் சாத்தியம் குறித்து யோசித்துப்பாருங்கள். தமிழன் தமிழன் என்று தமிழ் மொழியை பேசிக்கொண்டு துள்ளிக் குதிப்பதால் நாம் ஒரு இனமாகிவிட முடியாது. அவ்வாறு இருந்திருந்தால் இந்தப்போராட்டங்கள் தோல்வியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழன் என்பது ஒரு கருத்து நிலை மட்டுமே. இந்த தமிழன் என்ற கருத்து நிலை உணர்ச்சியானது மதத்தையோ சாதியையோ வர்க்கத்தையோ பிரதேசவாதத்தையோ மீறி வெளியில் வர முடியாது. அவ்வாறு என்று வெளியில் வருகின்றதோ அன்றே இனமானது ஒரு வடிவத்தை பெறும். அதன் பிறகே எந்த ஒரு நாடும் தமிழனை நம்பி சிங்களத்துக்கு எதிராக தமிழர்களை பயன்படுத்தும். இது புத்திசாலிச் சிங்களவர்களுக்கு மிக மிக நன்றாக விளங்கியே தற்போது ஒவ்வொரு காரியத்தையும் செய்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சாத்தியம் அங்கு உள்ள மக்கள் விரும்பினால் மாத்திரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொக்கற் டோக். நீங்கள் பழம்பெரும் ஆளாக இருக்கிறீர்கள். தமிழரின் போராட்ட ஆரம்பங்கள் தெரிந்தவராகவும் இருக்கிறீர்கள். தயவு செய்து இவற்றை ஆவணப்படுத்துங்கள். தனியே யாழில் துண்டுதுண்டாக எழுதுவதை விட ஒருமித்து எழுதினால் பிரியோசனப்படும்.

நாங்கள் இப்படி வாளாவிருக்கு இந்தியர்கள் இங்கே அங்கே எனப்பார்த்து கலந்து கட்டி எழுதி புத்தகமாக்கி பிசினஸ் பார்க்கிறார்கள். அது பரவாயில்லை. தமது விருப்புகளையும் வரலாற்றில் சேர்த்துத் தெளிக்கிறார்கள். அது நல்லதல்ல.

  • தொடங்கியவர்

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உவையள் எல்லாம் போராட வெளிக்கிட்டிட்டு.. இடையில விட்டிட்டு ஓடிவந்து வெளி நாட்டில வாழுற முன்னாள்.. வீரர்கள்.. இன்னாள் கோழைகள். உவையின்ர வரலாறை வேணும் என்றால் புத்தகத்தில எழுதி வைச்சுப் படிக்கலாம்..!

உந்த வயசு போன.. முன்னாள் வீரர்களை.. வேணும் என்றால் புலம்பெயர்ந்த தமிழீழ ஆர்வலர் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்து வைச்சு கெளரவியுங்கோ.

இப்போ எமக்குத் தேவை சம கால உலக போக்கோடு எமது விடுதலைப் போராட்டத்தை அதன் இலக்கு நோக்கி நகர்த்திச் செல்லக் கூடிய துடிப்பான தலைமையும்.. தொடர்சியான செயற்பாடுகளும். அது இக்கால இளைஞர்களாலேயே உருப்படியாக வழங்கப்பட முடியும். இன்றைய இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு.. உந்த பழைய பல்லவிகளை பல்லக்கில் காவித்திரியின் போராட ஆக்கள் வரமாட்டார்கள். வேணும் என்றால் டக்கிளஸ் தேவானந்தாவோடு நரைத்த தாடிக்கு போட்டிபோட ஆக்கள் வருவார்கள்.

எமது 35 வருட போராட்ட காலத்தில் சிறீலங்கா குறைந்தது 5 அரசியற் தலைமைகளையும் பல இராணுவத் தலைமைகளையும் கண்டுவிட்டது. ஆனால் நாம்.. எந்த எதிர்கால திட்டமும் இன்றி... ஒரே குட்டையில் ஊறிக் கிடப்பதையே இப்போதும் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

தேசிய தலைவர் 55 வயசாகிட்டார். அவருக்கு ஓய்வு அளித்துவிட்டதாக எண்ணிக் கொண்டு.. அவருடைய பணியை அவரைப் போன்ற உறுதியோடு எடுத்துச் செய்யக் கூடிய இளைய தலைமுறையை உருவாக்க வேண்டியதே இன்றைய பணி.

ஆயுதப் போராட்டத்திற்கான காரணி அப்படியே 1972 இல் இருந்ததை விட மோசமாக இருக்கிறது. அதை அடுத்தவர் சொல்லித்தான் தெரியனும் என்ற நிலையில் தமிழர்கள் இந்த நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள் என்றால் அப்படியான முட்டாள்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்வதை தமிழினம் கைவிட வேண்டும்..! :) :)

கடந்த கால போராட்டத்தில் பங்கெடுத்து 50 வயதைக் கடந்த அனைவரையும் போராளிகள் அல்லது போராடத் தகுதியுடையோர் பட்டியலில் இருந்து நகர்த்தி சர்வதேச தமிழீழ ஆர்வலர்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. அவர்களின் அனுபவங்களை ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் எனி எமது போராட்டத்தை நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது..! எமது போராட்டம் நவீன மயப்படுத்தப்படவும்.. நவீன உலகில் எதிர்கொள்ளப்படும் சவால்களை வெல்லவும் வீரத்துடன் தொடரவும் இலக்குகளை எட்டவும் அதுவே உந்து சக்தியாக இருக்கும்..! :)

Edited by nedukkalapoovan

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

நான் நினைக்கின்றேன் தேசியத்தலைவரின் விடுதலைத்தீப்பொறி இறுவட்டுகளை பார்த்தவர் தான் இந்த பாக்கட் டாக் சார். தலைவர் சொன்னதுகளை சார் இங்கு அப்படியே ஒப்புவிக்கின்றார்.

என்னது 200 வருடங்களுக்கு சுதந்திரம் பற்றி பேசக் கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட போர் சுயநலவாதிகளையும் பொதுநலவாதிகளையும் தனியாக பிரித்தது. பொதுநல... நாட்டுநலவாதிகள் 95வீதமானவர்கள் வெடித்து சிதறிவிட்டார்கள். 5வீதமானவர்கள் செய்வதறியாது சிக்குண்டு நிற்கின்றார்கள். சுயநலவாதிகளில் ஒரு 5வீதம் விமான ஆட்லறி குண்டுவீச்சுகளில் இறந்துபோக. மீதம் 95வீதமும் அப்படியே இருக்கின்றது...... இவர்களுக்கு எது நடப்பினும் தமது சொந்த நலன் சாhந்தே நடக்கவேண்டும் என்ற அவா மட்டுமே உள்ளது. இதில் ஆயுத போர் என்ன? அரசியல் போர் என்ன? எதுவுமே நடப்பதற்கு சாத்தியமில்லை.

ஆரம்பகாலம் பற்றி யாருக்கு கூட தெரியும் என்ற அடிபிடியை மேலே உதாரணத்திற்கு நீங்கள் வாசித்திருப்பீர்கள். முதல் குண்டெறிந்தவர் பெயரை அறிந்து தமிழினத்திற்கு என்ன விமோசனம் கிடைக்கபோகின்றது? அடுத்த குண்டை எறிய யாராவது தயாராக இருக்கின்றார்களா என்பதே இப்போது முக்கியமானது. ஆனாலும் எனக்கு கூட தெரியும் இல்லது அவருக்கு அது எப்படி தெரியும் என்பது போன்ற அற்ப விடயங்களை பெரிதுபடுத்தி தாம் ஒரு சுய விளம்பரம் செய்வதிலேயே இவர்களுக்கு குறி.

தமிழுழ நினைவோடு வெடியோடு உறவாடி வீரமரணமான மாவீரர்களுக்காக நாம் வாழும்போது கண்ணீர்சிந்திவிட்டு கிழம்எய்தி சாவதுதான் ஒரே வழி. இந்த பாழாய்போன தமிழனுக்கு மூளையெல்லாம் அழுக்கு. அதை கழுவி சுத்தம் செய்ய ஒரு காலம் வாராதா என்பது வெறும் ஏக்கம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பது வருடமாக ஒரு தனி மனிதன் மறைமுக வழ்க்கை வாழ்ந்து உலகெங்கும் திரிந்து ஓய்வின்றி உளைத்தலும் எவராலும் தனிப்பட்ட ரீதியில் சாதிக்க முடியாத பல சாதனைகளைச் செய்து ஒரு இனத்தின் அவலத்தை உலகின்முன் கொண்டுவந்தது மட்டுமன்றி, அவ்வினம் தனியான வரலாற்று விழுமியங்களுடன் கூடிய இனம், அவ்வினத்திற்கு பிரிந்துபோகும் உரிமையுள்ளது என்பதை பல்வேறு தரப்புக்களை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள வைத்து. தான் சார்ந்த இனத்துக்கு மிகப்பெரிய பலத்துடன் கூடிய பேரியக்கம்கண்டு, பகலிரவு தூங்காது பசி பாராது தமிழ் இனமே தனது குடும்பம் என நினைத்து தனது குடும்பத்தையே தான் நேசித்த மண்ணிற்கு விதையாக்கி எங்கேயடா சென்றாய் என் மேதகுவே! இங்கு பல ஈனர்கள் கோட்டான்களாக குரல்கொடுப்பதும் ஓநாய்களாக ஊழையிடுவதுமாக என்னைக் கொல்கின்றனர். வருவாய் பெருநெருப்பே இங்கு பலர் உனுனதருகிலிருந்ததாகக் கூறி குளிர்காய முனைகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய,அமெரிக்க , ஆஸ்திரேலிய கண்டங்களில் மொத்தமாக ஒரு 5 லட்சம் பேர் இருக்க மாட்டார்களா???

அதில் வீரமுள்ள, மற்றும் விவேகமுள்ள இளைஞர்கள் 10000 பேர் இருக்க மாட்டார்களா?

இவர்கள் நினைத்தால் நேரடி ஆயுதப்போராட்டம் என்றில்லை , சிங்களனை கலங்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து செய்யலாமே!

என்னண்ணா காமெடி பண்றீங்க

எங்கட பெற்றவங்கள்ளாம் எங்களை இஞ்சினீயர் டோக்ரருக்கு படிச்சு நல்ல சீதனத்தோட எங்கள விற்கத்திரியிறாங்க.

தமிழே கதைக்கக்கூடாதுன்றாங்க.

போராாட்டம் பற்றி கதைக்கக்கூடாதுதுன்னாட்்டுங

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

சாத்திரிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவைக்கு ஒரு மண்ணும் தெரியாது.

ஆரம்ப காலத்தில் சாத்திரி தான் தங்கதுரை குட்டிமணி சோதி (பெரிசு சின்னன்) ஆட்களை எல்லாம் வழிநடாத்தியவர்.

சாத்திரி தான் தேசிய தலைவருக்கு பயிற்சி கொடுத்தவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Edited by Donkey

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணா காமெடி பண்றீங்க

எங்கட பெற்றவங்கள்ளாம் எங்களை இஞ்சினீயர் டோக்ரருக்கு படிச்சு நல்ல சீதனத்தோட எங்கள விற்கத்திரியிறாங்க.

தமிழே கதைக்கக்கூடாதுன்றாங்க.

போராாட்டம் பற்றி கதைக்கக்கூடாதுதுன்னாட்்டுங

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவைக்கு ஒரு மண்ணும் தெரியாது.

ஆரம்ப காலத்தில் சாத்திரி தான் தங்கதுரை குட்டிமணி சோதி (பெரிசு சின்னன்) ஆட்களை எல்லாம் வழிநடாத்தியவர்.

சாத்திரி தான் தேசிய தலைவருக்கு பயிற்சி கொடுத்தவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ம்ம்ம்...கழுதைக்கு தெரியிது.. :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள கருத்து சத்திய சீலன் அவர்களின் செவ்வி சம்பந்தமாக எனது நண்பரும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியருமான கோபி அவர்களால் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பியிருந்த கருத்தினை இங்கு இணைக்கிறேன்..நன்றி.

இலங்கை தீவில் உள்ள அரசியல் பிரச்சனைக்கு (வர்க்க, சமூக, மற்றும் பொருளாதார பிரச்சனைகள்) ஆயுதவழியில்தான் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தினை அறுபதுகளில் வெளியிடடவர் சீன சார்பு கம்யூனிசக் கட்சியின் தலைவராகவிருந்த நா.சண்முகதாசன். ஆனால் அவர் என்றுமே ஆயுதம் தூக்கியதுமில்லை, தூக்கியவர்களை ஆதரித்ததுமில்லை். யாழ்ப்பாணத்தில் சாதிச் சண்டைகளை ஊக்குவித்ததைத் தவிர, வெறும் சித்தாந்தங்களில் அவர' புதையுண்டு கிடந்தார். இக்கட்சியில் அங்கம் வகித்த ரோகண விஜேவீர (அப்போது டொன் நந்தசிறி என்ற இயற்பெயருடன் .இருந்தவர்) போன்றவர்களே, காலனித்துவத்துக்கு பிந்திய, இலங்கைத்தீவில் , ஆயுதப்போராட்டடத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அமைப்பினை உருவாக்கியதன் மூலம் முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் இந்திய உதவியுடன் அடக்கப்பட்டது.

1970 ஆண்டு ஆட்சிக்குவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிசக்கட்சி ஆகிய உள்ளடங்கிய மக்கள் ஐக்கிய முன்னணி அரசு கொணடு வந்த புதிய அரசியல் அமைப்பு திட்டம் (குடியரசு யாப்பு) தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரித்ததைத் தொடர்ந்தே வடக்கு -கிழக்கில் தமிழ் மாணவர்கள் - இளைஞர்கள் கிளரந்தெழுந்தனர். பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை இந்த கிளர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது.

பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான சத்தியசீலன், தமிழ் மாணவர் பேரவையை உருவாக்குவதில் முக்கியமானவர் என்பதை மறுப்பதற்கில்லை. அவருடன் இணைந்து மாணவர் பேரவையில் செயலாற்றியவர்கள் சிறிது காலத்தில் விலகி , தனிப்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிட்டார்கள். சத்திய சீலன் சில ஆயுத ரீதியான தாக்குதல்களில் (ஜோசப் வில்வராசா தயாரித்துக் கொடுத்த குண்டை எறிந்தது) ஈடுபட்டது என்னவோ உண்மைதான், ஆனால் தொலைநோக்குடனான ஆயுப்போராட்டம் பற்றி அவர் அப்போது சிந்தித்தாகத் தெரியவில்லை.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளராகவிருந்த பெண் ஒருவரை திருமணம் புரிந்த சத்தியசீலன் 1977ம் ஆண்டு முற்பகுதியில், மாரச் மாதம் என நினைக்கிறேன், மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு (தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட தேர்தல்) முன்பதாக அவர் தனிப்பட்ட அலுவலாக, வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து மிக அண்மைக்காலத்தில் வெண்புறா அமைப்பில் பணியாற்றும் வரை, தமிழீழ விடுதலைப் போராட்த்திற்கு அவர் எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாக, விடுதலைப் போராட்டத்தின், பல்வேறு கால கட்டங்களில் எவ்வித பங்களிப்பு வழங்காத ஒருவரை, முக்கியஸ்தராகக் கருதி நீங்கள் பேட்டி எடுக்க, அவரும் சித்தாந்தம் பேசுகிறார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

நன்றி

கோபி

மாண்புமிகு ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் திரு.கோபி அவர்களுக்கு,

நீங்கள் சத்தியசீலன் அவர்களின் கருத்துக்கு விமர்சனமா எழுதினீர்கள் இல்லது உங்களாலும் இப்படி எழுத இயலும் என்று எழுதினீர்களா ?

பொறுப்பாசிரியர் பொறுப்புடன் பொறுமையுடன் விமர்சனத்தை வைப்பதே உங்கள் பொறுப்புக்குத் தகும்.

(நீங்கள் இனி பொறுப்பாசிரியர் என்ற பதத்தைவிட பொறுக்கியாசிரியர் என போட்டுக் கொள்ளலாம்போலுள்ளது.)

நீங்கள் எழுதிய கருத்தின் இரத்தினச் சுருக்கம் இது - தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

ஒருவரின் கருத்துக்கும் இடுப்பு எழும்பாத பதத்தை நீங்கள் உபயோகித்தமைக்கும் என்ன சம்பந்தம் ?

சரி சத்தியசீலன் வெறும் சித்தாந்தம் பேசுகிறார். நீங்கள் இப்படிக் கீழ்மையாக எழுதுவதில் என்ன சாத்தியம் இருக்கிறது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.