Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இருந்து வெள்ளைக்கு கூலி வேலை செய்யிறதிலும் ஊர் திரும்பி ஊரை முன்னேற்ற உதவுவது மேல் என்று நினைக்கிறன்.

ஊரை முன்னேற்ற சிங்களவர்களுக்கு கூலி வேலை செய்யவேண்டும். பரவாயில்லை என்றால் பிரச்சினையில்லை..

இப்பவெல்லாம், வெள்ளைகள் தமிழர்களின் கம்பனிகளில் கூலி வேலைக்கு வருகின்றார்கள். மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால் லண்டனில் திறமைக்கு மதிப்பளித்து எக்சியூற்றிவ் பொசிசனிலும் தமிழர்களை வைத்திருக்கின்றார்கள் :D

  • Replies 95
  • Views 25.8k
  • Created
  • Last Reply

....

குட்டி துரைராஜா அங்கு இருந்து சேவை செய்கிறார் அதை ஒருதரும் இல்லை எனச் சொல்லவில்லை ஆனால் துரைராஜாவை மாதிரி எல்லோரும் அங்கு இருந்து சேவை செய்ய வேண்டும் என நாட்டை விட்டு மாணவ விசாவில் வந்து பல வருடங்களாய் படித்துக் கொண்டு இங்கு இருப்பவர்கள் சொல்ல இயலாது அது தான் எனது கருத்து...நெடுக்ஸ் தான் சொன்ன கருத்துகளை ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்...நீங்கள் நினைக்கிறீங்களா அவர் நாட்டுக்குப் போய் சேவை செய்வார் என்டு...சொன்னவர்கள் செய்ததாக சரித்திரம் இல்லை...செய்பவர்கள் சொல்வதில்லை.

ரதி, நெடுக்கு ஊருக்குப் போறதில உங்களுக்கு அப்படி என்ன ஆதாயம்? :o

நான் கருத்து சொன்னதற்கு காரணம், எனக்குத் தெரிந்து வெளி நாடுகளில் படித்து பட்டம் பெற்ற பின்பு எல்லா வசதிகளும் இங்கிருந்து மீண்டும் அங்கே போய் எழிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்த வண்ணம், தமது பணியைத் தொடர்ந்தவர்களும், தொடர்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளால் திறமை உள்ள பல மாணவர்களும் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படி படிக்க வந்தவர்ககள் எல்லோரும் இங்கேயே இருந்து விடவில்லை. வந்த காரணத்தை முடித்துக் கொண்டு திரும்பிப் போய் அங்கே தமது பணிகளைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நெடுக்கு மட்டும் இல்லை வேற யார், எங்கிருந்து இந்தக் கருத்தை குறிப்பிடு இருந்தாலும் நான் வரவேற்று இருப்பேன். காரணம் இதை நேரே பார்த்து இருக்கிறேன், அதே நேரம் நிறைய இழந்தும் இருக்கிறேன்!!

80- 90களில் இங்க வந்து, ஒரு அரசாங்க சலுகைகளையும் விட்டு வைக்காது கணவன் மனைவி தனித் தனியாக பிரிந்து வாழ்வதாக காரணம் காட்டி சலுகைகள் எடுப்பினம் (ஆனால் வருசத்துக்கு ஒண்டு என்று கையுக்குள்ள காலுக்குக்க திரியும்) அதே நேரம் சட்டத்திற்குப் எதிராக வேலையும் செய்து வட்டிக்கு விட்டவையள், சீட்டுப் பிடிக்கத் தொடக்கி தலைமறைவானவர்கள், இப்படி கனபேர்... இப்ப தங்களைத் தாங்களே Royal Family என்று சொல்லிக் கொண்டு இருக்கினம்.

மாணவ விசாவில் வந்த, வருகின்ற பலர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிப்பதும், நிரந்தர விசா இருக்கும் ஆணையோ, பெண்ணையோ பார்த்து திருமணம் செய்து இங்கேயே தங்குவதும் நடக்காமல் இல்லை! நெடுக்கின் கருத்துகளைப் பொறுத்தவரை, அவர் மாணவ விசாவில் வந்து, வந்ததற்குரிய காரணத்தை விட்டு மாறாமல் அதனைத் தொடர்வதாலோ என்னவோ அவரது தன்னம்பிக்கையையின் வெளிப்பாடாகவே அந்தக் கருத்துகள் எனக்குத் தெரிகிறது. எனது பார்வைக்கு அது பிழையாகத் தெரியவில்லை. வந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்!

ஒரு குறிப்பிட்ட திரிக்குப் பிறகு நிலைமை டோம் & ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கிற மாதிரி இருக்கு... :D

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் எவ்வளவு தான் படித்திருந்தும் சில நேரங்களீல் முட்டாள்கள் மாதிரித் தான் சிந்திப்பார்கள் அவர்களோடு கருத்தாடிப் பயனில்லை :D வீணாக என் நேரத்தை செலவழித்தது தான் மிச்சம்..சாந்தன் முந்தி புலிகளூக்காய் பாட்டுப் பாடினார் கொஞ்ச நாள் போக சிங்கள பாட்டு பாடுவார் அவரும் கொஞ்ச நாள் போக வேரும் விழுதுக்கு எதிரியாகப் போகப் போகிறார்...நாங்கள் இங்கே சொகுசாய் வாழ்ந்து கொண்டு எல்லோரையும் எதிரியாக்குவோம்...நான் இங்கே இருந்து கொண்டு நான் இந்த விசாவில தான் லண்டனுக்கு வந்தனான் திரும்பி போய் ஊருக்கு சேவை செய்வேன் என எங்குமே புழுகவில்லை நீங்கள் தான் யாழில் அதையே திரும்ப,திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்...அண்மையிலும் 1வருடத்திற்கும் முன்பும் அரசியல் சம்மந்தமான பதிவில் தயா அண்ணாவோடும் இதை வைத்து தான் மல்லுக் கட்டினீங்கள்[நான் மாணவ விசாவில் வந்தனான் என்டு]...90% மாணவ விசாவில் வந்து தான் அசேலம் அடித்து உள்ளார்கள்...உங்கள் கல்வி சார்ந்து நீங்கள் கெட்டிக்காரராய் இருக்கலாம் அதற்காக மற்றவர் முட்டாள் இல்லை...நன்றீ வணக்கம் :D

அக்கோய் உங்கள்ளுக்குள் புலிகள் தொடர்பில் எமது போராட்டம் தொடர்பில் தெளிவும் இல்லை. நல் அபிப்பிராயமும் இல்லை. அது என்றோ தெரிந்துவிட்டது. எனியும் அவ்விடயங்காள் தொடர்பில் பொய் வேசம் வேண்டாம்.

நாங்க மாணவர்கள் என்று உண்மைச் சொல்வது எப்படி மல்லுக்கட்டலாகும். அதை விடுத்து ஊரில் இருந்து எந்த போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடாது... புலிகளால் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி பொருளாதார அகதிகளான பல தமிழர்கள் செய்த குளறுபடிகளை நாமும் செய்யனும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். என்னால் எனது தேசத்தை அதற்காய் உழைத்தவர்களை உயிர்விட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்த முடியாது. நித்தி போன்றவர்களை எமது ஆணி வேர் விழுது என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவர்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. :D:o

ஊரை முன்னேற்ற சிங்களவர்களுக்கு கூலி வேலை செய்யவேண்டும். பரவாயில்லை என்றால் பிரச்சினையில்லை..

இப்பவெல்லாம், வெள்ளைகள் தமிழர்களின் கம்பனிகளில் கூலி வேலைக்கு வருகின்றார்கள். மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால் லண்டனில் திறமைக்கு மதிப்பளித்து எக்சியூற்றிவ் பொசிசனிலும் தமிழர்களை வைத்திருக்கின்றார்கள் :)

தமிழர்களுக்கு முன்னாடி குடிபெயர்ந்த இந்திய மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்தவர்களே இன்று தம் தம் நாடுகளுக்கு வேலை தேடி ஓடும் நிலையில்.. தமிழர்கள் வெள்ளைக்கு வேலை கொடுப்பது அதி திறமை எல்லோ.

ஆனால் நான் கண்ட வாக்கில் தமிழர்கள் எப்படி அரசாங்கத்தை சுரண்டுவது என்று வெள்ளைக்கு தலையிடி கொடுப்பதையே அதிகம் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். :D :D

Edited by nedukkalapoovan

இந்த ஆள் பொப் பாடுற நேரம் நாலு தற்கொடையாளிகளை தயாரித்திருக்கலாம்.

எனக்கும் 6 பச்சை புள்ளிகள்.

இவர் வேம்படியிலும் படித்தவராம்..வேம்படி பழைய மாணவிகள் கனடாவில் நடாத்திய நிகழ்வு ஒன்றில் பாட்டுபாடினார்.நானும் ஒரு நாடகம் நடித்தேன் அதுவும் 2 அழகான வேம்படி பழைய மாணவிகளுடன்..

அவர் தமிழ் பைலா பாட்டுக்களை பாடி இருக்கலாம். அது அவரை சமூகத்திற்கு அடையாளம் காட்டியும் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் சமூக அக்கறையால் எழுந்தவை இவர் சமூகத்தின் வேரும் விழுதும் என்பதுதான் ரெம்ப ரெம்ப ஓவருங்கோ. அவங்க அந்தக் காலத்தில ஒரு பன்னுக்காக செய்ய வெளிக்கிட்டது இப்ப சமூகத்தின் வேரும் விழுதுமாகி நிற்பதுதான் கேவலம்..!

தற்கொடையாளிகள் ஒன்றும் உங்க வீட்டு குழந்தை குட்டியல்ல. அதனால் தான் உங்களுக்கு அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுக்க முடியல்ல. முடிஞ்சா இப்படி கதைக்க மாட்டீர்கள்.

யாழ்ப்பாண பெருங்குடி மக்களுக்கு தெரிந்தது 3 விசயம்.

1. வெட்டிப் பந்தா.. வெட்டிப் பெருமை பேசுவது.

2. வெளிநாட்டுக்கு எப்படியாவது போய் செற்றிலாகி அங்கிருந்து கொண்டும் வெட்டிப் பெருமையை தொடர்வது.

3. படித்த பழைய பாடசாலைகள் ஊரில கொஞ்சம் வளர்ந்திருந்தா.. அதையும் வைச்சு வெட்டிப் பெருமை பேசுறது.

இத்தனைக்கும் இந்த வெங்காயங்கள் அங்க ஊரில ஒரு மாணவனுக்குத் தானும் தாங்களா உதவி செய்ய முன் வந்ததா தெரியல்ல.

1990 யுத்த காலத்தில் வேம்படி மகளிர் கல்லூரி யாழ் மத்திய கல்லூரிகள் சிங்களவன்ர போக்குவரத்து விமானங்கள் வீசிய சக்கை.. பீப்பா மற்றும் பீக்குண்டுகளால் நாசமான போது.. இந்த வெங்காயங்கள்.. ஏனென்றும் வந்து பார்த்ததில்லை. மாணவர்கள் கொட்டும் மழையில் ஒழுக்குகளுக்கு ஒழுக்கு கிறீ படித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்ப வந்திட்டினம்.. பழைய மாணவர்களாம்.. அத்தனையும் சுத்த வெறிக்குட்டிகள்.. கொண்டாட்டமாம். உந்த உதாசீனமாகும் பணத்தை எல்லாம் சேகரித்து குறித்த பாடசாலைகளின் முழுமையான நவீன தேவைகளுடனான அபிவிருத்திக்கு கொடுக்கலாமே. அதைச் செய்யாதேங்கோ.. பாடசாலைகளின் பெயரால்.. குடித்துக் கும்மாளம் அடியுங்கோ. எவனோ நாலு பேர் கஸ்டப்பட்டுப் படித்து பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுப்பான்.. நீங்கள் அதை வைச்சு லூட்டி கட்டுங்கோ...!

இதைத்தானே செய்யுறியள் காலம் காலமா. கொஞ்ச நாள் பிரபாகரனைக் காட்டிப் பிழைச்சியள்.. எனி என்ன இருக்கு.. பாடசாலைகள் தான் இருக்கு வெட்டிப் பெருமை பேசவும் குடித்துக் கும்மாளம் அடிக்கவும். கலியாண முடிச்ச ஆன்ரிகளின்ர கைகளைப் பிடிச்சு ஆட்டம் போடவும்...! :o:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நெடுக்கு ஊருக்குப் போறதில உங்களுக்கு அப்படி என்ன ஆதாயம்? ^_^

நான் கருத்து சொன்னதற்கு காரணம், எனக்குத் தெரிந்து வெளி நாடுகளில் படித்து பட்டம் பெற்ற பின்பு எல்லா வசதிகளும் இங்கிருந்து மீண்டும் அங்கே போய் எழிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்த வண்ணம், தமது பணியைத் தொடர்ந்தவர்களும், தொடர்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளால் திறமை உள்ள பல மாணவர்களும் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படி படிக்க வந்தவர்ககள் எல்லோரும் இங்கேயே இருந்து விடவில்லை. வந்த காரணத்தை முடித்துக் கொண்டு திரும்பிப் போய் அங்கே தமது பணிகளைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நெடுக்கு மட்டும் இல்லை வேற யார், எங்கிருந்து இந்தக் கருத்தை குறிப்பிடு இருந்தாலும் நான் வரவேற்று இருப்பேன். காரணம் இதை நேரே பார்த்து இருக்கிறேன், அதே நேரம் நிறைய இழந்தும் இருக்கிறேன்!!

80- 90களில் இங்க வந்து, ஒரு அரசாங்க சலுகைகளையும் விட்டு வைக்காது கணவன் மனைவி தனித் தனியாக பிரிந்து வாழ்வதாக காரணம் காட்டி சலுகைகள் எடுப்பினம் (ஆனால் வருசத்துக்கு ஒண்டு என்று கையுக்குள்ள காலுக்குக்க திரியும்) அதே நேரம் சட்டத்திற்குப் எதிராக வேலையும் செய்து வட்டிக்கு விட்டவையள், சீட்டுப் பிடிக்கத் தொடக்கி தலைமறைவானவர்கள், இப்படி கனபேர்... இப்ப தங்களைத் தாங்களே Royal Family என்று சொல்லிக் கொண்டு இருக்கினம்.

மாணவ விசாவில் வந்த, வருகின்ற பலர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிப்பதும், நிரந்தர விசா இருக்கும் ஆணையோ, பெண்ணையோ பார்த்து திருமணம் செய்து இங்கேயே தங்குவதும் நடக்காமல் இல்லை! நெடுக்கின் கருத்துகளைப் பொறுத்தவரை, அவர் மாணவ விசாவில் வந்து, வந்ததற்குரிய காரணத்தை விட்டு மாறாமல் அதனைத் தொடர்வதாலோ என்னவோ அவரது தன்னம்பிக்கையையின் வெளிப்பாடாகவே அந்தக் கருத்துகள் எனக்குத் தெரிகிறது. எனது பார்வைக்கு அது பிழையாகத் தெரியவில்லை. வந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்!

ஒரு குறிப்பிட்ட திரிக்குப் பிறகு நிலைமை டோம் & ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கிற மாதிரி இருக்கு... :)

குட்டி நெடுக்ஸ் ஊருக்கு போய் சேவை செய்வதோ அல்லது இங்கே இருந்து கொண்டு குடும்பம் நடத்துவதோ அவரது விருப்பம்...ஆனால் நித்தி ஏன் ஊருக்குப் போய் சேவை செய்யவில்லை கேட்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பது தான் கருத்து....என்னும் 10,20 வருடங்களின் பின் அவரது ஆராய்ச்சியில் அவர் வெற்றி அவரை ஒரு சாதனையாளராய் மதிக்குமிடத்து வளரும் தலைமுறை அவரைப் பார்த்து இதைத் தான் கேட்டும் நீங்கள் புலத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு என்ன செய்தனீங்கள் என்டு?...இதையே இவர் துரைராஜா மாதிரி ஊரில் இருந்து கொண்டு சொல்லி இருந்தால் நானும் வரவேற்பேன்... நாங்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நடந்து கொண்டு தான் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்...தலைவர் தன்ட பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்த்தார் மற்ற பிள்ளைகளையும் இயக்கத்தில் சேருமாறு கோரிக்கை விடுத்தார்,அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து கொண்டார்... நெடுக்ஸ் தான் மாணவ விசாவில் வந்த நான் என தன்னம்பிக்கை மாறாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ஆனால் என்னும் எத்தனை வருடம் சொல்லிக் கொண்டு இருப்பார்?...பிரிட்டன் விசா பெற்ற பிறகும் கூட அதையே தான் சொல்லிக் கொண்டு இருப்பார்...நீங்கள் சொன்ன மாதிரி பல பேர் மாணவ விசாவில் வருகிறார் கொஞ்சப் பேர் திரும்பிப் போகிறார்கள்...அரைவாசி பேர் இங்கே செட்டில் ஆகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விட்டு போட்டு நித்தி பாடின பழைய பாட்டுகளை வைத்துக் கதைப்பது நிச்சயமாக இவருக்கு சமூக அக்கறையிலும் பார்க்க நித்தியில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே காரணம்.

இதற்கு முன்பும் நான் எழுதியுள்ளேன் உங்கள் இந்த கருத்தை மட்டும் வைத்து மட்டும் அல்ல இதற்கு முன் நீங்கள் எழுதிய பல கருத்துகளையும் வைத்து சொல்கிறேன் நீங்கள் தான் நெடுக்ஸ் :D

அக்கோய் உங்கள்ளுக்குள் புலிகள் தொடர்பில் எமது போராட்டம் தொடர்பில் தெளிவும் இல்லை. நல் அபிப்பிராயமும் இல்லை. அது என்றோ தெரிந்துவிட்டது. எனியும் அவ்விடயங்காள் தொடர்பில் பொய் வேசம் வேண்டாம்.

நாங்க மாணவர்கள் என்று உண்மைச் சொல்வது எப்படி மல்லுக்கட்டலாகும். அதை விடுத்து ஊரில் இருந்து எந்த போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடாது... புலிகளால் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி பொருளாதார அகதிகளான பல தமிழர்கள் செய்த குளறுபடிகளை நாமும் செய்யனும் என்றா எதிர்பார்க்கிறீர்கள். என்னால் எனது தேசத்தை அதற்காய் உழைத்தவர்களை உயிர்விட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்த முடியாது. நித்தி போன்றவர்களை எமது ஆணி வேர் விழுது என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவர்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. :D:)

தமிழர்களுக்கு முன்னாடி குடிபெயர்ந்த இந்திய மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்தவர்களே இன்று தம் தம் நாடுகளுக்கு வேலை தேடி ஓடும் நிலையில்.. தமிழர்கள் வெள்ளைக்கு வேலை கொடுப்பது அதி திறமை எல்லோ.

ஆனால் நான் கண்ட வாக்கில் தமிழர்கள் எப்படி அரசாங்கத்தை சுரண்டுவது என்று வெள்ளைக்கு தலையிடி கொடுப்பதையே அதிகம் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். :D:)

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகள் ஏன் சயனைட் அடித்து சாகவில்லை திட்டினவர்கள் தானே நீங்கள்...உங்களையும் பார்க்க புலிகளின் தீவிர விசுவாசிகள் ஒருதரும் இல்லை...உங்களுக்கு மட்டுமே போராட்டம் என்னவென்டால் தெரியும்....உங்கள் ரத்த உறவுகளைகளை,சொத்துப் பத்துகளை இழந்து படிப்பதற்காக வந்தனீங்கள் தானே நீங்கள் அதன் வலி உங்களுக்கு மட்டுமே தெரியும்.

அக்கோய் நீங்கள் அரைகுறையுமாக ஒரு விடயத்தை விளங்கிக் கொண்டு அதற்கு உங்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப விளக்கம் கொடுத்துவிட்டு அதையே நான் எழுதியதாக கதை விடுறீங்க.

நாங்க அங்கு எழுதியது.. சரணடைதல் விடுதலைப்புலிகளின் கொள்கை அல்ல. எத்தனையோ போராளிகள் அதைச் செய்யாமல் சயனைட் அடித்து இறந்துள்ளனர். சரணடைதல் என்பது புலிகளின் கொள்கைக்கு முரணானது என்றே குறிப்பிட்டுள்ளேன். அதைத்தாண்டி முள்ளிவாய்க்கால் சரணடைவு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் சரணடைவு என்பது சர்வதேச உறுதிமொழிகளின் பெயரில் இடம்பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே அங்கு சொல்லி இருக்கிறேன். அதை புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எனது கருத்தை திரித்து உங்களுக்கு ஏற்ற வகைக்கு அதை மாற்றி நான் எழுதியதாக அறளை பெயர்ந்த கிழவிகள் கணக்கில் உளறிக்கிட்டு திரியுறீங்க. இது தேவையா அக்கோய். :) :)

நித்தி தன்ர பொண்ண எனக்கு கட்டித்தரமாட்டன் என்றிட்டார் அதில எனக்கு அவர் மேல சரியான காழ்ப்புணர்ச்சி. அதோட அவர் தன்ர பெயர் போயிடும் என்று.. என்ர பைலா பாடல்களை வெளிவரவிடாமல் தடுத்து இன்னும் பொப்பிலராகிட்டார்.. அதில எனக்கு அவர் மேல காண்டு வேற. அதுவும் இல்லாமல் அக்கா தான் எனக்கு பிணை வைச்சு ஸ்கொலசிப் எடுத்து தந்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்தவா.. இப்ப அவான்ர ரெக்கமெண்டில தான் விசா எடுக்கவும் பிரதமரோடு உயர் மட்டப் பேச்சு நடத்திக் கிட்டிருக்கா. விட்டா சொல்லுவீங்க.. நெடுக்ஸின் அடுத்த 50 ஆண்டுகால திட்டங்கள் நான் கையெழுத்துப் போட்ட திட்டங்கள் தான் என்று.

சும்மா தன்ர கற்பனையில எதையேனும் நினைச்சிட்டு.. அதை வைச்சு.. நாலு கதை பிண்ணி.. உளறிக்கிட்டு இருக்கிறதே இவாக்கு பிழைப்பா போச்சு.கொடுமைடா சாமி. அக்கா பேசாம லண்டன் தெருக்களில் துண்டு விரிச்சு சாத்திரம் சொன்னீங்கன்னா நல்லா பிழைப்ப ஓட்டலாம். நல்லா அவிக்கிறீங்க அக்கா. :)^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதினேனா?...சரணடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் அப் புலிகளைப் பற்றி கேவலமாய் எழுதியது நான் இல்லை நீங்கள் தான்...ஞாபகம் இல்லா விட்டால் பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்க்கவும்...புலிகள் என்டால் கட்டாயம் சாகத் தான் வேண்டும் என்ட மாதிரி அல்லவா கருத்து எழுதி இருந்தீர்கள்...ஆஹா என்ன பாசம் புலிகள் மீது :) ..நித்தி என்டு இல்லை பரமேஸ்வரனில் இருந்து எத்தனை பேரை நீங்கள் ஆதரித்தனீங்கள்?

வழமையான உங்களின் பதில் தான் இது. உன் பதிவை நீயே போய் படிச்சுப் பார் என்பது. நான் ஒன்றும் பாடமாக்கி எழுதுவதில்லை அக்கா. எனக்கு தெரியும் எப்போ எங்கே என்ன எழுதினேன். என்ன காரணத்தோடு எழுதினேன் என்று. ^_^

சும்மா கருணா அம்மான் எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு என்று சொல்லி ஆதரிக்கிறது போல இல்லை அக்கா ஆதரவு என்பது.

ஒருவரின் கொள்கை சார்ந்து அவரை ஆதரிக்க வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.

நித்தி பைலா பாடகர் என்பதற்கு மேலால் அவருக்கு வேறொரு அங்கீகாரம் அளிக்க முடியாது. அவரை எமது சமூகத்தின் வேர் விழுது என்று சித்தரிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் அதற்கு தகுதியானவரும் கிடையாது.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அவரின் உண்ணாவிரதத்தை அவர் கைவிட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அவர் தெளிவின்றி விட்டுச் சென்ற விடயங்கள் தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை. மக்கள் அவரின் போராட்டத்தை மையப்படுத்தி எழுச்சி கொண்டிருந்ததற்கு பிரதிபலனாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வளவு நிறைவு செய்யப்பட்டது என்பது இன்றும் சூனியமாகவே உள்ளது.

நீங்கள் கண்டதுகளுக்கும் தெரிஞ்சவர் என்பதற்கும் ஊரில் அறிமுகமானவர் என்பதற்கும் ஒருவரை ஆதரிப்பீர்கள். நாங்கள் அப்படியல்ல. ஒருவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க வலுவான காரணங்களை கண்டறிந்தே ஆதரிப்போம். அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு. :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா இன்னும் முடியலையா :) அது சரி அமுதன் அண்ணாமலை என்றும் ஒருத்தர் பாட்டெல்லாம் பாடினவராம்.அரைப்பற்றியும் யாராவது இங்கை இணைத்து விடுங்கோ.நித்தி கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் ^_^:)

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது நித்திக்கு பாடகர் தவிர்ந்த வேற அங்கீகாரம் கொடுக்க சொல்லி கேட்டனானா? நீங்கள் தான் அவர் பைலாப் பாட்டு பாடினதை தவிர‌ நாட்டுக்கு ஒன்டும் செய்யவில்லை என குத்தி முறியிறீங்கள்...நீங்கள் போன வருடம் ஒன்டு கதைப்பீங்கள் அதையே இந்த வருடம் மாற்றி கதைப்பீங்கள் ^_^:):) ...எப்போது,என்ன கதைப்பது என தெரியாமல் நிலையான கொள்கைகள் இல்லாமல் அடிக்கடி மாத்தி,மாத்தி கதைப்பது நீங்கள் தான்...நீங்களும் ஒன்டும் நாட்டுக்காக செய்ய மாட்டீங்கள் ஆனால் செய்கிறவர்களை பாராட்ட வேண்டாம் ஆனால் அவமதிக்காமல் இருக்கலாம்.

...

பிரிட்டன் விசா பெற்ற பிறகும் கூட அதையே தான் சொல்லிக் கொண்டு இருப்பார்...

நீங்கள் சொன்ன மாதிரி பல பேர் மாணவ விசாவில் வருகிறார் கொஞ்சப் பேர் திரும்பிப் போகிறார்கள்...அரைவாசி பேர் இங்கே செட்டில் ஆகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விட்டு போட்டு நித்தி பாடின பழைய பாட்டுகளை வைத்துக் கதைப்பது நிச்சயமாக இவருக்கு சமூக அக்கறையிலும் பார்க்க நித்தியில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே காரணம்.

...

இது உங்கட ஊகம்...

அவர்கள் எல்லோரையும் வேரும் விழுதும் பகுதியில் சேர்த்து புகழாரம் பண்ணினார்களா ரதி? :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவாவது நித்திக்கு பாடகர் தவிர்ந்த வேற அங்கீகாரம் கொடுக்க சொல்லி கேட்டனானா? நீங்கள் தான் அவர் பைலாப் பாட்டு பாடினதை தவிர‌ நாட்டுக்கு ஒன்டும் செய்யவில்லை என குத்தி முறியிறீங்கள்...நீங்கள் போன வருடம் ஒன்டு கதைப்பீங்கள் அதையே இந்த வருடம் மாற்றி கதைப்பீங்கள் :):):) ...எப்போது,என்ன கதைப்பது என தெரியாமல் நிலையான கொள்கைகள் இல்லாமல் அடிக்கடி மாத்தி,மாத்தி கதைப்பது நீங்கள் தான்...நீங்களும் ஒன்டும் நாட்டுக்காக செய்ய மாட்டீங்கள் ஆனால் செய்கிறவர்களை பாராட்ட வேண்டாம் ஆனால் அவமதிக்காமல் இருக்கலாம்.

இப்படி நீங்கள் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. உங்கள் இயலாமையை நீங்கள் எப்போதும் இப்படித்தான் வெளிப்படுத்தி வருகிறீர்கள் அக்கா. இது ஒரு கருத்தியல் பிழைப்பா...??!

இங்கு அவமதிக்கப்படுவது வேரும் விழுதும் பகுதியே அன்றி நித்தியல்ல. அவரே சொன்னாரே தெரியாது.. ஆனால் நீங்கள் சிலர் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கி பாராட்டோ பாராட்டுவது தான் வியப்பாக இருக்கிறது.

உண்மையில் அவர் ஒரு பொழுதுபோக்கு பைலா (எமது கலைக்கு சம்பந்தமே இல்லாத) பாடகர். அதற்கு மேல் அவருக்கு அளிக்கப்படும் அந்தஸ்துக்கள் முக்கியத்துவங்கள் அர்த்தமற்றவை. இதைத்தான் நாம் ஆரம்பம் தொட்டு சொல்கிறோம்.. நீங்களோ.. தலைகீழாக நின்று களத்தை படிப்பேன் என்று நிக்கிறீங்க போல.

உங்களோடு வேலை மிணக்கெட்டு இதற்குள் ஒரே கேள்விக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பதில் பயனில்லை. உங்களுக்கு விளங்காத விடயங்களில் எங்களோடு கருத்துப் பகிர்வதை தவிர்த்துக் கொண்டீர்கள் என்றால் நல்லது அக்கா. :D^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பைலா பாடல் எமக்கு சம்மந்தம் இல்லாதது தான் ஆனால் மானாட,மயிலாடவில் அரை குறை உடுப்புகளோடு ஆடுவதைப் பார்ப்பது தான் எமது கலையோடும் வேரும்,விழுதோடும்,இனிய பொழுதோடும் சம்மந்தப்பட்டது...அவர்களை நாங்கள் தொடர்ந்தும் ஆதரிப்போம்...உங்களோடு கருத்தாடிப் பயனில்லை இதை நான் ஏற்கனவே அதை எழுதி விட்டேன்... நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என நிற்பவர் அதனால் தான் ஒருவரும் உங்களுக்கு எதிராக கருத்தாட வருவதில்லை இதை உங்களுக்கு கிடைத்த வெற்றி என நீங்கள் நினைத்தால் உங்களை விட முட்டாள் ஒருதருமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் ஆகஸ்ட் மாதம் நூணவிலான் இவரைப் பற்றிய பதிவை இணைத்தவர் தம்பி அந்த பதிவிக்கு பதில் எழுதுவதற்கு கிட்டதட்ட 1 வருடம் தேவையாயிருந்து இருக்குது...இதிலிருந்து தெரியவில்லை என்னத்திற்காக இத் தாக்குதலை தொடங்கி இருக்கிறார் என ^_^:):)

  • கருத்துக்கள உறவுகள்

மானாட மயிலாட இங்கு இந்தப் பகுதியில் ஆடவில்லை.

குறிப்பாக அண்மைக் காலமாக போராட்ட சூழலில் இருந்து ஒதுங்கி.. அல்லது ஓடி ஒளித்து மதில் மேல் பூனைகளாக இருந்தவர்கள் மீண்டும் சிறீலங்கா விசுவாச நிலை எடுத்துக் கொண்டு இன ஐக்கிய நிலை எடுத்துக் கொண்டு புதிய அவதாரங்கள் எடுத்து வருவது நடந்தேறிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில்..

முன்னாள் சிறீலங்கா - யாழ்ப்பாண பைலா இணைப்புப் பாலங்களும்.. மீளக் கட்டி அமைக்கப்படுவது இங்கு மட்டுமல்ல.. பல இடங்களிலும் நடக்கிறது. அண்மையில் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றும் இவர்களுக்கு முக்கியம் அளித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

இத்தனை வருடமும் எங்க போய் இருந்தார்களோ தெரியவில்லை.

கொழும்பில் ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடோடு.. இந்த வடக்கு - தெற்கு உறவுப் பாலங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதற்காகவா ஒரு இளைய தலைமுறை உயிர் கொடுத்துப் போராடியது..???!

காஷ்மீரில் ஒரு காஷ்மீரிய இளைஞனை இந்தியப் பொலிஸார் சுட்டுக் கொன்றதற்காக எந்த ஆயுதமும் இன்றி அந்த மக்களால் இந்தியப் படைகளின் இருப்பை எதிர்த்துப் போராடி பாங்கி மூனின் கவனத்தை ஈர்க்க முடியுது என்றால் ஏன்... தமிழர்களால் முடியவில்லை.

காரணம்.. தமிழர்களுக்கு போராட்டம் அல்ல குறிக்கோள். போராட்டத்தை வைத்து தம்மை வளப்படுத்திக் கொள்வதே குறிக்கோள். அதற்கு உதாரணமானவர்களை தமிழர்கள் எப்போதும் ஆதரித்து வருவதை இனங்காட்ட இது போன்ற தலைப்புக்கள் எமக்கு அவசியமாகின்றன. இந்த அடிவருடித்தனப் பிழைப்பை தமிழர்கள் கைவிடாத வரை அவர்களுக்காக போராட ஆயிரம் பிரபாகரன்கள் வந்தும் பயனில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைசியாய் எழுதிய விடயம் ஏற்று கொள்ளலாம் ஆனால் அதற்காக நித்தியை மட்டும் பழி வாங்கும் விதமாக கருத்து எழுதுவது சரியில்லை...முதலில் மக்களின் மனதை மழுங்கடிக்கும் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்...எங்களுக்காக ஒரு தொலைக்காட்சியை நாம் தொடங்க வேண்டும் அதில் முற்று முழுதாக தேசியம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் அதில் நித்தி போன்ற பாடகர்களை உள் வாங்க வேண்டும்...நித்தி மட்டுமல்ல இவரைப் போன்ற பல கலைஞர்களையும் உள் வாங்க வேண்டும்...எடுத்த உடனே ஒருவரை துரோகி எனச் சொல்லும் உரிமை எமக்கு இல்லை...முதலில் நாம் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்க வேண்டும்...உங்களுக்கு தமிழர்களின் போராட்டத்தை வைத்து தம்மை வளப்படுத்து கொள்பவர்களை அடையாளம் காட்ட வேண்டுமானால் அதற்கென ஒரு புதுத் தலைப்பை தொடங்கி உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

என்னைப் பொறுத்தவரை இவ்வளவு காலமும் மெளனமாக இருந்துவிட்டு நித்தி போன்றவர்கள் திடீர் என்று தொலைகாட்சிகளூடு விளம்பரப்படுத்தப்படுவதன் நோக்கம் அவர்களின் மெளனத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இவரைப் போல பலர் இருக்கிறார்கள். இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

  • 7 years later...

சின்ன மாமியே பாடல் எப்படி உருவானது தெரியுமா?

”சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..” என்ற பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல்.

இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் செறிந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் இந்தப் பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலாகவே இது உள்ளது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா என்று சொல்லப்படும் நித்தி கனகரத்தினம் ஆவார். 1970களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நித்தியின் இசை நிகழ்வைக் கண்டு களிக்க அரங்கமே நிறைந்திருக்கும்.

சின்ன மாமியே பாடலைப் பின்பற்றி இன்று ஏராளமான மொழிகளிலே பல பாடல்கள் வெளிவந்துவிட்டன. அத்தகைய ஒரு பாடல் எவ்வாறு உருவானது? அன்று என்ன நடந்தது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தக் காணொளி..

https://www.ibctamil.com/srilanka/80/105269

  • 4 weeks later...

தமிழ் பாப் இசைக்கலைஞரான நித்தி கனகரத்தினம் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/27/2018 at 3:42 PM, நவீனன் said:

4 hours ago, நவீனன் said:

தமிழ் பாப் இசைக்கலைஞரான நித்தி கனகரத்தினம் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

நல்லதொரு இணைப்புகள். tw_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.