Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ... புலம் நோக்கி தமிழக வியாபாரிகள் ....

Featured Replies

kattuvalikiramam2009mai.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாபெரும் படையணியைத் திரட்ட வருகிறது சிறுத்தை இது புரியாமல் நெல்லையன் நீங்கள் :rolleyes:

புலத்தில இருக்கிறவர்களும் வாழட்டும்.. நிலத்தில இருக்கிறவர்களும் வாழட்டும். எடுத்ததுக்கெல்லாம் பழந்துணி மாதிரி கிழியாமல் பேசாமல் அமத்திக்கொண்டு இருங்கோ நெல்லையன்.

இரண்டு பல்கலைக்கழக மாணவரின் படிப்பிற்காக உருப்படியாக பணம் திரட்ட முயலும் போதுதான் எம் மக்களின் கஞ்சத்தனமும் கேள்விகள் கேட்பதில் இருக்கும் சூரத்தனமும் எனக்கு தெளிவாக புலப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் ஆகக் குறைந்த அளவு பணம் போய் சேர்த்தாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் என்னால் எடுக்க முடிகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் இதை தெரிய படுத்தியத்திற்கு நன்றி

உங்களில் யாராவது திருமாவை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் தி மு க துரோகத்திற்கு ஏன் கூட்டு சேர்ந்தீர்கள் என்றும் முத்துக்குமாரின் சாசனத்தை ஏன் பின்பற்ற தவறினீர்கள் என்றும் கேளுங்கள். வியாபாரிகள் வியாபாரம் செய்யட்டும் எதை செய்கிறார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் இதை தெரிய படுத்தியத்திற்கு நன்றி

இவ்வளவு காலத்திலை ஒரு நல்ல பதிவை இட்ட நெல்லையனுக்கு நன்றி . :rolleyes:

  • தொடங்கியவர்

புலத்தில இருக்கிறவர்களும் வாழட்டும்.. நிலத்தில இருக்கிறவர்களும் வாழட்டும். எடுத்ததுக்கெல்லாம் பழந்துணி மாதிரி கிழியாமல் பேசாமல் அமத்திக்கொண்டு இருங்கோ நெல்லையன்.

இது புலத்திலிருந்தா அல்லது நிலத்திலிருந்தா வருகிறது?????

உங்களில் யாராவது திருமாவை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் தி மு க துரோகத்திற்கு ஏன் கூட்டு சேர்ந்தீர்கள் என்றும் முத்துக்குமாரின் சாசனத்தை ஏன் பின்பற்ற தவறினீர்கள் என்றும் கேளுங்கள். வியாபாரிகள் வியாபாரம் செய்யட்டும் எதை செய்கிறார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்நிகழ்விற்கு வரும் இதன் விமான பிரயாண செலவுகளே, இந்நிகழ்வின் போது சேருமா தெரியவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பல்கலைக்கழக மாணவரின் படிப்பிற்காக உருப்படியாக பணம் திரட்ட முயலும் போதுதான் எம் மக்களின் கஞ்சத்தனமும் கேள்விகள் கேட்பதில் இருக்கும் சூரத்தனமும் எனக்கு தெளிவாக புலப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் ஆகக் குறைந்த அளவு பணம் போய் சேர்த்தாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் என்னால் எடுக்க முடிகின்றது

உண்மைதான். அந்த மாணவர்களில் ஒருவருக்கு ஒழுங்கு செய்தாயிற்று. மற்றவரின் நிலமைதான் மாற்றமில்லாமல் அந்தரத்தில் நிற்கிறது.

இதோ அகதிமுகாம்களில் உள்ளவர்களை தோழில்தாங்குகிறோம் இதோ பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வாழ்வு தருகிறோம் இதோ குழந்தைப்போராளிகளுக்கு உடை தருகிறோம் உரிமை தருகிறோம் என்ற வார்த்தைகள் எல்லாம் மேற்சொன்னோருக்கான வழிகள் திறக்கப்பட்டு இதோ உதவுங்கள் என்ற குரலுக்கு ஆளாளுக்கு ஆயிரம் ஆயிரம் சொன்ன வாய்களெல்லாம் வெறும் வாய்ச்சொல் வீரமாய் எல்லாம் என்பது நிரூபணமாகிவிட்டது நிழலி.

ஒரு சின்ன உறுத்தல் திருமாவைக் கூப்பிட்டு எந்த அதிர்வையும் ஏற்படுத்த முடியாது தமிழக அரசியலிலும் சரி அனைத்துலக அரசியலிலும் சரி...ஆனால் திருமாவுக்கு இவர்கள் முதலிடும் தொகை நிச்சயம் ஒரு முகாமில் வாழும் ஒருபகுதி மக்களுக்கோ அல்லது ஆதரவற்ற சிறுவர்கள் முதியோரைப் பேணும் அருளகத்துக்கு ஒருவாரச்சாப்பாட்டுக்குக் காணும்.

திருமா வந்து இதோ அதோ புலியாகிறேன் வெடிக்கிறேன் என்று உரக்கக்கூவிவிட்டு தமிழகம் திரும்பியதுடன் சத்தமின்றி இருந்து விடுவார்.

இதில எல்லாம் நட்டம் நட்டமெண்டு சொல்லியே எங்கள் ஒற்றுமையை குலைக்கிறீங்கள் என கோபிக்கும் நண்பர்களுக்காக அதிகம் இதுபற்றி விவாதிக்காமல் விட்டுவிடுகிறேன்.

இந்நிகழ்விற்கு வரும் இதன் விமான பிரயாண செலவுகளே, இந்நிகழ்வின் போது சேருமா தெரியவில்லை???

உண்மை.

திருமா, உது தகுமா!!

யாமறியோம் பராபரமே!

தகாதுதான் ஆனால் திருமாவென்ன முற்றும் துறந்த முனிவரா நெல்லையன் கலைஞர் குடும்ப கெளரவத்தை மிதிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இதாவது பரவாயில்லை. கொஞ்சக்காசாவது ஊருக்குப் போகிறதே. ஆனால் மெல்பேர்ணில் ஒரு நகைக்கடை ஆரம்பித்து தனது 21 வருட பூர்த்தியைக் கொண்டாட திரைப்படப் பாடகர்களை மெல்பேர்ணுக்கு கொண்டு வந்து பெரிய இசைச்சுனாமி வைக்க விருக்கிறதாக விளம்பரம் செய்கின்றது. நடைபெறும் நாளோ தீலிபனின் மறைவு நாள். இதனால் தான் மெல்பேர்ணில் தீலிபன் நினைவு நாள் ஒரு கிழமைக்கு முன்பாக வைக்கினமா தெரியாது?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் யாராவது திருமாவை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் தி மு க துரோகத்திற்கு ஏன் கூட்டு சேர்ந்தீர்கள் என்றும் முத்துக்குமாரின் சாசனத்தை ஏன் பின்பற்ற தவறினீர்கள் என்றும் கேளுங்கள்.

திருமாவைக் கேட்கமுன்னர், புலம் பெயர்ந்த நாடுகளில் , காங்கிரசு அரசுக்குத் துணைபோன திமுகவின் சன், கலைஞர் தொலைக்காட்சியை தொடர்ந்தும் எம்மவர்கள் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள் ஏன்?. சன்,கலைஞர் தொலைக்காட்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு திருமாவைப் பார்த்து ஏன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று உங்களால் எப்படி கேட்க முடிகிறது?

  • தொடங்கியவர்

... பிரமச்சாரத்தை ஈழத்தமிழர்களுக்கான சாகும்வரை உண்ணாவிரதத்துக்கு பின்னம் சாகாமல் முடித்த திருமா, லண்டனில் வைத்து அனேகமாக சிங்களத்துக்கு எதிரான பெரும் போர் தொடுக்கலாம் என்று கூறுகிறார்கள் .... அனேகம் வெற்றியும் காண்பாராம் ....

....... விசிலடித்தானுகளான புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இருக்கும் மட்டும் ... இனி வரும் நாட்களும் தமிழக தமிழ்த்தேசிய வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்!!

நெல்லையன் எழுதுவதற்கு இடம் இருக்கின்றதென்பதற்காக எதையும் எழுத கூடாது. திருமாவை நான் நேர்மையானவர் என்று சொல்லவில்லை. இலண்டனிலும் உண்ணாவிரதம் இருந்தவர்கள்தானே. முதலில் நிறுத்திய இளைஞர் நிறுத்துவதற்கான காரணத்தை சொன்னார் அவரை ஐநாவிற்கு அழைத்துச்செல்ல உத்தரவாதம் தந்திருப்பதாக. ஆனால் அதைப்பற்றிய பேச்சு நம்மவர்களால் மறைக்கப்பட்டுவிட்டது. இப்படி எத்தனையோ விடயங்களில் நம்மவர்களே ஏமாற்றும்போது இந்திய அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறக்கூடாது

  • தொடங்கியவர்

வாழ்விழந்த வன்னி மக்களுக்கான நினைவு நிகழ்வல்ல, அழிந்தொழிந்த வன்னி மக்களுக்கான நினைவு நிகழ்வு!!! ........... அழித்து விட்டோம்!

Edited by Nellaiyan

போராடும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது இதை நான் சொல்லித்தான் யாரும் தெரிய தேவையில்லை.

ஈழ போராட்டத்தில் மனம்தான் முக்கியம் அதில் மானமும் பங்கு வகிக்கும். கணக்கில்லாத அப்பாவி மக்கள் கொல்லப்படும் போதும் சித்தரவதை செய்யும் போதும் திருமாவானாலும் சிறீகாந்தாவானலும் உண்மையாகயில்லை....ஒருங்கினைந்

Edited by Sniper

வன்னி மக்களின் வாழ்வு அழிந்து போக துணையான காங்கிரஸ் கட்சியின் கூட்டாளி வணக்கம் செலுத்த வருகின்றார். புங்குடிதீவு ஒன்றியம் திருமாவை கூப்பிட்டால் நெடுந்தீவு ஒன்றியம் வைகோவை கூப்பிடலாம் மேலும் பிற ஊர் பிரதேசவாரி ஒன்றியங்கள் சீமான நெடுமாறன் போன்றவர்களை கூப்பிடலாம். யாராவது ஒருவர் உசுப்பேத்த வந்தால் தானே காசை சேர்க்க முடிகின்றது. ஒன்றியத்திற்கு ஒன்றியம் விலாசம் அவசியம் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு எம்மை வைத்து அரசியல் செய்வது அவசியம். கடசியாக வன்னிமக்கள் மறுவாழ்வு பெறுவதும் அவசியமாகின்றது. கொன்றால் பாவம் தின்றால் தீரும். கடசி வன்னிக்குடிமகன் வரை கொன்று தின்னவேண்டியது தான். கடந்த முப்பது வருடமாக இந்தியத் தமிழர்களால் இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும் இந்திய நடுவண் அரசை தடுக்க முடியவில்லை. ஆனால் எங்கள் சனத்தின் விடிவிற்காக தொடர்ந்து போராடுவார்கள். சனம் இருக்கும் வரை அதை தடுக்க முடியாது. நடத்துங்கள்.

உவர் விடுதலை சிறுத்தை தலைவர் என்கிறார் யாருக்கு விடுதலை எடுத்து கொடுக்கப்போகிறாராம் ,கோவணத்திற்குள் இருக்கும் சிறுத்தைக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

மரித்துப்போன வீரமிகு தலைவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மரித்துப்போன வீரமிகு தலைவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்துவார்களா?

??????????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மரித்துப்போன வீரமிகு தலைவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்துவார்களா?

இந்நிகழ்விற்கு வரும் இதன் விமான பிரயாண செலவுகளே, இந்நிகழ்வின் போது சேருமா தெரியவில்லை???

ஒரு நாலுபேர் சேர்ந்து

ஒரு நாலுபேருக்கு எம்மாலானதை செய்வோம் என்று வெளியே வந்ததற்கு.....

நீங்கள் எல்லாம் என்ன சாப்பிடுகின்றீர்கள்............???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் என்ன சாப்பிடுகின்றீர்கள்............???

உங்களை மாதிரித்தான்.. நடக்கிறது, ஓடுறது, நீந்துறது, பாயுறது, ஓடுறது போடுறது எல்லாம்தான்..

அமெரிக்கன் வந்து மீட்பான், தமிழகத் தலைவர்கள் எப்படியும் காப்பாற்றுவார்கள் என்று ஏமாத்தினர்வர்கள் தற்போது உபவாசம் இருக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனை விடுங்கோ, ஐரோப்பாவில நடிகை நமிதா வருகிறாராம் என்று ஒரு விளம்பரம் பார்த்தேன். புங்குடுதீவு ஒன்றியம் திருமாவைக்கூப்பிட்டு கொஞ்சக் காசையாவது ஊருக்கு அனுப்பவுள்ளார்கள். ஆனால் நமீதாவைக்கூப்பிட்டு.......................

......

.. பிரமச்சாரத்தை ஈழத்தமிழர்களுக்கான சாகும்வரை உண்ணாவிரதத்துக்கு பின்னம் சாகாமல் முடித்த திருமா, லண்டனில் வைத்து அனேகமாக சிங்களத்துக்கு எதிரான பெரும் போர் தொடுக்கலாம் என்று கூறுகிறார்கள் .... அனேகம் வெற்றியும் காண்பாராம் ....

....... விசிலடித்தானுகளான புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இருக்கும் மட்டும் ... இனி வரும் நாட்களும் தமிழக தமிழ்த்தேசிய வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்!!

:(:D :D

  • தொடங்கியவர்

திருமாவளவனை விடுங்கோ, ஐரோப்பாவில நடிகை நமிதா வருகிறாராம் என்று ஒரு விளம்பரம் பார்த்தேன். புங்குடுதீவு ஒன்றியம் திருமாவைக்கூப்பிட்டு கொஞ்சக் காசையாவது ஊருக்கு அனுப்பவுள்ளார்கள். ஆனால் நமீதாவைக்கூப்பிட்டு.......................

......

... அங்கே கொட்டிக் கொட்டி அனுப்பிய வனங்காமண் போய்ச் சேர்ந்திட்டுது .... உந்த ****, ..... ஓஓஓ கட்டாயம் போய்ச்சேரும்!!

இப்போதைக்கு திருமாவை விட நமீதா தேறலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

அது யாரு நமிதா? வடிவா இருப்பாவோ :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.