Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

Featured Replies

சரியா சொன்னிங்க தயா. உப்பிடித்தான் இங்கை கனபேர் நினைக்கினம். ஆனா இப்பவும் திரும்பி போக மாட்டினம்!

நான் நினைக்கிறேன் பிரபாகரன் சிங்களவனை உசுப்பேத்தி விட்டு இருக்காவிட்டால் உங்களை சிங்களவன் இலங்கையில் இருந்து அடித்து இருக்க மாட்டான் நீங்கள் உங்கை சுவிசுக்கு வந்து இருக்க வேண்டி இருக்காது எண்டு...

என்ன மாதிரி சிறப்பாய் இலங்கையில் வசதியாக வாழ்ந்து இருக்க முடியும்... எல்லாத்தையும் கெடுத்து போட்டாங்கள்...

இப்ப பாருங்கோ எவ்வளவு கஸ்ரம்...

  • Replies 70
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வேலவன்

இந்த விடயமாக எனது இந்திய நண்பரொருவரும் நான் எழுதிய செய்தியை, எனக்கு முன்பே உறுதிப்படுத்தியிருந்தார். அந்த நண்பரிடமிருந்து எவ்வித ஆதாரத்தை உங்களுக்கு பெற்றுத் தர வேண்டுமெனத் தாங்கள் தெரிவியுங்கள். முடிந்தால் நான் அதைப் பெற்று களத்திலேயே இணைக்கின்றேன். அப்போது தெரியும் யார் பொய் சொல்வதென்று. மேலும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவதே எம்மக்களைச் சாட்டி பலபேர் பிழைப்பு நடாத்த முயல்வதையே. ஐரோப்பாவிலேயே பல அமைப்புகள் வன்னி மக்களைச் சாட்:டி சேர்த்த பல கோடிகளை எப்படி கபளீகரம் செய்துள்ளார்கள் என்ற செய்திகளை தங்களைப் போன்றவர்கள் பார்க்கவில்லையா ?? தன் இன மக்கள் தவறே செய்தாலும் இன மக்கள் விட்டுக்கொடுப்பதில்லை என வாய்மூடி மெளனம் காக்கின்றீர்களா ??

அட அட ..... கிழம்பிட்டாங்கய்யா .....கிழம்பிட்டாங்க!

ஊரார் பிள்ளைகள் கரும்புலியாகி போகிறார்கள் பிராபகரன் பிள்ளைகள் வெளிநாட்டில் என்று குமுறினார்கள். சும்மா சொல்லா கூடாது அவர்கள் புத்தியை தீட்டோ தீட்டென்று தீட்டியே சொன்னார்கள். பின்பு பிரபாகரன் குடும்பத்தோடு முள்ளிவாய்காலின் தனது இனத்தோடும் இனமானத்தோடும் நின்றான். அப்பவும் இவர்கள் புத்தியை தீட்டோ தீட்டென்று தீட்டிகொண்டே நின்றார்கள்........

இப்போது தான் ஒன்று தனது வேலையொன்று விட்டிராது ஏதோ கொஞ்ச தமிழ்மானம் காக்க சீமான் தன்னால் முடிந்ததை செய்கிறான். ஆனால் போதாது அவன் சொந்த உழைப்பால் பெற்றாலும் தனது வீட்டை இழக்க வேண்டும் மனைவி பிள்ளைகளை வன்னி முகாமுக்கு அனுப்ப வேண்டும் அவனும் இனமானம் பற்றி பேசிய காரணத்திற்காக நடு றோட்டில் நிற் வேண்டும். அப்போதும் இந்த (..... தமிழில் வார்த்தை இல்லை) புத்தியை தீட்டோ தீட்டென்று தீட்டி எமை போன்ற புத்தியில்லாதவர்களுக்கு யாழ்களத்தில் வகுப்பெடுப்பது தவிர வேறேதும் செய்யார். ஏன் இவ்வளவு காலமும் தீட்டிய புத்தியை கொண்டுபோய் எதையாவது கிழித்துபார்க்கலாமே?

அதுக்கு புத்திமட்டும் போதாது...... இனமானமும் சூடு சுரணையும் கொஞ்ம் வேணுமோ என்னமோ? யாருக்கு தெரியும்?

சீமான் மாடி வீடு வச்சிருந்தா என்ன? வச்சிருக்கா விட்டால் என்ன? எங்களுக்காக அவர் ஏன் குரல் கொடுக்க வேண்டும் . தானுண்டு தன் தொழில் உண்டு என்று இருக்க வேண்டியவர்தானே? சீமான் மற்றைய சினிமாக் காரர்களைப் போல இல்லை.தமிழரின் அவல நிலையச் சொல்லி அகதிப் பாஸ்போட் எடுத்துப் போட்டு அந்த தமிழர்களின் அழிவை ரசிக்கிற உங்களைப் போன்றவர்களை விட சீமான் எவ்வளவோ மேல்.

முதலில் நான் எழுதியதை நன்றாக வாசித்து விட்டு தங்கள் கருத்தை வைப்பது நல்லது. தமிழனை சுரண்டிப் பிழைப்பவர்களைப் பற்றி எழுதினால் அது உங்களுக்கு தமிழனின் அவல நிலையை இரசிப்பது போலவா தெரிகின்றது. புலவர் என்று புனைப்பெயர் வைத்த தங்களுக்கு தமிழிலும் பிரைச்சினை என்பது எனக்குத் தெரியாது ??

:unsure:

அதுக்கு புத்திமட்டும் போதாது...... இனமானமும் சூடு சுரணையும் கொஞ்ம் வேணுமோ என்னமோ? யாருக்கு தெரியும்?

:lol:இதை தாங்கள் சொல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் ஈழப் போராட்டத்தில் வெடித்ததை விட பெரியவெடி இனி வாய்ச்சொல்லிலும், மின்னெழுத்துக்களிலும், காயிதத்திலும் தான் சாத்தியம்..

தமிழனை சுரண்டிப் பிழைப்பவர்களைப் பற்றி எழுதினால் அது உங்களுக்கு தமிழனின் அவல நிலையை இரசிப்பது போலவா தெரிகின்றது.

இப்ப என்ன சொல்ல வாரீங்கள்???....சீமான் எங்கள காட்டி பணம் சம்பாதிக்கிறார் என்டா? அவர் என்ன செய்ய வேணும் என்டு நீங்கள் எதிர்பார்கிறீங்கள்?

இந்த வருடம் ஈழப் போராட்டத்தில் வெடித்ததை விட பெரியவெடி இனி வாய்ச்சொல்லிலும், மின்னெழுத்துக்களிலும், காயிதத்திலும் தான் சாத்தியம்..

:unsure:உண்மைகளைச் சொல்ல வெளிக்கிட்டாலே சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேசியவாதிகளாக நடித்து எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டினால்த் தான், தேசியவாதிகளாக ஏற்றுக் கொள்வார்களாம் எங்கே போய் முட்டச் சொல்கின்றீர்கள் ?? :lol::rolleyes:

நான் இங்கு எதையும் நினைச்சுப் பார்த்து எழுதலை. அப்ப செய்தியை இணைச்சவர் என்ன ஊடகங்களில் வந்ததை இணைச்சவரோ அல்லது கற்பனையில் நினைச்சு இணைச்சதோ ?? வந்த செய்திகளைத் தான் நானும் எழுதினேன். நான் எனது சொந்த உழைப்பில் தான் பிழைப்பைப் பார்க்கின்றேன். அதனால்த் தான் எதையும் கெளரவமாக நாகரீகமாக எழுதுகின்றேன்.

மறை கழண்டவைக்கும், மண்டைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவைக்கும் தான் நக்கிப் பிழைக்கிறரதும், அநாகரீகமாக கருத்துகளைக் கையாள்வதும் கைவந்த கலையென்பது தங்கள் கருத்திலிருந்தே புரியாதா என்ன ??

சீமானை பற்றி ஆதாரம் இல்லாமல் கருத்துக்கள் எழுதும் போதும் , எனைப்பற்றி தனிப்பட எழுதும் போது இல்லாத நாகரீகம் திடீர் எண்டு எப்பிடி எட்டி பாக்குது... மறைகழண்டவைக்கு தான் உதுகள் எல்லாமே மறந்து போகும்...

சீமானை பற்றி நீங்கள் சொல்லிய பொய்களுக்கு ஆதாரங்களை தர முடியுமா....??? அப்படி என்ன ஆதாரங்கள் உங்களுக்கு செய்தியாக வந்தது...??? யாரிடம் இருந்து ஹம்சாவிடம் இருந்தா எனும் விபரங்களையும் முடிந்தால் தாருங்கள்....

:unsure:நீங்க எதையும் நினைத்துப் பார்க்கிறதிலை வல்லவரென்பது களத்திற்கே தெரிஞ்ச விசயமாச்சே. ஆனால் பலவேளைகளில் நினைப்புத் தானுங்க பிழைப்பைக் கெடுக்கிறதெண்டு பெரியவாள்கள் சொல்லுறதுமுண்டு. :rolleyes:

தமிழனுக்கு முதல் எதிரி தமிழனே தான்......

வன்னியில் எமது மக்கள் உயிர்வாழ போராடுகிறார்கள் , என் தாய் வீடு வாங்க போராடுகிறாள் ..... என சில காலத்திற்கு முன் சீமான் கூறியிருந்தார்... (ஒரு மேடையில் என நினைக்கிறேன் )

வேலவன்

இந்த விடயமாக எனது இந்திய நண்பரொருவரும் நான் எழுதிய செய்தியை, எனக்கு முன்பே உறுதிப்படுத்தியிருந்தார். அந்த நண்பரிடமிருந்து எவ்வித ஆதாரத்தை உங்களுக்கு பெற்றுத் தர வேண்டுமெனத் தாங்கள் தெரிவியுங்கள். முடிந்தால் நான் அதைப் பெற்று களத்திலேயே இணைக்கின்றேன். அப்போது தெரியும் யார் பொய் சொல்வதென்று. மேலும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவதே எம்மக்களைச் சாட்டி பலபேர் பிழைப்பு நடாத்த முயல்வதையே. ஐரோப்பாவிலேயே பல அமைப்புகள் வன்னி மக்களைச் சாட்:டி சேர்த்த பல கோடிகளை எப்படி கபளீகரம் செய்துள்ளார்கள் என்ற செய்திகளை தங்களைப் போன்றவர்கள் பார்க்கவில்லையா ?? தன் இன மக்கள் தவறே செய்தாலும் இன மக்கள் விட்டுக்கொடுப்பதில்லை என வாய்மூடி மெளனம் காக்கின்றீர்களா ??

ஒண்டும் கஷ்டப்பட வேண்டாம் , எதவச்சு உறுதிபடுத்தினார் எண்டு சொல்லுங்கோ

சீமானைப்பற்றிக்குறை சொல்ல வெளினாட்டுக்கு ஒடிச் சென்ற தமிழர்களுக்கு ( நான் உட்பட) அருகதையில்லை. அவர் வீடு வைத்திருந்தால் என்ன வைக்கவிட்டால் என்ன?. சிறிலங்கா அரசினால் வீசப்படும் பணத்துக்கு தமிழ்த்தேசியவாதரவாளர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை சில காக்கை வன்னியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் ஈழப் போராட்டத்தில் வெடித்ததை விட பெரியவெடி இனி வாய்ச்சொல்லிலும், மின்னெழுத்துக்களிலும், காயிதத்திலும் தான் சாத்தியம்..

இனி உங்களுக்கு எங்கையிருந்தாவது வெடி விழப்போகுது :rolleyes:

இந்த வருடம் ஈழப் போராட்டத்தில் வெடித்ததை விட பெரியவெடி இனி வாய்ச்சொல்லிலும், மின்னெழுத்துக்களிலும், காயிதத்திலும் தான் சாத்தியம்..

இனி உங்களுக்கு எங்கையிருந்தாவது வெடி விழப்போகுது :o

:rolleyes:

.. எம்மவர்களிடையே இன்று புலத்தில் மலிவானது, உங்களுக்கும் வந்து சேரப்போகிறது!! ........

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இனி உங்களுக்கு எங்கையிருந்தாவது வெடி விழப்போகுது :rolleyes:

வெடி வைக்க ஏவி விடுவதற்குத்தான் பலர் உள்ளனர்.. ஆனால் ஏவல் செய்ய ஒருவருமில்லை!

அட நக்கிற வழிய பாக்காம சீமானும் மட்டையும்.. அவர் குரல் கொடுத்தா என்ன? எதுவும் வித்தியாசமா நடக்கவாபோகுது?

முதலில் தங்கட மீன்காறங்கள், இலங்கை அகதிகளுக்குக் எதாவது செய்யட்டும் ( குரல் கொடுக்கட்டும்........ :rolleyes: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் எங்கட போராட்டம் பகிடியாப்போச்சு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உனக்குந்தான் !!!!! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்வதெல்லாம் ஒன்றே இதைத்தவிர வேறொன்றும் இல்லை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் பெற்றோர்கள்.

annammal.jpg

சீமான் சினிமாவுக்கு வர முதல் எடுத்த படமோ?

சீமான் சினிமாவுக்கு வந்த பின்பு தன் பெற்றொரை இப்படி வைத்திருகிறார் என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்?

பெற்றொரை கவனிக்காதவர் எப்படி ஈழத்தமிழரை கண்டு கொள்ளப்போகிறார்

Edited by kuddipaiyan26

.. இன்னும் பல சீமான்கள் தோன்ற வேண்டும் ... தோன்றினால் ... புலத்தில் வாழும் பல பூசாரிகளின் காட்டில் தொடர்ந்த மழைதான்!!! கிபிப் ... கூரே!!

சீமானின் பெற்றோர்கள்.

annammal.jpg

புஸ்பவனம் குப்புசாமியின் தாய் தந்தையும் இதே நிலையில் தான் இன்றும் இருக்கின்றார்கள். அதற்காக புஸ்பவனம் குப்புசாமியும் ஏழ்மையில் வாடுகின்றார் என்றா அர்த்தம் ??

பொதுவாகவே இந்திய வழக்கில் " என் ஆத்துக்காரரும் கச்சேரி பண்ணுறார் " என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அது போலத்தான் நீங்கள் இணைத்த சீமான் போன்றவர்களும் உதவி பண்ணுகின்றார்கள் என்ற விபரம் உள்ளது. ஏனையவர்கள் குறிப்பாக இத்தனை பேருக்கு உதவி செய்கின்றோமென்று சொல்லியது போல் ஏன் இவர்களால் சொல்ல முடியாது போனது. நீங்கள் சொல்வது போல் சீமான் மிகமிக பின்தங்கிய குடும்பத்திலிருந்து சினிமாத்துறைக்கு வந்தவர் தான். அவர் இயக்கியது 2-3 படங்கள் தான். ஆனால் அவரது தற்போதைய நிலை மிகப்பெரிய மாடிவீடு மற்றும் விலையுயர்ந்த பஜிறா ஜீப்பிற்குச் சொந்தக்காரர். இதை நான் சொல்லவில்லை. ஐரோப்பிய ஊடகமொன்றிற்கு இந்தியச் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளரொருவர் வானலையிலேயே சொன்னது. வேண்டுமானால் மாடி வீட்டு ஏழை என்று வைத்துக் கொள்ளுவோமா ??

ஆமாம் சீமான் எமக்காக கோசம் போட்டுச் சிறை சென்றவர் தான். அங்கு கூட தமக்கு முதல்வகுப்புச் சிறை தான் தர வேண்டும் என்று போராடிப் பெற்ற தியாகி. ஈழத்தமிழன் வன்னியில் பரிதவிக்கின்றான் என்ற கவலையில் முதல் வகுப்புச் சிறை கேட்டார் என்று எடுத்துக் கொள்வோமா ?? பெரியாரின் சீடனென்று தன்னை பறைசாற்றும் சீமான் சமீபத்தில் கூட தமிழகத்தில் நடத்த கிறிஸ்தவ நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்து கொண்டார் தானும் கிறிஸ்தவன் என்பதால்.

"புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது " என்பது என் தலையாய கருத்துத் தான். அதற்காக " தமிழா நீ இளிச்சவாயனாக இருந்து ஏமாந்து கொண்டிரு " என்பதை நான் ஏற்றுக் கொள்ளவா முடியும் ??

நீங்கள் இணைத்த தகவல்களின்படி பார்த்தாலே, மொத்தத்தில் ஈழத்தமிழனில் அக்கறை கொண்ட எத்தனையோ பேர் விளம்பரமில்லமலே உதவிகள் செய்து கொண்டிருக்க, சிலர் மட்டுமே தமது பிழைப்புகளுக்காக விளம்பரம் தேடுகின்றார்கள்.

:)அடடா அப்ப வன்னிமுகாமில் இணைய இணைப்புகளுடன் வசதியாகவிருந்து, துன்பப்பட்டுக் கொண்டுள்ளீர்கள் போல. உங்களுக்கு விடிவு கிடைக்க நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :rolleyes:

ரொம்ப வருத்தமாக இருக்கிறது, இது போன்ற பதிலை பார்க்கும் போது, ஊடகம்

சமீபத்தில் சென்னை சென்ற போது சீமானை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திக்க‌

நேர்ந்தது, அப்போது வெளியில் ஒரு வெள்ளை காகித பொதியில் ஏதோ ஒன்று

கொடுத்து கொண்டு இருந்தனர்.

பலர் நான் அந்த பத்திரிக்கை, இந்த டீவி என்று சொல்லி வாங்கி கொண்டு இருந்தனர்.

மும்பையில் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு தாமதமாக வந்த

ஊடக அன்பர்களுக்கு பேச்சு பிரதி(செய்தி சாரம்) கொடுப்பது வழக்கம் நானும் அது

போல் அண்ணன் பேச போவதை பிரதி எடுத்து தருக்கிறார்கள் என்ற நினைப்பில்

நானும் கூட்டட்தோடு கூட்டமாய் கை நீட்டி விட்டேன், எனக்கும் ஒரு பொதி கிடைத்தது

உடனே நான் அதை பார்க்க வில்லை, அன்னனுடம் பேசிவிட்டு, மாலையில்

பேருந்தி சென்று கொண்டு இருக்கும் போது அந்த பொதியை பிரித்து படிக்கலாம் என்று

பார்த்தால் காந்தி தாத்தா சிரிக்கும் காகிதம் மனது உடைந்து போனேன்,

தமிழை பேசு தமிழை பருகு தமிழனாய் இரு என்று வலியுறுத்தும் தமிழனின்

செய்தியை போடுவதற்கே கவர் கொடுக்க வேண்டி இருக்கிறது. மும்பையில் இது

போன்ற பழக்கம் அறவே கிடையாது.

வேறு ஒருவர் சீமான் கொடுத்தைவிட இரண்டு காந்தி படம் அதிகம் வைத்த கவர் கொடுத்தால்

அவருக்கு ஆதவாக எழுதுவான். இது போன்று தான் ஐரோப்பிய வானோலிக்கு

பேட்டி அளித்த பரதேசி சொல்லி இருப்பார் போலும்,

சீமான் புதுவை சிறையில் சிறையில் இருக்கும் போது அவர் வீட்டில் தான் இரண்டு வாரம்

தங்கி இருந்தேன்.

முதல் நாள் எனக்கு தடாபுடலாக விருந்து வைத்த சீமான் அண்ணாவின் உதவியாளர்

மறுநாள் காலையில் நான் எழும் முன்பே சாப்பிட்டு வந்து விடுவார்.

இறுதியாக தெரிந்தது அவர்களிடம் சாப்பிட கூட பணம் இல்லாமல் தினமும்

கடையில் கடனில் சாப்பிட்டு வந்தனர். அந்த கார் இன்னும் ட்யூ பாக்கி இருக்கிறது.

சீமான் அண்ணன் இல்லாமல் வேறு யாராவது இருந்தால் வங்கி காரன் இந்நேரம் வண்டியை

ஓட்டி கொண்டு சென்று இருப்பான். தயது செய்து கணனி இருக்கிறது விரல் இருக்கிறது

என்று மனம் போன போல், டைப்பிக்க‌ வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயது செய்து கணனி இருக்கிறது விரல் இருக்கிறது

என்று மனம் போன போல் டைப்பிக்க‌ வேண்டாம்.

இதனால்தான்

எல்லோரும் கைவிட்ட இனமாக எம்மினம்

எல்லோரும் வெறுக்கும் இனமாக எம்மினம்

எல்லோரும் அழிக்க நினைக்கும் இனமாக எம்மினம்

எல்லாவற்றிலும் பிழைபிடித்தோம்

எல்லோரைவிடவும் எம்மை புத்திசாலி என்றோம்

நாம் சொல்வதை எல்லோரும் கேட்கவேண்டும் என்றோம்

நாம்...

நாம்....

நாம்.....

வேறு யாரையும் தேவையில்லை

இன்று இந்த நிலையில் வந்து நிற்கின்றோம்

ஆனால் இன்றும்....

நாம்...

நாம்....

Edited by விசுகு

சமீபத்தில் சென்னை சென்ற போது சீமானை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திக்க‌

நேர்ந்தது, அப்போது வெளியில் ஒரு வெள்ளை காகித பொதியில் ஏதோ ஒன்று

கொடுத்து கொண்டு இருந்தனர். பலர் நான் அந்த பத்திரிக்கை, இந்த டீவி என்று சொல்லி வாங்கி கொண்டு இருந்தனர்.

மும்பையில் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு தாமதமாக வந்த

ஊடக அன்பர்களுக்கு பேச்சு பிரதி(செய்தி சாரம்) கொடுப்பது வழக்கம் நானும் அது

போல் அண்ணன் பேச போவதை பிரதி எடுத்து தருக்கிறார்கள் என்ற நினைப்பில்

நானும் கூட்டட்தோடு கூட்டமாய் கை நீட்டி விட்டேன், எனக்கும் ஒரு பொதி கிடைத்தது

உடனே நான் அதை பார்க்க வில்லை, அன்னனுடம் பேசிவிட்டு, மாலையில்

பேருந்தி சென்று கொண்டு இருக்கும் போது அந்த பொதியை பிரித்து படிக்கலாம் என்று

பார்த்தால் காந்தி தாத்தா சிரிக்கும் காகிதம் மனது உடைந்து போனேன்,

தமிழை பேசு தமிழை பருகு தமிழனாய் இரு என்று வலியுறுத்தும் தமிழனின்

செய்தியை போடுவதற்கே கவர் கொடுக்க வேண்டி இருக்கிறது.

உந்தக் கவர் கொடுக்கும் பணத்தை வேண்டுமானால் தமிழகத்திலேயே அகதிகளாக சிரமப்படும் மக்களுக்குக் கொடுத்தாலாவது புண்ணியம். வெறும் விளம்பரத்திற்காக ஊடகவியலாளராக வருவோருக்கு கவர் கொடுத்து செய்திகளை எழுதுவிப்பதில் என்ன பயன் ?? உங்களுக்கு தந்த கவரையும் திருப்பிக் கொடுக்க தங்களுக்கு மனம் வரவில்லையோ ??

அவர் வீட்டில் தான் இரண்டு வாரம் தங்கி இருந்தேன்.

முதல் நாள் எனக்கு தடாபுடலாக விருந்து வைத்த சீமான் அண்ணாவின் உதவியாளர்

மறுநாள் காலையில் நான் எழும் முன்பே சாப்பிட்டு வந்து விடுவார்.

இறுதியாக தெரிந்தது அவர்களிடம் சாப்பிட கூட பணம் இல்லாமல் தினமும்

கடையில் கடனில் சாப்பிட்டு வந்தனர். அந்த கார் இன்னும் ட்யூ பாக்கி இருக்கிறது.

சீமான் அண்ணன் இல்லாமல் வேறு யாராவது இருந்தால் வங்கி காரன் இந்நேரம் வண்டியை

ஓட்டி கொண்டு சென்று இருப்பான். தயது செய்து கணனி இருக்கிறது விரல் இருக்கிறது

என்று மனம் போன போல், டைப்பிக்க‌ வேண்டாம்.

சாப்பாட்டிற்கே கடன் பட்டவர்களுக்கு கவர் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது ?? கணனி இருக்கின்றது விரல் இருக்கின்றது என்பதற்காக டைப்படிக்க வேண்டாமெனும் தாங்கள், கவருக்காக மட்டுமே எழுத வேண்டுமென்கின்றீர்களா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.