Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது!: கலைஞர்

Featured Replies

இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது.

அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன.

சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள் கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில ஆண்டுக்காலமாக காட்சியாகவே அந்த சின்னஞ்சிறு தீவில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள் அந்தோ; கொடுமை! எதிரியின் அடையாளங்கண்டு; ஏறிமிதிக்கப் புறப்பட்ட அணிவகுப்பு; திசைமாறித் திரும்பி தன் படை வரிசையையே குலைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று கூறிக் குமுறி அழுவது!

அங்கே சண்டை நடந்தால்தான்; மண்டைகள் உருண்டால்தான்; அதுவும் தமிழினத்தின் பிணங்கள் குவிந்தால்தான்; ஒப்பாரிப் பாட்டு ஒலிக்கவே சுருதி சேருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்த எட்டப்பர்கள் தாங்கள் விரும்பியவாறு அண்ணன் தம்பிகளை அந்த மண்ணில் சவமாகச் சாயவிட்ட பிறகே; சந்தோஷம் கொண்டார்கள் மனச்சாந்தி பெற்றார்கள்.

ஆனால், அய்யகோ; அந்த மயான அமைதிக்குப் பிறகும் அந்த மண்ணில் திக்கற்றுத் தவிக்கும் தமிழ்க் குடும்பங்களைக் கைதூக்கி விட்டுக் காப்பாற்றும் முயற்சியிலாவது ஓரளவு வெற்றி பெற முடிந்ததே என்று மனம் ஆறுதல் பெறுகிறது.

காங்கிரசார், கழகத்தினர் எனப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பேரரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அனுப்பும்போதுகூட; இவர்கள் போய் என்ன செய்யப் போகிறார்கள்; ஏமாற்றத்தைத்தான் கப்பலேற்றி வந்து இங்கே இறக்குமதி செய்வார்கள் என்று எண்ணியவர்கள், எண்ணியதையெல்லாம் பேசியவர்கள், இன்று நாவடங்கி நாடறியாமல் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நமது நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை சென்றபோது வாக்குறுதி வழங்கப்பட்டது. போர் முடிந்துவிட்டது; இனி அமைதியான அரசியல் தீர்வுதான் என வாக்களித்தார்கள்.

முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார்.

வாக்குறுதி நிறைவேற்றியவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

தொப்பூழ்க்கொடி உறவுகளைத் தொட்டுத் தழுவி; தொடர்கின்றோம் நமது லட்சியப் பயணத்தை.

ரத்தம் சிந்திடும் இனத்தின் பரிதாப நிலை கண்டு விம்மி அழுத அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் உள்ள அத்தனை தூசணங்களைப் பாவித்தாலும் உன்னை திட்டித் தீர்க்க வார்த்தைகள் போதாது...

Edited by காட்டாறு

கலைஞர் என்றோ கலைஞன் என்றோ கருணா என்றோ கருணாநிதி என்றோ பெயருள்ள ஒவ்வொரு தன்மானத் தமிழனும் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும்.... இப்பொழுது உலகிலுள்ள மிகப்பெரிய தூசனம் 'கருணாநிதி' என்பதுதான்...

"கருணாநிதிப் பயலே!"

"கருணாநிதி மவனே!!"

என்றெல்லாம் காது குளிரக் கேட்கும் காலம் வெகு தூரத்திலில்லை!

இதென்ன அநியாயம்,

இவனை ** ஒருவரும் இல்லையா?

நாசமாபோவான்.

  • கருத்துக்கள உறவுகள்

www.free-smiley-faces.de_smiley-face-sunglasses_smilie-mit-sonnenbrille_01_400x400.gif

>  டெல்லிக்கு தந்தி அடிக்கிற சின்னப் பயல்.

Edited by தமிழ் சிறி

பால்ராஜ் அண்ணா போன்ற உன்னதமானவர்கள் எல்லாம் அல்ப ஆயுளில் போவதும், வாழ்நாள் முழுதும் மற்றவர்களை ஏமாற்றியே பதவி வெறியில் அலைபவர்கள் எல்லாம் நீண்டகாலம் வாழ்வதையும் பார்க்க வெறுப்பாக இருக்கின்றது.

சக மனிதனின் சாவில் மகிழ்வு கொள்வது ஒரு வகை Sadism என்பார்கள். ஆனால், இப்படியானவர்கள் நீண்ட காலம் வாழ்வதைப் பார்க்கும் போதும் இவர்களைப் போன்றவர்களுக்கு சாவு வராதா என்று எண்ணும் போதும், Sadist ஆக இருப்பதில் பூரண திருப்தி கிடைக்கின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

www.free-smiley-faces.de_smiley-face-sunglasses_smilie-mit-sonnenbrille_01_400x400.gif

  • கருத்துக்கள உறவுகள்

அறளை பெயர்ந்தது என்று சொல்வார்களே?! இதுதானா அது??

இவன் எப்போதுதான் சாவானோ?? இவனுடன் சேர்ந்து இவனது கபடத் தமிழும் செத்துப்போகட்டும். அழுக்கு !!!!!!!!!

  • தொடங்கியவர்

இவன் குடும்பம்,குட்டி,எல்லாம் நாசமாப் போகணும்

கிழட்டு கழுதையை எப்படி திட்டுறதெண்டு தெரியாமல் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

ரோம் நகரம் எரிந்தபோது சந்தோசமாக பிடில் வாசித்தானம் நீரோ என்கிற மன்னன். ஆனால் தமிழினம் கழுத்தறுபட்டு இறக்கும் போதும் தனது கவிதைகள் மூலம் பரவசப்படுகிறார் தமிழினத் தலைவர். இப்படியொரு தலைவரைப் பெற்ற நாம் உண்மையிலேயே இவ்வுலகில் பாக்கியசாலிகள். வாழ்க தமிழர் வாழ்க அவர் தலைவர் !!!!!!!மெல்லத் தமிழினிச் சாகும்....எவ்வளவு பொறுத்தம் ?!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகத்தின் பரிசு முகாம் மக்கள் விடுவிப்பா!

“நான்கு நாட்களில் மக்களுக்கு விடுதலையை வாங்கித்தந்த மக்களின் தலைவன் கலைஞ்ஞர் வாழ்க!”

மூன்று மணிநேர உண்ணாவிரத நிறைவின் பின்னால், “ஈழதில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்த கலைஞ்ஞர் வாழ்க!”

இவை திமுக என்ற கட்சியின் கொள்கையை உடைத்துக் காட்ட போதுமான சில உதாரணங்கள்தான், இவையே மொத்ததிற்குமான மாதிரிகள் என்று எடுத்துக் கொள்வோம்!

இந்தக் கட்சி மக்களின் துயருக்கு பயனபடும் கட்சியா, இல்லை அவற்றில் பயன் பெறும் கட்சியா என்பதை விளங்க சாதாரண அறிவே போதும்!

வெறும் நாடகமாக உண்ணாவிரதம் அரங்கேற்றப் பட்டது, மூன்று மணிநேரப் பசி பொறுக்க மாட்டாமல் அது முடிவிற்கு வந்தது, தம் முயற்சி வெற்றி அடைந்ததாக காட்டுவதற்காக யுத்தம் நிறுத்தப் பட்டது என்று அறிவிப்புச் செய்யப் பட்டது,

இடைவெளியே இல்லாமல் ஈழத்தில் தொடந்த அவலக்குரல்கள் துமிகளாக மலினப்படுத்தப் பட்டது. அங்கே இதுவரை பிணமாகி உயிர்கள் விழுதலால் வலிக்காத இதயங்கள்கூட கலைஞ்ஞரின் இந்த நிறுத்த நாடகத்தால் பேர் அமைதி தவழ்ந்ததாக அந்த நாளைக் கொண்டாடினார்கள்!

உயிர் மூச்சைக் குடித்துக் கொண்டிருக்கும் பசியில் பாலன் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது, வெறுங்கையால் பாலூட்டுவதாக பாசாங்கு செய்து விளம்பரம் செய்கின்றது ஒரு அரசியல் கட்சி, இதை செய்த அரசியல் வாதிக்கு பாலபிசேகம் செய்கின்றார்கள் அதன் தொண்டகள்!

கல்லுக்கு பால்வார்பதை விமர்சிக்கும் பகுத்தறிவுக்கூட்டமே!

பொய்யுக்கு பால்வார்க்கும் உங்கள் ஈனப்புத்தியை நாம் எதனால் அடிக்க!

நான் எனது முதல் பதிவில் ஆதரங்களுடன் குறிப்பிட்டது போலவே, இந்த ஈழச் சுற்றுலா மகிந்தா அரசுக்கு முட்டுக் கொடுக்கவே அன்றி மக்களைக் காக்க அல்ல!

இவர்கள் கூறியது போல் நான்குநாட்களில் முகாம் மக்களை திறந்துவிடும் சாவி இவர்கள் கையில் இருந்திருந்தால் இத்தனை நாட்கள் மக்களை அது பூட்டி வைத்திருந்தது ஏனாம்? இல்லை இவர்கள் அறியாமலே இருந்ததா அந்த நிலை!

திமுகவின் விருப்பம் மகிந்தாவை ஏவல் செய்விக்கும் சக்தியை பெற்றிருந்ததா திமுக என்ற கட்சி எப்பவாவது? அப்படி இருந்திருந்தால் வணங்காமண் விடயத்தில் ஏன் அது வாழாதிருந்தது?

மகிந்தாவை அப்பாவிகள் படுகொலைக் குற்றத்திl இருந்து காக்கும் சக்தியாக விளங்கும் மத்திய அரசு, குற்றத்தை தட்டிக் கேட்கும் நாடுகளை தடுக்கும் நாடாக விளங்கு இந்திய அரசு; மக்களின் நலத்தை முன்னிறுத்தியா, இல்லை சிங்களத்தின் நலத்தை முன்னிறுத்தியா இன் நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும்!

திமுகவிற்கு அறிவு இல்லையா? காங்கிரஸ்காறரைத் தெரியாதா? சிங்களத்திற்கு இலாபம் அடையும் ஒன்றை ஏன் இவர்கள் செய்யப் போகின்றார்கள் என்னக் கேட்கலாம் ஒரு சிலர்! ஆனால் இவர்கள் அறிவு இல்லாமல் எதையும் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டப்படுவதில்லையே!

அனைத்தும் அறிந்தே செய்யும் குற்றங்கள்தான் அவர்களது, கூட்டம் கூட்டமாக மனிதர்கள் செத்து விழுந்த போது அதை துமி என்று சொல்லுவதில் இருந்த பாதகத்தை விடவா இந்தப் பாதகம் மோசமாக இருக்கப் போகின்றது!

ஆனால் உண்மையில் இவர்கள் எதிர்பார்ந்த அந்த நான்கு நாட்கள் இவர்களால் அது உண்மையாக நம்பப்பட்டிருக்கலாம், ஏன் என்றால் ஒரு அநாதை கொல்லப்படுவதைக்கூட பொறுத்துக் கொண்டிருக்காத இந்த உலகத்தில் தன் இனம் ஒன்றை தன் கண்முன்னாலேயே அழித்துக் கொண்டிருந்த கொடுமையை கண்டும் காணாமல், வெளியால் தெரியவிடாமல் செய்த துரோக உதவிக்கு அதன் பரிசாக சிங்களமும், மத்திய அரசும் இதை வளங்கி இருக்கலாம் எம்பதே அவர்களது நியாயமான ஆசை!

தமிழ்நாடு ரோக்கில் இருந்து கொண்டுவரப்பட்டது!

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/16872-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

போடா கருநாய் நிதி

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்கள்தானே................ பேசி பேசி திருத்திவிடலாம் என்று பலபேரைவிட்டுவைத்ததன் வலியை தாங்கித்தான் ஆகவேண்டும்!

தடம் அறிந்து அப்போதே போட்டிருந்தால்..............??? இப்போது இந்த கொடுமையை எல்லாம் தாங்கவேண்டிய நிலையிருந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பிடிக்காத கருத்துக்களைச் சொல்லுபவர்களை போட்டுத்தள்ள வேண்டும் என்ற பாசிச சிந்தனையில் இருந்து நாங்கள் விடுபடவில்லை. இப்படி மூட்டிக் கொடுத்துத்தான் தமிழர்கள் இன்று அவல நிலையில் உள்ளார்கள். இதற்குள் சீனாக்காரனைப் பாவித்துப் பலரைப் போடலாம் என்ற நினைப்பு வேறு.

கலைஞர் சாந்தியை தேடுகிறார் போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்

:D:D

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க

கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,

கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க

சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!

உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து

செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ

கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,

ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட

தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்

சப்பாணிக் கழுதையே - இனி

எப்போதும் மறவாது தமிழினம் - உனை

எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!

தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,

முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்

முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்

சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!

எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்

வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்

சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்

சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று

உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்

மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை

உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்

ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்

அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை

கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்

இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!

தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!

முடிந்தது உன் ஆட்சி!

மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!

அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை

அப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!

அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!

அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!

அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது

சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

உறவுகளே இந்த வீடியோவை youtubeல இருந்து Delete பன்னி போட்டினம் அந்த வீடியோவின் வரிகள் இது

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU&feature=player_embedded

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே சொல்லில் என்றால்

செய்தவன்

செய்வித்தவன்

செய்யப்போறவன்

யாரென்று தானே அறிவிக்கின்றான்

அதைக்கேட்டு ஆத்திரப்படுவதென்றால்

வந்தபின் காப்போம் என்றிருந்தோமே

அதனால் எமை நாமே நோவோம்

  • தொடங்கியவர்

இந்த சனியன் சாகட்டும்... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனியன் சாகட்டும்... :D :D :D

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.