Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இணையமொன்றிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.

வன்னிப் யுத்தம் நடைபெறற நாட்களில் புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்துவைத்திருந்தனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புலிகள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூட, அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல், வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்றப்பட்டிருக்குமேயானால் நிச்சயமாகப் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். தமிழ் ஈழக் கோஷத்தில் அவர்கள் விடாப்பிடியான போக்கைக் கொண்டிருந்த போதும், அவர்களின் அரசியலற்ற இராணுவக் கண்ணோட்டமானது, பொதுமக்களையும் தங்களுடைய பாதுகாப்பிற்காக இழுத்துச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இது சரியானதுமல்ல ஆரோக்கியமானதுமல்ல. ஆனால் அங்கிருந்து வந்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டபோது, அப்படியான பல மோசமான சம்பவங்கள நடைபெற்றதாக நாங்களும் அறிகின்றோம். ஆரம்பத்திலிருந்தே புலிகள் அரசியல் குறித்து அசட்டையீனமாக இருந்ததால் இறுதி முடிபுகள் மோசமானதாக அமைந்துவிட்டது.

புலிகளால் கொலை செய்யப்பட்ட பத்மநாபா கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் நீங்கள் இருந்ததாக சில முன்னை நாள் ஈ.பீ.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கூறுவது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அப்படியான செய்திகளைப் பரப்புபவர்களுக்குக் கூட அது குறித்த உள்ளார்ந்த நம்பிக்கை இருக்காது என்றே நான் நம்புகிறேன். பெரும் பாலான ஈ.பீ.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் பத்மநாபா கொலை செய்யப்பட்டு பல நாட்களின் பின்னர் தான் இங்கு வந்திருப்பார்கள். இங்கு வருவதற்கு முன்னர் அவர்க என்னுடன் தான் இருந்திருப்பார்கள். வரதராஜப் பெருமாள் கொழும்பிற்கு வந்து எமது அமைப்பில் குழப்பம் உருவாகும் வரை அவர்கள் என்னுடன் தான் இருந்தார்கள். அதுவரையில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அவர்களால் முன்வைக்கப்படவிலை. இன்று வெளிநாடுகளுக்கு வந்ததன் பின்னர், தமக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, எனக்கு மேல் சேறடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு அவர்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். இதில் நான் அக்கறை கொள்ளவோ அதற்கு பதில் சொல்வதோ அர்த்தமற்ற ஒரு விடயம்.

இவையெல்லாம், அர்த்தமற்ற, போலித்தனமான, சபைக்கு உதவாதவை தவிர நேர்மையான அரசியல் ரீதியான ஒரு விமர்சனமல்ல. அது குப்பைத் தனமான குப்பையில் கொட்டப்படவேண்டிய வார்த்தைப் பிரயோகங்களே.

சிறீ லங்கா அரச தடுப்பு முகாம்களில் மக்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள் என்றும், புலிகளின் பிரதேசங்களில் வாழ்ந்ததைவிட ஒப்பீட்டளவில் மேம்பட்ட வாழ்க்கையே நடத்துகிறார்கள் என்றும் ஒரு தீவிர பிரச்சாரம் புலம் பெயர் தமிழ் தன்னார்வ நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

இதைத் தான் பசில் ராஜபக்ச ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் சொல்லி வருகிறார்.

இவ்வளவு நாளும் பிரபாகரனின் கட்டுப்பாட்டுள் இருந்தவர்கள் தானே! வரிகட்டியவர்கள் தானே!! அவ்வாறான துன்பங்களை அனுபவித்த நீங்கள் இப்போது முகாம்களில் ஏன் துன்பப்படக் கூடாது என்று அரசும் அரச சார்பானவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றனர். இது அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.

ஒரு அரசு என்ற வகையில், பாரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தது. அவ்வாறு வெளியேறினால் அனைத்து வசதிகளும் மேற்கொண்டு மீளக் குடியமர்த்துவதாக அரசு நம்பிக்கையளித்து மக்களை முகாம்களுக்குள் உள்வாங்கிக் கொண்டது.

ஆனல் இன்று ஆறு மாதங்களுக்கு மேலான சூழலில் நிலைமை என்ன? ஐக்கிய நாடுகள் சபை, பல சர்வதேச நாடுகள், கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியம் எல்லாருமே அரசாங்கத்துடன் பல தடவை பேசி அறிக்கைகள் சமர்ப்பித்து எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இப்போது தான் ஒரு குறித்த பகுதியினரை விடுதலை செய்வதாகக் கூறுகிறார்கள்.

இப்போது தடுப்பு முகாம் வாசிகள் அவரவர் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்களா?

இல்லை. அவர்கள் சொந்த இடங்களுகுச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மல்லாவியிலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் வேறு வேறு முகாம்களுக்கு இடம் மாற்றப்படுகிறார்கள். ஒருசில இடங்களில் ஒருசிலர் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் கூட, அது மிக மிகச் சொற்பமான அளவுதான்.

இப்போதுள்ள முகாம்களுக்கு என்ன நிகழும்?

இப்போது இருக்கும் முகாம்களில் தொடர்ந்தும் மக்களை வைத்திருந்தால் ஏற்கனவே சில தடவைகள் சிறிய அளவுகளில் ஏற்பட்டது போல, இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் பயங்கரமான பாரிய கலவரங்கள் வெடிக்கும் ஆபத்தை அரசு எதிர்கொள்ள வேண்டும்.

தொற்று நோய்களும், மழைக்கால வெள்ளமும், மலசல கூடங்களின் அழிவுகளும், புழுக்களும் விஷக் கிருமிகளும் என்று வெளியான வனாந்தரத்தில் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

முகாம் கூடாரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேசக் கவனம் இதை நோக்கித் திரும்பியுள்ள சூழலில் அவர்களை வேறு உள்ளூர் முகாம்களுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இரண்டாவதாக, ஜீ.எஸ்.பீ பிளஸ் தொடர்பானது. இச்சலுகையூடாக ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் தொழில் பெற்று வாழ்கிறார்கள். இன்னும் பல இலட்சம் பேர் மறை முகமாகவும் வாழ்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் இதை நிறுத்துமானால் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி இலங்கை அரசிற்கு உருவாகும். அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலையில் இலங்கை அரசிற்குப் பாரதூரமான பின் விளைவுகளையும் உருவாக்கும். இவ்வாறு குறித்த தொகை மக்களை விடுதலை செய்வதன் மூலம் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியம்ர்த்துகிறோம் என்ற ஒரு வகையான மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகளூடாக, நாங்கள் மனித் உரிமைகளை மதிக்கிறோம் என்ற செய்தியைச் சொல்ல முற்படுகிறார்கள். அதனால் தான் சொற்ப அளவினாலான குடியேற்றங்கள் நடைபெறுகின்றதே தவிர, மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியேற்றுதல் என்ற வேலை அங்கு நடைபெறவில்லை.

முகாம் கூடாரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேசக் கவனம் இதை நோக்கித் திரும்பியுள்ள சூழலில் அவர்களை வேறு உள்ளூர் முகாம்களுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

அதனால் தான் சொற்ப அளவினாலான குடியேற்றங்கள் நடைபெறுகின்றதே தவிர, மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியேற்றுதல் என்ற வேலை அங்கு நடைபெறவில்லை. தவிர, தமிழ் பேசும் மக்கள் மீதான எந்த மனிதாபிமான அக்கறைன் அடிப்படையிலும் இது நிகழவில்லை.

இதில் அரசாங்கத்திற்குச் சார்பாக ஆரம்பத்திலிருந்து வெளிவரும் பல இணையத் தளங்கள், மல்லாவிக்கு மக்களைக் கொண்டு சென்றதும் மக்கள் மீழக் குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு சென்றதும் மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்றும், முகாம்களில் எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் பிரசாரம் செய்வதனூடாக அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்க முயல்கின்றனர். அரசாங்கத்தை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் வியாபாரம் செய்கின்றனர். இது அவர்களின் சுய இலாப நோக்கத்தின் அடிப்படையிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. உண்மையிலேயே முகாம்களைப் பார்வையிட்டவர்கள், முகாம் மக்களோடு பழகியவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள்.

இது நேர்மையற்ற, இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடயம். அரசாங்கத்தின் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வேலையையே இவர்கள் மேற்கொள்ளுகிறார்கள்.

என்ன காரணத்திற்காக அரசு மக்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது?

முதலாவதாக, கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களில் பாரிய யுத்தம் நடைபெற்றிருக்கிறது. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் யுத்தக் குற்றச்சாட்டுக்களாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் மக்கள் மீழக்குடியேற அனுமதிக்கப்படுவார்களாக இருந்தால் அந்த மக்கள் மூலமாகவும், அவர்களைப் பராமரிக்க முன்வரும் சர்வதேச நிறுவனங்களூடாகவும், பல சாட்சியங்கள் வெளியே வரலாம் என்பது வெளிப்படையான விடயமாகும்.

இச்சாட்சியங்கள் வெளியேறாமல் தடைசெய்யப்பட வேண்டுமாயின் மக்களைக் குடியேற்றும் செயன்முறையானது கால தாமதப்படுத்தப்பட வேண்டும். தவிர சாட்சியங்களும் ஆதாரங்களும் அழிக்கப்படும் வரை குடியேற்றம் ஒத்திப் போடப்படும்.

குறிப்பாக முல்லைத் தீவு மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கிளிநொச்சியில் மட்டும் அதுவும் செப்டெம்பர் மாதம் கடைசிப்பகுதியில், பூநகரியில் அந்த வேலை கண்துடைப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது. அது தவிர எதுவுமே நடைபெறவில்லை. ஆக கண்ணிவெடிகளைக் கண்துடைப்பாகக் காரணம்காட்டி சாட்சியங்களை அழிக்கும் வேலையே நடைபெறுகிறது.

இது தவிர புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்த பின்னர் தான் மக்களைக் குடியேற்ற முடியும் என்கிறது அரசாங்கம். இதற்கும் மேலாக காடுகளில் தப்பியிருக்கக் கூடிய ஒரு சில புலிகள் மக்கள் குடியேற்றப்பட்டால் மீண்டும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனக் காரணம் காட்டுகின்றனர். யுத்தம் முடிந்துவிட்டது தானே என்று நாங்கள் சொன்னால் இல்லை ஒருசிலர் மிஞ்சியிருக்கின்றனர் என்கின்றனர்.

தவிர நம்பத்தகுந்த அரச மட்டங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, தமிழ் மக்களின் புவியியல் செறிவை நிர்மூலம் செய்யும் திட்டத்தை அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது. அதாவது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில், சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் செறிவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் முப்பது வீதமான சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் என்ற ஒரு திட்டம் இருப்பதாக எமக்குத் தெரியவருகிறது.

அதுதவிர இம்மாவட்டங்களில் இரண்டு பாரிய இராணுவ முகாம்களும், அதனைத் தொடர்ந்து இருபத்து ஐந்து சிறிய இராணுவ முகாம்களும், இருபத்து ஐந்து பொலீஸ் நிலையங்களும் நிறுவப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. பாரிய இராணுவ முகாம்களுக்கு தலா 500 ஏக்கர் காணியும் சிறிய முகாம்களுக்கு 50 ஏக்கர் காணியும், பொலீஸ் நிலையங்களுக்கு 50 ஏக்கர் காணி என்ற வகையில், மொத்தப் பிரதேசமும் இராணுவ மயப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட இருக்கிறது.

இது தவிர இராணுவம் பொலீசாருக்கான விடுதிகள், அவர்கள் குழந்தைகளுக்கான பாடசாலைகள், கலாச்சார மையங்கள், விகாரைகள் என்று பார்க்கும் போது, 30 வீதச் சிங்களக் குடியேற்றத்தின் மிகப்பெரும் பகுதி பூர்த்தியாக இன்னுமொரு சாதாரண சிங்கள மக்கள் தொகுதியும் குடியேற்றப்படும். ஆக, இவ்வளவு விடயங்களும் ஒருங்கிணைந்த பிரச்சனை தான் அகதிகள் குடியேற்றம்.

சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஏதாவது அங்கு அனுமதிக்கப்படுகின்றனவா?

பல தொண்டு நிறுவனங்கள் அதுவும் அரசியல் நோக்கற்ற தொண்டு நிறுவனங்கள் கூட முகாமிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டம், UNHCR போன்றவற்றிற்கு எல்லைக்கு உட்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் முகாம் மக்களுடன் பேசவோ பழகவோ எந்தச் சந்தர்ப்பமும் வழங்கப்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மக்களை தற்காலிகமாக உயிர்வாழ்வதற்கான உதவிகளே வழங்கப்படுகிறது.

புலம்பெயர் நாடுகளின் தன்னார்வ நிறுவனங்களால் உதவிகள் வழங்கப்படுகின்றனவே?

புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலருக்கு அரசாங்கத்துடன் இருக்கக்கூடிய நெருக்கமான உறவுகளைப் பாவித்து, சில சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அறிகிறோம். அதனுடைய பொருள் அரசாங்கம் எல்லோரையும் முற்று முழுதாக அனுமதித்துள்ளது என்பது அல்ல. அங்குள்ள சில ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது முழுதான சுதந்திரத்தைக் குறிப்பதாகாது. இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் பாடப்புத்தகம் போன்றவற்றை வழங்குவதாகத் தகவல்களை அறிகிறோம். இது அரசாங்கத்திற்குப் பிரச்சார நடவடிக்கைகளுக்கே பெரிதும் பயன்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத் தேவைக்காக அரசு இவற்றை புலம்பெயர் நாடுகளில் சிலருடன் இணைந்தே மேற்கொள்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) என்று கூறப்பட்ட இன்று புதிய கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

அவர்கள் இன்றும் இவ்வளவு பிரச்சனைகளின் பின்னரும் அரச ஆதரவுப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். அல்லது அரசுட மென்மைப் போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். முகாம்கள் பற்றி, மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விடயங்களை அவர்கள் கூறினாலும் கூட, அதனை இலங்கை அரசிற்கு நோகாமல் தாங்கள் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். அண்மையில், ஹக்கீம், ஆனந்த சங்கரி, சம்பந்தன், மனோ கணேசன் போன்ற பலர் கைச்சாத்திட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. முகாம்களில் மக்கள் கைதுகள், காணாமல் போதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மக்கள் மீழ்குடியேற்றப்பட வேண்டும் என்றும், மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிய விடயங்களையும் உள்ளடக்கியதாக அவ்வறிக்கை அமைந்தது.

தமிழ்ப் புத்திஜீவிகளால் தான் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டு அதன்பின்னர் தமிழ் பேசும் சிறுபாபான்மைக் கட்சிகளிடம் கையொப்பம் கோரி அதனைப் பிரசுரித்திருந்தார்கள். அந்த அறிக்கையில் பத்மநாபா ஈ.பீ.ஆர்.எல்.எப், புளட் போன்ற அமைப்புக்களும் கைச்சாத்திடுவதாக ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டிருந்த போதும், பின்னர் அதனை நிராகரித்துவிட்டார்கள். அறிக்கையில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் மிகக் கடினமானவை எனக் கூறியே அதனை நிராகரித்திருந்தனர். அரசு தவறுகள் இழைக்கின்றது அத்தவறுகளுக்கு ஒரு மென்மைப் போக்குக் கடைப்பிடிக்க வேண்டும், அரசுடன் இணைந்தே அத் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்த்வரை அவ்வறிக்கை எந்தக் கடினமான வார்த்தைகளையும் கொண்டதாக இருக்கவில்லை. இவர்களின் இந்தச் செயற்பாட்டை உதாரணமாக வைத்துக்கொண்டு அவர்களை எடைபோட நீங்கள் எடைபோட முடியும் என நான் கருதுகிறேன்.

குறித்த நேர்காணலில் எஞ்சிய பகுதிகள் இனிவரும் நாட்களில் பதியப்படும்.

http://www.paristamil.com/tamilnews/?p=42025

  • Replies 105
  • Views 7.5k
  • Created
  • Last Reply

அப்ப இவரும் துரோகியே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் துரோகி இல்லை. எல்லோருடைய கருத்துக்களும் காலத்திற்கேற்றதுபோல் மாறுபடுகின்றது. பொண்டு அவர்களே பல தவறுகளைத் திருத்திவிட்டு தமிழனின் மீள்வருகை பலமானதாக இருக்கும். அப்போதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்படித்தான் இருப்பார்.அத்துடன் நீங்களும்தான்.

அப்ப இவரும் துரோகியே :wub:

அவரும் தமிழன் ....

நல்ல வேளை புலிகளின் தோல்விக்கு தனிநாடு கோரிக்கைதான் காரணம் என்று சொல்லாமல் விட்டிட்டார் :(

மக்கள் அரசியல் மயப்பட்டுத்தான் 77 இல் தமிழீழக்கோரிக்கைக்குவாக்களித்தார்கள். இவர்களுக்கு இப்போதுதான்தெரிந்ததா மக்கள் அரசியல் மயப்படவில்லையென்று. அரசியல் மயப்படாத மக்களை இவர்கள் அரசியல் மயப்படுத்தியிருக்கலாம் அல்லவா? இவர்களும் எம்மைப் போல் புலிகள் பார்ப்பார்கள் என்று இருந்தார்களா? இப்படியே எல்லோரும் புலிகள் பார்ப்பார்கள் என்று இருந்து விட்டு. தமிழருக்கு விடுதலை பெற்றுத்தர புரட்சிகர இயக்கம் நடத்தியவர்கள்,

அரசியல் கட்சி நடத்தியவர்கள் இப்போது இந்தக்குற்றச்சாட்டை முற்று முழுதாக

புலிகள் மீது சுமத்துவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அரசியல் மயப்பட்டுத்தான் 77 இல் தமிழீழக்கோரிக்கைக்குவாக்களித்தார்கள். இவர்களுக்கு இப்போதுதான்தெரிந்ததா மக்கள் அரசியல் மயப்படவில்லையென்று. அரசியல் மயப்படாத மக்களை இவர்கள் அரசியல் மயப்படுத்தியிருக்கலாம் அல்லவா?

மக்கள் ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கொள்கை கோதாரி என்று 90% - 95% மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. வசீகரமான தலைவர்கள் என்ன சொன்னார்களோ, அதனைச் செவிமடுத்துச் செய்தார்கள். மக்களின் உண்மையான விருப்பங்கள் எந்தத் தேர்தலிலும் வெளிவரவில்லை. இனியும் வெளிவராது.

உண்மை.........

அதுதான் ஜனநாயகம்..! மன்மோகன் சிங்கை அறிந்துதான் இந்திய மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? ஆனால் மேற்குலகம் விரும்பும் ஜனநாயகம் இந்தியாவில் தழைத்தோங்குகிறது தானே..!? :lol:

அதுமாதிரிதான் இதுவும்..! 1977 இல் மக்கள் தனி ஈழமே தீர்வு என்று வாக்களித்தார்கள்..!:)

புலிகளின் தோல்விக்கு பல காரணங்களை இப்போது சொல்கின்றனர்

1. முழுக்க முழுக்க பிரபாகரன்

2. மக்கள் அரசியல் மயப்படுத்தப் படவில்லை

3. புலிகள் இராணுவ நலனை மட்டுமே முன்னிலைப் படுத்தினர்

4. புலிகளுக்கு சண்டை பிடிக்க மட்டும்தான் தெரியும்..சமாதானம் / பேச்சுவார்த்தை என்பனவற்றை நடாத்த தெரியாது

5. கெரில்லா போர் முறையில் இருந்து மரபு ரீதியான போர் முறைக்கு மாறியமை

6. போராட்டத்தில் சேர்ந்து ஆட்பலத்தினை மட்டும் அதிகரிக்காத புலம் பெயர் மக்கள்

7. காட்டிக் கொடுப்போரும், துணை இராணுவத்தினரும், இயக்க உள்மோதல்களும்

இப்படி இந்த வரிசையை ஒவ்வொருவரும் தமக்கேற்றாற்போல் தத்தம் சொந்த லாப நட்டக்கணக்குகளின் அடிப்படையிலும் தம் கோட்பாடுகளின் அடிப்படையிலும் நீட்டிக்கொண்டு செல்கின்றனர்

புலிகள் இயக்கம் என்பது சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் பெற ஈழ தமிழ் மக்களாகிய எமது எழுச்சியின் அடிப்படையில் இருந்து உருவாகிய பேரியக்கம். அதன் அனைத்து வெற்றி தோல்விகளும் ஈழத்தமிழர்களின் வெற்றி தோல்விகள் என்ற அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். புலிகளின் தவறுகள், எமது தவறுகளே. அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எமது எழுச்சியும் வீழ்ச்சிகளுமே. ஈழத்தமிழர்களாகிய எமக்குள் இருக்கும் அடிப்படைவாத கருத்துகள், விட்டுக் கொடுக்காத தன்மை, நுட்பமான செயல்திறன், கடும் உழைப்பு போன்றனவற்றை புலிகளும் பிரதிபலித்தனர். முன்னர் இந்த அடிப்படை இயல்புகள் இராணுவ ரீதியான வெற்றியினைக் கொடுக்கும் போது, நாமும் புலிகளும் ஒன்றே என அகமகிழ்ந்து இருந்தோம். இன்று அவர்களின் இராணுவ ரீதியான வீழ்ச்சியின் போது, அவர்களை எம்மில் இருந்து பிரித்துக் கொண்டு, வெறும் இயக்கம் ஒன்றின் தோல்வி என்கின்றோம்.

புலிகளின் வீழ்ச்சி என்பதை ஈழத்தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சி என ஏற்றுக்கொண்டு அதனிலிருந்து எப்படி மீள்வது என்பதை ஆரோக்கியமான தளத்தில் வைத்து ஆராயவும் எம்மை நாமே மீள்விமர்சனம் செய்யவும் ஆரம்பிப்போம்.

மக்கள் ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கொள்கை கோதாரி என்று 90% - 95% மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. வசீகரமான தலைவர்கள் என்ன சொன்னார்களோ, அதனைச் செவிமடுத்துச் செய்தார்கள். மக்களின் உண்மையான விருப்பங்கள் எந்தத் தேர்தலிலும் வெளிவரவில்லை. இனியும் வெளிவராது.

நீங்கள் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் அதிகமான விளக்கத்தை சேர்க்க வேண்டும்... பெரும்பாண்மையான தமிழ் மக்கள் தமிழீழ தனியரசை எப்போதும் விரும்பவில்லை என்பது போல சிலர் திரிக்க விரும்புகிறார்கள்...

புலிகளின் அரசியல் அமைப்பு என்பதை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு போக முன்னம் கதிர்காமரின் உபயத்தால் தடை செய்ய பின்னர் புலிகள் அரசியல் முழுமையாக வெளிப்பட வசதிகள் கிடையாது...

முக்கியமாக புலிகள் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகளை எல்லாம் சந்தித்தும் தங்களின் கருத்துக்களை தெளிவாக்கி இருந்தனர்... அந்த நாடுகள் புலிகளை தடை செய்யவில்லை.. செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் இல்லை... ஆனால் ஏற்கனவே தடை செய்தவர்கள் தங்களின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதை எந்த புலபெயர்ந்த தமிழனும் எதிர்க்கவில்லை... ஆகவே அது நியாயமானதாகவும் சொல்லப்பட்டது...

புலிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் முக்கியமாக மூண்று..

1. சுனாமி... அதன் பின்னர் உள் நுளைந்த பல்தேசிய புலநாய்வு அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களையும் ஒண்றும் செய்ய முடியாத நிலை.. பல்தேசிய புலநாய்வு அமைப்புக்களை கையாளும் பயிற்ச்சி ஆள் தொழில்நுடப்ப பலத்தை புலிகள் கொண்டிருக்காதமை..

2. அனுராதபுரம் வான் தளத்தாக்குதல்... 30 பேர் கொண்ட அணியால் முழுமையான சிங்கள நகருக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை அரசுக்கு இந்தியாவில் இருந்து மிகப்பெரிய அளவிலான உதவியை பெற்று கொடுத்தது... இந்திய கடற்படையும் கனகரக பிரிவினரும் நேரடியாகவே பங்கு கொண்டனர்...

3. புலிகளை தடை செய்த நாட்டில் இருந்த தமிழர்கள் அதுக்கு எதிராக எதையும் செய்ய முன் வராது தடை செய்தமையை மௌனமாக ஆதரித்தமை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கொள்கை கோதாரி என்று 90% - 95% மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. வசீகரமான தலைவர்கள் என்ன சொன்னார்களோ, அதனைச் செவிமடுத்துச் செய்தார்கள். மக்களின் உண்மையான விருப்பங்கள் எந்தத் தேர்தலிலும் வெளிவரவில்லை. இனியும் வெளிவராது.

அதை தான் உலகின் எல்லா சனநாயக நாடுகளிலும் செய்கிறார்கள். எம்மக்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் என்பது சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் பெற ஈழ தமிழ் மக்களாகிய எமது எழுச்சியின் அடிப்படையில் இருந்து உருவாகிய பேரியக்கம். அதன் அனைத்து வெற்றி தோல்விகளும் ஈழத்தமிழர்களின் வெற்றி தோல்விகள் என்ற அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். புலிகளின் தவறுகள், எமது தவறுகளே. அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எமது எழுச்சியும் வீழ்ச்சிகளுமே. ஈழத்தமிழர்களாகிய எமக்குள் இருக்கும் அடிப்படைவாத கருத்துகள், விட்டுக் கொடுக்காத தன்மை, நுட்பமான செயல்திறன், கடும் உழைப்பு போன்றனவற்றை புலிகளும் பிரதிபலித்தனர். முன்னர் இந்த அடிப்படை இயல்புகள் இராணுவ ரீதியான வெற்றியினைக் கொடுக்கும் போது, நாமும் புலிகளும் ஒன்றே என அகமகிழ்ந்து இருந்தோம். இன்று அவர்களின் இராணுவ ரீதியான வீழ்ச்சியின் போது, அவர்களை எம்மில் இருந்து பிரித்துக் கொண்டு, வெறும் இயக்கம் ஒன்றின் தோல்வி என்கின்றோம்.புலிகளின் வீழ்ச்சி என்பதை ஈழத்தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சி என ஏற்றுக்கொண்டு அதனிலிருந்து எப்படி மீள்வது என்பதை ஆரோக்கியமான தளத்தில் வைத்து ஆராயவும் எம்மை நாமே மீள்விமர்சனம் செய்யவும் ஆரம்பிப்போம்.

புலிகளின் தவறுகள்இ எமது தவறுகளே. அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எமது எழுச்சியும் வீழ்ச்சிகளுமே

புலிகளின் வீழ்ச்சி என்பதை ஈழத்தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சி என ஏற்றுக்கொண்டு அதனிலிருந்து எப்படி மீள்வது என்பதை ஆரோக்கியமான தளத்தில் வைத்து ஆராயவும் எம்மை நாமே மீள்விமர்சனம் செய்யவும் ஆரம்பிப்போம்.

செய்வோமா

இல்லையெனில் எமக்கு மீட்சியில்லை

கடவுளே மீளவந்தாலும் எம்மை காப்பாற்றமுடியாது

மக்கள் ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கொள்கை கோதாரி என்று 90% - 95% மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. வசீகரமான தலைவர்கள் என்ன சொன்னார்களோ, அதனைச் செவிமடுத்துச் செய்தார்கள். மக்களின் உண்மையான விருப்பங்கள் எந்தத் தேர்தலிலும் வெளிவரவில்லை. இனியும் வெளிவராது.

இதை ஏற்கமுடியாது

ஏனெனில்

மக்கள் அரசியல் மயப்பட்டு

அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்ற அறிவித்தபின்னரே

புலிகளே தோன்றினார்கள்

அதை நடைமுறைப்படுத்துவதே புலிகளின் கொள்கையாகியதே ஒழிய புலிகள் எதையும் புதிதாக அரசியல் கொண்டுவரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூடஇ அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல்இ வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்றப்பட்டிருக்குமேயானால் நிச்சயமாகப் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். தமிழ் ஈழக் கோஷத்தில் அவர்கள் விடாப்பிடியான போக்கைக் கொண்டிருந்த போதும்இ அவர்களின் அரசியலற்ற இராணுவக் கண்ணோட்டமானது

இது அவரது கருத்து

அல்லது

ஆராய்ச்சி

ஆனால் அவர் புலிகளை தூற்றவேண்டும் என்பதற்காக அப்படிச்சொல்லவில்லை

அப்படியும் இருக்கலாம் என்பதே அவர் கருத்து

இல்லாமலும் இருக்கலாம்

அவரை நான் மிகவும் மதிக்கின்றேன்

இக்காலகட்டத்தில் அவர்களை சிக்கலில் மாட்ட கேட்கப்படும் கேள்விகளுக்கும்

அவர்கள் அதற்கு அளிக்கும் பதில்களுக்கும் விளக்கம் கண்டுபிடிக்காதிருப்பதே இன்றைய சூழழில் எம் இனத்திற்கு நன்மைதரும்

நன்றி

புலிகள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று பார்ப்பது தவறு.

தமிழர் தேல்வி அடைவதற்குக் காரனம் யாது.

மக்கள் அரசியல் மயப்பட்டு

அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்ற அறிவித்தபின்னரே

புலிகளே தோன்றினார்கள்

அதை நடைமுறைப்படுத்துவதே புலிகளின் கொள்கையாகியதே ஒழிய புலிகள் எதையும் புதிதாக அரசியல் கொண்டுவரவில்லை

நன்றாக கதை விடுகின்றீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வைத்து புனைகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னரே புலிகள் தோற்றம் பெற்று விட்டார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூட அமிர்தலிங்கம் போன்ற அரசியல்வாதிகளால் மக்களை உருவேற்ற கொண்டு வரப்பட்டதேயன்றி மக்களால் கொண்டு வரப்பட்டதல்ல. அப்போது கூட தந்தை செல்வாவினால் இந்தத் தீர்மானம் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இத்தீர்மானம் எடுக்கப்பட்ட பின் தான் தந்தை செல்வா தமிழ் மக்களை இனி அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டுமென்றும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு வெளிச்சம் நிகழ்ச்சியில் தினேசுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார். இப்பேட்டி தொடர்பாகவும் தினேஷ் கேள்வி கேட்டார். ஆனால் இப்பேட்டியை போட்ட இணையத்தில் எழுதப்பட்டது போல சொல்லவில்லையெனவும் தான் சொன்ன கருத்துப்பற்றியும் தெளிவாக கூறியிருந்தார்.

ஏற்கனவே மாவோயிஸ்ட் கணபதி பற்றி நாம் சரியான பேட்டியை வாசிக்காமல் குழம்பியது போலவே இதிலும் குழும்புகிறோமோ என்ற எண்ணம்தான் வருகிறது.

கிட்டத்தட்ட முக்கால்மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2நேயர்களும் பங்குபற்றியிருந்தார்கள். அந்த நேயர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அமைதியாக ஆறுதலாக அவர்களுக்கு பதில் கொடுத்திருந்தார். வளமையான கேள்வி பதில் போல இல்லாமல் இம்முறை தினேஷ் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தார். கேள்விகளும் பதில்களும் ஒரு விவாதம் போல நடந்து முடிந்தது.

செய்திகளை எழுதும் போது நமது ஊடகங்கள் தாங்கள் புரிந்து கொள்கின்ற அடிப்படையில் செய்தி எழுதுவது மற்றும் வாசகர்கள் தாம் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் கருத்தாடுவதும் இப்போ வளமையாகியுள்ளது.

அந்த நிகழ்ச்சி முடியும் வரையும் கேட்டிருந்தேன். சமகாலத்தைப் புரிந்த சமகாலத்தில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களை தனது செவ்வியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

புலிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் முக்கியமாக மூண்று..

1. சுனாமி... அதன் பின்னர் உள் நுளைந்த பல்தேசிய புலநாய்வு அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களையும் ஒண்றும் செய்ய முடியாத நிலை.. பல்தேசிய புலநாய்வு அமைப்புக்களை கையாளும் பயிற்ச்சி ஆள் தொழில்நுடப்ப பலத்தை புலிகள் கொண்டிருக்காதமை..

2. அனுராதபுரம் வான் தளத்தாக்குதல்... 30 பேர் கொண்ட அணியால் முழுமையான சிங்கள நகருக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை அரசுக்கு இந்தியாவில் இருந்து மிகப்பெரிய அளவிலான உதவியை பெற்று கொடுத்தது... இந்திய கடற்படையும் கனகரக பிரிவினரும் நேரடியாகவே பங்கு கொண்டனர்...

3. புலிகளை தடை செய்த நாட்டில் இருந்த தமிழர்கள் அதுக்கு எதிராக எதையும் செய்ய முன் வராது தடை செய்தமையை மௌனமாக ஆதரித்தமை...

உதையெல்லாம்விட நமது ஆய்வாளப்பெருமக்களும் இங்கத்தைய குறுநில மன்னர்களும் புலிகளின் பின்னடைவுக்குக் கூறும் காரணங்கள் வேறையாயிருக்கு. :lol:

Edited by shanthy

இன்று க‌னடா வானொலி ஒன்று பேராசிரியர் சிவத்தம்பியை பேட்டி கண்டார்கள்.அவர் கருத்தும் எறக்குறைய பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துடன் ஒத்திருந்தது.( சிவதம்பியின் பேட்டியை யாழில் இருந்து உடன் தூக்கிவிட்டார்கள்.ஏனென்று தெரியவில்லை.)

"புலிகளின் வெற்றியும் தோல்வியும் தமிழரின் வெற்றி தோல்வியாகத்தான் பார்க்கப்பட வேண்டும்". நீங்க‌ள் நாளைக்கு 'புலம் பெயர் தமிழரசு' புஸ் என்று போகும் போது முழுப்புலம் பெயர் தமிழர்களின் தோல்வி எனக் கூறப்போகின்றீர்கள்.இதில் எத்தனை பேருக்கு 'நாடு கடந்த தமிழரசு" விளக்கமாக தெரியும்.எல்லாத்தையும் ஒரு நாலு பேர் சேர்ந்து செய்துவிட்டு, கேள்வி கேட்பவனை துரோகி ஆக்கி பின் பிழை நடந்தவுடன் பழியை எல்லொரும் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றீர்கள்.நல்ல சித்தாந்தம்.

தமிழ் மக்களா சொன்னவர்கள் " சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா,நீலன் திருசெல்வம்,

அமிர்தலிங்கம்,ராஜிவ் காந்தி,கேதீஸ்வரனைச் சுடச் சொல்லி". நீங்கள் யாரைக் கேட்டு என்ன,எப்போது செய்தீர்கள்.

தலைமைகள் பிழையாக இருந்திருக்கலாம் அதற்க்காக தமிழருக்கு விடுதலை வேண்டி போராட புறப்பட்ட அப்பாவிப் போராளிகளை சிங்கள இராணுவத்தை விட கேவலமாக தேடித் தேடி வேட்டையாடச் சொல்லி தமிழ் மக்களா சொன்னார்கள்.

எல்லாம் முடிந்து விட்டது.அரசியல் செய்தனாங்கள் தானே என அப்பாவி மாதிரி கதைகின்றீர்கள்.அதிலிருந்தே தெரியுது அரசியல் வறுமை. மற்றவன் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்து,புலம் பெயர்ந்ததற்கான பலனை கொஞ்சமாவது பெறுங்கள்.

தலைமைகள் பிழையாக இருந்திருக்கலாம் அதற்க்காக தமிழருக்கு விடுதலை வேண்டி போராட புறப்பட்ட அப்பாவிப் போராளிகளை சிங்கள இராணுவத்தை விட கேவலமாக தேடித் தேடி வேட்டையாடச் சொல்லி தமிழ் மக்களா சொன்னார்கள்.

யாரை அப்பாவி போராளிகள் என்கிறீர்கள்.... இதே மிஞ்சிய போராளிகள் இந்திய இராணுவத்தோடை நிண்று சனத்துக்கு செய்ததை மறக்கவா சொல்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஜனநாயகம்..! மன்மோகன் சிங்கை அறிந்துதான் இந்திய மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? ஆனால் மேற்குலகம் விரும்பும் ஜனநாயகம் இந்தியாவில் தழைத்தோங்குகிறது தானே..!? :lol:

அதுமாதிரிதான் இதுவும்..! 1977 இல் மக்கள் தனி ஈழமே தீர்வு என்று வாக்களித்தார்கள்..!:)

1977 இல் நாலு லட்சத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றது உண்மைதான். இது தமிழ் வாக்காளரின் 2/3 இற்கு அதிகமாக இருந்திருக்குமா (அறுதிப் பெரும்பான்மை பெற 2/3 பகுதி வாக்குகள் தேவை)?. அத்துடன் விழுந்த வாக்குகள் எல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞானபத்தை விளங்கியதால்தான் என்றும் சொல்லமுடியாது. எனது அப்பா அமிருக்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குப்போட்டார் (தொகுதி வேட்பாளரைப் பிடிக்காமல் இருந்தும்). அம்மாவும் உதயசூரியனுக்கே வாக்குப்போட்டார் (மங்கையற்கரசியின் மனமுருகும் பேச்சுக்களால் இருக்கலாம்).

எனினும் 1977 தேர்தலைத்தான் தமிழ்மக்கள் தமிழீழம் அமைக்க வழங்கிய ஆணை என்று சொல்லுகின்றோம்!

1977 த.வி.கூ இன் தேர்தல் விஞ்ஞானபத்தில் இருந்து..

"The Tamil Nation must take the decision to establish its sovereignty in its homeland on the basis of its right to self-determination. The only way to announce this decision to the Sinhalese government and to the world is to vote for the Tamil United Liberation Front. The Tamil speaking representative who get elected through these votes, while being members of the National State Assembly of Ceylon, will also form themselves into the "NATIONAL ASSEMBLY OF TAMIL EELAM" which will draft a constitution for the State of Tamil Eelam and to establish the independence of the Tamil Eelam by bringing that constitution into operation either by peaceful means or by direct action or struggle."

........

Conclusion

The Tamil Nation is at a turning point in its history. The unity we have achieved has made the Sinhalese imperialists take a fresh look at the situation. In this background, as a first step towards the realisation of the freedom of the Nation, the unanimous verdict of the Tamil speaking people is indispensable. Hence we appeal to you to set aside your passions for, or prejudices against, individual candidates, to forget differences of region, caste or religion and, with the one and the only determination of making the Tamil Nation master of its Destiny to

VOTE

for the Tamil United Liberation Front,

for the emancipation of the Tamil Nation,

for the Freedom of Tamil Eelam

http://www.tamilnation.org/selfdetermination/tamileelam/7707tulfmanifesto.htm

வரலாற்றின் முக்கிய திருப்பத்தில் நிற்கின்றோம் எத்தனையோ தடவைகள் சொல்லியாகி விட்டது. தற்போது வளைந்து போகாமல் திருப்பத்தில் சறுக்கி சரிவில் விழுந்துபோய் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை தான் உலகின் எல்லா சனநாயக நாடுகளிலும் செய்கிறார்கள். எம்மக்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

எமது மக்களுக்குச் சொந்தமாக நாடு இருக்கவில்லை. எனவே சொந்தமாக நாடு ஏன் வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் முழுமையான ஆதரவைக் கொடுக்கமுடியாது. அதனைத்தான் அண்மைய வரலாறு சொல்லுகின்றது.

பலமாக இருக்குமட்டும் மக்கள் பின்னால் நிற்பார்கள் என்பது புலிகளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் ஆயுதபலம் மட்டுமே பலம் என்று அரசியல்/ இராஜ தந்திரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. சிறிலங்கன் அரசு ஆயுத, அரசியல், இராஜ தந்திரங்களில் பலமாக இருந்துதான் வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் அதிகமான விளக்கத்தை சேர்க்க வேண்டும்... பெரும்பாண்மையான தமிழ் மக்கள் தமிழீழ தனியரசை எப்போதும் விரும்பவில்லை என்பது போல சிலர் திரிக்க விரும்புகிறார்கள்...

1983 ஆடி இனக்கலவரத்தின் பின்னர்தான் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு தமிழீழம் தேவையென்ற உணர்வு வந்தது. அதனால்தான் பலர் இயக்கங்களின் கொள்கை வித்தியாசங்கள் எதையும் பாராமல் எல்லா இயக்கங்களிலும் இணைந்தனர். இயக்க உடைவுகளாலும் அழிவுகளாலும் பல இளைஞர்கள் தமது உயிரை வீணாக்கியதும் நிகழ்ந்தது. அதன்பின்னர் தமிழீழம் தேவையென்று மக்கள் உணர்ந்து தமது விருப்பத்தைச் சுயமாகக் காட்டியதாக நினைவில்லை (2004 தேர்தலையும் சேர்த்துதான்).

தற்போது கூட நாடு கடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டைத் தீர்மானம், உலகத் தமிழ் பேரவை என்று புலம் பெயர் நாடுகளில் பல அமைப்புக்கள் உள்ளன. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இவர்கள் தமக்கிடையில் முரண்பாடுகள் இல்லையென்று கூறினாலும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதே உண்மையைக் காட்டிக்கொடுக்கின்றது. முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள ஆளையாள் "தீர்க்க" மாட்டார்கள் என்று ஓரளவு நம்பலாம். எனினும் இணையங்களூடாக ஆளுக்காள் துரோக முத்திரை குத்துவார்கள் என்பது நிச்சயம்.

சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய முறையில் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதும், தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் செயற்திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் சமாந்தரமாகச் செய்யப்படவேண்டியவை. இணைந்து செய்வதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் நாலு லட்சத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றது உண்மைதான். இது தமிழ் வாக்காளரின் 2/3 இற்கு அதிகமாக இருந்திருக்குமா (அறுதிப் பெரும்பான்மை பெற 2/3 பகுதி வாக்குகள் தேவை)?. அத்துடன் விழுந்த வாக்குகள் எல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞானபத்தை விளங்கியதால்தான் என்றும் சொல்லமுடியாது. எனது அப்பா அமிருக்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குப்போட்டார் (தொகுதி வேட்பாளரைப் பிடிக்காமல் இருந்தும்). அம்மாவும் உதயசூரியனுக்கே வாக்குப்போட்டார் (மங்கையற்கரசியின் மனமுருகும் பேச்சுக்களால் இருக்கலாம்).

எனினும் 1977 தேர்தலைத்தான் தமிழ்மக்கள் தமிழீழம் அமைக்க வழங்கிய ஆணை என்று சொல்லுகின்றோம்!

1977 த.வி.கூ இன் தேர்தல் விஞ்ஞானபத்தில் இருந்து..

இது தானே ஜனநாயக நாடுகள் அமெரிக்காவோ, பிரான்சோ, அல்லது அமெரிக்க + பிரான்ஸ் கலவை கொண்ட சனநாயக அரசியலை கொண்ட ஜேர்மனியாகட்டும் வாக்களிப்பு முறை கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது.இதில் தமிழர்விடுதலை கூட்டணி எப்படி வித்தியாசமாக முடியும்?

Edited by nunavilan

தயா,

இந்திய இராணுவத்துடன் சேர்ந்து மாற்று இயக்கங்கள் செய்த கொலைகள் மன்னிக்க முடியாதவை.ஆனால் நான் இது பற்றி அவர்களுடன் கதைக்கும் போது சொன்னார்கள் " புலி வேட்டை இந்திய இராணுவம் வர முத‌லேயெ தொடங்கிவிட்டது.தாங்கள் இயக்கமெல்லாம் விட்டுவிட்டு (அதிலிருந்தே கூட‌தப்பி ஓடித்தான் வந்தவர்கள்) யூனிவேசிற்றிக்கு கூட போகத்தொடங்கிவிட்டர்களாம்.திரும்ப திரும்ப வந்து அலுப்பு.கையெழுத்து வைக்க வா,என்ன செய்கின்றாய்,ஏது செய்கின்றாய் என்று ஆயிரம் கேள்விகள் வேறு.விட்டு விட்டு வந்துவிட்டோம் இனி வந்து கையெழுத்து வைத்தால் இப்பவும் இயக்கதில் இருப்பதாகிவிடும் என்றுகூட சொல்லிபார்தார்களாம்.அது விளங்கும் நிலையில் புலிகள் இல்லை.

இந்தியன் ஆமி வந்தது பிறகு,எங்க ஒருக்கா திருப்பி அடிக்கலாம் இராணுவதிற்கல்ல,புலிக்கு என்றிருந்தவர்களூக்கு கிடைத்த சந்தர்ப்பம் தான் அது.இங்கு இப்பகூட பல பழைய மாற்று இயக்கத்தவர்கள் சொல்வார்கள் தங்களுக்கு எதைப்பற்றியும் இப்போது அக்கறை இல்லை புலியை யார் அழித்தாலும் சரி என்று.அந்த அளவிற்கு மனத்தளவில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.இவைகளையெல்லாம் யார் கணக்கில் எடுத்தார்கள்.அதிகாரம் தரும் மமதை அது. ராஜபட்சா சகோதரர்கள் அதைத்தான் இப்ப செய்கின்றார்கள்.புலிகள் முன்பு செய்தார்கள்.

1983 ஆடி இனக்கலவரத்தின் பின்னர்தான் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு தமிழீழம் தேவையென்ற உணர்வு வந்தது. அதனால்தான் பலர் இயக்கங்களின் கொள்கை வித்தியாசங்கள் எதையும் பாராமல் எல்லா இயக்கங்களிலும் இணைந்தனர். இயக்க உடைவுகளாலும் அழிவுகளாலும் பல இளைஞர்கள் தமது உயிரை வீணாக்கியதும் நிகழ்ந்தது. அதன்பின்னர் தமிழீழம் தேவையென்று மக்கள் உணர்ந்து தமது விருப்பத்தைச் சுயமாகக் காட்டியதாக நினைவில்லை (2004 தேர்தலையும் சேர்த்துதான்).

மக்கள் தமிழீழம் அமைவதை விரும்பவில்லை என்பதை விட மக்கள் தமிழீழம் அமையும் வளிகளை நம்பவில்லை எனும் பதம் சரியானதாக இருக்கலாம்...

காரணம் விடுதலை அமைப்புக்கள் எல்லாம் தோண்றி பல காலமும் மக்களிடம் இருந்து கூட தலைமறைவாகி வாழும் வளக்கத்தை கொண்டு இருந்தார்கள்... 1983 ம் ஆண்டு இனக்கலவரத்துக்கும் முன்னமும் மக்கள் கப்பல்களிலும் இரயிலிலும் மாக இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கை நோக்கி பயனப்பட்டும் இருக்கிறார்கள்.... அப்போது எல்லாம் எல்லாருக்கும் இருந்த கேள்வி அவர்களை எதிர்த்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதுதான்..

ஆனால் 1980 களில் இந்திய உளவுப்பிரிவின் ஆதரவுடன் பயிற்ச்சிக்கு போன பலர் ஆயுதங்களோடு மக்கள் மத்தியில் நடமாட புறப்பட்டதும் இராணுவத்தின் தொடர் அணியை தாக்கி எங்களால் முடியும் என்பதை சொன்னதின் பின்னர் போராடும் வெல்லும் வளிகளை மக்கள் நம்பினர்...

அப்போதும் இந்தியா வந்து எங்களுக்கு எதையாவது எடுத்து தரும் எண்றுதான் பலரும் எண்ணி மயங்கினர்...

உதாரணத்துக்கு பெரும் படையோடு இந்திய இராணுவம் பல தமிழர் குழுக்களின் உதவியோடு வந்தும் முழுமையான நிலப்பகுதிகளையும் கைப்பற்றியும் இந்தப் போராட்டம் ஒடுக்கப்படவில்லை... அதுக்கு காரணம் மக்கள் கொடுத்த முழுமையான ஒத்துளைப்பு...

மக்களின் ஒத்துளைப்பு இல்லை எண்றால் புலிகள் அமைப்பு எண்றோ காணாமல் போய் இருக்கும்... புலிகள் மீண்டு எழுந்து வழர்ந்தார்கள் எண்றால் அதுக்கு காரணம் 1990 களில் மக்கள் கொடுத்த 2 பவுண்கள் மண்மீட்ப்பு நிதிதான் காரணம்... அந்த ஓவ்வொரு 2பவுண்களும் ஒர் குடும்பத்தை பிரதிநிதப்படுத்தியது.... மக்கள் அப்போது வோட்டு போடவில்லை, மூலதனம் இட்டார்கள்...

தயா,

இந்திய இராணுவத்துடன் சேர்ந்து மாற்று இயக்கங்கள் செய்த கொலைகள் மன்னிக்க முடியாதவை.ஆனால் நான் இது பற்றி அவர்களுடன் கதைக்கும் போது சொன்னார்கள் " புலி வேட்டை இந்திய இராணுவம் வர முத‌லேயெ தொடங்கிவிட்டது.தாங்கள் இயக்கமெல்லாம் விட்டுவிட்டு (அதிலிருந்தே கூட‌தப்பி ஓடித்தான் வந்தவர்கள்) யூனிவேசிற்றிக்கு கூட போகத்தொடங்கிவிட்டர்களாம்.திரும்ப திரும்ப வந்து அலுப்பு.கையெழுத்து வைக்க வா,என்ன செய்கின்றாய்,ஏது செய்கின்றாய் என்று ஆயிரம் கேள்விகள் வேறு.விட்டு விட்டு வந்துவிட்டோம் இனி வந்து கையெழுத்து வைத்தால் இப்பவும் இயக்கதில் இருப்பதாகிவிடும் என்றுகூட சொல்லிபார்தார்களாம்.அது விளங்கும் நிலையில் புலிகள் இல்லை.

இந்தியன் ஆமி வந்தது பிறகு,எங்க ஒருக்கா திருப்பி அடிக்கலாம் இராணுவதிற்கல்ல,புலிக்கு என்றிருந்தவர்களூக்கு கிடைத்த சந்தர்ப்பம் தான் அது.இங்கு இப்பகூட பல பழைய மாற்று இயக்கத்தவர்கள் சொல்வார்கள் தங்களுக்கு எதைப்பற்றியும் இப்போது அக்கறை இல்லை புலியை யார் அழித்தாலும் சரி என்று.அந்த அளவிற்கு மனத்தளவில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.இவைகளையெல்லாம் யார் கணக்கில் எடுத்தார்கள்.அதிகாரம் தரும் மமதை அது. ராஜபட்சா சகோதரர்கள் அதைத்தான் இப்ப செய்கின்றார்கள்.புலிகள் முன்பு செய்தார்கள்.

புலிகளை அவர்கள் அடித்து இருந்தால் அதுக்கு புலிகளுக்கான பதிலாக அமைந்து இருக்கும்... ஆனால் இந்தியர் காலத்தில் கொல்லப்பட்டது 635 புலிகள்... ஆனால் கொல்லப்பட்ட மக்கள் தொகை 12 000 அதுக்கு என்ன சொல்கிறீர்கள்... கொண்றதும் துணை நிண்று காட்டி கொடுத்ததும் அந்த வீர மக்கள்தானே...

அவர்களுக்காக எவன் கவலைப்படுவான்..???

அவர்களை புலிகள் கொலை செய்ததை அதுவரைக்கும் ஏற்று கொள்ளாத மக்களை ஏற்று கொள்ள வைத்ததும் அதுதான்...

புலிகள் முன்னர் சொன்ன விளக்கம் அவர்களை நாங்கள் அடிக்காமல் விட்டால் எங்களை அவர்கள் அடித்து இருப்பார்கள் என்பதுதான்... அதுதானே உண்மை ஆக்கினார்கள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.