Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் குடியேற்ற நாடு

Featured Replies

முதலில் இவையனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா என சுயபரிசோதனை செய்தால் நல்லது.....

நிழலி

தொப்பி உங்களுக்கு சரியாகத் தான் பொருந்தியிருக்கின்றது

  • Replies 86
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கிருபன்,

இங்கே யாருமே வருவதற்கு தயாராக இல்லை என்று நீங்கள் சொல்வது தவறு. தராக்கி, சனியன், நிழலி என்று பலர் ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள். நிழலி தான் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்ற சிந்தனையில் இருப்பதாகக் கூட கூறியிருக்கிறார். வல்வைசகரா தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். வருவதற்கு ரெடி என்று சிலர் கூறியிருக்கிறார்கள். வேறு சிலரும் நல்ல முயற்சி என்று ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

சிலர் கடும் விரக்தியில் இருப்பதால் இதை பற்றி சந்தேகம் கொள்கிறார்கள். சிலர் நக்கல் செய்கின்றார்கள். ஆயினும் ஆதரவும் பல இடங்களில் இருக்கின்றது. என்னுடைய சுற்று வட்டாரத்திலும் இதைப் பற்றி நான் ஒரு ஆறு மாதங்களாக பேசி வருகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் இதைப் பற்றி "ஒரு பேப்பரில்" மேலோட்டமாகக் குறிப்பிட்டிருந்தேன். விரைவில் விரிவாக எழுதுவேன்.

நான் இப்படி ஒரு நிலப்பரப்பில் குடியேறுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

அனைத்து புலம்பெயர் தமிழர்களும் அங்கே குடியேறமாட்டார்கள் என்பதிலும் குடியேறவும் கூடாது என்பதிலும் நான் தெளிவாகவும் இருக்கிறேன்.

தமிழீழம் என்கின்ற இலக்கை அடைவதற்கு குடியேற்ற நிலம் ஒரு பின்தளமாகவும், அந்தக் குடியேற்ற நிலத்திற்கு ஆரம்பகட்ட பொருளாதரபலத்தை வழங்கும் பின்தளமாக புலம்பெயர்நாடுகளும் இருக்க வேண்டும். அதுதான் சரியாக வரும்.

என்னுடைய பார்வையில் ஒரு இலட்சத்திலுருந்து இரண்டு இலட்சம் வரையான தமிழர்களைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு குடியேற்ற நிலம் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கும் வலுவுள்ளதாக இருக்கும்.

முதலில் ஆயிரம் பேர் குடியேறி விட்டாலே மிகுதியானவர்கள் தானாக வருவார்கள். சுரண்டல், கொத்தடிமை போன்ற அச்சங்கள் தேவையில்லை. சனநாயகப் பண்புகள் மிகுந்த புலம்பெயர் நாடுகளில் இருந்து குடியேறும் மக்கள் இவைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆயினும் சுரண்டல் பிரச்சனை அனைத்து இடங்களிலும் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

விசா இல்லாத இளைஞர்கள் இங்கே உள்ள தமிழ் முதலாளிமார்களால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள் என்பது உண்மை. குடியேற்ற நாட்டில் இப்படியான பிரச்சனைகள் வரவாய்ப்பு இல்லை.

அப்படியும் பிரச்சனை வரும் என்றால் தோழர்கள் ராஜகரனையும் சோபாசக்தியையும் அழைத்துக் கொண்டு செல்வோம். அவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் தாங்கள் யூத இனத்தின் குண இயல்புகள் கொண்டவர்கள் என்று நம்புவதுதான் இப்படிப்பட்ட குடியேற்ற நாடுகளைப் பற்றிய கனவு. தமிழர்கள் யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் இதைப் பார்க்கமுடிகின்றது. ஆனால் தமிழர்கள் யூதர்கள் அல்லர்.

மேலும் வாழ்வில் வளம்பெற யூரோப்பிற்கு/ வட அமெரிக்காவுக்கு/ அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் இப்படியான ஒரு குடியேற்ற நாட்டில் வந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் பொய்களுடன் போராடி வென்றதென்பதும். தர்மம் தலைகாத்தது என்பதும் உலகில் நடந்தவைதான் ஆனால் தற்போதைய உலகில் உண்மையை அகராதியில் மட்டுமே பார்க்கலாம். ஜனநாயகம் என்பது இந்த உலகில் எங்குமே இல்லை பணநாயகம் அதை விலைக்கு வாங்கி பலகாலம் ஆயிற்று. ஆகவே எற்கனவே நடந்தவைகளை முன்உதாரணமாக கொண்டு எதையும் சாத்தியபடுத்திவிட முடியாது. நியாயத்தை தட்டி கேட்பவன் தனிடியாருபனாக இருந்தபோது தீவிரவாதி என்று சுட்டார்கள். இப்போது கூட்டமாக சென்றாலும் குண்டுபோட்டு கொல்கின்றார்கள். ஆகவே புதிதாக எதையாவது செய்ய நினைப்பதே எதையாவது உருவாக்கும். முள்ளை முள்ளால் எடுக்க முடியும்! பாவம் காலபோக்கில் திருந்துவார்கள் என்று புலிகள் பலபேரை காணாதுவிட்டதின் பலனை யாழ்களத்திலேயே இன்று தழிழ்தெரிந்த காரணத்தால் அனுபவிக்க வேண்டியுள்ளது. சில மதிகளடண்டதுகளுக்கு நிர்வாகம் கொடுத்த கருத்து சுதந்திரம் என்போன்ற பலபேரை யாழ்களபக்கம் போகாதே என்றே நிறுத்தியுள்ளது. உயரிய சிந்தனையும் உணர்வும் உள்ளவர்கள் உங்களைப்போல் சும்மா இருக்க முடியாதுதான் எங்காவது புகுந்து இனமானத்துடன் வாழவே வேண்டும் எமது இனம் என்றே நினைபீர்கள். ஆனால் எமது இனம் என்ற போர்வையை நாம் சற்று தளர்த்தி உள்ளே எட்டிபார்க்க வேண்டிய ஒரு கட்டாய காலத்தில் நிற்கின்றோம். எமது இனதில் இருந்த நல்லவரெல்லாம் இனமானம் தத்தளித்த போது குண்டு சுமந்தும் குப்பியடித்தும் போய்விட்டார்கள். இப்போது 10வீதம் தொடங்கி 100 வீதம் வரையான சுயநலவாதிகளும் காட்டிகொடுத்து பிழைப்பை பேணும் காக்கைவன்னியனின் பேரன் பேத்திகளும். நக்கிபிழைக்கும் நாயகங்களும் தங்கைகளை புணர மாற்றனை கூட்டிவந்து கும்மாளம் இடும் அம்மான்களையும் உள்ளடக்கியதே. இந்த இனம் என்ற போர்வை. இப்போது புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு கிடைத்த அறிவின்பாலும் குருதிக்குள் உறைந்திருந்த உணர்வின்பாலும் சில நல்ல இளைஞரும் யுவதிகளும் ஒரு குறிபிட்ட அளவில் உருவாகி உள்ளார்கள். உங்களுடைய சிந்தனைகள் அவர்களையும் களம் அழைத்து பலியிடவே உதவுமே தவிர வேறெதற்கும் உதவாது என்பது எனது தனிபட்ட எண்ணம். முயற்சிகள்தான் கைகூடும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் கைகூடியபின் இந்த உயரிய மனிதர்களின் குருதியில் உல்லாசமாக வாழபோவது யார்?

நீங்கள் நாடுவாங்கி குடியேறினால் தீவிரவாதிகள் கூட்டமாக வாழ்கிறர்கள் என்று கூட்டோடு குண்டுபோட்டு கொன்றுவிடுவார்கள் அதை செய்வதற்கு பல நாடுகளுக்குள் போட்டியிருக்கும் ஆனால் இந்தியா முந்திகொள்ளும் என்பது எனது நிலைப்பாடு காரணம் சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ ஏன் ஸ்ரீலங்காவுடன் கூட முண்ண முடியாது அக அவர்களது மனதை குளிர வைக்க இப்படி யாரவது அப்பாவிகளை கூட்டமாக கொன்றுதான் திருப்தி அடைய முடியும் இதுவொரு மனஉளவியல் சார்ந்த நிலைப்பாடு இது பலமுறை நடந்திருக்கின்றது.

தமிழ் இனம் என்ற போர்வையை முதலில் நாம் கழுவ வேண்டும். அதை செய்யாது எதுவே முடியாது ..... முடியாது!

புலிகளின் வரியால் வாடிய தமிழர்கள் ஏராளம்......... வன்னிமுகாமில் வசதியாய் வாழ்பவர் தாராளம். இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றறேன்.

கிருபன் நீங்கள் சொல்வதுதான் உண்மை ..இன்னமும் நாங்கள் யூதர்கள் என்று நினைப்பில் எழுதப்பட்ட கட்டுரையாகவே எனக்கு தெரிகிறது.அடுத்ததாக இது எவ்வித நடைமுறைச்சாத்தியங்களும் அற்றது...புதிதாய் ஒரு தீவை வாங்கி அதிலை வீடுகட்டி விவசாயம் தொழில் என்று தொடங்கி கட்டியெழுப்ப காலம் செல்லும்..அப்படி செய்தாலும்..அது இன்னொரு் நாட்டிற்கு சொந்தமான தீவாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்..தமிழீழம் எண்டு அறிவிக்க இயலாது எனவே பேசாமல் எல்லா வசதியோடையும் இருக்கிற சிங்கப்பூரை தவணை முறை கட்டுக்காசுக்கு கேட்டுப் பாக்கலாம்..அதை வாங்கினால் அங்கை இருக்கிற சீனர்..மற்றது மலேயர்களை அங்கையிருந்து அனுப்பிட்டு நாங்கள் குடியேறலாம்..எதுக்கும் யாராவது பேசிப்பாருங்கோ..

  • தொடங்கியவர்

சாத்திரி,

நீங்கள் நான் எழுதியதை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒரு நிலத்தை வாங்கி அதை தமிழீழமாக மாற்றுகின்ற திட்டத்தைப் பற்றி நான் பேசவில்லை.

இலங்கைத்தீவில் அமைந்திருக்கும் தாயகமே எங்கள் தமிழீழம்.

தமிழீழம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒரு பாரிய நிலப் பரப்பு பற்றியே பேசுகிறேன். தமிழீழம் அமைவதற்கு சில பத்து ஆண்டுகள் செல்லும். இன்றோ நாளையோ நடக்கப் போவது இல்லை. இப்பொழுது நாம் செய்வது போன்ற செயற்பாடுகளை மட்டும் செய்து கொண்டிருந்தால் தமிழீழம் என்றுமே அமையப் போவது இல்லை.

உண்மையில் எங்களில் பலர் தமிழீழம் என்கின்ற சிந்தனையைக் கைவிட்டு விட்டார்கள். அதை சாத்தியமற்ற ஒன்றாக முடிவெடுத்து விட்டார்கள். அதனாலேயே தாயகத்தை அமைப்பதற்கான எந்த ஒரு உருப்படியான வேலைத்திட்டங்களையும் செய்கின்ற சிந்தனை அற்றிருக்கிறார்கள். ஏதோ வேலை செய்கிறோம் என்று கணக்குக் காட்ட வட்டுக்கோட்டை, பேரவை என்று கூட்டம் போடுகிறார்கள்.

தமிழீழம் என்பது ஒரு நீண்ட காலத் திட்டம். அதற்கு ஒரு வலுவான பின்தளம் அவசியம். அந்த குடியேற்ற நிலத்;தை உருவாக்க சில ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. நாம் வெறும் கையோடு போய் அங்கே இறங்கப் போவது இல்லை. புலம்பெயர் நாடுகளில் உள்ள பொருளாதார மற்றும் அறிவு வளத்தோடுதான் அங்கே போகப் போகிறோம். ஆகவே விரைவில் எங்களின் குடியேற்ற நாடு உருவாகிவிடும்.

குடியேறும் நிலப்பரப்பில் அதற்கு சொந்தமான நாடு தலையீடு செய்யாதபடி நாம் ஒப்பந்தங்களைப் போடலாம். அது ஒன்றும் பிரச்சனை இல்லை. சம்பூர் அனல் மின்நிலயத்தில் இருந்து குவன்ரனாமோ வரை நிறைய உதாரணங்கள் இருக்கின்றது. எமக்கு தரப்பட்ட நிலப்பரப்பில் 100 ஆண்டுகள் அந்த நாடு சொந்தம் கொண்டாட முடியாது என்று ஒப்பந்தம் போட்டு விடலாம்.

இப்படி உருவாகின்ற குடியேற்ற நாட்டில் இருந்து நாம் தமிழீழம் நோக்கி மிகப் பலம் உள்ளவர்களாக பயணிப்போம்.

கிருபன் சொன்ன ஒன்றை ஏற்றுக் கொள்கிறேன். அவர் யூதர்களை உதாரணம் சொல்லியிருந்தார். தமிழர்களும் அப்படியான ஓர்மமும் உறுதியும் மிக்கவர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதைப் பற்றி இங்கே பேசுகிறேன். பிரபாகரன் தமிழர்களுள் நடந்த விபத்து என்று நான் நம்பவில்லை. எனக்கு தமிழர்கள் மீது கோபங்கள் இருந்தாலும் நம்பிக்கையும் இருக்கிறது.

தமிழீழத்தை அமைக்கின்ற பலம் எம்மிடம் நிச்சயமாக இருக்கிறது. எங்களால் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் சபேசன். ஆனால் போட்டி பொறமை, நான் பெரியவன் நீ பெரியவன் என்று சணையிட்ட்டு ஒற்றுமையில்லாமல் இருக்கும் எம்மவர்களினால் ஒன்றையும் உருப்படியாகச் செய்யவிடமாட்டார்கள்.எதாவது கோவில் கட்ட நிலம் வேண்டுமென்றால் நிலம் வாங்க உதவுவார்கள்.

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.

ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது. வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை. ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.

தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.

நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள். சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.

இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.

முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.

இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.

“யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்”

நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள். வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.

இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் “உலக யூதர் கொங்கிரஸ்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை “ஒபரேஷன் பாலஸ்தீன்” என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.

அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,

“யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது. எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது”

நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருப்பது நண்று!!!!

நல்ல முயற்சி சபேசன் அண்ணா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசம் இதை ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த தனியாருக்கு சொந்தமான பரந்த நிலப் பரப்புக்குள் நடப்பதை கண்டும் காணதது போன்று இருந்தாலே போதும். அவர்கள் காணக் கூடியதாக எமது வேலைகள் நடக்கவும் கூடாது. சில வேளை கண்டு விட்டாலும், காணதது போன்று இருப்பதற்கான ராஜதந்திர வேலைகளை மற்றவர்கள் செய்ய வேண்டும்.

இது நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியது போன்றது இல்லை. அவர் நாட்டை விட்டு விட்டு வரச் சொன்னார். நான் நாட்டை அமைப்பதற்கான பின் தள வேலைகளை செய்வதற்காக ஒரு நாட்டை தேடுகிறேன். அந்த நாடு காலப் போக்கில் தமிழர்களின் மூன்றாவது நாடாக மாறினாலும் நல்லதுதான்.

தமிழர்கள் மட்டும் வாழுகின்ற ஒரு நிலப் பரப்பு. அங்கே நாம் பல ஆயிரம் பேர் கூடிப் பேசினாலும் யாரும் கேட்கப் போவது இல்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்காக துப்பாக்கி சுட்டுப் பழகினாலும் யாரும் கேட்கவும் முடியாது. தமிழர்கள் குட்டி விமானங்களில் பறந்து திரிந்தாலும் கேட்க முடியாது.

போரில் தோற்றுப் போய் விட்டோம் என்று எல்லாம் முடிந்து விட்டதாக சொல்லி விட்டு சும்மா இருக்க முடியாது. தமிழீழத்தை அப்படியே விட்டு விட முடியாது.

இப்படி ஒரு குடியேற்ற நாட்டிற்கு யார் வருவார்கள் என்று கேள்வியை இங்கே கிருபன் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். அப்படி ஒரு நாட்டிற்கு சென்று அந்த நாட்டையும் வளப்படுத்தி நீண்ட கால நோக்கில் தமிழீழத்தையும் உருவாக்கும் போராட்டத்திற்கு வருவதற்கு இங்கே யார் தயாராக இருக்கிறீர்கள்?

நான் தயார் சபேஸ் அண்ணா

ஆனா கெதில ஒரு பொட்டப்புள்ளக பள்ளியொண்டயும் ஆரம்பிக்கோணும்.

சபேசன் உங்கள் எண்ணக்கருவுக்கு ஆதரவு தரவில்லை என்று ஏன் தவறாக கணக்குப் போடுகின்றீர்கள் ?

சுதந்திர தமிழ் அரசு அமைவதற்கு இங்கு எல்லாத தமிழர்களும் ஆதரவு தான்

இது பற்றி நீங்கள் முழுமையாக இதில் உள்ள சாதக பாதகங்களையும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும் விபரிக்கவில்லை

முழுமையாக விபரித்தால் அதற்கு சிங்களவன் இப்பவே ஆப்பு சொருகத் தொடங்கி விடமாட்டானா ?????

உண்மையில் எங்களில் பலர் தமிழீழம் என்கின்ற சிந்தனையைக் கைவிட்டு விட்டார்கள். அதை சாத்தியமற்ற ஒன்றாக முடிவெடுத்து விட்டார்கள். அதனாலேயே தாயகத்தை அமைப்பதற்கான எந்த ஒரு உருப்படியான வேலைத்திட்டங்களையும் செய்கின்ற சிந்தனை அற்றிருக்கிறார்கள். ஏதோ வேலை செய்கிறோம் என்று கணக்குக் காட்ட வட்டுக்கோட்டை, பேரவை என்று கூட்டம் போடுகிறார்கள்.

சபேசன் இதுகளில் இருப்பவர்கள் தான் பலர் விலாங்கு மீன்கள் என்று சொல்கின்றார்கள்

நான் கேள்விப்பட்டவரையில் நாடு கடந்த அரசும் இவைகளும் வெவ்வேறு உத்திகளாக ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்று

சரி அதை விடுவோம்

1.ஒரு நாடு தனது இடத்தை குத்தைக்கு தமிழர்களுக்கு வழங்குமா ?

2.அப்படி வழங்கினாலும் அந்த இடத்தை எந்த நாடு என்று சொல்லுவது ? தனி உரிமை கொண்டாட கொடுத்த நாடு விடுமா ?

3.முகவரி இல்லாத நாம் எப்படி ? பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட எமக்கு இதில் என்ன முகவரி ?

4.இந்த குத்தகை இடத்திற்கு யார் பாதுகாப்பு பொலிஸ் ,இராணுவம் ?

5.இது வரை எல்லாம் குத்தகை எடுத்த வரலாறுகளில் யூதர்களைத் தவிர எல்லோரும் ஏற்கனவே நாடு உடையவர்கள் படை பலம் உடையவர்கள்

6.இந்த இடத்திற்கு சர்வதேச சட்டம் எவ்வகையில் செல்லுபடியாகும் ? ஐநா வின் அங்கிகாரம் என்ன ?

7.சிறிலங்கா அத்து மீறினால் தனது செல்லப் பிராணிகளின் உதவியுடன் ??

உண்மைகள் பொய்களுடன் போராடி வென்றதென்பதும். தர்மம் தலைகாத்தது என்பதும் உலகில் நடந்தவைதான் ஆனால் தற்போதைய உலகில் உண்மையை அகராதியில் மட்டுமே பார்க்கலாம். ஜனநாயகம் என்பது இந்த உலகில் எங்குமே இல்லை பணநாயகம் அதை விலைக்கு வாங்கி பலகாலம் ஆயிற்று. ஆகவே எற்கனவே நடந்தவைகளை முன்உதாரணமாக கொண்டு எதையும் சாத்தியபடுத்திவிட முடியாது. நியாயத்தை தட்டி கேட்பவன் தனிடியாருபனாக இருந்தபோது தீவிரவாதி என்று சுட்டார்கள். இப்போது கூட்டமாக சென்றாலும் குண்டுபோட்டு கொல்கின்றார்கள்.

ஆகவே புதிதாக எதையாவது செய்ய நினைப்பதே எதையாவது உருவாக்கும். முள்ளை முள்ளால் எடுக்க முடியும்! பாவம் காலபோக்கில் திருந்துவார்கள் என்று புலிகள் பலபேரை காணாதுவிட்டதின் பலனை யாழ்களத்திலேயே இன்று தழிழ்தெரிந்த காரணத்தால் அனுபவிக்க வேண்டியுள்ளது. சில மதிகளடண்டதுகளுக்கு நிர்வாகம் கொடுத்த கருத்து சுதந்திரம் என்போன்ற பலபேரை யாழ்களபக்கம் போகாதே என்றே நிறுத்தியுள்ளது. உயரிய சிந்தனையும் உணர்வும் உள்ளவர்கள் உங்களைப்போல் சும்மா இருக்க முடியாதுதான் எங்காவது புகுந்து இனமானத்துடன் வாழவே வேண்டும் எமது இனம் என்றே நினைபீர்கள். ஆனால் எமது இனம் என்ற போர்வையை நாம் சற்று தளர்த்தி உள்ளே எட்டிபார்க்க வேண்டிய ஒரு கட்டாய காலத்தில் நிற்கின்றோம்.

எமது இனதில் இருந்த நல்லவரெல்லாம் இனமானம் தத்தளித்த போது குண்டு சுமந்தும் குப்பியடித்தும் போய்விட்டார்கள். இப்போது 10வீதம் தொடங்கி 100 வீதம் வரையான சுயநலவாதிகளும் காட்டிகொடுத்து பிழைப்பை பேணும் காக்கைவன்னியனின் பேரன் பேத்திகளும். நக்கிபிழைக்கும் நாயகங்களும் தங்கைகளை புணர மாற்றனை கூட்டிவந்து கும்மாளம் இடும் அம்மான்களையும் உள்ளடக்கியதே.

இந்த இனம் என்ற போர்வை. இப்போது புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு கிடைத்த அறிவின்பாலும் குருதிக்குள் உறைந்திருந்த உணர்வின்பாலும் சில நல்ல இளைஞரும் யுவதிகளும் ஒரு குறிபிட்ட அளவில் உருவாகி உள்ளார்கள். உங்களுடைய சிந்தனைகள் அவர்களையும் களம் அழைத்து பலியிடவே உதவுமே தவிர வேறெதற்கும் உதவாது என்பது எனது தனிபட்ட எண்ணம். முயற்சிகள்தான் கைகூடும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் கைகூடியபின் இந்த உயரிய மனிதர்களின் குருதியில் உல்லாசமாக வாழபோவது யார்?

நீங்கள் நாடுவாங்கி குடியேறினால் தீவிரவாதிகள் கூட்டமாக வாழ்கிறர்கள் என்று கூட்டோடு குண்டுபோட்டு கொன்றுவிடுவார்கள் அதை செய்வதற்கு பல நாடுகளுக்குள் போட்டியிருக்கும் ஆனால் இந்தியா முந்திகொள்ளும் என்பது எனது நிலைப்பாடு காரணம் சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ ஏன் ஸ்ரீலங்காவுடன் கூட முண்ண முடியாது அக அவர்களது மனதை குளிர வைக்க இப்படி யாரவது அப்பாவிகளை கூட்டமாக கொன்றுதான் திருப்தி அடைய முடியும் இதுவொரு மனஉளவியல் சார்ந்த நிலைப்பாடு இது பலமுறை நடந்திருக்கின்றது.

தமிழ் இனம் என்ற போர்வையை முதலில் நாம் கழுவ வேண்டும். அதை செய்யாது எதுவே முடியாது ..... முடியாது!

புலிகளின் வரியால் வாடிய தமிழர்கள் ஏராளம்......... வன்னிமுகாமில் வசதியாய் வாழ்பவர் தாராளம். இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றறேன்.

?????????????

Edited by tamilsvoice

உள்ளதைக் காப்பாற்ற திராணி அற்ற ஒரு சமூகம்..வாங்கி வளப்படுத்தி வாழும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கேனும் அசைலம் கொடுக்கிறதென்றால் சொல்லுங்கோ அடிச்சுக்குவோம்..!

அவுஸ்திரேலியாவுக்கு பக்கத்தில இருக்கிற கிறிஸ்துமஸ் தீவுமாதிரி ஒன்றை வாங்கிவிட்டால் நம்மவர்களும் அசைலம் அடிக்க உதவியாய் இருக்கும், மற்ற நாட்டுக்காரரையும் அசைலம் அடிக்க உதவி காசும் பண்ணலாம். <_<

கருத்தை எழுதிய நண்பருக்கு தலை வணங்கி வணக்கம் . இது இங்கே எழுதக்கூடிய கருத்து இலலை என்ற நண்பருக்கு கை குவித்து வணக்கம் . இது சாத்தியமில்லை என்பவருக்கு ( அவரும் நண்பர்தான் ) ஏளனம் கொண்ட ஒரு வணக்கம் . தமிழனை பற்றி கொஞ்சம் மட்டமாக விமர்சித்த நண்பருக்கு முறைப்போடு ஒரு வணக்கம் .

அனைத்து நண்பர்கள் சார்பிலும் மெத்த நன்றிகள்~! :D

சிங்களவனின் கொடுவாள் கத்திக்கு முன்.. எதுவும் சாத்தியமில்லை... காசு கொடுத்து நாடு வாங்குவது என்பது, பொல்லை கொடுத்து அடிவாங்குவதுபோல.. எங்கடயலுக்கு இன்னும் யாரோடு டீல் பன்ணினம் எண்டு தெரியேல்ல.........

இதைவிட கிருபன் சொன்னமாதிரி சிங்களவனோடையே ஒரு டீலை செய்தால் பிரச்சனைகள் குறைவாகவும், நடைமுறைச் சாத்தியமாகதாகவும் இருக்கலாம்.

இதை சர்வதேசம் ஆதரிக்குமா சபேசன் அண்ணா ??

பயங்கரவாதிகளின் வாழ்விடம் என்று முத்திரை குத்துவதற்கு, ஒட்டுமொத்தமாய் இங்குபோய் குடியேறுகிற ஆக்களிண்ட தலையில குண்டைகொண்டுவந்து கொட்டுறதுக்கு, லபாக்காய் பருந்து கோழிக்குஞ்சை தூக்குவதுபோல் கைதுசெய்வதற்கு சர்வதேசம் நிச்சயம் ஆதரவு கொடுக்கும்.

இந்த டீலுக்கு நான் ரெடி,அங்கே பல்கலைகழகம் ஒன்று கட்டினால் நான் இலவசமாக வந்து படிப்பிப்பேன்...

உந்த வெட்டி ஒட்டுற கற்கைநெறி தவிர என்னமும் படிப்பியுங்கோ பிரச்சனை இல்லை.

பிறகு எதுக்கு தனியாய் ஒரு தீவை வாங்கி குடியேறவேணும்.??பிறகு தமிழனை பாத்து உலகமே தீவான்..எண்டு திட்டுறதற்கா??

நான் ஊரில் இருந்தபோது சிரித்திரனில் வந்த ஓர் நகைச்சுவை பார்த்து இருந்தேன். அதில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதை தமிழர்களுக்கு ஒரு தீவு வேண்டும் என்று பிழையாக விளங்கி புளட் இயக்கத்தினர் மாலைதீவை கைப்பற்ற கப்பலில் சென்றதுபோல் நகைச்சுவையாக வரையப்பட்டு இருந்தது. அன்று நகைச்சுவையான விடயம் இன்று வேறு ஓர் ரூபத்தில் மீண்டும்..

ஒருவரும் தாங்கள் போய்க் குடியேறுவோம் என்று சொல்லவில்லை!

ஆரும் விடுபேயன்களாகப் பார்த்துக் குடியேற்றிப் போட்டு அவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும், அவர்கள் உழைப்பைச் சுரண்டவும், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று பணம் திரட்டவும் சிலவேளை பயன்படலாம்.

பகிடியோ என்னமோ.. ஆனால் தகுந்த முறையில் நிருவகிக்கப்படும் இப்படியான ஓர் புகலிடம் இருந்தால் தாயகத்தில் அங்கு உயிர்வாழமுடியாத மற்றும் வெளிநாடுகளிற்கு வந்து குடியேற வசதி இல்லாத கைவிடப்பட்ட மக்களிற்கு நிச்சயம் இப்படியானதோர் இடம் மிகுந்த ஆறுதலையும், ஆகக்குறைந்தது தற்காலிக நிம்மதியையும், பலவித பயன்களையும் கொடுக்கும்.

7.சிறிலங்கா அத்து மீறினால் தனது செல்லப் பிராணிகளின் உதவியுடன் ??

குண்டுகள்போடலாம், கொலைகள் செய்யலாம், சித்திரவதை செய்யலாம்.. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றிய அனைத்தையும் மீண்டும் செய்யலாம்.

+++

வணக்கம் சபேசன்,

இன்றுதான் நீங்கள் ஆரம்பித்த இந்தத்திரியை பார்த்தேன். தர்க்கரீதியாக ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்து இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து சிந்தியுங்கள். நடைமுறைச்சாத்தியங்களுக்கு அப்பால் உங்களின் இப்படியான சிந்தனைகள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. நன்றி! :o

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் பொய்களுடன் போராடி வென்றதென்பதும். தர்மம் தலைகாத்தது என்பதும் உலகில் நடந்தவைதான் ஆனால் தற்போதைய உலகில் உண்மையை அகராதியில் மட்டுமே பார்க்கலாம். ஜனநாயகம் என்பது இந்த உலகில் எங்குமே இல்லை பணநாயகம் அதை விலைக்கு வாங்கி பலகாலம் ஆயிற்று. ஆகவே எற்கனவே நடந்தவைகளை முன்உதாரணமாக கொண்டு எதையும் சாத்தியபடுத்திவிட முடியாது. நியாயத்தை தட்டி கேட்பவன் தனிடியாருபனாக இருந்தபோது தீவிரவாதி என்று சுட்டார்கள். இப்போது கூட்டமாக சென்றாலும் குண்டுபோட்டு கொல்கின்றார்கள். ஆகவே புதிதாக எதையாவது செய்ய நினைப்பதே எதையாவது உருவாக்கும். முள்ளை முள்ளால் எடுக்க முடியும்! பாவம் காலபோக்கில் திருந்துவார்கள் என்று புலிகள் பலபேரை காணாதுவிட்டதின் பலனை யாழ்களத்திலேயே இன்று தழிழ்தெரிந்த காரணத்தால் அனுபவிக்க வேண்டியுள்ளது. சில மதிகளடண்டதுகளுக்கு நிர்வாகம் கொடுத்த கருத்து சுதந்திரம் என்போன்ற பலபேரை யாழ்களபக்கம் போகாதே என்றே நிறுத்தியுள்ளது. உயரிய சிந்தனையும் உணர்வும் உள்ளவர்கள் உங்களைப்போல் சும்மா இருக்க முடியாதுதான் எங்காவது புகுந்து இனமானத்துடன் வாழவே வேண்டும் எமது இனம் என்றே நினைபீர்கள். ஆனால் எமது இனம் என்ற போர்வையை நாம் சற்று தளர்த்தி உள்ளே எட்டிபார்க்க வேண்டிய ஒரு கட்டாய காலத்தில் நிற்கின்றோம். எமது இனதில் இருந்த நல்லவரெல்லாம் இனமானம் தத்தளித்த போது குண்டு சுமந்தும் குப்பியடித்தும் போய்விட்டார்கள். இப்போது 10வீதம் தொடங்கி 100 வீதம் வரையான சுயநலவாதிகளும் காட்டிகொடுத்து பிழைப்பை பேணும் காக்கைவன்னியனின் பேரன் பேத்திகளும். நக்கிபிழைக்கும் நாயகங்களும் தங்கைகளை புணர மாற்றனை கூட்டிவந்து கும்மாளம் இடும் அம்மான்களையும் உள்ளடக்கியதே. இந்த இனம் என்ற போர்வை. இப்போது புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு கிடைத்த அறிவின்பாலும் குருதிக்குள் உறைந்திருந்த உணர்வின்பாலும் சில நல்ல இளைஞரும் யுவதிகளும் ஒரு குறிபிட்ட அளவில் உருவாகி உள்ளார்கள். உங்களுடைய சிந்தனைகள் அவர்களையும் களம் அழைத்து பலியிடவே உதவுமே தவிர வேறெதற்கும் உதவாது என்பது எனது தனிபட்ட எண்ணம். முயற்சிகள்தான் கைகூடும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் கைகூடியபின் இந்த உயரிய மனிதர்களின் குருதியில் உல்லாசமாக வாழபோவது யார்?

நீங்கள் நாடுவாங்கி குடியேறினால் தீவிரவாதிகள் கூட்டமாக வாழ்கிறர்கள் என்று கூட்டோடு குண்டுபோட்டு கொன்றுவிடுவார்கள் அதை செய்வதற்கு பல நாடுகளுக்குள் போட்டியிருக்கும் ஆனால் இந்தியா முந்திகொள்ளும் என்பது எனது நிலைப்பாடு காரணம் சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ ஏன் ஸ்ரீலங்காவுடன் கூட முண்ண முடியாது அக அவர்களது மனதை குளிர வைக்க இப்படி யாரவது அப்பாவிகளை கூட்டமாக கொன்றுதான் திருப்தி அடைய முடியும் இதுவொரு மனஉளவியல் சார்ந்த நிலைப்பாடு இது பலமுறை நடந்திருக்கின்றது.

தமிழ் இனம் என்ற போர்வையை முதலில் நாம் கழுவ வேண்டும். அதை செய்யாது எதுவே முடியாது ..... முடியாது!

புலிகளின் வரியால் வாடிய தமிழர்கள் ஏராளம்......... வன்னிமுகாமில் வசதியாய் வாழ்பவர் தாராளம். இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றறேன்.

?????????????

தமிழ் குரல் என்ன கேள்விக்குறியுடன் நிற்கிறீர்கள் .

மருதங்கேணி எழுதியதை ஆற அமர மீண்டுமொருமுறை வாசித்துப் பார்த்தீர்களானால் .... கேள்விக்குறிக்கு இடம் இருக்காது.அவர் அந்த பந்தியிலேயே மறைமுகமாக சிலரை சாடியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனதில் இருந்த நல்லவரெல்லாம் இனமானம் தத்தளித்த போது குண்டு சுமந்தும் குப்பியடித்தும் போய்விட்டார்கள். இப்போது 10வீதம் தொடங்கி 100 வீதம் வரையான சுயநலவாதிகளும் காட்டிகொடுத்து பிழைப்பை பேணும் காக்கைவன்னியனின் பேரன் பேத்திகளும். நக்கிபிழைக்கும் நாயகங்களும் தங்கைகளை புணர மாற்றனை கூட்டிவந்து கும்மாளம் இடும் அம்மான்களையும் உள்ளடக்கியதே. இந்த இனம் என்ற போர்வை. இப்போது புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு கிடைத்த அறிவின்பாலும் குருதிக்குள் உறைந்திருந்த உணர்வின்பாலும் சில நல்ல இளைஞரும் யுவதிகளும் ஒரு குறிபிட்ட அளவில் உருவாகி உள்ளார்கள்

அர்த்தமுள்ள

ஆனால் அடிவயிற்றை பிழியும் உண்மைகள்

திருந்துமா என் இனம்???

புரட்டுமா தடம்???

இதைவிட கிருபன் சொன்னமாதிரி சிங்களவனோடையே ஒரு டீலை செய்தால் பிரச்சனைகள் குறைவாகவும், நடைமுறைச் சாத்தியமாகதாகவும் இருக்கலாம்.

கிழிங்சுது போ...... சிங்களவனோட இவ்வளவு காலமா டீல் பன்னியும் புத்திவரவில்லையா... :wub:

  • தொடங்கியவர்

குடியேற்ற நாடு குறித்து இங்கே சொல்லப்பட்ட கருத்துகளுக்கு என்னுடைய கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

பேசாமல் சிறிலங்காவிலேயே நிலத்தை வாங்கி விடலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். இது மிகவும் அபத்தமானது. தமிழர் தாயகத்தில் உள்ள நிலம் தமிழர்களுக்கு சொந்தமானது. சொந்தமான நிலமும், வீடும் வைத்திருக்கும் தமிழர்கள் இன்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் 20 ஆண்டுகளாக அவர்களின் சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இத்தனைக்கும் அவர்களின் வீடும் காணியும் அவர்களின் பெயரில்தான் இருக்கிறது.

சிறிலங்காவில் நிலம் வாங்கி ஒன்றும் செய்ய முடியாது. அவசரகாலச் சட்டத்தின் மூலம் அதை சிறிலங்கா படையினர் பறித்துக் கொள்வார்கள்.

அடுத்ததாக ஒரு அச்சம் இங்கே வெளியிடப்பட்டது. தமிழர்கள் ஒரு தீவிலே குடியேறுகின்ற பொழுது அங்கே உள்ள தமிழர்களை சிறிலங்கா அரசு அழித்து விடாதா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது ஒரு நியாயமான அச்சம்.

நாம் ஒரு தீவிலே குடியேறினால், அங்கே சிறிலங்காப் படைகள் அத்துமீறி நுழைய முயற்சிக்கும். தமது நாட்டிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைக்கு திட்டமிட்டார்கள் என்று பலரை கைது செய்ய முயலும். இப்படி ஒரு பிரச்சனை இருக்கின்றது. இதை நான் மறுக்கவில்லை.

இந்தப் பிரச்சனையை கருத்தில் கொண்டுதான் தீவு பற்றி நான் பேசாது, தென்னமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற இடங்களில் நிலம் வாங்குவது பற்றிப் பேசுகிறேன். பசுபிக் சமுத்தரித்தில் இருக்கின்ற தனித்து விடப்பட்ட ஒரு தீவில் குடியேறுவது என்னுடைய பார்வையிலும் ஆபத்தானதே.

இந்தத் திட்டத்தில் பல சிக்கல்கள் இருப்பது உண்மை. ஆனால் அவைகளுக்கு மாற்று வழிகள் இல்லாமல் இல்லை. இப்படி ஒரு முயற்சியில் உண்மையாகவே இறங்குகின்ற பொழுது, எமக்குள் இது பற்றி ஆழமாக விவாதித்து தீர்வு காணலாம்.

நீங்கள் யூரோப்பா, வட அமேரிக்காவில் நிலம் வாங்கினாலும்...

இந்தியாவை மீறி எதுவும் செய்யமுடியாது.

கடைசியில் புலம்பெயர்ந்தவையின் தலையில் பழியை போட்டுவிட்டு காணாமல் போய்விடுவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசோ நாடு கடக்காத அரசோ, நிலம்வாங்கி அரசோ தீவுவாங்கி அரசோ, எதையும் அரசியலாக செய்யுங்கள். த.தே.கூட்டமைப்பு அவர்களது அரசியலை செய்யட்டும், கிழக்கின் விடிவெள்ளிகள் அவர்களது அரசியலை செய்யட்டும், வடக்கின் வசந்தன் தனது அரசியலை செய்யட்டும், சிங்களவங்கள் தங்களது அரசியலை செய்யட்டும். எல்லோரும் ஹேப்பியாக அரசியல் செய்துகொண்டிருங்கள். ஸ்ரீலங்காத்தமிழர் இன்னும் ஒரு 15 தலைமுறையாவது இருப்பார்கள். :wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யூரோப்பா, வட அமேரிக்காவில் நிலம் வாங்கினாலும்...

இந்தியாவை மீறி எதுவும் செய்யமுடியாது.

கடைசியில் புலம்பெயர்ந்தவையின் தலையில் பழியை போட்டுவிட்டு காணாமல் போய்விடுவீர்கள்.

இஸ்ரேலை சுற்றி பலம் பொருந்திய அரேபிய நாடுகளிருந்தும் ஏன் பலஸ்தீனத்தை தனிநாடாக்க முடியவில்லை?

அதே ....அதே அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதால் பாலஸ்தீனத்தை உருவாக்க முடியவில்லை, இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஆதரவாக இருப்பதால் தமிழீழம் அமைக்க முடியவில்லை. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே ....அதே அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதால் பாலஸ்தீனத்தை உருவாக்க முடியவில்லை, இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஆதரவாக இருப்பதால் தமிழீழம் அமைக்க முடியவில்லை. :wub:

நீங்கள் எல்லாம் இருக்கேக்க இந்தியாவை மட்டும் ஏன் குறை சொல்லுவான்.

ம் ..

நீங்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக தொட்டுச் செல்வது காலம் மற்றும் சக்தி விரையமும் ஆகும். என்னைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் போரில் இன்று ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கான நேர்மையான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அவற்றை திருத்தினாலே பாதி வேலை முடிந்த மாதிரித்தான். மிகச் சரியான, அதோடு steady யான முன்னெடுப்புக்கள் மிக அவசியம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் எல்லாம் சரிவந்துவிட போவதில்லை. சிறு சிறு விடயங்கள் சரியான முறையில் நடைமுறை படுத்தப்பட்டாலே போதுமானது. அவசியமானல் மேலும் எழுதலாம்.

- ஈழத்திருமகன் -

நீங்கள் எல்லாம் இருக்கேக்க இந்தியாவை மட்டும் ஏன் குறை சொல்லுவான்.

இந்தியாவினால் ஈழவர்களுக்கு எதிராக பிரயோகிக்கபடும் பல ஆயுதங்களில் மலிவானதுதான் இந்த பேதைகள்.....

இதுக்களில், காசுக்கு போற ஈழவர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழ்நாட்டவர்கள் ஆட்டம்தான் இப்போது..

பழையகோபக்காறர் எல்லாம் அடங்கினம்..... :wub:

என்னண்ணை புறிச்சுக்காட்டுறியள் முள்ளிவாய்க்கால்வரை கத்தச்சொன்னதெல்லாம் கத்தினம் தூக்கிப்பிடிக்கச்சொன்னதெல்லாம் தூக்கிப்பிடிச்சம். அப்பெல்லாம் நீங்கள் பொய் சொல்லுறேல்ல எண்டு நினைச்சம், முள்ளிவாய்க்காலில முடிஞ்சாப்புறகுதான் சொன்னதெல்லாம் பொய்யெண்டு தெரிஞ்சம். உள்ளுக்க வரவிட்டு அடிக்கிறதின்ர வலிய புரிஞ்சுகொண்டம், அது உங்களுக்கு புரியாமல் புறிச்சுக்காட்டுறிங்கள். :wub:

  • தொடங்கியவர்

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் உருவாவது நடக்காது என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். அதைப் பற்றி கடந்த வாரங்களில் இரண்டு பதிவுகளை செய்திருக்கிறேன்.

தமிழீழப் போராட்டம் என்பது பல முனைகளில் நடைபெற வேண்டும். அதில் ஒரு முனை இந்தியாவிற்கு எதிராக இருக்க வேண்டும். மாவோயிச போராளிகளோடு விடுதலைப் புலிகள் இணைந்து செயற்படுகிறார்கள் என்ற செய்தி இந்தியப் புலனாய்வுத்துறையின் புரளியாக இருக்கக்கூடாது என்பதே என்னுடைய விருப்பம்.

காலம் கனிந்தவுடன் தமிழீழத்தை மீட்பதற்கான ஏற்படுகளை செய்கின்ற வேலைகள் இன்னொரு முனையில் நடைபெற வேண்டும். அதற்கான தளமாக குடியேற்ற நாடு அமையலாம்.

நாம் எல்லா முனைகளிலும் போராட வேண்டும். எமக்கு நிறையத் தடைகள் உண்டு. நிறைய எதிரிகள் உண்டு. அனைத்தையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.