Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்பு தளபதி ராமின் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mediarelease_bytheLTTENEW_22112009.jpg

ஊடகங்களில் வெளியிடச்சொல்லி தளபதி ராமினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..... தொடங்கீட்டாங்க போல அண்டைக்கு தலமைச்செயலகத்தில் இருந்து கடிதம் ராம்,நகுலன், தவேந்திரன் இவர்கள் இராணுவத்தோடு சேர்ந்து இயங்குவதாகவும் இனி அறிக்கைகள் யாவும் தலமைச்செயலகத்தில் இருந்து வெளியீடப்படும் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடுமாறு கேட்கப்பட்டிருந்தது.....! என்னதான் நடக்குதோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் தற்போது தங்கி இருப்பது கருணாவோடு, அப்ப நிலம யை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது குட்டிக்கும் புட்டிக்குமான மடல். :)

எதுவரை இந்த அறிக்கைகள்..... :):D மாவீரர் தினத்தின்பின்... சிலவேளை... !? நல்ல மாற்றம் வர அம்மாவீரர் நினைவோடு காத்திருப்போம். :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான விடுதலைக்கு உழைப்பவர்களை தெளிவாக அடையாளம் காட்டினால் தானே சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவரை இந்த அறிக்கைகள்.....

ராமின் புகைப்படம் கருணாவின் புகைப்படத்துடன் வரும் வரை

இது விடுதலைப்புலிகளின் தளபதிகளுக்கு எதிராக தலைமை ச்செயலகத்தால் எழுத்தப்பட்ட ஒரு அறிக்கை...

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒண்றின் விடுதலைப்புலிகளின் அறிக்கை பாணியும் மற்றதில் அது இல்லாது இருப்பதையும் காணலாம்...

media_release_tamil.jpg

அட பாவிகளா எப்ப தாண்டா ஒன்னு சேருவீங்க, தமிழீழ மக்களை தரிசு பண்ணாம விட மாட்டீங்க போல

கடவுளே தமிழினத்த மொத்தமா முடிச்சுறு இந்த மாதிரி சண்டாளர்கள் கையால் கேடுகெட்ட நிலைக்கு மேலும் போக விடாதே, தலைவர் இல்லன்னு அவனவன் கண்டதையும் எழுதுறான், சொல்றான். இத எல்லாம் பார்த்துட்டு வெம்பனும்ன்னு தமிழர்களோட தலை எழுத்து

இதுக்காவது தலைவரும் அம்மனும் வெளிகிடனும் இல்ல இத மட்டுபடுத்தணும்

Edited by ramathevan

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி அறிக்கையை வெளியிட்டது உண்மையில் (தளபதி) இராம் தானா என்றசந்தேகம் ஒருபுறமிருக்க இரண்டு அறிக்கைகைளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது (தளபதி) இராமின் அறிக்கை விடுதலைப்புலிகளின் பாரம்பரிய அறிக்கை வழக்கத்திலிருந்து பெரிதளவில் விலகி நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ்மக்களை குழப்பத்திலிருந்து மீட்பதாகவும் விழிப்புணர்வைத் தூண்டுவதாகவும் சொல்லிக்கொண்டு விடப்பட்ட அந்த அறிக்கை உண்மையில் இவையிரண்டையும் தமிழ்மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கிலேயே வேண்டுமென்று விஷமிகளால் தயாரிக்கப்பட்டிருப்பது காலாதிகாலம் விடுதலைப்புலிகளின் அறிக்கைகளை வாசித்து வந்தவர்களுக்கு இலகுவில் புரிந்துவிடும். அறிக்கையை வாசிப்பவர்களை முதலில் தயார் நிலைப்படுத்திவிட்டு அடுத்து வரப்போகும் சேதியைப் பக்குவமாக புகட்டும் அந்த இலாவகத்தன்மை விடுதலைப்புலிகளின் அறிக்கைகளில் என்றுமே காணக்கூடிய ஒன்று. இராமின் அறிக்கையில் அது கொஞ்சங்கூட பின்பற்றுப்பட்டிருக்கவில்லை என்பதும் அறிக்கையின் மையக்கருத்து அவசரத்துடன் இரண்டாம் மூன்றாம் பந்திகளில் போட்டுடைக்கப்பட்டிருப்பதும் இந்த அறிக்கையின் இஸ்திரத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் வேட்டு வைத்திருப்பதை விஷமிகள் கண்டுகொள்ளவில்லை.

இது போலவே வேறொரு அறிக்கையில் மாவிரர் உரை வழமைபோல் வாசிக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழர் விடுதலையை மனதார நேசித்த ஒருவரால் இத்தகைய அறிக்கை எழுதப்பட்டிருந்தால் "வாசிக்கப்படும்" என்ற அந்த சொற்பதம் அங்கு பயன்படுத்தப்பட்டிராது. தேசிய தலைவர் ஆண்டு தோறும் மாவிரர் நாளில் ஈழத்தமிழ் மக்களுக்காக உரை நிகழ்த்தியிருந்தாரே தவிர உரையை வாசித்தார் என்று நாம் என்றுமே குறிப்பிட்டதில்லை.

இது எப்படி நிகழ்கிறது என்பதைச் சற்று ஆராய்ந்தால் எனக்கு ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு திருடன் என்றுமே தான் திருடிய இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்பது தான். தமிழ் தேசியத்தை நேசித்து தமிழ் மக்களின் சுதந்திரத்தில் நம்பிக்கை வைக்காதவர்களால், துரோகிகளாக மாறி எதிரியிடம் சரணாகதி அடைந்தவர்களால், எதிரியின் கையில் பிடிபட்டு அவர்கள் கைப்பொம்மையாக ஆடிக்கொண்டிருப்பவர்களால் தமிழ் மக்களின் புதிய விடிவெள்ளிகள் தாங்கள் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டு நம்பகமான அறிக்கைகளை ஒருபோதும் விடமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது விடுதலைப்புலிகளின் தளபதிகளுக்கு எதிராக தலைமை ச்செயலகத்தால் எழுத்தப்பட்ட ஒரு அறிக்கை...

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒண்றின் விடுதலைப்புலிகளின் அறிக்கை பாணியும் மற்றதில் அது இல்லாது இருப்பதையும் காணலாம்...

media_release_tamil.jpg

புலிகளின் தலைமைச்செயலகம்..தலைமைச்செயலகம் என்கிற பெயரில் அறிக்கைகள் விடுவது கிடையாது நடுவப்பணியகம் என்றுதான் அறிக்கை விடுகிறவர்கள்..இந்த அறிக்கையும் போலியானதுதான் என்கிற முடிவைத்தானே எடுக்கவேண்டியிருக்கு

Edited by sathiri

ராம் வெளியிட்டார் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விடுதலைப்புலிகள் அமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல... போலியான அறிக்கை என்பதனை நாங்கள் சொல்லத்தேவையில்லை. அந்த அறிக்கையின் அமைப்பும் அதன் கருப்பொருளும் அது சொல்லவந்த நோக்கமுமே அதன் போலித்தன்மையை,அதன் உள்நோக்கத்தினை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

நம் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டிய காலகட்டம் இதுவென்பதனை இப்போலிமடலும் உணர்த்தி நிற்கின்றது. அவதானம்....!!!!!!!!!!!!!!!

Edited by பருத்தியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்க்கேன் போர்த்தேங்காய்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராம் வெளியிட்டார் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பொய் என்பதனை நாங்கள் சொல்லத்தேவையில்லை. அந்த அறிக்கையின் அமைப்பும் அதன் கருப்பொருளும் அது சொல்லவந்த நோக்கமுமே அதன் போலித்தன்மையை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

நம் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டிய காலகட்டம் இதுவென்பதனை இப்போலிமடலும் உணர்த்தி நிற்கின்றது. அவதானம்....!!!!!!!!!!!!!!!

யார் விடும் அறிக்கைதான் உண்மையானது என்பதையாவது விரிவாக தெளிவு படுத்துங்களேன் பருத்தியான்.. அதை விட முக்கிய வியடம் பருத்தியான் புல்மோட்டை முகாமில் உள்ள சிலருடன் கதைக்கக் கிடைத்தது அங்கு ஒரு பெண் உங்களிற்கு வேண்டியவர் என்றும் உங்களை உதவும் படியும் கேட்டுகொண்டார்..உங்களிடம் சொல் மறந்து விட்டேன் ..மன்னிக்கவும்..

நாய்க்கேன் போர்த்தேங்காய்??

உருட்டிவிழையாடத்தான்

சாத்திரி ஜயா கேக்கிறேன் என்று கோவிக்க வேண்டாம்.. உண்மையா உங்களுக்கு எத்தினை வயது..

ஏன் கேக்கிறன் என்ரா உப்படியான குப்பைய மின்னஞ்சல் எனக்கும் தான் வாரது.. நான் அதை யாழிழ் கொண்டு போய் அந்த குப்பைய கொட்டனும் என்று ஆசை பட்டது இல்லை...

உங்களுக்கு மண்டைக்குள்ள மூழை இருந்து இருந்தா இந்த குப்பையை இங்கை கொட்டி இருக்க மாட்டிங்கள்.... :wub:

யார் விடும் அறிக்கைதான் உண்மையானது என்பதையாவது விரிவாக தெளிவு படுத்துங்களேன் பருத்தியன்.. அதை விட முக்கிய வியடம் பருத்தியன் புல்மோட்டை முகாமில் உள்ள சிலருடன் கதைக்கக் கிடைத்தது அங்கு ஒரு பெண் உங்களிற்கு வேண்டியவர் என்றும் உங்களை உதவும் படியும் கேட்டுகொண்டார்..உங்களிடம் சொல் மறந்து விட்டேன் ..மன்னிக்கவும்..

சாத்திரி!!!!!!!!!!!!

அங்குள்ள எல்லோருமே தன்மானமுள்ள தமிழர் எல்லோருக்கும் வேண்டியவர்கள்தான். நீங்கள் எப்பிடி?????

சாத்திரி! நீங்கள் எனக்கு எனது உறவினர்களைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தாராளமாக தகவல் அனுப்பலாம் எனது மின்னஞ்சல் முகவரி இதுதான்... குறித்துக்கொள்ளுங்கள்! paruththiyan@gmail.com

நன்றி!

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஜயா கேக்கிறேன் என்று கோவிக்க வேண்டாம்.. உண்மையா உங்களுக்கு எத்தினை வயது..

ஏன் கேக்கிறன் என்ரா உப்படியான குப்பைய மின்னஞ்சல் எனக்கும் தான் வாரது.. நான் அதை யாழிழ் கொண்டு போய் அந்த குப்பைய கொட்டனும் என்று ஆசை பட்டது இல்லை...

உங்களுக்கு மண்டைக்குள்ள மூழை இருந்து இருந்தா இந்த குப்பையை இங்கை கொட்டி இருக்க மாட்டிங்கள்.... :wub:

உங்கள் கேள்வியில் கோபம் வரவில்லை குளப்பம்தான் வருகின்றது 1) ஒரு அறிக்கை குப்பையா இல்லையா என்பதனை படிப்பவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.இது உங்களிற்கு குப்பையாகத் தெரியலாம்..இன்னொருவரிற்கு முக்கியமாகத் தெரியலாம்..அதே போல நீங்கள் இணைக்கும் விடயங்களை குப்பை என்று சொல்ல எனக்கும் உரிமை கிடையாது கருத்தை மட்டும் சொல்லாம்..2) மண்டைக்குள் மூளை இல்லாதவர்கள் என்று இந்த உலகில் எந்த மனிதராவது இருக்கிறார்களா?? அவரவர் சிந்திக்கும் திறன் வேறுபடும்..சிலர் சிந்திப்பதேயில்லை என்பதும் வேறு விடயம் ஆனால் மூளை இலாதஒருவர் என்று யாரையும் சொல்லமுடியாது இறந்தவரிற்கு கூட சத்திர சிகிச்சை முலம் மூளையை அகற்றாவிட்டால் அது அந்த இடத்திலேயே இருக்கும்..நன்றி.. :)

சாத்திரி!!!!!!!!!!!!

அங்குள்ள எல்லோருமே தன்மானமுள்ள தமிழர் எல்லோருக்கும் வேண்டியவர்கள்தான். நீங்கள் எப்பிடி?????

சாத்திரி! நீங்கள் எனக்கு எனது உறவினர்களைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தாராளமாக தகவல் அனுப்பலாம் எனது மின்னஞ்சல் முகவரி இதுதான்... குறித்துக்கொள்ளுங்கள்! paruththiyan@gmail.com

நன்றி!

பருத்தியான் முகாம்களில் உள்ள எல்லோருமே தன்னமானமுள்ளவர்கள்தான் அதனால்தான் முகாம்களில் இன்று வாடுகின்றனர்..எனது உரையாடல் நடந்து இரண்டு வாரமாகின்றது..அதனை உங்கள் வேறு உறவினர்களிடமும் தெரிவித்திருந்தேன்..இன்று உங்களை யாழில் கண்டதும் நினைவிற்கு வந்ததால் இங்கு சொன்னேன் ..அதனை உங்கள் மின்னஞ்சல் முகவரியில்தான் சொல்லவேண்டும் என்று ஏதாவது சட்டம் நீங்கள் வைத்திருந்தால்..அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது..இனி அது எனக்கு தேவையில்லாத விடயம். :)

Edited by sathiri

இப்படி ராம் அறிக்கை , புலிகள் அறிக்கை எல்லாம் உந்த யாழ் இணையம் பார்க்கிற நாலு பேருக்கு தான் தெரியும். மற்ற சனங்கள் தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கினம்.

இணைய செய்தி எல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டம் தான்

நடேசன் அண்ணை புலித்தேவன் அண்ணை தலைவரின் மகன் சாள்ஸ் வரைக்கும் வெள்ளைக்கொடியோடு போய் சரண் அடையவேண்டும் எண்று சொல்லி அனுப்பியது தலைவராக இருந்தால் KP அண்ணையை தனது வெளிவிவகாரங்களுக்கான அரசியல் தலைவராக போட்டதும் தலைவர்தான்... இதே KP அண்ணை தான் சரண் அடைய செண்றவர்கள் பற்றியும் சொன்னார்கள்... KP அண்ணையும் தானாக சரண் அடந்ததாகதான் சொல்கிறார்கள்...

ஆக போர் முடிந்ததின் பின்னர் நடேசன் அண்ணை, புலித்தேவன் அண்ணை, தலைவரின் மகன் வரைக்கும் துரோகிகள் ஆக்கப்படுவதுக்கே சந்தர்ப்பங்கள் ஆகுவதுக்கு சந்தர்ப்பங்கள் இருந்தும் இருக்கின்றன...

அது தவிரவும் இண்று இராணுவ வதை முகாம்களில் வாடும் பல புலிகள்( பாலகுமார் அண்ணா முதல் யோகி அண்ணாவரை) இருக்கிறார்கள்... அவர்களும் தலைமையின் சொல்லின் படியே தற்கொலை செய்து கொள்லாது சரணும் அடைந்து கொண்டனர்.... அவர்களை சரண் அடைய வைப்பதின் மூலம் தலைவர் என்ன நோக்கத்தினை அடைய முனைந்தாரோ அதை ஆதரிக்க வேண்டியதும் நம் கடமை...

ஒரு வேளை இராம் அண்ணா கூட அதை செய்து இருந்தாலும் தலைவரின் சொல்லாகவே நான் பாக்கிறேன்...

நேர்மையான வரிகள்.........

இப்படி ராம் அறிக்கை , புலிகள் அறிக்கை எல்லாம் உந்த யாழ் இணையம் பார்க்கிற நாலு பேருக்கு தான் தெரியும். மற்ற சனங்கள் தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கினம்.

இணைய செய்தி எல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டம் தான்

சனங்கள் அப்படி இருக்க வேண்டும் என்பதையே, இங்கு வேலை, வெட்டி அற்று சனத்தின் காசில் வாழ்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவர்கள் இன்று சிறிலங்கா அரசுக்கு எவ்வாறெல்லாம் துணை போகிறார்கள் என்பது காலம் சொல்லும். இங்கு புலி பிரதிநிதிகளில் பலர் ஏற்கனவே கொழும்பு சென்று மகிந்தவுடன் பேச்சு வார்த்தை நடத்ததொடங்கி விட்டார்களாம்.

ஒரு புறம் மக்களால் அள்ளி வழங்கப்பட்டவைகளை அங்குள்ள போராளிகளுக்கு செல்வதை தடுத்தல், மறுபுறம் சிங்களவனின் கால்களில் விழுதலாக நிற்கிறார்கள்.

சரி அங்கு ராமும் மிஞ்சவில்லை, நகுலனும் மிஞ்சவில்லை என்றால் இனி புலி என்று ஒன்றுமே அங்கில்லை. அப்ப இவர்களின் செயற்பாடுகள் ஏன்? புலத்தில் தமிழீழம் அமைக்கப் போகிறார்களா? இல்லை வாழ்க்கையை இப்படியே சுபமாக ஓட்ட தமிழீழ தேசிய விடுதலை போராட்டம் இவர்களுக்கு தேவைப்படுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணை புலித்தேவன் அண்ணை தலைவரின் மகன் சாள்ஸ் வரைக்கும் வெள்ளைக்கொடியோடு போய் சரண் அடையவேண்டும் எண்று சொல்லி அனுப்பியது தலைவராக இருந்தால் KP அண்ணையை தனது வெளிவிவகாரங்களுக்கான அரசியல் தலைவராக போட்டதும் தலைவர்தான்... இதே KP அண்ணை தான் சரண் அடைய செண்றவர்கள் பற்றியும் சொன்னார்கள்... KP அண்ணையும் தானாக சரண் அடந்ததாகதான் சொல்கிறார்கள்...

ஆக போர் முடிந்ததின் பின்னர் நடேசன் அண்ணை, புலித்தேவன் அண்ணை, தலைவரின் மகன் வரைக்கும் துரோகிகள் ஆக்கப்படுவதுக்கே சந்தர்ப்பங்கள் ஆகுவதுக்கு சந்தர்ப்பங்கள் இருந்தும் இருக்கின்றன...

அது தவிரவும் இண்று இராணுவ வதை முகாம்களில் வாடும் பல புலிகள்( பாலகுமார் அண்ணா முதல் யோகி அண்ணாவரை) இருக்கிறார்கள்... அவர்களும் தலைமையின் சொல்லின் படியே தற்கொலை செய்து கொள்லாது சரணும் அடைந்து கொண்டனர்.... அவர்களை சரண் அடைய வைப்பதின் மூலம் தலைவர் என்ன நோக்கத்தினை அடைய முனைந்தாரோ அதை ஆதரிக்க வேண்டியதும் நம் கடமை... ஒரு வேளை இராம் அண்ணா கூட அதை செய்து இருந்தாலும் தலைவரின் சொல்லாகவே நான் பாக்கிறேன்...

நன்றி

ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களை போராடும்படிதான் தலைவர் சொல்லியுள்ளார்

உங்கள் அதாவது இளைஞர்கள் கையில்தான் எல்லாம் உள்ளதாகவும்சொல்லியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து யாரும் என்னைக் குறைவிளங்கவேண்டாம். இந்த அறிக்கை என்னைப்பொறுத்தளவில் உண்மையான அறிக்கை இலலை. இதை எழுதிய மொழிநடையில் ஒட்டுக்குழுவின் வாசனை (நாத்தம் எனத்தான் கூறவேண்டும்) வீசுகிறது. புலிகள் தமக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான சொத்துக்கள் உள்ளது எனத் தம்து அறிக்கைமூலமே கூறுவது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோன்றது. தமிழில் ஒரு சொற்றொடர் இருக்கின்றது "உடையது விளம்பேல்" இது யாருக்கத் தெரியுமோ, புலிகளுக்கு நன்றாகவே தெரியும். எதிர்பார்த்திருங்கள் இதேபோன்று மாவீரர்தின உரையும் வெளிவரும்.

என் காதுகளுக்கு எட்டிய செய்திகளின் படி இவை இரண்டுமே போலியானவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதியாக ராம் இருந்தபோது வெளியிட்ட அறிக்கை:

http://ltteir.org/ta/?p=132

கையொப்பத்தையும் உற்றுப்பார்கவேண்டும்.

ராம் தற்போது தங்கி இருப்பது கருணாவோடு, அப்ப நிலம யை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இது குட்டிக்கும் புட்டிக்குமான மடல். :wub:

அப்பு சித்தா, நான் சாத்திரி இணைத்த ராமின் அறிக்கை உண்மையானதா பொய்யானதா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் எங்கேயோ வாசித்து விட்டு தளபதி ராம் கருணாவுடன் சேர்ந்து இயங்குவதாக எப்படி நீர் சொல்லுவீர்?. அதை மட்டும் எப்படி நம்புகிறீர்?

***

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.