Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவித்தல்: யாழ் இணையத்தில் ஏற்பட்ட தடங்கல்

Featured Replies

யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம்,

நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும்.

மின்கிருமி எதிர்ப்பு செயலிகளை நிறுவாத யாழ் இணைய வாசகர்களினது கணினிகளும் சிலவேளைகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம். எனவே, உங்கள் கணினிகளை ஒருமுறை சோதனையிடவும். மின்கிருமி எதிர்ப்பு செயலிகளை நிறுவி இயங்கவிடவும். நேற்றிரவிலிருந்து/இன்று காலையிலிருந்து யாழ் இணைய வாசகர்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசெளகரியங்களுக்கும் யாழ் இணைய நிர்வாகம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்கள் நேரத்திற்கு

எங்களையும் காக்க முயலும் தங்கள் முயற்சிக்கு தலைசாய்க்கின்றேன்

எஞ்சியுள்ள புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில சிறீ லங்கா அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிதோ? யாழுக்கைதான் மிச்ச ஆக்கள் பதுங்கி இருக்கிறீனம் எண்டு நினைச்சாங்களோ? இல்லாட்டிக்கு யாழ் வலைத்தளத்தை யாழ்ப்பாணம் என்று நினைச்சாங்களோ என்னமோ, :)

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே எனக்கும் ஒண்டும் விளங்கவில்லை. :) :ஊரில் தான் அடிக்கிறாங்கள் ,உதைக்கிறாங்கள்,கொல்லுறாங்கள் எண்டு புலம் பெயர்ந்தோம்.கடவுளே இங்கையுமா? :lol: மோகன் அண்ணா இருக்கறப்போ கூட இப்படி ஒரு தாக்குதல் நடக்க வில்லை.என்ட கணணியைத் தாக்கினால் இளைஞன் புதுக் கணணி வாங்கித் தருவார். :o அப்படி எல்லோ இளைஞன்?நத்தார்,புதுவருடம்,பொங்கல் எல்லாம் அடுத்து....அடுத்து வருவதால் யாழ் கழ நேயர்களுக்கு ஒரு பரிசு குடுக்கனும் எல்லோ இளைஞன்..நான் சும்மா.சும்மா பகிடிக்கு. :(:o சரி.சரி யாழ் கழ நேயர்களை ஓட வைக்காமல் இருந்தால் சரி.நன்றி. :D

தகவலுக்கு நன்றி இளைஞன்... வழக்கமாக ஏதேனும் இணையம் வைரஸ் மற்றும் Trojan போன்றவற்றை பரப்பினால் என் anti virus, spy ware மற்றும் Microsoft Essentials ஆகியன உடனே காட்டி கொடுத்து எச்சரிக்கை பண்ணும். ஆனால் நேற்று எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை. Content error தான் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனின் விடா முயற்சிக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

.

மின் கிருமியால் யாழ் களத்துக்கு ஏற்பட்ட தாக்குதலை விரைவாக முறியடித்து ,

யாழ் களத்தை வழமை நிலைக்கு கொண்டு வந்த இளைஞனுக்கு நன்றியும் , பாராட்டுக்களும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முறியடிப்பு சமருக்கு வாழ்த்துக்கள். :D:D:D

விசேட செய்திகள்.

யாழுக்கை கிபீர் தாக்கியதில் யாழின் இலச்சினை சேதம்... :D

  • தொடங்கியவர்

விசேட செய்திகள்.

யாழுக்கை கிபீர் தாக்கியதில் யாழின் இலச்சினை சேதம்... :D

தாக்குதலுக்கு உள்ளாகிக் காணாமல் போயிருந்த யாழ் இணைய குறியீட்டுச் சின்னமும் மீட்கப்பட்டுவிட்டது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாங்க நேற்றுக்காலை நான் வரவும் யாழ் இணையம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காண்பித்தது.

முறியடிப்பு சமருக்கு வாழ்த்துக்கள். :D:D:lol:

:D

யாழை மீட்டுத்தந்த இளைஞனுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்...! smiley-signs107.gif

  • கருத்துக்கள உறவுகள்

முறியடிப்பு சமருக்கு வாழ்த்துக்கள். :D:D:lol:

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் எதுக்கும் இறப்பர் துப்பாக்கியாவது வாங்கி யாழ் கருத்துகள மூலையில் மாட்டி விடுங்கள் அப்பதான் சிங்கள தமிழர்கள் பயப்படுவார்கள் :D:D

முயற்ச்சி செய்து மீட்டமைக்கு வாழ்த்துக்கள் இளைஞன் :D

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனின் விடா முயற்சிக்கு நன்றிகள் பல

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனுக்கு நன்றிகள்

எஞ்சியுள்ள புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில சிறீ லங்கா அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிதோ? யாழுக்கைதான் மிச்ச ஆக்கள் பதுங்கி இருக்கிறீனம் எண்டு நினைச்சாங்களோ? இல்லாட்டிக்கு யாழ் வலைத்தளத்தை யாழ்ப்பாணம் என்று நினைச்சாங்களோ என்னமோ, :D

இணையத்திற்கு இந்த தாக்குதல் என்றால் வாசகர் எங்களுக்கு எப்படி தாக்குவாங்கள் என்று நினைக்கும் பொழுது பயமாக இருக்குது.யாழ் பக்கம் இனி வராமல் இருப்பதுதான் உடம்புக்கு நல்லம் போல கிடக்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் திறமைசாலிகள் யூதர்களுக்கு ஒத்த புத்திசாலிகள் என்று காட்ட ஒரு மாற்றுக்கருத்து குழுவாவது இருக்கனும். அப்பதான் யாழ் களத்துக்குப் பெருமை.

அந்த வகையில்.. இந்தத் தாக்குதல் வெளியில் இருந்து நடத்தப்படவில்லை என்றும் யாழ் களத்துக்குள்ளேயே பெரும் பிளவு ஏற்பட்டு அந்தப் பிரிந்து சென்ற குழுதான் தற்போதை நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக ஒரு தரப்பும்.. இன்னொரு மாற்றுக்கருத்துக் குழுவினரோ.. தற்போதைய யாழ் கள நிர்வாகமே சரிந்து செல்லும் யாழில் செல்வாக்கை நிலை நிறுத்த இதை திட்டமிட்டுச் செய்துவிட்டு தங்கள் "ஸ்ரண்டை" உயர்த்திக் காட்ட முனைவதாகவும் ஏபி ஏஎவ்பி ரொயிட்டர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களின் கையெழுத்துப்பட எழுதி இருக்கும் தூசி படிந்த அறிக்கைகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

இது உண்மையோ.. என்று விளக்கம் கேட்காட்டி நான் எப்படி நடுநிலையான.. சனநாயகத் தமிழன் என்று காட்டிக்கொள்ளுறது..! :D :D

எது எப்படியோ யாழை துரித கதியில் எதிர்ப்பு நடவடிக்கை எடுத்து மீட்டமை பாராட்டுக்குரியது. :D

Edited by nedukkalapoovan

இணையத்திற்கு இந்த தாக்குதல் என்றால் வாசகர் எங்களுக்கு எப்படி தாக்குவாங்கள் என்று நினைக்கும் பொழுது பயமாக இருக்குது.

என்ன புத்தன் உங்களை வாசகர் என்று சொல்லி பின்வாங்கிக்கொள்ளுறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் திறமைசாலிகள் யூதர்களுக்கு ஒத்த புத்திசாலிகள் என்று காட்ட ஒரு மாற்றுக்கருத்து குழுவாவது இருக்கனும். அப்பதான் யாழ் களத்துக்குப் பெருமை.

அந்த வகையில்.. இந்தத் தாக்குதல் வெளியில் இருந்து நடத்தப்படவில்லை என்றும் யாழ் களத்துக்குள்ளேயே பெரும் பிளவு ஏற்பட்டு அந்தப் பிரிந்து சென்ற குழுதான் தற்போதை நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக ஒரு தரப்பும்.. இன்னொரு மாற்றுக்கருத்துக் குழுவினரோ.. தற்போதைய யாழ் கள நிர்வாகமே சரிந்து செல்லும் யாழில் செல்வாக்கை நிலை நிறுத்த இதை திட்டமிட்டுச் செய்துவிட்டு தங்கள் "ஸ்ரண்டை" உயர்த்திக் காட்ட முனைவதாகவும் ஏபி ஏஎவ்பி ரொயிட்டர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களின் கையெழுத்துப்பட எழுதி இருக்கும் தூசி படிந்த அறிக்கைகள் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

இது உண்மையோ.. என்று விளக்கம் கேட்காட்டி நான் எப்படி நடுநிலையான.. சனநாயகத் தமிழன் என்று காட்டிக்கொள்ளுறது..! :lol::D

எது எப்படியோ யாழை துரித கதியில் எதிர்ப்பு நடவடிக்கை எடுத்து மீட்டமை பாராட்டுக்குரியது. :D

நெடுக்ஸ் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..

இதுக்காகவே தனிய phd வாங்கியிருப்பாய்ங்களோ :D

  • தொடங்கியவர்

தாக்குதலுக்குள்ளான யாழ் இணையத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தனது நேரத்தை அதிகம் செலவளித்த/பின்னால் நின்று உழைத்த உறவுக்கு உங்கள் நன்றியும் - பாராட்டும் - வாழ்த்தும் போய்ச்சேரும். :lol:

மீண்டும் இன்று அதே message வருகின்றது (FireFox இல்)

Content Encoding Error

The page you are trying to view cannot be shown because it uses an invalid or unsupported form of compression.

இது ஓர் நல்ல அறிகுறி இல்லை. யாழ் வலைத்தளம் எந்தநேரமும் தாக்குதலுக்கு உள்ளாகி முடங்கக்கூடிய நிலையில இருக்கிறதுபோல தெரியுது. இதை எப்படி செய்யுறீனம் என்று தெரிய இல்லை. ஆனால்.. எப்படி செய்யப்படுகிது என்று கண்டறிந்து அதற்கான வழிகளை தடை செய்வது நல்லம் என்று நினைக்கிறன். உதாரணமாக.. தனிமடலுக்கால தொற்று வருகிது என்றால் தனிமடல் பாவனையை முடக்கலாம். இளைஞனுக்குத்தான் தெரியும் எதுக்கால என்ன நடக்கிது என்று.

யாழின் அதே கருத்துக்கள பயன்பாட்டு அமைப்பினை பாவித்து நான் எனது பதிவுகளை விரைவில் தனியாக ஓர் தளத்தில் நகல் எடுத்து வைக்கலாம் என்று இருக்கின்றேன்.

யாழ் கருத்துக்களத்திண்ட Back up கோப்பு அமைப்பை இன்னோர் தனித்தளத்தில் போட்டு வைத்தாலும் நல்லது என்று நினைக்கிறன். யாழ் தடங்கல் அடையும்நேரங்களில் குறிப்பிட்ட Back up தளத்திற்கு Trafficஐ forward செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.