Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானாவைப் பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : சிதம்பரம்

Featured Replies

வீரகேசரி இணையம் 10/12/2009 4:50:25 PM

தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில்,

"நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. இதனால் உறுதியான பதிலைக் கூற முடியவில்லை.

நேற்று நள்ளிரவில்தான் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன. ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாத நிலையில்தான் நள்ளிரவில் தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட நேர்ந்தது. வேறு வழியில்லை அரசுக்கு.

சந்திரசேகர ராவின் உடல்நிலை மோசமடைந்து வந்ததால் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் உடனடியாக அந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

மேலும், ஹைதராபாத்திலும், ஆந்திர மாநிலத்திலும் சட்டம் ஒழுங்குக்குப் பெரும் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவுமே உடனடியாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசியம் ஏற்பட்டதால்தான் இரவு நேரத்தில் இந்த முடிவை நாங்கள் அறிவிக்க நேரிட்டது.

சந்திரசேகர ராவ் என்னுடன் பேசினார். நன்றி கூறிக் கொண்டார். இந்த சபை தன் மீது கொண்ட அன்புக்காகவும், காட்டிய கவலைக்காகவும் நன்றி கூறினார்" என்றார்.

இந்நிலையில் வெங்கையா நாயுடு எழுந்து மீண்டும் ஆவேசமாகப் பேசினார். அவருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் எழுந்து பேசினர்.

இதனால் சுமார் ஐந்து நிமிடம் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார்.

நன்றி : வீரகேசரி இணையம்

  • தொடங்கியவர்

தெலுங்கானா தனி மாநிலம் : மத்திய அரசு அறிவிப்பு; போராட்டங்கள் வெடிப்பு!

வீரகேசரி இணையம் 12/10/2009 4:21:37 PM

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு வெடித்துள்ளது. ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

விஜயவாடா எம்.பி. லகடபதி ராஜகோபால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், 20 எம்.எல்.ஏக்களும் விலகுவதாக வெளியாகியுள்ள தகவல்களால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனால் ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜகோபால், தனது எம்.பி. பதவியை விட்டு விலகுவதாக கூறி இன்று லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் டில்லியிலிருந்து அவர் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டார். ஒருங்கிணைந்த ஆந்திராவைக் காக்க, தான் தீவிரமாகப் போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மேலும் பல காங்கிரஸ் எம்.பிக்களும் விலகுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவை அமைக்கக் கூடாது என்று கோரி இவர்கள் போராட்டத்தி்ல் குதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்த எம்.பிக்கள் இன்று கூடி போராட்டம் குறித்து திட்டமிடவுள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 20 பேரும் பதவி விலகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவை எதிர்த்து போராட்டம்

இந்நிலையில் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன. சந்திரசேகர ராவின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா அமையக் கூடாது, அப்படியே அமைந்தாலும் ஹைதராபாத்தை அதனுடன் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி, கடப்பா மாவட்டம் பொதட்டூரில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியை நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜுலு ரெட்டி கூறும்போது,

"ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் பிரமாண்டமான நகரமாக உருவெடுத்துள்ள ஹைதராபாத்தை நாங்கள் தெலுங்கானாவில் சேர்க்க விட மாட்டோம். ஹைதராபாத் எங்களுக்கே சொந்தம். அதை தெலுங்கானாகாரர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம்" என்றார்.

பேரணியில் வந்த மாணவர்கள் சிலர் ஆவேசமாக சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராயலசீமா மாநிலம் அமையுங்கள்...

மாணவர்கள் சங்க தலைவர் கிருஷ்ணய்யா கூறும்போது,

"சித்தூர், நெல்லூர், கர்னூல், அனந்தபுரம், கடப்பா ஆகிய மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து ராயல்சீமா என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது" என்றார்.

குண்டூரில் மக்கள் கூடி, சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் தெலுங்கு மொழி பேசும் மக்களை பிளவு படுத்தும் சந்திரசேகரராவை இனி ஆந்திராவுக்குள் நுழைய விடமாட்டோம் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்திலும் தெலுங்கானா மாநிலத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள ஏ.யு. கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"தெலுங்கானாவில் ஹைதராபாத்தைச் சேர்த்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றும் கோஷமிட்டனர்.

அதேபோன்று, ஸ்ரீகாகுளம், பிரகாசம் மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விஜயவாடா நகரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் வீதியில் திரண்டு சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர்.

தெலுங்கானா மாநிலம் அமைக்க உறுதி கூறப் போய் தற்போது புதிதாக வெடித்துள்ள எதிர்ப்புப் போராட்டத்தால் ஆந்திர மாநில அரசு திணறிப் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சந்திரசேகர ராவின் உண்ணாவிரதம் முடிவு

அதே வேளை, தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சந்திரசேகர ராவ் கைவிட்டுள்ளார். தெலுங்கானா அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது, மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி இறுதிப் போராட்டமாக அறிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராவ். இதையடுத்து தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்பாகியது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவர் உண்ணாவிரதத்தை விடவில்லை. கடந்த 11 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

நன்றி : வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் புரிஞ்சு போக உரிமை இருக்கு.. தமிழனுக்கு மட்டும் எந்த உரிமையும் இல்லை. அவன் மட்டும் வேண்டாப் பொண்டாட்டி என்றாலும் கட்டிக்கிட்டு கஸ்டப்படனும்..! இது என்ன நியாயமோ..! இதுதான் இந்த உலகின் ஜனநாயகம். மண்ணாங்கட்டி. :wub::(:)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் புரிஞ்சு போக உரிமை இருக்கு.. தமிழனுக்கு மட்டும் எந்த உரிமையும் இல்லை. அவன் மட்டும் வேண்டாப் பொண்டாட்டி என்றாலும் கட்டிக்கிட்டு கஸ்டப்படனும்..! இது என்ன நியாயமோ..! இதுதான் இந்த உலகின் ஜனநாயகம். மண்ணாங்கட்டி. :wub::(:)

இது ஒன்றும் சனநாயக மேதாவித்தனம் கொண்ட நகர்வல்ல. சுயநல் கொண்ட நகர்வேயன்றி வேறில்லை. இங்கும் தமது நலன் பேணப்பட்டிருக்கிறது. அதாவது கிந்தியர்களது. ஆனால் தெலுங்கானா பிரியலாம் எனில் தமிழீழம் மட்டும் பிரிய முடியாதோ?

:wub:இங்கே தெலுங்கானா தனி மாநிலமாக ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதே தவிர தெலுங்கானா தனி நாடாக அறிவிக்கப்படவில்லை. இதையும் எமது போராட்டத்தையும் எப்படி ஒப்பிட முடியும்?? வேண்டுமானால் முன்பு கிளிநொச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை இதனுடன் ஒப்பிட முடியும். :(:)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை வசம்பு?

உங்களிடம் நேரடியாக ஒரு கேள்வி?

ஈழத்தமிழனுக்கு தனிநாடு வேண்டுமா?

அல்லது

இல்லையா?

இல்லையேல்

புலிவாசனை இல்லாமல்

தனிநாடு வேண்டுமா?

அண்ணை வசம்பு?

உங்களிடம் நேரடியாக ஒரு கேள்வி?

ஈழத்தமிழனுக்கு தனிநாடு வேண்டுமா?

அல்லது

இல்லையா?

இல்லையேல்

புலிவாசனை இல்லாமல்

தனிநாடு வேண்டுமா?

கு.சா,

உந்தக் கேள்விக்கு நானும் எத்தனையோ தடவை பதிலளித்து விட்டேன். நீங்களும் இங்கு சிலர் படம் காட்டுவது போல புலி வாசனை, பூனை வாசனை, எலி வாசனை என்று படம் காட்டுகின்றீர்களா?? வேண்டுமானல் இது சம்மந்தமாக புதிதாக ஒரு திரி தொடங்குங்கள். திரும்பவும் அங்கு வந்து பதில் அளிக்கின்றேன். இங்கு அதைப் போட்டுக் குளப்ப வேண்டாம். அதற்கு முதல் நீங்களும் தெலுங்கானா தனி மாநிலமானதிற்கும் எமது போராட்டத்திற்கும் என்ன சம்மந்தமென்பதை இங்கு விளக்கமாகக் கூறுங்களேன். :wub::(

எங்கட சைட்டுக்குள்ள நாங்கள் என்னத்தையும் விளையாடுவம் நீங்கள் அதுக்க ஏன் வாறீங்கள்?

தமிழன் செத்தாலென்ன இருந்தாலென்ன நாம முசுப்பாத்தியா நாலு விளையாட்டு விளையாடுவம் என்றால் குழப்பப்பாகின்றீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா,

உந்தக் கேள்விக்கு நானும் எத்தனையோ தடவை பதிலளித்து விட்டேன். நீங்களும் இங்கு சிலர் படம் காட்டுவது போல புலி வாசனை, பூனை வாசனை, எலி வாசனை என்று படம் காட்டுகின்றீர்களா?? வேண்டுமானல் இது சம்மந்தமாக புதிதாக ஒரு திரி தொடங்குங்கள். திரும்பவும் அங்கு வந்து பதில் அளிக்கின்றேன். இங்கு அதைப் போட்டுக் குளப்ப வேண்டாம். அதற்கு முதல் நீங்களும் தெலுங்கானா தனி மாநிலமானதிற்கும் எமது போராட்டத்திற்கும் என்ன சம்மந்தமென்பதை இங்கு விளக்கமாகக் கூறுங்களேன். :wub::(

ஆந்திரமாநிலத்தின் ஆட்சிக்குள் இனியும் சிக்குண்டு இருக்க முடியாது. எமக்கு தனிமானில உரிமை வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்றுகொள்ளபட்டு தனிமானிலமாக பிரிக்கபட்டுள்ளது.

(சிங்கள் இனவாத அரசின் ஆட்சிக்குள் நாம் அடிமைபட முடியாது தமிழர்களின் சுயநிர்ணயம் அங்கிகரிக்கபடவேண்டும்) இது இந்தியாவால் நிராகரிகப்பட்டு வெறும் மனநோயாளிகள் போல் இந்தியாவிற்கும் எந்தவகையிலும் பயன் கொடுக்காத விடயங்களை முன்நின்று செய்கின்றது.

"உரிமை கொடுப்பு" "உரிமை மறுப்பு"

இதில் என்ன ஒற்றுமை என்றால்? உண்மைதான் அங்கு யாழ்பாணமும் திருகோணமலையும் இல்லை அதுபோல் இங்கு தெலுங்கு பேசும் மக்களும் இல்லை. இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? ஒற்றுமையில்லைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

:wub:இங்கே தெலுங்கானா தனி மாநிலமாக ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதே தவிர தெலுங்கானா தனி நாடாக அறிவிக்கப்படவில்லை. இதையும் எமது போராட்டத்தையும் எப்படி ஒப்பிட முடியும்?? வேண்டுமானால் முன்பு கிளிநொச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை இதனுடன் ஒப்பிட முடியும். :(:D

வசம்பண்ண நீங்கள் இந்திய மாநிலங்கள் இலங்கையின் மாவட்ட அதிகாரமட்டமுள்ள அலகுகள் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..??!

அப்படியாயின் 1987 இல் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபையை (இந்திய மாநிலமே இலங்கையின் மாவட்டம் என்றால் இலங்கையின் மாகாணம் இந்திய பஞ்சாயத்துச் சபைகளுக்குச் சமன்) இந்தியா ஸ்தாபித்தது தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கு எந்த வகையலும் ஒத்திசைவற்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??

என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. அதாவது பல மாநிலங்கள் அவற்றுக்கென்றான பல தரப்பட்ட (ஆனால் சுயாட்சிக்குப் போதுமான அளவில் இல்லாத) அதிகாரங்களைக் கொண்டவை. அந்த மாநிலங்களுக்குள் மாவட்டங்கள்.. மற்றும் உள்ளூராட்சி.. மாநகராட்சி பஞ்சாயத்துச் சபைகள் என்று பல அலகுகள் இருக்கின்றன.

இந்திய மாநிலங்கள் பல மொழிவாரி மாநிலங்கள். குறித்த மொழி பேசும் மக்களின் நலன் உரிமைகள் தொடர்பில் அவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலமும் அப்படிப்பட்ட ஒன்றே. தெலுங்கு பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாநிலம். ஒரே மொழி கலாசார பண்பாட்டு விழுமியப் பின்னணி கொண்ட மக்கள் பிரிந்து சென்று தனி மாநிலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றால்.. இலங்கையில் 60 வருடகாலமாக இனபாகுபாட்டால் அவதிப்படும் ஒரு தனி இன மக்கள் ஏன் பிரிந்து சென்று தமக்கான சுயாட்சியுள்ள மாநிலத்தையோ அல்லது நாட்டையோ அமைக்க முடியாது..??! அதை ஏன் இந்தியா ஆயுத ரீதியில் தடுத்து நிறுத்த வேண்டும்..??!

ஆந்திராவில் வாழ்பவர்கள் உண்ணாவிரதம் இருந்தால் அது உயிர். இதையே காரணமாகக் கொண்டு இந்திய அதிகாரிகளிடம் தமது பாதுகாப்பை அளித்துவிட்டு 1987 இல் தமிழ் மக்கள் இருந்த உண்ணாவிரதங்கள்.. எவ்வாறு அணுகப்பட்டன.. முடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா ஈழத்தமிழர்களை எந்த வகையில் கையாண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகிறது.

இதன் பின்னும் இந்தியா எமது அரசியல் உரிமை மீட்சிக்காக உதவும் என்றும் நம்பும்.. அதற்காக வாதாடும் தரப்புக்கள்.. என்ன செய்யப் போகின்றன..???!

கடும் போரின் போது கூட இலங்கையின் ஒற்றுமை பற்றி பேசி வந்த சிதம்பரம்.. ஆந்திராவின் ஒற்றுமையை கலைப்பது எப்படி நியாயமாகும்..??! ஆந்திரா ஏலவே ஒரு மொழிவாரி மாநிலமாகத் திகழ்கிறது. அப்படி இருந்தும் அதனை இரு துண்டாக்குவதன்.. நோக்கம் தேவை என்ன..???! அதற்கு ஏன் சோனியா உதவி புரிகிறார். ஈழத்தில் 60 ஆண்டுகால இனப்பாகுபாட்டோடு வாழும் தமிழர்களை ஒற்றுமையாக வாழ் என்று இராணுவ இயந்திரத்தை ஏவி தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிராகரிக்க விளையும் இந்தியா.. அதையேன் ஆந்திராவில் தெலுக்கானாவில் செய்யவில்லை.

இது கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நிலப்பரப்பு அளவைக் கருத்தில் கொண்டு நிர்வாக நோக்கத்திற்காக பிரிக்கப்படுவது போன்றதல்ல.. வசம்பண்ணன்.அது உங்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும்.. இந்த பிரிப்பை ஈழத்தின் வடக்குக்கிழக்கு பிராந்தியங்களின் பிரிப்போடு இணைப்பதை நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் அழகிய இலங்கையை கட்டி எழுப்ப இன ஐக்கியத்தை வளர்த்தெடுக்க பாடுபடும் தொண்டர்கள் முரளிதரன்.. டக்கிளஸ் தேவானந்தா.. தேசம்.. போன்றோரின் வரிசையின் உங்களை இன்னும் இன்னும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் போல.

ஐரோப்பாவில் பல நாடுகள்.. பல இனக்குழுமங்கள். இருந்தும் ஐரோப்பா ஒன்றியமாக திகழ்கிறது. சிறீலங்காவிலும் தமிழர்கள் பிரிந்து தனிநாடு அமைப்போம். அதன் பின்னர் சிங்கள நாட்டோடு ஒன்றியம் அமைத்து.. அழகிய இலங்கைத் தீவை பராமரிக்கலாம்... வசம்பு அண்ணா. அப்படி ஒரு வழி இருக்குது. அதுதான் இரு இனங்களின் இருப்புக்கும் உரிமைக்கும் பாதுகாப்பளிக்கும் என்று நாங்கள் திடமாகக் கருதுகின்றோம்.

60 ஆண்டுகளாக இனப்பாகுபாட்டோடு வாழும் இரு இனங்களிடையே இன ஐக்கியம் என்பது அசாத்தியமானது. ஐக்கிய சிறீலங்கா என்பதும் அசாத்தியமானது. இதுவே கள யதார்த்தம். இதை இராணுவ இயந்திரத்தால் சாத்தியமாக்கலாம் என்பது பகற்கனவு.

ஒரு குட்டி நாட்டுக்கு இந்தளவு பெரிய படை எவ்வளவு பெரிய சுமை என்பதை சிங்களம் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை..! அப்போது ஐக்கிய சிறீலங்காவிற்காக தமிழர்களை பந்தாடும் முள்ளமாரிகள் முடிச்சவிக்கிகள்.. திருடிய மூட்டைகளோடு மேற்குநாடுகளுக்கு ஓடி வருவதையும் காண முடியும்.

முரளிதரனைப் பொறுத்தவரை அவனின் குடும்பம் ஐரோப்பாவில் வசதியாக இருக்கிறது. அவன் அங்கிருந்து கொண்டு நிலங்களையும் மக்களையும் கூறுபோட்டு சிங்களவனோடு பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறான். அவனின் பிள்ளைகள் ஐரோப்பாவில் வசதியாக வாழ.. அவன் மாவீரப்பிள்ளைகளின் கல்லறைகளைக் கூட இடித்து நொருக்கலாம் என்கிறான். தெலுங்கானா போனாலும் ஐதிராபாட் போகக் கூடாது என்கிறவர்கள் மத்தியில் ஒரு அமைச்சுப் பதவிக்காக மண்ணுக்காக உயிரை விட்ட மாவீரர்களைக் கூட மண்ணோடு மண்ணாக நினைக்கும் இந்த மனிதத் தன்மையற்ற ஜந்துகள் எங்கே..??! :):D

Edited by nedukkalapoovan

அண்ணே அப்படியும் ஒப்பிட முடியாது,

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில சுயாட்சி என்ற அடிப்படையில பார்த்தால் வடகிழக்கு மாநிலாத்தை வடக்கு,கிழக்கு என்று பிரித்ததுடன் ஒப்பிடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

வ(சம்)பர் அப்ப பாகிஸ்தானைப் பிரிச்சதோட ஒப்பிட்டுப்பார்க்கலாம்தானே. பஙகாளதேஸ் தனிநாடாகத்தானே பிரிந்தது.வடக்கில் ஒருநியாயம் தெற்கில் ஒருநியாயமா?ஏதோ இந்தியா ஒரு நியாயமான நாடு என்று வக்காலத்து வாங்கும் உங்களுக்கு இதுவெல்லாம் விளங்காத மாதிரி நடிக்கத்தான் முடியும்.இப்ப என் கேள்வி காஸ்மீரைப் பிரிக்கலாமா கூடாதா?வசம்பர் மடடும் விடையளிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தேசம் நாசமாய் போக்க . :wub::wub: தன் வினை தன்னை சுடும் :):D

ம்ம்ம்... 60 வருசமா. இலங்கையில் பண்ண முடியாததை ஒரு கிழமை உண்ணாவிரதத்தோட முடிச்சுட்டாங்கையா...

எனக்கு என்னவோ. இலங்கை இருக்கிற இடம் தான் பிரச்சனை... அதை அப்ப்டியே தூக்கி தெலுங்கானாவுக்கு பக்கத்தில வைச்சிட்டால் என்ன...

யாரவது முடியுமோ அப்ப்டியே தூக்கி கொண்டு போக..... :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வ(சம்)பர் அப்ப பாகிஸ்தானைப் பிரிச்சதோட ஒப்பிட்டுப்பார்க்கலாம்தானே. பஙகாளதேஸ் தனிநாடாகத்தானே பிரிந்தது.வடக்கில் ஒருநியாயம் தெற்கில் ஒருநியாயமா?ஏதோ இந்தியா ஒரு நியாயமான நாடு என்று வக்காலத்து வாங்கும் உங்களுக்கு இதுவெல்லாம் விளங்காத மாதிரி நடிக்கத்தான் முடியும்.இப்ப என் கேள்வி காஸ்மீரைப் பிரிக்கலாமா கூடாதா?வசம்பர் மடடும் விடையளிக்கவும்.

புலவர், இடைக்குள்ள புகுந்து பதில் தாறதுக்கு மன்னிக்கவும், வசம்பர் இனி வரமாட்டார்.ஏதாவது சத்திர சிகிச்சை பிறகு ஒய்வு எண்டு ஒளிச்சிருந்து போட்டு கேள்விய நீங்க மறந்த பிறகு எங்கையாவது இந்தியா சிறி லங்காவுக்கு வக்காளத்து வாங்க திரும்பவும் வருவார்! :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், இடைக்குள்ள புகுந்து பதில் தாறதுக்கு மன்னிக்கவும், வசம்பர் இனி வரமாட்டார்.ஏதாவது சத்திர சிகிச்சை பிறகு ஒய்வு எண்டு ஒளிச்சிருந்து போட்டு கேள்விய நீங்க மறந்த பிறகு எங்கையாவது இந்தியா சிறி லங்காவுக்கு வக்காளத்து வாங்க திரும்பவும் வருவார்! :wub::wub:

நாகரீகமான கருத்தாளர்களை நீங்களும் புரிந்து வைத்துள்ளீர்கள்!

எவ்வளவுதான் முயன்றாலும்............. இந்த கோதரிவிழுந்த நாகரீகம் எனக்கு புரியமாட்டேன் என்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நாகரீகமான கருத்தாளர்களை நீங்களும் புரிந்து வைத்துள்ளீர்கள்!

எவ்வளவுதான் முயன்றாலும்............. இந்த கோதரிவிழுந்த நாகரீகம் எனக்கு புரியமாட்டேன் என்கின்றது!

இது ஒரு வேற மாதிரியான "நாகரீகம்" மருது. இந்த நாகரீகத்துக்குரிய ஆக்களை யாழ்ப்பாணம் தொடங்கி, கண்டி கொழும்பு தாண்டி இங்க புலத்திலயும் நிறையப் பாக்கிறதால புரிஞ்சு கொள்ள எனக்குக் கடினமில்ல. இடம் மாறினாலும் இவர்களுடைய "நாகரீகத்துக்கு" ஒரே அடிப்படை தான், அதுவாகப் பட்டது: காத்தடிக்கிற பக்கம் பலமாகச் சாய வேணும்..மற்றது எல்லாம் பிறகு தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தெழுங்கான பற்றிய சில தகவல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.