Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேட்டைக்காரன் - புறக்கணிப்பு

Featured Replies

  • Replies 64
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரைப்படத்துக்குச் செய்யும் எதிர்ப்பிரச்சாரமே அதற்குப் பிரச்சாரமாகி விடுகிறதென்று சொல்பவர்கள், எவ்வாறு அப்பாடம் திரையிடப்படுவதை நிறுத்தலாம் என்பதைச் சொன்னால் பிரயோசனமாக இருக்கும். அப்படிச் செய்யாது, இங்கு அப்படத்தினை நிராகரியுங்கள் என்று கேட்பவர்களையே சதிகாரர்கள், படத்துக்கு மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறுவது சரியில்லை. அவர்களது வழி தவறென்றால் உங்கள் வழியைச் சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பிரச்சாரத்தைப் பண்ணுங்கோ மக்கள் புறக்கணித்தால் விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கும் பொழுது அவர்கள் இப்படியான விசப் பரீட்சைகளில் ஈடுபடத் தயங்குவார்கள்.அதற்கு மக்களுக்கு விளக்கங்களை அழிப்பதை விட இலவசமாக தரையிறக்கும் தளங்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் அதனைப் பாரக்க தூண்டுவதன் மூலம் படத்தைப் பறக்கணிப்பது இலகுவாகிவிடும்.மெல்ல மெல்ல புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளங்கப்படுத்தலாம்.

எங்கே இலவச தரையிறக்கும் தளங்கள் இணைப்பைக் கொடுங்கள்.

புலவர்,

நீங்கள் சொல்வதை ஓரளவிற்குத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. எமது நோக்கமென்ன, இப்படத்தைத் தயாரிப்பவர்களை பொருளாதார ரீதியில் தண்டிப்பது, அதுமட்டும்தானா??

இல்லையே, பொருளாதார நோக்கை விட இன்னுமொன்றும் இருக்கிறது. எமது இனத்தைக் குலையறுத்த சிங்கள பயங்கரவாத நாய்களின் பிரச்சாரப் பீரங்கியொன்றும் இப்படத்தில் இசையமைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவெறிப்பாடல் ஒன்றின் மெட்டும் அப்படியே இங்கு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். நாம் படத்தை தரவிறக்கிப் பார்ப்பது சரியானதா?? இப்படத்திற்கான புறக்கணிப்பென்பது முற்று முழுதான நிராகரிப்பாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியிலும் தார்மீக ரீதியிலும் இப்படம் தமிழினத்தால்(ஈழத்தமிழினத்தால் மட்டுமே)புறக்கணைக்கப்பட்டு தூக்கி எறியப்பட வேண்டும்.

அதுதான் நாம் செய்ய வேன்டிய புறக்கணிப்பு. படம் சட்டரீதியாகவும் ஓட வேண்டாம், தரவிறக்கப்பட்டும் ஓடவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

---- :lol:

என்ன ஆச்சு.. ஏன் இந்த :D

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்த செய்தி

{நாம் தமிழர் பேரியக்கம்}

உலகில் எந்த இடத்தில் வாழ்தாலும் - தமிழ் இன பிறப்பு என்றால் , வேட்டை காரனை புறக்கணிக்கவும்.

தமிழ் நாட்டில் மட்டும் அல்ல , உலகில் எந்த இடத்தில் வாழ்தாலும் - தமிழ் இன பிறப்பு என்றால் , வேட்டை காரனை புறக்கணிக்கவும்.

உங்களால் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை போல் - துப்பாக்கி தூக்கும் துணிவு நமக்கு இல்லை , ஆனால் கருத்துக்களை மற்ற நண்பர்களுக்கு கொண்டு செல்லும் தெளிவு இல்லை எனில் , தமிழ் இனத்தில் பிறந்ததில் அர்த்தம் இல்லை.

{நாம் தமிழர் பேரியக்கம்}

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன்... ஈழத் தமிழர்கள் போர்க்கொடி!

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை

உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும்

வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு

ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என

ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய

ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப்

படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே

வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து

தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த

எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இப்போதெல்லாம் புதிய படங்கள் வந்தவுடன் புறக்கணிப்போம் என்று சொல்லி

எமக்குப் பழகிவிட்டது.

நான் இப்பொழுது சொல்கிற இந்தப்புறக்கணிப்பு வெறும் கோபத்தினால் ஆனதல்ல!

மனவருத்தினாலானதும்கூட!!!!

ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய்

அன்ரனியின் கதை!

35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது. அரை

இலட்சம் மக்களை இழந்துவிட்டோம்

சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே

போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை...

1.இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு

இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne)

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இசை அமைப்பாளர் விஜய் அன்ரனி என்பவர்

சிங்கள இனத்தை சேர்ந்தவர் என்பதோடு சிங்கள இனவெறியன் என்பதும் உணமை

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் 50க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு

தமிழர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்தவேளை இவர் இலங்கை ராணுவம் எங்கள்

கடவும் என்ற பாடலுக்கு இசைஅமைத்துள்ளார்.

அத்தோடு இன்னும் பல சிங்களப்பாடல்களுக்கு இசைஅமைத்ததுடன் அந்தப்

பாடல்களில் சிங்கள ராணுவம் தெய்வங்கள் மகிந்த ராஜபக்ஷ அவர்களை

வாழ்த்தியும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

குறிப்பாக போர் முடிவடைந்து சில நாட்களில் மகிந்த அவ்ர்களின் புதல்வர்

அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு சென்று போரில் வெற்றி கொண்ட

ராணுவத்தினரை குஷி படுத்தும் விதமாக தமிழர்களையும் தமிழ் போராளிகளையும்

தளபதிகளையும் கொச்சைப்படுத்தி பாடல்கள் பாடி சிங்கள இனவெறி

ராணுவத்தினருடன் இணைந்து நடனமாடி கோண்டாடியுள்ளதோடு,அதை தொடர்ந்து யாழ்

மண்ணுக்கு சென்று அங்கு மாபெரும் இசை நிகழ்ச்சியும் செய்து சிங்கள

புலனாய்வுத்துறையினருடனும் தமிழ் துரோக கும்பல்களுடனும் சேந்து மேடையில்

நடனமாடி தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி இருந்தார்.

அந்த நிகழ்வின் போது இது போல் இசைநிகழ்ச்சிகள் தமிழர் தாயகப்பகுதிகளில்

தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்,இதை தமிழ் உண்வாளர்கள்

கண்டித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2.இந்த திரைப்படத்தை வெளியிடுவது சன் தொலைக்காட்சி நிறுவணம்.

தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொத்துக்குண்டுகளை போட்டு ஆயிரக்கணக்கில்

கொலைசெய்த போது இலங்கையில் அப்படி ஒன்றும் பெரிதாக நடைபெறவில்லை என்றும்

அரசியல் லாபம் தேட விரும்புபவர்களே தமிழ் நாட்டில் இவ்வாறான பரப்புரைகளை

மேற்கொண்டுள்ளனர் என்று இலங்கை அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு முற்றிலும்

பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

குறிப்ப்காக செஞ்சோலை வலாகத்தில் சிங்கள வான்படையால் நடத்தப்பட்ட

தாக்குதலின் போது 80க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்ட பொது

அந்த செய்தியையும் பொய்யென மறுத்திருந்தனர்.

அத்தோடு சிங்கள இனவெறிய விஜய் அன்ரனி அவர்கள் சன் தொலைக்காட்சி நிறுவணம்

வெளியிட்ட 3திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் இனியும் இசை அமைக்க

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சன் நிறுவணம் சிங்களவர்களை முற்றுமுழுதாக ஆதரிகும் ஒரு நிறுவணம் என்பதும்

உண்மை,ஈழத்தமிழர்கள் சிங்களவர்களால் கொல்லப்படுவதை பார்த்து

சந்தோஷப்படுபவர்கள் என்பது உண்மை.

3.ஈழத்தமிழர்களால் முன்னுக்கு வந்த விஜய் ஈழத்தமிழர்களை கொல்வதை தனது

கொல்கையாக வைத்திருக்கும் சோனியாகாந்தியின் கட்சியில் சேந்து பணியாற்ற

ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,அத்தோடு சோனியா காந்தியின்

கட்சியின் கொள்கைகள் மிக மிக நன்றாக உள்ளது என்று அவர்களுக்கு பாராட்டும்

தெரிவித்திருந்தார்(ஈழத்தமிழர்களை கொல்வதை தனது வேலையாக வைத்திருக்கும்

கொள்கை நல்லதா??).இதற்கு சில தமிழ் உணர்வாலர்களின் எச்சரிக்கையால் அது

தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளது வேட்டைக்காரன் படத்தை ஈழத்தமிழர்கள்

பார்த்தவுடன் இவர் சோனியாகாந்தியுடன் இணையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை புறக்கணிப்பது தவறென்பது எனது முடிவல்ல..... எண்ணமும் இல்லை!

ஆனல் எனது எணங்கள் சாரிhயனவையா? பிழையானவையா? என்பதை நீங்களே முடிவு செய்யலாம். எனது எண்ணங்கள்.

ஒரு சிங்களவர் தமது இராணுவத்தை ஆதரிப்பது என்பது எனக்கு பிழையாக தெரியவில்லை. அது அவர்களுடைய இராணுவம் இதயசுத்தியுடன் அதை ஆதரிப்பவர்களை நாம் வெறுக்க முடியாது. தமது இராணுவம் கட்டமைப்புடனும் அநாகரிக செயல்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பாகவும் இருக்கும். ஆனால் பல காடையர்களும் அதில் இணைகிறார்கள்............. அந்த இராணுவத்தை வழிநடத்தகூடிய அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் (ஜனாதிபதி) தமது சொந்த அரசியல் இலாபத்திற்காகவும் தமது ஆட்சிகாலத்தை நீடிப்பதற்றகாகவும் அழிவு போரை முன்னெடுக்கின்றார்கள். இதில் தமது சொந்த இராணுவத்தினரின் அழிவைபற்றியே அவர்கள் சிந்திக்க போவதில்லை இதில் தமிழர்களை பற்றி ஏன் சிந்திக்க போகிறார்கள்?

ஆக கொடிய இராணுவம் எமை கொல்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை. அவர்களுக்கு விசம் ஊட்டபட்டு தமிழர்கள் மேல் கட்டவிழத்;து விட படுகிறார்கள் என்Nறு எனக்கு தோன்றுகிறது. எமை போலவே இராணுவத்திற்கு அனுப்பியதால் கணவனை இழந்த மனைவிமார்களும் பிள்ளைகளை இழந்த தாய்தந்தையரும் அவர்களுக்குள்ளும் மிகவும் மீழாத துயரோடு வாழ்கின்றார்கள். அவர்களுக்கு ஆறுதல்களை கொடுக்க கூடியது இப்படியான பாடல்களாக கூட இருக்கலாம்.

இந்த இடத்தில் ஒரு கலைஞனை. இனம் சிங்களம் என்பதற்காக நாம் வெறுக்க வேண்டுமா?

ஒருவேளை எம்மில் ஒருவர் சிங்களவராக பிறந்திருந்தால்? இசையிலும் திறமையிருப்பின் நாம் அப்படியான பாடல்களை இசையமைத்திருக்க மாட்டோமா? அப்படி இல்லை என்று தவிர்பதற்கு என்ன நியாயம் சொல்ல போகிறோம்?

எனக்கென்னவோ............. நாம் தப்பு செய்கிறோம் என்றே படுகின்றது. இதில் புலிகளுக்கே உடன்பாடு இருக்காது என்பதே எனது நிலைபாடு.

அது தவறோ சரியோ? ஆனால் இந்த ஈன தமிழர்களை நம்பி புறக்கணிப்பை செய்வதென்பது படு முட்டாள் தனம். அவர்களின் வெற்றி உறுதியானது. அக தமிழக தமிழர்களும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்றே ஒரு புரளிவாதம் கிளம்ப சாத்தியம் இருக்கின்றது.

இந்த புறக்கணிப்பை உணர்ச்சிவசபட்டு சில உணர்வாளர்கள் முன்னெடுத்தாலும்............... இந்த பழி போய்விழபோவது என்னவோ புலிகளின் தலையில்தான்.

நாளைய தலையங்கம் இதுவாக கூட இருக்கலாம்!

புலிகளின் புறக்கணிப்பை புறக்கணித்தார்கள் புல தமிழர்கள்.

புலிகள் இல்ங்கையில் அல்ல இனி புலத்திலும் வாலாட்ட முடியாது போன்ற கோமாளி செய்திகளுக்கு நாம் வழிவகுத்து கொடுக்க போகிறோம் என்றே எனக்கு படுகின்றது.

கலையை அதன் போக்கில் விட்டுவிடுவோம். நாம் தமிழுழால் ஒன்றிணைவோம்!

மக்களுக்கு பிரச்சாரத்தைப் பண்ணுங்கோ மக்கள் புறக்கணித்தால் விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கும் பொழுது அவர்கள் இப்படியான விசப் பரீட்சைகளில் ஈடுபடத் தயங்குவார்கள்.அதற்கு மக்களுக்கு விளக்கங்களை அழிப்பதை விட இலவசமாக தரையிறக்கும் தளங்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் அதனைப் பாரக்க தூண்டுவதன் மூலம் படத்தைப் பறக்கணிப்பது இலகுவாகிவிடும்.மெல்ல மெல்ல புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளங்கப்படுத்தலாம்.

எங்கே இலவச தரையிறக்கும் தளங்கள் இணைப்பைக் கொடுங்கள்.

புலவர்,

நீங்கள் சொல்வதை ஓரளவிற்குத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. எமது நோக்கமென்ன, இப்படத்தைத் தயாரிப்பவர்களை பொருளாதார ரீதியில் தண்டிப்பது, அதுமட்டும்தானா??

இல்லையே, பொருளாதார நோக்கை விட இன்னுமொன்றும் இருக்கிறது. எமது இனத்தைக் குலையறுத்த சிங்கள பயங்கரவாத நாய்களின் பிரச்சாரப் பீரங்கியொன்றும் இப்படத்தில் இசையமைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவெறிப்பாடல் ஒன்றின் மெட்டும் அப்படியே இங்கு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். நாம் படத்தை தரவிறக்கிப் பார்ப்பது சரியானதா?? இப்படத்திற்கான புறக்கணிப்பென்பது முற்று முழுதான நிராகரிப்பாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியிலும் தார்மீக ரீதியிலும் இப்படம் தமிழினத்தால்(ஈழத்தமிழினத்தால் மட்டுமே)புறக்கணைக்கப்பட்டு தூக்கி எறியப்பட வேண்டும்.

அதுதான் நாம் செய்ய வேன்டிய புறக்கணிப்பு. படம் சட்டரீதியாகவும் ஓட வேண்டாம், தரவிறக்கப்பட்டும் ஓடவேண்டாம்.

இதுதான் சரியான முடிவு - தன்மானம் முக்கியம் அதை விற்பவன்தான் தரவிறக்கியும் பார்ப்பான்!

Edited by Sniper

நான் மே மாத படுகொலைகள், முகாம் மக்கள் துயரங்கள் எல்லாம் கண்ட பிறகு படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்....

ஈழ மக்களாகிய நீங்கள் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு நெருங்கிய உறவினரையாவது சிங்கள பேரினவாத அரக்கனின் வெறிக்கு இழந்திருப்பீர்கள் ..... அல்லது துன்பம் இன்னல் ஆகியவற்றையாவது அனுபவித்திருப்பீர்கள்...

உங்களால் எப்படி கேளிக்கை , படம் என்று உல்லாசமாக இருக்க முடிகிறது...

அதிலும் சிங்கள இனவெறிக்கு பிரசாரம் செய்தவன்உம் இணைந்து இசையமைத்த படத்தை ஈழத்தமிழன் வெற்றியடைய ச்செய்தான் என்றால் ....தமிழக த்தமிழனைப்போல் ஈழத் தமிழனுக்கும் மானம் , சூடு, சொரணை,ரோசம் போன்றவை இல்லை என்பது நிரூபணமாகி விடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை வேட்டையாடும் வேட்டைக்காரன் புறக்கணிப்பு

http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_6409.html

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு, வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இப்படம் தயாரிக்கும் போதும், பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போதும் இத் தவறுகள் தமிழ் நாட்டில் பலரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளன. இதனை நடிகர் விஜய் புறக்கணித்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளதாக அறியப்படுகிறது. போர் உக்கிரமடைந்த காலத்தில் சிங்கள படைகளை வலுப்பெற வைக்க பாடல்களை இயற்றி மெட்டுப்போட்ட கயவர்களுடன் இவர் கூட்டுச் சேர்வதா? அதே மெட்டை விஜய் படத்திலும் இவர்போட நாம் பணத்தை வாரி இறைத்து நடிகர் விஜயை வாழ்த்துவதா? இதுவும் ஒரு பிழைப்பா? தமிழர்களே சிந்தியுங்கள், எமது பெருந்தொகையான பணம் இவ்வாறு வசூலிக்கப்பட்டு, ஒரு சில நபர்களிடன் கோடிக்கணக்கில் முடங்கி இருக்கிறது.

அவர்கள் தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல், தமிழர்களின் மனதைப் புண்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும், இதுவே நாம் இவர்களுக்குப் புகட்டும் நல்ல பாடமாக அமையும். இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு, தமிழர்கள் தெரியப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டைக்காரன்: ஊடக அறிக்கை மாணவர் சமுதாயம் – டென்மார்க்

தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்சைத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம் என டென்மார்க் மாணவ சமுதாயம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம்:

எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே. இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, இரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம்.

எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம். அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நீங்கள் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் ஒவ்வொரு டெனிஸ் குரோனரும் எமது உறவுகள் வருந்திச் சாகுவதற்காக நச்சுக்குண்டுகளை வழங்கிய, பெயரில் மட்டும் காந்தியம் பேசும் இந்திய தேசத்துக்குச் சென்றடையும் எம்பதை மறந்துவிடாதீர்கள். இவ் ஒரு திரைப்படத்தை நாம் பாக்காமல் விட்டால் தமிழ்த்தேசியம் வாழும், நாம் பார்த்தால் தமிழ்த் தேசியம் சாகும் என்று முடிவெடுங்கள்.

சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும் தோழா, அப்படியென்றால் ஏன் எமது மக்கள் படும் துயரங்களை சினிமாவில் வெளிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது? தமிழன் ஒருவனை வைத்து இசையமைத்தால் தமிழனும் சிங்களவனும் பாசமலர்களென்று கதைகூறலாம். இது தான் இன்றைய அரசியல்.

உறவுகளே உங்கள் மனங்களை தெளிவுபடுத்தி மதியினால் முடிவெடுங்கள். நான் திரையரங்கம் செல்லவில்லையென்றுவிட்டு இரவில் ஒளிந்து செல்லாதீர்கள். அறிவுடைய சமுதாயமாகிய வளர்ந்துவரும் நாம் ஒன்றை மட்டும் நன்கு ஆழச் சிந்திப்போம். எமக்கான விடுதலை கிடைத்துவிட்டதா? அதை அழிக்க நினைக்கும் சக்திகள் யார்? அதற்கு நான் துணைபோகப் போகின்றேனா?

உங்கள் இளைய தளபதி, காங்கிரஸ் ஆதரவாளன் விஐய் அன்டனி, எம் உறவுகளைக் கொண்டவர்களுக்கு பாட்டியற்றியவன்.

சன் நிறுவனம்: எம்முறவுகளின் பிணத்தின்மேல் சிம்மாசனமிட்டு அரசியல் நடத்தும் கருணாநிதியின் குடும்பச்சொத்து.

வேட்டைக்காரன் தேவையா? இளைய தலைமுறையே, உனது உணர்வு செத்துவிட்டதா? மானமுள்ள தமிழிச்சி ஒருத்தியின் பிள்ளையில்லையா நீ? தட்டிக்கேள் இவ் அநியாயத்தை. தழைத்தெழும் தமிழ்த் தேசியத்தின் கூரிய கிளைகள் நாங்கள்.

தீண்டாதே வாழ்க தமிழ்த்தேசியம்.

மாணவர் சமுதாயம் - டென்மார்க்.

-அமுதன்

Edited by msuresh

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் நல்ல திரைப்பட இரசிகனாக இருந்த நான் படங்கள் பார்த்து வருடக் கணக்காகி விட்டது.உண்மையான உணர்வுள்ள விளக்கமுள்ள தமிழன் படத்தை நிச்சயம் புறக்கணிப்பான் .நாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமல் படத்தைப்ப் பார்ப்பதால் நமது தேசியத்திற்கு என்ன கெடுதல் என்று அப்பாவித்தனமாக தங்களை அறியாமல் தவறு செய்பவர்களை வழிக்கு கொண்டு வருவதற்கே இலவச இணையத்தளங்களைக் கொடுக்குமாறு கூறியிருந்தேன். அதாவது ஆடிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்.பாடிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். புறக்கணிப்பு முழுமையான வெற்றி பெற இந்த யோசனை நல்லதென்று நினைத்தே நான் அவ்வாறு எழுதினேன். மற்றவர்களுக்கு பிரச்சாரம் பண்ணும் பொழுது விருப்பினால் தரவிறக்கிப் பாருங்கோ என்று சொல்வதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன். பல பெற்றோர்கள் குழந்தைகளிற்காகவே படம் பார்ப்பவர்கள்.குழந்தைகளுக்கு புறக்கணிப்பைச் சொல்லிப் புரிய வைப்பது கடினம்.நான் யதார்த்தத்தை எழுதினேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நடக்காத ஒன்று

எத்தனை தடவை புறக்கணித்தல்......நடுத்தெருவில் நிற்கப்போகிறோம் என்பது உறுதி [இப்பவும் அதுதானே]

புறக்கணித்து அந்த் திரைப்படங்கள் வெற்றி பெற்றது அது புலத்தால் இல்லை தமிழ் நாட்டில் உள்ளவர்களால்

மட்டுநகரில் செங்கலடியில் திரைப்பட சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் முடிந்தால் வாங்கோ :D:D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=54339&view=findpost&p=498731 :lol:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மற்றயப் படங்கள் தொடர்பான புறக்கணிப்பில் ஈடுபாடு காட்டாவிட்டாலும் வேட்டைக்காரன் படத்தில் புறக்கணிப்பு என்பது ஒரு வகையில் அவசியம் என்றே படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் சிங்களவர்களின் ஆதிக்கம் என்பது வேண்டுமென்றே புகுத்தப்படுகின்ற ஒரு செயல் என்றே நம்ப வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் தனது கருத்துக்களை மேலோங்கச் செய்வதற்காக சிறிலங்கா அரசு கூட விஜய் அன்ரனி ஊடாக ஈராஜினை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்திருக்கலாம்.

சமீபத்தில் கூட சிங்களத் தயாரிப்பாளர் ஒருவரிடம் சூர்யா அவர்களை நடிக்க வைக்க முயற்சித்ததாகவும், இறுதியில் சாத்தியமற்றுப் போனதாகவும் வந்த செய்திகள் அறிந்ததே. பொருளாதார வளமற்ற சிங்களச் சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்க முயல்கின்றார்கள் என்றால், பின்னால் இருக்கின்ற சக்திகள் பலமானவை என்றே கருத இடம் உண்டு.

இராஜ் நல்லவராக இருக்கலாம். அவரது சிங்களப் பாட்லகளில் எனக்கு முன்பு ஈடுபாடும் இருந்தது. அவரது பாடல்களில் அநேகமாக 3, 4 வரிகளில் தமிழில் வசனங்கள் இருப்பதுமுண்டு. ஆனால் அதையும் மீறி, இராஜினைத் தமிழ்ச் சினிமாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்தே, பல சிங்களத் கும்பல்கள் உள் நுழைய ஏது நிலை உண்டு. அவர்கள் சிங்கள அரசின் படுகொலைகளையும், தமிழ் மீதான இனவெறியையும் நியாயப்படுத்த இடமுண்டு. பொதுவாகவே தமிழ் சினிமா தான், தமிழக மக்களின் வழிகாட்டி என்பது தெரிந்த ஒன்றே. அதற்கான வாய்ப்பினை நாம் வளங்கியதாக இருக்கக்கூடாது.

இந்தப் படத்தினைப் புலத்தில் தோற்கடிப்பதின் ஊடாக சிங்கள ஊடுருவலுக்கான எதிர்ப்பினைக் காட்டுவதாக அமைய வேண்டும். அதற்கு முடிந்தளவு மக்கள் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

  • தொடங்கியவர்

நடக்காத ஒன்று

எத்தனை தடவை புறக்கணித்தல்......நடுத்தெருவில் நிற்கப்போகிறோம் என்பது உறுதி [இப்பவும் அதுதானே]

புறக்கணித்து அந்த் திரைப்படங்கள் வெற்றி பெற்றது அது புலத்தால் இல்லை தமிழ் நாட்டில் உள்ளவர்களால்

மட்டுநகரில் செங்கலடியில் திரைப்பட சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் முடிந்தால் வாங்கோ :D:D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=54339&view=findpost&p=498731 :lol:

செங்கலடி செல்லத்திலயோ....

  • கருத்துக்கள உறவுகள்

செங்கலடி செல்லத்திலயோ....

அதுதான் தராக்கி

... வேட்டைக்காரன் நீயுமா???? (இப்படியான வசனங்கள்தான் இன்று மலிந்து போச்சுது, நானும் ஒருக்கால விடலாமென்று .... விட்டிருக்கிறேன்!!!)

எத்தனைகளுக்கோ போராட வேண்டிய தேவையிருக்க .... இங்கும் சில புளிச்சல்கள் வேலை வெட்டி இல்லாமல் துரோகிகள் பட்டங்களும், புறக்கணிப்புகளிலுமே காலத்தை போக்காட்டுகிறார்கள்!!! வேறு முக்கியமான போராட்டங்கள் புலத்தில் இல்லையா?????

... ஓரிரு வருடத்துக்கு முன்னுக்கு சுனாமீ அழித்தது எம்மை, அந்நேரத்தில் எம்மக்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டுமென்று சில லட்சங்களை வேறெவருக்கும் தெரியாது வீரகேசரி பத்திரிகை காரியாலயத்துக்கு அனுப்பி எம்மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்று அந்த மனம் முற்பட்டதாம்(பின்னாளில் ஒரு வீரகேசரி பத்திரிகையாளர் மூலம் அறிந்தது), திருமணம் முடித்ததும் ஒரு ஈழப்பெண்ணை .....

எல்லோரையும் பகைத்து என்ன சாதிக்கப் போகிறோம்!!! தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் எம்மூலம் வருமானத்தை ஈட்டுகிறது என்பதால்....இது ஒன்றுதான் தமிழகத்தை மிரட்ட இருக்கும் ஆயுதம். அதனை வைத்து இந்தியாவே எம் காலடியில் கொண்டுவருவோம் என்ற கனவுலகில் நாம்!!!! ...

புலத்தில் பகிஸ்கரிக்க வேண்டுமாயின் சிறிலங்கன் எயாலைன்ஸை பகிஸ்கரிக்க தலைகீழாக நின்று செயற்படலாம், .... எத்தனைகள் இருக்கின்றன!!!! அதையெல்லாம் விட்டு விட்டு ....

.... மே18 வரை ஏறக்குறைய 20000இற்கு மேற்பட்ட எம்மவர்கள் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டனர்!!!! இப்பாதகங்களை செய்தவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த இன்றுவரை இப்புலம்பெயர்தவர்கள் செய்தவைகளோ/சாதித்தவைகளோ எவையெவை??????? ... ஏதாவது???? .... அமெரிக்காவில் ஒரு அமைப்பு தொடங்கி செயற்பட, அவ்வமைப்பை முடக்கவே இங்கு பெருங்கூட்டம்!!!.... இன்று தனி நபர்களினால் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எம் சொத்துக்களை ... எம்மின அழிப்பை செய்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற பயன்படுத்தினால் என்ன?????

.... இது மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது .... இது போன்றவைகள்தான் இனி எம்மால் செய்யக்கூடியவைகள்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிக்கிறது என்று முடிவெடுத்தால் முதலில் செய்யவேண்டியது சிறீலங்காப் பொருட்களையே.

இந்த சிறீலங்கா பொருட்களை விக்கிற யாபாரிகளும் ,இணையம் வைத்து நடுநிலைக்கருத்து என்று

சொல்லி ஏதோ பெரிய 'களம்' அமைக்கிறதாக பாவ்லா பண்ணிக்கொண்டு திரிகிறவர்களும்

வேட்டைக்காரனை விட மோசமானவர்கள்.

வேட்டைக்காரனை புறக்கணிக்கும் முடிவுக்கு பின்னால் வெறும் ரசிகர்மன்ற சவடால்கள்தான் இருக்கும்.

1:05 ............... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசினர் கலவன் பாடசாலை

  • கருத்துக்கள உறவுகள்

... வேட்டைக்காரன் நீயுமா???? (இப்படியான வசனங்கள்தான் இன்று மலிந்து போச்சுது, நானும் ஒருக்கால விடலாமென்று .... விட்டிருக்கிறேன்!!!)

எத்தனைகளுக்கோ போராட வேண்டிய தேவையிருக்க .... இங்கும் சில புளிச்சல்கள் வேலை வெட்டி இல்லாமல் துரோகிகள் பட்டங்களும், புறக்கணிப்புகளிலுமே காலத்தை போக்காட்டுகிறார்கள்!!! வேறு முக்கியமான போராட்டங்கள் புலத்தில் இல்லையா?????

... ஓரிரு வருடத்துக்கு முன்னுக்கு சுனாமீ அழித்தது எம்மை, அந்நேரத்தில் எம்மக்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டுமென்று சில லட்சங்களை வேறெவருக்கும் தெரியாது வீரகேசரி பத்திரிகை காரியாலயத்துக்கு அனுப்பி எம்மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்று அந்த மனம் முற்பட்டதாம்(பின்னாளில் ஒரு வீரகேசரி பத்திரிகையாளர் மூலம் அறிந்தது), திருமணம் முடித்ததும் ஒரு ஈழப்பெண்ணை .....

எல்லோரையும் பகைத்து என்ன சாதிக்கப் போகிறோம்!!! தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் எம்மூலம் வருமானத்தை ஈட்டுகிறது என்பதால்....இது ஒன்றுதான் தமிழகத்தை மிரட்ட இருக்கும் ஆயுதம். அதனை வைத்து இந்தியாவே எம் காலடியில் கொண்டுவருவோம் என்ற கனவுலகில் நாம்!!!! ...

புலத்தில் பகிஸ்கரிக்க வேண்டுமாயின் சிறிலங்கன் எயாலைன்ஸை பகிஸ்கரிக்க தலைகீழாக நின்று செயற்படலாம், .... எத்தனைகள் இருக்கின்றன!!!! அதையெல்லாம் விட்டு விட்டு ....

.... மே18 வரை ஏறக்குறைய 20000இற்கு மேற்பட்ட எம்மவர்கள் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டனர்!!!! இப்பாதகங்களை செய்தவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த இன்றுவரை இப்புலம்பெயர்தவர்கள் செய்தவைகளோ/சாதித்தவைகளோ எவையெவை??????? ... ஏதாவது???? .... அமெரிக்காவில் ஒரு அமைப்பு தொடங்கி செயற்பட, அவ்வமைப்பை முடக்கவே இங்கு பெருங்கூட்டம்!!!.... இன்று தனி நபர்களினால் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எம் சொத்துக்களை ... எம்மின அழிப்பை செய்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற பயன்படுத்தினால் என்ன?????

.... இது மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது .... இது போன்றவைகள்தான் இனி எம்மால் செய்யக்கூடியவைகள்!!!

புலத்தில் மக்களின் காசை சுருட்டிகொண்டு ஒடுகின்றவர்களை புறக்கணிக்கலாம்................

புலத்தில் இருந்து கொண்டு அரசியலை முன்னெடுப்பவர்களுக்கிடையே முரண்பாடு உள்ளதாக நாம் கூறினாலும் இவர்கள் கேடகின்றார்கள் இல்லை இதில். வேட்டைகாரன் புறக்ணிப்பாம்.

தலைவருக்கே இன்னமும் அஞ்சலி செய்யவில்லை!

இதில் இந்த வேட்டைகாரன் தான் இப்ப முக்கியம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிக்கிறது என்று முடிவெடுத்தால் முதலில் செய்யவேண்டியது சிறீலங்காப் பொருட்களையே.

அண்ணே நாங்கெல்லாம் முக்கியமான விசயங்களை மறந்திருவம். அதால தான் இசையமைப்புக்கு சிங்களவன் உதவி செய்தத்தை தூக்கிப்பிடிக்கிறம். ஆனா அதே சிங்களவனுக்கு பணமும் தொழிலும் உருவாக்கிக் கொடுக்கிற செயல்களை தொடர்ந்து செய்யிறம். அதிலும் பார்க்க முக்கியம் ... எதை புறக்கணிக்கிறதாயிருந்தாலும் எங்களுக்கு இம்மியளவும் சேதாரம் வராத விசயங்களைத் தான் புறக்கணிப்பம். வேட்டைகாரன் படத்தை நெட்டில இறக்கிட்டு போகலாம். ஆனால் சிலோன் மீன் சுவையை நெட்டில இருந்து இறக்கேலுமோ?

மேலும் வேட்டைகாரனை புறக்கணிப்பதாகவிருந்தால் அதற்கான பிரதான காரணம் இது தமிழர் விரோத சண் குழுமத்தின் தயாரிப்பு என்பதாக இருக்கவேண்டுமே தவிர, இசையமைப்புக்கு ஒரு சிங்களவன் உதவினானாம் என்னும் பிற்போக்குத்தனமான காரணமாக இருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்கு பிரச்சாரத்தைப் பண்ணுங்கோ மக்கள் புறக்கணித்தால் விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கும் பொழுது அவர்கள் இப்படியான விசப் பரீட்சைகளில் ஈடுபடத் தயங்குவார்கள்.அதற்கு மக்களுக்கு விளக்கங்களை அழிப்பதை விட இலவசமாக தரையிறக்கும் தளங்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் அதனைப் பாரக்க தூண்டுவதன் மூலம் படத்தைப் பறக்கணிப்பது இலகுவாகிவிடும்.மெல்ல மெல்ல புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளங்கப்படுத்தலாம்.

எங்கே இலவச தரையிறக்கும் தளங்கள் இணைப்பைக் கொடுங்கள்.

http://www.tamiltorrents.net/ :unsure::unsure::D

1:05 ............... !

Terrorist Chicks........

Edited by தயா

ஒண்ணு சொல்லலாமா........

ஒண்ணு சொல்லலாமா........

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்க!

அரசினர் கலவன் பாடசாலை

not very nice... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.