Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்

Featured Replies

இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது.

இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன.

சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம்.

இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம்.

1976 இல் அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் - அதற்கு முன்னைய 28 ஆண்டு கால சிங்கள அடக்கு முறையின் விளைவாக - தமது அரசியல் அவா என்ன என்பதைத் தமிழர்கள் தமக்குள் தீர்மானித்த ஒரு வரலாற்று நிகழ்வு.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளான - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் ஒட்டுமொத்தமான வடிவமாகவே 'தமிழீழம்' என்ற கருத்துரு பிறப்பெடுத்தது.

தமது அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தினைத் தாமும் அங்கீகரிப்பதாக 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் - அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒர் ஆணையை அந்தத் தேர்தலில் வழங்கியிருந்தனர்.

அந்த ஆணை தான் 'தமிழீழம்' நோக்கிய போராட்டம்.

அந்த வரலாற்று ஆணை - அகவயப்பட்டதாக - இயல்பானதாக கடந்த 30 வருடங்களாக எமது இனத்தின் அரசியலுக்குள் ஊறிப்போய் உள்ளது.

கடந்த 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், நாம் சந்தித்த அழிவுகள், செய்த தியாகங்கள், கொடுத்த விலைகள், இழந்து போன 100,000-ற்கும் மேற்பட்ட உயிர்கள் - எல்லாமே - 30 ஆண்டுகளுக்கு முன்னைய அந்த 'மக்கள் ஆணை'க்கு உரமூட்டின.

இவ்வளவு ஆழிவுக்கும் பின்பு - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அவ்வளவு தியாகங்களையும் அவமதிப்பது போன்றது; 30 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தந்துவிட்ட அந்த அரசியல் ஆணையைச் சிறுமைப்படுத்துவது போன்றது.

அவ்வளவு தியாகங்களுக்கும் அடிப்படையான அந்த ஆணையை மறு-கேள்விக்கு உள்ளாக்குவது என்பது, அவ்வளவு தியாகங்களையுமே கேள்விக்கு உள்ளாக்குவது போன்றது.

அதிலும் - 99 வீதம் பேர் மட்டுமே "ஆம்" என வாக்களித்தார்கள் எனச் சொல்லுவது அவ்வளவு தியாகங்களையும் இழிவுபடுத்துவது போன்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது, "தமிமீழம்" என்பது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்தது என்று இந்த உலகம் சொல்லுவதை தமிழர்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ளுவது போன்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட 'தமிழீழம்' என்ற இலட்சியத்திற்காகப் போராடிய - விடுதலைப் புலிகளை எமது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உலக வீதிகளில் இறங்கி நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாவற்றையும் நாமே கொச்சைப்படுத்துவது போன்றது.

2009 மே மாதத்திற்கு முன்னால் இந்த மீள்வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது வேறு கதை:

விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இலக்கான 'தமிழீழம்' எனப்படுவது தான் தமிழ் மக்களின் அரசியல் அவாவும் கூட என்பதை இந்த உலகிற்கு வலியுறுத்த அது உதவியிருக்கலாம்.

அத்தோடு - விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்; 'தமிழீழம்' எனப்படுவது ஒர் அரசியலற்ற கோட்பாடு அல்ல; அது ஆயுத ஆளுமைக்கு முன்னானது போன்றவற்றை இந்த உலகிற்கு நிரூபிப்பதற்கும் துணை புரிந்திருக்கலாம்.

அந்த வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றி - தமிழர்களுக்கான தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவியிருக்கலாம்.

ஆனால் - இப்போது கதை வேறு; ஆயுத ஆளுமை முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவோடு - தமிழர்களின் அரசியல் கோரிக்கை மீது படிந்திருந்த அவர்கள் கூறும் 'பயங்கரவாதச் சாயமும்' கரைய ஆரம்பித்துவிட்டது.

ஆதலால் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு என்பது இப்போது அவசியமற்றது; பயனற்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது தமிழ் தேசிய இனம் தனது ஆன்மாவில் வரித்துக்கொண்டுள்ள ஒரு வாழ்வு நெறி; அது எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கின்றது. அதற்கு மீள உயிர் அளிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

இந்த வாக்கெடுப்பு என்பது உயிர்கள் காற்றைச் சுவாசிக்கின்றனவா இல்லையா என வாக்கெடுப்பு நடாத்துவது போன்றது.

இன்னொரு பக்கத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான இந்த மீ்ள் வாக்கெடுப்பை - நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியுடன் சிலர் குழப்பப் பார்க்கின்றார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள் வாக்கெடுப்பு எனப்படுவது 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும் கற்பிதம் செய்யப்படுகின்றது.

ஆனால் - உண்மையில், சில தனிப்பட்ட ஆட்கள் இந்த இரண்டு முயற்சிகளிலும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பதைத் தவிர - நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் கோட்பாட்டு ரீதியான எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு எனப்படுவது அனைத்துலக சமூகத்ததின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி.

சிறிலங்கா என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல.

அந்த நோக்கங்களோடு இந்த முயற்சியை எடுத்தால் உலக அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது.

இது வேறு; அது வேறு.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' இலங்கைத் தீவிற்கு உள்ளே வாழும் தமி்ழ் தேசிய இனம் தொடர்பானது; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவது ஒரு "நாடு கடந்த" ( இலங்கைத் தீவு கடந்த) அரசாங்கம் தொடர்பிலானது. இது வேறு; அது வேறு.

உண்மையில் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்'தை நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புபடுத்துவது - உபத்திரவமாக அமையுமே அல்லாமல் உதவிகள் புரியாது.

இன்னொரு பக்கத்தில் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான இந்த மீள் வாக்கெடுப்பு எமது போராட்டத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரப் போகின்றது என்ற ஒரு பிரமையும் பரவவிடப்படுகின்றது.

உண்மை என்னவென்றால் - இந்த உலகத்தில் எவருக்குமே - அது அமெரிக்காவாய் இருந்தால் என்ன, ஜரோப்பிய ஒன்றியமாய் இருந்தால் என்ன, இந்தியாவாய் இருந்தால் என்ன - எவருக்குமே இந்த வாக்கெடுப்பில் எந்த அக்கறையும் இல்லை.

அவர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கப்போவதும் இல்லை.

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் என்ன விதமாக வந்தாலும் - இந்தப் பெரிய வல்லரசுகளின் இலங்கைத் தீவு மீதான கொள்கையில் அது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு என்பது -

1) கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.

2) எமது முகத்தில் நாமே பூசும் கரி.

3) தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்.

புதினப்பார்வை, டிசம்பர் 18, 2009

http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOImd4decOYld3c0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ்ர்களது அபிலாசைகளை உலக்குக்கு எடுத்துக்கூற டிசம்பர் 19ல் அணிதிரள்வோம்-கனடா தமிழ் மாணவர் சமூகம்!

திகதி: 18.12.2009 // தமிழீழம்

"இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்" ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தி 33 வருடங்களுக்கு முன்னரே ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தை முன்வைத்து தனித் தமிழீழம் வேண்டி தேர்தலில் நின்ற தமிழ்த் தலைவர்கள் மக்கள் ஆதரவுடன் வெற்றியீட்டியதன் மூலம் தமிழீழமே தமிழருக்கான இறுதித்தீர்வு என ஈழத் தமிழர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியிருந்தார்கள். இந்நிகழ்வானது ஈழம்வாழ் தமிழரரின் வரலாற்றில் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக காணப்படுகின்றது.

ஜனநாயக வழியிலான வட்டுக்கோட்டை தீர்மானம் தொட்டு போராட்ட வழியிலான முள்ளிவாய்க்கால் வரை தமிழர்களது போராட்டம் பல்வேறுபட்ட பரிணாமங்களுக்குள்ளாக்கப்பட்டு எமது விடுதலைபோராட்டமானது மாவீரர்களின் உச்ச தியாகங்களினால் உலகறிய பறைசாற்றிநிக்குறது எமது தேசியத்தலைவரின் எதிர்வுகூரலுக்கேற்ப மீண்டும் ஓர் ஜனநாயக இளையோர் போராட்டமாக பரிணமித்திருக்கின்றது போர் முடிந்துவிட்டது என கொக்கரிக்கும் சிங்களவர்களும் சிங்கள அரசும் தமிழர்களை கொத்தடிமைகள் போல் வெவ்வேறு வதைமுகாம்களுக்கு நகர்த்தி உலக அரசுகளுக்கு பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.

உண்மையாகவே போர்க்காலகட்டத்தில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்களை பதவிச் சண்டைகளின்போது வெளியிட்டு நடந்த கோரப்படுகொலைகளை சிங்கள அரசும் அதனை ஆளும் போர்க்குற்றவியலாளரான ஆட்சியாளர்களும் வெளிச்சம் போட்டுக்காட்டிவருகின்றனர்.

இதன் பின்னரும் தமிழரான நாம் உறங்குநிலையில் இருக்காது எமது சுயநிர்ணைய உரிமையை உலகம் ஆதரிக்கவைக்கவேண்டும்! இதன் முதற்கட்டமாக உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாந்து வருகின்றது. கனடா நாட்டில் நாடுதழுவிய அளவில் இவ் ஜனநாயக வாக்கெடுப்பானது மார்கழி 19ம் திகதி நடைபெறவுள்ளது.

கனடா வாழ் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து இவ் வாக்களிப்பில் கலந்துகொள்வதன்மூலம் எமது ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான எமது போராட்ட வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டமுடியும். இதன்மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமில்லாது இற்றைய எமது இளம் சந்ததியினருக்கும் எமது ஜனநாயகப் போராட்டம் பற்றிய படிப்பினையூட்டலாம்.

ஆகவே கனடாவாழ் தமிழீழ மக்களே இளையோரே கனடாத்தமிழர் வரலாற்றிலும் ஓர் முக்கிய திருப்புமுனையாக இருக்கப்போகும் வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கெடுப்பில் பங்கேற்று ஈழத் தமிழ்ர்களது அபிலாசைகளை உலக்குக்கு உரத்த எடுத்துக்கூறுவோமாக!

கனடா முழுவதும் தமிழர் வாக்களிப்பை நோக்கி உணர்வு கலந்த உற்சாக எதிர்பார்ப்பு

திகதி: 17.12.2009 // தமிழீழம்

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் கனடியத்தமிழருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழரின் நிலையான முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததொன்று.

பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள், இளையோர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் தமிழர்கள் வாழும் நகரில் உள்ள அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் கனடியத் தமிழர் வாக்குக் கணிப்பு பற்றிய பெரிய சுவராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் வீடுகள் தோறும் நாட்டப்படும் பதாகைகள் இத்தேர்தலையொட்டி கனடியத்தமிழர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் நாட்டியுள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் குறிப்பாக வானொலி தெலைக்காட்சி என்பன இத்தர்தல் பற்றிவிசேட ஒலி ஒளி பரப்பை மேற்கொண்டவண்ணமுள்ளன. தமிழ் பத்திரிகைகள் இத்தேர்தல்பற்றிய செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளன. கனடாவில் வெளிவரும் முண்ணனித் தமிழ்ப்பத்திரிகையான ‘கனடா உலகத்தமிழர்' பத்திரிகை வெள்ளிக்கிழமை வரவேண்டிய பதிப்பு தேர்தலுக்காக, தேர்தலுக்கான விசேட பதிப்பாக வியாழனன்றே வெளிவந்துள்ளது.

இப்பத்திரிகையில் தோதல் பற்றிய பூரண விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் மாதிரி வாக்களர் அட்டை என்பன உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துண்டுப்பரசுரத்தில் முக்கியமாக வாக்களிப்தற்கு பதிவு அவசிமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முன்பதிவு செய்யாதோர் தாம் புதிவு செய்யவில்லையே என்ற கவலையை விட்டு எவ்வித பதிவுகளுமின்றி வாக்களிக்கமுடியும்.

எதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 31 வாக்களிப்பு நிலையங்களில் 51 வாக்களிப்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் http://www.tamilelections.ca/ இல் நீங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான மீள்வாக்களிப்பு அவசியமானதா இல்லையா என்பது பற்றி ஆரோக்கியமான விவாதம் நடாத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் கருத்துக்கணிப்பு ஒன்றை அவமானம் எனக்கருதுவது வெறும் உணர்ச்சியின் அடிப்படையிலானது. அல்லது குழு நிலை சாரந்து செயற்படுவதானால் ஏற்பட்ட விளைவு எனக் கருத வேண்டியிருக்கிறது.

மீள் வாக்கெடுப்பு அவசியமில்லை என்பவர்கள்:

- இது ஏற்கனவே முடிந்த முடிபு இதனை உரசிப்பார்க்கவேண்டியதில்லை.

- வாக்கெடுப்பு சரியாக நடைபெறாமல் வாக்களர்கள் பெருமளவில் பங்கு கொள்ளாவிடில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்

- இந்த முயற்சிக்கு செலவிடப்படுகிற பணத்தை, ஆளணியை வேறு அவசியமான, அவசரமான விடயங்களுக்கு செலவிடலாம்

போன்ற கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

அவசியம் என்பவர்கள்:

- 33 வருடத்திற்கு முன்னர் பிரேரிக்கப்பட்ட பிரகடனத்த்தை மீள உறுதி செய்து கொள்ள வேண்டும.

- 1977ம் ஆண்டு வாக்களிக்கும் வயதில் இல்லாதவர்கள் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் என வாக்களிக்கும் வயதில் உள்ளவர்கள் பல ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதனைக் கணக்கில் எடுத்தால் அவர்களது ஒப்புதலை அல்லது நிராகரிப்பை பதிவு செய்தல் சனநாயகம் சார்ந்ததாக இருக்கும்.

- வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சில அரசியல் தலைவர்களும் கட்சிகளும் அத்தீர்மானத்தை இன்று கைவிட்டுவிட்டனர்.

- 1977ம் ஆண்டு போன்று இலங்கையில் நடைபெறும் ஒரு தேர்தலில் வட்டுக்கோட்டைத்ட தீர்மானத்தை முன்வைக்க முடியாதபடி அந்நாட்டின் அரசியல் அமைப்பில் (6வது) திருத்தம் 1983 கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகிய கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

இவற்றினால் ஏற்படும் சாதக பாதக நிலைகளை சீர்தூக்கிப்பார்த்து ஒருவர் மீள்வாக்களிப்பு பற்றிய முடிவுக்கு வரலாம்.

இனி இந்த “அவமானம்” கட்டுரையில் உள்ள மூன்று முக்கிய விடயங்களுக்கு வருவோம்:

1) கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.

இது தவறான நிலைப்பாடு, ஏற்கனவே இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. எனக்கு தெரிந்த அளவில், நோர்வே, பிரித்தானிய அரசுகளிள் வெளிவிவகார அமைச்சுகள் இத்தேர்தல் தொடர்பாக கரிசனை செலுத்தியுள்ளனர். தேர்தல் நடைபெறாது தடுக்க சில முயற்சிகளை மேற்கொண்டாலும், சனநாயக வழிமுறையிலான கருத்துக்கணிப்பினை தடுப்பது சட்டரீதியாக இயலாது என்பதால் விட்டு விடார்கள்.

கொட்டைப்பாக்க அளவுக்கு பெறுமதியில்லாத விடயங்களில் எல்லாம் வெளிவிவகார அமைச்சுகள் அக்கறைப்படும் என நான் நம்பவில்லை.

2) எமது முகத்தில் நாமே பூசும் கரி.

இந்த வாக்கெடுப்பு நாம் வாழுகின்ற நாட்டில் நடைபெறுமாக இருந்தால். அதில் நாம் கலந்து கொள்ளாவிடின் எமது முகத்தில் நாமே கரி பூசிக் கொள்வோம்.

3) தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்.

இரண்டாவது விடயத்தில் குறிப்பிட்டது போன்று நாம் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருப்பது வரலாற்று அவமானம்.

வழமையாக கருத்துக்கணிப்புகளை எதிர்ப்பவர்கள், தாம் தோல்வியடைந்து விடுவோம் என்பதாலேயே அவ்வாறு செய்கிறார்கள்.

காஸ்மீர் தனிநாடாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதையிட்டு கருத்துக் கணிப்பு நடாத்துமாறு ஐ.நா. இந்தியாவை பல ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டுக் கொண்ட போதும் அது அவ்வாறு செய்ய மறுத்து வருகிறது.

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

1) கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.

2) எமது முகத்தில் நாமே பூசும் கரி.

3) தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்.

99.5 வீதமான புலம்பெயர்தமிழர்கள் முட்டாள்கள்.........???

நல்ல முடிவு

சனத்தின் முடிவை தெரிந்தபின்னாவது திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தேன்

ஆனால்

கோணல் அங்கல்ல என்பது இப்போது புரிகிறது

கொட்டைப்பாக்களவு நன்மையும் கிடையாது.

சிங்களத்திடம் இருந்து கடுகளவு நன்மை கிடைக்கக் கூடிய வழிகள் ஏதாவது இருக்கின்றதா?

இந்த வாக்கெடுப்பு தொடர்பாக கனடா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பான நேர்காணல்.

http://www.cbc.ca/mrl3/8752/toronto/ondemand/audio/dec18tr_TOR.wma

Edited by eelamlover

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்த உலகி;ற்கு சொல்கிறோம் என்று பொருள்.புலிகளை அழித்தால் தமிழீழம் என்ற கருத்துருவாக்கம் அழிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கு உதவிசெய்;த நாடுகளுக்கு ஆயதங்களைப் போட்டுவிட்டு ஜனநாயக வழியில் போராடுங்கள் என்று சொன்னவர்களுக்கு அதே வழியில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட குறுகிய காலத்தில் புதிய வடிவில் அவர்களால் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல முடியாத வழியில் போராட்டம் தொடர்வதானது 'அழிக்கப்பட்டது ஒரு போராட்டவடிவமே ஒழிய போராட்ட இலட்சியம் அல்ல'. அது புதியஉத்வேகத்துடன் தொடர்கிறது.கடந்த 30 வருடங்களாக எண்ணற்ற தியாகங்களைச் செய்து புலிகள் இந்த இலட்சிய நெருப்பை தமிழ் மக்கள் நெஞ்சில் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.ஆக புலிகள் தங்கள் இலட்சியத்தில் தோற்கவில்லை வென்றிருக்கிறார்கள். அது மட்டுமன்றி தற்போது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பவர்கள் சிறிலங்காவின் ஆள்புல அதிகாரத்துக்கு வெளியில் இருக்கிறார்கள். அதனை அவர்களின் படை பலங்களாலோ அல்லது பக்கத்து நாட்டுக்காரர்களினாலும் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்த உலகி;ற்கு சொல்கிறோம் என்று பொருள்.புலிகளை அழித்தால் தமிழீழம் என்ற கருத்துருவாக்கம் அழிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கு உதவிசெய்;த நாடுகளுக்கு ஆயதங்களைப் போட்டுவிட்டு ஜனநாயக வழியில் போராடுங்கள் என்று சொன்னவர்களுக்கு அதே வழியில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட குறுகிய காலத்தில் புதிய வடிவில் அவர்களால் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல முடியாத வழியில் போராட்டம் தொடர்வதானது 'அழிக்கப்பட்டது ஒரு போராட்டவடிவமே ஒழிய போராட்ட இலட்சியம் அல்ல'. அது புதியஉத்வேகத்துடன் தொடர்கிறது.கடந்த 30 வருடங்களாக எண்ணற்ற தியாகங்களைச் செய்து புலிகள் இந்த இலட்சிய நெருப்பை தமிழ் மக்கள் நெஞ்சில் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.ஆக புலிகள் தங்கள் இலட்சியத்தில் தோற்கவில்லை வென்றிருக்கிறார்கள். அது மட்டுமன்றி தற்போது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பவர்கள் சிறிலங்காவின் ஆள்புல அதிகாரத்துக்கு வெளியில் இருக்கிறார்கள். அதனை அவர்களின் படை பலங்களாலோ அல்லது பக்கத்து நாட்டுக்காரர்களினாலும் தடுக்க முடியாது.

சரியா சொன்னீங்கள் :)

வட்டுகோட்டை தீர்மானத்தை திரும்பியும் பார்க்காத மேற்குலகும் ,இந்தியாவும், நாடுகடந்த தமிழீழ அரசையும் திரும்பிப்பார்க்காதேன்று கூற முடியும்தானே.

''சிறிலங்கா என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல.''

அப்படியானால் லண்டனில், தமிழீழமே இறுதி இலட்சியமென திரு.உரித்திரகுமாரன் கூறியது பொய்யா?

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்பதற்கு என்ன அர்த்தம்? மக்களை ஏமாற்றவா அந்த பெயர் வைக்கப்பட்டது?

இதனை 'நா.க.அரசு'' குழுவினர் தெளிவுபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ குடத்துக்குள் தலையை விட்டுக்கொண்டு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். கள உறவுகள் அதற்குப் பொருத்தமான பதில்களைத் தந்திருக்கிறார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றால் ஏதோ கிளின்ரன் வரையில் பிரபலமான ஒரு தீர்மானம் என்பது போலவும் அதைப் பற்றிய தெளிவூட்டல்களே தேவையில்லை என்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்குகிறது இந்தக் கட்டுரை. அருகிலிருக்கும் தமிழக உறவுகள் 90% ஆனவர்களுக்குக் கூட இது என்னவென்று இதுவரைக்கும் தெரிந்திருக்காது. இந்தத் தேர்தல் மூலம் எங்கே பிரச்சினை ஆரம்பமனது என்பது பற்றிய விளக்கம் இலங்கைத் தீவில் வசிக்காதவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நம்புகிறேன். குறிப்பாக, புலம்பெயர் இளைய சமூகத்தினர், தமிழக உறவுகள் மற்றும் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு. அதுமட்டுமில்லாமல் சகல பிரச்சினைகளுக்கும் புலிகளே காரணகர்த்தாக்கள் எனப் பழிபோட்டுத் தப்பிவிட முடியாதபடி செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும்.

அதனால் கனேடிய உறவுகள் அனைவரும் இவ்வாக்கெடுப்பில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். உள்ளூர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவும் இத்தேர்தல் பெரிதும் உதவும். தமிழரின் வாக்குவங்கி பற்றிய உண்மையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் உள்ளூர் கட்சிகளின் கவனத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. தவற விட வேண்டாமே..!

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுகோட்டை தீர்மானத்தை திரும்பியும் பார்க்காத மேற்குலகும் ,இந்தியாவும், நாடுகடந்த தமிழீழ அரசையும் திரும்பிப்பார்க்காதேன்று கூற முடியும்தானே.

நீங்கள் குறிப்பிட்ட இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைத்தீவில் தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் பிரச்சினைகள் உள்ளன என்பதை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளன. (கடந்த காலங்களில் ரோபேர்ட் ஓ பிளேக் மற்றும் அவ்வப்போது இந்திய ஆளும்வர்க்கத்தினரின் கூற்றுக்களை மீட்டுப் பார்க்கவும்). அப்படி இருக்கும்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? புலிகளுடன் இவர்களுக்கு இருந்த பிரச்சினைகளை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது போட்டுவிடாதீர்கள்.

''சிறிலங்கா என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல.''

அப்படியானால் லண்டனில், தமிழீழமே இறுதி இலட்சியமென திரு.உரித்திரகுமாரன் கூறியது பொய்யா?

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்பதற்கு என்ன அர்த்தம்? மக்களை ஏமாற்றவா அந்த பெயர் வைக்கப்பட்டது?

இதனை 'நா.க.அரசு'' குழுவினர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்து அதை அடைவதற்கு ஒரு பாதையையும் தேர்ந்தெடுத்து நகரும்போது ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கடக்க சில நெளிவு சுளிவுகளைக் கையாள வேண்டும். அந்த வகையில், இறுதி லட்சியம் என்பது தமிழீழமே. அதற்காக அதையே இப்போது கூறிக்கொண்டு நின்ற இடத்திலேயே இருந்துவிடுவது புத்திசாலித்தனம் அல்ல. முதலில் அகில உலக அளவில் நமது தொடர்பாடல்களுக்குரிய வழிமுறைகளையும், அதற்குரிய மக்கள் ஆணையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் செய்வதாக இருந்தால் ஜின்னா பாகிஸ்தானைப் பிரித்து எடுத்திருக்க வழி இருந்திருக்காது. டட்லி குழு தமிழர் தரப்பை ஏமாற்றி இலங்கைத்தீவு முழுமையையும் ஒரு நாடாக பிரித்தானியர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்க முடியாது.

==========புதினம் கோஷ்டி சொல்லும் உப்புச்சப்பு இல்லாத, எவரும் கணக்கெடுக்காத இந்த வாக்கெடுப்புக்கா இலங்கை அரசு தன் எதிர்ப்பை காட்டுது?----

வாக்கெடுப்பு நடத்த இடமளித்தமை குறித்து இலங்கை கனேடிய அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

இலங்கையில் ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதாகக் கூறி கனடாவிலுள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பினால் இன்று அங்கு வாக்கெடுப்பை நடத்த இடமளித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் நேற்று கனேடிய அதிகாரிகளிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய நிதி வழங்கிய கனேடிய தமிழ் காங்கிரஸ் நடத்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்த வாக்கெடுப்பைக் கண்காணிப்பதற்காக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்குள் தனிநாடு ஒன்று உருவாகுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு கனேடிய அரசாங்கம் இடமளித்துள்ளமை ஆச்சரியமானது. இது ஜனநாயக நாடொன்றை அழிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதாகும் எனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது எனவும் திவயினவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி: GlobalTamilNews.net

Source: My link

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆளமான சிந்தனை அற்புதமான கட்டுரை

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும் என்று விரும்பும் எல்லா விடயத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜன நாயக விழுமியமுடைய தமிழினம் நீடூழி வாழ்க!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்த உலகி;ற்கு சொல்கிறோம் என்று பொருள்.புலிகளை அழித்தால் தமிழீழம் என்ற கருத்துருவாக்கம் அழிந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கு உதவிசெய்;த நாடுகளுக்கு ஆயதங்களைப் போட்டுவிட்டு ஜனநாயக வழியில் போராடுங்கள் என்று சொன்னவர்களுக்கு அதே வழியில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட குறுகிய காலத்தில் புதிய வடிவில் அவர்களால் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல முடியாத வழியில் போராட்டம் தொடர்வதானது 'அழிக்கப்பட்டது ஒரு போராட்டவடிவமே ஒழிய போராட்ட இலட்சியம் அல்ல'. அது புதியஉத்வேகத்துடன் தொடர்கிறது.கடந்த 30 வருடங்களாக எண்ணற்ற தியாகங்களைச் செய்து புலிகள் இந்த இலட்சிய நெருப்பை தமிழ் மக்கள் நெஞ்சில் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.ஆக புலிகள் தங்கள் இலட்சியத்தில் தோற்கவில்லை வென்றிருக்கிறார்கள். அது மட்டுமன்றி தற்போது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பவர்கள் சிறிலங்காவின் ஆள்புல அதிகாரத்துக்கு வெளியில் இருக்கிறார்கள். அதனை அவர்களின் படை பலங்களாலோ அல்லது பக்கத்து நாட்டுக்காரர்களினாலும் தடுக்க முடியாது.

யாரோ குடத்துக்குள் தலையை விட்டுக்கொண்டு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். கள உறவுகள் அதற்குப் பொருத்தமான பதில்களைத் தந்திருக்கிறார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றால் ஏதோ கிளின்ரன் வரையில் பிரபலமான ஒரு தீர்மானம் என்பது போலவும் அதைப் பற்றிய தெளிவூட்டல்களே தேவையில்லை என்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்குகிறது இந்தக் கட்டுரை. அருகிலிருக்கும் தமிழக உறவுகள் 90% ஆனவர்களுக்குக் கூட இது என்னவென்று இதுவரைக்கும் தெரிந்திருக்காது. இந்தத் தேர்தல் மூலம் எங்கே பிரச்சினை ஆரம்பமனது என்பது பற்றிய விளக்கம் இலங்கைத் தீவில் வசிக்காதவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நம்புகிறேன். குறிப்பாக, புலம்பெயர் இளைய சமூகத்தினர், தமிழக உறவுகள் மற்றும் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு. அதுமட்டுமில்லாமல் சகல பிரச்சினைகளுக்கும் புலிகளே காரணகர்த்தாக்கள் எனப் பழிபோட்டுத் தப்பிவிட முடியாதபடி செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும்.

அதனால் கனேடிய உறவுகள் அனைவரும் இவ்வாக்கெடுப்பில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். உள்ளூர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவும் இத்தேர்தல் பெரிதும் உதவும். தமிழரின் வாக்குவங்கி பற்றிய உண்மையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் உள்ளூர் கட்சிகளின் கவனத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. தவற விட வேண்டாமே..!

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிக்கும் நிலையங்கள்: வாக்களிக்கும் இடங்கள் பற்றிய விபரத்திற்கு அழுத்தவும்

வாக்களிப்பதற்காக தன்னை அடையாளப் படுத்த கொண்டு செல்ல வேண்டியது: எதனை கொண்டு செல்ல வேண்டும் என அறிய இங்கே அழுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வடிவங்கள் மாறும் இலக்கு மாறாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.