Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.

புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..

அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்

இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.

இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.

வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம்! சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.

நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். சிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.

0 0 0

ஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.

0 0 0

vijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் ! விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் ! சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார்! என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

0 0 0

Facebook குறிப்புக்கள்

வேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ! இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.

* * *

தயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..

இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.

* * *

கனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..

இதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.

* * *

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

* * *

எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.

* * *

கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.

“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”

vijay.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை நன்றி.

நேற்று 17.12.2009 சிறிலங்கண் இலண்டன் தூதரகம் நத்தார் கொண்டாட்டம் வைத்தவை எத்தனை தமிழ்வியாபாரிகள் கொண்டாட்டத்திற்கு போயிருந்தார்கள்.

பிறகு புறக்கணிப்போ அதெல்லாம் செவிடன் காதில ஊதின சங்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரை என்னைப்போன்றவர்களுக்கு செருப்பால் அடித்தமாதிரியுள்ளது.

சயந்தன் நன்றாக சிந்துத்து எழுதியுள்ளீர்கள்.

வேட்டைக்காரனோடு பல விடயங்களை அழகாக அறிவுறுத்தியுள்ளீர்கள். :rolleyes:

தென்னிந்திய தமிழ் படங்களை புறக்கணியுங்கோ புறக்கணியுங்கோ செல்லங்கள் எண்டு காலில விழுந்து கேட்டாலும் புறக்கணிக்க வைக்க ஏலாது. இதுபோல நம்மவர் திரைப்படங்களை ஆதரியுங்கோ ஆதரியுங்கோ செல்லங்கள் எண்டு காலில விழுந்து கேட்டாலும் சனம் மசியாது. உதுதான் யதார்த்தம். இதுக்குப்போய் ஏன் மாறி மாறி விசயையும், சூரியாவையும், பாபாவையும் இழுப்பான்.. தொடர்ந்து நேரிய நிமிர்ந்த பார்வையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சனநாயக வழியில் செல்வோம்.. :rolleyes:

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் அண்ணா அருமையான கட்டுரை.

இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்..........

எவ்வளவு யதார்த்தம்.

தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.

.....................................................

இந்த உலகத்திலை உள்ள கேவலமான இனம் தமிழினம் தான் இதுக்குள்ளை யூதர் என்ற கனவுவேறை

..............................................

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

இதை நிழலி அண்ணாக்கு சொல்லேல்லை தானே :rolleyes:

இலங்கைப் பொருட்களையும் இலங்கை விமானசேவையையும் புறக்கணிக்க வக்கில்லாத, சிறீ லங்கா தேசிய கிரிக்கெட் அணிக்கு வக்காலத்து வாங்கும் மரத்துப் போன புலம் பெயர் சூரருக்கு வெற்று கோசம் போடக்கூடிய விஜய் / அஜித் சினிமா எதிர்ப்பு என்ற போராட்டம் கூட சரிவராது என்பதை தெளிவாக எழுதியுள்ளீர்கள் சயந்தன்

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

இதை நிழலி அண்ணாக்கு சொல்லேல்லை தானே :)

சூடு சுரணையற்ற, இலங்கை கிரிக்கெட் அணிக்கு குண்டி கழுவ விரும்பும், "Sri Lankan Nationality நாம் ஆகவே எப்படி சிறீ லங்காவை புறகணிப்பது" என்று வெட்கம் கெட்டு கேட்கும் உங்களைப் போன்ற தமிழர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை சொல்கின்றது. எங்கள் வீட்டில் நுணுக்குக் கண்ணாடி வைத்துத் தேடினும் சிறீ லங்கன் சாமான்களை மருந்துக்கும் காணமுடியாது. வட இந்தியனின் இந்தி மொழி படங்களையோ பாட்டுக்களையோ கேட்கவும் முடியாது. சன் /கலைஞன் போன்ற குப்பை ரீவீக்களை காணவும் முடியாது. சந்தேகம் என்றால் என் வீட்டுக்கு வந்து பழகும் ஏனைய கனடிய தமிழ் சில உறவுகளை விட்டு தேடிப்பார்ர்க சொல்லவும்

Edited by நிழலி

அருமையான அற்புதமான யதார்த்தமான கட்டுரை பாராட்டுக்கள் சயந்தன்

என்னைப் பொறுத்மட்டில் தமிழர் என்ற இனமே இந்த உலகத்தில் இருக்கக் கூடாது

இந்த இனத்தால் எல்லோருக்கும் எப்போதும் ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டே

இருக்கும்.....................

தமிழன் என்பவன் தன் கடமையை சரிவர செய்ய மாட்டான் ஆனால் மற்ரவன்

அவனுக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்ற சுயநல போக்கை கொண்டவன்

நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை பறக்கணித்தாலே

நாங்கள் எவ்வளவை சாதித்திருக்கலாம்............................சாதிக்கலாம்..................

தன் இனத்தை குண்டு மழையில் நனைய வைத்து கொத்து கொத்தாக கொண்டு குவிக்க இரவு பகலாக உறக்கம் இன்றி உணவு இன்றி ஓய்வு இன்றி உழைத்து பணம் அனுப்பிய இனம் என்றால் அது எங்களின் தமிழ் இனம் தான் என்பதை இந்த உலகமே நன்கு அறியும்!!!!!

அவ்வளவு நாட்டுப்பற்று மொழி பற்று கொண்ட இனம்........................எங்கள் இனம்.......................

எங்களின் அத்தனை முக்கிய கடமைகளையும் நாங்கள் புறக்கணித்து விட்டு....... எவனோ ஒருவன் தன் தொழிலாம்

திரைப்பட தொழிலில் எங்களை கேலி செய்கிறானாம் பண்ணிறானாம் புடுங்கிறாம் அதால படத்தை புறக்கணியுங்கள்

பாட்டை புறக்கணியுங்கள் எண்டு கத்துறாங்கள்...................(அவன் தன் தொழிலை சரியாக செய்திருக்கிறான்)

இதே படத்தை நீங்கள் ஏற்கனவே எழுதியது போல் சீமான் எடுத்திருந்து அன்ரனி இசை அமைத்திருந்தால்

பிரமாண்டமான போஸ்டர்கள் அமைத்து விளம்பரம் பிச்சுக் கொண்டு போயிருக்கும்!!!!!!!

இறுதியாக.... எங்கள் இனம் யுhதர்களின் இனத்திற்கு சமன் என தம்பட்டம் அடிக்கும் இந்த துப்புக் கெட்ட தமிழர்கள்

அந்த இனத்திடம் இருக்கும் ஒற்றுமையில ;ஒரு சிறு துளி எண்டாலும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்களா??????

தமிழர்கள் நாங்கள் மற்ரவனைக் குறை கூறியும் பெரிய பெரிய பேச்சுக்களை பேசியுமே எல்லாவற்றையும் வைக்கோல் பட்டடை

நாய் போல் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்..................

புலத்து தமிழன் படத்தை நிராகரித்தால் பொருளாதார நட்டமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லை................

அதை நிவர்த்தி செய்ய அடுத்த படம் தமிழருக்கு சார்பாக எடுத்தே அதை நிரப்பி விடுவார்கள்

ஏனெனில் அடுத்த படம் எமக்கு சார்பாக வரும் போது நாங்கள் போஸ்டர் ஒட்டி அதிக பணம் கொடுத்து

வாங்கி புலத்தில ஓட விடுவம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்

ஏனெனில்

அவர்கள் தொழில் நடிப்பது எப்படியும் நடித்து விட்டு போவார்கள்...................

நாங்கள் அறிவாளிகள் என அலட்டிக் கொள்ளும் கோணங்கிகள் அவைக்கு பின்னால

சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் வெட்கம் மானம் சுhடு சுறணை இல்லாமல் போவம் எல்லோ...........................

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொருட்களையும் இலங்கை விமானசேவையையும் புறக்கணிக்க வக்கில்லாத, சிறீ லங்கா தேசிய கிரிக்கெட் அணிக்கு வக்காலத்து வாங்கும் மரத்துப் போன புலம் பெயர் சூரருக்கு வெற்று கோசம் போடக்கூடிய விஜய் / அஜித் சினிமா எதிர்ப்பு என்ற போராட்டம் கூட சரிவராது என்பதை தெளிவாக எழுதியுள்ளீர்கள் சயந்தன்

சூடு சுரணையற்ற, இலங்கை கிரிக்கெட் அணிக்கு குண்டி கழுவ விரும்பும், "Sri Lankan Nationality நாம் ஆகவே எப்படி சிறீ லங்காவை புறகணிப்பது" என்று வெட்கம் கெட்டு கேட்கும் உங்களைப் போன்ற தமிழர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை சொல்கின்றது. எங்கள் வீட்டில் நுணுக்குக் கண்ணாடி வைத்துத் தேடினும் சிறீ லங்கன் சாமான்களை மருந்துக்கும் காணமுடியாது. வட இந்தியனின் இந்தி மொழி படங்களையோ பாட்டுக்களையோ கேட்கவும் முடியாது. சன் /கலைஞன் போன்ற குப்பை ரீவீக்களை காணவும் முடியாது. சந்தேகம் என்றால் என் வீட்டுக்கு வந்து பழகும் ஏனைய கனடிய தமிழ் சில உறவுகளை விட்டு தேடிப்பார்ர்க சொல்லவும்

நிழலி மற்றவர்களோட கருத்தாடும் போது மரியாதையாக கருத்தாடப் பாருங்கள்..ஏதோ நீங்கள் மட்டும் தான் போராட்டத்திற்கு எல்லா வகையிலும் உதவிற மாதிரியும் மற்றவ்ர்கள் ஒன்றும்

தெரியாத பேயர்கள் என்கிற மாதிரி தான் நீங்கள் கருத்து எழுதுகிறீர்கள்...கிரிக்கட் பற்றி விமர்ச‌னம் வைக்கிறது என்றால் அதை அந்த பகுதியில் வையுங்கள் அதை விடுத்து தேவையில்லாத பகுதிகளில் அதை புகுத்தாதீர்கள்...உங்கள் போராட்ட உணர்வை மதிக்கிறேன் அதேவேளை என்னை பொறுத்த வரை இலங்கை அர‌சுக்கும் எமக்கும் நட‌ப்பது உரிமை பிர‌ச்ச‌னை அவர்கள் எங்கள் எதிரிகள் ஆனால் இந்தியாவிற்கு இது தேவையில்லாத பிர‌ச்ச‌னை.நீங்கள் மேலே எழுதியிருந்தீர்கள் வட‌ இந்தியா பொருட்களை புறக்கணிப்பததாக ஏன் தென்னிந்தியா எந்த வகையில் ஈழத்திற்கு உதவியது அவர்கள் பொருட்களை பாவிப்பதற்கு சொல்லப் போனால் தென்னிந்தியா பொருட்களை தான் நாம் முதலில் புறக்கணிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் தான் மொழியால் இனத்தால் எம்மோடு ஒன்றுபட்டவர்கள் அப்படியிருந்தும் பக்கத்தில் இனப் படுகொலை நட‌க்க பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் ஆனால் நாங்கள் அதைப் புறக்கணிக்க மாட்டோம் அதையும் புறக்கணிச்சால் எதை சாப்பிடுறது...என்னைப் பொறுத்த வரை

இந்த புறக்கணிப்பு என்னும் போது கலைஞ்ர் டிவி,சன் டிவி வீட்டில் வைத்திருத்தல் மட்டும் தான் குற்ற‌ம் என்டு இல்லை அத்தோடு இனையத்தில் தமிழ் பட‌ங்கள் பார்ப்பது,மானாட‌ மயிலாட‌ பார்ப்பதும் ஏன் தமிழ் பாட்டு கேட்பதும் பிழை தான்.

மனச்சாட்சி உள்ள எவரும் இலங்கை கிரிக்கட் அணிக்கு ஆத‌ர‌வு அளிப்பது எவ்வள‌வு அதே பிழையோ[என்னையும் சேர்த்து தான்] அதே அளவு பிழை இனையத்தில் தமிழ் பட‌ங்கள் பார்ப்பதும்,பாட்டுக் கேட்பதும்.இதை வைத்துக் கொண்டு நீங்கள் நினைக்காதீர்கள் புறக்கணிப்புக்கு நான் எதிரி என பொருளாதார‌ ரீதியான புறக்கணிப்பை என்னால் முடிந்தள‌வு நான் கடைப் பிடிக்கிறேன்.

மரியாதை என்பதை உங்களிடம் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் என்னிடம் இல்லை

இந்த கட்டுரைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஜீவா என்னை இழுத்து என் பெயரை காழ்ப்புணர்வுடன் வேண்டுமென்றே குறிப்பிட்டது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கான என்னுடைய பதில் மட்டும் உங்களுக்கு மிகவும் குத்துகின்றது. அவர் எந்த நோக்கத்திற்காக என் பெயரை சயந்தனின் இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் இழுத்தாரோ அதே காரணத்திற்காகத் தான் கிரிக்கெட்டை நானும் பயன்படுத்தினேன். மரியாதை என்பது கொடுத்து வாங்குவது, கொடுக்காதவருக்கு அதே மொழியில் பதில் எழுதாமல் கண்ணியமாக எழுதி என்னை பராமாத்மாவாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை

இலங்கை தேசியத்தை புறக்கணி என்று சொன்னால், படம் பார்க்காதே என்பதும் எம் கொலைகளை நியாயப்படுத்திய கலைஞர், சன் ரீவியை புறக்கணி எனச் சொன்னால் பாட்டுக் கேட்காதே என்பதும் அவற்றை புறக்கணிக்க மனமின்றி சொல்லப்படும் போலிக் காரணங்கள். சிறிலங்கா அணியிற்கு இருக்கும் அரசியல் பாத்திரத்தை நெடுக்காலபோவான் மிகத் தெளிவாக இதைப் பற்றிய திரியில் எழுதியிருக்கின்றார்..போய் வாசித்து விளங்கிக் கொள்ளப் பாருங்கள்

அத்துடன், தமிழக உறவுகளுக்கும் எமக்கிடையுமான உறவு வெறும் மொழி ரீதியிலான உறவுதான் என சொல்லிக் கேவலப்படுத்தியதில் இருந்து தெரிகின்றது உங்களின் அரசியல் அறிவு

நன்றி

பி.கு: இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று சொல்லிவிட்டு இலங்கை மீன் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போலி பேர்வழி என்ற பொருள்பட என்னைப் பற்றி, என்னுடன் எந்தவிதமான நேரடி பழகுதலும் இன்றி எழுந்தமானமாக தீர்மானித்து ஜீவா எழுதியதை மிக உச்ச பட்ச அவதூறாகவே கொள்வேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டைக்காரன் பார்ப்போம்.

'உடன் மீன்" வாங்கிச் சாப்பிடுவோம்.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் பயணிப்போம்.

ஹிந்திப் படமும் பார்ப்போம்.

இந்தியத் தொலைக்காட்சிகளையும் பார்ப்போம்.

அத்துடன் "தமிழ்த் தேசியத்துக்கும்" சேவை செய்வோம்.

சந்தைப் பொருளாராத்தில் நம்பிக்கைகொண்ட ஜனநாயக நாட்டில் வாழ்பவர்களுக்கு சகல உரிமைகளும் உள்ளது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் கேவலம் கெட்ட இனங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் நிச்சயமாக முதல் மூன்றுக்குள் இடம்பிடிக்கக் கூடியதொரு இனத்தை இத்தனை தூரம் இழுத்துவைத்து நக்கலடிப்பது முறையன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பொருட்களையும் இலங்கை விமானசேவையையும் புறக்கணிக்க வக்கில்லாத, சிறீ லங்கா தேசிய கிரிக்கெட் அணிக்கு வக்காலத்து வாங்கும் மரத்துப் போன புலம் பெயர் சூரருக்கு வெற்று கோசம் போடக்கூடிய விஜய் / அஜித் சினிமா எதிர்ப்பு என்ற போராட்டம் கூட சரிவராது என்பதை தெளிவாக எழுதியுள்ளீர்கள் சயந்தன்

சூடு சுரணையற்ற, இலங்கை கிரிக்கெட் அணிக்கு குண்டி கழுவ விரும்பும், "Sri Lankan Nationality நாம் ஆகவே எப்படி சிறீ லங்காவை புறகணிப்பது" என்று வெட்கம் கெட்டு கேட்கும் உங்களைப் போன்ற தமிழர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை சொல்கின்றது. எங்கள் வீட்டில் நுணுக்குக் கண்ணாடி வைத்துத் தேடினும் சிறீ லங்கன் சாமான்களை மருந்துக்கும் காணமுடியாது. வட இந்தியனின் இந்தி மொழி படங்களையோ பாட்டுக்களையோ கேட்கவும் முடியாது. சன் /கலைஞன் போன்ற குப்பை ரீவீக்களை காணவும் முடியாது. சந்தேகம் என்றால் என் வீட்டுக்கு வந்து பழகும் ஏனைய கனடிய தமிழ் சில உறவுகளை விட்டு தேடிப்பார்ர்க சொல்லவும்

நிழலி அண்ணா,

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ.

என்றதற்கு நான் இதை நிழலி அண்ணாக்கு சொல்லவில்லை தானே என்றது ஒரு திரியில் நீங்களே சொல்லி உள்ளீர்கள் வேட்டைக்காரனை இலவசமாக தரையிறக்கி பார்க்கலாம் யாழிணையம் அனுமதித்தால் அந்த தளங்களை இணைத்துவிடலாம் என்று சொல்லி இருந்தீர்கள்

(நிழலி

அசுரன்

Group:கருத்துக்கள உறவுகள்

Posts:1,775

Joined:30-January 08

Gender:Male

Location:Canada

Interests:நக்கல் நையாண்டி செய்வது,தண்ணி அடிப்பது, , அரட்டை அடிப்பது, பெண்களிடம் வழி

ஹிஹி... நான் தியேட்டரில் போய்ப் படம் பாத்து பல காலமாகி விட்டது... திருட்டுத்தனமாக தரவிறக்கிக் கொள்ள ஊருப்பட்ட இணையத்தளங்கள் இருக்கும் போது, நான் ஏன் தியேட்டருக்குப் போய் காசை வீணாக்க போறேன்? )

அதற்காக சொன்னேனே தவிர உங்களை மனச்சஞ்சலம் செய்யவல்ல அப்படி நான் உங்களை மனவருத்தத்திற்கு ஆளாக்கியிருப்பின் அதுக்காக நான் மன்னிப்புக்கேட்கிறேன்.

மற்றும் படி யாருக்கு குண்டி கழுவணும் எப்படி இருக்கணும் என்பதை தீர்மானிப்பது நானே தவிர மற்றவர்கள் அல்ல.

நான் கனேடியன் சிற்றிசனாக இருப்பதை விட சிறீலங்கன் சிற்றிசனாக இருப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். கனடியன் போட்ட அகதி பிச்சையான குடியுரிமையை விட நான் பிறந்த இலங்கையின் குடிமகனாக இருக்கவே விரும்புகிறேன்.

உங்கள் வீட்டில் என்ன இருக்கு என்று பார்க்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நீங்கள் இப்படி இருப்பது உங்கள் விருப்பம் அதே போல் நீங்கள் இருப்பது போல் தான் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை தானே.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை என்பதை உங்களிடம் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் என்னிடம் இல்லை

இந்த கட்டுரைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஜீவா என்னை இழுத்து என் பெயரை காழ்ப்புணர்வுடன் வேண்டுமென்றே குறிப்பிட்டது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கான என்னுடைய பதில் மட்டும் உங்களுக்கு மிகவும் குத்துகின்றது. அவர் எந்த நோக்கத்திற்காக என் பெயரை சயந்தனின் இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் இழுத்தாரோ அதே காரணத்திற்காகத் தான் கிரிக்கெட்டை நானும் பயன்படுத்தினேன். மரியாதை என்பது கொடுத்து வாங்குவது, கொடுக்காதவருக்கு அதே மொழியில் பதில் எழுதாமல் கண்ணியமாக எழுதி என்னை பராமாத்மாவாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை

இலங்கை தேசியத்தை புறக்கணி என்று சொன்னால், படம் பார்க்காதே என்பதும் எம் கொலைகளை நியாயப்படுத்திய கலைஞர், சன் ரீவியை புறக்கணி எனச் சொன்னால் பாட்டுக் கேட்காதே என்பதும் அவற்றை புறக்கணிக்க மனமின்றி சொல்லப்படும் போலிக் காரணங்கள். சிறிலங்கா அணியிற்கு இருக்கும் அரசியல் பாத்திரத்தை நெடுக்காலபோவான் மிகத் தெளிவாக இதைப் பற்றிய திரியில் எழுதியிருக்கின்றார்..போய் வாசித்து விளங்கிக் கொள்ளப் பாருங்கள்

அத்துடன், தமிழக உறவுகளுக்கும் எமக்கிடையுமான உறவு வெறும் மொழி ரீதியிலான உறவுதான் என சொல்லிக் கேவலப்படுத்தியதில் இருந்து தெரிகின்றது உங்களின் அரசியல் அறிவு

நன்றி

பி.கு: இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று சொல்லிவிட்டு இலங்கை மீன் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போலி பேர்வழி என்ற பொருள்பட என்னைப் பற்றி, என்னுடன் எந்தவிதமான நேரடி பழகுதலும் இன்றி எழுந்தமானமாக தீர்மானித்து ஜீவா எழுதியதை மிக உச்ச பட்ச அவதூறாகவே கொள்வேன்

நிழலி ஜீவா உங்களை எந்த காரணத்திற்கு இழுத்தாரோ தெரியாது எனக்கு கோபம் வந்தது நீங்கள் கிரிக்கட் பற்றிய விமர்ச‌னத்தை இதில் புகுத்தியது. அதைப் பற்றி விளையாட்டுப் பகுதியில் நீங்கள் எழுதியவுட‌ன் நான் நீங்கள் சொல்வது சரி எனத் தான் சொன்னேன் எனது விளக்கத்தையும் எழுதியிருந்தேன் அதன் பின்னரும் அதை பற்றி இத் த‌லைப்பில் நீங்கள் எழுதியது என்னை அவமானப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன் அது தான் நான் தலையிட‌ வேண்டி வந்தது.

எனக்கு அறிவு இல்லை தான் நீங்கள் மெத்தப் படித்தவர் உங்களிட‌ம் அது அதிகமாகவே காணப்படும்...தமிழக உறவுகளும் நாங்களும் தொப்பில் கொடி உறவுகள் என்பீர்கள் அதே தொப்பிள் கொடி உறவுகள் தான் பக்கத்தில் இவ்வள‌வு பெரிய அநியாயம் நட‌க்க பார்த்துக் கொண்டு இருந்தது[ஒரு சிலரை தவிர‌].

இலங்கைப் பொருட்களை நான் புறக்கணிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை நானும் புறக்கணித்து கொண்டு தான் இருக்கிறேன்..உங்களிட‌ம் எப்படி குப்பை தொலைக்காட்சிகள் இல்லையோ அதே போல என்னிட‌மும் இல்லை..எனது மனசாட்சிக்கு தெரியும் நான் என்ன செய்கிறேன் என ஆனால் எந்த விதத்தில் இந்தியர்கள் அதுவும் தென்னிந்தியர்கள் எங்கள் போராட்ட‌த்திற்கு உதவினார்கள் அவர்களை புறக்கணிக்காமல் விட‌ நீங்கள் சரியான விளக்கம் கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் கிரிக்கட் பதிவிலேயே எழுதியிருந்தேன் அப்படி ஒரு போட்டி இரு நாடுகளுக்கிடையே நட‌ப்பது அதை இனைத்த பிறகு தான் தெரியும் அதில் தான் எனது கருத்தை எழுதினேன்..நான் போட்டியை பார்க்க நேர‌டியாய் போகவில்லை..இனையத்தில் பார்க்கவில்லை...தொலைக்காட்சியில் பார்க்கவில்லை சும்மா ஒரு கருத்து தான் எழுதினேன் அது பிழை தான் நான் ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் அது எப்படி 100க்கு 100% பிழையோ அதே போல பிழை நீங்கள் இனையங்களில் பட‌ம் பார்ப்பதும்,பாட்டு கேட்பதும் என நான் நினைக்கிறேன்.இல்லையாயின் எந்த விதத்தில் சரி என எழுதுங்கள் உண்மையாயின் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் கடைசியாகவும் சொல்கிறேன் இலங்கையை மாத்திர‌ம் இல்லை இந்தியாவையும் அதுவும் தென்னிந்தியாவையும் சேர்த்து புறக்கணிக்க வேண்டும் என்பதே என் கருத்து.நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணையை யாரும் கண்ட நீங்களோ???? :):):D

நிழலி அண்ணா,

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ.

என்றதற்கு நான் இதை நிழலி அண்ணாக்கு சொல்லவில்லை தானே என்றது ஒரு திரியில் நீங்களே சொல்லி உள்ளீர்கள் வேட்டைக்காரனை இலவசமாக தரையிறக்கி பார்க்கலாம் யாழிணையம் அனுமதித்தால் அந்த தளங்களை இணைத்துவிடலாம் என்று சொல்லி இருந்தீர்கள்

நான் அதை மறுக்கவில்லையே ஜீவா. ஆனால் இரண்டாம் வரியில் 'மீனை இணையத்தில் சமைச்சு சாப்பிடலாமோ' எனக்கேட்டது என்ன அர்த்ததில்? இலங்கை மீனை வாங்கி பயன்படுத்துகின்றேன் என்ற அர்த்ததில் தான் அதனை எழுதியுள்ளீர்கள். முதலாம் வரியுடன் நின்று இருந்தால் அது நகைச்சுவை. ஆனால், இரண்டாம் வரி நகைச்சுவை இல்லை. வெறும் எழுந்தமானமாக எப்படி இலங்கை பொருட்களைப் பயன்படுத்துகின்றேன் என்று உங்களால் எழுத முடிகின்றது?

மற்றும் படி யாருக்கு குண்டி கழுவணும் எப்படி இருக்கணும் என்பதை தீர்மானிப்பது நானே தவிர மற்றவர்கள் அல்ல.

நான் கனேடியன் சிற்றிசனாக இருப்பதை விட சிறீலங்கன் சிற்றிசனாக இருப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். கனடியன் போட்ட அகதி பிச்சையான குடியுரிமையை விட நான் பிறந்த இலங்கையின் குடிமகனாக இருக்கவே விரும்புகிறேன்.

உங்களை பற்றி இதனை விட யாராலும் தெளிவாக விளக்க முடியாது

Edited by நிழலி

நிழலி ஜீவா உங்களை எந்த காரணத்திற்கு இழுத்தாரோ தெரியாது எனக்கு கோபம் வந்தது நீங்கள் கிரிக்கட் பற்றிய விமர்ச‌னத்தை இதில் புகுத்தியது. அதைப் பற்றி விளையாட்டுப் பகுதியில் நீங்கள் எழுதியவுட‌ன் நான் நீங்கள் சொல்வது சரி எனத் தான் சொன்னேன் எனது விளக்கத்தையும் எழுதியிருந்தேன் அதன் பின்னரும் அதை பற்றி இத் த‌லைப்பில் நீங்கள் எழுதியது என்னை அவமானப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன் அது தான் நான் தலையிட‌ வேண்டி வந்தது.

ஜீவாக்கு எழுதிய பதில் உங்களை அவமானப்படுத்தியதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களின் பெயரையோ அல்லது, மறைமுகமாகவோ கூட உங்களை நான் குறிப்பிடவில்லை என்பதை மீண்டும் வாசித்துப் பார்த்து புரிந்து கொள்ள முயலுங்கள்.

நான் கடைசியாகவும் சொல்கிறேன் இலங்கையை மாத்திர‌ம் இல்லை இந்தியாவையும் அதுவும் தென்னிந்தியாவையும் சேர்த்து புறக்கணிக்க வேண்டும் என்பதே என் கருத்து.நன்றி வணக்கம்

உங்களின் இதே வாதத்தை இன்னும் கொஞ்சம் நீட்டிப்பார்க்கலாம்

இலங்கைப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று சொன்னால்

ஏன் சீனாவும் ஆயுதம் கொடுத்தது தானே சீனப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்,

அமெரிக்கா தான் முதல்தர கரையோர கப்பல்களை வழங்கி இலங்கை கப்பற்படையை பலமாக்கியது, எனவே அமெரிக்க பொருட்க்கள் மைக்ரோசொவ்ட் உட்பட அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்

அப்படியே ஜப்பான் பொருட்களை (கார்கள் உட்பட), பிரித்தானியாவின் பொருட்களை (தடைசெய்யப் பட்ட தேமோபெரிக் ஆயுதத்தில் இருந்து ஏனையவற்றை வழங்கியமை), மத்திய கிழக்கு நாடுகளின் பொருட்களை.....என நீட்டிக்கொண்டு போகமுடியும்

இப்படி நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை நீட்டிக் கொண்டு போவற்கு இருக்ககூடிய ஒரே ஒரு காரணம் இலங்கை பொருட்களை புறக்கணிக்க, இலங்கை தேசியத்தை புறக்கணிக்க விருப்பமின்மையே. இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் எனும் போராட்டத்தை தோற்கடிக்கச் செய்யப்படும் ஒரு வாதமாகவே பலர் இப்படி பல நடைமுறை சாத்தியமற்றவற்றை முன்வைக்கின்றனர்.

சயந்தனின் கட்டுரை சொல்வதே 'இலங்கைப் பொருட்களையே புறக்கணிக்காத இனமான எமக்கு வேட்டைக்காரன் புறக்கணிப்பு பொன்ற மென் இலக்குகளைக் கூட அடையக்கூடிய எந்த தகுதியும் இல்லை என்பதையே. அவ்வாறான அற்புதமான ஒற்றுமை கொண்ட இனம்தான் நாம். அந்த அற்புத ஒற்றுமையை உங்களைப் போன்றவர்களின் வாதங்கள் இன்னும் பலப்படுத்தும்... வாழ்க

அத்துடன், உங்களுக்கு தென்னிந்தியர்கள் மீது, குறிப்பாக தமிழக மக்கள் மீது என்ன கோபம் என்று தெரியாது. ஆனால், ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். உலகம் பூராவும் எம் துயரங்களை காட்ட வீதி வீதியாக கவனயீர்ப்பு செய்து கதறி அழும் போது எந்த ஒரு இனமும் எமக்காக ஒரு சொட்டு கண்ணீரைக் கூட விடவில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து தான் ஆகக் குறைந்த அளவிலேனும் எமக்காக சில சொட்டு கண்ணீர் துளிகள் கிடைத்தன. அவை அரசியல் ரீதியில் எந்த ஒரு காத்திரமான மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் விட்டு இருக்கலாம். ஆனால் எமக்கா கண்ணீர் விட தமிழகத் தமிழர்கள் மட்டும்தான் இன்றும் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

@சயந்தன்: மன்னிக்கவும் இந்த திரியை தேவையில்லாமல் நீட்டியமைக்கு. இனி இந்த திரியில் உங்கல் கட்டுரை சார்பான கருத்துகள் தவிர வேறு ஒன்றையும் எழுதுவதை தவிர்க்கின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அதை மறுக்கவில்லையே ஜீவா. ஆனால் இரண்டாம் வரியில் 'மீனை இணையத்தில் சமைச்சு சாப்பிடலாமோ' எனக்கேட்டது என்ன அர்த்ததில்? இலங்கை மீனை வாங்கி பயன்படுத்துகின்றேன் என்ற அர்த்ததில் தான் அதனை எழுதியுள்ளீர்கள். முதலாம் வரியுடன் நின்று இருந்தால் அது நகைச்சுவை. ஆனால், இரண்டாம் வரி நகைச்சுவை இல்லை. வெறும் எழுந்தமானமாக எப்படி இலங்கை பொருட்களைப் பயன்படுத்துகின்றேன் என்று உங்களால் எழுத முடிகின்றது?

நிழலி அண்ணா,

மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். அந்த வரியை ஒரு தொடராகவே சொனேனே தவிர உங்களை இலங்கைப் பொருளை பாவிக்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் நிச்சயமாகச் சொல்லவில்லை. அப்படி ஒரு தேவையும் எனக்கில்லை எனக்கு உங்களை முன்னபின்ன தெரியாது, உங்கள் மீது எந்த கோபமோ அல்லது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ எதுவும் இல்லை...அப்படி இருந்தும் உங்களை பற்றி எழுந்தமானதாக எழுதியதாக நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை பற்றி இதனை விட யாராலும் தெளிவாக விளக்க முடியாது

நிச்சயமாக விளக்கமுடியாது ஏனென்றால் நான் சொல்வதைச் செய்வேன் ..செய்யுறதைத்தான் சொல்வேன்.

உணர்ச்சிவசப்பட்டோ இல்லை தமிழ்த்தேசியவாதியோ என்று வேசம் போடவோ,நடிக்கவோ இல்லை(அதுக்காக நான் உங்களை அப்படிச் சொல்ல வரவில்லை)

தமிழீழத்திற்காகவோ அல்லது தமிழரின் நலனுக்காகவும் எதுவும் செய்வோம்..தேவை என்றால் என்னை அடையாளப்படுத்த வேண்டிய அத்தனை விடயங்களையும் உங்களுக்கு தர தயார் அதற்காக வெறும் கனவுகளோடு மட்டும் வாழ அல்லது நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படவும் தயாரில்லை...

எல்லாரும் அம்மணமாக நிற்கும் போது நான் மட்டும் கோவணத்தோடு நின்றால் நான் தான் முட்டாள் என்பதும் எனக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் இதை வாசித்தால்

என்னதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் யுத்தகாலத்தில் உதவி செய்தாலும் அவர்கள் அனுப்பிய அந்த கப்பலில் உள்ள உணவு கிடைக்க எவ்வளவு நாள் எடுத்தது அதுவும் கிடைத்தும் கிடைக்காமலும் போனது ஆனால் இந்த கலைஞர் [தமிழக மக்கள்] அனுப்பிய உணவு கிடைத்தது மக்கள் பெற்று படங்களும் செய்திகளாக வந்தது ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன் அன்று அந்த உணவு இல்லாவிட்டால் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் ,எத்தனை பேர் பட்டினியல் துடி துடித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .ஆக அது கலைஞரால் முடிந்தது அதற்க்காக நான் கலைஞர் ஆள் கிடையாது இலங்கையில் இருக்கும் எங்களை போன்றோர்களுக்கு [தமிழர்களுக்கு] இவர்களின் உதவி தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அது விஜய் ஆகட்டும் கருணாநிதியாகட்டும்

இதே சினிமா துறையினர் உண்ணாவிரதம் இருந்து இலங்கை தமிழர்களுக்கு நிதி திரட்டியும் அளித்துள்ளார்கள்

மற்றது இதே மேடையில் ரஜனிகாந் அமர்ந்திருந்தார்[சிவாஜி படத்தை புறக்கணித்தை அவர் நினைத்திருந்தால்] அவர் வழங்கிய நிதி

இதே போல் சூர்யா [ஆனால் நாம் அயனுக்கு ஆப்பு வைப்போம்]

ஆக மொத்தத்தில் நமக்கு எல்லாமே சாதமாக நடக்க வேணும் வாழ்க தமிழர்கள் :):)

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ...ஜயோ...என்று வடிவேலு சொன்னமாதிரித்தான் சொல்லவேணும்....இந்தப் படம் வெளிநாட்டு வினியோக உரிமையை ஜங்கரன் நிறுவனம் வாங்க முயற்சித்தது..ஆனால் படத்தினை மாறன் குடும்ப நிறுவனமே நேரடியாக வெளிநாடுகளில் வெளியிட முடிவு செய்த பொழுதுதான் திடீரென ஒரு காரணம் தேடியெடுக்கப் பட்டு புறக்கணிப்பு அறிக்கைகள் சீறிவரவே ..மாறன் நிறுவனம் தனக்கு நட்டம் வந்து விடும் என்கிற பயத்தில் மொத்தமாக ஜங்கரன் நிறுவனத்திற்கே படத்தை விற்று விட்டார்கள்...பிறகென்ன ஜங்கரன் நினைத்தது நடந்து விட்டது..உடனடியாகவே ஜங்கரன் நிறுவனம் அனைத்து நாடுகளிற்கும் பட உரிமையை பிரித்து விற்றுவிட்டார்கள்.. தேசியம் என்று மார் தட்டும் ஊடகங்களில் சுடச்சுட விளம்பரம் போடப்பட்டது..புறக்கணிப்பு பிசுபிசுத்தது... இனி படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும்....இங்கு விஜய்யோ...மாறன் நிறுவனமோ..தமிழ்நாடோ இந்தியாவோ ஜங்கரன் நிறுவனமோ பாதிக்கப் படப் போவதில்லை....எல்லா நாடுகளிலும் தியேட்டர்களில் படம் ஓடும் உரிமையை வாங்கிய ஈழத்தமிழ் வியாபரிகள்தான். பாதிக்கப் போகிறார்கள் ..வாங்கிய படப் பெட்டியை வீட்டில் வைத்து அழகு பார்க்கவும் முடியாது எப்படியாவது ஓட்டியாக வேண்டும்..... மொத்தத்தில் இதுவும் நமக்கு நாமே மண்ணை அள்ளி போட்ட விடயம்தான்...எனவே தொடர்ந்து புறக்கணிப்போம்...... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் பாருங்க எப்படியெல்லாம் எழுதிறாங்கள் என்று

முட்டை போடும் புலிகள்.

விஜய் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் வேட்டைக்காரன். இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாதென புலிகள் தடை விதித்துள்ளார்கள். எனினும் கனடாவில் புலிகளின் மிரட்டல்களையும் மீறி படம் அரங்கம் நிறந்த காட்சிகளாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் புலிகள் மக்களை நோக்கி முட்டைகளை வீசியுள்ளார்கள். அரங்க நிர்வாகத்தினர் உள்ளே வந்ததும் முட்டைப் புலிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்து விட்டார்கள். குண்டு போட்ட புலிகள் இப்போ முட்டை போடுகிறார்கள் என மக்கள் பேசிக்கொண்டார்கள். எனினும் தலைவன் வழியில் தொடர்ந்தும் வன்முறை குழுக்களாகவே செயல்பட்டு வருகிறார்கள். வாழ்க தலைவன்.

______________________________________________

இதைத்தான் சொல்லுவது பொல்லைக்குடுத்து அடிவாங்குவது என்று....

சிலர் செய்யும் முட்டாள் தனங்களால் அவமானம் தமிழருக்கும்,புலிகளுக்கும் தான்.

யாரோ சிலரின் செயற்பாடுகளுக்கும் புலிகள் மீது தான் பழி.

  • கருத்துக்கள உறவுகள்

------

இதைத்தான் சொல்லுவது பொல்லைக்குடுத்து அடிவாங்குவது என்று....

இது மட்டும் இல்லை ஜீவா ,அண்மைக்காலமாக சில விடயங்களில் .....

பொல்லைக் கொடுத்து , அடிவாங்கும் நிலைமையில் தான் தமிழர் இருக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.

கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.

“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”

vijay.jpg

சயந்தன் மீன் நாறிப்போச்சு இனிப்புறக்கணிப்பமில்லை. :lol:

பொல்லைக் கொடுத்து , அடிவாங்கும் நிலைமையில் தான் தமிழர் இருக்கிறார்கள்.

இதுதான் தொடர்ந்த நடைமுறை. இப்பிடி நல்ல இனமாக தமிழினம் இருக்குதே....

.எனவே தொடர்ந்து புறக்கணிப்போம்...... :lol: :lol: :)

தொடர்ந்து தொடர்ந்து புறக்கணித்துப் புறக்கணித்து வேட்டைக்காரன் கோட்டைக்காரனையெல்லாம் வெற்றிபெற வைப்போம். :lol:

கனடாவில் வேட்டைக்காரன் அந்த மாதிரி ஓடுது.எனக்கும் முதல் நாள் பார்பதற்கு இரண்டு கொம்பிளிமென்ஸ் டிக்கெட்டுக்கள் கிடைதது,விஜெயின் படத்தை தியேட்டரில் போய்ப் பார்க்கும் வயசு எனகில்லை.மருமகனுக்கு கொடுத்துவிட்டேன்.இவ்வளவு நாளும் இங்கு படம் ஓடுபவர்கள் இந்தப்படத்தை ஓடவில்லை.புது ஆட்கல் "பிளாட்டினம் கிரியேசன்ஸ்" என்று இருந்தது.$140,000 கொடுத்து வாங்கினார்களாம்.இரண்டு நாட்களில் போட்ட காசு எடுத்து விடுவார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் எதுவாக இருந்தாலும் "புறக்கணிப்பு" என்று ஒன்றை கொண்டுவந்ததே அது சாத்தியமோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட முட்டாள் கூட்டத்தை கட்டி மேய்க்கவே.இந்தக் கூட்டங்கள் இருக்கும் வரை இந்த மேய்ப்புக்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அது வட்டுக்கோட்டைத்தீர்மானம் ஆக இருக்கலாம்,நாடு கடந்த அரசாக இருக்கலாம்,அல்லது இனி புதுசாக ஒன்று வரலாம்

திருக்குவளையில் இருந்து வந்த கருணாநிதி இன்று கோடீஸ்வரனாக இருப்பது தமிழ்நாட்டில் இப்படி மேய்க்ககூடிய சனம் கனக்க இருக்கு என்று புரிந்தபடியாலே அதைத்தான் எமது போராட்டத்திலும் பலர் செய்கின்றார்கள்.

யாரும் எதிர்த்து வாயைத் திறந்தால் ரெடிமேட் பட்டங்கள் பல வைத்திருக்கின்றார்கள் ஒன்றை கட்டி விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.