Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ள விரிவான தகவல்கள்

Featured Replies

சரணடைந்ஜெயராஜ் எழுதியுள்ள விரிவான தகவல்கள் .த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ்.

.இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில் நடேசன் உட்பட சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது:-

சரணடைதல் தொடர்பான பேச்சுக்கள்

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பாக விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்ட பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் விடுதலைப்புலிகளின் சார்பாக சரணடையும் விடயம் தொடர்பாக பேசியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக பிரிட்டன் ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஐ.நா.செயலளார் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரை அதிகாலை 5.30 மணிக்கு நித்திரையால் எழுப்பி, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதாக அறிவித்துள்ளார்கள் என்றும் ஐ.நா. அதிகாரி என்ற வகையில் விஜய் நம்பியார் அங்கு சென்று அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் நம்பியார், இது தொடர்பாக சிறிலங்கா அரசஅதிபருடன் தான் பேசியதாகவும் சரணடைவர்களின் பாதுகாப்புக்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, நடேசனுடன் தொடர்பிலிருந்த இன்னொருவரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பியான அரியநேந்திரன் சந்திரகாந்தன் சிறிலங்கா அரசதலைவருடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி சரணடையும் நடைமுறைகள் தொடர்பாக அரசுக்கு புலிகள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்துவந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும்போது அங்கு தான் செல்லவிரும்புவதாகவும் சந்திரகாந்தன் எம்.பி மகிந்தவிடம் கூறினார். ஆனால், அதற்கு பதிலளித்த மகிந்த, போர் நடைபெறும் பகுதிக்கு செல்வது பாதுகாப்பு அல்ல. அங்கு செல்லவேண்டாம். பெருந்தன்மையும் ஒழுக்கமும் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் உத்தரவாதமளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. - சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகுவும் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிரகாரம், நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை மிகவும் உயரமாக ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னார் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் கைகளில் வெள்ளைக்கொடியுடன் 10 - 15 பேர் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் 40-45 பேர் சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசன் தலைமையிலானோர் படுகொலை!

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா - என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

- இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

ஈழநேசன்

  • தொடங்கியவர்

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா - என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

இது அரசாங்கத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறமாதிரி தெரியுது

டி.பி.எஸ். தமிழின அழிப்பி்ல் தன்னை, தன் வயிற்றை, கழுவும் எழுத்து திறமையுள்ள கற்பனை "ஊடகவியலாளர்".

http://dbsjeyaraj.com/dbsj/archives/1267

யுத்த குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்:

மகிந்த ரணசிங்க

விபுலதிலக்க

அத்துல கொடிப்புலி

பிரசன்ன டி சிலவா

சமிந்த குணசேகர

கவிந்த அபயவர்த்தன

கோசல விஜயக்கோன்

லசந்த ரட்ணசேகர

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா டி.பி.எஸ் உங்கள் கட்டுரையை பின்வருமாறு மாற்றி உண்மையை எழுதுங்கள்.

"உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்பட்டதால் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது. - என்று முற்றும் புரிந்த விடயமாகவே இது காணப்படுகிறது."

மகிந்தவிற்கு கு. கழுவுவதற்கு தான் எத்தனை பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசாங்கத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறமாதிரி தெரியுது

ஒத்தடம் குடுக்கிற மாதிரி இல்ல ஒத்தடம் தான் குடுத்து இருக்கிறார். அது சரி ஆர் செய்தாலும் பொறுப்புச் சொல்ல வேண்டியது அரசாங்கம் தானே. அத ஏன் கடைசியில தெளிவா எழுதாம மூண்டு நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி அரசாங்கத்துக்கு முண்டு குடுத்திருக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன தலைப்பு "சரணடைந்த ஜெயராஜ்" அவர் எங்கே சரணடைந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன தலைப்பு "சரணடைந்த ஜெயராஜ்" அவர் எங்கே சரணடைந்தார்...

ரதி அந்தத் தலைப்பு இப்படி வரோணும் எண்டு நினைக்கிறன்:

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ள விரிவான தகவல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயாவையும் அரசாங்கத்தையும் காப்பாற்றி சரத்பொனன்சேகா மேல் குற்றப் பார்வை பதியும்படியாக எழுதப்பட்டுள்ளது.சரத்பொன்சேகாவும் குற்றவாளிதான்.கோத்தபாயாவும் மகிந்தரும் சுற்றவாளிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

மறு படியும் கண்ணீர் வருது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கட்டுரையை (ஆங்கிலத்தில்) வாசித்து விட்டு அதன் பின சிங்கள இனவாதிகளுக்கு எப்படி விடைகள் அளித்துள்ளார் என்பதையும் வாசித்து விட்டு டி.பி.எஸ் பற்றி பேசலாமே.?

The LTTE killed over 600 Policemen who surrended to them in Jaffna a few years ago contrary to an agreement to surrender agreement reached with the Former President Premadasa. Also what about the thousands of men wormen and children hacked to death by the LTTE?

The man who ordered execution of 600 cops is now a minister in Mahindas govt………….DBSJ

Nobody talks about the brutal attacks tigers carried on innocent children, passengers and the unarmed. They deserve such an end

What “end” do you have in mind for the 12,000 plus tigers in custody now?……………DBSJ

Hi Jeyaraj

where did u get this information. if this is true u suoud not be wasting ur time writing columns. go before un as a withness and give evidence mate.

were this ltte had any clothes on them, shames less murderrs. only humans need be teadted as humanley

Let the UN begin its probe.Sarath will give eevidence I think……………DBSJ

jeraj.Thank god all the nurderers were killed.All their supporters shoul be taken to task as well.

Does this include Karuna and Pillaiyan also?………………DBSJ

Dear DBSJ

I’ve been following your articles for some time, but you seems to be biased and supporting LTTE for some reason.

As stated in some of the above comments, one can not expect a better execution for those terrorist for the destruction they have done to our country in past 30 years…this is equally applicable to some of those ones who are holding high positions in the govenment…!

Did you ask UN to action when those innocent civilians got killed when they blew up busses, banks and trains?.. those terrorist will never be “Hero’s” by any means to the general public, unless you are another terrorist.

Tamils in our country sufferred enough with all this and my only hope is that there will be peace in our mother land for the years to come, be it under Mahinda or Sarath…!

DBSJ RESPONDS

I dont think any reasonable person who read and understood this article will say I am biased and supporting the LTTE.But I am certainly saying that LTTE leaders who surrendered with white flags after getting assurances of safety from President Rajapakse through UN chief of staff Vijay Nambiar were shot dead in cold blood by the Special Forces.

Now how does stating the facts make me biased? (You do understand what bias means do you)

By the way if you have really read my articles in the past you will surely know that no Sri Lankan Tamil journalist writing in English has been openly critical of the LTTE as I have been

இப்படியும் மகிந்த அரசை காப்பாற்ற ஓர் வழி இருக்கிறது என்று,எவ்வளவு அழகாக இயம்பியிருக்கிறார்.

மூன்று காரணங்கள்,பின்வருவன உங்கள் அடிப்படை போலத் தெளிவாக விளங்கிது

1.இராணுவ தளபதிக்கும் ராணுவ அமைச்சு செயலரிடையேயான உட்பூசலால் ஏதோ ஒரு தவறு,

2.புலிகளுக்கும் ஐ.நா க்கும் இடையேயான,டி.பி.எஸ் ஐ போல ஆங்கில பாண்டித்தியம் குறைவானது.

3.மகிந்த வின் உத்தரவை மீறி நடந்த விடயம்.

மறு படியும் கண்ணீர் வருது. :lol:

கண்ணை துடைச்சுப்போட்டு... அலுவல்களை பாருங்கோ...

அழுது ஆகிறது ஒன்றுமில்லை.

***

கோத்தபாயாவையும் அரசாங்கத்தையும் காப்பாற்றி சரத்பொனன்சேகா மேல் குற்றப் பார்வை பதியும்படியாக எழுதப்பட்டுள்ளது.சரத்பொன்சேகாவும் குற்றவாளிதான்.கோத்தபாயாவும் மகிந்தரும் சுற்றவாளிகள் அல்ல.

இவர் இந்திய றோவின் அதிகாரியாவர் இல்லையா

Edited by இளைஞன்

இந்தக் கட்டுரையை எழுதியவரின் பின்னணியை ஒருபக்கம் வைத்துவிட்டு... இந்தக்கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் வாசித்தபின்னர் கருத்து எழுதுவது சிறப்பானது என்று நினைக்கிறன்.

ஓர் ஊடகவியலாளர் ஒரு பக்கம் சார்ந்து கருத்து எழுதினால்.. அவர் கருத்து எடுபடுவது கடினம். சிங்கள பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பதற்கு முன்பதாகவே ஓர் சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகள் அமைப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று சரத் பொசேகா கூறியதாகவும், அந்த ஒலிப்பதிவு தற்போது சர்வதேசத்தின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.

கட்டுரையை முழுதுமாக வாசித்து பார்க்கும்போதும், அவர் வாசகர்களின் பின்னூட்டல்களிற்கு எழுதியுள்ள பதில்களையும் பார்க்கும்போது சரத் பொன்சேகா மீது ஆசிரியர் சற்று அதிகம் பாய்வதாகவே தெரிகின்றது. சரத் பொன்சேகாவை வாட்டியுள்ள அளவிற்கு கட்டுரையில் ஆசிரியர் சனாதிபதி மகிந்தவையோ அல்லது அவரது உடன்பிறப்புக்களையோ - மற்றைய கோஸ்டியையோ சாடவில்லை.

கட்டுரைக்கு வெளியில் நின்று பார்க்கும்போது - இந்தச் சம்பவத்தை சித்தரித்து பார்ப்பது மிகவும் குழப்பகரமானது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம், எப்படியும் இருக்கலாம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையை எழுதியவரின் பின்னணியை ஒருபக்கம் வைத்துவிட்டு... இந்தக்கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் வாசித்தபின்னர் கருத்து எழுதுவது சிறப்பானது என்று நினைக்கிறன்.

ஓர் ஊடகவியலாளர் ஒரு பக்கம் சார்ந்து கருத்து எழுதினால்.. அவர் கருத்து எடுபடுவது கடினம். சிங்கள பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பதற்கு முன்பதாகவே ஓர் சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகள் அமைப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று சரத் பொசேகா கூறியதாகவும், அந்த ஒலிப்பதிவு தற்போது சர்வதேசத்தின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.

கட்டுரையை முழுதுமாக வாசித்து பார்க்கும்போதும், அவர் வாசகர்களின் பின்னூட்டல்களிற்கு எழுதியுள்ள பதில்களையும் பார்க்கும்போது சரத் பொன்சேகா மீது ஆசிரியர் சற்று அதிகம் பாய்வதாகவே தெரிகின்றது. சரத் பொன்சேகாவை வாட்டியுள்ள அளவிற்கு கட்டுரையில் ஆசிரியர் சனாதிபதி மகிந்தவையோ அல்லது அவரது உடன்பிறப்புக்களையோ - மற்றைய கோஸ்டியையோ சாடவில்லை.

கட்டுரைக்கு வெளியில் நின்று பார்க்கும்போது - இந்தச் சம்பவத்தை சித்தரித்து பார்ப்பது மிகவும் குழப்பகரமானது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம், எப்படியும் இருக்கலாம்.. :lol:

ஆனால் கட்டுரை இப்டிதானே உள்ளது.......................?

கட்டுரையும் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் எப்படியும் இருக்கலாம் எண்டுதான் சொல்லிது. சில புள்ளிகளை இணைத்து ஆசிரியர் ஓர் ஓவியம் கீறிப்பார்த்து இருக்கிறார். பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காகின கதைதான். :lol: ஆனால் சரத் மாமா மீது ஆசிரியர் கிஞ்சித்து கடுப்பாய் இருக்கிறார் என்று விளங்கிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.