Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடும் தேர்தல் வன்முறை இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் அமைதியாகவிருந்த யாழ் தேர்தல்களம் இறுதிநாளான இன்று சூடுபிடித்துள்ளது. இன்று இரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகமும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இரவு 9 மணியளவில் 2 வான்களில் வந்த சிலரே இத்தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. கற்களால் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதால் ஓடுகள் மற்றும் கண்ணாடி என்பன உடைந்து சிதறியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை அச்சுவேலி , வடமராட்சி, ஆவரங்கால் பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்களது சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. தாக்குதலாளிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு உதவிகள் வராத வண்ணம் இரவிரவாக வீதித் தடைகளை ஏற்படுத்திய பின்னரே அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குலுக்குள்ளான சுரேஸ்பிரேமச்சந்திரனின் அலுவலகம் குடாநாட்டின் பிரதான படைத்தளமான ஞானம்ஸ் கொட்டேல், சுபாஸ் கொட்டேலுக்கு முன்பாக யாழ் பருத்தித்துறை பிரதான வீதியிலேயே அமைந்திருக்கின்றது.

தீவகப் பகுதிகளில் நாளை இடம்பெறுவுள்ள தேர்தல்களின் போது கள்ள வாக்குகளைப் போட அரசாதரவுக் கட்சியொன்று முற்பட்டிருப்பதாக கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதனிடையே அரச ஆதரவுக் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் இயங்கும் உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில் ஜனாதிபதித் தேர்தலை விடுதலைப்புலிகள் பகிஸ்கரிக்குமாறு தெரிவித்துள்ளதாக செய்திகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கேபிள் தொலைக்காட்சி மூலமும் உள்ளுர் தொலைக்காட்சி மூலமும் ஒளிபரப்பப்படும் இந்தத் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகள் மேற்படி தேர்தலை பகிஸ்கரித்து நாளைய தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு தெரிவித்துள்ளதாக தொடர்ச்சியாக செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. எனினும் வேறெந்த ஊடகங்களிலும் இந்தச் செய்திகள் ஒளிபரப்பாகாத நிலையில் இது ஒரு பொய்யான செய்தி என குறித்த தொலைக்காட்சி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது.

நன்றி: ஜி.ரி.என்

Edited by நிழலி
தலைப்பில் சிறிது மாற்ற

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்கள் பயந்தது ஆரம்பமாகி இருக்கிறது ...........

யாழில் சுவரொட்டிகள் மீது,

jaffnaposter1.jpg

jaffnaposter3.jpg

எதிர் பார்த்துதானே....??? நாளை மக்கள் சுதந்திரமாகவும் பயம் இல்லாதும் வாக்கு போட வருவார்கள்....???

தேர்தல் தினமான இன்று காலை 06 :00 மணியளவில் யாழ் குடா நாட்டில் நாலு பாரிய குண்டுச்சத்தங்கள் கேட்டன. சேத விபரங்கள் தெரியவில்லை.

http://www.dailymirror.lk/index.php/news/1129-explosion-sounds-heard-in-jaffna.html

தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் சிங்கள பயங்கரவாதிகள் இதை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது?

Edited by நிழலி
தலைப்பில் சிறிது மாற்ற

இதுதான் இராஜ(பக்சே) தந்திரம்போல. குறைந்தபட்சம் தனக்கு வாக்கு விளாவிட்டாலும் எதிர்க்கட்சியின் வாக்குகளையாவது குறைக்கலாமல்லவா? அங்க இங்க குண்டுச்சந்தம் கேட்டு அடிதடி எண்டு கேள்விப்பட்டால் சனம் ஏன் வம்பு எண்டிட்டு வீட்டிலயே இருந்திரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ராஜபக்சா ஜயாவின் இறுதி முயற்சி!!!

எங்கட பழசுகள் சொல்லுற பழமொழிதான் நினைவுக்கு வருது....

"பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு அஞ்சாது"

குண்டுச்சத்தம் ஒன்றும் சனத்துக்கு புதுசில்லை...

கடைசி இருபத்தைந்து வருசங்களா கேட்காத பாக்காத குண்டுகளா?

யாழில் குண்டு வெடிப்பு சத்தம்

சிறீலங்காவில் இன்று தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யாழில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கரின் ஆளும்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் சர்மா அவர்களின் வீட்டுக்கு முன் இரு குண்டுள் வெடித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் சார்பில் பேசவல்லவரான டி.எம் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் பலமாக கேட்க்கப்பட்டபோதும் இதனால் எதுவித சேதங்ளும் ஏற்பட்டதாக தெரியவரவில்லை.

இத்தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டதாக தெரியவரவில்லை எனவும் தேர்தலில் இருபெரும் வேட்பாளர்ளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளநிலையில் யாழில் சரத்பொன்சேகாவிற்கு வாக்குள் கிடைக்கலாம் என்ற அச்சத்தில் அரசாங்கத்தின் தரப்பில் மக்களை வாக்களிக்காமல் செய்வதற்காக இவ்வாறான செயற்பாடகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனினும் அண்மையில் அரசாங்கத் தரப்பால் கால்துறை ஆணையாளர் அவர்ளை இடமாற்றம் செய்;ய மேற்கொண்ட முயற்சி தேர்தல் ஆணையாளரின் தலையீட்டை அடுத்து நிறுத்தப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/news/5246/54/.aspx

காலை 4 - 4.30 மணிக்கு இடையில் 6 வெடிப்புக்கள் நகர மத்தி, கல்வியங்காடு பகுதிகளில் கேட்டதாகவும், முதல் நாள் இரவில் அப்பகுதியில் வழமைக்கு மாறான இராணுவ நடமாட்டங்கள் இருந்ததாகவும் பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்by வீரகேசரி இணையம்

யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

"30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

virakesari

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தில் பரவலாக பல பிரதேசங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்காகவே இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படுவதாக யாழ் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவாலி, மானிப்பாய்ப் பகுதிகளில் 8 குண்டுத் தாக்குதல்களும் நல்லூர் பிரதேசத்தில் 4 குண்டுத்தாக்குதல்களும் கோண்டாவில் பிரதேசத்தில் ஒரு தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தச் செய்தி பதிவாகும் வரை தெரிய வருகின்றது.

இதேவேளை வல்வெட்டித்துறை மற்றும் உப்புவெளி பிரதேசங்களில் இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாங்கொடை பௌத்த விஹாரை மீது தாக்குதல்

அம்பலாங்கொடை பௌத்த விஹாரை ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாங்கொடை ஹொரம்பா ரஜ மஹா விஹாரையின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இனந்தெரியாத நபர்கள் விஹாரையின் பீடாதிபதி கடும் சொற்களால் திட்டி, விஹாரையை விட்டு வெளியேறுமாறு பணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பௌத்த விஹாரையின் பல பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரதான வேட்பாளர் ஒருவரின் பதாகையை விஹாரை வளாகத்தில் காணப்பட்டதாகவும், குறித்த பதாகையை அகற்றியதனால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி: ஜி.ரி.ன்

யாழில் பொன்சேகாவின் ஆதரவாளரின் வாகனம் தீக்கிரை! சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகம் மீது கல்வீச்சு!

யாழ் ஆவரங்காலில் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவரின் வாகனம் ஒன்றும் அவரது வீடும் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் முகத்தினை மூடிக்கட்டியவாறு வெள்ளைவானில் வந்த இனம் தெரியாத நபர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகம் மீதும் வெள்ளைவானில் வந்த இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் கூரை ஓடுகள் பலவற்றை உடைந்துள்ளன.

குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.pathivu.com/news/5248/54/.aspx

யாழில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் ஈ.பி.டி.யினரால் சுவரொட்கள் ஒட்டப்பட்டுள்ளன

இன்று நடைபெறுகின்ற தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினர் சுவரொட்டிகளை யாழ்ப்பாணம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

நேற்று இரவோடு இரவாக சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பியினர் ஈடுபட்டிருந்தாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த சுவரொட்கள் காணொளி மூலமாக எடுக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/news/5250/54//d,view.aspx

யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாத சிங்களவர்கள் பலர் நடமாட்டம்

தென்னிலங்கையில் வாக்களிக்க வேண்டிய பல சிங்களவர்கள் யாழ்பாணத்தில் தங்கியிருப்பதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமராட்சிப் பகுதியில் சிங்களவர்களில் நடமாட்டம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்தே இப்பேருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளது. பேருந்தில் சிங்களப் படையினர் இருந்தார்களா? அல்லது சிங்களக் காடையர்களா? என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்தவர்கள் பருத்தித்துறையில் உள்ள மதுசாலை ஒன்றில் மதுக்களை வாங்கிச் சென்றதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேபோன்றும் யாழ் நகரத்தில் உள்ள விடுதிகளிலும் பல இனம் தெரியாத நபர்கள் தங்கியிருப்பதாக யாழ் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

http://www.pathivu.com/news/5249/54//d,view.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் அமைதியாகவிருந்த யாழ் தேர்தல்களம் இறுதிநாளான இன்று சூடுபிடித்துள்ளது. இன்று இரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகமும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இரவு 9 மணியளவில் 2 வான்களில் வந்த சிலரே இத்தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. கற்களால் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதால் ஓடுகள் மற்றும் கண்ணாடி என்பன உடைந்து சிதறியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை அச்சுவேலி , வடமராட்சி, ஆவரங்கால் பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்களது சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. தாக்குதலாளிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு உதவிகள் வராத வண்ணம் இரவிரவாக வீதித் தடைகளை ஏற்படுத்திய பின்னரே அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

-----

எவ்வளவோ குண்டெறி எல்லாம் தாங்கிப்போட்டம், இப்ப கல்லெறிதானே..... அதை தாங்கமாட்டமா?

இன்னும் 20 மணித்தியாலத்திலை இவையின்ரை ஆட்டம் எல்லாம் ஓய்ந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை காரன் தண்ட கெட்ட புத்திய காட்டுறான்.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கொலை காரன் தண்ட கெட்ட புத்திய காட்டுறான்.. :huh:

உண்மைதான்

தமிழரைப்பற்றி இப்ப அவரது நினைப்பு அப்படித்தான்

நல்லா வெருண்டுபோய் இருக்கினம்

இந்த தாக்குதலே போதும்

சரத் பொன்சேகாவுக்கும் இது ஒரு தேர்தல் மட்டுமே... ஆனால் மகிந்தவுக்கு... ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.