Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே - பொன்சேகா

Featured Replies

என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார்.

ஹோட்டலை ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெருமளவில் முறைகேடுகளைச் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானவுடன் என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தான் எனது ஹோட்டலைச் சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு தங்கியிருப்போரையும், அருகில் உள்ள பொதுமக்களையும் வெளியேறுமாறும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

எனது உயிருக்கு ராஜபக்சேவால் தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலதிக செய்திகள் விரைவில்....

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=243:2010-01-27-01-57-42&catid=34:ceylonnews&Itemid=71

இருந்து என்னத்தை கிழிக்கபோறார், போகட்டும் மேல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேக வெற்றி பெற்றிருந்தால் மக்களுக்கு தற்காலிகமாக ஒரு நிம்மதி இருந்திருக்கும்... ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லமல் போய்விட்டது.....

இது நல்லதுக்கோ கெட்டதுக்கோ தெரியாது...

இருந்தாலும் வன்னியில் எங்கட சனங்கள் இப்பிடித்தானடா கொல்லப்பட்டார்கள்.

இதில் கொடுமை என்னவென்டா சரத் பொன்சேகாவின்ட கையில இருக்கிற தமிழன்ட ரத்தமே என்னும் காயேல..இதுக்குள்ள பொன்சேகா தோற்றத துக்க செய்தியா இங்க சிலர் சொல்லினம் :unsure:

அட சும்மா இழுத்துக்கொண்டிருக்காமல் போட்டுத் தள்ளுங்கப்பா.

ஏய் பொன்சேகா, இது சிங்கள பௌத்த தர்ம அடிப்படையிலான மனிதாபிமான நடவடிக்கை.

பயங்கரவாதிகளால் விடுதிகளில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுவிக்கும் மனிதாபிமான முயற்சி. சும்மா கொலை - அது - இது என்று கத்தாதே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது என்று ஒரு வாக்க மூலம் குடத்திட்டுப் போய்ச் சேரப்பா.

தமிழ் மக்கள் மேல் எந்தக் குண்டுகளைப் போட்டுக் கொன்றாயோ அந்தக் குண்டுகளைப் போட்டே மகிந்த வைச்சிட்டானயா ஆப்பு என்று புலம்புகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: இதில் ஒருத்தன் வேட்டைக்காரன், மற்றவன் வேட்டை நாய். இப்போது வேட்டை நாயைக் கட்டி வைத்திருக்கிறான் வேட்டைக்காரன்.எம்மைக் குலையறுத்த இந்த இரு மிருகங்களும் அழிக்கப்படவேண்டியவையே. அதற்கு இன்னும் நாளிருக்கு. இப்போது நடப்பது வெறும் ஒத்திகை என்றுதான் நினைக்கிறேன்.

இலங்கையில எவன் வந்தாலும் தமிழன்ர தலையில புளி கரைக்காம இருக்கமாட்டான். அதுசரி இலங்கையில இராசபக்சேவுக்கு எதிரா தலைவர் தேர்தல்ல நிக்கிறதுக்கு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத தகுதியும் தான் ஒரு தகுதியானவன் என்ற நினைப்பும், எதிர்க்கட்சிகளும் ஒரு இராணுவ அதிகாரியான சரத் தகைமையானவர் என்று ஏற்றுக்கொள்வதற்கு என்ன காரணம் ஒரு முறை சிந்தித்து பாருங்கள். தமிழர்களை இன அழிப்புச்செய்ததைத்தவிர வேறு என்ன தகைமை இருக்கிறது. சில வேளை இராஜபக்சே ஆட்சியிலேயே அவருடைய பதவி இழைப்பாறும் காலத்தில் அரசியல் அல்லது அரசாங்கத்தில் ஒரு நல்ல பதவி கொடுத்திருந்தால் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார்.

எது எப்படியோ தமிழர்களின் ஆசைகள் எல்லாம் நிராசைகளாகவே முடிகிறது.

மகிந்தரின் வெற்றிக்கு உதவிய, கூட்டமைப்பின் குடு குடுப்பை அரசியல்.

இந்தியாவின் இராசதந்திரமா?

மகிந்தரின் வெற்றிக்கு உதவிய, கூட்டமைப்பின் குடு குடுப்பை அரசியல்.

இந்தியாவின் இராசதந்திரமா?

முதலில் சிவாஜிலிங்கம் இந்திய கையாள் என்றீர்கள் - இப்ப கூட்டமைப்பின் மீதும் சந்தேகமா?

எந்த ஆதாரமும் இல்லாமல், சில நிகழ்வுகளை விருப்பத்துக்கு திரித்து அல்லது கோர்த்து, அவசரப்பட்டு கற்பனைகளின் உதவியுடன் எம்மவர்கள் மீது சந்தேக முத்திரை குத்தி இன்பமுறும் தமிழரின் பின்புத்தி மாறும்வரை எம்முள் பிளவுகள் அதிகரித்துச் செல்லும்.

எதிரிகளை கண்டபடி தாக்குங்கள், பிளவு படுத்துங்கள் - கவலையில்லை. இன்னும் எமது வீரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்களை தாக்குங்கள், அப்பாவித் தமிழர்களை கொலை செய்பவர்களை தாக்குங்கள், இதற்கு உதவுபவர்களை தாக்குங்கள்.

ஆனால் கடந்த வருட படுகொலைகளின் பொது எதிர்க் குரல் கொடுத்தவர்களை, என்ன பின்புலமோ, தொடர்ந்து குரல் கொடுத்தவர்களை கற்பனை முடிச்சுகளின் அடிப்படையில் அவசரப்பட்டு தாக்காதீர்கள்.

சில இணையத்தளங்கள் இந்த வேலைகளை செய்கின்றன. அதில் எம்மை உடைக்கும் வகையில் எழுதுபவர்களை அடையாளம் கண்டு அவதானமாக இருங்கள்.

முதலில் திருத்த முயலவேண்டும். தொடர்ந்து பொறுமையுடன் முயலவேண்டும். முடியாவிட்டால் பின்னர் துரோகி ஆக்கிக்கொள்ளலாம்.

ஈழத் தமிழர் மீது சந்தேக முத்திரை குத்த விரும்பினால், குத்துவதை பலதடவைகள் சிந்தித்து, உறுதியான ஆதாரங்களை தேடிப்பிடித்து, விளைவுகளையும் யோசித்து அதன் பின் செய்யுங்கள்.

அவர்கள் அதை அறியாமையால் செய்திருக்கலாம். அதன் பாரிய பின் விளைவுகளை சிந்திக்காது சிறு - குறுகிய கால நன்மைக்காக செய்திருக்கலாம். நாம் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே. தவறுகளை பண்புடன் சுட்டி திருத்த முயல வேண்டும் - திருந்த சிறிது கால (சில மாதங்கள்) அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக சிங்கள, இந்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழரை அழிக்க தூண்டுதலாகவும், துணையாகவும் இருப்பவர்களை நான் இந்த எம்மவர்களினுள் அடக்கப் போவதில்லை. ஆனால் அவர்களும் (தமிழனப் படுகொலை செய்யாதவர்கள்) திருந்தி வந்தால், அதனை பகிரங்கமாக அறிவித்தபின் - குறிப்பிட்ட கால (சில வருடங்கள்) அவதானிப்பின் பின்னர் ஏற்றுக்கொள்ள தயாரானவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அப்போது மட்டும் தான் நாம் பலமுள்ளவர்களாக மாறமுடியும்..

எனது கருத்துக்களில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் கலைவாணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கொடுமை என்னவென்டா சரத் பொன்சேகாவின்ட கையில இருக்கிற தமிழன்ட ரத்தமே என்னும் காயேல..இதுக்குள்ள பொன்சேகா தோற்றத துக்க செய்தியா இங்க சிலர் சொல்லினம் :lol:

மகிந்தனுக்கு வாழத்து செய்தி சொல்லும் சனம் இருக்கும் வரை இது துக்க செய்திதானே , வன்னியில் கொல்லபட்ட 50000 மக்களின் துவசம் கூட இன்னமும் முடியவில்லை. :lol:

வாத்தியார் (ஆசான்),

இண்டைக்குத்தான் வாத்தியாரா இருந்ததுக்கு உருப்படியா ஒண்டை சொல்லியிருகிங்கள் இதுக்கு பாராட்டுக்களே தவிர குறைசொல்ல பெருசா ஒன்றுமில்லை

வாத்தியார் எண்டு பெயர் கிடக்கு ஆனால் கலைவாணி என்று கையெழுத்துக் கிடக்கு என்ன சங்கதி?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

"என்னைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே - பொன்சேகா"

செத்த பாம்ப அடிச்சதில என்ன பிரயோசனம். வினை விதைச்சவன் வினையறுப்பான். உதுதான் உவருக்கும் நடந்திருக்குது. சேர்ந்து உழவடிச்சவனும் சேர்ந்து அறுக்கவேணும். தற்போதைக்கு தெய்வம் நின்றறுக்கும் எண்டிற சத்தியம் பாதி நிரூபணமாகியிருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"என்னைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே - பொன்சேகா"

செத்த பாம்ப அடிச்சதில என்ன பிரயோசனம். வினை விதைச்சவன் வினையறுப்பான். உதுதான் உவருக்கும் நடந்திருக்குது. சேர்ந்து உழவடிச்சவனும் சேர்ந்து அறுக்கவேணும். தற்போதைக்கு தெய்வம் நின்றறுக்கும் எண்டிற சத்தியம் பாதி நிரூபணமாகியிருக்குது.

உவனை இன்னமும் கொஞ்சம் கோபபட வைத்தால் இன்னமும் கொஞ்சம் உண்மைகளை கறக்கலாம் அதுக்கு பிறகு உவர் தப்புவாரோ தெரியாது, எமக்கு உண்மைகள் வெளிவந்தால் சரிதான். :lol:

சரத் பின்வரும் தளத்தில்...

Edited by நிழலி
வீடியோவை இணைக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ கொலை செய்யப்படமுன்பு ஹோட்டலில் இருந்தவாறே தொலைபேசியில் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லி விட்டால் பிறகு இவர்மீது நடவடிக்கை எடுக்கவும் குற்றப்பத்திரிகைக்கும் சில செய்தி சேர்ந்தமாதிரி இருக்கும். ஹோட்டலிலே சொகுசாக இருந்;து கொண்டு சுற்றிவளைப்பிற்கே இவ்வளவு அட்டகாசம் பண்ணுகின்றாய். நீ காட்டிலே குண்டு மழை பொழிந்து சாப்பாடும் தண்ணியும் இல்லாமல் கிடந்த சனத்தைக் குண்டு போட்டு அழிக்கேக்க அவர்களின் மனங்களை ஒரு முறை நினைத்துப்பார். வேதனை புரியும். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை என்று கொக்கரித்தனீ. இப்போ சிங்களப்பௌத்தம் உன்னை என்;ன செய்யப்போகின்றது. நீ சொன்னது தான் உனக்கும் அனுபவி ராஜா அனுபவி. உன்னுடைய வாhர்த்தையை அவர்கள் நேசிக்கின்றார்கள். நீ வேட்டைநாய் அவன் வேட்டைக்காரன் உன்ர எசமானை ஏன் பகைச்சனீ? நன்றியில்லா நாய் ஓ நீயும் பௌத்த நாய் தானே. இனி அழுதென்ன பிரயோசனம். செய்த தப்பிற்கு அனுபவித்துத்தானே ஆகணும். உன்னுடைய எசமான் பிறகு அனுபவிப்பான். நீ முன்னம் போ அங்கேயும் ஒரு சீற்றை பிடியுங்கோ. தமிழனுக்கு உதவி பண்ணுவேன் என்ற பாசாங்குப் பேச்சு எடுபடாமல் போனது எவ்வளவு நல்லது தெரியுமா? அவன் உள்ளதைச் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளான்.

பாத்துப்பா

இவங்க இன்னிக்கு அடிச்சுவாங்கோ நாளைக்கு ஒடடிக்குவாங்கோ...

நாமளாபாத்து எண்ணையை ஊத்தினாத்தான் உண்டு ஆயிசுக்கும் இவங்களை ஓட்டிக்க உடக்கூடாது.

முடிஞ்சா இன்கிட்டுருந்து அங்கவும் அங்கிட்டுருந்து இங்கவும் நாளைஞ்சை சேர்த்து அப்புறம் பிரிச்சு மாத்தினா சூப்பர இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று .......................

அடப்பாவி

இப்படி நாங்க கத்தியது கேட்டதா உனக்கு....

எனக்கு என்னமோ எல்லாமே பிளான் மாதிரித்தான் தெரியுது

தமிழனுக்கும் அரைச்சு...

ரணிலுக்கும் அரைச்சு.....

இந்தியாவுக்கும் அரைச்சு.....

சர்வதேசத்துக்கும் அரைச்சிட்டாங்களோ சண்டாளியள் என்றுதான படுது...

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது ஒருவர் கருத்துச் சொன்னார். என்ன செய்வது என்றதில் தமிழர்களும் அதன் தலைமயும் பிரிஞ்சு போய் நிக்கினம்.

சிங்களத் தலைவர்களும் தேர்தலுக்காக தற்கலிகமாக பிரிந்து போயுள்ளார்கள். ஆனால் சிங்களச் சனங்கள் வலு தெளிவாகவும் ஒற்றுமையாகவும் தமிழர்களை அழித்தவனுக்கு ஆதரவும் அங்கீகாரமும், தமிழ் தேசியத்தலைவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களைத் தண்டிக்கவும் தயங்கவில்லை.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது ஒருவர் கருத்துச் சொன்னார். என்ன செய்வது என்றதில் தமிழர்களும் அதன் தலைமயும் பிரிஞ்சு போய் நிக்கினம்.

சிங்களத் தலைவர்களும் தேர்தலுக்காக தற்கலிகமாக பிரிந்து போயுள்ளார்கள். ஆனால் சிங்களச் சனங்கள் வலு தெளிவாகவும் ஒற்றுமையாகவும் தமிழர்களை அழித்தவனுக்கு ஆதரவும் அங்கீகாரமும், தமிழ் தேசியத்தலைவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களைத் தண்டிக்கவும் தயங்கவில்லை.

உண்மைதான். ரணில் சரத்திற்கு இருந்த ஆதரவு த தே கூ சேர்ந்தவுடன் இறங்கு முகத்தை கண்டது

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டும் என்றால் இருந்து பாருங்கள் மகிந்தா பொன்சேகாவுக்கு பெரிய அரச பதவி அல்லது அமைச்சர் பதவி கொடுப்பான்.

சரத் பின்வரும் தளத்தில்...

பொன்ஸுக்கு மரணப் பயம் முகத்தில் பிரதி பலிக்கிறது, இப்போதாவது உணர்த்து இருப்பானோ...? 50,000 மக்கள் அநியாயமாக பலியான போது வெளி உலகம் எப்படி கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது தானே? 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்பது இப்படி தான் நிறைவேறுமோ?? பொறுத்திருந்து தான் பார்ப்பமே....

Edited by குட்டி

மரணப் பயம் உள்ள உந்தாள் எப்பிடி ராணுவ தளபதியா இருந்து தஒலைச்சார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.