Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இராச்சியம்: வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்தோர் தொகை 64,692

ஓம் என்று வாக்களித்தோர் 99.33%

Edited by இளைஞன்

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்த மக்களுக்கு நன்றிகள். ஆனால் போதாது. குறைந்தது ஒன்றரை இலட்சம் மக்களாவது வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களாய் இருப்பார்கள். அதன் படி பார்த்தால் மூன்றில் ஒரு பகுதி மக்களே வாக்களித்திருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கிறார்கள் என்றே எதிரணியினர் பிரச்சாரம் செய்வார்கள்.ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலிலும் கிட்டத்தட்ட இதே அளவான மக்களே வாக்களித்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் அக்கறையின்றியும் சோம்பல்தனத்துடன் இருந்ததாலேயே இந்த நிலமை ஏற்பட்டது.இவர்கள் தமிழீழத்தை எதிர்க்கவில்லை ஆனால் சும்மா இருந்து கிடைத்தால் சுதந்திரத்தை அனுபவிப்போம் அல்லாவிடில் கிடைத்த அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள்.இவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்திருக்க மாட்டார்கள்.அவர்களுக்கு மீண்டும் மீண்டும் எடுத்தக்கூறி விடுதலையின் பால் திருப்ப வேண்டும்.எதிர்ப்பவர்கள் எப்போதும் எதிர்ப்பவர்கள்தான்.ஆனால் இந்த வாக்களிப்பானது பிரித்தானிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது.தமிழரின் வாக்குகள் ஒன்று பட்டு ஒரே திசையில் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.அதை நாம் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள்.அதை நாமும் பயன் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Final Result

Total-64,692

Yes-64,256-99.33%

No-185-0.29%

Spoiled-251-0.38%

99.33%

want Tamil Eelam

Edited by புலவர்

நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில சரியாக இருக்கலாம், அதே சமையம் பதினெட்டு வயதுக்கு குறைந்த மாணவர்கள், சிறுவர்கள் என்று மீதித் தொகையை கணிப்பிடலாம் தானே? கவனஈர்ப்பு போராட்டங்கள் நடந்த போது மாணவர்கள் சிறுவர்கள் அதிகமாகவே கலந்து கொண்டது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கு எனது நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலங்களில் நடைபெறும் தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையொட்டிய வாக்கெடுப்பு என்பது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாகும். இதில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் எனக்கணிக்கமுடியாது. தமிழீழ எதிர்ப்பாளர்கள் அனைவரும் இக்கருத்துக் கணிப்பினில் கலந்து கொண்டிருப்பார்கள் என்னதே எனது கணிப்பாகும். புலம்பெயர் தேசங்களில் ஒருசில நூறக்கு அன்மித்த எண்ணிக்கைணிலேயே தமிழீழ எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் என முடிவுகள்மூலம் தெரியவருகின்றது. இவர்கள்தான் இணையத்தளங்கள் மற்றும் வாணெலி தொலைக்காடசிகளில் விதண்டாவாதம் செய்பவர்கள் என அறியமுடிகின்றது. அவர்களில் ஓரிருவர் தாங்கள் அறிவுஜீவிகள் மற்றெல்லோரும் "மக்கர்கள்" எனக்கூறிவருகின்றார்கள் அவர்கள் கூறுவதில் அனைத்தையும் தவிர்த்து விடமுடியாது சிலவிடையங்களில் நியாயத்தன்னை இருக்கின்றது அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வது பெரும்பான்னையான தமிழீழ விரும்பிகளது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

புதினப்பலகையில் இது தொடர்பான செய்தியைக் காணோம். அவர்கள் இதற்கு ஆதவளிக்காவிட்டாலும் தமிழர் தொடர்பான செய்தி என்ற வகையில் இதனைப் போடாதது.தமிழருக்கு ஆதரவான இணையத்தளமா?என்ற சந்தேகத்தை தோற்றவிக்கின்றது.

வாக்களித்த மக்களுக்கு நன்றிகள். ஆனால் போதாது. குறைந்தது ஒன்றரை இலட்சம் மக்களாவது வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களாய் இருப்பார்கள். அதன் படி பார்த்தால் மூன்றில் ஒரு பகுதி மக்களே வாக்களித்திருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கிறார்கள் என்றே எதிரணியினர் பிரச்சாரம்

எதிரணியினர் என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளது தமிழரையா, சிங்களவரையா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணியினர் என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளது தமிழரையா, சிங்களவரையா?

This post has been edited by kalaivani: Today, 10:26 AM

குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களை

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலங்களில் நடைபெறும் தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையொட்டிய வாக்கெடுப்பு என்பது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாகும். இதில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் எனக்கணிக்கமுடியாது. தமிழீழ எதிர்ப்பாளர்கள் அனைவரும் இக்கருத்துக் கணிப்பினில் கலந்து கொண்டிருப்பார்கள் என்னதே எனது கணிப்பாகும். புலம்பெயர் தேசங்களில் ஒருசில நூறக்கு அன்மித்த எண்ணிக்கைணிலேயே தமிழீழ எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் என முடிவுகள்மூலம் தெரியவருகின்றது. இவர்கள்தான் இணையத்தளங்கள் மற்றும் வாணெலி தொலைக்காடசிகளில் விதண்டாவாதம் செய்பவர்கள் என அறியமுடிகின்றது.

பிரித்தானிய மக்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன்

வாக்களித்த மக்களுக்கு நன்றிகள். ஆனால் போதாது. குறைந்தது ஒன்றரை இலட்சம் மக்களாவது வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களாய் இருப்பார்கள்.

எனது குடும்பம் எனது சகோதரியினதும் எண்று 13 உறுப்பினர்கள் இருகிறார்கள்... அதில் வாக்களிக்க கூடிய தகுதியுடன் 5 பேர் இருக்கின்றோம்...

குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களை

மே 19 வரை புலிகளுக்காக (தமிழர்களுக்காக) புலத்தில் சர்வதேச அரசியல் செய்த (நடித்த, காட்டிக்கொடுத்த) புலத்துப் புலிப் பெருந்தகைகளா? அல்லது புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துடையோரா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

மே 19 வரை புலிகளுக்காக (தமிழர்களுக்காக) புலத்தில் சர்வதேச அரசியல் செய்த (நடித்த, காட்டிக்கொடுத்த) புலத்துப் புலிப் பெருந்தகைகளா? அல்லது புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துடையோரா?

தாங்களும் திருப்பி திருப்பி

குத்துவதன் மூலம் அதைத்தான் செய்கின்றீர்கள் என்பதை கவனிக்கவும்

முதலில் நாம் ஒவ்வொருத்தரும் நிலையெடுக்கவேண்டும்

மற்றவை தானாக அடங்கும்

அடங்கவேண்டிவரும்

நன்றி

இதையும் எதிர்த்தரப்பாக எடுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

தமிழீழத்திற்கான ஆணை கோரி பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட தேர்தலை சிறீ லங்கா நிராகரிப்பதாக ரம்புக்வெல கூறுகிறார்!

Lanka rejects UK Diaspora poll

The Sri Lankan government rejected a referendum conducted by the British Tamil Diaspora over the weekend endorsing the principle of Tamil Eelam. Speaking to Daily Mirror online Government Defense spokesperson Minister Kehiliya Rambukwella said Sri Lanka is not concerned of any referendum conducted by any community or country.

“We are a democratic country and follow all process of elections and political solutions wanted by the people of Sri Lanka,” he further said.

This was after British Tamil Diaspora conducted a poll over the weekend endorsing the principle of Tamil Eelam last week.

The poll showed over 64,000 British Tamils saying “yes” to Tamil Eelam. The poll took place in sixty five booths across London and in major towns and cites throughout Europe.

The British mandate will follow similar polls across Europe and Canada; it is a part of the global event where Tamils across the world are being asked to mandate an independent Tamil Eelam.

http://www.dailymirror.lk/index.php/news/1338-lanka-rejects-uk-diaspora-poll.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ எதிர்ப்பாளர்கள் அனைவரும் இக்கருத்துக் கணிப்பினில் கலந்து கொண்டிருப்பார்கள் என்னதே எனது கணிப்பாகும். புலம்பெயர் தேசங்களில் ஒருசில நூறக்கு அன்மித்த எண்ணிக்கைணிலேயே தமிழீழ எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள் என முடிவுகள்மூலம் தெரியவருகின்றது.

ஆமாம். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜெயதேவன், ஆய்வாளர் சிவலிங்கம் போன்ற மாற்றுக் கருத்தாளர்கள் எல்லாரும் விழுந்தடித்து வந்து தங்கள் "எதிர்ப்பு" வாக்குகளைப் போட்டார்கள்.. :lol:

தமிழீழத்திற்கான ஆணை கோரி பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட தேர்தலை சிறீ லங்கா நிராகரிப்பதாக ரம்புக்வெல கூறுகிறார்!

Lanka rejects UK Diaspora poll

The Sri Lankan government rejected a referendum conducted by the British Tamil Diaspora over the weekend endorsing the principle of Tamil Eelam. Speaking to Daily Mirror online Government Defense spokesperson Minister Kehiliya Rambukwella said Sri Lanka is not concerned of any referendum conducted by any community or country.

“We are a democratic country and follow all process of elections and political solutions wanted by the people of Sri Lanka,” he further said.

This was after British Tamil Diaspora conducted a poll over the weekend endorsing the principle of Tamil Eelam last week.

The poll showed over 64,000 British Tamils saying “yes” to Tamil Eelam. The poll took place in sixty five booths across London and in major towns and cites throughout Europe.

The British mandate will follow similar polls across Europe and Canada; it is a part of the global event where Tamils across the world are being asked to mandate an independent Tamil Eelam.

http://www.dailymirror.lk/index.php/news/1338-lanka-rejects-uk-diaspora-poll.html

சட்ட பூர்வமான இப்படியான நடவடிக்கைகள் சொறிலங்காவை நல்லா குடையுது போலகிடக்கு...

தாங்களும் திருப்பி திருப்பி

குத்துவதன் மூலம் அதைத்தான் செய்கின்றீர்கள் என்பதை கவனிக்கவும்.

எதைச் செய்கின்றோம் என்பதை................

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

எதைச் செய்கின்றோம் என்பதை................

நடந்து முடிந்தவைகளை..

கடந்து சென்றவற்றை..

நாம் மறக்க ....மன்னிக்க ..முயல்பவைகளை..

இனி

மாற்ற நினைப்பவைகளை...

ஒன்றாக்க விரும்புபவைகளை....

வாக்குகள் குறைவானதேன்றால் ஒருவேளை தேர்தல் புறக்கனிப்போ?

சில சனங்கள் கிடைச்சா வெளுத்துவாங்குங்கள் ஆனால் நாங்கள் ஒரு உதவியும் செய்யாதுகள்...

என்னமோ... இதுவே புலம்பெயர் உறவுகளின் கருத்து...

அதுசரி அவுஸ்திரேலியாவில எப்ப?

சரி, நல்லது வாக்கெடுப்பு முடிந்து விட்டது, (மேலை நாடுகளில் தேர்தல்களில் 50%இற்கு குறைவானவர்களே வாக்களிப்பதும் வழமை ... குளிர், போக்குவரத்து, ... என பலதுகளும் வாக்களிப்பை குறைத்திருக்கும்)

... அடுத்த கட்டம் என்ன???????????

மே 19 வரை புலிகளுக்காக (தமிழர்களுக்காக) புலத்தில் சர்வதேச அரசியல் செய்த (நடித்த, காட்டிக்கொடுத்த) புலத்துப் புலிப் பெருந்தகைகளா? அல்லது புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துடையோரா?

நடந்து முடிந்தது, புலிகளுக்கான தேர்தலா????????

.... இத்தேர்தலினால் என்ன ஆகப்போகிறது? என்ற எண்ணம் பலர் மத்தியில்!! நானும் அதே நிலைப்பாட்டில் இருந்தேன், ஓரிரு நாட்களுக்கு முன், இத்தேர்தலில் மும்முரமாக ஈடுபட்ட நபரை சந்தித்தேன், அவர் முன்னால் ரெலோ உறுப்பினர், திப்பு பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றியவர், புலி எதிர்ப்பாளர்!!! அவரின் பங்கு இத்தேர்தலில் எம் "தாயகம், தேசியம், தன்னாட்சி" என்ற அடிப்படையிலேயே!! .....

... திரும்பத் திரும்ப .... குழப்பாதீர்கள்!!! ..... யார் இணைகிறார்களோ, ஆதரித்து போகவேண்டிய தேவை!!! .... சின்னஞ்சிறிய இனம்!!! .... அழிந்து விடுவோம்!!

நடந்து முடிந்ததுஇ புலிகளுக்கான தேர்தலா????????

புலிகளும் தமிழர்தான்.

Edited by kalaivani

மே 19 வரை புலிகளுக்காக (தமிழர்களுக்காக) புலத்தில் சர்வதேச அரசியல் செய்த (நடித்த, காட்டிக்கொடுத்த) புலத்துப் புலிப் பெருந்தகைகளா? அல்லது புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துடையோரா?

... நாம் ஒரு வட்டத்தை வரைவோம், நாம் வரைந்ததற்குள் வாருங்கள் இல்லையேல் உங்களை நாம் சேர்க்க மாட்டோம்!!! மட்டுமல்ல எமக்கு ஆதரவளிக்காதீர்கள், எம்மைப் பற்றி கதைக்காதீர்கள்!!! ... நீங்கள் ....கள்!!!!!!!!! ... இதுதான் எங்கள் அரசியல்!!!

.... மே18இற்கு பின்னம் என்ன செய்தோம், .... சரி/பிழை சொன்னவர்கள்,.... எல்லோருக்கும் பட்டமளிப்பு நடத்து ஒதுக்கியாச்சு!!! .... அதில் மிரட்டல்கள் அதிகம்!! ... இவற்றால் இழந்தவைகள் ...... எத்தனை கல்விமான்கள், எத்தனை அழப்பரியவைகளை செய்த இணைத்தளங்கள் ..... தொடர்கின்றன.

.... எனது நண்பர் முன்பு ஒருதரம் சொன்னார் ... "நெடுக நெடுக அவன்/இவன் காட்டிக் கொடுக்கிறான். என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இப்போ காட்டிக்கொடுப்பது உள்ளிருந்துதான்" ... என்றார். இது இன்றும் பொருந்தும் ..... இன்றும் புலிப்பூச்சில், சிங்களவன் எதை எதை விரும்புகிறானோ, அதை உள்ளிருந்து பலர் செய்து கொண்டிருக்கின்றனர்!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் எல்லாம் நாங்கள் விளங்க அல்லது விளக்கக் கூடிய மாதிரி நடக்கும் என்றால் அரசியல்வாதியும் தேவையில்ல வாக்கெடுப்பும் தேவையில்ல.

இன்றுள்ள தேவை..

புலிகளின் கோரிக்கையே தமிழீழம் என்பதை தமிழரின் கோரிக்கை ஆக்க வேண்டும்.

புலிகளின் கோரிக்கை தமிழீழம் என்பதாகக் காட்டியதில் சிங்களவர்களை விட மாற்றுக்கருத்து மண்ணாங்கட்டிகள் தான் அதிகம் பங்களித்திருக்கின்றன. இந்த மாற்றுக்கருத்து மண்ணாங்கட்டிகளின் விரும்பம் தான் என்ன. அதையாவது அதுகள் தெளிவாகச் சொல்லுதுகளா..!

இப்போ மக்கள் தாயக மக்களும் சரி புலம்பெயர் மக்களும் சரி தெளிவான ஒரு நிலைப்பாட்டை உலகிற்கு ஜனநாயக வழியில் சொல்லிவிட்டுள்ளார்கள்.

எனி இந்த மக்கள் ஜனநாயக வழியில் தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உலகம் பயங்கரவாதம் புலிகளின் கோரிக்கை என்று காட்டி நிராகரிக்க முடியாது.

முன்னாள் அமெரிக்க தூதுவர் 2008 இல் சிறீலங்கா கடற்படைத்தளத்தில் நின்று கொண்டு போரை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் ஒன்றைச் சொன்னார். 90 %க்கும் அதிகமான தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ விரும்புகின்றனர். புலிகளின் பயங்கரவாதம் தான் அதற்குத்தடையாக இருக்கிறது. புலிகள் பயங்கரவாதத்தை வளர்க்க தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று.

இன்று அந்த அமெரிக்க நாதாரி இத்தனை ஜனநாயகப் பண்புகளோடு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் குறித்து வாயும் திறக்கவில்லை. வடக்குக் கிழக்கு மலையக மேல்மாகாண தமிழ் மக்கள் சிங்கள மக்களின் மனநிலையில் இருந்து வேறுபட்டிருப்பது கூட கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்பட்டுவிட்டது.

புலம்பெயர் தமிழ் மக்களும் தெளிவாக தமது நிலைப்பாட்டை அமெரிக்காவின் ஜனநாயக முறையில் சொல்லிவிட்டனர்.

இதற்குப் பிறகும் தமிழீழம் பயங்கரவாதக் கோரிக்கை.. புலிகளின் கோரிக்கை.. தமிழ் மக்கள் சிங்களவர்களோடு கூடிவாழ திடசங்கர்ப்பம் பூண்டுள்ளனர் என்று சகட்டுமேனிக்கு அமெரிக்காவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கருத்துச் சொல்ல முடியாது. இது அமெரிக்காவிற்கு மட்டுமான செய்தியல்ல இந்தியா உட்பட தமிழ் மக்களை அவர்களின் விருப்புக்கு மாறாக ஐக்கிய இலங்கைக்குள் இருத்தி வைத்து தங்கள் நலன்களை காக்க விரும்பும் அனைத்துச் சக்திகளுக்குமான அறிவிப்பே இந்தத் தேர்தலும் அதற்கான முடிவுகளும்.

இன்னொன்று.. எனித் தமிழ் மக்கள் தமது விருப்பை தாம் தெரிவு செய்யும் ஜனநாயக வழியில் அடைய விரும்புவதை யாரும் தடை செய்ய முடியாது. அந்த வகையில் அடுத்த கட்டமாக நாடு கடந்த தமிழீழ அரசை ஜனநாயக வழியில் நிறுவிக் கொள்ள தமிழ் மக்கள் இத்தால் உரிமை பெறுகின்றனர். தமது அரசின் அடிப்படை அலகுகளை நாட்டுக்கு வெளியில் உருவாக்கி தமது நாட்டில் அதனை நிறுவிக் கொள்ளும் வரை அவர்கள் உரிமை பற்றி பேச சர்வதேச அங்கீகாரம் கோரி நிற்க இந்தத் தேர்தல் முடிவுகள் அந்த மக்களுக்கு உரிமை அளித்து நிற்கின்றன.

வீழ்ந்துவிட்ட புலிகள் புத்துயிர்ப்பு பெறும் முயற்சி அல்ல நாடு கடந்த தமிழீழ அரசு என்பது. அது தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை அடையாளப்படுத்த அடைய எடுக்கும் ஜனநாயகப் பண்புகொண்டான அடிப்படை முயற்சி என்பதை எனி உலகம் குறிப்பாக ஜனநாயகத்தை உச்சரிக்கும் உலகம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அதற்கான ஆதாரத்தை அங்கீகாரத்தை தமிழ் மக்கள் தெளிவாக அளித்துவிட்டுள்ளனர்.

இதுதான் இந்தத் தேர்தல்களின் நோக்கமே அன்றி இவை தமிழீழத்தை ராஜபக்சவிடம் இருந்து உடனடியாக மீட்டுத்தருமா.. மக்களை மீளக்குடியேற்ற உதவுமா என்பதெல்லாம் அர்த்தமற்ற மடத்தனமான விதண்டாவாதங்கள். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோர் சிறீலங்கா அரச கூலிகளாகவோ அல்லது வேறு அந்நிய சக்திகளின் அருவருடிகளாக இருக்கலாம் அல்லது புலிக்காய்ச்சலில் குலப்பம் அடிச்சுக் கொண்டிருக்கும் அரசியல் தெரியாத முட்டாள்களாகவே இருக்க வேண்டும். அவர்களின் கருத்தை செவிமடுப்பது அர்த்தமற்றது.

... நாம் ஒரு வட்டத்தை வரைவோம்இ நாம் வரைந்ததற்குள் வாருங்கள் இல்லையேல் உங்களை நாம் சேர்க்க மாட்டோம்!!! மட்டுமல்ல எமக்கு ஆதரவளிக்காதீர்கள்இ எம்மைப் பற்றி கதைக்காதீர்கள்!!! ... நீங்கள் ....கள்!!!!!!!!! ... இதுதான் எங்கள் அரசியல்!!!

புலத்தில் வட்டத்தை, வரைந்து புலத்து அரசியல் நடத்தியவர்கள். திறந்த வெளி அரசியல் நடத்துவதாக நடித்து, மீண்டும் வட்ட மேசையில் தாமே இருந்து கட்டளையிடுவோம் என்கின்றார்களே!

முள்ளிவாய்க்காலில் நாம் தோல்வி அடையவில்லை.

மே 19 இற்குப் பின்பு தான் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எதிரிகளிடம் தோல்வியடைந்தால் மீண்டும் எழமுடியும்.

துரோகிகளிடம் தோல்வி அடைந்தால், மீண்டும் எழவே முடியாது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த அரசுக்கான மக்களின் ஒப்புதலாக இதை கொள்ளலாம் என்றும் சில சில கருத்துக்கள் இப்போது சொல்லத்

தொடங்கப்பட்டுள்ளது.வரும்நாட்களில் தொலைக்காட்சி,வானொலிகளில் ஆய்வுக்சிங்கங்கள் இதனையே வழிமொழிந்து

நிரூபிப்பார்கள்.ஆனால்,

நோர்வேயில் ஆரம்பித்து பிரான்ஸ் வரைக்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வாக்களிப்பில் நாடுகடந்த அரசின்

கொ.ப.செ(கொள்கைபரப்புசெயலர்கள்) மறைமுகமாகவும்,நேரடியாகவும் எதிர்த்ததுடன் மக்களை சில இடங்களில்

வாக்களிக்கவிடாமல் மறித்தார்கள்.இப்போது அதிகமக்கள் எல்லா இடங்களிலும் தமிழீழத்துக்கு சார்பாக வாக்களித்த

நிலையில் அந்த ஒப்புதல் நா:கடந்த கூட்டத்துக்கும் சேர்த்தே என்று சொல்கிறார்கள்.

பிர்த்தானியாவில் வாக்களிப்புக்கு ஒருவாரம் இருக்கும்போது நா.க.அரசின் கொ.ப.செக்களில் ஒருவாரான வழுதி

வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கான கருத்துக்கணிப்பு தேவையற்ற ஒன்று என்று வாந்தி எடுத்திருந்ததை மறக்கவேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.